Showing posts with label mnmalar. Show all posts
Showing posts with label mnmalar. Show all posts

Friday, June 19, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19/6/ 2015 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை


1 எலி (காமெடி)
2 குற்றம் கடிதல் ( க்ரைம் த்ரில்லர்)
3,பேபி ( பேய்)
4,அச்சாரம் ( ஆக்சன்) # 19/6/15



இம்சை அரசன் 23ம் புலிகேசி’ ,’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ , மற்றும் ‘தெனாலிராமன்’ படங்களை அடுத்து வடிவேலு நான்காவது முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் ‘எலி’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரலானது நாம் அறிந்ததே. 
’தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் இப்படம் 1970 களில் நடப்பது போன்ற துப்பறியும் படமாம். தனியார் துப்பறியும் நிபுனராக நடிக்கும் வடிவேலு இப்படத்தில் எலி போல் வேலைசெய்து தீர்வு கான இருக்கிறாராம். படத்தின் புதிய செய்தியாக கதாநாயகி யார் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது. 
‘ஜெயம்’, ‘ அந்நியன்’, ‘எதிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த சதா இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு இசை வித்யாசாகர்.



வடிவேல் சில அரசியல் பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த தெனாலிராமன் படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் விரைவில் இவர் நடிப்பில் வெளிவரும் எலி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பதாக இருந்து ரத்தானது. அன்றைய தினம் ஜெயலலிதா அவர்களின் தீர்ப்பு நாள் என்பதால் தான் இந்த முடிவு என கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை முற்றிலுமாக வடிவேல் மறுத்துள்ளார். மேலும், தான் அம்மாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அன்றைய தினம் ட்ரைலர் வர தாமதம் ஆனதால் தான் ரத்தானது என விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு அபிராமி ஸ்ரீநிவாசா  வில் ரிலிஸ்’’


2 குற்றம் கடிதல்

கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, தமிழில் இருந்து 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேர்வாகி இருக்கிறது.
வருடம் தோறும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையிடுவதுதான் 'இந்தியன் பனோரமா' பிரிவு. இவ்விழாவில் திரையிட கலந்து கொண்ட 181 படங்களில் , 26 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் 'குற்றம் கடிதல்'. இப்படத்தை தயாரித்திருக்கிறது ஜே.எஸ்.கே நிறுவனம். கடந்த வருடம் தேர்வான 'தங்க மீன்கள்' படமும் ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தயாரிப்பாளர் சதீஷ்குமாரைத் தொடர்பு கொண்டபோது, "ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தமிழ் திரையுலகில் இருந்து தேர்வாகி இருக்கும் ஒரே திரைப்படம், அதுவும் நான் தயாரித்திருக்கிறேன் என்ற போது எனது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
'குற்றம் கடிதல்' படத்தைப் பொறுத்தவரை எனது பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்துமே புதுசு. திரைப்பட விழாவில் திரையிடுகிற படம் என்றவுடன், திரைக்கதை ரொம்ப மெதுவாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். த்ரில்லர் வகை படம் தான் 'குற்றம் கடிதல்'. கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்', இந்தாண்டு 'குற்றம் கடிதல்' இப்படி எனது தயாரிப்பு படங்கள் தேர்வாவதைப் பார்க்கும் போது தொடர்ச்சியாக நல்ல கதைகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது"என்றார்.


ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் இரண்டு படங்களை ரொம்ப நாளாக வெளியிடாமல் வைத்துக் கொண்டிருக்கிறது. நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல்.
குற்றம் கடிதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருது வாங்கியதால் அந்தப் படத்தையும், நாலு போலீஸையும் ஒரே நாளில் வெளியிடுவது என முடிவு செய்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்தில் இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்து, வழக்கம்போல இரண்டு தேதிகளிலும் படங்கள் வெளியாகவில்லை.
 
இறுதியாக ஜுன் 19 இரு படங்களும் வெளியாகும் என விளம்பரப்படுத்தினர். ஆனால், இந்தமுறையும் இரு படங்களும் வெளியாகப் போவதில்லையாம். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார் விபத்தில் சிக்கிக் கொண்டதால் ஜுன் 19 படங்கள் தள்ளிப்போகுது



3,பேபி
யாமிருக்க பயமே, அரண்மனை, டார்லிங், பிசாசு போன்ற பேய்ப்படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதை அடுத்து கோலிவுட் திரையுலகில் தற்போது பேய்ப்பட சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இன்னொரு பேய்ப்படம் 'பேபி'. பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களிடம் உதவியாளராக இருந்த பி.சுரேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை 'தி வைப்ரெண்ட் முவீஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே வெண்ணிலா வீடு, ஐவராட்டம், சிஎஸ்கே போன்ற படங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'பேபி' படத்தின் டிஜிட்டல் மோஷன் போஸ்டர் ஒன்றை பிரபல சமூக இணையதளம் ஒன்றில் நடிகை சமந்தா நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளியிட உள்ளார். 'பேபி' படத்தில் 6 மணி 6 நிமிடம் 6 வினாடியில் ஒரு திகில் காட்சி வருவதாகவும், எனவே அதை வெளிப்படுத்தும் விதத்தில் சமந்தா மிகச்சரியாக மாலை 6மணி 6 நிமிடம் 6 வினாடியில் இந்த படத்தின் டிஜிட்டல் போஸ்டரை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

'பேபி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





4,அச்சாரம்

 போலீசார் வீட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் 'அச்சாரம்'
சென்னை,ஜூன் 13 (டி.என்.எஸ்)  தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க ஏ.சங்கரபத்மா தயாரிக்கும் படம் 'அச்சாரம்'.
இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.   கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும்  நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, ஒ.ஏ.கே சுந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ஆர்.கே.பிரதாப், இசை-ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்-யுகபாரதி, கலை-டி.சந்தானம், எடிட்டிங்-சுரேஷ் அர்ஸ்,நடனம்-ராபர்ட், ரேகா, ராஜ்விமல், ஸ்டன்ட்-ஸ்பீட்சையத், தயாரிப்பு நிர்வாகம்-ஜெயச்சந்திரன்,                                                   
இணை இயக்கம்-அருள்குமார், சுந்தர், தயாரிப்பு   -  ஏ.சங்கரபத்மா.                                                                                                              
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  மோகன்கிருஷ்ணா.                                                                       
படம் பற்றி இயக்குனர் மோகன்கிருஷ்ணாவிடம் கேட்டோம், "இந்த படம் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரியான கதையம்சம் கொண்டது. கணேஷ் வெங்கட்ராமன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானதேஷ் அம்பேத்கார் பூனம் கவூருக்கு அப்பாவாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் கதை தஞ்சாவூர் அருகில் மேலஉளூர் என்ற ஊரில் கான்ஸ்டபிள்  நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த படத்தில் மெசேஜ் இருக்கும்.  ஒரு பிரிட்டீஷ் கல்லறையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினோம். அந்த கல்லறையில் பிரிட்டீஷ் காரர்களை தவிர வேறு யாரையும் உள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.  படம் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது." என்றார் இயக்குனர். 

நன்றி -த இந்து  மாலைமலர் தினமணி  ஆல் வெப்சைட்

Friday, June 12, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12/6/ 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை


1 ஜூராசிக் வோர்ல்டு = VSP(11 6 2015)

2 ரோமியோஜூலியட் = ராயல் ,அன்னபூரணி ,சண்டிகா
3 இனிமே இப்படித்தான் =அபிராமி #12/6/2015




1 ஜூராசிக் வோர்ல்டு


ஜுராசிக் வோர்ல்டின் 4ம் பாகம் 11ந் தேதி ரிலீஸ்: தமிழிலும் வெளிவருகிறது:
31 மே,2015 - 12:32 IST
எழுத்தின் அளவு:
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து அழிந்துபோன ராட்சத விலங்கான டைனோசர்களை கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்கள் வெளிவந்தது.
தற்போது ஜூராசிக் பார்க்கின் 4வது பாகமாக ஜூராசிக் வோர்ல்ட் வருகிற 11ந் «தி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. தமிழிலும் வெளிவருகிறது. 2டி, 3டி, 3டி மேக்ஸ், 4டி தொழில்நுட்பங்களிலும் வெளிவருகிறது. கிரிஸ் பெராட், ப்ரைஸ் டல்லா ஹார்ட், டி சிப்கின்ஸ், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோலின் டெரவோரோவ் இயக்கி இருக்கிறார். மைக்கேல் சியாச்சினோ இசை அமைத்திருக்கிறார் ஜான் ஸ்வர்த்மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுனிவர்செல் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.



22 வருடங்களுக்கு முன்பு (முதல் பாகத்தில்) ஜான் டிமாண்டோ உருவாக்கிய இஷ்னா நுல்பர் என்ற டைனோசர் உயிரியில் பூங்காவில் இப்போது நூற்றுக் கணக்கான டைனோசர்கள் இருக்கிறது. டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சியும் நடக்கிறது. மனிதர்களுடன் இணக்கமாக இருக்கும் வகையில் புதுவகையான ஒரு டைனோசரை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். ஒரு சிறு தவறால் அது மனிதர்களுக்கு எதிரான டைனோசராக உருவாகி பூங்காவில் இருந்து தப்பிக்கிறது. அதன் பிறகு அதை வேட்டையாடுவதுதான் கதை. 180 மில்லியன் டாலரில் உருவாகி இருக்கிறது.










2 ரோமியோஜூலியட்



'ரோமியோ ஜூலியட்' படத்தைப் பார்த்துவிட்டு டி.ஆர் சந்தோஷமாக பாராட்டி பேசி இருப்பதால், 'டண்டணக்கா' விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லஷ்மன் இயக்கி இருக்கிறார். ஜூன் 12ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டண்டணக்கா' பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலில் டி. ராஜேந்தரின் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் பாடல் வைரல் ஹிட்டாக, இந்தப் பாடலை வைத்து டி.ராஜேந்தரை கலாய்த்து சில நெட்டிசன்கள் வீடியோக்களை பதிவேற்றினர்.
டி.ராஜேந்தரும் இப்பாடல் விவகாரம் தொடர்பாக 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கும் முனைப்போடு, டி.ஆருக்கு 'ரோமியோ ஜூலியட்' படத்தை திரையிட்டு காட்டினார்கள். முழுப்படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் சந்தோஷமடைந்து படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் 'ரோமியோ ஜூலியட்' படக்குழு மிகவும் சந்தோஷமடைந்து இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் டி.ஆர் தாக்கல் செய்திருக்கும் மனு விசாரணைக்கு வரும் அன்று, அவ்வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தடங்கல்களையும் தாண்டி ஜூன் 12ம் தேதி 'ரோமியோ ஜூலியட்' திரைக்கு வரவிருக்கிறது.

  • Anandan  

    தட்டிப் பார்த்தா அத்தனையும் கொட்டங்கச்சி இதில் யார் எந்தக் கட்சியானால் என்ன எவன எங்கே வைக்கனுமோ அங்க வச்சி சாதுர்யமா பல்ல இளிச்சி வாழனுமடா மச்சி

    23 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       

    • PRABU E  

      தங்கள் படங்களை எதிர்த்த அரசியல்வாதிகளை விமர்சனம் செய்த கலை துறையினர் t ராஜேந்தர் ஐ என்ன செய்ய போகிறார்கள். எப்படியோ தங்கள் படத்திற்கும் பாடலுக்கும் இலவச விளம்பரம் கிடைத்து விட்டது.
      Points
      6235

      23 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


      • Senthil  

        பணம் பத்தும் செய்யும் டண்டனக்கா பணம் பாதாளம் வரையும் பாயும் டண்டனக்கா

        23 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 

        anandan  Up Voted


        • ஸ்மூத் settlement ஓவர் ஜஸ்ட் 10 லட்சம் போதும்

          23 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



          • அரசியலில் இதெல்ல்லாம் சகஜம்
            Points
            355

            24 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



            • 'வேண்டிய' இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது.
            3 இனிமே இப்படித்தான்


            இனிமே இப்படிதான் என்று பெயர் வைத்தபோதே குறிப்பிட்டோம். இனிமே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதைத்தான் சந்தானம் இந்தப்படப் பெயரின் மூலம் சிம்பாலிக்காக சொல்கிறார் என்று. அதுதான் நடந்தது.
            வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பக்கா பிளாப்பிற்குப் பிறகு சந்தானம் ஹீரோவாகியிருக்கும் படம், இனிமே இப்படிதான். இந்தப் படத்துக்குப் பிறகு காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன், நட்புக்காக மட்டும் எப்போதாவது நடிப்பேன். மற்றபடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் அறிவித்தார். 
            சந்தானத்துடன் ஆஷ்னா சரி, அகிலா கிஷோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரஹ்மானின் உதவியாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி ஜுன் 12 திரைக்கு வரும்


            http://www.adrasaka.com/2015/06/jurrasic-world.html


            2  இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்




            3  ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்


            http://www.adrasaka.com/2015/06/blog-post_68.html





            thanx - the hindu ,http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/santhanam-s-innimey-ippadhithaan-release-date-115060100024_1.html, all cine websites