ஐஎம்டிபி ரேட்டிங் ல 9.6 /10 ரேட்டிங் வாங்கி இருந்தாலும் இது பாக்ஸ் ஆஃபீசில் ஃபிளாப் படம் ,ஆந்திரா ரசிக்ர்கள் மாஸ் மசாலா படங்களை ஓட வைப்பதும், நல்ல படங்களை கண்டுக்காததும் நமக்குத்தெரிந்ததே., அதனால் நான் எப்போதும் கம்ர்சியல் ஹிட்டா? என்பதை வைத்து படம் பார்ப்பதில்லை . இது பிரமாதம் என சொல்லக்கூடிய அளவு இல்லை என்றாலும் பார்க்கத்தக்க படமே
ஸ்பாய்லர் அலெர்ட்
அமைதிப்படை அமாவாசை மாதிரி வில்லன் தன் ஜாதிக்காரரான ஒரு மினிஸ்டரை அவரது வீட்டுக்கே போய்ப்பார்க்கிறான். ஒரு மூட்டை நிறைய பணத்துடன்... பணம் என்றால் பிணமே வாயைப்பிளக்கும்போது அரசியல்வாதி என்ன செய்வார்? மக்களிடம் சீட்டுப்பணம் வசூலித்து ஏமாற்றி ப்ணம் சம்பாதிக்கலாம் என்பதே வில்லனின் திட்டம்
அவனது திட்டம் பிரமாதமாக இருப்பதை அறிந்த மினிஸ்டர் அவனை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து கொண்டு ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி எம் டி ஆக வில்லனை உருவாக்குகிறார்.அதுவரை மினிஸ்டரின் ஆசை நாயகியாக இருந்த வில்லி இப்போது வில்லனின் ஆசை நாயகியாகவும் , ஃபைனான்ஸ் கம்பெனியின் ஒர்க்கிங் பார்ட்னராகவும் சேர்கிறார்.
10 வருடங்கள் கழிகிறது. கம்பெனி நல்லா வ்ளர்கிறது , தமிழகம், ஆந்திரா , கர்நாடகா என கிளைகள் தொடங்கப்பட்டு செழித்து வளர்கிறது.வில்லனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது
வில்லன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் . கம்பெனியில் பணி ஆற்றும் பெண்களிடம் எல்லை மீறி நெருங்க நினைக்கிறான். இதனால் சில பெண்கள் அவனை வெறுக்கிறார்கள் வில்லனின் மனைவிக்கு வில்லனைப்பற்றிய பல விபரங்கள் அவர்கள் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்குப்பின் தெரிய வருகிறது
வில்ல்னால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் , பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் கம்பெனி பார்ட்டி ஒன்றி;ல் கலந்து கொண்ட வில்லனை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்கள்
இந்த கேசை துப்பு துலக்க நாயகன் வருகிறான்.நாயகன் வாழ்வில் இரு இழப்புகள் 1 அண்ணன் தற்கொலை செய்து இறந்து விட்டான் 2 காதலி பிரேக்கப் சொல்லி பிரிந்து விட்டாள் . எப்போப்பாரு வேலை வேலை என பணியில் கன்செண்ட்ரேஷன் ஆக இருக்கிறாய் என்னைக்கண்டு கொள்ளவில்லை என்பது அவள் குற்றச்சாட்டு
வில்லனின் கமெப்னியில் நாயகியின் ஒரு ஸ்டாஃப். இப்போது நாயகனின் சந்தேக வளையத்தில் 1 மினிஸ்ட்ர 2 வில்லி 3 வில்லனின் மனைவி 4 நாயகி ( வில்லனால் பாதிக்கப்பட்டவர் ) 5 மினிஸ்ட்ரின் டிரைவர்
இன்வெஸ்டிகேசன் நடக்கிறது . யார் கொலையாளி என துப்பு துலக்கும்போது அதிர்ச்சிக்ரமாக மினிஸ்டரின் டிரைவர் டெட்பாடி கம்பெனியில் கிடைக்கிறது . இந்த இரண்டு கேஸ்களின் நிலை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக ஆதி சாய் குமார் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் பல இடங்களில் சுமார் ஆக்டிங் என நடித்திருக்கிறார். இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் டைப் படத்துக்கு நாயகனின் முன்னாள் காதல் , பிரேக்கப் இதெல்லாம் கதைக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள்
வில்லன் ஆக தாரக் பொன்னப்பா மிடுக்கான நடிப்பு , ஓப்பனிங் சீனில் டிவி க்கு பேட்டி கொடுக்கும் கம்பீரம் ஆக்ட்டும் , ஃபிளாஸ்பேக் காட்சியில் மினிஸ்டர் இடம் பம்முவது ஆகட்டும் குள்ளநரித்தனமான உடல் மொழி அருமை
நாயகி ஆக மிஷா நாரங் அதிக வாய்பில்லை . டூயட் , சில காட்சிகள் மட்டும், வந்தவ்ரை ஓக்கே ரகம்
\
வில்லி ஆக நந்தினி ராய் . குடி போதையி வில்லன் தன்னை திட்டியது கண்டு பொங்குவது அருமை
மினிஸ்டர் ஆக மதுசூதன் ராவ் ஆர்ப்பாட்டமான நடிப்பு , இவர் தான் கொலையாளியாக இருப்பார் என காட்சிகளை நகர்த்தியவிதமும் பிறகு ட்விஸ்ட் வைத்ததும் சிறப்பு
2 மணி நேரம் 10 நிமிடம் ஓடும் விதத்தில் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் . இதில் தேவையற்ற நாயகன் நாயகி காதல் காட்சிகள் , ஓப்பனிங் ஃபைட் சீன் , கதைக்கு சம்பந்தம் இல்லாத மினிஸ்டர் மகளைக்காப்பாற்றும் ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாவற்றையும் கட் பண்ணினால் 40 நிமிடங்கள் மிச்சம் ஆகும் . ஒன்றரை மணி நேரபடமாக கிரிஸ்ப் ஆக கட் பண்ணி இருக்கலாம்
திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சிவசங்கா தேவ். விறுவிறுப்பாகக்காட்சிகள் நகர்கின்றன. அமைதிப்படை சாயல் ,மட்டும் ஃபிளாஸ்பேக் காட்சியில் வருவதை தவிர்த்து இருக்கலாம்
சபாஷ் டைரக்டர்
1 மந்திரி மகள் கிட்நாப் கேசில் சிசிடி வி ஃபுட்டெஜ் ஃபேக் என கண்டுபிடிக்கும் காட்சி . மாலை நான்கு மணி மதியம் 2 மணிக்கு மனித நிழல் எப்படி தரையில் விழும்,? கோணம் மாறி இருக்கு என்பதை அறிய வைக்கும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாறத்தான் தெரியுமே தவிர ஏமாற்றத்தெரியாது
2 இந்தியப்பொருலாதாரம் முன்னேற ஏழை , நடுத்தர மக்களின் பங்களிப்புதான் முக்கியமானது
3 உங்க கம்பெனி செயல்பாடுகள் 35% மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குனு சொல்றாங்களே?
பாசிட்டிவ் சைடை பாருங்க . 65% மக்கள் திருப்தி அடைஞ்சிருக்காங்க
4 சிபிஐ அப்டின்னா தெரியும் என் ஆர் ஐ அப்டினா தெரியும், அதென்ன சிஎஸ் ஐ ?
க்ரைம் சீன் இன்வெஸ்டிகேட்டர்.
5 அவரு ஃபோனை ட்ராக் பண்ற்து இல்லீகல் சார்
‘
நீயே ஒரு இல்லீகல் , நீ லீகல் பற்றி பேசறே?
6 இந்த உலகத்துல க்ரைம் ந்டக்க நாலே நாலு காரணங்கள் தான் 1 பணம் 2 பெண் 3 பதவி , அதிகாரம் 4 பழிக்குப்பழி
7 கிரிமினல் மனதில் இருந்து சீன் ஆஃப் க்ரைம் பார்க்கும்போதுதான் கேசை ஈசியா சால்வ் பண்ண முடியும்
8 ஒரு பொண்ணு அவளோட் அம்மா, அப்பா வுக்கு ச்மமா அவளோட வாழ்க்கைத்துணைக்கு முக்கியத்துவம் தருவா, ஆனா அதே முக்கியத்துவத்தை அவனும் அவளுக்கு தரனும், இல்லைன்னா அவளுக்கு சமாதானம் ஆகாது
9 பிராப்பர்ட்டி இல்லாத மக்கள் நிறைய பேர் இருக்காங்க, ஆனா பேராசை இல்லாத மக்கள் யாருமே இல்லை
10 மக்களிடம் இருந்து நமக்கு ப்ணம் வரனும்னா நாம முதல்ல மக்களுக்கு ப்ணம் தரனும், சின்ன மீன் பெரிய மீன் ஃபார்முலா
11 ஏழை மக்களின் பசியைபோக்கினாலே நம்மை தெய்வம் மாதிரி கொண்டாடுவாங்க , அவங்க மொத்த குடும்பத்தையும் காப்பாத்துனா நமக்குக்கோயிலே கட்டுவாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் \
1 நாயகனோட ஒர்க் ஸ்மெக்ளர் / கிட்நாப்பர் லொக்கேஷன் கண்டுபிடிக்கறதோட முடியுது . குற்றவாளியை போலீஸ் பார்த்துக்கும் . இவரு அந்த ஆள் கூட ஃபைட் எல்லாம் போட்டுட்டு இருக்காரு
2 நாயகன், வில்லன் எல்லாரும் மனுசங்கதான்/ எல்லாருக்கும் மண்டை ஓடு ஒண்ணுதான், ஆனா நாயகன் வில்லன் மண்டைல தன் மண்டையால் அடிக்கும்போது வில்லனுக்கு மட்டும் ரத்தம் வ்ருது
3 கொலை செய்யப்பட்ட ஃபைனான்ஸ் கம்பெனி ஓனரின் பார்ட்னர் த்ரும் ஸ்டேட்மெண்ட்டில் 15 வருடங்களாக நாங்கள் பிஸ்னெஸ் பார்ட்னர்ஸ் என்கிறார். அவரது மனைவி எங்களுக்கு மேரேஜ் ஆகி அஞ்சு வ்ருசம்தான் ஆகுது , ஆனா பிஸ்னெஸ் ல அவங்க 12 வருசமா பார்ட்னர் என்கிறார். க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்பு இந்த கம்பெனி ஆரம்பிச்சு 10 வருசம் ஆச்சு என் ரிப்போர்ட் பண்றார் போலீஸ் ஆஃபீச்ர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ர்சிகர்கள் பார்க்கலாம், படத்தில் கதைக்கு சம்ப்ந்தம் இல்லாமல் வரும் 2 ஃபைட் 1 டூயட் சகிச்சுக்கனும் ரேட்டிங் 2. 5 / 5