Showing posts with label நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு. Show all posts

Wednesday, March 27, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

1   பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலும், சர்வாதிகாரத்தனமாக செயல்படுவதிலும், ஒரே மாதிரியாக உள்ளனர். இவர்கள் இருவரும், யார்பேச்சையும் கேட்க மாட்டார்கள்.-ராகுல்:

யார் பேச்சையும் கேட்காம சுய,மா முடிவு எடுப்பவந்தான் தலைவன், எல்லார் பேச்சையும் கேட்டு அதன் படி நடந்தா எடுப்பார் கைப்பிள்ளை


============


2  கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஓய்விலிருந்த நிலையிலும், அவர் தான் தலைவர் பதவியை வகித்தார். ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். மகன் மீது கூட, தந்தைக்கு நம்பிக்கை இல்லாதபோது, மக்கள், ஸ்டாலின் மீது எப்படி நம்பிக்கை வைப்பர்?-இ.பி.எஸ். # 

அப்டிப்பார்த்தா  ஜெ கூடத்தான் உங்களை  நம்பாம  ஓபிஎஸ் சை நம்பினாரு

==================
3  : தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஜெ., மரணம் குறித்து முறையாக விசாரித்து, குற்றவாளிகளை சிறையில் அடைப்பதே, முதல் வேலை.= ஸ்டாலின்

அத்தைக்கு  மீசை முளைப்பது எப்போ? மீசையை முறூக்கறது எப்போ?

அப்போ  இப்போதைக்கு அந்த மர்மம் வெளீவரவே வராது?

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள நலனுக்கு அக்கறை காட்றது தில்லை. எதிரிகளை உள்ளே தள்ளறதுலதான் குறியா  இருக்காங்க


=================


4  :சிதம்பரம் தொகுதியில் போட்டியிட, முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம்; ஆனால், கிடைக்கவில்லை. பின், அதிகாரிகள் என்னென்ன சின்னங்கள் உள்ளன என்ற பட்டியலை கொடுத்தனர். அதில் உள்ள, வைரம், பலாப்பழம் சின்னங்களை தொடர்ந்து கேட்டேன். அவையும் இல்லை என்றனர். இறுதியாக, பானை சின்னத்தை கேட்டு பெற்றோம்- திருமாவளவன் பேச்சு

 பானை கிடைத்தவர் அபாக்கியசாலிங்கறாரா?


==================

5  , வரும் தேர்தலில், வெற்றி பெற்று, மத்தியில் அமையும் ஆட்சியில், தி.மு.க., பங்கேற்கும். - வை கோ  # அப்போ பாஜக கூட்டணீல இணைவாங்களோ? தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணீ, தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டணீ


================


6  மக்களின் வாங்கும் திறனை வைத்து பார்த்தால், உலகில், மூன்றாம் இடத்தில், இந்தியா உள்ளது.-சுப்பிரமணியன் சாமி
  

வாக்குக்குப்பணம் வாங்கும் திறனில் உலகில் முதல் இடம்


=================


7   திரிணமுல் காங்கிரஸ் கட்சி கொடி மற்றும் சின்னத்தில்இருந்த, 'காங்கிரஸ்' என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது; 'திரிணமுல்' என்பது மட்டுமே உள்ளது. கட்சியை துவக்கி, 21 ஆண்டுகளுக்கு பின், இந்த மாற்றத்தை, முதல்வர் மம்தா செய்துள்ளார்#  மாற்றம் முன்னேற்றம்?




=============


8  

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி- ஈரோடு திமுகவினர் மகிழ்ச்சி  # அடுத்ததா மதிமுக  திமுகவோட இணைஞ்சிடுமோ?



========\\\


9    

திமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்   # ஆளூங்கட்சி அளித்த  1000  ரூபா  , 2000 ரூபா தான் உங்களுக்கு வில்லன்


===============


10    

ஜாமீனுக்காக அலையும் கார்த்தி சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார்?- எச்.ராஜா கேள்வி  # வக்கீல் வீட்டுக்கு , கோர்ட்டுக்குப்போற வழில மக்கள் இருப்பாங்களே? ஆன் த வே அப்ப்டியே சந்திச்ட்டா போச்சு



==============

11  11   

வாக்கு கேட்டு வரும்போது ஆரத்தி எடுக்கக் கூடாது: திமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாடு  #  ஆரத்தி எடுக்கறவங்களுக்கு வேற 1000  ரூபா தரனும்,, தேவை இல்லாத தண்டச்செலவு



================


12    

திமுக வேட்பாளர்களின் தகுதியைப் பாருங்கள்; ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்: வட சென்னை பிரச்சார கூட்டத்தில் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்  #  என்ன் ரத்தத்தின் ரத்தமேனு சொந்த ஜாதிக்காரங்க கூட ஓட்டுப்போடவெண்டாம்கறாரா?



==================



13    பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோதிலும், எம்ஜிஆரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்'' - அமைச்சர் டி.ஜெயக்குமார்   #  எம் ஜி ஆர் அவர்களின் கொள்கைகள் என்ன?னு 10 சொல்லுங்க, நாங்க மறந்துட்டோம்


================



14  

மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கிறது பாஜக- பிருந்தா காரத் ஆவேசம்  #  ஊர் ரெண்டுபட்டா அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் ஃபார்முலா?



==============


15 

காவலாளிகள்’ உழைப்பது செல்வந்தர்களுக்கே: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு  # போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தப்பா பேசறாருன்னு அவதூறு வழக்கு [போட்டுடப்போறாங்க







====================

16  

மகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல்  # போற வழில கோட்சே வந்துட்டா?



===============


17 

தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களைக் கூட வெல்லாது: நாராயணசாமி பேச்சு  # வட மாநில்ங்களில் 10 இடங்களைக்கூட காங்கிரஸ் ஜெயிக்க விடாதுனு அவங்க சொல்வாங்களோ?



=================


18 

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மூலம் பெட்ரோல் டோக்கன் விநியோகம்: கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல்  #  மூன்றாம் கலைஞர் ஏன் இப்படி நாலாந்தர வேலையில் இறங்கிட்டார்?



===================


19  கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். 50 வருடங்கள் கழித்து கண்டுபிடித்து சொல்கிறார் என்றால் அவர் 50 வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்தாரா - உதயநிதி #  நீங்க கூடத்தான்  திடீர்னு பிரச்சாரத்துக்கு வந்திருக்கீங்க, போன தேர்தலில் தூங்கிட்டு இருந்தீங்களா?னு அவர் கேட்டுடப்போறாரு


=================


20  

பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா என்னிடம் பேசவே இல்லை: தமிழிசை  #  கவலைப்படாதீங்க, இந்தத்தேர்தல்ல ஜெயிச்சுட்டா ஊர் உலகமே உங்களைப்பற்றி பேசும்




==============






Tuesday, March 26, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

1  மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த தேர்தலில், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். தற்போது, 100ஐ எட்டாத சூழல் தான் அக்கட்சிக்கு உள்ளது-மின் துறை அமைச்சர்தங்கமணி:  # அப்படிப்பார்த்தாலும்  போன தேர்தலை விட டபுள் மடங்கு வெற்றி தானே?


=============


2 தமிழக மக்கள் செய்த தவறால், தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும், மக்களைப் பற்றி கவலைப்படாத அக்கிரம ஆட்சி நடக்கிறது-  ஸ்டாலின்: # அப்போ இந்த முறையும் தமிழக மக்கள் அதே தப்பை திரும்ப செய்யப்போறாங்க


நம்ம ஆட்சியா இருந்தா மக்களைப்பற்றி கவலைப்பட்டிருப்போம், அதாவது  தன் வீடு, மனைவி , மக்கள் இப்படி


==================


3  ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, யாரும் ஊக்குவிக்க வேண்டாம். பணம் கொடுத்து, தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ள வேண்டாம் - பொன் ராதா # அதே மாதிரி 20 ரூபா டோக்கன் கொடுஹ்ட்து பின்னே பணம் தர்றதா ஏமாற்றவும் வேண்டாம்னு ம் சொல்லிடுங்கோ


================


4   இங்கு நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி இல்லை; 'அடல்ட்ஸ் ஒன்லி' ஆட்சி. - # அடல்ட்ஸ் ஒன்லின்னா 18+ வயசு  உள்ளவங்கோட ஆட்சி,  17 வயசு ஆன மைனருங்க தேர்தல்லயே நிக்க முடியாதே?


==================

5   மோடி, நம் நாட்டின் பிரதமர் இல்லை; அவ்வப்போது வந்து செல்லும், என்.ஆர்.ஐ. -உதய நிதி  #  சிபி ஐ ரெய்டு வரப்போகுது


=============


6    இந்தத் தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான், கதாநாயகன்; வில்லன், மோடி தான்-உதய நிதி # கதாநாயகி தமிழச்சி தங்க பாண்டியனா?


===============


7   தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 90 சதவீதம், 'காப்பி' அடிக்கப்பட்டவை=ராமதாஸ்  # அதாவது அட்லி அவிச்ச இட்லினு சொல்லுங்க


=============


8  தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில், கதாநாயகனும் இல்லை; கதாநாயகியும் இல்லை. ஏன், வில்லன் கூட இல்லை. அது வெறும், 'காமெடி' படம் தான்--ராமதாஸ்  # ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு நல்லா “கதை” வேணா விடுவாங்க

=================


 தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும், என்னைச் சின்ன வயதிலேயே ஈர்த்தவை தான். அதே வாக்குறுதிகளைத் தான், இப்போதும் கூறுகின்றனர். -கமல் # அது மட்டுமா கொடுக்கறாங்க, எக்ஸ்ட்ரா 1000, 2000 நு  ரேஷன் கார்டுக்கு கொடுக்கறாங்களே? அது உங்க சின்ன வயசுல தந்தாங்களா?


====================


10    தேர்தலில் போட்டியிட, நான் அஞ்சவில்லை. அந்த பயமெல்லாம் இருந்தால், கட்சியே துவங்கியிருக்க மாட்டேன் - கமல் # அப்போ  ரஜினி பயப்ப்படறாருங்கறாரா?


=================


11     ஆறு பொருத்தம் இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தேன்,'' - பாரிவேந்தர்     %    ஆறு மனமே ஆறு அந்த ,ஆண்டவன் கட்டளை ஆறு


=============

12  அ.தி.மு.க., அணி, கொள்ளையடிக்க, பேரம் நடத்த, அமைக்கப்பட்ட கூட்டணி,- ஸ்டாலின் # நாம மட்டும் வெள்ளை அடிக்கவா போறோம்?

==============
13  தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், 18 தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், அங்கிருந்து, 15 பேர், தி.மு.க.,வுக்கு வருவது உறுதி,'' - துரைமுருகன்  # அப்போ எதுக்கு தண்டமா திமுக போட்டி இடுது? காசை மிச்சம் பண்ணலாமே?


==============

14  ஆறு பொருத்தம் இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தேன்,'' - பாரிவேந்தர்  $ யாருக்கு ஏழரை என்பது தேர்தல் முடிவில் தெரியும்


===============


15  பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோதிலும், எம்ஜிஆரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்'' - அமைச்சர் டி.ஜெயக்குமா # மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் இணக்கமாக இருப்பதுதானே எம் ஜி ஆரின் முக்கியக்கொள்கை?



-------------------

16   

எந்த காலத்திலும் அதிமுகவுடன் டிடிவி.தினகரன் இணைய முடியாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து  # அப்போ மதுரை ஆதீனம் சொன்னது கப்சாவா?இணைக்க முயற்சிகள் நடக்குதுன்னாரே?



=============


17  

ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்: சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புகார்  # ஆட்சில இல்லாதப்ப எப்படிங்க மக்களை ஏமாற்ற முடியும்> இருக்கறப்பதான் ஏமாற்ற முடியும்?நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழல் பண்ண மாட்டோம்னு வேணா ஏமாற்றலாம்



=================


18   

நெல்லை சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா நள்ளிரவில் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை  # வேலியே பயிரை மேய்ஞ்சிருக்கு?



=============


19 

கோடீஸ்வர வேட்பாளர்கள்; புதுச்சேரியில் கமல் கட்சி வேட்பாளர் முதலிடம் # மக்கள் நிதி மய்யமா? நீதி மய்யமா?



=============

20 டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார்.

உயிரைக் கொடுத்து வேலை செய்வேன் என உருக்கம் # இவரு உயிரைக்கொடுத்துட்டா இவர் வேலை செஞ்சதுக்கான சம்பளத்தை யார் வந்து வாங்குவா?


==================

Wednesday, March 20, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

தமிழக அரசு, பொள்ளாச்சி வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து, சி.பி.ஐ.,க்கு தானாக மாற்றி இருக்கிறது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -திருமாவளவன்:  # இதையே திமுக ஆட்சில செஞ்சிருந்தா தானே மாற்றிய தானைத்தலைவன் வாழ்கனு கோஷம் போட்டிருப்பாரு


மாத்தினாலும் ஏசும், மாத்தலைன்னாலும் புறம் [பேசும் , வையகம் இதுதானடா


===================


எங்கள் கட்சி சார்பில், வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின், தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன்.-சரத்குமார்: # 40 பேரு கிடைக்கனும் இல்ல? லேசுப்பட்ட காரியமா?

===========

3 லோக்சபா தேர்தலில், நான் போட்டியிடவில்லை.-சரத்குமார்:  #எம். பி ஆகாமயே பிரதமர் ஆக ரூட் கண்டுபிடிச்ட்டாரோ?


============

4பா.ஜ., ஆட்சியில், பெரு நிறுவன முதலாளிகள் மட்டுமே, சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். நடுத்தர, சாதாரண மக்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்- மார்க்., கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், பிரகாஷ் கராத்:  # அப்போ ஆளூங்கட்சிக்கு டெபாசிட்டே கிடைக்காதுங்கறீங்களா?


=================

 தொண்டர்களின் விருப்பம் காரணமாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்-தீபா: # 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் கண்டுபிடிக்கவே மாமாங்கம் ஆகுமே?

அப்படி விரும்புன தொண்டர்கள் லிஸ்ட் ஆதார் கார்டோட தர முடியுமா?நம்ம கட்சில தொண்டர்கள் இருக்காங்க என்பதே அதிர்ச்சியான செய்திதான்


====================


தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ.,வுக்கு மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும். அந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்-சரத்பவார்:  # அப்போ எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதுனு நீங்களே ஒத்துக்கறீங்க?


=================

ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., கோரிக்கையை, நிச்சயமாக ஆதரிப்போம்-அன்புமணி:  # வேற வழி ?

இல்ல, எதிர்த்துதான் பாருங்களேன்

 ஜெ படம் திறக்க எதிர்ப்பு, நினைவகம் அமைக்க எதிர்ப்பு , இதுக்கு மட்டும் ஆதரவு?

================

இந்தியாவுக்கு, பொய் சொல்லாத பிரதமர் வேண்டும்.-இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் #அதுக்கு அரிச்சந்திர மகாராஜாவைத்தான் கூட்டிட்டு வரனும்



=============

எங்கள் கூட்டணி, தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; மக்கள் நலனுக்காக, மாநில அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், கூட்டணி அமைத்து போராடி வருகிறோம்=  இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் # மக்கள் நலக்கூட்டனிக்கு போன தடவையே தோல்விதானே கிடைச்சது?

===================


10 தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்காக, எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவே இல்லை.-  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், தமிழ் மாநில பொதுச் செயலர், பி.வி.கதிரவன் # உண்மையை ஓப்பனா ஒத்துக்கற அந்த மனசுதான் சார் கடவு:ள்

  ஜெ  தீபா , சரத்குமார் சமக்  இப்படி உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி:  உருவாக்கலாமே?


================
1  ஸ்டாலின்,  என்ன பேச வேண்டும் என்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி உளறுகிறார். 'திருப்பூரில், துறைமுகம் அமைப்பேன்' என்கிறார். அங்கு எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை. -அ.தி.மு.க., - எம்.பி., -கே.என்.ராமச்சந்திரன்   # இது என்ன பிரமாதம்? முதல்ல கடல் அங்கே கொண்டுவரப்படும், பிறகு துறைமுகம் அமைக்கப்படும்
================
12     லோக்சபா தேர்தலுக்காக, அ.தி.மு.க., அமைத்துள்ள, 'மெகா' கூட்டணியை கண்டு, எதிர்க்கட்சிகள் கதிகலங்கி உள்ளன-கே.என்.ராமச்சந்திரன் #   அதிமுக வை திட்டுன கட்சி, திட்டிட்டு இருக்கற கட்சி கூட கூட்டணி வெச்சா?
 மக்களே கதிகலங்கி இருக்காங்க

================
13மற்றவர்கள், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள, ஏதேதோ செய்கின்றனர் என்பதற்காக, தி.மு.க.,வின் இளைஞர் பட்டாளமும், தங்களை சதா வெளிப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. ராணுவ வீரர்கள், தினந்தோறும் சாலையில் நின்று, தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. போர் வந்தால்தான், அவர்களின் வீரம் வெளிப்படும்.- தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர், சிவா #  எதுக்கு ரஜினியை வம்புக்கு இழுக்கறிங்க?=================
14   :அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்று, சட்டசபையிலும், லோக்சபாவிலும் பணியாற்றி உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பின், என் தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னத்தில், வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இக்கூட்டணியில் நான் இணைந்தது, என் தாய் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது-ஏ.சி.சண்முகம் # பொதுவா தாய் வீட்டுக்கு வரும் பொண்ணூங்க சீதனமா எதையாவது தாய் வீட்ல இருந்து சுருட்டிட்டு போய்டுவாங்களாம், நாம எப்படி>
===============
15  ஓட்டு உரிமை என்பது, துப்பாக்கி தோட்டாக்களை விட, மிகப்பெரிய சக்தி. இதை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஓட்டு தான், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது-இந்திய துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு # எனை நோக்கி பாயும் தோட்டானு ஆளாளுக்கு கதி கலங்கி இருக்காங்க
===================
16 மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி வைத்தால், நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயம், ஆண்ட கட்சிகளுக்கு இருக்கிறது. - கவிஞர் சினேகன் # ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
============
17  கமலை கூட்டணிக்காக நெருங்க,அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். - கவிஞர் சினேகன்   # கூட்டணீப்பேச்சுவார்த்தைல கமல் என்ன பேசறார்னே புரியாதே?அதான் [பம்மறாங்க
===============
18  மக்கள் மனம் கவர்ந்த நடிகராக கமலை பார்ப்பதே, இந்த பயத்திற்குக் காரணம். மற்றபடி, எங்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதெல்லாம், பரிசுத்தமான பொய்.- கவிஞர் சினேகன் # ஒரு தேர்தலிலாவது நின்னு வாக்கு வாங்கின பின்னாடிதான் வாக்கு வங்கியைப்பத்தியே பேச முடியும்
=================
19  உண்மையான, அ.தி.மு.க.,வினர், எப்போதும் எங்கள் பக்கமே உள்ளனர். டெண்டர்களுக்காக சென்றவர்கள் மட்டுமே, இ.பி.எஸ்.,சிடம் உள்ளனர்-  கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி #  தொண்டர்கள் இருக்காங்களா? கண்ணுக்கு எட்டுனவரை கட்சி குண்டர்கள் தான் தெரியறாங்க
=====================
20   லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் 
தேர்வையே, பா.ஜ., தான் செய்யப் போகிறது.- கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி# ஓஹோ அப்போ பாஜக வேட்பாளர் தேர்வை அதிமுக செய்யுமா? எக்சேஞ்ச் ஆஃபரா?