Showing posts with label tamil film review. Show all posts
Showing posts with label tamil film review. Show all posts

Friday, May 13, 2016

கோ-2 - சினிமா விமர்சனம்

தமிழ் நாட்டின் முதல்வரை ஒரு சாதாரண தனி நபர் புத்திசாலித்தனமா கடத்திடறான். அவரை பணயமா வெச்சு  என்னென்னெ கோரிக்கைக்கள் கேட்கப்போறானோன்னு போலீஸ் பரிதவிக்கும்போது அவன் ரொம்ப சில்லித்தனமான கோரிக்கைகள் எல்லாம் வைக்கறான். ஒரே குழப்பமா இருக்கு. 

ஃபிளாஸ் பேக்.உள் துறை அமைச்சர் தேர்தல்ல தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கறார். அவர் ஜெயிச்சது செல்லாதுன்னு பொதுந வழக்கு போட்ட சமூக சேவகரை அஈரோயின்மைச்சரே கொலை பண்ணிடறாரு.அந்த கொலைக்கு தண்டனை வாங்கித்தரத்தான் ஹீரோ இந்த டிராமா போடறாரு.

 அந்த சமூக சேவகருக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் ? இதுல ஹீரோயின் எப்டி வர்றார்? என்பதெல்லாம் திரைக்கதை சுவராஸ்யங்கள்.

படத்தின்  முதல்  ஹீரோ இயக்குநர் தான். பில்லா 2 படத்தில் உதவி இயக்குநரா இருந்தவருக்கு இயக்குநர் பிரமோசன் . முதல் படத்துலயே ஆளுங்கட்சியை கிழி கிழினு கிழிச்சு தோரணம் கட்டி தொங்கப்போட்டிருக்கார், க்ளைமாக்ஸ்ல  முதல்வர் நல்லவர், அமைச்சர்கள் தான் கெட்டவங்கன்னு ஒரு சமாளிப்பு ( படம்  ரிலீஸ் ஆகனும் இல்ல)


படத்தில் 2 வது ஹீரோ  பாபி சிம்ஹா. இவர் ரஜினி பாணியில் நடிப்பதை குறைச்சுக்கிட்டா நலம். இவருக்குன்னு சொந்தமான நடிப்புத்திறமை இருக்க எதுக்கு இப்டி?  வசன உச்சரிப்பு , பாடி லேங்க்வேஜ் எல்லாம் கன கச்சிதம். ஒரு டூயட்  வேற  இருக்கு.

முதல்வரா வரும் பிரகாஷ் ராஜ் கலக்கறார். முதல்வன் பட ரகுவரன் -அர்ஜூன் காம்போ பேட்டி போல் இதிலும் ஒரு காட்சி உண்டு. வாத விவாதங்களில் வசனகர்த்தா பளிச்சிடுகிறார்.


 ஆனால் பல காட்சிகளில் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வசனங்களும் முதல்வர் நல்லவர்  ஆனால் நிர்வாகத்திறமை அற்றவர் என்பது போல் குழப்பமான வசனங்கள் வருது. அது சென்சார் பிரச்சனைக்காகவும் , பட ரிலீஸுக்கான மறைமுகமான நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் இருக்கலாம்


மயில் சாமி  ஒரு காமெடி  ரோலில் லைட்டாக  சிரிக்க வைக்கிறார். கருணா ஒரு கேர்கடர் ஆர்ட்டிஸ்ட்டாக கெஸ்ட்  ரோல். நாசர் ஒரு சீன் வந்தாலும் மனதில் நிற்கிறார். 

 நாயகனின் நண்பராக வருபவ்ருக்கு நல்ல  வாய்ப்பு 

  நாயகிக்கு அதிகம் வேலை இல்லை. இது போன்ற சென்சேசனல் திரைக்கதைக்கு இதுவே போதும்

எலக்சன் டைமில் வந்ததால் பரப்ரப்பாக ப்பேசப்படும்

 இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்புகள் எளிதாகக்கிடைக்கும்.  ஹீரோ பாபி சிம்ஹாவுக்கும் இது ஒரு  வெற்றிப்படமே





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

தேர்தல் கால சிறப்புத்திரைப்படம் கோ 2 =128 நிமிசங்கள் @ ஈரோடு மகாராஜா மல்ட்டிபிளக்ஸ்.


2 ஓப்பனிங் சீனே பரபரப்பு.தேசிய கீதம் போல் சிஎம் மை கடத்திட்டாங்க.தானைத்தலைவர் னு உள்குத்து டயலாக் # கோ2


3 கார்வண்ணன் ன் பாலம் பட பாணியில் திரைக்கதை பய்ணம் 2


4 ஹீரோயின் குப்பையை குப்பைத்தொட்டில போடாம நடு ரோட்ல போட்டதை ஹீரோ அன்பா கண்டிக்கறாரு.அடுத்த சீனே லவ் (நாமும் இதே பார்முலா பாலோ )


5 பில்லா 2 உதவி இயக்குநர் தான் இயக்குநர் 2 ராசி 2 போல

6 தளபதி பட ரஜினி மம்முட்டி மீட் சீன் உல்டா சீன் ரசிகர்களிடம் எடுபடவில்லை.பொருந்தா காமெடி .

7 ஜெ வின் ஆட்சியை கிழி கிழி னு கிழிக்கறாங்க.குறிப்பா வெள்ளம் பஞ்சம் பற்றி 2


8 ஆளுங்கட்சியை விமர்சிக்கும் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டது புத்திசாலித்தனம்.ஆனால் பாலைவனரோஜாக்கள் போல் கருத்தான வசனங்கள் இல்லை


இளவரசு க்கு ஓபிஎஸ் கெட்டப் .குட்

10  நியூஸ் 7 சேனல் இந்தப்படத்துக்கு பைனான்ஸ் போல.குட் ப்ரமோ 2

11 உள்துறை அமைச்சர் ,ஓபிஎஸ் வில்லன் ,ஜெ நிர்வாகத்திறன் அற்றவர் னு காட்சிகள் வருது .சபாஷ் டைரக்டர்.படம் ரிலீஸ் ஆனதே பெருசு 2


12  
தெலுங்கில் ரிலீஸ் ஆன பிரதிநிதி என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் கோ -2

நச் டயலாக்ஸ்

1 வயசு இருந்தப்போ ரொம்ப ஆடாம இருந்திருந்தா இப்போ ஜாகிங் ஓடாம இருந்திருக்கலாம் ( ட்விட்டரில் இருந்து சுட்ட வசனம் )



2 நான் யார் தெரியுமா?மந்திரி பையன்.

யோவ்.மந்திரி பையன்னா தப்பே பண்ணக்கூடாது.பொறுப்புணர்வு இருக்கனும்


நான் ஒரு FREE.BIRD

அப்போ அநாதைனு சொல்லுங்க.


நமக்காக நாம போட்ட விதிகளை நாமே பின்பற்றலைன்னா எப்படி ?# கோ2


5 சிஎம் என்னை கடத்திட்டே.உன் டிமான்ட் என்னனு இப்பவே சொல்லு

நீங்க மட்டும் பதவிப்பிரமாணம் செய்ய நல்ல நேரம் பார்க்கறீங்க?

என்னை நீ உன் பேரன்ட்சுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு பதவி அந்தஸ்து இருக்கனும்னு அவசியம் இல்லை 2


7 உங்களுக்கு அர்விந்த்சாமி ஓக்கேவா?

ம்ம் ஆனா அஜித் சார் தான் ரொம்ப பிடிக்கும் 2 # அஜித் ரெப்ரன்ஸ்

8 டெக்னாலஜி நம்ம மூளைக்கு உதவி செய்யனும்.ஆனா டெக்னாலஜியே மூளை ஆகிடக்கூடாது


தரமான கல்வி ,விவசாயம் தருவதா வாக்களித்து வரி வசூலிக்கும் அரசு அதை செய்யுதா ?

10 பால் உற்பத்தி ,கல்வி எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்த அரசு மது உற்பத்தி ,விற்பனையை மட்டும் தானே எடுத்தது எப்ப்டி ? 2


11 நாட்டைப்பத்தி கவலைப்படறவங்க எல்லாம் பேஸ்புக்ல லைக்ஸ் வாங்கத்தானே புரட்சி பண்றீங்க ?

12  என்னைக்குமே ஒரு தலைவன் தான் தப்பான முன் உதாரணமா இருக்கக்கூடாது



சி.பி . கமெண்ட் - கோ-2 ஆளுங்கட்சியை நேரடியாகத்தாக்கும் அரசியல் படம். ஏ, பி செண்ட்டர்களில்  ஓடும்,முன் பாதி ஸ்லோ, பின் பாதி ஸ்பீடு, விகடன் =42 , ரேட்டிங் = 2.75/5

Friday, May 06, 2016

24 - சினிமா விமர்சனம்


இயக்குநர் விக்ரம் குமார்க்கு எந்த தமிழ் இயக்குநருக்கும் இல்லாத ஒரு பெருமை உண்டு. வழக்கமா தெலுங்குப்படத்தை ,ஹிந்திப்படத்தை தமிழ் ல ரீமேக் பண்ணின தமிழ் சினிமா உலகத்தில்  முதல் முறையா தமிழ் சினிமா வை ஹாலிவுட் சினிமா ரீமேக்கிய தருணம். யாவரும் நலம் என்ற பிரமாதமான த்ரில்லர்  மூவி. அவரது அடுத்த ப்டம் 24  எப்டினு பார்ப்போம்


ஹீரோ ஒரு சயிண்ட்டிஸ்ட். டைம் மிஷின் போல் டைம் ட்ராவல் வாட்ச் கண்டு பிடிக்கறார். ஆனா அவரோட அண்ணன் ( ட்வின்ஸ்) வந்து அவரைக்கொலை செஞ்சுடறார்.அண்ணன்  கைக்கு வாட்ச்  கிடைக்கலை,

 ஹீரோவுக்கு  ஒரு குழந்தை. 26  வருசத்துக்குப்ப்பின்  கதைல  ஒரு திருப்பம். வில்லனும் ஹீரோ மகனும் சந்திக்கறாங்க , அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே திரைக்கதை

 ஹீரோவா அர்ப்பணிப்பான நடிப்பில் கமல் விக்ரம் க்கு அடுத்த இடத்தில்  இருக்கும் சூர்யா. இ ரு  வித கெட்டப் . 
வில்லன்  கெட்டப்ல கலக்கல் நடிப்பு  ஆனா அகரம் ஃபவுண்டேசன் சாஃப்ட் ஹீரோவை வில்லனா பார்த்து  ஜீரணிக்க கொஞ்சம்  டைம் ஆகும்.


பாடி லேங்குவேஜில்  வில்லன் நடிப்பில்  வீல்  சேரில் அமர்ந்திருக்கும் சூர்யாவின்  ஆக்டிங் அசத்தல்

ஹீரோவா வரும் சூர்யா வழக்கம் போல் ரொமா\ண்டிக் வழிசல் இளமை துள்ளல்


ஹீரொயினா  சமந்தா . பவுடர் கோட்டிங்  பர்பி பொம்மை.  பாடல் காட்சிகளில் அசால்ட்டா  ஒரு நைட்டி மட்டும்  போட்டுட்டு சுத்துது. நல்ல காஸ்ட்யூம் சென்ஸ், 


 சரண்யா  ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மா கேர்கடர், வழக்கம் போல்  குட்

ஆர்ட்  டைரக்சன்  , ஒளிப்பதிவு  , இசை மூன்றும்  போட்டி போட்டு பர்ஃபார்மென்சில் கலக்கறாங்க. ஸ்டண்ட் மாஸ்டரும் இந்த லிஸ்ட்டில் சேர முயற்சிக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி


டூயட்  சீன்களின்  லொக்கேசன் செலக்சன் அருமை டிர்ஸ்சிங் சென்சில் சிக்கன் நடவடிக்கையில்  ஈடுபட்ட சமந்தாவுக்கும் காஸ்ட்யூம்   டிசைன்ருக்கும்  ஒரு  பூங்கொத்து



நச் டயலாக்ஸ்


1  வில்லன் =,நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.உன் பிறந்தநாள் இறந்த நாள் 2 ம் ஒரே நாளில். #24

2 வீடு பூரா இத்தனை வாட்ச் இருக்கு.ஆனா நேரத்தோட அருமை தெரியாதவங்க #24


3 அதெப்டிரா வெட்கமே இல்லாம ஓசி சாப்பாடு சாப்பிடறே?


நாங்க எல்லாம் வெக்கத்தை கக்கத்தில் வெச்சுக்குவோம் #24


4 எல்லாருக்கும் ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்கும்.ஆனா வயசானவனா வாழ ஆசை இருக்காது #24


5 மணி எங்கே?


இதோ 5 நிமிசத்துல் வந்துடறேன்னு சொல்லிட்டுப்போய் அரை மணி நேரம் ஆச்சு.1 மணி நேரத்துல வந்துடுவான் எப்படியும் #24



6 ஒரே ஆளை 2 தடவை கொல்ல வாய்ப்பு கிடைச்ச உலகின் முதல் மனிதன் / அதிர்ஷ்டசாலி நாந்தான் #24



தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

                        
24 = 164 நிமிடம். ஈரோடு மகாராஜா @ 9 AM show

ஆக்சன் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் பட்டாஸைக்கிளப்பனும்

இதில் அமைதியான எளிமையான ஓப்பனிங் #24



3 ஆர்ட் டைரக்டர் பர்ஸ்ட் கோல்.சயின்ட்டிஸ்ட் லேப் #24


4 வாட்ச் திஸ் மூவி னு தாராளமா சொல்லலாம்.ஏன்னா கதையே வாட்ச் ல தான் # டைம் மிஷின் டைம் வாட்ச்

5 ஆர்ட் டைரக்டருக்கு அடுத்து இசை 2 வது கோல்.பிஜிஎம் ஏ ஆர் ஆர் ராக்கிங் #24

6 3 வது கோல் ஒளிப்பதிவு.மழைத்துளிகளை ப்ரீஸ் செய்து ஹீரோ சுண்டி விடும் காட்சி #24


7 திரைக்கதையின் தேவை கருதி ஒரே சீன் 3,டைம் ரிப்பீட் ஆகுது.இப்டி அடிக்கடி நிகழ்ந்தா நல்லதல்ல #24

8 வாட்ச் மெக்கானிக் இல்லையா நான்.இதெல்லாம் சர்வசாதாரணம். இதே டயலாக்கை ஹீரோ அடிக்கடி சொல்றார்.முடியல #24

9 யாவரும் நலம் விறுவிறுப்பு பரபரப்பு மிஸ்சிங் #24

10 டைம் மிஷின் கதைகளின் முக்கிய விதி இறந்த காலத்தின் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே.ரூல் மீறுதே #24

11 டைம் ப்ரீசிங்.& செட்டிங்ஸ் சேஞ்ச் சீன் கள் சி சென்ட்டர்.ஆடியன்சை கவர்வது புரிவது சிரமம் #24

12 இண்ட்டர்வல் பிளாக். எதிர் பாராத திருப்பம் . வில்லன் ஆக்டிங் ராக்கிங் பர்ஃபார்மென்ஸ் #24


13 வில்லன் = அவன் சேது ராமன் பிள்ளைன்னா நான் சேதுராமனோட
அண்ணண்டா #24











சபாஷ் டைரக்டர்


1   வில்லன் சூர்யாவுக்கான  கெட்டப் நடிப்பு  எல்லாம் செம

2  ஆள் மாறாட்ட  சீனில்  வில்லன் தன் பெயரை செக்கில் சைன் செய்வதும்  ஹீரோயினுக்கு தெரிந்த உண்மை  ஹீரோவுக்கு  தெரியாமல்  போவதும்


3   பின் பாதியில்  வில்லனும்  ஹீரோவும்  சந்திக்கும் சீனும்  ஹீரோ டைம் வாட்சை வில்லனுக்கு தராமல் போக்கு காட்டி பஞ்ச் டயலாக் பேசுவதும்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   ஹீரோ  ஒரு சீன்ல  டைம் வாட்ச் மூலம் பேக்ல போய் ஹீரோயினுக்கு பூ வெச்சு  விடறார். அது நிகழ்காலத்துக்கு வந்த பின்னும் அவ\ளால உணர முடியல. 10 நிமிசம் கழிச்சு க\ண்ணாடில பார்த்த பின்  தான் ஹீரோயின் உணருகிறார். மல்லிகைப்பூ  வாசம் கூடவா தெரியாம  போய்டும்?


2   ரிப்பீட் ஆடியன்ஸ்  வரனும்னா படத்தில்  ரிபீட்  சீன்ஸ்  ரிபீட் வசனம் வரக்கூடாது ( விதி விலக்கு ரஜினி பட பஞ்ச் டயலாக்\)  இந்தப்படத்தில்  வாட்ச் மெக்கானிக்னா இது  கூட தெரியாதா என்|ற ஒரே டயலாக் 14 டைம்வருது. வரும்போதெல்லாம் ஆடியன்ஸ்  ஓன்னு கத்தறாங்க


3 ஓப்பனிங்  சீனில் ஹீரோ மனைவி மகன் ஆபத்தான சூழலில்  வில்லன் ஆட்களிடம் மாட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சும்  எப்படி பதட்டமா  உடனே  கிளம்பாம டைம் வாட்சை பத்திரப்படுத்திட்டு அப்புறமா போக  முடியுது?


4  சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி  எடுக்கனும்னு முடிவு எடுத்ததும் வழக்கமான  காதல்  மொக்கை காமெடி  சீன்களை  எல்லாம்  ஒதுக்கி  இருக்க்லாம்

5   ஹீரோ ஒரு சாதாரண வாட்ச் மெக்கானிக். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். பல வருசம் சிரமப்பட்டு க\ண்டு பிடிச் ச  டைம் வாட்ச் ல  இருக்கும்  குறையை ஒரே நா|ள் ல  ஹீரோ எப்டி சரி செஞ்சு டெவலப் பண்றாரு? அவர் சயிண்ட்டி\ச்ட் கிடையாதே? சயிண்ட்டிஸ்ட் ஆன அப்பா கூடவும் வளரலை



 சி.பி கமெண்ட் -  24 - தமிழ் சினிமாவுக்கு புதிதான சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி,முன் பாதி ஸ்லோ பின் பாதி ஓக்கே , விகடன் மார்க் -43 , ரேட்டிங் = 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மார்க்  = 43


குமுதம்  எதிர்பார்ப்பு யூக   ரேட்டிங் = ஓக்கே


Friday, April 22, 2016

வெற்றிவேல் -சினிமா விமர்சனம்


ஹீரோ , ஹீரோ தம்பி 2 பேரும் தலா தனித்தனியா ஒவ்வொரு பொண்ணை லவ்வறாங்க. தம்பியோட லவ்வரை கடத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முயற்சிக்கும்போது ஆள் மாறாட்டத்தில் வேற  பொண்ணைக்கடத்திடறாங்க. 


ஆள் மாறாட்டமா கடத்தப்பட்ட பொண்ணோட அப்பா அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கறார். பிரச்சனை பெருசாகுது.தன்னால வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு தான் தான் வாழ்வளிக்கனும்னு ஹீரோ பாதிக்கப்பட்ட பொண்ணோட கழுத்தில்  தாலி கட்டிடறாரு. இடைவேளை


 இதுக்குப்பின் ஹீரோ காதலிச்ச பொண்ணோட நிலைமை என்ன? தம்பியோட லவ்வர் கதை என்னாச்சு என்பதை வெண் திரையில் காண்க 


ஹீரோவா எம் சசிகுமார். ஓப்பனிங் சாங்கில் சூரியன் சுட்டெரிக்க இண்ட்ரோ தர்றார், டான்ஸ் ஆடறார். நட்பு , துரோகம் வசனம் எல்லாம் பேசாம காலந்தள்றார். காதலிப்பதும்  உருகுவதும் எடுபடலை. அவர் அந்த ஆள் மாறாட்டப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் காட்சி நல்லாருக்கு.




 ஹீரோயினா  மியா ஜார்ஜ். கேரளத்துப்பைங்கிளி, பேச்சிலும், கூந்தலிலும் மலையாள வாசம்  இவரது அழகான முகம் மனசில் தங்குது. வாய்ப்பு அதிகம் இல்லை


ஹீரோவுக்கு மனைவியா வர்றவர் பேரு தெரியலை.  ( ரேணுகா?)  நல்ல ரவுண்ட் ஃபேஸ், இவருக்கு சோக நடிப்பு தான் வரும் காட்சி எல்லாம்.

 ஹீரோ தம்பி காதலியா வர்றவரும் நல்ல ஃபிகர் தான்


 பிரபு , இளவரசு  என கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள் நடிப்பு கனகச்சிதம் 

 பாடல்கள்  இசை ஒளிப்பதிவு எல்லாம்


ஹீரோவோட தம்பியா வர்றவர், அவர் காதலியா வர்றவர் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு





சபாஷ்  டைரக்டர்


1  தம்பி ராமய்யா மிக்சர் பார்ட்டி என்பதும் அவர் தன் சம்சாரத்தை எதுவுமே செய்வதில்லை என்பதை வைத்து புனையப்படும் காமெடி டிராக் கலக்கல். நீ வீட்டுக்குப்போய் சும்மா தானே இருக்கப்போறே? என்ற டயலாக்கை ஆளாளுக்கு சொல்வது கலாய்ப்பது


2   சமுத்திரக்கனி அண்ட் கோ செய்யும் கலாட்டாக்கள் கல கலப்பு


3   ஹீரோ மேரேஜுக்குப்பின்னும் மனைவியை தொடாமல் இருப்பதும் அத்ற்கு அவர் சொல்லும் காரணமும், இமேஜை தூக்கி நிறுத்துது

4   பிரபு  இளவரசு இருவரும் இறுக்கமான  சூழலில் பேசும் வசனங்கள் நல்ல டைரக்சன்




 லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 காதலிச்ச பொண்ணை திருவிழாக்கூட்டத்தில்  தூக்கனும், இந்த ப்ராஜக்ட்ல பொண்ணோட  ஃபோட்டோ இல்லை என்பதும் குத்து மதிப்பாக கடத்தலில் இறங்குவதும் அபத்தம்.ஃபோன் ல ஃபோட்டோ வெச்சிருந்தேன். அது எரேஸ் ஆகிடுச்சு என்பதெல்லாம் டுபாக்கூர்

2  கடத்தப்பட்ட பெண் நீ லவ்வும் பெண் தானா? என பார்ட்டியிடம் கன்ஃபர்ம் பண்ணாம கார்ல  கூட்டிட்டுப்போவது  ஓவர்


3  ஒரு பொண்ணைக்கடத்த ஆள் அரவம் இல்லாத இடம் தான் சரி. ஸ்பாட் செலக்சனே தப்பு. ஊர் திருவிழாக்கூட்டம்  ரொம்ப ரிஸ்க்

4  நாலு பேர் முன்னால் அவமானப்பட்ட அந்த ஆள் மாறாட்டப்பொண்ணோட அப்பா தன் பொண்ணு வந்ததும் என்ன நடந்தது? என கேட்காமயே தற்கொலை செய்துகொள்வது ஏன்? என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என திடகாத்ரமாய்  நம்புபவர் ஏன் பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை?


5  ஊர் மக்கள்  ஹீரோவை அடிக்கும்போது ஹீரோ வாயைத்திறந்து நடந்த உண்மையை சொல்லவே இல்லையே ஏன்?


6  காதலி கடத்தும் படலம் நாடோடிகள் ரீமிக்ஸ் ஆக இருப்பதும் அதே பட பாட்டான சம்போ சிவ சம்போ பாட்டு பிஜிஎம்மை யூஸ் பண்ணியதும்  தவறான தேர்ந்தெடுப்பு

7   பிரபு தன் தங்கை ஒரு துரோகி என்பதை உணரும் காட்சி எல்லாம் படு நாடகத்தனம். அந்தக்கால டிராமா





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
வெற்றி வேல் =141 நிமிடங்கள் @ திருவனந்த புரம் தன்யா 11 15 AM

2 அடியே !உனைப்பாத்திட பாத்திட நான் குறைஞ்சேனே வே




நச் டயலாக்ஸ்


1 காதல் ,கல்யாணம் இதெல்லாம் இல்லாம இருந்தாதான் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும் #,வெ வே

2 யாராவது உன்னைக்குப்புறப்படுக்க வெச்சி அயர்ன் பண்ணுனாங்களா?

நீங்கதானே விறைப்பா.வரச்சொன்னீங்க? வே

3 இவரு தான் ஒத்தாசை

உங்களுக்கு ஒத்தாசையா இருக்காரு சரி.என்ன பேரு?
அவரு பேரே ஒத்தாசைதான் வே

4 ஹலோ, உங்க கிட்டே 1 சொல்லனும்

சொல்லுங்க
மொபைல்ல சொல்லற மேட்டர் இல்லை, முகத்தைப்பார்த்து சொல்லனும் # வெ வே


5 விரல்ல புண் வந்தா வலிக்கத்தான் செய்யும், அதுக்காக விரலை வெட்டிட முடியுமா? #வெ வே


6   இங்கே ஜாதி ரொம்ப முக்கியம். எந்த மத ஆளும் மதம் மாறலாம், ஆனா எந்த ஜாதிக்காரனும் ஜாதி மாற முடியாது @ வெ வே



7  

 அடிக்க ஆள் அனுப்பறதை அரிவாளை தூக்கறதைவிட்டுடு. இல்லை தூக்கறது நீயா  இருந்தாலும் அறுக்கறது நானா தான் இருப்பேன்


8   காதலிக்கும் நாம 2 பேருமே பரஸ்பரம் நம்ம காதலை சொல்ல முடியாத சூழல் அமைஞ்சது - இயற்கை கொடுத்த  வரமாவும் இருக்கலாம் # வெ வே


9  பகைமை பாராட்டும்  இரு சொந்தங்கள் தங்கள் பகையை மறந்து சேர அச்சாரமாய் எதிரி கையால்   உப்பு வாங்கி பானையில் வைப்பது நம் சம்பிரதாயம் # வெ வே


 சி.பி கமெண்ட் -  வெற்றி வேல் - எம் சசிகுமார் நடிப்பில் கிராமத்துக்காதல் கதை , ஃபேமிலி மெலோ டிராமா, பி, & சி செண்ட்டர் ஆடியன்சுக்காக. விகடன் மார்க் =40 , ரேட்டிங் = 2.5 / 5


 குமுதம் = ஓக்கே 

Friday, February 26, 2016

ஆறாது சினம் - சினிமா விமர்சனம்


கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற 2 ஆஃபீசர்கள் அடுத்தடுத்து கொல்லப்படறாங்க, சாதா கொலை இல்லை , கொடூரக்கொலை. சாதாவுக்கும் கொடூரத்துக்கும் என்ன வித்தியாசம்? மற்ற அரசியல்வாதிகள் ஊழல் பண்ணினா அது சாதா ஊழல், ஆனா தானைத்தலைவரும், புரட்சித்தலைவியும்  ஊழல் பண்ணினா  அது மெகா ஊழல், சீரியல் ஊழல். மாற்றி மாற்றி 2 பேரும் ஆட்சிக்கு வந்து  முறை வெச்சு ஊழல் பண்ணுவாங்க இல்லையா? அது போல் ஒரே மாதிரி இந்த 2 கொலையும் ரண கொடூரமா நிகழ்த்தப்படுது



 இந்த கேசை  டீல் பண்ண  நம்ம ஹீரோவை நியமிக்க ட்ரை பண்றாங்க, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், ஆனா அவர் ஒரு போலீஸ் என்கவுண்ட்டர்ல ஒரு ரவுடியை போட்டுத்தள்ள முயற்சிச்சதில் பெரிய இடத்துப்பகையை சம்பாதிச்சு அதன் மூலம் தன் மனைவி, மகளை ஒரே சமயத்தில்  இழந்தவர். அந்த சோகம் தாங்காம எப்போப்பாரு சரக்கு அடிச்ட்டே இருக்காரு.

 அவரைக்கன்வின்ஸ் பண்ணி  கேசை  எடுத்துக்க வைக்கும்போது  இடைவேளை வந்துடுது. ஆக மொத்தத்துல முதல் 1 மணி நேரம்  1 மே இல்லாம படத்தை  ஓட்டிட்டாங்க.

 ஆனா  ஒரு நல்ல  சைக்கோ க்ரைம் த்ரில்லருக்கான முஸ்தீபுகள்  இருப்பதால  தமிழன் ஆர்வமாப்பார்க்கறான்.

 முன் பாதியில்  இருந்தா  எல்லா  மைனசையும்  பின் பாதி  த்ரில்லர் சரி செஞ்சுடுது , பிரமாதமான திரைக்கதை



ஹீரோவா அருள் நிதி.  அவர்  சோகமா கிளப்ல சரக்கு அடிப்பது, வீட்டில் சரக்கு அடிப்பது  என பாதிப்படத்துக்கு டாக்டர் ராம்தாசே செம கடுப்பு ஆகும் அளவு  குடிச்ட்டே இருக்கார். முடியல, ஆனா போலிஸ் ஆஃபீசரா கம்பீரம் காட்டுவது, துப்பு துலகுவது எல்லாம் கிளாசிக்

 ரோபோ சங்கர்  காமெடி  போலீஸ் . சார்லி சிரிப்புப்போலீஸ் / 2 பேரும் ஆரம்பக்கட்ட்டங்களில்  இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்க்காம துக்க வீட்டில் மொக்கை ஜோக் சொல்லி கடுப்படிக்கறாங்க கேப்டனின்  தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க , ரமணா டைப் புள்ளி விபர டயலாக் எல்லாம் ரோபோ சங்கர் நல்லாவே பண்றார், ஆனா அது எடுபடலை.


ஹீரோயினா  2 பேரு . போலீஸ் ஆஃபீசரோட மனைவி கேர்க்டர். ஐஸ்வர்யா ராஜேஷ். டிவி ப்ரோக்ராமர்  லேடி.  ஐஸ்வர்யா தத்தா  2 மே பாஸ் மார்க் ஃபிகருங்க தான்.இருவருக்கும்  போதிய வாய்ப்புகள் இல்லை..


ஸ்டைலான எடிட்டிங், அழகான ஒளிப்பதிவு  செமயான  பிஜிஎம் என த்ரில்லர் படங்களுக்கே உரித்தான் பிளஸ்கள் படம் நெடுக


வில்லனை ஆரம்பத்தில்  இருந்தே  காட்டி ஆனால் முகத்தை மட்டும் கடைசி வரை காட்டாமல் சாமார்த்தியமாக  கேமரா கோணங்கள் அமைத்த ஐடியாவுக்கு  ஒரு ஷொட்டு




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ரோபோ சங்கர் =,ஒரு ஏசி எனக்கே மீசை இல்லை.உனக்கு ஏன் மீசை?


சார்லி =விடுங்க.அவருக்கு வளருது.வெச்சிருக்காரு #,ஆ சி

2 நான் சாதாரண.டிரைவர்னு நினைச்சு பேசிட்டிருக்கீங்க.


பின்னே ஸ்க்ரூ ட்ரைவரா? #,ஆ சி




3 பார்க்கற எல்லாத்தையும் அநியாயம்னு சொல்லக்கூடாது.கிட்டே போய் பார்த்தாதான் அதோட நியாயம் தெரியும் #,ஆ சி






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்




ஆராதனா வராததால் அஞ்சனா உடன் ஆறாது சினம்


2 சீரியல் கில்லர் ஸ்டோரி ,சைக்கோ த்ரில்லர் டைப் கதைகளில் சென்ட்டிமென்ட் சீன் களை.வலிய திணிக்கக்கூடாது # ஆ சி





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 மலையாளத்தில் வந்த மெமரீஸ் படத்தின்  அதிகாரப்பூர்வமான  ரீமேக் என்பதால் கவுரவமாக டைட்டிலில் கதை - ஜீத்து ஜோசப் என உரிய அங்கீகாரம் தந்தது


2 ஓப்பனிங்கில்  வரும் 2  கொலைக்காட்சிகள், அதற்கான பின்னணி இசை  செம கலக்கல்


3  ஒரிஜினல் கதையை சிதைக்காம  நேர்மையா  திரைக்கதை அமைத்த விதம்







இயக்குநரிடம்  சில கேள்விகள்



1 கொலை நடந்த இடத்தில் எந்த விதமான துப்பு துலக்கிலும் ஈடுபடாமல் ரோபோசங்கர் , சார்லி மொக்கை போட்டுக்கொண்டிருப்பது எதுக்கு ? சீரியசான  கதையில் சம்பந்தமில்லாம மொக்கை ஜோக் எதுக்கு?

2  ஹீரோ வந்துதான்  எல்லாமே கண்டுபிடிக்கனும் என எழுதப்படாத விதி இருந்தாலும் அதுக்குன்னு மற்ற போலீஸ் எல்லாம் ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டேன்னா எப்படி? பாஸ்?


3 கொலை செய்யப்பட்டவனை சிலுவையில் அறைவது போல் மரத்தில் மாட்டி வைத்ததை வைத்து  சீரியல் கில்லர் ஒரு கிறிஸ்டியன் என கண்டு பிடிப்பது பெரிய பிரமாதமான யூகம் போல் பில்டப் தருவது  ஓவர்

4  கொலைகாரனுக்கு கொலை செய்யப்பட்ட ஆட்களோட மனைவிகள் மேல் இருக்கும் கோபம் தான் என்பதை  ஹீரோ எப்படி கண்டு பிடிச்சார் என்பதற்கு விளக்கமே இல்லையே?

5   ஹையர் ஆஃபீசரான ராதாரவி சார்லியை அழைத்து ஒரு வேலை சொல்லும்போது அவர் ஓபிஎஸ் மாதிரி எதுக்கு பம்மிக்கிட்டே குனியனும்> விறைப்பா நின்னு சல்யூட் அடிக்கறதுதானே போலீஸ் அடையாளம்? அவரும் அதிமுக வில் சேர்ந்துட்டாரா?

6 காலேஜ் கிளாஸ்  ரூம்ல கோ எட்  என இருந்தும்  பொண்ணுங்க 5 பேர்  செல் ஃபோன்ல பிட்படம் பார்ப்பது நம்ப முடியலை ,அதுவும்  முதல் பெஞ்ச்ல உட்கார்ந்துட்டு..? எப்டின்னா நாங்க எல்லாம் பிட் புக் படம் பார்க்கும்போது  லாஸ்ட் பெஞ்ச்  போவோம்.பொண்ணுங்க எப்படி  தைரியம் வந்தது ?


7  அந்த 5 லேடீசும்  ஒருவரை மாட்ட வைப்பதற்காக அவரது சொல் ஃபோனில் இருந்து  மேடம்க்கு ஆபாச எஸ் எம் எஸ்  அனுப்பியது  ஓக்கே, ஆனா அதை செண்ட் ஐட்டம்ல போய் எரேஸ் பண்ணவே இல்லையே?

8 காலேஜ்ல 3 வருசம் க்ளோசாப்பழகுன அந்த 5 பேரும் தங்கள் செல்ஃபோனை அட்ரசை பரஸ்பரம் ஷேர் பண்ணிக்காமயா இருப்பாங்க? போலீஸ்  விசாரிக்கும்போது  அவங்க செல் ஃபோன் நெம்பர்  வாங்கி வைக்கலைனு அசால்ட்டா சொல்றாங்க, போலீசும் அது பற்றி  கேட்கவே இல்லையே?

9 ட்யூட்டில மீண்டும்  ஜாயின் பண்ணின  ஹீரோ விசாரணை நடக்கும்போதே  நடு ரோட்டில் பட்டப்பகலில் சரக்கு அடிப்பது எதுக்கு ?

10  கிட்டத்தட்ட மேரேஜ் ஆகி 10 வருசமா  மாசமா இல்லாத காலேஜ் லேடி லெக்சரர் தன் கணவர் விபத்தில் இறப்பதற்கு  3 மாதம் முன்பு எப்படி மாசம் ஆனார்னு  போலீஸ் சந்தேகப்படவே இல்லையே? ( பிடிச்சமில்ல பாயிண்ட்டை, தினத்தந்தி மாலை மலர்  க்கு நன்றி )


11  பல கொலைகளை செய்த அனுபவம் மிக்க கொலையாளி  ஹீரோவை லாங்க் ஷாட்டில் கத்தியால் தாக்க முயற்சிக்கும்போது கத்தியின் கைப்பிடியைப்பிடித்து  கத்தியை   ஹீரோவை  நோக்கி வீசறாரே? முறைப்படி கத்தியின்  கூர்மையான பகுதியை பிடிச்சுத்தானே  வீசனும்?

12  கொலைகள் நடந்த 3  ஊர்களுக்கும் இடையே ஆன தூரம் 150  கிமீ தான் என்பதை வைத்து துல்லியமாக அடுத்த ஊரை எபடி கண்டுபிடிக்கறார்  ஹீரோ? 150  கிமீ ரேடியசில் எத்தனையோ  ஊர் இருக்குமே?

13  குறிப்பிட்ட அந்த 5 பெண்களை பழி வாங்க கொலையாளி அந்தந்த பெண்னின் கணவனை கொலை செய்தால் துன்புறுவர் என நினைப்பது லாஜிக் இல்லை. ரேப் & மர்டர் என்றால் கூட ஓக்கே






சி  பி  கமெண்ட் =ஆறாது சினம் - முன் பாதி சுமார், பின் பாதி பிரமாதமான சைக்கோ லவ் த்ரில்லர், ஏ சென்ட்டர் ஹிட் , விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே







 ரேட்டிங் = 3/5 


a



Director: Arivazhagan
Producer: N. Ramasamy
Writer: Arivazhagan
Story: Jeethu Joseph
Starring: Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta, Anupama Kumar
Music: D.Imman
Cinematography: Aravind Singh
Editor: Rajesh Kannan S.
Production company: Sri Thenandal Films
Release date: 26th February 2016
Language: Tamil

ஈரோடு அன்னபூரணியில்  படம் பார்த்தேன்

கணிதன் - சினிமா விமர்சனம்


ஹீரோ ஒரு உள்ளூர் சேனலில் ரிப்போர்ட்டர். முகவரி இல்லாத சேனல்ல இருந்து முன்னேறி பிபிசி மாதிரி ஹிட் சேனல்ல ஒர்க் பண்ணனும்னு நினைக்கறாரு ( முகவரி- அஜித் ரெஃப்ரன்ஸ்னு கிளம்பிடுவாங்களோ?)

இண்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணி அசத்தி அதுல வேலையும்  கிடைக்கும்போது குடும்பமே குஷி ஆகிடுது ( குஷி - விஜய் ரெஃப்ரன்ஸ்- தமிழேண்டா)

ஹீரோ அண்ட் கோ வை போலிஸ் அரெஸ்ட் பண்ணிடுது. போலிச்சான்றிதழ் கொடுத்து பேங்க்ல லோன் வாங்கி  ஃபோர்ஜரி பண்ணினதா வழக்கு.

 கோர்ட்டில் எல்லாருக்கும் 7 வருச  தண்டனை  கிடைக்குது. 

இதுக்குப்பின்னால ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருக்கு. போலிச்சான்றிதழ் தயாரிச்சு விற்கும் கூட்டம், அதை வெச்சு  லோன் வாங்கி ஃபோர்ஜரி செய்யும்  கூட்டம் , அதை  ஹீரோ எப்படி கண்டு பிடிக்கறார் ? என்பது தான் கதை


ஹீரோவா அதர்வா. நோ அதர் சாய்ஸ் என சொல்லும் அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய துடிப்பான நடிப்பு . ஓப்பனிங்க் ல மொக்கை ஃபிகரான ஹீரோயினிடம் பம்முவது மட்டும் நம்பும்படி இல்லை.மற்றபடி ஆக்சன் காட்சிகள் , சேசிங்க் சீன்களில்  செம எனர்ஜெடிக் பாஸ்




ஹீரோயினா கேத்ரீன் தெரசா. ஓவர் மேக்கப் பாப்பா .ஆல்ரெடி கலரா இருப்பவர்கள் இன்னும் ஓவர் லோடா பவுடர் கோட்டிங்க் ஏத்திட்டே போனா அது பிளசை மைனஸ் ஆக்கிடாதா? எங்களை மாதிரி மாநிற ஆட்கள் பவுட ர்  போட்டா ஓகே .

 முடிஞ்சவரை தெரிஞ்சவரை அறிஞ்சவரை கிளாமர் காட்டுது பாப்பா . ஆனா ரசிக்கும்படி இல்லை ( தக்காளி  கிளாமர் காட்னா ரசிச்சுட்டுப்போகாம ரசிக்கும்படி இல்லைனு புலம்பறானே ? )

கே பாக்யராஜ்  போலீஸ் கான்ஸ்டபிளா கேரக்டர்  ரோல், திரைக்கதை மன்னனா பிரபல இயக்குநரா , ஹீரோவா சைன் பண்ணவர். எப்டி இருந்தவர் இப்டி ஆகிட்டாரே?

ஹீரோவின் நண்பரா வரும் கருணா கச்சிதமான நடிப்பு . காமெடி ஸ்கோர்  கம்மி என்றாலும்  ஓக்கே ரகம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ஹை க்ளாஸ் பிகருங்க ஜாலியா பேசுவாங்க.ஆனா பேரைக்கூட சொல்ல மாட்டாங்க #,க


2 டேய்.எப்டிடா நேத்து அறிமுகமான பிகரை அதுக்குள்ளே கரெக்ட் பண்ணினே?


நேத்து நைட் பூரா பேசி பேசி கரெக்ட் பண்ணிட்டேன்.ஹிஹி #,க


3 என் கிட்டே ஏன் பொய் சொன்னே?


எனக்கு உன்னைப்பிடிச்சிருந்தது.அதான் பொய் சொன்னேன்.#,க


4 ஒருத்தர் வெற்றிக்குப்பின் யாரும் இல்லாம இருக்கலாம்

ஆனா பல தோல்விகள் இருக்கும் #,க


5 முயற்சிக்கத்தயங்குபவன் தான் தோல்வியைப்பார்த்து பயப்படுவான்.#,க

6 இங்க்லீஷ் ங்கறது வெறும் லேங்க்வேஜ் தான்.நாலெட்ஜ் இல்லை

7  எல்லா அழகான பொண்ணுங்களும் மொக்கைப்பையனா பார்த்துப்பாத்த்து லவ்வுவாங்க # க


8 இந்தக்கால மாடர்ன் பிகருங்க கிட்டே எதை வேணா வாங்கிடலாம்.ஆனா போன் நெம்பர் மட்டும் வாங்கவே முடியாது #,க

9 ஊர்ல இருக்கற எல்லா கிரிமினல்சுகளும் வந்துட்டுப்போகும் இடம் கோர்ட்தான் #க

10 தப்பு நடக்கறதைக்கண்டுக்காம இருப்பவனைக்கூட மன்னிச்சுடுவாங்க, ஆனா தப்பைக்கண்டிப்பவனை மன்னிக்கவே மாட்டாங்க தீயசக்திகள் # க


11 அவதான் ஃபோன் பண்றானு எப்டி கண்டுபிடிச்சே? எல்லாப்பொண்ணுங்களும் நாம சரக்கு அடிக்கும்போதுதான் ஃபோன் பண்ணுவாங்க #க













 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


கணிதன் =145 நிமிசம்

2 கதைக்களம் கோ பாகம் 2,போல் இருக்கு # க

3 அப்பாவிடம் இல்லாத சுறுசுறுப்பு ,உடற்கட்டு ,சிரிப்பு அதர்வா முரளியின் + # க

4 ஹீரோயினை ஓப்பனிங் சீனிலேயே ஓவர் கிளாமராய் காட்டி விடக்கூடாது.பின் வரும் காட்சிகளில் கண்ணிய உடை அணிந்து வந்தாலும் எடுபடாது



5 பின்னணி இசை க்கு பிண்ணனி இசை னு டைட்டில்.இடமாறு தோற்றப்பிழை



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1  சாதா ஆக்சன் ஃபிலிமாக எடுக்காமல் சமூக விழிப்புணர்வுக்கான மெசேசை  நீட்டாக  சொன்னதற்காக ஒரு  ஷொட்டு


2 ஹீரோ தன் பேரில் போலி சர்ட்டிஃபிகேட் வேணும் என வில்லன் க்ரூப்பில் கேட்கும்போது அவனை வில்லன் க்ரூப் அடையாளம் அறியும் செம த்ரில்  காட்சி

3   இசை , ஒளிப்பதிவு ,  எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கள் சமாச்சாரங்கள் கன கச்சிதம்

4  வில்லனாக வருபவரின்  தோற்றம், நடிப்பு எல்லாமே நல்லாருக்கு



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  வில்லன்கள் துரத்தி பெட்ரோலால் நனைக்கப்பட்டு சாவின் விளிம்பில் போய் பயத்துடன் இருக்கும் கருணா ஹீரோவிடம் அந்த சீனில் சரக்கு அடிக்கலாமா? என கேட்பது செம செயற்கை.சும்மா தியேட்டரில் கை தட்டல் வாங்குவதற்காக அமைக்கப்பட்ட காட்சி அது.

2 போலி சர்ட்டிஃபிகேட் பிரச்சனை பெருசான பின்  ஹீரோ தங்களை டார்கெட் பண்றார் என தெரிந்த பின்னும் வில்லன் க்ரூப் எப்படி  தொடர்ந்து தங்கள் பணியை எப்பவும் போல் செய்வது எப்படி? கொஞ்ச நாள் தள்ளிப்போட மாட்டாங்க ?


3 ஃபோர்ஜரி சர்ட்டிஃபிகேட் மூலம் பேங்க்கில் லோன் வாங்கின வழக்கில் உடனடியாக தீர்ப்பு வருவது எப்படி. பெரிய பெரிய 2 ஜி  ஊழல் வழக்குகள் , கலைஞர் டி வி 200 கோடி ரூ வழக்கு, ஜெ வின் சொத்து குவிப்பு வழக்கு எல்லாம் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படும்போது சாதா வழக்குகள் எல்லாம் மினிமம் 10 வருசம் இழுத்தடிப்பாங்க  இல்ல. ஒரே வாரத்தில்  தீர்ப்பு , விசார்ணை எல்லாம்  வருவது எப்படி?


4 எந்தப்பின்புல பிரஷரும்  இல்லாமல் அந்த சாதா கேசில் போலீஸ் ஹீரோ அண்ட் கோ வை அப்படி டார்ச்சர் செய்வது ஏன்?ஏன்னா போலீஸ் எல்லாம் எப்டியாவது காசு பிடுங்கத்தானே பார்ப்பாங்க இப்டி கை வெச்ட்டா  எப்டி?

5  க்ளைமாக்சில்  பர பரப்பான ஆக்சன் காட்சிகளை ஆடியன்ஸ் எதிர்பார்க்கும்போது அந்த டைமில்  ஹீரொயின் - ஹீரோ ரொமான்ஸ் , டூயட்  சீன் ஸ்பீடு பிரேக்கர்






சி  பி  கமெண்ட் -கணிதன் -போலி சர்ட்டிஃபிகேட் ஃபோர்ஜரி பற்றிய ஆக்சன் த்ரில்லர் -ஏ சென்ட்டரில் ஓடும்- விகடன்  மார்க் -41 , ரேட்டிங் - 2.75/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  - ஓக்கே



 ரேட்டிங் -2.75/ 5


ஈரோடு காசிபாளை யம் அருகே உள்ள மகாராஜா மல்ட்டிபிளக்ஸ்ல படம் பார்த்தேன், செம தியேட்டர். கள்ளக்காதலர்களுக்கு சவுகர்யமான ஒதுக்குப்புறமான தியேட்டர். நான் தனியாத்தான் போனேன்