Showing posts with label சென்னை பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label சென்னை பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 1

24.8.2012 வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல நானும் ஈரோடு பதிவர் லாயர் நண்டு நொரண்டும்  கிளம்புனோம். இவர் ஒரு லாயர், ஜட்ஜைத்தவிர எல்லார்ட்டயும் இவர் நொரண்டாதான் பேசுவார்.. ( ஜட்ஜ் கிட்டே பேசுனா  வெளில அனுப்பிடுவாங்களே?).பேரு ராஜசேகரன். சனிக்கிழமை காலைல 4 மணிக்கு ரயில் சென்னை செண்ட்ரல்ல நின்னுது. நாங்க இறங்கி பார்க் ஸ்டேஷன்ல ரயில் ஏறி மாம்பலம் போய் அங்கே இருந்து வாக்கிங்க்ல ரோஹினி இண்ட்டெர்நேஷனல் ஹோட்டல், ஜி என் செட்டி தெரு அட்ரஸ்க்கு போய்ட்டோம், அங்கே ஆல்ரெடி ரூம் புக் பண்ணி இருந்தாங்க.



போய் 2 மணி நேரம் குட்டித்தூக்கம் ( நோ இமேஜினேஷன் ப்ளீஸ்.. சிறிய தூக்கம்). ஆரூர் மூனா செந்தில் தான் வெளியூர்ப்பதிவர்கள் தங்க ஏற்பாடு.அவர் மத்தியானம் வர்றேன்னார், ஆஃபீஸ்ல டியூட்டி அவருக்கு.நான் கிஷ்கிந்தா போலாம்னேன், லாயர்க்கு வேற ஏதோ எங்கேஜ்மெண்ட் போல, யாரையோ வரச்சொல்லி இருக்கார்.. வெயிட்டிங்க். யார் வந்தாங்க? என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர் என்பதாலும் ஒரு பதிவரின் பர்சனல் மேட்டர்ஸை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது சபை நாகரீகம் இல்லை என்பதாலும் ( இப்போ இதுக்குப்பேரென்ன?) அதை அப்படியே விட்ருவோம். 


நான் கிஷ்கிந்தா போன அனுபவம், கட்டுரை, படங்கள் தனிப்பதிவாய் பின் ஒரு நாளில்.. மாலை 4 மணிக்கு நான் ரிட்டர்ன். மதுமதி ரூமுக்கு வந்து எங்களை வரவேற்றார்.. எத்தனை ஃபிகர் எனக்கு செட் ஆனாலும் சரி என் தாடியை மட்டும் எடுக்கவே மாட்டேன்னு 12 வருஷமா பதிவுலகில் டி ஆராய் வலம் வந்தவர் என்ன காரணத்துக்காகவோ தாடி எல்லாம் எடுத்து மாப்ளை கெட்டப்ல வந்த மர்மம் என்னன்னு இன்னைக்கு வரை விடை தெரியல. அவர் கிட்டே கொ ஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.


அப்புறம் ஆரூர் மூனா செந்தில், மின்னல் வரிகள் கணேஷ், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன்,புது மாப்ளை கோகுல் எல்லாரும் வந்தாங்க. பேசிட்டு இருந்தோம். 



26.8.2012 ஞாயிறு..காலை 5 மணிக்கே வானம் மழையை அனுப்பி தன் வருகையை சென்னை பதிவர் சந்திப்புக்கு பதிவு செய்தது. நான் 6 மணிக்கு குளிச்சு ரெடி ஆகி வாக்கிங்க்லயே பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போய்ட்டேன். 



மண்டப முகப்பே அட்டகாசமா பேனர் எல்லாம் வெச்சு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ட்விட்டர்  உலகின் ஜேம்ஸ் பாண்ட், கூலிங்க் கிளாஸ் கூல் டாக்கர் அய்யா சென்னை பித்தன் அவர்கள், நம்ம தமிழ் வாத்தியார் மாதிரியே தோற்றம் உள்ள புலவர் ராமானுசம் அய்யா இருவரும் அருமையான உரை ஆற்றினார்கள்.. வலைச்சரம் சீனா அய்யாவும் சிறப்பாக பேசினார்


அப்புறம்  வந்த பதிவர்கள் அறிமுகம்.. அதுக்கு  கலகலப்பு உதவி வசனகர்த்தாவும் கொத்து புரோட்டாக்காரருமான கேபிள் சங்கர், சித்தார்ல வீடு, பூர்வீகம் எல்லாம் இருந்தும் கோவையில் பணி ஆற்றும் ஒரே காரணத்துக்காக கோவை பதிவர் ஆகி விட்ட சங்கவி சதீஷ் ( நிறைய பேரு சங்கவின்னா பெண் பதிவர்னு இன்னும் அவர் கிட்டே  சேட் பண்ணிட்டு இருக்காங்க , ஹி ஹி ) ,  ,பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் , கடைசியா நான் 4 பேரும் ஒவ்வொருவரா பதிவரை மேடைக்கு அழைத்து உரை ஆற்ற வைத்தோம். 


விழாவின் ஹை லைட்ஸ்


1. அதுல அதிகமா கை தட்டல் வாங்குனது பதிவே அதிகம் போடாத, மிட் நைட்ல பல பதிவர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தே  கொலையாய் கொல்லும் அன்பு உள்ளம், டாஸ்மாக்கே இல்லம் என இருக்கும் நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் தான்.. இவரும், விபரீதமான மனிதாபிமானி பிளாக் ஓனரும் பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முன் சிம்பு , தனுஷ் போல நட்பு பாராட்டியதும், மண்டபத்தில் கட்டிப்பிடித்து பயங்கர பாசத்தை பகிர்ந்து கொண்டதைப்பார்க்கையில் தேர்தல் நேரத்தில் பகையாளியுடன் கூட கூட்டணி வைக்கும் கலைஞர் - ராம்தாஸ் நடிப்பு போல தத்ரூபமாக இருந்தது.. விழா ஃபுல்லா இந்த நாயம் தான் அன்னைக்கு 



2. அடுத்து பதிவுன்னு வந்துட்டா எல்லாரையும் கண்டபடி கிழிக்கும் பிளாக் உலகின் சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் ஒயின் ஷாப் ஓனர் ஃபிலாசபி பிரபாகரன் நல்ல பிள்ளை மாதிரி இந்தப்பூனையும் அமலாபாலை சைட் அடிக்குமா? என்பது போல் கையை கட்டி அடக்கம் காட்டி நடித்தது  நடிகர் சூர்யா மேடைகளில் காட்டும் போலி பவ்யத்தை தூக்கி சாப்பிட்டது



3. அடுத்த அதிரடி அண்ணன் சேட்டைக்காரன் - இதுவரை டி பி யில் பிளாக்கில் நாகேஷ் படத்தையும் , ட்விட்டரில் கவுண்டமணி படத்தையும் வைத்தவர் இந்த முறை தன் நிஜ முகத்தை காட்ட வேண்டிய கட்டாயம், ஏன்னா விழா ஏற்பாட்டாளர்கள் புத்தக வெளியீட்டை பெற்றுக்கொள்பவர் சேட்டைக்காரன் என பத்திரிக்கையில் போட்டு விட்டனர்.. இவர் 4 நிமிட நறுக் சுருக் உரை ஆற்றினார். அது விரிவாக பின்னர்.. இவர் 30 வயசுக்காரராக இருப்பார் என்றே இவர் எழுத்தை வைத்து அனைவரும் கணித்தனர்.ஆனால் நயன் தாரா வயசைப்போல் டபுள் மடங்கு வயசுள்ள இவர் இனியாவது நடிகை ஸ்ரேயாவிடம் டைம் லைனில் ட்விட்டரில்  கடலை போடாமல் கண்ணியம் காப்பார் என எதிர்பார்க்கிறேன்



4. அடுத்து மிக இளம் பெண் பதிவர் தூயா. கலைஞர் குடும்பமே எப்படி அரசியலிலும், ஊழலிலும் தங்கள் பங்கை சிறப்பா ஆற்றி வருகிறார்களோ அதே போல்  இவங்க குடும்பமே ஒரு பிளாக் குடும்பம். தமிழ் மணத்தில் இவங்க எப்போ போஸ்ட் போட்டாலும் உடனே 7 ஓட்டுக்கள் வாங்கி 10 நிமிஷத்தில் ஹிட் ஆவதை கவனித்து நான் மிரண்டு போனேன். பின் கழுகார், குருவியார் மூலம் விசாரித்தபோது அவங்க ஃபேமிலில 7 பேர் பிளாக்கர்ஸ் என்ற தங்கமலை ரகசியம் தெரிய வந்தது.. இவரை மேடையில் கலாய்த்தோம்



5. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் கொடுத்து ஏரியாவையே கதி கலக்கிய தமிழ்வாசி பிரகாஷ் ( தமிழ் மிஸ் வீட்லயே தான் எந்நேரமும் குடி இருப்பாராம்) என்னமோ டிஸ்கொத்தே கிளப்புக்கு டான்ஸ் ஆட வந்தவர் மாதிரி  கசாமுசா காலேஜ் ஸ்டூடண்ட் டிரஸ் அணிந்து வந்து கலக்கி இருந்தார்.. யூத்தாம். யோவ்.. 


6. மாமூல் வாங்காத போலீஸ் கவிதை வீதி சவுந்தர்,டீசண்ட் ரவுடி வேடந்தாங்கல் கருண்  மதிய உணவு பரி மாறும் வேலை இருக்கு முன் கூட்டியே பேசிட்டு போறோம்னு சொல்லிட்டு எங்கியோ எஸ் ஆகிட்டாங்க


7. பிறவிக்கலைஞன் கமலின்  குணா ரசிகை மன்றத்தலைவி கண்மணி அன்போடு பிளாக் ஓனரை கிண்டல் செய்து மேடைக்கு அழைத்தோம், அவங்க அப்பாவும் வந்திருக்காராம், அவரும் பிளாக்கராம். அவ்வ்வ்வ் ( இனிமே பொண்ணுங்களை கலாய்க்கறப்போ அப்பா வந்திருக்காரா?ன்னு செக் பண்ணிக்கனும்)



8. கோவை சரளா அப்டினு ஒரு பெண் பதிவர்.. இப்படி ஒருவர் இருப்பதே எனக்கு அங்கே தான் தெரியும்.. பயங்கரமா கவிதை எல்லாம் எழிதி இருக்காராம், அவரே சொன்னார்.. இனி தான் பார்க்கனும்.. 



9. வசந்த மண்டபம்’ மகேந்திரன் விழாவுக்காகவே புது வெள்ளை கதர் சட்டை, பேண்ட் , திருப்பூர் பனியன் எல்லாம் புதுசா போட்டு வந்து அசத்தினார்.. சூப்பர் ரின் விளம்பரத்துல கூட அப்படி ஒரு வெள்ளையை நான் பார்க்கலை. 


10. ஊக்குவிக்கும் சமீரா மேடம்.. அவர் எல்லார் பிளாக்கும் போய் அவங்களை ஊக்கி விப்பாராம்.. இதுவரை அட்ராசக்கவை ஊக்கு வித்ததில்லை.. ஏன்னு தெரியலை


11. பொதுவா லேடீஸ் தான் கல்யாணம் , காட்சின்னா காலைல ஒரு புடவை, மாலை ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க.,. ஆனா உலகத்துலயே முதல் முறையா கோவை நேரம் ஜீவானந்தம் காலை ஒரு சட்டை , மதியம் ஒரு ஜிப்பா, மாலை ஜீன்ஸ் என 3 வெவ்வேறு டிரஸ் அணிந்து  வந்து கலக்கினார். மனசுக்குள்ள கமலஹாசன்னு நினைப்பு , யோவ்.. 


12. சாதிகா, ஆதிரா இரண்டு பெண் பதிவர்கள் “ ஏன் எங்க பிளாக் எல்லாம் வர்றதே இல்லை? என கேட்க “ எங்கேங்க, இப்பவெல்லாம் அதிகம் கரண்ட் இல்லாததால்  எந்த பிளாக்கும் போக முடியறதே இல்லை, இருக்கற கொஞ்ச நஞ்ச நேரத்துல போஸ்ட்  ரெடி பண்ணவே நேரம் சரியா இருக்கு “ என்று சமாளித்தேன்.. அதற்கு அவர் சசிகா மேனகா பிளாக் மட்டும் போயிடறீங்க? என மடக்கினார்.. அவ்வ் பல்பு பல்பு.. 





13.  நம்ம ட்விட்டர் ஃபிரண்ட் சுரேகா ஹீரோ கணக்கா , கணக்கா 10 மணிக்கு ஆஜர் ஆனார். . அவர் பியூட்டி பார்லர் எல்லாம் போய் மிகச்சிரத்தையாக மேக்கப் போட்டு வந்தது  பதிவர் சந்திப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டை பறை சாற்றியது. மதியத்துக்குப்பின் இவர் ஆட்சிதான்..


1.30 மணிக்கு லஞ்ச், பின் கவியரங்கம், தென்றல் புத்தக வெளீயீட்டு விழா, பி கே பியின் அட்டகாசமான உரை போன்ற விபரங்கள் அடுத்த பதிவில்



வலம் இருந்து இடமாக கோவை நேரம் ஜீவா, சங்கவி சதீஷ், கோவை சரளா,சசிகலா, அவர் நண்பர், மின்னல் வரிகள் கணேஷ் ( மக்கள் டி வி பேட்டி)








தஞ்சை குமணன், மோகன்குமார். சீனு மற்றும் சிராஜுதீன்         







 மைக் மோகன் = ஆரூர் மூனா செந்தில்







அகநாழிகை வாசுதேவன், மணிஜி, சிவகுமார்  












சேட்டைக்காரன் அண்ணன்





பட்டர்பிளை சூரியா, சுகுமார் சாமிநாதன்,  மணிஜி , ஜாக்கி,மோகன்குமார், உண்மை தமிழன், ரோஸ்விக்   


 வீடு திரும்பல் மோகன், ரேகா ராகவன்அ




துவக்க விழா .. ராமானுசம் ஐயா, சீனா  ஐயா,  சென்னைப்பித்தன்  ஐயா
துவக்க உரை ஆற்றுகிறார் மதுமதி 
வரவேற்புரை மற்றும் விழா குழுவை அறிமுகம் செய்கிறார் வீடுதிரும்பல் மோகன்குமார் 
வரவேற்பு/ Registration  குழு   -  சீனு மற்றும் நண்பர்கள் 
புதிய தலைமுறை டிவி குழுவிற்கு பேட்டி தருகிறார்  முக்கிய பொறுப்பாளர் மதுமதி 
ப்ளாகில்  பெண்களின் பங்கு பற்றி  புதிய தலைமுறை டிவி க்கு   பேசுகிறார் தென்றல் சசிகலா 

புதிய தலைமுறை டிவி குழு வீடுதிரும்பல் மோகன்குமாரிடம் பேசுகிறது 
***



கரை சேரா அலை அரசன் அறிமுகம் செய்து கொள்கிறார் 

இளம் ஆளுமை மெட்ராஸ் பவன் சிவகுமார் 

மூத்த பதிவர் வல்லிசிம்ஹன் .... 
கேட்டால் கிடைக்கும்னு நாங்க இயக்கமே வச்சிருக்கோம் ; நான் கேட்டும் கூட எனக்கு ரெண்டாவது சுவீட் தர மாட்டீங்களா? - இப்படி கேட்கிறாரோ  கவிஞர் கேபிள் சங்கர் 
சங்கவி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் 

ரஹீம் ஹசாலி சுய அறிமுகம்  (தம்பி ரெண்டு போட்டோ எடுத்தேன். ரெண்டிலும் கண்ணை மூடி கிட்டு தான் இருக்கீங்க) 

விழா முடிந்த பின் மேடையில்  விழா குழுவினர் 
****நன்றி - படங்கள் வீடு திரும்பல் மோகன், ரஹீம் கசாலி

Monday, August 13, 2012

டெசோவுக்குப்போட்டியாக ஜெ மாநாடா? கலைஞர் அதிர்ச்சி!!

கலைஞரின் டெசோ மாநாடு பிரம்மாண்டமான வெற்றின்னு சொன்னாரு.

. யார் சொன்னது?

 கலைஞரே தான் சொன்னாரு.. ( நன்றி - தளபதி வசனகர்த்தா)

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் நடத்திய டெசோ மாநாட்டை தோற்கடிக்கும் வகையில் சென்னையில்  வலைப்பதிவர்கள் மாநாடு நடக்க இருக்கு..( ஆனா வை கோ மாதிரி நடக்க எல்லாம் மாட்டாங்க )


இது குறித்து ஆல்ரெடி வலை உலகில் உள்ள முக்கிய முக்காத எல்லா பதிவர்களும் போஸ்ட் போட்டுட்டாங்க.. நான் மட்டும் போடாம விட்டா கொலை பண்ணிடுவாங்க.. அதனால என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டுக்கறேன்.. என்னை போடுமாறு மிரட்டிய அந்த 4 பேருக்கு நன்றி!

 இது ஒரு காக்டெயில் பதிவு.. கலக்கல் பதிவு.. அதாவது இதுவரை சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலர் போட்ட பதிவில் கொஞ்சம் கொஞ்சம் சுட்டு டிங்கர் பட்டி ஒட்டி போடப்படும் பதிவு.. ஹி ஹி ( நாம எந்தக்காலத்துல சொந்தமா பதிவு போட்டிருக்கோம்?)


மிழில் ப்ளாக் எழுதுவோரில் மிக அதிக ப்ளாகர்கள் இருப்பது தமிழகத் தலைநகரம் சென்னையில் தான் ! (300- க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னையில் உள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தெரிவிக்கிறார்). பதிவர்களை தவிர்த்து ஏராள பிரபலங்கள் (VIP's) உள்ள இடமும் கூட ! இத்தனை சிறப்பான ஊரில் இதுவரை பெரிய பதிவர் திருவிழா பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வண்ணம் மாபெரும் பதிவர் திருவிழா ஆகஸ்ட் 26- நடக்க உள்ளது.

இதோ விழாவிற்கான அழைப்பிதழ்




அழைப்பிதழை காணும் போதே சென்னை மட்டுமல்லாது கோயம்பத்தூர், மதுரை. ஈரோடு, திருவள்ளூர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு ஊரில் இருக்கும் பதிவர்களும், விழாவில் முக்கிய பணிகளை செய்ய உள்ளது தெளிவாகும். இது எந்த குறிப்பிட்ட அணியும் இல்லாது பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் விழா.

விழா அழைப்பிதழை நேற்று ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், தனி பதிவாக வெளியிட்டு தங்கள் ஒற்றுமையை காட்டினர்.
 
 
 

விழா குறித்தான சில கேள்விகளும் விளக்கங்களும் இதோ

சென்னை வாழ் பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?

விழாவிற்கு நீங்கள் உங்களின் பதிவர் நண்பர்களுடன் அவசியம் வருவதே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல் ! உங்கள் வருகையை ஈ மெயில் மூலம் உறுதிப்படுத்தினால் அது மிக உதவியாய் இருக்கும்.

மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். உங்களால் முடிந்தால் அவசியம் நீங்கள் வந்து இவற்றில் உங்கள் யோசனைகளை சொல்லலாம். நீங்களும் சில பொறுப்புகள் எடுத்து கொள்ளலாம்.

வெளியூர் பதிவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விழாவுக்கான தேதி முடிவான உடனே, பல்வேறு வெளியூர் பதிவர்களும் பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களின் பயண டிக்கெட்டை நீங்கள் உடனே புக் செய்யவும்.

உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! பல்வேறு பணிகளுக்கிடையில் விழாவை சிறப்புற நடத்த முயலும் நமது நண்பர்களுக்கு நீங்கள் வருகிற மகிழ்வான தகவலை விரைவில் சேர்ப்பியுங்கள் !

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மூத்த பதிவர்களுக்கு ...

தற்போது பதிவெழுதி வரும் அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பதிவர்களை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு விழாவில் உள்ளது.

உங்களுக்கு தெரிந்த அத்தகைய மூத்த பதிவர்களை எங்களுக்கு தெரிவியுங்கள். மூத்த பதிவர்கள் தாங்களாகவும் எங்களுக்கு எழுதலாம்

மூத்த பதிவர்கள் அவசியம் கலந்து கொண்டு எங்கள் அன்பை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

விழாவில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் செய்ய வேண்டியது என்ன? 

விழாவின் முக்கிய நிகழ்வாக நடக்கும் கவியரங்கில் பங்கெடுக்க விரும்பும் கவிஞர்கள் தங்கள் பெயரை விழா குழுவினருக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும். ஆகஸ்ட் 18-க்குள் கவியரங்கில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தால் மிக உதவியாய் இருக்கும். கவியரங்கில் பங்கெடுக்கும் கவிஞர்கள் முழுமையான பட்டியல் நண்பர்கள் வெளியிடுவர்.

விழாவில் சாப்பாடு உண்டா?

அனைவருக்கும் மதிய சாப்பாட்டிற்கும், விழா நடுவே ஸ்நாக்ஸ் மற்றும் தேநீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவர் நண்பர் ஒருவரின் சமையல் காட்டரிங் மூலமே இந்த ஏற்பாடுகள் நடப்பது கூடுதல் மகிழ்ச்சி

விழாவில் கலந்து கொள்ள கட்டணம் உண்டா?

ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாய் விழா தயார் ஆகிறது. எனவே பங்களிப்பு தர விரும்பும் சென்னை நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். 
 
 
 
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை 


விழா நடக்கும் மண்டபம் வருவது எப்படி?

இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.

நீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.

இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:

லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து  நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.

தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்

மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம்.

பங்கு பெறுதல் குறித்த உறுதிபடுத்தும் தகவல் யாரிடம் சொல்வது?

இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:

மதுமதி : [email protected]
பாலகணேஷ் [email protected]
மோகன் குமார் [email protected]
மெட்ராஸ்பவன் சிவகுமார்: [email protected]

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.

பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.

உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.

அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !




          சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழமைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாயிருக்கும்.

இதுவரை சந்திப்பிற்கு வருவதாய் இசைந்திருக்கும் பதிவர்கள்:



ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை

அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை  
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை

போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்)
சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 

புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை  


ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி

       இவர்கள் மட்டுமல்லாது துபாய்  வலைப்பதிவர்கள் சார்பாக மகேந்திரன்(வசந்த மண்டபம்)   அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து எழுதும் தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக சத்ரியன்(மனவிழி) வர்களும் வர இசைந்திருக்கிறார்கள்...
 
 
 
இனி வர ஓக்கே சொல்பவர்கள் பெயர் பிறகு அப்டேட் செய்யப்படும்
 
 
 நன்றி - மதுமதி, வீடு திரும்பல் மோகன் குமார்