Thursday, April 11, 2024

MUSICA (2024) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்

      


 சவுத்  பை  சவுத்  வெஸ்ட்டில்  உலகப்பட  விழாவில்  13/3/2024  அன்று  திரை இடப்பட்ட   படம், இன்னும் தியேட்டர்  ரிலீசுக்குத்தயார்  ஆக  வில்லை . அமெரிக்காவில்  ஏப்ரல்  மாதம்  கடைசி  வாரம்  ரிலீஸ்  ஆக  இருக்கும்  படம்..அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  4/4/2024  முதல்  காணக்கிடைக்கிறது . இது  மியூசிக்கல்  ரொமாண்டிக்  காமெடி  ஃபிலிம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   அவர்கள்  படத்தில்  கமல்  பாடிய  கடவுள்  அமைத்து  வைத்த  மேடை  பாடலில்  ஒரு  பொம்மையை  வைத்து  மிமிக்ரி  செய்யும்  கலைஞன்  போல   வீதிகளில்  பொம்மலாட்டம்  செய்பவன்.  தன்  அம்மாவுடன்  வசித்து  வருகிறான்.  அவன்  ஒரு  அமெரிக்கப்பெண்ணை  விரும்புகிறான். அவள்  வசதியானவள், ஆனாலும்  ஏழையான  நாயகனை  விரும்பு கிறாள் . 


 நாயகனின்  அம்மாவுக்கு   தன்  மகன்  ஒரு    அமெரிக்கப்பெண்ணை  விரும்புவது  பிடிக்கவில்லை . பிரேசில்  நாட்டுப்பெண்ணை  அறிமுகம் செய்து  வைக்கிறாள் 


நாயகனின்  அமெரிக்கக்காதலி  ஒரு  கட்டத்தில்  நாயகனை  பிரேக்கப்  செய்து  கொண்டு  செல்ல  நாயகன்  பிரேசில்  பெண்ணான  இசபெல்லா  உடன்   பழகுகிறான்.  இருவரும்  காதலிக்க  ஆரம்பிக்கலாம்  என  நினைக்கும்போது  நாயகனின்  முதல்  காதலி  ஆன  அமெரிக்கப்பெண்  மீண்டும்  நாயகனின்  வாழ்க்கையில்  வருகிறாள் 


  நாயகன்  முடிவெடுக்க  முடியாமல்  தடுமாறுகிறான். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து  திரைக்கதை  எழுதி , இசை  அமைத்து  இயக்கி  இருப்பவர்  ரூடி  மன்சுகோ,இவருக்கு  இது  முதல்  படமாம்,  நம்ப  முடியவில்லை.  மிகவும்  யதார்த்தமாக ,  இயல்பாக  நடித்திருந்தார் 


இசபெல்லாவாக  நாயகி  ஆக  கமீலா  கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்., அவர்  முகத்தைப்பார்த்துக்கொண்டே  இருக்கலாம்  போல  கொள்ளை  அழகு 


அமெரிக்கப்பெண்  ஆக   ஃபிரான்சிஸ்கா  ரியல்  நடித்திருக்கிறார். இவரும்  பொம்மை  மாதிரி  அழகு 


படத்தில்  அதிக  கேரக்டர்கள்  இல்லை  நாயகன் , நாயகிகள்  இருவர் , அம்மா, நண்பன்  ஆகிய  முக்கியக்கேரக்டர்கள் ஐவர்  தான் 


91  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆகக்கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்.


 இசைக்கு   முக்கியத்துவம்  கொண்ட  கதை  என்பதால்  படம்  முழுக்க  துள்ளாட்டம்  போடும்  பிஜிஎம்  அசத்தல் 


ஒளிப்பதிவு  அருமை .



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  மாறி  மாறி  இரு  நாயகிகளை  சந்திப்பதை  ஓரங்க  நாடக  மேடையில்  வருவது  போல  ஒரே  ஷாட்டில்   செட்டிங்க்ஸ்  மாறி  மாறி  வர  லொக்கேஷன்  சேஞ்ச்  ஆவது  புதுமையான  காட்சி  அமைப்பு 


2  நாயகன்  தன்  காதலியிடம்  பேசும்போது  இசையால்  கவனம்  சிதறுவது . அதனால்  தன்னைக்கவனிக்காமல்  இருக்கிறான், தனக்கு  முக்கியத்துவம்  தராமல்  இருக்கிறான்  என  கோபித்துக்கொண்டு  காதலி  பிரேக்கப்  செய்வது  என  யதார்த்தமான  காட்சி  அமைப்பு  அழகு 


3  க்ளைமாக்ஸ்  சீன்  தமிழில்  வந்த  விண்ணைத்தாண்டி  வருவாயா  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  கவிதையாக   இருந்தது


ரசித்த  வசனங்கள் 


1 வாழ்க்கைல  அடுத்து  என்ன  நடக்கும்னு  தெரியாம  இருப்பதே  சுவராஸ்யம், அதை  நான்  விரும்புகிறேன்


2   நீ  பார்ப்பதை  என்னால்  பார்க்க  முடியலை , ஆனால்  நீ  உணர்வதை  என்னால்  உணர  முடியுது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ  படம்  தான் . லிப்  கிஸ்  சீன்  மட்டும்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இசைக்காதலர்களுக்கு , ரொமாண்டிக்  ஃபிலிம்  பார்ப்பவர்களுக்குப்பிடிக்கும்,   ரேட்டிங்  2.5 / 5 


இசை
போஸ்டர் வெளியிடவும்
இயக்கம்ரூடி மன்குசோ
எழுதியவர்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஷேன் ஹர்ல்பட்
திருத்தியவர்மெலிசா கென்ட்
இசை
  • ரூடி மன்குசோ
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஅமேசான் பிரைம் வீடியோ
வெளியீட்டு தேதிகள்
நேரம் இயங்கும்
91 நிமிடங்கள் [1]
நாடுஅமெரிக்கா
மொழிகள்
  • ஆங்கிலம்
  • போர்த்துகீசியம் [2] [3]

Wednesday, April 10, 2024

HYPNOTIC (2023) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

      


  2011 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஏழாம்  அறிவு  எந்த  ஹாலிவுட்  படத்தில்  இருந்து  உருவிய  கதை   என  தெரியவில்லை., ஆனால்  ஏழாம்  அறிவு  படத்தை  அட்லீ  இடம்  தந்து  ஹாலிவிட்  படம்  ஒன்று  எடுக்கச்சொன்னால்  எப்படி  இருக்கும்? அதுதான்  ஹிப்னாட்டிக்  படம். இது  ஏற்கனவே  இதே  டைட்டிலில்  2021ல்  ரிலீஸ்  ஆன  படத்தின்  ரீ  க்ரியேஷன்  தான். 65  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  17  மில்லியன்  டாலர்  மட்டுமே  வசூலித்த  படம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவரது  மகள்  காணாமல்  போய்  3  வருடங்கள்  ஆகிறது . அந்த  நிகழ்ச்சியால்  மன  நிலை  பாதிக்கப்பட்ட  நாயகன்  எப்போதும்  தன்  மனைவி , மகள்  நினைவாகவே  இருக்கிறான் . மன  நல  மருத்துவரிடம்  கவுன்சிலிங்  பெற்று  விட்டு  வெளியே  வரும்  நாயகன்  போலீஸ்  காரில்  செல்லும்போது  ஒரு  தகவல்  வருகிறது.


 ஒரு  வங்கியில்  குறிப்பிட்ட  ஒரு  லாக்கர்  கொள்ளையடிக்கப்பட  இருக்கிறது . அந்தத்தகவல்  கிடைத்ததும்  நாயகன்  அந்த  பேங்க்குக்கு  விரைந்து  செல்கிறான். குறிப்பிட்ட  அந்த  லாக்கரைத்திறந்து  பார்த்தால்  அதில்  நாயகனின்  மகளின்  ஃபோட்டோ  இருக்கிறது . நாயகனுக்கு  ஒன்றும்  புரியவில்லை 


 வில்லன்  நோக்கு  வர்மம்  கற்றவன். அதாவது  எதிராளியின்  கண்களைப்பார்த்தாலே  வசியம்  செய்து  விடுவான்  . எதிராளியின்  மூளையை  அவன்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு  வந்து   தான்  நினைத்ததை  முடித்து  விடுவான். அவனுக்கும்  தன்    மகள்  காணாமல்  போனதுக்கும்  ஏதோ  தொடர்பு  இருப்பதாக  நாயகன் சந்தேகப்படுகிறான். துப்பு  துலக்கக்களம்  இறங்குகிறான்


 நோக்கு  வர்மம்  கற்ற  இன்னொரு  பெண்ணின்  நட்பு  நாயகனுக்குக்கிடைக்கிறது . அவள்  நாயகனுக்கு  உதவுகிறாள் . இவளுடனான  பயணத்தில்  சாகசத்தில்  நாயகனுக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . நாயகனுக்கும்  நோக்கு  வர்மம்  தெரியும். ஆனால்  வில்லனை  விட  பவ்பர்  ஃபுல்  ஆன  சக்தி  கொண்டவன்  நாயகன்.  நாயகன் , நாயகி  இருவரையும்  விட  அதிக  சக்தி  கொண்டவள்  தான்  நாயக்னின்  மகள் . அதனால்  தான்  அவள்    மறைத்து  வைக்கப்பட்டிருக்கிறாள் . இதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  ஆக்சன்  அவதாரம்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பெஞ்சமிக்ன்  அஃப்லெக்ஸ்  அபாரமாக  நடித்திருக்கிறார். அர்னால்டு  பாணியில்  அவரது  ஆக்சன்  அதிரடிகள்  ரசிக்க  வைக்கிறது . 


நாயகி  ஆக  அலைஸ்  பிராகா  அழகாக  நடித்திருக்கிறார். இவர்  ஒரு  தயாரிப்பாளரும்  கூட  . பிரேசில்  நாட்டைச்சேர்ந்த  நடிகை . 2002 ல்  ரிலீஸ்  ஆன  சிட்டி  ஆஃப்  காட்  படத்தில்  நடித்தவர் 


வில்லன்  ஆக  வில்லியம்  எய்ட்ச்னர்  மிரட்டி  இருக்கிறார். பார்வையாலேயே  அனைவரையும்  கட்டிப்போடும்  காட்சிகள்  அபாரம்


 மகள்  ஆக  வரும்  சிறுமி  கொள்ளை  அழகு 


94  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்  பெரும்பாலும்  சேசிங்  காட்சிகள்  தான் .பரபரப்பாக  படம்  ஓடுகிறது 


ரெபல்  ரோட்ரிக்ஸ்  இசையில்  பிஜிஎம்  தெறிக்கிறது 


ஒளிப்பதிவை  இருவர்  கவனித்திருக்கிறார்கள் .  ஹிபானடிக்  காட்சிகள்  பிரம்மாண்டமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன


ராபர்ட்  ரோடிங்க்னஸ்  தான்  கதை , திரைக்கதை , இயக்கம்  எல்லாம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கு  நடக்கும்  சம்பவங்கள்  செட்  செய்யப்பட்டு  ரீ  க்ரியேட்  ஆகும்  தன்மை  கொண்டவை  என்ற  சஸ்பென்ஸ்  ஓப்பன்  ஆகும்  இடம்  அருமை 


2  நாயகனுக்கு  உதவி  செய்யும்  பெண்  , நாயகனின்  மனைவி  இருவரையும்  கனெக்ட்  செய்யும்  யுக்தி  அபாரம் 


3    நாயகனின்  மகளுக்கு என்ன  ஆகி  இருக்குமோ? என  பதற  வைத்து  பின்  அவள்  ஒல்ரு  சூப்பர்  பவர்  உள்ள  ஆள்  என்ற  ட்விஸ்ட்டை  ஓப்பன்  செய்யும்  காட்சி 


4  நாயகனின்  மகள்  அறிமுகக்காட்சியில்  தொட்டால்  சரியும்  சீட்டுக்கட்டு  போல  செட்டப்பை பிரம்மாண்டமாகக்காட்டிய  ஆர்ட்  டைரக்சன்    



  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க்  கற்பனை  பண்ணிப்பார்க்க  முடியாத  விஷயங்களை  ஹிப்னாடிக்சால  செய்ய  முடியும், உங்களுக்குத்தேவையான  வேலையை  அவங்க  மூளையை  வெச்சு  செய்ய  முடியும் 


2  டெலிபதியால  மைண்ட்  ரீடு  மட்டும்  தான்  செய்ய  முடியும், ஹிப்னாடிசத்தால  இன்சிடெண்ட்டை  ரீ  ஷூட்  செய்ய  முடியும் 


3 நீ  எனக்கு  துரோகம் பண்ணிட்டு  இருக்கே

  அதை  எனக்குக்கத்துக்கொடுத்ததே  நீ தான்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  லிப்  லாக்  சீன்  மட்டும்  ஒரு  இடத்தில்  உண்டு  , யூ  படம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  பிரியர்கள்  பார்க்கலாம் , படம்  போர்  அடிக்காமல்  ஸ்பீடாகப்போகிறது . ரேட்டிங்  2.75 / 5 


Hypnotic
Theatrical release poster
Directed byRobert Rodriguez
Screenplay by
Story byRobert Rodriguez
Produced by
  • Mark Gill
  • Guy Botham
  • Lisa Ellzey
  • Jeff Robinov
  • John Graham
  • Racer Max
  • Robert Rodriguez
Starring
Cinematography
  • Pablo Berron
  • Robert Rodriguez
Edited byRobert Rodriguez
Music byRebel Rodriguez[2]
Production
companies
Distributed by
Release dates
  • March 12, 2023 (SXSW)
  • May 12, 2023 (United States)
Running time
94 minutes[3]
CountryUnited States
LanguageEnglish
Budget$65 million[4]
Box office$16.3 million[5][6]

Tuesday, April 09, 2024

THE SWINDLERS (2017) - சவுத் கொரியன் மூவி /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர்) அமேசான் பிரைம்

       

லோ பட்ஜெட்  படமாக  உருவான  இப்டம்  மொத்தம்  29  மில்லியன்  டாலர்கள் வசூல்  சாதனை  செய்தது. சிறந்த  நடிகைக்கான  விருதை நாயகியாக  நடித்த  நானாவுக்குக்கிடைத்தது.அமெரிக்காவில்  மட்டும்  முதலில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  ஹிட்  ஆனதும் சர்வதேச  அளவில்  பத்து  நாடுகளில்  பரவலாகத்திரை  இடப்பட்டது 


டைட்டில்  ஆன  ஸ்விண்ட்லர்ஸ்  என்பதற்கு  மோசடிக்காரர்கள்   என்று  அர்த்தம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை  நிகழும்  காலம்  2008


வில்லன்  சீட்டுக்கம்பெனி  நடத்தி  பல  கோடி  பணம்  சேர்ந்தது,ம்  எஸ்கேப்  ஆகிடறான். பணம்  போட்ட  பொதுமக்கல்  கம்பெனி  மேனெஜரைக்கேள்வி  கேட்கிறார்கள் , அவங்களுக்கு  பதில்  சொல்ல  முடியாம  மேனேஜ்ர்  மாடில  இருந்து  குதிச்சு  தற்கொலை  செய்து  கொள்கிறார்

 நாயகன்  ஒரு   திருடன். நாயகனோட  அப்பா  வில்லனுக்கு  போலி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணித்த்தருகிறார். அந்த  பாஸ்போர்ட்டை  வில்லன்  வாங்கிய  அடுத்த  நாள்  மர்மமான  முறையில்  நாயகனின்  அப்பா  தூக்கில்  தொங்கி இறக்கிறார்


 எந்த  நாட்டுக்கு  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணி  நாயகனின்  அப்பா  வில்லனிடம்  தந்தாரோ  அதே  நாட்டுக்கு  நாயகனும்  கிளம்புகிறான்.அப்போதானே  வில்லனைப்பிடிக்க  முடியும் ? 


ஆனால்  வில்லன்  ஒரு  விபத்தில்  இறந்ததாக்  மீடியாக்களில்  செய்தி   வருகிறது , ஆனால்  நாயகன்  அதை  நம்பவில்லை 


 அப்டியே  கட்  பண்ணினா  இப்போ  9  வருடங்கள்  கழித்து 2017 


வில்லன்  தப்பிப்போக  காரணமாக  இருந்த  பெரிய  தலைகள் , அர்சியல்வாதிகள்  மேல் விசாரணை  நடத்த  வேண்டும்  என  கோரிக்கை  கிளம்புகிறது / அந்த  லிஸ்ட்டை  வெளியிட்ட  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  தன்  உயர்  அதிகாரிகளை  ச்ந்திக்கிறார். அவங்க  கிட்டே  அவரு  பம்முவார்னு  பார்த்தா  அவங்க  தான்  இவரைப்பார்த்து  பம்மறாங்க . இந்தப்பிரச்சனையை  எப்படியாவது  முடிச்சு  விட்டுடு  என  கெஞ்சறாங்க 


  நாயகி  ஒரு  திருடி .ஒரு  நகைக்கடைல  தன்  கூட்டாளிகளோட  சேர்ந்து  நெக்லஸ்  கொள்ளை  அடிக்கறா. பப்ளிக்  பிராசிக்யூட்டர்  நாயகி  அண்ட்  கோ  வை  வேலைக்கு  அமர்த்தி   வில்லனைப்பற்றிய  டீட்டெய்ல்சை  எடுக்கிறான்


 நாயகன்  வில்லனைக்கொலை  செய்ய  அலைவது  பப்ளிக்  பிராசிக்யூட்டருக்கு  தெரிகிறது . இப்போது  பப்ளிக்  பிராசிக்யூட்டர் , நாயகன்  இருவரும்  இணைந்து  வில்லனை  சிக்க  வைக்க  திட்டம்  போடுகிறார்கள் . கடைசியில்  என்ன  ஆச்சு  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹியூன்  பின்  நடித்திருக்கிறார். அப்பாஸ்  மாதிரி  மைதா  மாவு  முகம், ஆனால்  ஆக்சனில் கலக்குகிறார்.  நாயகன்  போடும்  பல  கெட்டப்கள்  சிட்டிசன்  அஜித்  நினைவு  வருகிறது 


பப்ளிக் பிராசிக்யூட்டர்  ஆக   பார்க்  ஹி  ஷூ . நாயகன் , வில்லனை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சி . கலக்கலான  நடிப்பு 


வில்லன்  ஆக  பே  சியாங்  வியூ  மிரட்டி  இருக்கிறார். ஆனால்  அதிக  காட்சிகள் இல்லை 


 நாயகி  ஆக  நானா .இவர்  புதுமுகம்  அறிமுகம், ஆனால்  புதுமுகம்  போலவே  தெரியவில்லை  பிரமாதமான  நடிப்பு .  நாயகனுடன்  டூயட்டோ  காதலோ  இல்லை 


பேங்க்  ஜூன்  ஜியோ  தான்  இசை . ஒரு  பரபரப்பான  ஆக்சன்  த்ரில்லருக்கு  பிஜிஎம்  எந்த  அளவு  விறுவிறுப்பாக  இருக்க  வேண்டுமோ  அந்த  அளவு  உழைத்திருக்கிறார்


லீ  டே  யூன்  ஒளிப்பதிவில்  கார்  சேசிங்  காட்சிகள்  கலக்கலாகப்படம் ஆக்கப்பட்டுள்ளன 


117  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  படத்தை  கிரிஸ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்

ஜாங்க்  சாங்க்  வ்யோ  என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 பிரமாதமான  கார்  சேசிங்  சீன்  படமாக்கப்பட்ட  விதம்  கண்ட்ரோல்  ரூமில்  இருந்து கேமரா  மூலம்  கண் காணித்து  டைரக்சன்  சொல்லிக்கொண்டே ஒரு க்ரூப்  செயல்படுவதும்  அதை  செயல்  ஆக்கம்  செய்வது  ஒரு  டீம்  என  பிரித்து  வேலை  செய்யும்  விதம்  அபாரம் 


2  வில்லனின்  கையாளை  மடக்க  ஜெயிலில்  நாயகன்  அண்ட்  போலீஸ்  டீம் போடும் திட்டம்  குட்


3  லேடியை  வைத்து வாலட்  அபேஸ்  செய்யும்  காட்சி 


4 கேபிள்  காரில்  வில்லன்  தப்பிக்கும்  காட்சி


5  க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்  , இண்ட்டர்வெல்  ட்விஸ்ட்  போக  இன்னும்  ரெண்டு  ட்விஸ்ட்  வேற 


  ரசித்த  வசனங்கள் 

1  அதிகப்படியான  சந்தேகம்  கூட  சில சமயம்  ஒருவரை  நம்பக்காரணமா  ஆகிடும்


2  ஆயிரம்  பேரை  நீ  ஏமாற்றினாலும்  நீ  ஏமாறும்  தருணம்  வந்தே  தீரும் 


3 எவ்ளோ  பெரிய  கூட்டத்தில் ஒருத்தன்  இருந்தாலும் ஒரு  சொதப்பல்காரனை  நான்  ஈசியா  அடையாளம்  கண்டு பிடிச்சுடுவேன்


4  எந்த  வேலை  செய்யறதா  இருந்தாலும்  அதுல  ஒரு  ஜாப் எதிக்ஸ்  வேண்டும்


5 எதிரே  இருப்பவன்  அமைதியா  இருக்கானேன்னு எகிறக்கூடாது ,இறக்கிட்டுப்போயிடுவேன்


6 நரியை  விடமோசாமானவன்  நீ,  ஆனா  அதை  இன்னொரு  நரி  கிட்டே  காட்டலாமா?


7 உலகத்துல இருக்கும்  எல்லா  ஆம்பளைங்களும்  ஒரே  மாதிரி  தான்  இருக்காங்க


8  ஒருத்தன் கிட்டே  முதல்  டைம்  ஏமாந்தா  அது  அவனோட  தப்பு , ரெண்டாவது  டைமும்  ஏமாந்தா  அது  நம்மோட  தப்பு 


9  திரும்பத்திரும்ப  அவனை  ஏமாத்துவதுதான்  அவனுக்கு  தரப்போகும் தண்டனை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 என்ன  தான்  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  சரக்கு  உள்ள  நபராக  இருக்கட்டுமே?அவரை  விட  பண  பலமும், அரசியல் பலமும்  மிக்க  அதிகாரிகள்  அவரிடம்  பம்முவது  நம்பவே  முடியவில்லை , 


2 நாயகன்  பல முறை  சாவின்  விளிம்பில்  வந்து  விட்டுத்திரும்புகிறான், ஆனால்  எதற்குமே  அலட்டிக்கொள்ளவில்லை .  என்னதான்  கெத்து  காட்டினாலும்  உயிர்  பயம்  எல்லோருக்கும்  உண்டு 


3  நகைக்கடையில்  நாயகி  கிளாமர்  காட்டி  மயக்கி  கொள்ளை  அடிப்பது  எம் ஜி ஆர்  கால  டெக்னிக். அவ்ளோ  பெரிய  கடையில்  அந்த  ஒரு  ஆள்  மட்டும்  தானா? மற்ற  சேல்ஸ்மேன்  யாரும்  அந்த  போலி  நகை  மாற்றுவதைப்பார்க்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தமிழ்ப்படம்  பார்ப்பது  போலவே  இருக்கு . ஒரு  துளி  ஆபாசம்  இல்லை . கண்ணியமான  காட்சி  அமைப்புகள்  அருமை .  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  விருந்து . ரேட்டிங்  3 / 5 


மோசடி செய்பவர்கள்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
ஹங்குல்
மற்றும்
திருத்தப்பட்ட ரோமானியமயமாக்கல்க்குன்
இயக்கம்ஜாங் சாங்-வொன்
எழுதியவர்ஜாங் சாங்-வொன்
உற்பத்திசங் சாங்-யோன்
நடித்துள்ளார்ஹியூன் பின்
யூ ஜி-டே
பே சியோங்-வூ
பார்க் சுங்-வூங்
நானா
அஹ்ன் சே-ஹா
ஒளிப்பதிவுலீ டே-யூன்
இசைபேங் ஜுன்-சியோக்
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஷோபாக்ஸ்
வெளிவரும் தேதி
  • நவம்பர் 22, 2017
நேரம் இயங்கும்
117 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்US$28.9 மில்லியன் [1]

Monday, April 08, 2024

LUCK-KEY (2016) - கொரியன் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் + காமெடி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

    


 தெலுங்கு  ஹீரோவான  வெங்கடேஷ்  டபுள் ஆக்டில்  நடிக்க இந்தப்படத்தின்  ரீமேக் உரிமையை   வாங்கி  வைத்துள்ளார். காலம்  காலமாக  நாம் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல்  படங்களில்  பார்த்த  ஆள்மாறாட்டக்காமெடி  ஆக்சன்  படம்  தான்  இது .ஆனால்  நாம்  பார்த்ததெல்லாம்  ஒரே  ஹீரோ  டபுள்  ரோல்  பண்ணி  இருப்பார்.ஆனால்  இந்தப்படத்தில்  இரு  வேறு    ஹீரோக்கள் பண்ணி  இருக்காங்க 


 2012ல்  ரிலீஸ்  ஆன  ஜப்பானிஷ்  படமான  கீ  ஆஃப்  லைஃப்  என்னும்  படத்தின்  அஃபிஷியல்  ரீ  மேக்  இது. லோ பட்ஜெட்  படமான  இது  48  மில்லியன்  டால்ர்  வசூல்  செய்து  நம்ம  ஊர்  உள்ளத்தை  அள்ளித்தா  போல  அங்கே  மெகா  ஹிட்  ஆன  படம் கொரியன்  திரைப்பட  விழாக்களில்  பங்கேற்று  சிறந்த  நடிகர்  உட்பட  நான்கு  விருதுகளை  வென்றுள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு  கேங்கஸ்டர். யாரையாவது  கொலை  செய்ய  வேண்டும்  என  அவருக்கு  டார்கெட்  கொடுத்தால்  பார்ட்டியிடம்  பணம்  வாங்கிக்கொண்டு  கொலை  செய்ய  வேண்டிய  ஆளைக்கொலை  செய்யாமல்  அவனிடம்  விஷயத்தை  சொல்லி  நீ  எங்காவது  எஸ்  ஆகி  விடு    என  வேறு  இடம் / நகரம்/நாடு  என  அனுப்பி  வைப்பவர் 


காமெடியன்  சினிமா வாய்ப்புக்காக  காத்திருக்கும்  ஒரு  துணை  நடிகன். ஆனால்  வாய்ப்பு  எதுவும்  கிடைக்கவில்லை . வீட்டு  வாடகை  கூட  கட்ட  முடியாத  வறுமை . தற்கொலை  முயற்சி  கூட  செய்து  பார்த்து  அதிலும்  தோல்வி  கண்டவன்


 ஒரு  பப்ளிக்  பாத்ரூமில்  நாயகன் , காமெடியன்  இருவரும்  குளிக்க  வருகிறார்கள் . அங்கே  எல்லாம் டவல் , டிரஸ் , பணம்  வைக்க  லாக்கர்  கொடுத்திருப்பார்கள்.  சோப்  காலில்  பட்டு  கீழே  விழுந்த  நாயகன்   மயக்கம்  அடைகிறான். அவனது  லாக்கர்  கீ  காமெடியனிடம்  சிக்குகிறது .  இதுதான்  சாக்கு  என   காமெடியன்  தன்  லாக்கர்  கீயை  அவன்  பாக்கெட்டில்  போட்டு  விடுகிறான்


 தலையில்  அடிபட்டதால்  நாயகனுக்கு பழைய  நினைவுகள்  எதுவும்  வரவில்லை அவன்  தன்  பாக்கெட்டில்  இருக்கும் கீ யை  வைத்து  காமெடியன்  வீட்டுக்குப்போய்  அவனது  வாழ்க்கையை  வாழ  ஆரம்பிக்கிறான்


நாயகி  தான்  நாயகன்  மருத்துவச்செலவுக்கு  உதவியவள்.  அவளது  அம்மா  நடத்தும்  ஹோட்டலில்  சமையல்  மாஸ்டர்  ஆக  நாயகன்  சேர்ந்து  விடுகிறான். பிரமாதமாக  கஸ்டமர்களைக்கவர்கிறான்.  பார்ட்  டைம்  ஜாப்  ஆக  சினிமா  ஷூட்டிங்க்கிலும்  கலந்து  கொள்கிறான் 

 தாவணிக்கனவுகள்  கே  பாக்யராஜ்  போல  நாயகன்  சினிமாவில்  பிரபலம்  ஆகி  விடுகிறான்


 காமெடியன் ராஜ  போக  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான். இவனுக்கும்  ஒரு  ஜோடி  கிடைக்கிறது 


 நாயகனுக்கு  ஒரு  கட்டத்தில்  நினைவு  திரும்புகிறது . அவன்  தன்  இருப்பிடத்துக்கு  வருகிறான். அங்கே  காமெடியன்  இருக்கிறான் .இதற்குப்பின்  நிகழும்  காமெடி  கலாட்டாக்களே  மீதி  சம்பவங்கள் 


நாயகன்  ஆக  யூ  ஹாய்  ஜின்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.ஆரம்பத்தில்  இவரது  முகம்,உதடுகள்  பார்க்கவே  பிடிக்கவில்லை .பவர்  ஸ்டார்  மாதிரி  இருக்கிறாரே? என  நினைத்தேன், ஆனால்  போகப்போக  தன்  நடிப்பால்  பார்ப்பவர்  மனம்  கவர்ந்து  விட்டார் . 


காமெடியன்  ஆக  லி ஜூன்  க்ச்சிதமாக  நடித்திருக்கிறார்.இவரது  சாக்லெட்  பாய்  தோற்றம்  இவரது  பெரிய  பிளஸ் . காதலியிடம்  பின்னாலேயே  சுற்றுவது , பம்முவது  என  சராசரி  தமிழ்  நாயகன்  போலவே  ஸ்டாக்கிங்  செய்கிறார்


நாயகி  ஆக  லிம் ஜி  லியான் அ ழகாக நடித்திருக்கிறார்.க்ளைமாக்ஸ்  காட்சியில்  காமெடியிலும்  கலக்கி  இருக்கிறார்


 காமெடியனுக்கு  ஜோடியாக  ஜோ  யூ  ஹீன்  நடித்திருக்கிறார். அமைதியான  தோற்றம்.கச்சிதமான  நடிப்பு 


112  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் பேங்க்  ஜன்  இசையில் படம்  கலகலப்பாக  நகர்கிறது . ஆக்சன்  காட்சிகளில்  பிஜிஎம் கச்சிதம்


ஜேங்க்  யூ மீ  எழுதிய  திரைக்கதையை  இயக்கி  இருப்பவர் லீ  கே  பியோக் 


சபாஷ்  டைரக்டர்


1  சாதா  மனிதன்  சினிமாவில்  பெரிய  ஆள்  ஆவது  ஒரு  சுவராஸ்யமான  நமக்குப்பழக்கமான  விஷயம்  தான், அதைக்காட்சிப்படுத்திய  விதமும், ஷூட்டிங்  ஸ்பாட்டில்  நடக்கும்  காமெடிகளும்  அருமை 


2   நாயகன்  சமையல்  கலை  நிபுணர்  ஆக  டெக்ரேட்  செய்வது, உணவை    பிரசண்ட்  செய்வது  எல்லாமே  ரசிக்கும்படியான  காட்சிகள் . நாயகியின்  குடும்பத்துடன்   அவர்  ஒன்றி  விடுவது  அருமை 


3   காமெடியன்  சிசிடிவி  கேமராவில்  தன்  ஜோடிப்பெண்ணைப்பார்த்து  அவள்  இருக்கும் இடம்  தேடி  அலையும்  காட்சிகள்  அருமை . அந்தப்பெண்  தற்கொலைக்கு  முயல்வதாக  இவராக  நினைத்துச்செயுயும்  சேஷ்டைகள்  காமெடி 


4  வில்லன்களை  ஏமாற்ற  நாயகன்  போடும்  திட்டமும்  அதை  எக்ஸ்க்யூட்  பண்ணப்  போராடுவதும் , நாயகி  வந்து  சொதப்புவதும்  சுவராஸ்யம்  

5  படத்தில்   2  செட்    ஜோடிகள்  இருந்தும்  விரசமான  காட்சிகள்  இல்லாமல்  காதல்  காட்சிகளை , கண்ணியமாக  கையாண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவன்  டிரஸ்சிங்  ரூம்  என்  வீட்டை  விடப்பெருசா  இருக்கு 


2  இந்த  டி வி  வித்தியாசமா  இருக்கே?  ஒருவேளை  சிசிடிவியோ ? 


3  எல்லா  வேலைகளும்  சின்ன  வேலையாதான்  ஆரம்பிக்கும்


4   சார்  நான்  ராணுவத்துல  இருந்திருக்கேன்


 சரி  நீ  அங்கேயே  இருந்துக்க


5  இந்த  ராத்திரி  நேரத்துல  இவ்ளோ  இருட்டுல  இவன்  எதுக்கு  கூலிங்  கிளாஸ்  போட்டிருக்கான் ? 


6   மிஸ்,என்ன  பிரச்சனை ?


டைரக்டர்  சார் , இவர்  என்  முகத்தைத்தவிர  மத்த  எல்லா  இடத்தையும்  பார்த்துப்பேசிட்டு  இருக்காரு 


7  தன்னோட  கனவு  பலிக்கனும்கறதுக்கால பலர்  தங்கள்  வாழ்க்கையையே  தியாகம்  செய்கின்றனர்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முன்  பின்  பழக்கமே  இல்லாத  நபருக்கு நாயகி  900  டாலர்  ஹாஸ்பிடல்  சார்ஜ்  கட்டும்  காட்சி  நம்பவே  முடியலை 


2  க்ளைமாக்ஸ்  காட்சி  டிராமா  பார்ப்பது  போல  நம்ப  முடியாமல்  இருக்கிறது . வில்லன்கள்  அவ்வளவு  எளிதில்  ஏமாறுவார்களா? 


3  25  வயதான  நாயகி 45  வயதான  அங்க்கிள்  ஆன  நாயகனை  விரும்புவதை  அவர்  வீட்டில்  எதிர்க்கவே  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காமெடி  ப்ரியர்கள் , ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்    என  அனைவரும்   பார்க்கலாம் , இந்தப்படம்  தெலுங்குப்பதிப்பில்  எப்படி  எல்லாம்  சொதப்பப்போகிறார்கள்  என்பதை  அறிய  இப்போதே  ஒரிஜினல்  வெர்சனை  பார்த்து  வைத்துக்கொள்ளலாம்  . ரேட்டிங்  3.25 / 5 


Luck Key
Theatrical poster
Directed byLee Gae-byok
Written byJang Yoon-mi
Based onKey of Life
by Kenji Uchida
Produced byJung Hee-soon
Starring
Edited byYang Jin-mo
Music byBang Jun-seok
Production
company
Yong Film
Distributed byShowbox
Release date
  • October 13, 2016 (South Korea)
Running time
112 minutes
CountrySouth Korea
LanguageKorean
Box officeUS$47.4 million

Sunday, April 07, 2024

வா இந்தப்பக்கம் (1981) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி டிராமா ) @ யூ ட்யூப்


ஒளிப்பதிவாளர் பி சி  ஸ்ரீ ராமின்  முதல்  படம்  இதுதான்  என்பது  பலருக்கும்  தெரியாத  ஒரு  விஷயம். எல்லோருமே  பூவே  பூச்சூடவா அல்லது  மவுன  ராகம்  தான்  அவரது  முதல்  படம்  என  நினைத்திருக்கிறார்கள் . முதல்  படம்  கிராமிய  சப்ஜெக் , லோ  பட்ஜெட்  படம்  என்றாலும்  பாடல் காட்சிகளில்  தன்  முத்திரையைப்பதித்திருக்கிறார். இயக்குநர்  மவுலிக்கு  இது  மூன்றாவது  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  லாட்ஜ் கம்    ஹோட்டலில்  ரிசப்ஷனிஸ்ட்  கம்  மேனேஜர்  ஆக  இருக்கிறார். தனக்கு  வரப்போகும்  மனைவி  மாடர்ன்  கேர்ள்  ஆக  இருக்க  வேண்டும்  என்பது  அவரது  விருப்பம், ஆனால்  கிராமத்துப்பெண்  தான்  அமைகிறார்.


 நாயகன்  வீட்டில்  அம்மா, அப்பா , அண்ணன் ,அண்ணி , அண்ணனின்  குழந்தைகள்  இருவர்  என  கூட்டுக்குடும்பம்  ஆக  இருக்கிறார்கள் . ஒரே  ஒரு  பெட் ரூம்  தான்  அந்த  வீட்டில் 


 இப்படி   இருக்கும்போது  புதிதாகத்திருமணம்  ஆகி  வரும்  நாயகி  என்னென்ன  பிரச்சனைகளை    எதிர்கொள்கிறாள்? அதை  எப்படி  தீர்க்கிறார்? என்பதை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  ஆக  பிரதாப்  போத்தன். அசடு  வழியும்  கேரக்டரில்  அந்தக்காலத்தில்  இவரை  விட்டால்  அப்படி  சிறப்பாக  நடிக்க  ஆள்  இல்லை . அதே  போல  மனைவி  மீது  சந்தேகப்படும்  கேரக்டரில்  இவரும், சிவக்குமாரும்  பல  படங்களில்  சிறப்பாக  நடித்தவர்கள் . 


நாயகி  ஆக உமா  ஜெயதேவி  குடும்பப்பாங்கான  பெண்  ரோலில்  அருமையாக  நடித்திருக்கிறார். மாடர்ன்  டிரசில்  வரும்  காட்சிகள்  கிளுகிளுப்பு 


பக்கத்து  வீட்டுப்பெண்  ஆக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை . சிறப்பான  நடிப்பு 


இஷை  ஷ்யாம். 5  பாடல்களில்  2  ஓக்கே  ரகம், 3  செம  ஹிட்  சாங்க்ஸ் . பி சி ஸ்ரீ  ராம்  ஒளிப்பதிவு 90%  கதை  ஒரு  வீட்டுக்குள்ளேயே  நடப்பதால்  சவாலான  பணிதான், ஆனால்  பாடல்  காட்சிகளில்  அவுட்டோர்  ஷூட்டிங்  என்பதால்  தன்  முத்திரையைப் பதித்திருக்கிறார்


 திரைக்கதை , வசனம் , இயக்கம்  மவுலி . இவரது  காமெடி  வசனங்கள்  அந்தக்காலத்தில்  பிரபலம் .  குடும்பப்பாங்கான  கதையைக் காமெடி  கலந்து  சொல்வதில்  வல்லவர் .


 இதில்  ஆச்சரியமாக  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  கலந்து  எழுதி  இருக்கிறார்


இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது



சபாஷ்  டைரக்டர்


1   நாயகனின்  அண்ணன்  பட்டப்பகலில்  தன்  பெட்ரூம்  கதவை  சாத்தப்போகும்  முன்  அம்மாவும், அப்பாவும்  வீட்டுக்கணக்கு  பார்க்கப்போறோம், யாரும்  தொந்தரவு  பண்ணக்கூடாது  என்று  சொல்லி  விட்டு  தாழ்  போட  தம்பி  தன்  அண்ணன்  மகனிடம்  ஒரு  ரூபா  கொடுத்து  நீ  போய்  தூங்கு  என திட்டம்  போட்டு  பெட்ரூம்  கதவைத்தட்ட  வைக்க  அதைத்தொடர்ந்து  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  “ஏ” ஒன்  ரகம் 


2   ரேடியோவில்  இரு  குழந்தைகளூக்கு  இடையே  போதிய  இடைவெளி    வேண்டும்  என்ற  விளம்பரம்    வரும்போது  நாயகனின்  அண்ணன்  செய்யும்  செயல்  காமெடி 


3  நவ  நாகரீகம்  என்ற  பெயரில்  பெண்களுக்கு  நிகழும்  பிரச்சனைகளைப்பேசிய  விதம்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  இவள்  தேவதை  , இதழ்  மாதுளை ( ட்ரீம் டூயட் சாங்)


2  ஆனந்த  தாகம் , என்  கூந்தல்  பூக்கள் பூக்குமோ?  


3  சின்னச்சின்ன  இந்த  மதியம் 


4  மேரே  ஆவாஸ்  சுன்


5  ஏய் , வா , இதில்  என்ன  கோபம் :?


  ரசித்த  வசனங்கள் 


1    படிச்சுட்டு  இருக்கியே?  என்ன  எக்சாம் ?


 இண்டியன்  எக்கனாமிக்ஸ்


 தமிழ்  நாட்டின்  ஜனாதிபதி  யார்?


 அதெல்லாம்  கேட்க  மாட்டாங்க   

 ஒரு  வேளை  கேட்டுட்டா?


 எம்  ஜி ஆர்  தானே? 


 கோழி முட்டை , வாத்து  முட்டை 



2    எக்சாம் ல  என்ன  எழுதறதுன்னே  தெரியல 


 கோவிந்தா  கோவிந்தா  கோவிந்தா 


3  மதர்  க்கு  ஸ்பெல்லிங்க் என்ன?


 எம்  ஓ  டி ஹெச் ஈ  ஆர் 


 இவ்ளோ  அதிமகான  ஸ்பெல்லிங்கா  வரும் ?


 அது  ;பெரியம்மா , அதான் 


4   அடுத்த  நிகழ்ச்சி  இன்னும்  சில  மடிகளில்  தொடங்கும் , சாரி இன்னும்  சில நொடிகளில்  தொடங்கும்


5  டேய்  தம்பி, இத்தனை  நாளா  நான்  மட்டும்  தான்  வீட்டுக்கணக்கை  போட்டுட்டு  இருந்தேன்,  இப்போ உனக்கும்  கல்யாணம்  ஆகிடுச்சு , நீயும்  வீட்டுக்கணக்கை  போட  வேண்டி  வரும்,  ஆனா  நம்ம  வீட்ல  இருப்பதோ  ஒரே  ஒரு  பெட்ரூம், அதனால  ஆளுக்கு  ஒரு  நாள்  வீட்டுக்கணக்கை  போடுவோம்,  டீலா?


6  எதுக்காக உன் உடல்  பூரா  இப்படி  சேலையால  மூடி  இருக்கே?


 புருசன்  முன்னால  கை  காலை  எல்லாம்  காட்டக்கூடாதுனு  பாட்டி  சொன்னாங்க 


 இப்போ  அந்தப்பாட்டி  எங்கே?


 செத்துப்போயிட்டாங்க 


7  பைத்தியம்  என்னைப்பார்த்தா  உனக்கு  பயமா  இல்லையா?


 பாவமா  இருக்கு , புலி  வேஷம்  போட்டு  ஆடுபவர்களைக்கண்டா  பயமாவா  இருக்கும் ? 


8  நம்ம  வீட்ல  ஒரு  சாவு  நடந்தாக்கூட  எத்தனை  வேளை  சாப்பிடாம  இருக்க ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  மேன்  ஆன  நாயகன்  நடு  வீட்டு  ஹாலில்  சேரில்  அமர்ந்து  ஷூ  போடுவது  போல்  ஒரு  காட்சி .  பணக்காரங்க  வீட்டில்  வேணா  அபடி  நடக்கலாம்,  ஏழை, மிடில்  கிளாஸ்  ஃபேமிலில  செப்பல்  , ஷூ  எல்லாம்  வீட்டுக்கு  வெளில  வாசல்ல  தானே  இருக்கும்? 


2  நாயகன்  வீட்டிலும் , நாயகன்  வேலை  செய்யும்  ஹோட்டல்  லாட்ஜிலும்  லேண்ட்  லைன்  ஃபோன்  இருக்கிறது . வீட்டில்  எல்லோரும்  வெளியே  போய்  இருக்காங்க   என்பதை  நாயகி  நாயகனுக்கு  ஃபோன்  போட்டு  சொல்ல  மாட்டாரா?  லேட்டாக  வந்த  நாயகன்  நாயகியிடம்  நீ  ஏன்  எனக்கு  ஃபோன்  பண்ணவில்லை  என்று  கேட்க  மாட்டாரா?


3  நாயகன்  மெக்கானிக்கிடம்  செகண்ட்  ஹேண்ட்  ஸ்கூட்டர்  வாங்கும்போது  ஆர் சி  புக்  வாங்க  மாட்டாரா?


4 நாயகன்  வரும்  ஸ்கூட்டர்  ஒரு  ஸ்மெக்ளரோடது  என்பதால்  12  பைக்குகளீல்  போலீஸ்  ஆஃபிசர்ஸ் 24 பேர்  வருகிறார்கள். அடுத்த  ஷாட்டில்  ஜீப்பில்  ஏறு  என்றதும்  12    பைக்குகள்  2  பைக்  + 2  ஜீப்  ஆக  மாறியது  எப்படி ? 


5   நாயகன் - நாயகி  இருவரின் பக்கத்து  வீட்டு  பைத்தியப்பெண்ணின்  கதை  மடத்தனமா  இருக்கு . திருமணம்  ஆன  புதிதில்  கணவன்  அந்தப்பெண்  குளிக்கும்போது  பாத்ரூமில்  வந்து  கலாட்டா செஞ்சானாம், அவ  பயந்துட்டாளாம். என்ன  கொடுமை  சார்  இது ? 


6  பக்கத்து  வீட்டுப்பெண்ணின்  கணவன்  ஒரு  சைக்கோவாம், அவனை  ஏமாற்ற  அந்தப்பெண்  ஒரு  பொம்மையை  கீழே  போட்டு  உடைத்து  ஒரு  மாதிரி  சிரித்ததும்  அவன்  நம்பி  விடுகிறானாம், ஆனா  அதை  நாம  நம்பனுமே? 

/

7  பைத்தியமாக  நடிக்கும்  பெண்ணின்  கணவன்  காலை  9  மணிக்கு  ஆஃபீஸ்  போய்  விட்டு மாலை  6  மணிக்கு  வருகிறான். நாயகி  அவளை  சந்திக்க  வேண்டும்  எனில்  காலை  9.15   டூ  மாலை  5  வரை பார்த்திருக்கலாம், பேசி  இருக்கலாம்  சரியாக  அஞ்சே  முக்காலுக்கு  போய்  ஏன்  மாட்டிக்கொள்கிறார்?


8  நாயகன்  தன்  அண்ணன்  மகன்  10  வயது  சிறுவனிடம்  ஒரு  சீட்டைக்கொடுத்து  சித்தப்பாவுக்கு  உடம்பு  சரி  இல்லை , மெடிக்கல்  ஷாப்ல  போய்  இதை  வாங்கிட்டு  வா  என  நிரோத்  என  எழுதித்தருகிறான். என்ன  மடத்தனமான  காட்சி . காமெடிக்கு  என்றாலும்  இப்படித்தான் லூஸ்  தனமா  சீன்  எழுதனுமா? 


9   அடைத்து  வைக்கபப்ட்ட  அந்த  பைத்தியப்பெண்ணுக்கு நாயகி  சாப்பாடு  கொடுக்கிறாள், எப்படி ? ஒரு  ஆறடுக்கு  டிஃபன்  கேரியரில்  அதை  ஜன்னல்  கம்பி  வழியாக  இழுக்க  முடியாமல்    தடுமாறுது , அம்மா, அறிவுக்கொழுந்தே.. ஒரு  தட்டில்  சாப்பாடு  போட்டு  அதில்  சாம்பார்  ஊற்றி  தந்தால்  கம்பி  வழியாக  உள்ளே  போகாதா? 


10   நாயகி  பட்டிக்காடாக  இருந்து  நாயகன்  விருப்பத்திற்கு  இணங்க  நாகரீக  மங்கை  ஆவது  ஓக்கே , ஆனால்  திடீர்  என  ஒரு பார்ட்டியில்  ஹிந்தியில்  பாடுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர். கர்நாடக  சங்கீதம்  திடீர்  என  கற்றவர்  மாதிரி  வேற  காட்றாங்க  , அவங்க  பிராத்மிக்  எக்சாமே  பாஸ்  பண்ணாம  எம்  ஏ  ஹிந்தி  முடிச்சவங்க  மாதிரி  பாட்டுப்பாடுவது  ஓவர் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  காட்சி  ரீதியாக  யூ  தான், ஆனால்  வசன  ரீதியாக  ஆங்காங்கே  18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பி சி  ஸ்ரீராம் , இயக்குநர்  மவுலி  ரசிகர்கள் , அந்தக்கால  காமெடிப்ரியர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 


வா இந்தப் பக்கம்
இயக்கம்மௌலி
தயாரிப்புதமிழரசி
பொன்மலர் இண்டர்நேஷனல்
இசைஷியாம்
நடிப்புபிரதாப் போத்தன்
உமா
ஜெயதேவி
வெளியீடுமே 291981
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்