Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Thursday, November 17, 2011

பஸ், பால், மின் கட்டண உயர்வு - ஜெ அறிவிப்பு # காமெடி கடுப்பு கும்மி

  தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். 

இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.



1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை

---------------------------------------

2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் .opp

----------------------------------

3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?

-------------------------------------

4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......

-----------------------------

5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்

------------------------------------------

6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்

------------------------------------

7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?

2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி

-------------------------------------------

8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?

தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த

-----------------------------------------

9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்

------------------------------------------

10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க

------------------------------------

11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த  நடுத்தர மக்களை கை விடாதே

------------------------------

12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா

-----------------------------

13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்

----------------------------------

14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்

-----------------------------------

15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?

---------------------------------------

16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு

---------------------------------------

17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்

-----------------------------------

18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????

--------------------------------

19. அமாவாசைன்னா  பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?

---------------------------------

20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்‌ஷன் 365

----------------------------------

21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி

-----------------------------------------

22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?

பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?

-------------------------------------------------

23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....

----------------------------------------

24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?

--------------------------------------

25.அண்ணே.. டீ இன்னும் வர்லை.. 

டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு

-----------------------------------------------

27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

-----------------------------------------

Saturday, June 11, 2011

தமிழனின் டாப் ஃபைவ் (5) தண்டச்செலவுகள்

http://piratheepa.files.wordpress.com/2007/11/still31.jpgதமிழக மக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்!

ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா.

ப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள்.
 
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க முடியாதே! செலவு செய்யாமல் காசை மூடி மூடி வைத்தால் என்ன பிரயோஜனம் என இன்றைய இளைய தலை முறையினர் கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், நம்மவர்கள் செய்கிற செலவுக் கணக்கை பார்த்தால் நமக்கு மலைப்பே ஏற்படுகிறது. இன்றைய நிலையில் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அநாவசிய செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் சொல்வது கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில், தமிழக மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது, எதையெல்லாம் அநாவசிய செலவு என்று கருதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் களமிறங்கியது நமது நாணயம் டீம். கிடைத்த தகவல்கள் தமிழர்கள் செல்லும் பாதையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது.

வயது, சம்பளம் போன்ற வற்றின் அடிப்படையில் அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. விதவிதமான பதில்கள் வந்தன. சில பதில்கள் சொல்லும் விதத்தில் நகைச்சுவை யாகக்கூட இருந்தன  என்றாலும், அதன் பின்னால் இருந்த காரணங் கள் சீரியஸ் ரகம்.

திருமணம் செய்வது, குழந்தைக்கு டியூசன் கட்டணம் செலுத்துவது போன்றவற்றைக்கூட அநாவசிய செலவு என்று குறிப்பிட்டிருந்தனர் சிலர். இளைஞர்களில் பலர் சிகரெட் மற்றும் மதுபானத்தை குறிப்பிட்டாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வருத்தப்பட்டனர். பெண்களைப் பொறுத்தவரை சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஷாப்பிங் மால்களிலும் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதாகத் தெரிவித்தனர். 

இன்டர்நெட் பிரவுஸிங், பைக், கார்களில் நெடுந்தூரப் பயணம், டீ, காபி குடிப்பது, பார்ட்டிக்குப் போவது, அழகு சாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பது என தமிழக மக்களின் அநாவசிய செலவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகுக்காக அதிக அளவு செலவு செய்வதாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

டாப் 5 அநாவசிய செலவுப் பட்டியல்:

1. ஷாப்பிங்:

ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ஆண், பெண் இரண்டு தரப்பும். சம்பளம் வாங்கிய முதல் நாளே ஷாப்பிங் கிளம்பிவிடுவோம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக வரும் போனஸ் மற்றும் இதர வருமானங்களை கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குகிறார்களாம். இது குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுதான் என்றாலும் ஆசைக்காக வாங்குவதாக ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் வாங்குவதை வீண் செலவாகக் கருதி முதலிடம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள்.


2. செல்போன்:

செல்போனுக்கான செலவை அடுத்ததாகச் சொல்லியிருக்கின்றனர். ரீசார்ஜ் செய்வதிலேயே பர்ஸில் முக்கால் வாசி பணம் காலியாகிவிடுகிறதாம். அதுவும் பத்து ரூபாய், ஐந்து ரூபாய்க்குக்கூட ரீசார்ஜ், டாப் அப் போன்ற வசதிகள் இருப்பதால் சில்லறை சில்லறையாகவே ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிடுகிறதாம். ரீசார்ஜ் தவிர, லேட்டஸ்ட் சினிமா பாடல்களை டவுன்லோட் செய்வது, அடிக்கடி காலர் டியூன் பாட்டுகளை மாற்றுவது, அடிக்கடி மொபைல் போனையே மாற்றுவது போன்றவற்றுக்கும் எக்கச்சக்கமாக செலவு செய்வதாக தெரிவித்தனர். செல்போன் செலவு விஷயத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடே பார்க்க முடியவில்லை என்பது முக்கியமான விஷயம்.

3. சினிமா:

அடிக்கடி சினிமா தியேட்டருக்கு செல்வதை முக்கியமான அநாவசியச் செலவாக சொல்லியிருக்கிறார்கள் ஆண்கள். தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படம் வந்தால் முதல்நாள் முதல் 'ஷோ’விற்கு அதிகப்படியான பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் பழக்கம் இன்னும் பலரிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பெண்கள் இந்த விஷயத்தில் பரவாயில்லை; புதுப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பதில் அவர்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். எப்படியும் கொஞ்சநாளில் இதே திரைப் படத்தை டி.வி.யிலோ அல்லது சிடி வாங்கியோ பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள்.


4. ஓட்டல்:

ஆண், பெண் என பேதமில்லாமல் இருவரின் அநாவசிய செலவு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது ஓட்டல். முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டவர்கள் இப்போது வாரத்தின் இறுதிநாளில் ஓட்டலுக்குப் போவது கட்டாயமான விஷயமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் சிறிய ஊர்களிலும் இந்தப் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களில் பீட்ஸா, சைனீஸ், ஃபாஸ்ட் புட் போன்ற உணவு விடுதிகளுக்குப்போவதால் செலவு றெக்கை கட்டிவிடுகிறது.


5. நொறுக்குத் தீனிகள்:

இந்த செலவுகளுக்கு இரண்டு தரப்பினருமே முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிக மாக இருக்கிறது. டீ, காபி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது செய்யும் சில்லறை செலவுகள் அநாவசியமாக இருப்பதாகச் சொல்லியுள்ளனர். பாக்கெட் மணியை காலி செய்வதில் டீ கடைகளின் பங்குதான் பிரதானம் என்கிறார்கள் ஆண்கள். பெண்கள் டீ கடைகளை குறிப்பிடவில்லை என்றாலும் நொறுக்குத் தீனிகளுக்கு அநாவசியமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள்.      

மக்களின் மனப்போக்கு இப்படி இருக்க, பொருளாதார அறிஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய சிலரிடம் கேட்டோம்.. கோவை பாரதியார் பல்கலைக் கழக மேலாண்மை தொழில் முனைவோர் துறையக இயக்குநர் வேங்கடபதியிடம் பேசினோம்.


''நமக்கு எது தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதும், செலவுகளில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பல அநாவசிய செலவுகளைத் தவிர்க்க உதவும். எந்த வேலையையும் சரியான நேரத்தில்செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். மின்சாரக் கட்டணம், கல்லூரி, பள்ளிக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்திவிட்டால் அபராதத் தொகை போன்ற அநாவசிய செலவுகள் ஏற்படாது.


திட்டமிடலும், அதனை உரிய நேரத்தில் செயல்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதும் நம்மை அறியாமல் செய்யப்படும் செலவுகளைக் குறைப்பதும், கணிசமான தொகை நம் கையில் நிற்க உதவும். உதாரணமாக, ஊருக்குச் செல்லவேண்டும் எனில் முன்பே டிக்கெட் புக் செய்துவிட்டால் அந்த செலவு மட்டும்தான் ஆகும்.

கடைசி நேரத்தில் அவசரமாக டிராவல்ஸ் மற்றும் தத்கல் முறைகளில் டிக்கெட் எடுத்துப் போவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். இதுவும்கூட அநாவசிய செலவுதான். அவசர காலங்களில் இது போன்று செய்யலாமே தவிர மற்ற நேரங்களில் திட்ட மிடலே நமக்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

பிராண்டட் பொருட்களை வாங்கும்போது கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு பொருளையும் ஆசைக்காக வாங்காமல் அவசியத்திற்காக வாங்கினாலே பல ஆயிரங்கள் மிச்சப்படும். ஒழுக்கமான வளர்ப்பு முறையே இந்த அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த சிறந்த வழி'' என்றார்.  


சென்னை ஐ.ஐ.டி.-யில் எம்.பி.ஏ. பேராசிரியராக இருக்கும் தேன்மொழி, ''அளவுக்கு அதிகமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுப்பது, அதிகப்படி யான உணவுப் பொருட்களை வாங்குவது, அதிகளவில் டிரஸ் எடுப்பது மற்றும் வெளியில் சென்று உணவு உண்பது இவைதான் அநாவசிய செலவு களாக நான் சொல்வேன். புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கிவிடுவதுகூட அநாவசிய மான செலவுதான். அந்தப் பொருள் நமக்கு தேவையா என்றுகூட நாம் பார்ப்பது கிடையாது. மற்றவர்கள் நம்மை கண்டு ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பல பொருட்களை வாங்கிக் குவிக் கிறோம். இதெல்லாம் அநாவசியச் செலவுகள்தான்!'' என்றார்.    


பல நெருக்கடிகளையும் சமாளித்து ஈட்டப்படும் வருமானத்தை ஏன் அநாவசியமாக செலவு செய்ய வேண்டும் என்று ஒருசாராரும், வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமெனில் சில செலவுகளை செய்வதில் தப்பே இல்லை என்று இன்னொரு சாராரும் கூறுவது தவறில்லை தான். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் சேமிக்க வேண்டும்; அதே நேரத்தில் சந்தோஷமான ஒரு வாழ்க்கை யையும் வாழவேண்டும் என்பது நம்மக்களின் விருப்பமாக இருக்கிறது. எல்லை மீறாத செலவுகளும், பாதுகாப்பான சேமிப்புமே அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதைப் புரிந்து செயல்பட்டால் எந்த செலவும் அநாவசிய செலவில்லை
 
நன்றி - நாணயம் விகடன்

டிஸ்கி - சேமிப்பு பற்றிய கட்டுரையில் எதற்கு ஃபிகரோட ஃபோட்டோ? என கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு, என் பார்வையில் காதலிக்கு தமிழன் செய்யும் தண்டச்செலவுதான் அதிகம்,எனவே காதலிக்கு செய்யும் தண்டச்செலவுகளை கட் பண்ணுங்கள்,முடியலைன்னா காதலியையே கட் பண்ணிடுங்க.-இப்படிக்கு தனக்கு காதலி இல்லை எனில் வேற யாருக்கும் காதலியே இருக்கக்கூடாது என நினைக்கும் மறத்தமிழன் ஹி ஹி

Thursday, May 19, 2011

ஜெ இனி செய்யவேண்டும் ?25 நிபுணர்களின் கருத்து. விகடன் கட்டுரை

முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு...

'ஒன்றே செய்... நன்றே செய்... அதுவும் இன்றே செய்’ என்பது முன்னோர் வாக்கு!

மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த  மதிப்புக்குரியவர்கள்’  வழிகாட்டுகிறார்கள்!

1. விவசாயம்

'காவிரி’ எஸ்.ரங்கநாதன் 


''விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!''

2. விலைவாசி

வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர். 


''ஊக பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கென, என்.எஸ்.சி. போஸ் சாலையில் செயல்படும் ஏஜென்ஸிகளை இழுத்து மூட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அங்கே, சேமிப்புக் கிடங்கு வசதி உருவாக்கப்பட வேண்டும். ஆண்டின் மழை அளவு, விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டித் திட்டமிட்டு, அதற்கேற்ப சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்!''

3. கல்வித் துறை - ச.மாடசாமி, கல்வியாளர். 

''அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இல்லை. நம்முடைய கிராமப்புறப் பள்ளிகளிலோ, ஆசிரியர் எடுத்துக் காட்டி பாடம் நடத்த ஒரு காந்தத் துண்டுகூடக் கிடையாது. முதலாவதாக, எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், போதிய அளவு கல்வி உபகரணங்கள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். அடுத்து, துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி, ஆசிரியர் நியமனம் வரை அரசியல் தலையீட்டைத் தடுத்து, தகுதியானவர்கள் பதவிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும். இன்னமும் தாய் மொழியில் குழந்தைகள் எளிமையாகப் படிக்கத்தக்க பாடப் புத்தகங்களைக்கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. சமச்சீர் கல்வியோ மேலும் கடினமான பாடத்திட்டங்களைத் திணிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ப - குழந்தைகளை மையப்படுத்தியதாக பயிற்றுவிப்பை மாற்ற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தொடங்கி, வகுப்பறைகள் வரை இந்த மாற்றம் வேண்டும்!''

4. தலித் முன்னேற்றம் - அழகிய பெரியவன், எழுத்தாளர். 

''இடஒதுக்கீடு அடிப்படையில் தலித் மக்களுக்கென ஒதுக்கிய பணியிடங்கள், தகுதியானவர்கள் இல்லை என்ற காரணத்தினால் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவுப் பணி இடங்களை நிரப்ப வேண்டும். உயர் சாதியினரிடத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு என தலித் மக்களுக்கு அரசுப் பணியை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத் துறை அலுவலகங்களில், இளைஞர்களுக்காக வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!''

5. விளையாட்டு - தன்ராஜ்பிள்ளை, ஹாக்கி வீரர். 

''சர்வதேச விளையாட்டுகளை சென்னையில் நடத்துவதற்கு ஏதுவாக, சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில்,  விளையாட்டுத் திடல்கள் அமைக்க வேண்டும். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று பல்வேறு விளையாட்டுகளுக்கு, மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான நகரங்களிலும் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். நான், முஹம்மது ரியாஸ், பாஸ்கரன் போன்றோர் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்!''  

6. மின்சாரம் - சாவித்ரி கண்ணன், பத்திரிகையாளர். 

''ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். இந்தத் துறையில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை புனல் மின்சார உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காற்றாலை மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, துறையின் ஊழல்களையும் களைய வேண்டும்!''

7. சுற்றுச்சூழல் - 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

''தமிழகத்தில் புதிய அணு உலைகளை இனிமேலும் அமைக்கக் கூடாது. மரபணு மாற்றுப் பயிர்கள், எண்டோசல்ஃபான் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குண்டு பல்புகளை நீக்கிவிட்டு எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்த வேண்டும். கேரளாவில் விவசாய நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதுபோல, தமிழகத்திலும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளிகளில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்!''

8. திரைப்படத் துறை - அமீர், இயக்குநர். 

''ஆளும் கட்சியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் சங்க ஆட்களை அரசு நெருங்கவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே, எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம். 'ஃபெப்ஸி’, இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றவற்றில், அரசியல் சார்பு இல்லாத நபர்களே நிர்வாகிகளாகும் சூழலை உருவாக்க வேண்டும். திருட்டு வி.சி.டி. விற்பனையையும் அதற்குத் துணை போகும் காவல் துறையினரையும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!''

9. தொழிலாளர் நலன் - டி.கே. ரங்கராஜன்,  தொழிற்சங்கவாதி. 

''விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சேவைப் பிரிவுத் தொழிலாளர்கள் போன்றோருக்கு, தமிழகத்தில் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல். இவர்களுக்கான நலத் திட்டங்களும் சரிவரச் செயல்படுத்தப்படுவது இல்லை. அவற்றை முறைப்படுத்த வேண்டும். பணியிட விபத்துகள், பணிச்சூழல் உண்டாக்கும் நோய்களை எதிர்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்!''

10. சிறுபான்மையினர் நலன் - பேராசிரியர் அ.மார்க்ஸ் 

''சச்சார் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்தபோது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்கவில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

11. அண்டை மாநில உறவுகள் -  ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். 

''சட்டம்-ஒழுங்கு, எல்லை, நதி நீர் ஆகிய மூன்று பிரச்னைகளுக்காகத்தான் நாம் அண்டை மாநிலங்களைப் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இவற்றை வெற்றிகரமாகக் கையாள ஒரே யுக்தி... அவற்றை அரசியல் ஆக்காமல் இருப்பதும்  பரபரப்பு ஆக்காமல் இருப்பதும்தான். சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்து மாநிலக் கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் இந்தக் குழுக்கள் அதிகாரிகள் மட்டத்தில் அமைக்கப்படுவது நன்மை பயக்கும். அடிக்கடி இந்தக் குழுக்கள் கூடுவதும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்கூட்டித் திட்டமிடுவதும் அவசியம்!''

12. சட்டம் - அருள்மொழி, வழக்கறிஞர். 

''தமிழகச் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகளின் நிலையையும்  நலனையும் கருத்தில்கொண்டு, தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம் குற்றவாளிகள் இருக்கும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் மேம்படுத்த வேண்டும். குடும்ப நீதிமன்றங்களைப் பொறுத்தவரை வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய சமரசப் பேச்சுவார்த்தைக்கு, நிம்மதியாக மனம்விட்டுப் பேசக்கூடிய அளவுக்குக் கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!''

13. தமிழ் வளர்ச்சி -  தமிழருவி மணியன். 

''ஆங்கிலம் படித்தால் வாழ்வு சிறக்கும் என்கிற சூழல்தான், நம்முடைய இளைஞர்களை அந்த மொழியை நாடச் செய்கிறது. தமிழ் படித்தாலும் நாம் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கையை தமிழக மக்களிடம்  உருவாக்க, அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பு, நீதி, கல்வி ஆகிய மூன்று துறைகளில் என்று தமிழ் மேலோங்குகிறதோ, அன்றுதான் தமிழ் மொழி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். ஆகையால், தமிழை நிர்வாக மொழியாக மாற்ற வேண்டும். அப்போதுதான், தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!''

14. பதிப்புத் துறை - 'பாரதி புத்தகாலயம்’ நாகராஜன். 

''அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12,574 நூலகங்கள், இன்னமும் கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றைத் திறக்க, புதிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நூலகங்களுக்கு நூல்களை அரசு பெறவில்லை. இந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, நூல்களை நூலகங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது 'எம்.எஸ்.வேர்’டில் மட்டுமே 'யூனிகோட்’ பயன்படுத்த முடிகிறது. இதனை 'பேஜ் மேக்கர்’, 'போட்டோ ஷாப்’, 'கோரல் டிரா’ போன்ற மென்பொருட்களிலும் பயன்படுத்தும் சாத்தியங்களை அதிகரிக்க வேண்டும்!''

15. போக்குவரத்து - 'டிராஃபிக்’ ராமசாமி. 

''நகர்ப் பகுதியில்கூட ஒழுங்கான சாலைகள் இல்லை. பிறகு கிராமப்புறங்கள் எப்படி இருக்கும்? முறையான உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்துகொடுத்து, பின்னர் தரமான வாகனங்களை ஓட்ட  வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக, எந்த அரசாங்கமும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதே இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிப் பிரச்னைகள் இருக்கின்றன. அதை, அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சரிசெய்ய வேண்டும்!''

16. தொழில் துறை - முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) 

''தொழில் துறையின் அடிப்படைக் கட்டமைப்பான மின் விநியோகத்தைச்  சீராக்க வேண்டும். எதிர்கால மின் தேவைக்கும் இப்போதே திட்டமிட வேண்டும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் தேவைக்குப் பொருட்கள் வாங்கும்போது, சிறுதொழில் - குறுந்தொழில் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றின் மீட்சிக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். சேவைத் துறை தனித் துறையாக்கப்பட்டு, கவனம் செலுத்தப்பட வேண்டும்!''

17. நீர் ஆதாரம் - பேராசிரியர் ஜனகராஜன். 

''நீர் நிலைகள் பாதுகாப்புக்கென புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். மணல் கொள்ளை, நதி நீர் மாசுபடுவதில் தொடங்கி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வரை அனைத்தையும் தடுக்க வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க, அந்தச் சட்டம் அடித்தளமாக இருக்க வேண்டும். நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்க, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், நிலத்தடி நீரை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம், பயன்படுத்தலாம் என்கிற நிலையை மாற்றவும், தீவிர நடவடிக்கைகள் அவசியம்!''

18. பெண்கள் / திருநங்கைகள் நலம் - 'லிவிங் ஸ்மைல்’ வித்யா. 

''குடும்ப வன்முறைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு நம் பெண்களுக்கு அவ்வளவாக இல்லை. அரசு அதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சத இடஒதுக்கீட்டைக் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தைக் கண் துடைப்பு அமைப்பாக ஆக்காமல், செயல்படும் வாரியமாக மாற்ற வேண்டும். திருநங்கைகள் சுய சார்போடு வாழ்வதற்கு, படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினராலும் சமூக விரோதிகளாலும் திருநங்கைகளுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!''

19. வேலைவாய்ப்பு

வேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 


''தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். அரசுப் பணிகளில் 1.5 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நிரப்ப வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் தோறும் தனித் தனியாக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்!''

20.சாலை அடிப்படை வசதிகள் - ஆண்டனி, இயக்குநர், 'நீயா நானா’. 

''சிங்கப்பூரில் நுழைந்தவுடனேயே அதன் கச்சிதமான பிரமாண்டம் நம் கண்ணைக் கவரும். அதுபோல சென்னை நகரத்தையும் மாற்ற வேண்டும். அதற்கேற்ற உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களையும் மற்ற சிறுநகரங்களையும் ஒப்பிட்டால், பெரிய வேறுபாடு இருக்கிறது. இது களையப்பட வேண்டும்!''

21. மனித உரிமைகள் - 'எவிடென்ஸ்’ கதிர். 

''காவல், நீதி, நிர்வாகம், மருத்துவம்... இந்த நான்கு துறைகளில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகள் அங்கேயே விசாரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டுவிடுகின்றன. தமிழகத்தில், குற்றவியல் நீதி ஆணையம் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அதைத் தன்னிச்சையாக, சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் எந்த அதிகாரமும் அற்ற அமைப்பாக, செல்லாக் காசாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். தேசியக் காவல் ஆணையம், மனித உரிமைகள் சார்ந்து மாநிலக் காவல் துறைகளுக்கு அனுப்பிய பல பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை... அவை அமலாக்கப்பட வேண்டும்!''

22. சமூகச் சீர்திருத்தம் - பேராசிரியை சரஸ்வதி. 

''இரட்டை டம்ளர் முறைபோல  தீண்டாமைக் கொடுமை எந்த வடிவில் இருந்தாலும், ஒழிக்கப்பட வேண்டும். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பாங்கு இருக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மகளிர் ஆணையத்தில் கட்சி சார்பு உள்ளவர்களைப் பதவியில் அமர்த்தாமல், இயல்பாகவே பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் பெண்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்களையும் நியமிக்க வேண்டும். மலைவாழ் மக்கள், நாடோடிகள் போன்றோரின் குழந்தைகள் கல்வி கற்க உண்டு-உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்!''

23. இளைஞர் நலன் - சங்கர், 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’. 

''அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இளம் ஆசிரியர்களுக்கு 'Incentive Based Programs’ மூலம் அவர்களின் பணித் திறனை அதிகப்படுத்த அரசு உதவ வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களை வேலைவாய்ப்புக்காகத் தேடி வரும் நிலையை மாற்ற, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நிறைய  வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் வேலை பார்க்க தமிழ், இந்தியாவில் வேலை பார்க்க இந்தி, அயல்நாட்டில் வேலை பார்க்க ஆங்கிலம் என்கிற மும்மொழிக் கொள்கை இருந்தால், இன்னும் சிறப்பு!''

24.சுகாதாரம் - மருத்துவர் புகழேந்தி. 

''தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்குத் தரமான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பதையும் எல்லா மருந்துகளும் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து பணியாற்றுவதைத் தடை செய்ய வேண்டும். மருந்துகள் அநியாய விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில், பெரும் பகுதியை சிறப்புக்கூறு நோய்களுக்கு செலவழிப்பதற்குப் பதிலாக, அடிப்படை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்!''

25.கிராமப்புற மேம்பாடு - குத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ, சமூக சேவகர். 

''கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயத் துறை மறுமலர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாத குடிநீர், வீடுகள்தோறும் சுகாதாரமான கழிப்பறைகள், குளியல் அறைகள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்ட 'நமது கிராமம்’ திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டி, செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரமும் நிதியும் அளிக்கப்பட வேண்டும்!''

Friday, March 25, 2011

ஆளும் தி மு க அதிர்ச்சி.... விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள்...காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSeQ3uz3yUFOxjjYS_ayOZ0nlfAEGoltEhBz9h9x3bA-PE2qQICGa30jCu7Ovsi5E73sKgx7FDm6McpWP1z9F1-BfKqnwvv7-bJwJu3eM_g6wmoAjwOBPYRYKv3oL8cTg6jx1qhuqoZYww/s1600/parisutham.JPG 

கூட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி,  பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?!  (வேறென்ன.. ?  குழப்பம்தான்...)


 தமிழகத் தேர்தல் களம் எந்த அலையும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோலத்தான் இப்போது தளும்பிக்கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன

.( எல்லா சஞ்சிகைகளும் அப்படித்தான் சொல்லிக்கறாங்க..)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு என்று தனித் தனியாக சர்வேக்களை வெளியிட்டோம். இந்தத் தேர்தல் களத்தின் காலம் மிகக் குறுகிவிட்டதால், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசையும் அறிய பொது சர்வே எடுக்கப்பட்டது!

( எப்படியோ உங்களுக்கு வேலை மிச்சம்)


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க கழற்றிவிடப்பட்ட பரபரப்பான சூழல் ஒரு பக்கம்... இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று வீதிக்கு வீதி பேசப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை மறுபக்கம்... தேர்தல் சூடு பரவிய சூழலில் மக்களிடையே நம் படை ஊடுருவியது 

.(ஊடுருவுனது நீங்கதான்னு தெரியுமா? மாறு வேஷத்துல ஊடுருவுனீங்களா?)

மார்ச் 19, 20 தேதிகளில் விகடன் நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100 பேர்கொண்ட குழு, மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் எனத் தமிழகம் முழுக்கப் புகுந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, சர்வே கேள்வித் தாளை நீட்டியது விகடன் படை! 

(அய்யய்யோ கொஸ்டீன் பேப்பரா..?எஸ்கேப்னு யாரும் ஓடலையா?)
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற காட்சிகள் இன்னமும் அரங் கேறாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மக்களின் மனநிலை இது.
(செல்லாது செல்லாது)


தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!
(மனம் விரும்புதே யாரை யாரை.. அறியாமலே.. சசம்ஜு சக்கும் சஜம்சு ஜக்கும்... அய்யய்யோ மறந்தேனடா... யார் கிட்ட நான் பணம் வாங்குனேண்டா...வேட்பாளர் பேரே தெரியாதடா.....#நேருக்கு நேர்)


''நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது அ.தி.மு.க. கூட்டணி. காங்கிரஸ் தந்த குடைச்சலில் தி.மு.க-தான் குட்டையைக் குழப்பிட்டு இருந்தாங்கன்னு பார்த்தா, 'நாங்க மட்டும் இளைச்சவங்களா?’னு அதிரடி பண்ணி, ஜெயலலிதா நல்லா காமெடி பண்ணினார். அவர் ஜெயிக்கக் கிடைச்ச நல்ல வாய்ப்பை அவரே குறைச் சுக்கிட்டார்'' என்ற குரல்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. 

  (போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்து இருக்கிறது. ''தலைநகரைவிட்டு தலை தப்பிச்சாப் போதும்னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுறார். அவருக்கே எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு. அதைப் பயன் படுத்திக்காம, வெற்றி பெறுவோம்கிற மமதையில் ஜெயலலிதா தப்பான முடிவு களை எடுத்துட்டார். அவரை நினைச்சுப் பரிதாபப்படக்கூட முடியலை'' என்றார் ஸ்ரீரங்கத்துக்காரர்  ஒருவர். 

( தோல்வி நிலையென நினைத்தால் ....தோழி நிலையை நினைக்கலாமா?மானத்தை இழந்தோம்.. வெட்கத்தை இழந்தோம்.. ரோஷத்தை இழக்கலாமா? #ஊமை விழிகள்)


ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தத் தேர்தலில் 'கொஞ்சமாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறது சர்வே. 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டுப் போடுவேன்’ என்று சுமார் 46 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதே நேரம், சுமார் 26 சதவிகி தத்தினர் 'இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னதும் முக்கிய விஷயமாகும்.

(என்ன என்ன நினைக்குது ஏதோதோ நினைக்குது. வண்ன வண்ன ஊழல்கள் கோடி ரூபா...)

வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பலர், 'இது வைகோவுக்குச் இழைக்கப்பட்ட அநீதி’ என்றே கருத்துச் சொல்கிறார்கள்.
( நீ இல்லை என்றால் கூட்டணீயில் இல்லை ஒரு கலவரமே.. ஏ  ஏ ஹே..உன்னோடு வந்தாலும், உன்னோடு நின்றாலும் தோல்வி தோல்வி....)


''ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

( ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?)


உசிலம்பட்டியில், 'ஜெயலலிதா வந்தா, சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும். அதிகாரிங்க பயப்படுவாங்க. நிர்வாகம் சரியா நடக்கும். அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்? கலைஞர் வந்தா, டி.வி, மிக்ஸிலாம் கிடைக்கும். அதனால கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்’ என்றார் ஒரு பெரியம்மா.


(மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே இது மாறுவதெப்போ..தேறுவதெப்போ நம்ம கவலே..)

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியைவிட ஜெயலலிதாவே கூடுதல் சதவிகிதத்தைப் பெற்று இருப்பது வியப்பு. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியைவிட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது, ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது

. ( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)


தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2,081 வாக்காளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் கட்டங்களில் இடம்பெற்றுஉள்ளன