Thursday, September 26, 2019

ஆன்மீகக்”காப்பான்”

கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: 

”ராஜபார்வை” கொண்டவரையே குறை சொல்றாரே?

உங்களுது குறுகிய பார்வை என்பதால் அப்படித்தெரியுதுனு கமல் சொல்வாரோ?

================


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட பயந்து, நடிகர் கமலின் கட்சியும், தினகரனின், அ.ம.மு.க.,வும் ஒதுங்கி விட்டன. இதனால், இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். -  மின்துறைஅமைச்சர், தங்கமணி:

அப்போ கடந்த தேர்தல்கள்ல உங்க தோல்விக்கு இவங்க 2 பேரு கட்சி தான் காரணம்கறதை ஒத்துக்கறீங்க?

 நம்ம மெயின் எதிரியே திமுக தான்கறதை மறந்துட்டுப்பேசறாரு

==================
 3 முதல்வராக இருந்த போது தான், ஜெ., மறைந்தார். அவர் இறந்து, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரின், அ.தி.மு.க., ஆட்சி தான், தமிழகத்தில் தற்போதும் நடக்கிறது. ஆட்சியாளர்களுக்கு அவர் மீது உண்மையான பற்று இருக்குமானால், அவருக்கு ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருப்பர்; ஆனால், இதுவரை நடத்தவில்லை.- ஸ்டாலின்  

இவரு திமுக வா? அதிமுகவா?

இப்படி எல்லாம் பேசுனா அதிமுக த்லொண்டர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கும்னு எதிர்[பார்க்கறாரு



=================

தமிழ் சமுதாயம் இன்னும் என் பின்னால் வர மறுக்கிறது. நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. என்னிடம் என்ன குறை இருக்கிறது; என் கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது; நான் நடந்து வந்த பாதையில் என்ன தெளிவு இல்லை என்பதை மேடை போட்டு சொல்லுங்கள்; தவறு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.-   ராமதாஸ் : 

தன்னிடம் என்ன குறை உள்ளது என்பதே தெரியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?

மன்னிப்புக்கேட்டாலும் மானம் போனாலும் பரவால்ல , முதல்வர் பதவி கண்டிப்பா தேவைங்கறாரு போல 

================== 

 தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்துள்ளனர். அது என்னப்பா... விக்கிற பாண்டியா இல்லை, வாங்கிற பாண்டியா... பெயரே மனசுக்குள் நுழைய மாட்டேன்கிறதப்பா... அந்த தொகுதிகளில், அ.தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும்.- தமிழக வனத்துறை அமைச்சர், சீனிவாசன்

ஓட்டை வாக்காளர்கள் விற்பாங்க, இவ்ங்க காசு கொடுத்து அதை வாங்குவாங்க அப்டினு சிம்பாலிக்கா சொல்றாரு போல 

போண்டி ஆகாம இருந்தா சரி

=================


'6   தலித் மக்கள், எந்தவொரு கட்சியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர்களை எந்த கட்சியும் தனிமைப்படுத்தவும் முடியாது. இதற்காக, அம்பேத்கர், மஹாத்மா காந்திக்கு நன்றி கூற வேண்டும். தீண்டாமை இப்போது இல்லை. தலித் மக்கள், சுயமரியாதையை தான் எதிர்பார்க்கின்றனர்.-ராம்விலாஸ் பஸ்வான் :

 இப்போ நீங்க தலித் தோட ஓட்டுக்கள் உங்க கட்சிக்கே வரனும்னு எதிர்பார்க்கறீங்க ?

 அப்போ சுயமரியாதை இயக்கத்துக்கு ஓட்டுப்போட்டுவாங்களா?

============
7 ,  மொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. நம் நாட்டில், அனைத்துமொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், வேறு வேலையில்லாமல், சில அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மொழியை அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். - ராம் மாதவ் :


 அது அரசியல்வாதிகளின் உடல் மொழிலயே தெரியுதே?

கனிமொழியைக்கூடத்தான் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க 

=================

ரஜினியும், அரசியல் வியூக நிபுணர், பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது 


பிரசாந்த் கிஷோ”ரூம்” போட்டு யோசிப்பவர் ஆச்சே?

===============



 வாக்காளர்க்ஜள் யாருக்கு ( எந்தக்கட்சிக்கு) பொங்கல் வைக்கப்போறாங்களோ தெரியல 


===============

10   திருவனந்தபுரம்: கேரளாவில், பிரசித்தி பெற்ற கோவில்களை நிர்வகித்து வரும், தேவசம் போர்டு, தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு காப்புரிமை பெற முடிவு செய்துள்ளது 

 ஆன்மீகக்”காப்பான்”?

=========================

11   பிகில் பட போஸ்டரால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' எனக் கூறி, கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது 


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாமாங்கம் ஆச்சு , இப்போ விஜய் ஆளுங்கட்சியை விமர்சிச்சதும்தான் இது கண்ணுக்குத்தெரியுது போல  


===============

12   :அனைத்து மதுக் கடைகளிலும், அனுமதி பெற்ற, 'பார்'கள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை, 'டாஸ்மாக்' நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

 குடி மக்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதில் அரசு முனைப்பாக இருப்பது மகிழ்ச்சி

==================== 

13  

பிகில் படத்திற்கு கறிக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு


 மட்டன், சிக்கனை மட்டம் தட்டிட்டாங்களா?

==============

14 

எவர்க்ரீன் ஸ்டார் பட்டம் பெற்றார் மீனா


 பசுமை இந்திஹ்யா வாழ்க 

================


15 சிறுமிகளுக்கு தொல்லை கொடுப்பதாக நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார் கூறியுள்ளார்.

 சின்ன் விஷயம் தானேனு அசால்ட்டா இருந்துடப்போறாங்க


================

16   

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? -விருப்ப மனு தாக்கல் செய்தார் கவுதம சிகாமணி



 இவங்க்ளே பாம் வைப்பாங்களாம் , இவங்களே எடுப்பாங்களாம்


மூன்றாம் கலைஞரின் முதல் பத்ஃவி?

===================


17 

நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்


 அவ்ளோ சல்வாக்கு இருந்தா சுயேச்சையா போட்டி இடலாமே?

==================

18 

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்


ஆந்திரா கவர்னர் ஆக்குனதே அதுக்குத்தான் போல 


============

19  

அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி கூடாது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


 கேப் விடாம அடிக்க்னும்கறாரா?

================


20 

இந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் - பிரதமர் மோடி கருத்து


 இந்த விஷயம் ட்ரம்ப்க்கே இவர் சொல்லிதான் தெரியும்

=====================