Tuesday, May 14, 2024

FINDER PROJECT 1 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


சமீபத்தில்  வந்த  லோ  பட்ஜெட்  படங்களில்  மீடியாக்களால்  பெரிதும்  பாராட்டப்பட்ட  படம்  இது . ஆனால் அனைத்து  விமர்சனங்களிலும்  இது  ஒரு  புதிய  கதை  என்றே  சிலாகித்தார்கள் .  என்  பார்வையில்  சமீபத்த்ல்  வெளியான  கன்னடப்படமான SAPTA  SAGARADAACHE  ELLO  SIDE A   ,  SIDE B ஆகிய  இரண்டு  படங்களின்  தாக்கம்  உள்ள  கதையாகவே  பார்க்கிறேன். அது  ஒரு   ரொமாண்டிக்  சப்ஜெக்ட் .இது  முழுக்க  முழுக்க  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  என்றாலும்  மெயின்  கதை  ஒன்று தான்.  வேறு  வேறு  திரைக்கதை  ஆக  அமைந்தாலும்  அடிநாதம்  ஒன்றே 


இது  ஒரு  உணமை  சம்பவத்தின்  அடிப்படையில்  எடுக்கப்ப்ட்ட  படமாம் . திரைக்கதை  எழுதி  இயக்கி  ஒரு  முக்கிய  ரோலில்  நடித்தும்  இருக்கிறார் புதுமுக  இயக்குநர்   வினோத்  ராஜேந்திரன் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  குப்பத்தில்  வசிக்கும்  ஏழை . அங்கே  இருக்கும்  ஏழை  மக்களிடம்  சீட்டுப்பணம்  வசூலித்து  ஒரு  ஆளிடம்  தருகிறான்.  அந்த  ஆள்  பணத்துடன்  ஓடிப்போகிறான். இப்போது  அந்தப்பணத்துக்குநாயகன்  தான்  பதில்  சொல்ல  வேண்டும், எல்லோரும்  இப்போதே  பணம்  தர  வேண்டும்  என  நெருக்குகிறார்கள் 


வில்லன்  நாயகனுக்கு  சொந்தக்காரன். இவன்  வேலை  வெட்டி  இல்லாதவன்.செய்யாத  தப்புக்காக  பழி  ஏற்றுக்கொண்டு  ஆறு  மாதம்  ஜெயில் தண்டனை  பெற்று   பின்  ரிலீஸ்  ஆகி  உண்மையான  குற்றவாளியிடம்  அதற்கான சம்பளத்தை  வாங்கிக்கொள்பவன் 


அந்த  ஊர்க்கவுன்சிலரைக்கடத்தும்  பொறுப்பு  வில்லனுக்கு  அளிக்கப்படுகிறது, வில்லனும்  தனியாக  அதை  செய்து  முடிக்கிறான். மெயின்  வில்லன்  கவுன்சிலரைக்கொலை  செய்து  விடுகிறான்.இப்போது  கொலைப்பழியை  ஏற்றுக்கோள்ள  இருவர்  தேவை 


மெயின்  வில்லனின்  ஆலோசனைப்படி  சைடு  வில்லனும், நாயகனும்  கோர்ட்டில்  தாங்கள்  தான்  அந்தக்கொலையை  செய்ததாக  சரண்டர்  ஆகிறார்கள் 


நாயகனுக்கு  என்ன  நம்பிக்கை  எனில் ஆறு  மாதத்தில்  நாம்  ரிலீஸ்  ஆகி  விடுவோம், கை  நிறையப்பணம்  கிடைக்கும்.  நம்  கடனை  அடைத்து  விடலாம்.

 ஆனால்  நினைத்தது  எதுவும்  நடக்கவில்லை . நாயகனுக்கு  ஆயுள்  தண்டனை  கிடைக்கிறது . பேசியபடி  பணமும்  வரவில்லை ., கடன்காரார்கள்  நெருக்கவே  நாயகனின்  மனைவி  தற்கொலை  செய்து  கொள்கிறாள் . நாயகனுக்கு  ஒரே  ஒரு  மகள் 


 குற்றமே  செய்யாமல்  அப்பாவிகள்  பலர்  ஜெயில்  தண்டனை  பெறுகிறார்கள் . அவர்களை  மீட்டு  கேசில்  வாதாடி  நிரபராதி  என  நிரூபித்து  அவர்களுக்கு  விடுதலை  வாங்கித்தருவதை  சேவையாக  ஒரு  நிறுவனம்  செய்கிறது ., அதற்குத்தான்  ஃபைண்டர்   என்று  பெயர் ,அந்த  நிறுவனத்தின்  முதல்  பிராஜெக்ட்  ஆக  இந்த  கேஸ்  இருக்கிறது


  நாயகனின்  கேசை  எடுத்த  நிறுவனம்  நாயகனை  ரிலீஸ்  செய்ய  வைத்ததா? உண்மைக்குற்றவாளியைக்கைது  செய்ய  வைத்ததா?என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சார்லி.  கேரக்டர்  ரோல்  என்றால்  இவருக்கு  அல்வா  சாப்பிடுவது  போல , பரிதாபகரமாக  முகத்தை  வைத்துக்கொண்டு  அப்பாவித்தன  நடிப்பை  வெளிப்படுத்துவதில்  இவர்  கில்லி ., நிறைவாக  செய்து  இருக்கிறார்

  நாயகனின்  சொந்தக்காரனாக  , சைடு  வில்லனாக  வருபவர்  சென்றாயன்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  திருட்டு  முழியும், உடல்  மொழியும்  அருமை 


கேசை  டீல்  செய்யும்  துப்பறிவாளராக  இயக்குநர்  வினோத் ராஜேந்திரன்  நடிப்பு  ஆஹா  ஓஹோ  அளவுக்கு  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம் . அவருக்கு  இணையாக  வரும்  நாயகி  தாரிணிக்கு  இணையான  ரோல்  இல்லை ., இன்னும்  அதிக காட்சிகள்  அவருக்கு  வழங்கி  இருக்கலாம்  ., வந்தவரை  குட் 


நிழல்கள்  ரவி  வக்கீலாக  வருகிறார். அனுபவம்  மிக்க  நடிப்பு 


கவுன்சிலர் ம் சாமியார் , மெயின்  வில்லன் , இன்னொரு  வக்கீல்  ஆகிய  அனைவரும்  புதுமுகங்கள்  என்றாலும்  அனுபவம்  மிக்கர்வர்கள் போல  நிறைவான  நடிப்பு 


ஒளிப்பதிவாளர் பிரசாந்த்  வெள்ளியங்கிரியின்  கேமரா  தன்  பணியை  செவ்வனே  செய்திருக்கிறது .இசை  சூர்யபிரசாத்.  ஓக்கே  லெவல் . பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை சராசரி ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின்  முதல்  காட்சியிலேயே  நிழல்கள் ரவி  ஸ்பீச்  கொடுப்பதும்  , குற்றவியல்  மாணவர்கள்  கேள்வி  கேட்பதும், விளக்கம்  அளிப்பதும்  நல்ல  ஓப்பனிங். ஈசியாக  கதைக்குள்  நம்மை  இழுத்துச்சென்று  விடுகிறது 


2  குற்றமே  செய்யாத  ஆள்  பணத்துக்காக  குற்றத்தை  ஒத்துக்கொள்வது , உள்ளே  போவது  நடைமுறையில்  உள்ளதுதான்  என்றாலும்  அதை  விளக்கமாக  காட்சிப்படுத்திய  டீட்டெய்லிங்  அருமை 


3  கவுன்சிலர் , சாமியார்  ,  எல்லோருக்குமான  மெயின்  வில்லன்  என  பின்  பாதி  ட்விஸ்ட்கள்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  சந்தர்ப்ப  சூழ்நிலையால்  தப்பு  பண்றவங்களுக்குத்தான்  பெயில் , குற்றப்பின்னணி  இருக்கறவங்க  தப்பு  பண்ணினா  அவங்களுக்குப்பெயில்  கிடைக்காது 


2   ஆயிரம்  குற்றவாளிகள் தப்பித்தாலும்  ஒரு  நிரபராதி  கூட  தண்டிக்கப்படக்கூடாதுனு  சொல்வாங்க , ஆனா   ஆயிரம்  குற்றவாளிகள் ல  ஒரு  ஆள்  கூட  தப்பிக்கவும்  கூடாது , ஒரு  நிரபராதி  கூட  தண்டிக்கப்படக்கூடாது


3   இந்த  மாதிரி  பொண்ணுங்க  விஷயத்தில்  வீக்  ஆன  ஆள்  ஆன  உனக்கு  ஏன்  சாமியார்  வேஷம் ?  நீ  ஏன்  சாமியார்  ஆனே?


என்  சம்சாரம்   என்னை  விட்டுட்டு  ஓடிடுச்சுங்க ‘


 ஏன் ?


 அதான்  சொன்னேனே?நான்  பொண்ணுங்க  விஷயத்தில்  வீக்லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஆன  சார்லிக்கு   ஆட்டோ  ஓட்டத்தெரியாது. லைசென்சும்  இல்லை , கொலை  எப்படி  நடந்தது  என  டெமோ  காட்டச்சொல்லும்போது  டிரைவிங்  தெரிந்த  ஆள்  தானே  வேண்டும்? மெயின்  வில்லன்  அதை  க்ராஸ்  செக்  செய்யவில்லை , ஏன்?அதே  போல்  போலீசும்  நாயகனை  ஆட்டோ  ஓட்டிக்காட்டச்சொல்லவில்லை  , அது  ஏன் ? 


2   என்ன  தான்  நாயகன்  அப்பாவி , படிப்பறிவு  இல்லாதவர் என்றாலும்  ஒரு  கொலைக்கேசில்  ஆறு  மாதத்தில்  ரிலீஸ்  ஆகிடலாம்  என  எப்படி நம்புகிறார்?


3 பொய்யான  கொலைப்பழியை  ஏற்று  ஜெயில்செல்லும்  நபருக்கு   வாக்குக்கொடுத்தபடி  பணம்  தரவில்லை  எனிலவன்  பல்டி  அடித்துக்கேசைக்குழப்பும்  வாய்ப்பு  இருக்கு  என்பது  தெரிந்தும்  ஏன்  பணம்  பட்டுவாடா  செய்யபடவில்லை ? 


4  காட்சியாகக்காட்டப்படும்போது  கவுன்சிலரும், நண்பரும்  ஜாகிங்  தான்  போகிறார்கள், ஆனால்  வசனமாக  வரும்போது  வாக்கிங்  என்கிறார்கள் 


5   கொலை  செய்யப்பட்டதாக  சொல்லப்படும்  கவுன்சிலரின்  டெட்  [பாடி  கிடைக்காமல் அந்தகேசில்  ஆயுள்  தண்டனை  எப்படிக்கிடைக்கும் ? 


6   மெயின்  வில்லனின்  அப்பா  ஹார்ட்  அட்டாக்கில்  துடிக்கும்போது  அவரை  ஹாஸ்பிடல்  கொண்டு  போனால் வில்லன்  மாட்டிக்கொள்வான்  என்பதால்  அவன்  சும்மா  இருப்பது  ஓக்கே ,  அப்படி  சும்மா  இருந்தாலே  தானாகவே  அப்பா  உயிர்  போயிடும், எதுக்கு  மெனக்கெட்டு   சொந்த  அப்பாவைக்கொலை  செய்யனும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  தரமான  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படம் .பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5