Showing posts with label கதம் கதம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கதம் கதம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, March 13, 2015

கதம் கதம் - சினிமா விமர்சனம்



சதுரங்க  வேட்டை  சூப்பர்  ஹிட்  ஆனதும்  நட்டு அவருக்கு  ஏத்த  மாதிரி  ஒரு  நாட்டு (KNOT)ல  கதை தமிழ் ல  கிடைக்காததால  த இண்ட்டர்னல் அஃப்ர்  எனும்  கொரிய படத்தை  ரீமேக்கின   த  டிபார்ட்டட்  ஹாலிவுட்  படத்தை  உல்டா  ரீமேக்கி  ஒரு படத்தை  தமிழ் ல  கொடுத்திருக்காரு. அது  எந்த  அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி  இருக்குன்னு  பார்ப்போம்.


ஹீரோ  நேர்மையான  சப் இன்ஸ்பெக்டர் .  வில்லன் ஹமாம்  சோப்பே  வாழ்க்கைல  போட்டுக்குளிக்காத அநேர்மை ஆள்.இவர்  இன்ஸ்பெக்டர் வேற.ஒரே ஊர்ல  அர்விந்த் கேஜ்ரிவாலும்  , கலைஞரும்  இருந்தா  என்ன  ஆகும்?இதை  வெச்சு  எழுதுன  திரைக்கதை தான்  கதம்  கதம்



 ஹீரோவா  ஈரம்  நந்தா .  வால்டர்  வெற்றிவேல்  கணக்கா  இவர் படம்  பூரா  முறைப்பா  வர்றது எல்லாம்  ஓக்கே  தான் . ஆனா  ஹீரோயின்  கிட்டே  கடலை  போடும்போது  கூட  உம்மணாம்மூஞ்சி குமாரா  இருந்தா  எப்டி?மற்றபடி  நடிப்பு  ஓக்கே 
.
 வில்லனா  வரும் நட்டு  சீன்  பை  சீன்  கவுண்ட்டர்  கொடுக்கறார். சிலர்  கை  தட்டறாங்க . சதுரங்க வேட்டை  அளவு  ஒர்க் அவுட் ஆகலைன்னாலும்  மோசம் இல்ல .அசால்ட்டான  பாடிலேங்குவேஜ், கெத்தான  டயலாக்  டெலிவரி  இவரின் பிளஸ் 



அம்புலி படத்தில்  நாயகியா வந்த  சனம்  ஷெட்டி  தான் இதுல  நாயகி. குடும்பத்து வெள்ளிக்குத்து விளக்கா  படம்  பூரா  வரும்  இவர்  திடீர்னு டூயட்  சீன்ல நைட்  லேம்ப்  மாதிரி  கிளு  கிளு  டிரஸ்ல  வரும்போதுதமிழன்  அப்டியே  ஷாக் ஆகிட்டான்.அந்தப்பாட்டு  சீன்க்கு  ஒரு  பய  எந்திரிச்சி  வெளில  போகலையே


போலீஸ் ஆஃபீசராக  வரும்  அந்த  லேடி  யார்?னு  தெரியலை  செம  தெனாவெட்டு. என்னா  வெட்டு  . வெட்டுது


 தாரிகா ஒரு  குத்தாட்டப்பாட்டுக்கு  ஆடுது.  சி  செண்ட்டர்  ஆடியன்ஸ்  கை தட்றாங்க .


சிங்கமுத்து , நிழல்கள் ரவி  எதோ  காமெடியும்  , வில்லத்தனமும்   பண்றாங்க


 பாடல்கள் மொக்கை  இசை  சுமார்.ஒளிப்பதிவு  இன்னும் சுமார்






மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பிராக்டிகல் லைப் ல பாலிசி தோத்துப்போகும் # க க

2 நாங்க எல்லாம் கும்பகோணத்துல மாமூல் தர்றாங்கன்னா கோயமுத்தூர்ல இருந்தே குனிஞ்சிட்டே போவோம் # க


3 இது கரப்சன் இல்லையா?


அவங்க பார்வைல இது சர்வைவல் # க க




4 நம்ம ஊர்க்காரன் நமக்கு சப்போர்ட்டா இல்லாட்டியும் பரவால்ல.நம்மையே எதிர்க்கக்கூடாது # க க


5 நீ வெட்கப்படறது நடிப்புன்னு தெரிஞ்சாக்கூட அதுவும் நல்லாத்தாண்டி இருக்கு # க க


6 உங்களுக்கு இங்க்லீஷ் தெரியலையேன்னு வருத்தமா இருக்கா?

நோ.அவனுக்கு தெரிஞ்சிருக்கே?அதான் வருத்தம் #,க



7 ஒருத்தனோட திறமையையும் ,புகழையும் யாராலும் திருடிட முடியாது # க க


8 கெட்டவனா வாழ்றது அவ்ளவ் ஈசி இல்லை.அதுக்கு அளவு கடந்த மனோபலம் வேணும் # க க


9 உனக்கு உடம்பு பூரா மச்சம்னா எனக்கு மச்சம் போகத்தான் உடம்பே
அப்போ அதுக்குப்பேரு யோகம் இல்ல.தோஷம் # க க



10 வில்லி = வேணாங்க.என் புருசனுக்குத்தெரிஞ்சா தப்பாகிடும்
கில்லி = நான் சொல்ல மாட்டேன். அப்போ நீ? # க க




11 இவன் இதுவரை   50  ரேப்  பண்ணி  இருக்கான். நான்  5 நிமிசம்  லேட்டா வந்திருந்தா  கும்கி யானைட்ட மாட்டின  குல்பி ஐசா  ஆகி இருப்பேம்மா # க க 


12   ரொம்ப  நாளுக்குபின் விஜய்காந்த்  படம்  பார்த்த  மாதிரி இருக்கு.

 போகப்போக  ரஜினி படமே  பார்ப்பே  # க க 


13 அதிர்ஷ்டம் ஒரு பக்கம் அடிச்சா ஆப்பு இன்னொரு பக்கம் அடிக்கும் # க க







 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  சதுரங்க வேட்டை புகழ் நட்டு + ஈரம் நந்தா = கதம் கதம் @ வடலூர் முருகா


2 இயக்குநர் 1985 காலத்து ஆள் போல.மேக்கிங் ஸ்டைல் அரதப்பழசு # கதம் கதம்


3 The Departed." எனும் ஹாலிவுட் படத்தின் உல்டா ரீமேக்தான் கதம் கதம்

4 வில்லனோட  அடியாள் 10 நிமிசமா  பஞ்ச் டயலாக்  பேசிட்டிருக்கான். ரேப் புக்கு  ஆளாக வேண்டிய பொண்ணு டக்னு  ஓடிப்போகாம  அழுதுட்டே  நிக்குது@ க க



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  சதுரங்க  வேட்டை  ஹிட்  ஆன பின்  வரும் முதல் நட்டு  படம்  என்பதால் அதன்  அறுவடை  இவருக்கு  லாபம். 


2  வசனகர்த்தா  தான்  படத்தின்  ஒரே  பிளஸ் .  பல இடங்களில்  சபாஷ் 

3  ஹீரோயின்  ஹீரோவை  திட்டி  பிரியும்  பின் பாதி  காட்சியில்  அவர்  அணிந்து வரும் சுடிதார்  சூப்பர்  டிசைன் . குறிப்பா  துப்பட்டா அங்கவஸ்திரம்  போல் அபாரமான  ரசனையுடன். ஆடை  வடிவமைப்பு  கலக்கல்



4  கட்டழகிக்கண்ணாலே செம  குத்து  சாங்கில்   நாயகி  யின்   இஸ்பேட்  கட்  நெக்  ஜாக்கெட் அழகு




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   இதுக்கு  முன்னால நாடகம்  நிறைய  பார்ப்பீங்களா? எல்லா  சீனும்   டிராமாவா  இருக்கு ?

2  வில்லனின்  அடியாட்கள்  லூசுங்க  மாதிரி  அவங்கசதித்திட்டம்  பற்றி  பப்ளிக்கா ஓட்டல்ல  டிஸ்கஸ்  பண்ணுவதும்  ஹீரோயின்  ஒளிந்து  கேட்பதும் அக்மார்க்  டிராமா


3   நிச்சயதார்த்த  விழாவுக்கு வில்லன்  தன்  கீப்புடன்  வருவது  , கூட்டம்  பொறணி  பேசுவது  எல்லாம் 1965  பாணி


4  வில்லன்   பைக்  மட்டும்   ரெடியாக  வீட்டு  வாசல்  முன்  நிற்பதும்  ,  நாடக காட்சி  போல்  அதை  இயக்குநர்  கையாண்ட  விதமும்  ஷப்பா


5  க்ளைமாக்சில்  ட்விஸ்ட்  வேண்டும்  என்பதற்காக  அப்படி தடாலடி   மாற்றம்  தேவை  இல்லை










சி  பி  கமெண்ட் - கதம் கதம் = நல்ல போலீஸ் VS கெட்ட போலீஸ்- பி,சி செண்ட்டர் ரசிகர்களுக்கான சராசரிப்படம்-விகடன் மார்க் =40 , ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  சுமார்






 ரேட்டிங் = 2.5 / 5


டிஸ்கி - மகாபலிபுரம் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2015/03/blog-post_80.html