Showing posts with label கமல்ஹாசன். Show all posts
Showing posts with label கமல்ஹாசன். Show all posts

Tuesday, October 13, 2015

கமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் படம்! - போத்தீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முருகேஷ் நேர்காணல்

விளம்பர படப்பிடிப்பில் கமல்ஹாசன், இயக்குநர் கிருஷ்ணகுமார். | உள்படம்: எஸ்.முருகேஷ், நிர்வாக இயக்குநர் - போத்தீஸ்.
விளம்பர படப்பிடிப்பில் கமல்ஹாசன், இயக்குநர் கிருஷ்ணகுமார். | உள்படம்: எஸ்.முருகேஷ், நிர்வாக இயக்குநர் - போத்தீஸ்.
கமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்திருக்கிறது போத்தீஸ் விளம்பரப் படம். தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்காக இன்னொரு விளம்பரத்தையும் தயாராக வைத்திருக்கிறார்கள். களத்தூர் கண்ணம்மா தொடங்கி 59 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், இதுநாள் வரையில் ஒரு வணிக விளம்பரத்தில் கூட நடித்தது கிடையாது. பொதுநலன் கருதி வெளியிடப்படும் விளம்பரங்களில் மட்டுமே நடிப்பதை கொள்கையாக வைத்திருந்த கமல்ஹாசனின் விரதத்தை கலைத்திருக்கிறது போத்தீஸ். இது எப்படி சாத்தியமானது? மதுரை போத்தீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முருகேஷ் இதுபற்றி ‘தி இந்து’விடம் பேசினார்.
“எப்படியாவது கமல்ஹாசனை எங்கள் விளம்பரப்படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டுமென்று இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தோம். எங்களைப் போல இன்னும் சில பிராண்டுகளும் அவரை அணுகின. ஆனால், நான் கமர்ஷியல் விளம்பரம் பண்றதில்லைன்னு ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். திடீரென அவர் நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி. அவர் முன்பு ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் காத்திருந்தன. வடநாட்டு பிராண்டுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த போத்தீஸ் நிறுவனத்தை தனது முதல் விளம்பரப் படத்திற்காக தேர்வு செய்தது மறக்க முடியாத நிகழ்வு.
போத்தீஸ் நிறுவனம் நான்காவது தலைமுறையாக ஜவுளித்துறையில் இருப்பதால், பாரம்பரியம் என்ற வார்த்தையை விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தோம். இந்தமுறை அதைத் தவிர்த்துவிட்டு, கமல்ஹாசனுக்கும் எங்களுக்கும் பொருந்துகிறவாறு அபிமானம் என்ற வார்த்தையை முன்னிலைப்படுத்தியிருக்கிறோம். இந்த விளம்பரத்தைப் பார்க்கிறவர்களுக்கு கமல்ஹாசன் தனது அடுத்த படத்தைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறார் என்று தோன்றும். ஆனால், திடீரென அவர் போத்தீஸ் பற்றி பேசுகிறார். இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்னும் சில விளம்பரங்கள் வரப்போகின்றன. வழக்கமாக நாயகர்களுடன் முக்கியமான நாயகிகளும் தோன்றுவார்கள். ஆனால், கமல்ஹாசன் மிகப்பெரிய ஆளுமை என்பதால் மாடலிங் பண்ணுபவர்களைத் தவிர வேறு யாரும் அவரது விளம்பரங்களில் தோன்ற மாட்டார்கள்.”
இந்த விளம்பரப் படங்களை இயக்கியவர் கிருஷ்ணகுமார். ஏற்கெனவே த்ரிஷா நடித்த என்ஏசி ஜூவல்லர்ஸ் விளம்பரத்தையும், தனுஷ் தோன்றிய ஓஎல்எக்ஸ் விளம்பரத்தையும் இயக்கியவர். ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கிருஷ்ணகுமார், மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகிய பைவ் ஸ்டார் மூலம் நடிகராக அறிமுகமானவர். தவிர, ஆய்த எழுத்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட 22 படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம்.
விளம்பரத்தில் நடிக்க கமல்ஹாசனை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா? அல்லது இயக்குநராக கமல் உங்களை தேர்ந்தெடுத்தாரா?
ரெண்டுமே இல்ல. பட்டியல் படத்தில் நடித்து முடித்திருந்த நேரத்தில், விளம்பரத் துறைதான் நமக்கு சரியா வரும் என்ற எண்ணம் உச்சத்திற்கு வந்துவிட்டது. உடனே, விளம்பரத் துறைக்கு வந்துவிட்டேன். நாங்கள் பெரிய நிறுவனங்களை கிளையன்ட் ஆக்க முயற்சிப்போம். சில நேரங்களில் பெரிய நிறுவனங்களில் இருந்து அவர்களே அழைப்பார்கள். திருமணத்தைப் போலத்தான், இருவரது வசதி, விருப்பங்களைப் பொருத்து சேர்வதா? வேண்டாமா? என்பது முடிவாகும்.
இப்படித்தான் முன்பு போத்தீஸையும் விளம்பரத்திற்காக அணுகியிருந்தோம். திடீரென அழைத்தார்கள். சினிமாத்துறை யில் பெரிய ஆளை வெச்சி பண்ணப் போறீங்கன்னு சொன்னாங்க. நித்யா மேனன் விளம்பரத்தில் நடிக்கப் போகிறார் என்று நான் கேள்விப்பட்டிருந்ததால், அவரை வைத்து தான் இயக்கச் சொல்கிறார்கள் போல என்று சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். அப்புறம் தான் தெரிந்தது நடிப்பது கமலஹாசன் என்று. எனக்கு தலைகால் புரியவில்லை. ரெட்டிப்பு சந்தோஷமாகிடுச்சி. அவர் விளம்பரத்துல நடிக்கவே மாட்டார் என்று நினைத்திருந்ததால், அந்த தகவல் உண்மை தானா? என்று ஒன்றுக்கு ரெண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
கமலஹாசன் எவ்வளவு பெரிய லெஜெண்டோ, அதேபோல போத்தீஸ் நிறுவனமும் மிகப்பெரிய லெஜெண்ட். ரெண்டு பேர் காம்பினேஷன்ல பண்றேன்னு துள்ளிக் குதிச்சேன். ஏற்கெனவே, மலபார் கோல்டுக்காக இளையராஜா சாரை வைத்து இயக்கியிருக்கிறேன். அதற்கடுத்து எனக்கு கிடைத்த டபுள் ஜாக்பாட் இதுதான். அதனால ஒரே நைட்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக் கொண்டு போய் கொடுத்திட்டேன்.
கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் பற்றி...
ஒண்ணாங்கிளாசுக்கு ரெண்டாப்பு வாத்தியார் வந்தாலே திகிலா இருக்கும். ஹெட் மாஸ்டரே வந்து பாடம் நடத்தினா எப்படியிருக்கும் அப்படியிருந்துச்சி. பெரிய நடிகர்களிடம் ஒத்துழைப்பை அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாலை 5 மணியாகிவிட்டால் சட்டென்று கிளம்பிவிடுவார்கள். அதனால் டென்ஷனும், பயமும் கலந்துகட்டி அடிச்சது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தார் கமல். ஷூட்டிங் வந்ததும் 5 மணிக்குப் போக வேண்டும் என்று சொன்ன கமல், ரொம்ப இன்வால்வ் ஆகி, படமாக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் பார்த்தார். இன்னும் ஐந்தாறு காம்ப்ளிகேட்டட் ஷாட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதும், அமைதியாக இருந்தார். இரவு 8 மணி வரையில் எங்களோடு இருந்து முடிச்சிக் கொடுத்திட்டுத்தான் போனார். எந்தக் காட்சியையும் அவர் மாற்றச் சொல்லலை. வசனங்களையும் திருத்தச் சொல்லலை. தன்னுடைய குரல் மாடுலேஷனிலேயே கலக்கிவிட்டார்.
ஒரு சினிமா பண்ணியிருந்தால் அவரோடு பேசிப்பழக நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கும். 2 நாள் கால்ஷீட்டில் நிறைய பழக வாய்ப்பு இல்லை என்றாலும், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
உங்க டீமை பற்றிச் சொல்லுங்க...
இந்து தமிழ் நாளிதழ் வெளியான போது, அ, ஆ, என்று ஃ வரையில் தமிழ் எழுத்துக்களையும், அவற்றின் உச்சரிப்பையும் அடிப்படையாக வைத்து ‘உலகம் இனி உங்கள் மொழியில்’ என்ற விளம்பரப்படத்தை எடுத்திருந்தோம். வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த விளம்பரத்திற்கு தீபன் ராமச்சந்திரன், பாண்டியன் ராஜ் ஆகியோர் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தாங்க. அவர்கள் தான் இந்த விளம்பரத்திற்கும் ஸ்கிரிப்ட் எழுதினார்கள். அபிமானம் என்ற வார்த்தையை விளம்பரத்துக்கு தந்தது அவர்கள்தான். அதேபோல மும்பையை சேர்ந்த ஜான் ஜேக்கப் ஒளிப்பதிவு செய்தார். புறம்போக்கு படத்தில் ஜெயில் செட் போட்டிருந்த செல்வகுமார் தான் கலை இயக்குநர். இசை ஜிப்ரான். எல்லாம் நல்லா அமைஞ்சது. ஷூட்டிங் நடந்தது சென்னை ஈவிடி ஸ்டூடியோவில்.
அடுத்த விளம்பரம் பற்றி...
‘அபிமானம்’ விளம்பரம் டிரைலர் போலத்தான். இன்னும் சில விளம்பரங்கள் வரவிருக்கின்றன. தீபாவளியையொட்டி கமல்ஹாசன் வருகிற விளம்பரம் அதில் முக்கியமானது. இதில் அவர் நாயகிகளுடன் ஆடிப்பாடுகிற மாதிரியான காட்சி எல்லாம் கிடையாது. பேட்மேன் படத்தை சிங்கள் டேக்கில் எடுத்திருப்பதைப் போல, இந்த 40 வினாடி தீபாவளி விளம்பரத்தையும் ஒரே டேக்கில் எடுத்துள்ளோம். அந்த விளம்பரத்தை ஒளிப்பதிவு செய்தவர் விஸ்வரூபம் கேமிரா மேன் சானு வர்கீஸ்.

ன் றி-தஹிந்து

Sunday, July 05, 2015

பாபநாசம் - கொண்டாடிய ட்விட்டர்கள்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் 'பாபநாசம்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவுகளைப் பெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு கமல், சாதாரண குடும்பத் தலைவராக நடித்திருக்கும் படம், அவருடன் நடிகை கவுதமி நடித்து வெளிவந்திருக்கும் படம் என இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. காரணம், நடிகர் நடிகைகள் என்பதை தாண்டி, அதன் ஒரிஜினல் வெர்ஷன் த்ரிஷ்யம் ஏற்படுத்திய தாக்கம் தான்.
த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசத்தையும் இயக்கியுள்ளார். 'பாபநாசம்' படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் கருத்துக்களை ட்வீட்டாம்லேட்டில் பார்ப்போம்.
வளவன் ‏@RIDERAMAL - #பாபநாசம் கமல் என்னும் நடிகன் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். படம் பக்கா பிண்ணனி இசை பலம்.
ஓலைக்கணக்கன் ‏@Nattu_G - பாபநாசம்.. சொதப்பாத ரீமேக்.. கமல்.
நாயோன் ‏@writernaayon - மூளைக்குள்ள இருக்குற த்ரிஷ்யத்த டெலீட் பண்ணிட்டுப் பார்க்கணும்.
தேவர்மகன் ‏@Thevarmagan1991 - நம்மவரின் பாபநாசம் பாக்ஸ் ஆபீஸை நாசம் செய்யும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை!! தவறாமல் காணுங்கள் நம்மவரின் தரமான படம்!!
பேட்மேன் ‏@Narensach - கமல் கலக்கிட்டார்....நெல்லை வட்டார மொழியை இவ்வளவு கச்சிதமாய் பேச கமலை தவிர யாரும் செய்யமுடியாது.
அசோக் ‏@ashokcommonman - கமல் ரசிகனுக்கு மட்டும் அல்ல. அனைத்து தரப்பினருக்கும். கமல் பேக் வித் எமோஷன்ஸ்..
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - இன்றைய சந்தோசம்! பரவலாகத் தென்படும் பாசிட்டிவ் விமர்சனங்கள்#பாபநாசம்
நாசூக்கு நாராயணன் ‏@vtviji - திர்ஷ்யத்துல அந்த போலீஸ்காரன ஒரு அப்பு அப்புவானுங்ளே.. அப்டி ஒன்னும் இதுல இல்ல.. #பாபநாசம் ரீமேக் இல்லதான்.
Jesu balan ‏@JESUBLN - நல்ல குடும்ப கதையில் திருநெல்வேலி அண்ணாச்சியாக கமல் வாழ்ந்திருக்கிறார் சமீபமாக வந்த கமல் படங்களில் இதுதான் நல்லபடம்.
Antony ‏@antony_tweetz - த்ரிஷ்யம் பல தடவை பார்த்த என்ன மாதிரி ஆட்களுக்கும் பாபநாசம் புடிச்சிருக்கு..:-))) #கமல் டா
மாடர்ன் தமிழன் ‏@gowtwits - த்ரிஷ்யமுக்கு எந்த விதத்துலயும் குறைவில்லாம இருக்கு!
HBD THALAPATHY ‏@oduvas81 - கமல் ஜோடியாக கௌதமி படத்தில் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகங்களையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார்! Gowthami shines!!
தமிழ் குடிமகன் ‏@Tamiltwits - பாபநாசம் ரொம்ப நாள் அப்புறம் கமல் படம் எல்லா தரப்பும் பாத்து ரசிக்கிர அருமையான படம் கண்டிப்பா எல்லாருக்குமே புடிக்கும் 100% கேரண்டி
நாகராஜ சோழன் ‏@kandaknd - பாபநாசம் பாருங்க மலையாள த்ரிஷ்யத்தையும் மோகன்லாலையும் மறந்துடுவீங்க
Megamind ‏@imohan - நண்பர்களே பாபநாசம் படத்தோட இயக்குநர் ஜித்தன் ரமேஷ் இல்ல, ஜீத்து ஜோசப்.
பேராசிரியர் நாதஸ்® ‏@mpgiri - த்ரிஷ்யம் பார்க்காத நான் பாக்கியசாலி..
உத்தமர் வில்லர் ‏@TukkerDoi - கிளைமேக்ஸ் காட்சிகளில் மோகன்லால் நடிப்பை விட உத்தம வில்லர் நூறு படி மேல்.. #உலகநாயகன்.
உத்தமர் வில்லர் ‏@TukkerDoi - கலாபவன் மணிக்கு கீது.. இன்னக்கு தியேட்டர் பக்கம் வந்தார்நா அடி விழுந்தாலும் விழும். #பாபநாசம்.
ஓலைக்கணக்கன் ‏@Nattu - பாபநாசம்.. சொதப்பாத ரீமேக்.. கமல்.
ℳr மைல்ஸ் தேவா © ‏@Dev2Deva - பாபநாசம் படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூ வருது சந்துல கம்பு சுத்தாம எங்க போனிங்க?
S.K Soundhararajan ‏@SkSoundhar - பாபநாசம்# கமல் பேசும் வார்த்தைகள் எல்லாம் வருங்கால தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவுமா?


நன்றி - த இந்து

Sunday, June 28, 2015

பாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு!- இயக்குநர் ஜித்து ஜோசப் சிறப்பு பேட்டி

  • படம்: எல். சீனிவாசன்
    படம்: எல். சீனிவாசன்
மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் உடனுக்குடன் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது த்ரிஷ்யம்.
அந்தப் படத்தின் இந்தி, தமிழ் மறுஆக்கங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. 39 நாட்களில் தமிழ் மறுஆக்கத்தை இயக்கி முடித்திருக்கிறார் அதன் இயக்குநர் ஜித்து ஜோசப். ‘தி இந்து’ தமிழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
மலையாளத்தில் 'த்ரிஷ்யம்', தமிழில் 'பாபநாசம்' என்ன மாற்றம் செய்திருக்கிறீர்கள்?
கதையில் பெரிய மாற்றங்கள் எதுவுமே செய்யவில்லை, செய்யவும் முடியாது. படத்தில் வரும் குடும்பம் சம்பந்தமான காட்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கிறோம். மலையாளத்தில் கிறித்துவ மதப் பின்னணியில் அமைந்திருந்தது. தமிழில் வேறொரு சமுதாயத்தின் பின்னணியில் அமைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் இவ்வளவு ஊர்கள் இருக்கும்போது 'பாபநாசம்' பின்னணியில் இப்படத்தை இயக்கக் காரணம் என்ன?
கமல்ஹாசன் நூற்றுக்கணக்கான படங்களில் பல்வேறு வட்டார மொழிகளில் பேசி நடித்திருக்கிறார். ஆனால், திருநெல்வேலி வட்டார மொழி பேசி அவர் நடித்ததில்லை. அதுமட்டுமன்றி, ‘த்ரிஷ்யம்' என்ற பெயரில்தான் மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகியிருக்கிறது.
அவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும்போது ‘பாபநாசம்' ஊரைப் பற்றிச் சொன்னார்கள். ‘பாவத்தைத் தொலைக்கும் இடம் - பாபநாசம்' என்றார்கள். அந்தப் பெயருக்கும் கதையின் கருவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதால் ‘பாபநாசம்' என்ற தலைப்பை உடனே வைத்து, அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.
மோகன்லால், கமல் ஹாசன் எப்படி ஒப்பீடு செய்வீர்கள்?
இரண்டு மொழிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள். இருவரையும் ஓப்பீடு செய்வதே தவறு. இருவருக்குமே தனித்துவம் உள்ளது. ஜார்ஜ் குட்டி என்ற வேடத்துக்கு ஏற்ப மோகன்லாலும், சுயம்புலிங்கம் என்ற வேடத்துக்கேற்ப கமலும் அவர்கள் பாணியில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் உணர்ச்சிமிகு காட்சியை சேர்த்திருக்கிறேன். அது தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழில் ‘த்ரிஷ்யம்' என்கிற கதையை கமல்ஹாசன் இல்லாமல் இயக்கியிருக்க முடியுமா?
இப்படத்தின் தமிழ் மறுஆக்கத்துக்கு என்னுடைய முதல் தேர்வு கமல்ஹாசன்தான். இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றபோது தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி என்னிடம் “இப்படத்தைத் தமிழில் யாரை வைத்து எடுப்பீர்கள்?” எனக் கேட்டார். உடனே “கமல்ஹாசன் இல்லை என்றால் ரஜினிகாந்த் ” என பல நடிகர்களைச் சொன்னேன். கமலின் நடிப்பு, தோற்றம், செயல்திறன் அனைத்துமே இப்படத்தின் கதைக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும். படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் நீங்கள் இயக்காமல் தமிழில் மட்டும் இயக்கக் காரணம் என்ன?
இந்தியில் இயக்க வேண்டும் என எண்ணியது உண்மைதான். அவர்கள் என்னிடம் கேட்கும்போது எனக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருந்தன. அதனால் என்னால் இயக்க இயலாமல் போய்விட்டது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் எனக்கு தெரியாது. இந்தியில் அமையவில்லை என்பதால் தமிழில் இயக்கினேன்.
'த்ரிஷ்யம்' வெற்றிக்குக் காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
அழுத்தமான கதைக்களமும் திரைக்கதையும்தான். ‘த்ரிஷ்யம்' திரைக்கதையில் நாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் வைத்து நான் எழுதவில்லை. அக்கதையில் வரும் சிறு சிறு பாத்திரங்களுக்குக்கூடத் தனித்துவமான அடையாளம் இருக்கிறது.
'பாபநாசம்' படத்தில் ஜெயமோகன், சுகா, கமல்ஹாசன் போன்ற எழுத்தாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன் என்ற முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனக்குத் தமிழில் நிறைய வார்த்தைகள் தெரியாது. தமிழ்க் கலாச்சாரம் எப்படி இருக்கும், ஒரு காட்சி பண்ணும்போது தமிழில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறையக் கற்றுக்கொண்டேன்.
கமல்ஹாசன் ஒரு இயக்குநர். நீங்கள் இயக்கும்போது இயக்குநர் கமல்ஹாசன் வெளியே வந்தாரா?
நான் இப்படம் தொடங்கும்போதே என்னிடம் பலர், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; கதையில் கமல் தலையீடு செய்வார் என்றெல்லாம் சொன்னார்கள். முதல் நாள் படப்பிடிப்பின்போது மானிட்டர் பக்கம்கூட கமல் வரவில்லை. மூன்றாவது நாள் “இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது எனப் பாருங்கள் சார்” என கேட்டேன். அப்போது கமல் சார் “நீங்கள் இயக்குநர். அது உங்களுடைய வேலை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்கு இதுவே பதிலாக இருக்கும்.
அதே போல, இந்தக் காட்சியில் இப்படிப் பண்ணலாமா என்று கேட்பார். நான் வேண்டாம் சார், சரியாக இருக்காது என்று சொன்னால், நீங்கள் சொன்னால் சரி என்று கூறிவிடுவார்.
மலையாளத்தில் தற்போது புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் அசத்திவருவதைக் கவனிக்கிறீர்களா?
கண்டிப்பாக. ஒவ்வொரு 15 ஆண்டுக்கும் ஒரு மாற்றம் வரும். திறமையுள்ள நிறைய புதுமுக இயக்குநர்கள் வர வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் வலுவான போட்டி இருக்கும். மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் நல்ல படங்களின் எண்ணிக்கை வருவது மிகவும் குறைவாக இருந்தது. அப்போது மக்கள் திரையரங்குக்கு வருவது மிகவும் குறைவு. இப்போது நல்ல படங்கள் நிறைய வருகின்றன. நல்ல படங்கள் அதிகரித்தால், மக்கள் திரையரங்குக்கு வந்து பார்ப்பதும் அதிகரிக்கும் என்பது என் கருத்து.]


நன்றி - த இந்து


  • பல வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி (Sexual harassment thro ' landline போன்)ஒரு தொடர்கதை(?).'சுஜாதா" எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது. (அதன்" கிளைமாக்ஸ்"வேறு.)ஒரு தாயின் மனநிலையை மிக சிறப்பாக வெளி கொனர்ந்த படம்.தமிழில் , ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    Points
    790
    a day ago
     (0) ·  (0)
     
    reply (0) 
       
    • Kriti Janarthanan  
      இதே இந்துவில் படித்து விட்டுதான் படம் பார்க்க சென்றோம்..இப்படத்தின் இரண்டு கருத்துக்கள் வலிமையானது..ஒன்று-குற்றம் செய்பவர் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும்;சட்டத்தால் சாத்தியம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு ஒரு வகையில் தண்டனை கிடைத்தே தீரும்.இன்னொன்று மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியது(படத்தை பார்த்தீர்கள் என்றால் புரியும்)-வள்ளுவர் சொன்னார் பொய்மையும் வாய்மையிடத்து; ஆனால் ஜார்ஜ்குட்டி மிக மிக நல்ல மனிதராக இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று..மிக நல்ல, சுவாரஸ்யமான படம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் பெண்களுக்கு உண்டாகும் பற்பல தீமைகளில் ஒன்றை இப்படம் உறைக்கும்படி சொல்லியுள்ளது.
      Points
      2030
      a day ago
       (1) ·  (0)
       
      MannanMannenUp Voted
      • Mannan Mannen  
        நானும் தமிழ் இந்துவில் படித்து இந்த படத்தை பற்றிய ஆர்வம் தொற்றியது
        about 19 hours ago
         (0) ·  (0)
         
      • Mannan Mannen  
        இது போன்ற ஒரு திரைகதை அமைவது மிகவும் rare என்று தான் சொல்ல வேண்டும் .....அத்தனை கதாபத்திரங்களும் மிக மிக சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்கள் மலையாளத்தில் மற்றும் தெலுங்கில் பார்த்தேன் ......தமிழில் அதே போல வரும் என்று நம்புகிறேன் ......இவ்வளவு பெரிய hit கொடுத்த இயக்குனர் இவர் தான இது என்று இன்று தான் இவர் புகை படத்தை பார்கிறேன் .........மலையாளம் மோகன்லால் நடித்து மிக சிறப்பாக வந்து collection அள்ளியது அதே போல தெலுங்கில் venketsh நடித்து சிறப்பாக வந்தது ....தமிழில் அதை விட சிறப்பான collection வரும் என்று எதிர்பார்கிறேன் .....அடுத்த வாரம் தெரிந்து விடும் தமிழக மக்கள் எப்படி இதை எடுத்து கொள்கிறார்கள் என்று ....All the best to this director ஜித்து ஜோசப்

      Saturday, May 02, 2015

      உத்தம வில்லனுக்கு ஒரு கடிதம் (குரு - சிஷ்யன்)

      உத்தம வில்லன் படப்பிடிப்பு தளத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தருடன் கமல்
      உத்தம வில்லன் படப்பிடிப்பு தளத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தருடன் கமல்
      அன்பு கமல்...
      ஏதோ ஒரு வெளியில், பணியிலிருந்து ஓய்வுபெற்றவனுக்கும், ஒரு துறவிக்குமான இடைப்பட்ட நிலையிலிருந்து, எனது குறைகளையும், வலிகளையும் பேணிக்கொண்டே, இந்த உலகில் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
      ஆனால் கமல் ஹாசனின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சட்டென எனது வயது குறைகிறது, களைப்பு வடிகிறது, முதுகுத் தண்டு நிமிர்கிறது, மூட்டுக்கள் குணமாகின்றன, இதயம் லேசாகிறது, என் புன்னகை விரிகிறது, எனது ஆன்மா எழுச்சி பெறுகிறது.
      ஒவ்வொரு படைப்பாளியும், நடிகனாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் சரி, தனது புகழ் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு, ஐந்து நிலைகளைப் பார்த்தாக வேண்டும்.
      எனது பெயரை எடுத்துக்காட்டாகக் கொண்டால்,
      முதல் நிலை, ‘பாலச்சந்தர் யார்?’
      அடுத்த நிலை, ‘எனக்கு பாலச்சந்தர் மட்டுமே வேண்டும்’
      மூன்றாம் நிலை, ‘எனக்கு பாலச்சந்தரைப் போல யாராவது வேண்டும்’
      நான்காம் நிலை, ‘எனக்கு இளமையான பாலச்சந்தர் வேண்டும்’
      கடைசி நிலை, மீண்டும் -‘அட, பாலச்சந்தர் யார்?’
      ஆனால் திரு. கமல்ஹாசன் தான் சாதித்ததன் மூலமாக, எனக்கு இந்தக் கடைசி நிலை வருவதைத் தவிர்த்துவிட்டார்.
      கமல் ஒரு அடையாளம். தான் எடுத்த எல்லாத் துறைகளிலும் மன்னன். மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் என்கிறோம், தொலைபேசியைக் கண்டுபிடித்தது அலெக்சாண்டர் பெல் என்கிறோம், ரேடியோவுக்கு மார்கோனி, அசையும் படங்களை வைத்துக் கதையைச் சொன்னவர்கள் லூமியர் சகோதரர்கள் என்கிறோம்.
      மேற்சொன்ன தொழில்நுட்பங்கள் எவ்வளவு முன்னேறினாலும் அதைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்கள், அவர்களது தொலைநோக்குப் பார்வையால், அவர்கள் முன்னோடியாக இருந்ததால், என்றென்றும் நினைவுகூரப்படும்.
      இந்த ஒப்பற்ற பட்டியலில் எனது பெயருக்கும் ஒரு இடமிருப்பதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ஏனென்றால் கமலைக் கண்டறிந்தது நான் என்பதால்.
      உண்மையாகப் பார்த்தால் கமலை நான் கண்டறியவில்லை. அவரை அவரே தெரிந்துகொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தேன். அவ்வளவே. அந்தக் காலகட்டத்தில் என்னை நானே அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
      கமல், சினிமா வீதிகளில் நடக்கக் கற்றுக்கொண்டபோது, தனது கையைப் பற்றிக்கொள்ள எனக்கு அனுமதி அளித்தார். அடுத்து, நான் யோசிக்கும்போது தனது மனதைப் பற்றிக்கொள்ள அனுமதி அளித்தார். அடுத்து, அவரது கற்பனா சக்தியின் எல்லைகளை எனக்குக் காண்பித்தபோது, நான் அதில் ஆராய்ந்தேன், தொடர்ந்து அவரது படைப்பாற்றலுக்கான எல்லை விரிந்தபோது, அதற்கான பசி அதிகரித்தபோது நான் மனப்பூர்வமாக அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன், அவர் தன்னை அறிந்துகொள்ள, சிறகுகளை விரித்துப் பறந்ததைப் பார்த்தேன்.
      கமல், தனக்கான தரத்தையும், வரம்பையும் தானே நிர்ணயிக்கும்போது நான் வியப்பதை என்றைக்குமே நிறுத்தியதில்லை. அந்த அளவில் ஒரு தரம் இருக்கும் என்பதையே பலரால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர் எந்த விதியையும் பின்பற்றுவதில்லை. மாறாகத் தனக்கான விதிகளை உருவாக்குகிறார். பின் அதை உடைத்துவிட்டு மீண்டும் புதிதாகத் தொடங்குகிறார்.
      அவருக்கு இன்று தெரிந்திருக்கும் அத்தனையும் நான் கற்றுத் தந்ததல்ல. எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். மிச்சத்தை, கேள்வி கேட்டு, விசாரித்து, கோரி, பார்த்து, கவனித்து, படித்து, மேம்படச் செய்து, பரிசோதித்து, அனுபவித்து, கற்று அவரை அவரே அறிந்துகொண்டார். தனது எல்லைகளுக்கு அப்பால் செல்ல அவர் என்றுமே பயந்ததில்லை.
      சினிமாவுக்காகத் தனது புகழையும், சம்பாத்தியத்தையும் கமலைப் போல யாரும் பணயம் வைத்ததில்லை. இது புகழ் மற்றும் பணத்துக்கான தேடல் அல்ல. இது அதையும் தாண்டியது. கமல் பெற்றதைவிட இழந்ததே அதிகம். போட்டிகளை, போட்டியாளர்களைக் கடந்தவர் கமல்.
      இந்தியாவின் மீதிருக்கும் தீராத பற்றே அவரது உற்சாகத்துக்குக் காரணம்
      அவர் தனித்து, உயர்ந்து நிற்கிறார்.
      அவர் ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்.
      ஆனாலும் அவரது பாதங்களும், இதயமும் இந்திய மண்ணோடு கலந்து உறுதியாக நிற்கின்றன. தோள்கள் உறுதியாக, புகழ் தரும் சலனத்துடன் சண்டையிட்டு, நிலைத்து நிற்கும் உண்மையான, நிலையான படைப்பாற்றலைத் தேடி நிற்கிறார்.
      ஆம், அதில் காயங்கள் ஏற்பட்டாலும் என்றும் அவர் தோற்கவில்லை. காயப்பட்டாலும், தாழ்ந்து போகவில்லை.
      டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!!
      (கேரள மாநில அரசு கமல் ஹாசனின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கியது. அந்த விருது விழாவில் கலந்துகொள்ள இயலாத இயக்குநர் பாலச்சந்தர் கமல் ஹாசனுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் இது. உத்தம வில்லன் திரைப்படம் வெளியாகும் இந்த தருணத்தில் இங்கே பிரத்யேகமாகப் பிரசுரமாகிறது)


      • Prabhakar Shenoy Manager at CORP BANK 
        மலருக்கும் மனதுக்கும் மட்டும் அல்ல கலைஞனுக்கும் ஜாதி இல்லை.இல்லவே இல்லை. ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள், நிற்க, நான் கலைஞர் என்று கூறப்படும் அரசியல்வாதி இதற்கு விதிவிலக்கு.
        about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           
        • உயர, உயர உயர்நதாலும் ஏற்றி விட்ட ஏணி மறக்காத கமல்... அவரது எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் குரு பாலசந்தர்..... சூப்பர்
          about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • இந்தியாவின் மீது வைத்திருக்கும் பற்று ...கொஞ்சம் இடிக்கிறதே நாட்டை விட்டு செல்வேன் என்று கூறியவர் ஆச்சே.
            about 15 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
            ArunK  Up Voted
            • Miga arumai! Kamalai ethai veda arumaiyaga vimarsekka mudiyathu! Kamalji vetri umakke!
              about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Ram  
                என்றும் அவர் தான் எங்களின் உலக நாயகன் அவர் வழியில் என்றும் நங்கள்
                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • மிக அற்புதமான மடல். சிறப்பான குரு, அதற்கேற்ற மாணவன். தமிழர் பெருமையை தரனியெங்கும் கொண்டு சேர்க்கும் கமலுக்கு வாழ்த்துக்கள்.
                  about 20 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
                  • செ.  
                    இந்த சினிமாக்காரன்கள் ஒருவனை ஒருவன் புகழோ புகழ் என்று புகழ்கிறான்.
                    Points
                    31470
                    about 20 hours ago ·   (2) ·   (6) ·  reply (0) · 
                    sundarrajan · ArunK  Up Voted
                    RamGovindarajan · RaviAdavane · Karthi · seshan  Down Voted
                    • Palayam  
                      ஒரு சரித்திரம் மறு சரித்திரத்தை பற்றி கூறுகிறது.
                      Points
                      240
                      about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                      RaviAdavane  Up Voted
                      • " உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காது நீ வாழலாம் " . என்னும் வரிகளுக்கு ஏற்ப தன்னை தானே அறிந்து தன்னிலை உணர்ந்து தன்னை தானே செதுக்கிகொள்ளும் மாபெரும் கலைஞன். தன்னை என்றும் மாணவனாக எண்ணி தினமும் கற்றுக்கொள்ளும் பண்பு கொண்டவர். அவரது உயர்வை யாராலும் நிர்ணயிக்க முடியாது. ஏன் அது அவராலேயே முடியாது.
                        Points
                        1385
                        about 20 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                        • It is true
                          about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • பார்பன பாசம் பொங்கி வழியுது.சிவாஜிக்கு உயரிய விருதுகள் கிடைகாததர்க்கு என்றாவது கவலை பட்டு இருப்பாரா?
                            Points
                            270
                            about 22 hours ago ·   (3) ·   (7) ·  reply (4) · 
                            RamGovindarajan · RaviAdavane · manikandan · Karthi · அன்பு · SaroavananVC · seshan  Down Voted
                            • ram  
                              இதில் எங்கே பார்பன பாசம்?
                              about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (2) · 
                              • Kanan  
                                அரங்கேற்றத்தில் சொந்த சாதிக்காரர்கலையே வம்புக்கிழுதபோது சாதி பாசமா இருந்தது?உன்னால் முடியும் தம்பி ஜாதிமல்லி படங்களைப் பார்த்தும் சாதிபற்றி அவரது கருத்து என்ன என்பது புரியவில்லையா? அவரது தங்கை (சித்தி) மகளுக்கே சாதிமறுப்புத் திருமணம் செய்துவைததாக செய்திகள் வந்தனவே
                                about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • Jayaram  
                                  விக்கி சொல்லுவது பாலச்சந்தர் கமல் இருவரும் பார்பனர்கலாம். எனவே இவர் அவரை பாராட்டுகிறாராம். கமலுக்கு கடவுள் இல்லை என்பது தெரியுமா? விக்கி?
                                  about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • Vicky Alpha Business Analyst at Honey Traders 
                                  உங்களோட ஜாதி பிரிவினை வெறியை இதுலையுமா காட்டுவீங்க?
                                  about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                  • கமல் தன்னை ரஷோனளிஸ்ட் பகுத்தறிவு வாதி என்கிறார் பெரியார் வலி நடக்கிறார் பார்பனர் என்பது சரியல்ல
                                    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                    • Jayaram  
                                      சிவாஜி மக்கள் மனதில் இருக்கிறார். குறுகிய மனத்தோடு பேச வேண்டாம் .என்னை கேட்டால் சிவாஜி இடம் இருந்து படம் படித்தவர் தான் கமல்.
                                      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                    • இது ஒரு நுட்பமான உணர்வின் பிரதிபலிப்பு. குரு பெருமை கொள்ளும் சிஷ்யன்.
                                      Points
                                      100
                                      about 22 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                                      Karthi  Up Voted
                                      • ஒரு உத்தம மனதின் உத்தம நோக்கு..
                                        Points
                                        1530
                                        about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                        • உண்மையில் கமல் ஹாசன் தமிழ்நாட்டின் தவப்புதல்வன். சொல்லவேண்டுமென்றால் பெருமைப்பட, பெருமைபட்டுக்கொள்ள, நாம் அனைவரும் போற்றுவதற்கு தகுதியான நபர் கமல் ஹாசன் ஒருவரே.

                                        நன்றி -த இந்து