Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

Wednesday, April 06, 2011

ஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூறு வழக்கு வருமா? அதிமுக பர பரப்பு...

டந்த சனிக்கிழமை சென்னையில் மையம்கொண்டது ஸ்டாலின் புயல்!
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/a-fathima-300x225.jpg
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பெருங்குடி, ஒக்கியம், துரைப்​பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் என்று புற நகர்ப் பகுதிகளில் புகுந்து புறப்பட்டார்! 

ஏன்? நகரப்பக்கங்கள் எல்லாம் நரகம் பக்கம் என்பதாலா?
ஐ.டி. பார்க் நிறைந்த ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு கிலோ மீட்​டருக்கு ஒரு ஷாமியானா பந்தல் போட்டு,  ஸ்டாலினின் வருகையை எதிர்​பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். நேரம் ஆக ஆக... மகளிர் சுய உதவிக் குழுவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறமும் நெட்டிக்கொண்டு திரள... கடும் டிராஃபிக் ஜாம்!

ஏன்.. குஷ்பூ வர்றாங்கன்னு நினைச்சுட்டாங்களா?

இதனால் பெருங்குடியை நோக்கி வந்த ஸ்டாலினின் காரும் அதில் சிக்கிக்கொள்ள... ''தளபதி கார் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. ரோட்டுல போற வண்டிகளுக்கு வழிவிட்டு நில்லுங்க. நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!'' என்று ஓர் உடன்பிறப்பு மைக்கில் கெஞ்ச... அதை ஏற்றுக்கொண்டு ஒருவாறாகக் கூட்டம் கட்டுக்குள் வந்தது.

மடமை, வன்னியம், சில்லறைத்தட்டுப்பாடு..... 

இதற்கிடையே, எம்.ஜி.ஆர். வேஷம் போட்ட ஒருவர், பிரசார வாகனத்தில் கம்பீரமாக எழுந்து நின்றபடி மெயின் ரோட்டுக்குள் நுழைந்துவிட்டார். வேறு எங்கோ பிரசாரம் போகக் கிளம்பிய அவர், இங்கே ஸ்டாலின் வருவது தெரியாமல் வந்து மாட்ட... அவரது வாகனம் திரும்பிய இடம் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மொய்க்க... ஒரு கணம் ஆடிப்போனவர், உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!



அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் வந்து சேர, தாரை தப்பட்டைகள்... இடைவிடாத வாண வேடிக்கைகள்... என ஏரியா அமளிதுமளி ஆனது. வரவேற்பைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகம் வறுபட்டது, விஜயகாந்த். அதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்குக் கச்சேரி.

அது ஏன்னா ஒரு முறை வெச்சுக்கறாங்க. கலைஞர் அம்மாவை எதிர்ப்பார்.. ஸ்டாலின் கேப்டனை எதிர்ப்பார்.. 

.
''கேப்டன்னு சொல்லிக்கிட்டு வில்லன் ஒருத்தர் வாக்குக் கேட்டு வருவார். அவரை நம்பாதீங்க. சினிமாவுலகூட வில்லன் என்பவர், அடிக்கிற மாதிரி சும்மாதான் ஆக்ஷன் பண்ணுவார். ஆனா இந்த வில்லன், தன் கூட இருக்குற ஆளுங்களை உண்மையாவே அடிக்கிறார். இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? இனிமே அந்த வில்லன்கூட போற வேட்பாளர்கள் எல்லாரும் மறக்காம ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க. அப்பத்தான் தலையில அடிபடாமத் தப்பிக்க முடியும்!'' என்று ஸ்டாலின் பேச... கூட்டத்தில் விசில் பட்டையைக் கிளப்பியது.

ஆமா கவசம் இல்லாட்டி திவசம் தான்/.... 


தொடர்ந்து, தி.மு.க-வின் சாதனை​களைப் பட்டியலிட்ட ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினார். ''தலைவர் கலைஞர் 58 வயதைக் கடந்த முதியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாகக் கூறியுள்ளார். இனி முதியவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குத் தங்கள் பேரன் - பேத்திகளையோ, கட்டிக்கொடுத்த மகளையோ பார்க்கப் போக வேண்டும் என்றால், பணம் செலவழிக்காமல் இலவசமாகவே போகலாம். நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்!'' என்று ஃபேமிலி டச் கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்!


நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை... 

அடுத்து சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பேச்சு...  ஜெயலலிதாவை வெளுத்து வாங்கினார் ஸ்டாலின்.

''இந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கூடி இருக்கிறீர்கள். 1989-ல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த அருமையான திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம். 

இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..?


அப்போது திருமணமாகும் பெண்களுக்கு 5,000 வழங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? 10,000 கொடுத்திருக்க வேண்டாமா?

 அதெப்பிடிங்க முடியும்? உங்களை விட ரெண்டு மடங்கு ஊழல் பண்ணனுமே அதுக்கு..? ஆனா உங்க அளவு அம்மாவால ஊழல் பண்ண முடியலையாம்..


ஆனால், அந்த புண்ணியவதி ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? 'எனக்கே கல்யாணம் ஆகலை. இதுல உங்களுக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன, ஆகலைன்னா எனக்கென்ன?’ என்று நினைத்து அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். இதுதான் அவரது ஆட்சியின் லட்சணம்'' என்று வெளுத்துக் கட்டினார்!

 ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்..