Showing posts with label நெல்லை தி.மு.க.. Show all posts
Showing posts with label நெல்லை தி.மு.க.. Show all posts

Tuesday, September 17, 2013

நெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா? பர பரப்பான பாலியல் புகார்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் மீது அவரது கட்சியை சேர்ந்த ஒரு பெண்ணே பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளார். இதற்கு மேலிடத்தின் சிக்னல் வந்ததும் போலீசார் இந்த வழக்கை துரிதப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



கட்சிக்குள் இருக்கும் பெண் ஒருவரே தி.மு.க., மாவட்ட செயலாளர் மீது செக்ஸ் புகார் கொடுத்திருப்பது மாவட்ட தி.மு.க, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பெண்ணிடம் தி.மு.க, செயலர் என்ன முறையில் நடந்து கொண்டார் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.


திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப்பெருமாள் தெருவை சேர்ந்தவர் நாலடியார். இவரது மகள் தமிழரசி. காலையில் தமது தந்தையுடன், நெல்லை சரக டி.ஐ.ஜி.,சுமித்சரணை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது தாத்தா குறள்ஏருழவர், மொழிப்போர் தியாகி. 1950களில் நெல்லையில் தி.மு.க.,வை தோற்றுவித்தவர். திருக்குறளில் ஆய்வு செய்து 17 புத்தகங்கள எழுதியுள்ளார். எனது தந்தை நாலடியாரும் கட்சியில் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்துள்ளார். எனது தம்பி குறளமுதனும் கட்சி பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் எம்.ஏ.,எம்.பில்.,படித்துள்ளேன். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 

நான் கட்சியில் ஈடுபட ஆர்வமாக இருந்ததால், எனது தந்தை, நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியனை சந்தித்து கட்சியில் பொறுப்பு பெற்று பணியாற்றலாம் என கூறினார். இதற்காக ஆகஸ்ட் 23ம் தேதி, நெல்லை கோர்ட்டிற்கு எதிரே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். 

அப்போது என்னிடம் அரசியலுக்கு வருவது நல்லது என்ற ரீதியில் பேசிய கருப்பசாமிபாண்டியன், எனது மொபைல் எண்ணை அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக்கிடம் கொடுக்குமாறு கூறினார். நானும் போன் நம்பரை கொடுத்தேன். 28ம் தேதி மாவட்ட செயலரின் உதவியாளர் கார்த்திக் என்னிடம் பேசினார்.



என் கையில் ஒரு முத்தம் கொடு :



குற்றாலத்தில் உள்ள கருப்பசாமிபாண்டியனின் பங்களாவிற்கு வருமாறு கூறினார். நானும் எனது தந்தையும் 28ம் தேதி மாலை ஐந்து மணிக்கு குற்றாலம் பங்களாவிற்கு சென்றோம். அங்கு எனது தந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, என்னை மட்டும் உள் அறைக்குள் அழைத்தார்கள். உள்ளே இருந்த கருப்பசாமிபாண்டியன், என்னிடம் முதலில் குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். அரசியலில் நல்ல சூழலுக்கு வரவேண்டும் என்றால், அவருக்கு கேர்ள் பிரண்டாக இருக்கும்படி கூறினார். சுக துக்கங்களில் பங்குகொள்ளும்படியும், அதற்காக எல்லா வசதிகளையும் செய்துதருவதாகவும் கூறினார். எல்லோர் முன்னிலையிலும் என்னோடு காரில் வரமுடியாது. உனக்காக கார் வாங்கித் தருகிறேன். அதில் வரவேண்டும். என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, இதற்கு சம்மதித்தால், நீ இன்னும் தைரியமாக இருக்கலாம் என்றார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். என் உடலெல்லாம் நடுங்கியது. என் அருகில் வந்தவர், இதற்கு சம்மதித்தால், என் கையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ என்றார். உங்கள் பேத்தி, வயது இருப்பேன். இதெல்லாம் முறையா என்றேன். அப்போது அவர் என்னை, நீயாக தேடிவந்துவிடு. இல்லையென்றால் எப்படி வழிக்கு கொண்டுவரத்தெரியும் என்றார்.உடனே வெளியே வந்துவிட்டேன்.




கொலைமிரட்டல் :



உள்ளே நடந்தது குறித்து எனது தந்தையிடம் கூறினால், அங்கு பிரச்னை வரலாம் என்பதால் அவருடன் வீட்டுக்கு வந்த பிறகு என் அம்மா மூலம் தந்தையிடம் விபரத்தை சொன்னேன். எனவே மனம்பொறுக்காமல், இந்த பிரச்னையை தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினிடம் புகாராக கூறினோம். அவரோ அவருடன் இருந்த இளங்கோவன் போன்றவர்களோ இதனை கண்டுகொள்ளவில்லை. என்னையும் என் தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை. இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கருப்பசாமிபாண்டியன், ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்தவாறு உள்ளது. எனவே என் பெண்மையை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலைமிரட்டல் விடுத்த கருப்பசாமிபாண்டியன், உடந்தையாக இருந்த உதவியாளர் அல்லல் கார்த்திக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு: நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் தமிழரசி புகார் கொடுக்க வந்திருப்பது தெரிந்ததும்,கருப்பசாமிபாண்டியன் தரப்பில் வக்கீல்கள், தி.மு.க.,வினர் டி.ஐ.ஜி.,பங்களா வளாகத்தினுள் கூடினர். தமிழரசியையும் அவரது தந்தையையும் சந்தித்து புகாரை வாபஸ் பெறும்படி கூறினர். அதற்கு தமிழரசி மறுத்துவிட்டார். இருப்பினும் தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேட்டியளித்தார்.


நன்றி - தினமலர்


டிஸ்கி - 2 பேருமே  சிரிச்ச முகத்தோட  இருக்காங்க , ஹி ஹி