Friday, October 04, 2019

அசுரன் - சினிமா விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கிய படம் என்றாலே கதையில் , கதா பாத்திரங்களில் ஒரு உயிர்ப்பு  இருக்கும், திரைக்கதையில் ஒரு பர பரப்பு , விறு விறுப்பு கலந்திருக்கும், வன்முறை , பழிக்குப்பழி வாங்கும் உணர்வு தூக்கலாக இருக்கும். இந்தப்படமும் அதே ஃபார்முலா , என்ன, இந்த முறை பா . ரஞ்சித் மாதிரி  மேல் ஜாதி  கீழ்  ஜாதி . இடத்தை பிடுங்கிட்டாங்க, ஆண்ட பரம்பரை , நிலத்தை மீட்கறேன்னு கபாலி , காலா  டைப்பில்  கதைப்போக்கு இருந்தாலும் ஃபிளாஸ்பேக் தவிர்த்துப்பார்த்தால் இது வெற்றி மாறனின் சக்சஸ் ஃபார்முலா கதை தான்.


 செட்டிங்ஸ் செலவில்லாமல் ஒரு காட்டுக்குள்ளேயே 70% படத்தை முடித்து பணத்தை மிச்சம் பண்ணிய சிக்கனத்துக்கு ஒரு ஷொட்டு


ஹீரோவா  தனுஷ், தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே  ஃபிளாஸ்பேக் காட்சிகளில் அசால்ட்டா நடித்து கை தட்டல் வாங்குபவர் இவரே , ஏன்னா மீசையை எடுத்துட்டா அல்லது ட்ரிம் பண்ணிட்டா இளமை தனுஷ் ரெடி, மத்தவங்க உடல் இளைக்க மெனக்கெடனும், நம்ம உடம்பு ஆல்ரெடி இளைசே தானே இருக்கு?

ஓப்பனிங்  காட்சிகளில் இவரது பாடி லேங்க் வேஜ்  அருமை. அவர் கோபப்படாமல் அமைதியாக கடக்கும்போதே பின் வரும் கட்சிகளில் பொங்கிப்பிரளயம் பண்ணப்போறார்னு தெரிஞ்டுது.ஸ்டண்ட் க்லாட்சிகளில் இவரது உழைப்பு குட்


ஹீரோயினா மஞ்சு வாரியர் , கிளுகிளுப்பா எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஏமாந்தே போவாங்க  ( நான் ஏமாறலை , எதிர் பார்க்கலை)ஆனா  குணச்சித்திர நடிப்பு ஏ கிளாஸ்


மகனாக வரும் இருவர் நடிப்பும் அற்புதம், இதே சாதா இயக்குநர்னா அந்த இரு மகன்களில் ஒரு மகனை அல்லது இரு மகனையுமே இன்னொரு தனுஷ் ஆகவே காட்டி இருப்பாங்க


இரு குடும்பங்களில்   நிகழும் பழி வாங்கும் உணர்வு மாறி மாறி வெட்டுவது , பின் பதுங்குவது  ஓடுவது   துரத்துவது  இது மாதிரி காட்சிகள் பெண்களை சலிப்படைய வைக்கலாம்


ஒளிப்பதிவு பிஜிஎம் ஆக்சன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு அருமை





நச் வசனங்கள்

போனவங்களை நினைச்சு இருக்கறவங்களை இழந்துடக்கூடாது #asuran


2  நாய் செத்துடுச்சுனு அவன் வருத்தப்படறான்,வெறும் நாயோட போச்சே னு நான் சந்தோஷப்படறேன் #asuran


3  ஆக்கறதுக்கு ரொம்ப லேட் ஆகும்,அழிக்கறது ரொம்ப ஈசி #asuran


4  பிள்ளையை இழந்துட்டு வாழற துர்பாக்கிய நிலைமை பெத்தவங்களுக்கு வந்துடக்கூடாது #asuran


5  உன் கிட்டே இருக்கற பணத்தை அவங்க பிடுங்கலாம், நில புலனை பறிக்கலாம், ஆனா உன் கிட்டே இருக்கற படிப்பை  யாராலும் அபகரிக்க முடியாது

6   பகையை வளர்க்கறதை விட அந்த இடத்தைக்கடக்கறதே மேல்


7  சோறு குடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம், அப்படியே ஒரு சோலி ( ஜோலி, வேலை )யும் தந்தா இன்னும் சந்தோஷம்


வாழ்க்கை எல்லாருக்கும் 2 வது வாய்ப்பு குடுக்கும் #asuran


9 வேணாம் , பிரச்சனை பண்ணாதே

நான் பிரச்சனை பண்றேனா ? இல்லையா?ங்கறதை எதிராளி தான் முடிவு பண்ணறான் #asuran


10 போராடாம மக்களுக்கு இங்கே எது தான் கிடைச்சிருக்கு? #asuran


11 ஆயுதம் எதுக்கு?

நாம அடிக்கனும்னு அவசியம் இல்லை , எதிரி அடிச்சா திருப்பி அடிக்கனும் இல்ல? #asuran


12 எனக்கு வேலை வாங்கித்தந்ததுக்கு ரொம்ப நன்றி

16ம் வாய்ப்பாடு எல்லாம் தெரியும்கறே, அது முதலாளிக்கே தெரியாது #asuran


13

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஸ்வாதிமுத்யம் (சிப்பிக்குள்முத்து) கமல் பாடிலேங்க்வேஜை பல இடங்களில் தனுஷ் பின்பற்றி இருப்பது மாதிரி தெரியுது #asuran


2  படத்தின் பின் பாதி பிளாஸ்பேக் காட்சிகளை முன்பாதியில் அமைத்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து #asuran


3  வழக்கமான பழிக்குப்பழிவாங்க துரத்தும் கதைக்கரு தான் ,மேக்கிங் ,பிஜிஎம்,ஆக்சன் காட்சிகள் பட்டாசு ,வெற்றி மாறன் தோற்பதில்லை ,இடைவேளை வரை பரபரப்பு ,விறுவிறுப்பு #asuran





சபாஷ் டைரக்டர்

1   இவ்வளவு   லோ பட்ஜெட்டில் ஒரு ஆக்‌ஷன்  ரிவெஞ்ச் படம் எடுப்பது மிக கடினம், சாத்தியமாக்கிய இயக்குநருக்கு ஒரு ஷொட்டு



2   கோர்ட் சீனில் சரண்டர் ஆக வரும்  மகனுக்கு பாதுகாப்பாய் தனுஷ் இருக்கு வில்லன் , போலீஸ் வகையறா வாசலில்  காத்திருக்கு தொடரும்  காட்சிகள் பிரமாதம் ( ஆனால் அதை சப்னு முடிச்ட்டாங்க )


3  வசனகர்த்தா நல்லா பண்ணி இருக்கார்


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   ஒரு சீன்ல அப்பாவை வெட்ட அடியாள் ஓடி வரும்போது  தூரத்தில் நிற்கும் மகன் வேடெஇக்கை பார்த்துட்டிருக்கர் , அப்பா பின்னால ஆளுனு எச்சரிக்க வேணாம், பதட்டம் வேணாம்? அட்லீஸ்ட் லாங்க் ஷாட்டில் அந்தக்காட்சியை காட்டி இருப்பதை தவிர்த்திருக்கலாம்


2   மிகத்திறமைஒயான வக்கீல் பிரகாஷ் ராஜ்  ஒரு சீன்ல என் கிட்டே ஜூனியரா வேலை பார்த்தவன்   இப்போ ஜட்ஜ் அவன்ம் கிட்டே தலை குனிய வெச்ட்டானே இவன்  அப்டினு டயலாக் வருது. 30 வயசான அவரே ஜட்ஜ் ஆக இருக்கும்போது 50 வயசான இவர் ஏன் இன்னும் வக்கீலாவே இருக்கார்?


3  



 விகடன் மார்க் ( யூகம்)    43
 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   4/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்     3 / 5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


சி.பி கமெண்ட் -அசுரன் − லோ பட்ஜெட்டில் பா.ரஞ்சித் டைப் கதைக்கருவில் வெற்றிமாறன் நேர்த்தியான இயக்கத்தில் ஒரு"வெற்றிப்படம். கெட்ட வார்த்தைப்பிரயோகம்,வன்முறை தூக்கல்,பிஜிஎம்,திரைக்கதை,தனுஷ் நடிப்பு குட் ,விகடன் 43 ,ரேட்டிங் 3 / 5 #asuran


 கேரளா  - பத்தணம் திட்டா - செங்கன்னூர்   சிப்பி யில் படம் பார்த்தேன். 34 பேரு / 476 சீட்ஸ்