Showing posts with label சமூகவிழிப்புணர்வு. Show all posts
Showing posts with label சமூகவிழிப்புணர்வு. Show all posts

Monday, June 11, 2012

தூதுவன் - சினிமா விமர்சனம்



http://images.desimartini.com/user_uploads/moviereview/500_500-pd/7876579_1337850539_48847.jpg

ஹீரோயின் தினத்தூது என்ற பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.. சேரிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக தகவல் கிடைக்குது..வறுமையின் காரணமாவும், வசதியா வாழ்ந்துடலாம்கற எண்ணமும் தான் பெற்றோரையே அப்படி சிந்திக்க வெச்சிருக்கு.. அவங்களைப்பற்றி ஒரு ஆர்ட்டிகிள் ரெடி பண்ண சேரில டேரா போடுது ஹீரோயின்..

அஸ் யூசுவல் ஹீரோ ஒரு அநாதை.. அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.ஆனாலும் பாருங்க ஒத்தைக்கையாலயே வில்லன்க கூட்டத்தை அடிச்சு விரட்டறார். ஊர்ல இருக்கற பெண் குழந்தைகளை எல்லாம் காப்பாத்தறார்.. கூட்டிக்கொடுக்கும் வில்லன் கூட்டத்தை போலீஸ்க்கு காட்டிக்கொடுக்கிறார்..

ஹீரோ காப்பத்துன ஒரு பொண்ணு படிச்சு பெரிய ஆளா வருது.. மேடைல பரிசி, விருது எல்லாம் வாங்கறப்போ உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்துல வர்ற க்ளைமாக்ஸ் மாதிரி ஹீரோ கையால தான் அந்த விருது வாங்குவேன்னு சொல்றாரு.. அதை பார்த்த கலெக்டர் அந்த பொண்ணு மேல ஆசைப்படறார்.. மேரேஜ் பண்ணிக்கத்தான்..

அந்தப்பொண்ணு ஹீரோ மேல அட்டாச்மெண்ட்டோட இருக்கறதும், அஃபக்‌ஷனோட பழகறதும் அந்தப்பொண்ணோட அண்ணனுக்குப்பிடிக்கலை.. அந்தப்பொண்ணோட மேரேஜ் ஃபங்க்‌ஷன்ல  ஹீரோ கலந்துக்கக்கூடாதுன்னு ஹீரோவை அடைச்சு வெச்சுடறான்..

இதுக்கு மேல என்ன ஆகுதுங்கறதை தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க... ஏன்னா அதுக்கு மேல பொறுக்க முடியாம நான் எந்திரிச்சு வந்துட்டேன்..





http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/thoothuvan-movie-audio-launch/thoothuvan-movie-audio-launch-stills-29_01.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோ ஒரு மாற்றுத்திறனாளி என்று காட்டுவது எந்த வகையில் கதைக்கு யூஸ் ஆகுது? அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அனுதாப ஓட்டு வாங்கவா? சுத்தமா எடுபடலை..

2. ஒரு புது முகத்துக்கு படத்தோட ஓப்பனிங்க்ல பாட்டு வைக்கலாமா? அவரே மக்களுக்கு அறிமுகம் ஆகாதவர்.. படம் போட்டு அரை மணி நேரம் கழிச்சாவது வைக்கலாம்

3.ஹீரோயினா படத்தோட முதல் பாதில வர்றவங்க.. சாரி நோ கமெண்ட்ஸ்.. அவங்க அக்காவா வர்றவங்க கூட ஓக்கே.. அவங்களையே ஹீரோயினா போட்டிருக்கலாம்.. படத்துக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோயினை பாதிலயே கழட்டி விட்டது ஏன்? கால்ஷீட் பிரச்சனையா?

4. ஒரு பெரிய பணக்கார ஆள் ஆட்டோல சேரிக்கு வர்ற மாதிரியும், 13 வயசுப்பொண்ணை ஆட்டோக்குள்லயே ( க்ளோஸ்டு ஸ்க்ரீன் தான் ) கில்மா பண்ணிட்டு போயிடற மாதிரி ஒரு சீன் வெச்சிருக்கீங்க..  அவ்வளவு மோசமான ஏரியாவுல ஒரு பணக்காரன் அந்த மாதிரி செய்வானா? மூடு வருமா? பேடு ஸ்மெல்லும், மோசமான சூழலும் இருக்கற  அந்த சேரி ஏரியாவுல எப்படி பணக்காரன் கில்மா பண்றான்? அவ்வளவு காஞ்ச ஆளா?

5. படத்துல முதல் 3 ரீல்ல என்ன கதை சொன்னீங்களோ அதுதான் திரும்ப திரும்ப வருது.. திரைக்கதைன்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டீங்களா?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkMCdMNJy0WpjNxlXRray3OzweEl0LAdtnwDnKG9cmhA0gtfINI0iAIjXOPvUeTQci9rAp_HSpkJzE-koaRpC5tpX8flvdofEi-CCgjKxHUm2hvqWarWfi2c3GHqUS28W_GMJcOTWifJQ/s1600/Thoothuvan+Movie+Audio+Launch+Stills+Thoothuvan+Audio+Release+Photos+(3).jpg

6. ஹீரோ காப்பாத்தற பொண்ணு கிட்டத்தட்ட 16 வயசு தான் இருக்கும், ஹீரோ  30 வயசு ஆளு.. அந்தப்பொண்ணு கூச்சமே இல்லாம ஹீரோவை கட்டிக்க ஆசைப்படுதே.. எப்படி? தன்னைக்காப்பாத்துன அவரை அப்பா ஸ்தானத்துல இருக்கறப்போ எப்படி புருஷன் ஸ்தானத்துல பார்க்க முடியும்?

7. மினிஸ்டர் ஹீரோயின் மேல ஆசைப்படறதை, அவரோட தவறான  எண்ணத்தை கடைசி வரை ஹீரோயின் ஹீரோ கிட்டே சொல்லவே இல்லையே?

8. இன்ஸ்பெக்டர் ஹீரோவை கைது பண்ண வருவதும் , அவர் ஆற்றிய உரையைக்கேட்டு அவருக்கு கை கொடுத்து பாராட்டி செல்வதும் படு செயற்கை.. அவர் என்ன கவர்மெண்ட் ஆஃபீசரா? எடுப்பார் கைப்புள்ளயா?

9. படம் ரொம்ப ட்ரை (dry) சப்ஜெக்ட்.. எப்போ பாரு சேரி, ரவுடிங்க, ரேப் அப்டினு போர் போர் செம போர்

10. டாக்குமெண்ட்ரியா 20 நிமிடங்கள் எடுக்க வேண்டிய படம் இது.. எந்த விதமான திருப்பு முனைகளோ, திரைக்கதை சுவராஸ்யமோ படத்துல கொஞ்சம் கூட இல்லை..

11. ரெண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் மனதில் தங்கும்படி  ஒரு வசனம் கூட இல்லை.






http://haihoi.com/Channels/cine_gallery/thoothuvan_movie_stills_0037_S_516.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 30

எதிர்பார்க்கும் குமுதம்  ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க, டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.

 இந்த டப்பாவை ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல பார்த்தேன்



http://www.cinemaexpress.com/Images/article/2011/5/18/archana.jpg

Friday, October 08, 2010

கோட்டைக்கும் கோர்ட்டுக்கும் தகராறா?

தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக, பணி அனுபவம் குறைந்த லத்திகா சரண் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பணி நியமனத்தை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவர் ஆர்.நடராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமாரும் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என தீர்ப்பளித்தனர்.
அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டிய‌லையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,இப்போது இந்த மேட்டர்,அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது.இந்தத்தகவல் ஆனந்த விகடன் நண்பர் மூலம் கிடைத்தது.

Tuesday, September 14, 2010

நாட்டு நடப்பு - சிரிப்போ சிரிப்பு

1.இந்த வாரத்தின் சிறந்த பிஸ்னெஸ் மேக்னெட் பிர்லா விருது சன் டி வி கலாநிதி மாறனுக்கு, எந்திரன் பட டிரைலரைக்கூட விட்டு வைக்காமல் விழா நடத்தி காசு பார்த்தமைக்காக. (ஹூம்,பல்லு இருக்கறவங்க பக்கோடா சாப்பிடறாங்க,கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா,நமக்கென்ன?)

2. இந்த வாரத்தின் சிறந்த ஜோக்காண்டி ஜெர்க்கப்பன் விருது  ஐ ஜி சிவனாண்டி அவர்களுக்கு,அண்ணாமலை யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட் ஜோதி ஈவ் டீசிங்க்கால் தற்கொலை செய்யவில்லை,என சப்பைக்கட்டு கட்டி கேசை திசை திருப்பியதற்காக.

3 .  இந்த வாரத்தின் சிறந்த கலாச்சாரக்காவலன் விருது மிட்டாய் எனும் படத்தின் இயக்குனருக்கு,ஹீரோயின் ஒரே சமயத்தில் 2 பேரை கல்யாணம் செய்வது போலும் ,அவர்களுடன் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்ததற்கு. (மனசுக்குள்ள ஜூனியர் சாமினு நினைப்பா?)


4. இந்த வாரத்தின் சிறந்த மல்டிகில்டி பல்டி டஹால்டி விருது ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவின் வீட்டு பணிப்பெண் அனாமிகாவுக்கு ,நடிகர் மேல் ரேப் புகார் அளித்து பின் கோர்ட் விசாரணையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை,யாரும் என்னை எதுவும் செய்யவில்லை என பல்டி அடித்து அரசாங்கபணத்தை,நேரத்தை வீணாக்கியமைக்காக.( சே,எத்தனை டி போட வேண்டியதா போச்சு)


5. இந்த வாரத்தின் சிறந்த கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் கஞ்சா கார்மேகம் 
 விருது  ஒரிஸா மாநில ஷாபி இஸ்லாம்க்கு,தபால் மூலம் 6 மாதங்களாக கஞ்சா கடத்தியதற்கு.(அடா அடா,என்ன ஒரு கிரியேட்டிவ் திங்க்கிங்டா சாமி)

6. இந்த வாரத்தின் சிறந்த ஏழை ஜாதிக்கு குரல் கொடுக்கும் ஏகலைவன் விருது  பிரதமர் மன்மோகன்சிங்க் அவர்களுக்கு,வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக்கொடுங்கள் என உத்த்ரவு இட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியமைக்காக.(வேஸ்ட்டாப்போனாலும் எங்களுக்கு கொள்கை தானே முக்கியம்?)

7. இந்த வாரத்தின் சிறந்த செட்டில்மெண்ட் செம்மல் செவலக்காளை விருது
ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவிற்கு,தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை ரேப் செய்து பின் கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைத்தமைக்காக. (அண்ணே,அடுத்த புராஜக்ட் எப்போண்ணே?)

8. இந்த வாரத்தின் சிறந்த தழுவாத கைகள் தங்கமுத்து விருது ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூம்மாவுக்கு, 22 குழந்தைகள் பெற்றமைக்கு. (குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா)

9. இந்த வாரத்தின் சிறந்த ஆர்வக்கோளாறு ஆர்யமாலா விருது டென்னிஸ் வீராங்கனை ஷைனிக்கு,விளையாட்டு மைதானத்தில் கொடுக்கப்பட்ட பணமுடிப்புப்பரிசை என் டி டிவி கேமராக்கள் பார்க்கிறது என்பதைக்கூட உணராமல் அங்கேயே எண்ணிப்பார்த்தமைக்காக.(எங்கே ஓடிடப்போவுது அம்மணி?)

10. இந்த வாரத்தின் சிறந்த அவசரக்குடுக்கை அனந்த “பதமாஸ்” விருது எமதர்மராஜாவுக்கு,ஒரே வாரத்தில் சினி ஃபீல்டின் முக்கிய ஆட்களான நடிகர் முரளி,பாடகி ஸ்வர்ணலதா,இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.