Thursday, August 12, 2010

கலைஞரின் ரீ மிக்ஸ் வசன கவிதை -விகடன் அம்பலம்

எதேச்சையாக நடந்ததா,ஜூனியர் விகடன் அழகிரி சர்ச்சையின் காரணமாக நடந்ததா தெரியவில்லை.ஆனந்த விகடனில் கலைஞரின் வாழ்த்துச்செய்தி சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது.
எந்திரன்  இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் நேரில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் வாழ்த்துச்செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்,
அதில் “எங்கெங்கு காணினும் வெற்றியடா,ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா” என வசன் கவிதையாக கலைஞர் எழுதி இருந்தார்.

ஆனந்த விகடனின் நானே கேள்வி நானே பதில் பகுதியில் இதை பற்றிய நையாண்டி வந்துள்ளது.பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதை வரிகளின் ரீமிக்ஸ் தான் கலைஞரின் வாழ்த்துச்செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா

இது தான் பாரதிதாசன் எழுதிய முதல் கவிதையின் ஆரம்ப வரிகள்.

இது ஆனந்த விகடனுக்கும் கலைஞருக்கும் நடக்கும் பனிப்போர் என கணிப்போர் தமிழ்நாட்டில் ஏராளம்.

போகட்டும்.நமது வலைப்பூ நண்பர் பரிசல்காரன் அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு பத்திரிக்கைத்துறையில் தடம் பதிக்கும் அவருக்கு நமது வாழ்த்தை சொல்வோம்.
அதே போல் நண்பர் காட்டுவாசி  அவர்களின் ட்விட்டர் ஜோக் ஒன்றும் ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது.அவருக்கும் நமது வாழ்த்தை சொல்வோம்.