ஓணம் ஸ்பெஷல் ரிலீஸ் ஆக 31/8/2020 ல் நெட் ஃபிளிக்சில் ரிலீஸ் ஆன ஒரு ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா இது
ஹீரோ ஒரு சராசரி
பர்சனாலிட்டி உள்ள ஆனா தான்
ஒண்ணும் பெரிய பர்சனாலிட்டி
இல்லை என நினைக்கும் ஆள் . இவர் கொஞ்சம்
சராசரி உயரத்தை விட குறைவான
உயரம் கொண்டவர் , இவர் அதை பெருசா
நினைக்கலை. ஆனா இவர் பொண்ணு பார்க்க போகும்போது
பெண்கள் அவரை ரிஜெக்ட் செய்யறப்ப
அதை சொல்லிக்காட்டறாங்க
சில பெண்கள்
ஆல்ரெடி வேற ஒரு லவ்
இருந்து அதை வீட்ல ஓப்பனா
சொல்ல முடியாம மாப்பிள்ளை பிடிக்கலைனு எதையாவது காரணமா
சொல்வதும் உண்டு , ஆனா அது இவர் மனசை பெருசா பாதிக்குது
நீ எத்தனையோ பேரை வாழ்வில்
சந்திக்கலாம், ரசிக்கலாம், நேசிக்கலாம் , ஆனா உனக்கே தெரியாம
உன்னை ரசிக்கும் ஒரு உள்ளம் இந்த உலகில் உண்டு என கொல்லிமலை சித்தர் வாக்குக்கு
ஏற்ப அவரையும் அறியாம ஒரு அழகான பொண்ணு
அவரை நேசிக்குது , அவர் உருவத்தை
எல்லாம் ஓவியமா வரைஞ்சு
ரசிச்சுட்டு இருக்கு
எதேச்சையா இதை கண்டு பிடிக்கும் நாயகனின் நண்பர்கள்
அதை நாயகனிடம் சொல்லி
இருவரையும் சந்திக்க வைக்கறாங்க
இருவரும் பழகி ஒருவரை
ஒருவர் புரிந்து காதல் பறவைகளா
சுத்திட்டு இருக்கும்போது பொண்ணு வீட்ல விஷயம் தெரிஞ்சு
பிரச்சனை
பிறகு இரு வீட்டாரும் கலந்து
பேசி ஜாதகம் பொருத்தம்
பார்த்தா ஹீரோவுக்கு ஜாதகத்துல
அவர் கல்யாணம் பண்ணிக்கப்போகும் முதல் தாரம்
உயிர் இழக்கும் எனற தோஷம் இருப்பதைக்கேள்விப்பட்டு நாயகி மயக்கம் போட்டு
விழறாங்க
அய்யோ , காதலாவது கத்திரிக்காயாவது ஆளை விடுங்க அப்டினு
பொண்ணு வேற மாப்ளையைக்கட்டிட்டு ஃபாரீன்
போய்டுது. அதுக்குப்பின் ஹீரோ வாழ்க்கைல என்ன நடந்தது என்பதுதான்
படத்தின் பின் பாதி திரைக்கதை
கல்யாணம் ஆகாத 80s
90s கிட்ஸ் ரசிக்கும்படி
பல காட்சிகள் படத்தி;ல் உண்டு படத்தின் மிகப்பெரிய
பிளஸ் ஒளிப்பதிவு , லொக்கேஷன் , இசை
, கேரள அழகிகளின் அமசமான
முகங்கள். இவற்றை ரசிக்கவே படம் பார்க்கலாம்.
படத்தின் மைன்ஸ் பின் பாதி
திரைக்கதை ஸ்லோ . வாழை மரத்துக்கு தாலி கட்டும் தோஷ நிவாரணம் ரொம்ப இழுவை
.
அதுவும் ஹீரோ பெற்றோர்களுக்குத்தெரியாமல் அதிகாலையில்
எழுந்து குளித்து வாழை மரத்துக்கு தாலி கட்டுவது
. வாழை கண்ணு ஈன்றதும்
குழந்தைகளாகப்பாவிப்பது , மன ரீதியாக
பாதிக்கப்படுவது அதற்கான சிறு வயது சம்பவ விளக்கம் எல்லாம்
நம் பொறுமையை சோதிக்கும்
ஹீரோவா Jacob Gregory , நல்ல இயற்கையான நடிப்பு தாழ்வு மனப்பான்மை , சோகம் என பல குணங்களை அனாயசமா கண்களாலேயே வெளிப்படுத்துகிறார்
ஹீரோயினா அனுபமா பரமேஸ்வரன் , அழகிய முகம் , வெட்கப்படும்போது கூடுதல் அழகு , முதல் பாதி வரை தான் வருகிறார் என்பது மைனஸ்
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் நல்ல நடிப்பு , இஸ்க் படத்தில் வில்லனாக வருபவர் இதில் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார்
துல்கர் சல்மான் ஒரு கெஸ்ட் ரோலில் வர்றார்
இது துல்கர் சல்மானின் சொந்தப்படம், ரொம்ப லோ பட்ஜெட். வந்தவரை லாபம்னு வித்துட்டார் போல
நச் வசனங்கள்
1 எல்லா விஷயங்களையும் எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு இருக்க முடியாது
2 நீச்சலே தெரியாதே? என்ன தைரியத்துல குளத்துல குதிச்சே?
எனக்கு தெரியாட்டி என்ன? நண்பன் உனக்கு தெரியுமே??
3 ஆகாயத்துல நிலா, சூரியன் எப்படி மாற்றமே இல்லாம இருக்கோ அதுமாதிரிதான் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் , வளர்ந்தாலும் அவங்க கண்களுக்கு குழந்தைகள் தான்
4 என்ன தடுமாறிட்டு இருக்கீங்க?
முத டைம் பண்ற மேரேஜ் இல்லையா? அடுத்த டைம் சரி பண்ணிடறேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ மனநிலை பாதிக்கப்படுவது வீட்டு வாசலில் வாழைக்கன்றுகள் பாதிக்காமல் இருக்க நண்பர்களுடன் சண்டை போடுவது , மழையில் நனையாமல் இருக்க வாழைக்கன்றுகளுக்கு பந்தல் போடுவது எதுவுமே பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பது எப்படி?
2 நாயகி அனுபமா நாயகன் படத்தை பேப்பர்ல ஓவியமா வரையறாங்க . அது பழைய பேப்பர் கடைக்குப்போகுது. அந்தப்பையன் கப்பல் விடும்போது ஏகப்பட்ட நாயகன் ஓவியங்கள் இருக்கு
3 முதல் தாரம் மரண யோகத்துக்குப்பரிகாரம் வாழை மரத்துக்கு தாலி கட்டி பின் அதை வெட்டி விடுவது பரிகாரம் என்பது பலருக்கும் தெரிஞ்ச ஒரு தகவல் தான் கிராமத்தில் பிறந்து வளரும் நாயகி அந்தக்காரணத்துக்காக காதலனை கழட்டி விடுவது நம்பும்படி காட்டல
சி,பி . ஃபைனல் கமெண்ட் - மெலோ டிராமா ரசிகர்களுக்குப்பிடிக்கும் , பெண்கள் ரசிப்பார்கள், 2 மணி நேரம் கூட இல்லை, நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்
ரேட்டிங் 2. 5 / 5
First look poster | |
Directed by | Shamzu Zayba |
---|---|
Produced by | Dulquer Salmaan Jacob Gregory |
Screenplay by | Vineeth Krishnan |
Story by | Magesh Boji |
Starring | Jacob Gregory Anupama Parameswaran |
Music by | Sreehari K. Nair |
Cinematography | Sajad Kakku |
Edited by | Appu N. Bhattathiri |
Production company | |
Distributed by | Netflix |
Release date |
|
Country | India |
Language | Malayalam |