Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Monday, March 09, 2015

சரவணப் பொய்கை - இயக்குநர் வி சேகரின் மகன் கார்ல் மார்க்ஸ் சிறப்புப் பேட்டி

  • ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
    ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
  • ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
    ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
  • அப்பாவுடன்...
    அப்பாவுடன்...
நடுத்தர மக்களின் வாழ்வியலை நகைச்சுவை கலந்த யதார்த்தத்துடன் திரைப்படங்களாகத் தந்தவர் இயக்குநர் வி. சேகர். அவருடைய மகன் காரல் மார்க்ஸ், ‘சரவணப் பொய்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அப்பாவைப் போல இயக்குநர் ஆகாமல் நடிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்த காரணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இங்கே… இது அவரது முதல் பேட்டி.
கதாநாயகர்களைக் கடவுள்போல வழிபடுவதற்கு எதிராக ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தை இயக்கியவர் உங்கள் அப்பா. அவரது இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறீர்களே?
அடிப்படையில் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். எனக்குத் தெரிந்தவரை அவர் நேருக்கு மாறாக நடந்ததில்லை. நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு தரும் கதைகளை மட்டுமே அவர் படமாக்கியிருக்கிறார். வரிசையாக ஆறு 100 நாள் படங்களைக் கொடுத்தவர். நீங்களும் ஹீரோதான் படத்தில் ‘மக்களே கதாநாயகர்கள், அவர்களால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்’ என்று அழுத்தமாகச் சொன்னவர்.
சாமான்ய மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களே நிஜமான ஹீரோயிசம் கொண்டவை என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர். இன்று தனுஷும் விஜய்சேதுபதியும், சிம்ஹாவும் வென்றிருப்பது மக்களின் முகங்களாகத்தான். ஹீரோயிசத்தால் அல்ல. நானும் இந்த எளிய பாதையில் வர வேண்டும் என்றே யதார்த்த நாயகனாக என்னை அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருப்பதையே நானும் விரும்புகிறேன்.
சரவணப் பொய்கை என்ற தலைப்பைப் பார்க்கும்போது இதுவொரு பக்திப் படம்போல் தெரிகிறதே?
இது முழுக்கக் முழுக்க காதல் படம். பழனி அருகிலுள்ள சரவணப் பொய்கைக் கோயில் ஊரைச் சுற்றிக் கதை நடைபெறுவதால், இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.
உங்கள் அப்பா குடும்பப் பாணியிலிருந்து எதற்காகக் காதல் கதைக்குத் தாவியுள்ளார்?
அவரது கதை பாணியைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அவருடைய பெண் ரசிகர்களும் டிவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். அதனால் இன்றைய இளம் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் நல்ல காதல் கதையை இயக்கியுள்ளார். அதேநேரத்தில் அவரது யதார்த்தமான நகைச்சுவையும் விறுவிறுப்பான திரைக்கதையும் சரவணப்பொய்கையில் இருக்கும். அவருக்கு இந்தப் படம் ஒரு புதிய ஸ்டைலாக இருக்கும்.
என்னமாதிரியான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறீர்கள்?
கணக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் ஒரு தொழிலாளியின் கதாபாத்திரம். என்னுடன் டிக்கெட் கிழிப்பவராக அண்ணன் கருணாஸ் நடித்திருக்கிறார். தியேட்டர் முதலாளியாக எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். அவருடைய ஒரே மகளாக அருந்ததி வருகிறார். அவருக்கு என் மீது காதல். வழக்கமான இளைஞர்களைப் போல் காதல் என்றவுடன் கட்டிப்பிடித்து விடாமல், நான் அவள் காதலை மறுக்கிறேன். காதல் வேறு வாழ்க்கை வேறு என்று அட்வைஸ் செய்கிறேன்.
இருந்தாலும் அந்தப் பெண் என்னை விடாமல் துரத்துகிறாள். நீ நிச்சயம் பெரிய ஆளாக வந்துவிடுவாய் என்று ஊக்கப்படுத்துகிறாள். நானோ என் தகுதியை உயர்த்திக் கொண்டபிறகு சொல்கிறேன் என்று பிடிகொடுக்காமல் நழுவுகிறேன். இதற்கிடையில் நவீனமயமாக்கப்பட்ட எங்கள் தியேட்டரைத் தொடங்கி வைக்கச் சென்னையிலிருந்து நடிகர் விவேக்கை நான் அழைத்து வருகிறேன்.
விழாவுக்கு வந்த அவருக்கு என் முதலாளியின் மகளைப் பிடித்துவிடுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். முதலாளியும் மகளிடம் கேட்காமல் ஓகே சொல்லி விடுகிறார். எங்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா என்பதுதான் கதை. நமக்குக் காதலிக்க கற்றுக்கொடுத்த திரையங்கம், ஒரு காதலால் உயர்ந்ததா இல்லையா என்பதும் உணர்ச்சிகரமாக இருக்கும்.
படப்பிடிப்பு அனுபவம் எப்படி?
முதல்படம் என்றாலும் இயக்குநர் அப்பாதானே என்று படப்பிடிப்புக்குக் கூலாகப் போய்விட்டேன். அண்ணன்கள் விவேக், எம். எஸ். பாஸ்கர், கருணாஸ் ஆகியோருடன் நடிக்கும்போது திணறிவிட்டேன். அப்பா காட்சியை விளக்கி ரிகர்சல் பார்க்கும்போது சாதாரணமாக இருந்துவிட்டு டேக் என்றவுடன் புலிபோல் சீறிவிட்டார்கள்.
நான் எலியாக மாட்டிக்கொண்டேன். பிறகு அவர்களே ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுத்து என்னோடு நடித்தார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னை ஒரு புதுமுகம் என்று சொல்ல மாட்டீர்கள். அதற்கு இந்த அண்ணன்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நடிக்க வரும்முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சென்னையில் பள்ளிப்படிப்பு முடிந்ததும், அப்பாவின் ஆசைக்கு இணங்க, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் இன்ஜினியரிங் படித்தேன். நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்தபோது கிராமத்து வாழ்க்கை முறையை முழுமையாக அறிந்து ஒரு மண்வாசனை இளைஞனாக வெளியே வந்தேன். அந்த அனுபவம் இப்போது கதாநாயகனாக நடிக்கும்போது கைகொடுத்தது.
பிறகு கோவையில் எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தயாரிப்பு நிறுவனமான திருவள்ளுவர் கலைக்கூடத்தில் தயாரிப்பு உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பிறகு நடிப்புத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் கூத்துப்பட்டரையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். சிவசங்கர் மாஸ்டரிடம் நடனம், விமலா. இராமநாராயனிடம் பரதநாட்டியம், ஜாக்குவார் தங்கத்திடம் சிலம்பம், ஃபயட்கார்த்தி என்ற மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
சினிமா குடும்பப் பின்னணி பலமா பலவீனமா?
என்னைப் போன்ற வாரிசுகளுக்கு உடனே கதாநாயகன் ஆகும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அது லக். ஆனால் அதைத் தக்கவைத்துக் கொள்ள, சினிமா பின்புலம் இல்லாதவர்களைவிட நாங்கள் அதிகம் போராட வேண்டும். அப்பா அம்மா சம்பாதித்த பெயரைக் காப்பற்ற வேண்டிய கட்டாயம் முதல் போராட்டம். அவர்கள் பெயரைத் தாண்டிப் பயணிக்க வேண்டியது இரண்டாவது போராட்டம்.
எனக்குக் காரல் மார்க்ஸ் என்று கம்யூனிஸ்ட் தலைவரின் பெயரை வைத்திருப்பது இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்வதற்குத்தான் என்று நினைக்கிறேன். நிச்சயம் உழைப்பால் உயர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு அனைவரின் வாழ்த்துகள் இருந்தால் போதும்.

நன்றி - த இந்து

Monday, August 13, 2012

டெசோவுக்குப்போட்டியாக ஜெ மாநாடா? கலைஞர் அதிர்ச்சி!!

கலைஞரின் டெசோ மாநாடு பிரம்மாண்டமான வெற்றின்னு சொன்னாரு.

. யார் சொன்னது?

 கலைஞரே தான் சொன்னாரு.. ( நன்றி - தளபதி வசனகர்த்தா)

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் நடத்திய டெசோ மாநாட்டை தோற்கடிக்கும் வகையில் சென்னையில்  வலைப்பதிவர்கள் மாநாடு நடக்க இருக்கு..( ஆனா வை கோ மாதிரி நடக்க எல்லாம் மாட்டாங்க )


இது குறித்து ஆல்ரெடி வலை உலகில் உள்ள முக்கிய முக்காத எல்லா பதிவர்களும் போஸ்ட் போட்டுட்டாங்க.. நான் மட்டும் போடாம விட்டா கொலை பண்ணிடுவாங்க.. அதனால என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டுக்கறேன்.. என்னை போடுமாறு மிரட்டிய அந்த 4 பேருக்கு நன்றி!

 இது ஒரு காக்டெயில் பதிவு.. கலக்கல் பதிவு.. அதாவது இதுவரை சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலர் போட்ட பதிவில் கொஞ்சம் கொஞ்சம் சுட்டு டிங்கர் பட்டி ஒட்டி போடப்படும் பதிவு.. ஹி ஹி ( நாம எந்தக்காலத்துல சொந்தமா பதிவு போட்டிருக்கோம்?)


மிழில் ப்ளாக் எழுதுவோரில் மிக அதிக ப்ளாகர்கள் இருப்பது தமிழகத் தலைநகரம் சென்னையில் தான் ! (300- க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னையில் உள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தெரிவிக்கிறார்). பதிவர்களை தவிர்த்து ஏராள பிரபலங்கள் (VIP's) உள்ள இடமும் கூட ! இத்தனை சிறப்பான ஊரில் இதுவரை பெரிய பதிவர் திருவிழா பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வண்ணம் மாபெரும் பதிவர் திருவிழா ஆகஸ்ட் 26- நடக்க உள்ளது.

இதோ விழாவிற்கான அழைப்பிதழ்




அழைப்பிதழை காணும் போதே சென்னை மட்டுமல்லாது கோயம்பத்தூர், மதுரை. ஈரோடு, திருவள்ளூர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு ஊரில் இருக்கும் பதிவர்களும், விழாவில் முக்கிய பணிகளை செய்ய உள்ளது தெளிவாகும். இது எந்த குறிப்பிட்ட அணியும் இல்லாது பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் விழா.

விழா அழைப்பிதழை நேற்று ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், தனி பதிவாக வெளியிட்டு தங்கள் ஒற்றுமையை காட்டினர்.
 
 
 

விழா குறித்தான சில கேள்விகளும் விளக்கங்களும் இதோ

சென்னை வாழ் பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?

விழாவிற்கு நீங்கள் உங்களின் பதிவர் நண்பர்களுடன் அவசியம் வருவதே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல் ! உங்கள் வருகையை ஈ மெயில் மூலம் உறுதிப்படுத்தினால் அது மிக உதவியாய் இருக்கும்.

மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். உங்களால் முடிந்தால் அவசியம் நீங்கள் வந்து இவற்றில் உங்கள் யோசனைகளை சொல்லலாம். நீங்களும் சில பொறுப்புகள் எடுத்து கொள்ளலாம்.

வெளியூர் பதிவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விழாவுக்கான தேதி முடிவான உடனே, பல்வேறு வெளியூர் பதிவர்களும் பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களின் பயண டிக்கெட்டை நீங்கள் உடனே புக் செய்யவும்.

உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! பல்வேறு பணிகளுக்கிடையில் விழாவை சிறப்புற நடத்த முயலும் நமது நண்பர்களுக்கு நீங்கள் வருகிற மகிழ்வான தகவலை விரைவில் சேர்ப்பியுங்கள் !

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மூத்த பதிவர்களுக்கு ...

தற்போது பதிவெழுதி வரும் அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பதிவர்களை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு விழாவில் உள்ளது.

உங்களுக்கு தெரிந்த அத்தகைய மூத்த பதிவர்களை எங்களுக்கு தெரிவியுங்கள். மூத்த பதிவர்கள் தாங்களாகவும் எங்களுக்கு எழுதலாம்

மூத்த பதிவர்கள் அவசியம் கலந்து கொண்டு எங்கள் அன்பை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

விழாவில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் செய்ய வேண்டியது என்ன? 

விழாவின் முக்கிய நிகழ்வாக நடக்கும் கவியரங்கில் பங்கெடுக்க விரும்பும் கவிஞர்கள் தங்கள் பெயரை விழா குழுவினருக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும். ஆகஸ்ட் 18-க்குள் கவியரங்கில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தால் மிக உதவியாய் இருக்கும். கவியரங்கில் பங்கெடுக்கும் கவிஞர்கள் முழுமையான பட்டியல் நண்பர்கள் வெளியிடுவர்.

விழாவில் சாப்பாடு உண்டா?

அனைவருக்கும் மதிய சாப்பாட்டிற்கும், விழா நடுவே ஸ்நாக்ஸ் மற்றும் தேநீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவர் நண்பர் ஒருவரின் சமையல் காட்டரிங் மூலமே இந்த ஏற்பாடுகள் நடப்பது கூடுதல் மகிழ்ச்சி

விழாவில் கலந்து கொள்ள கட்டணம் உண்டா?

ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாய் விழா தயார் ஆகிறது. எனவே பங்களிப்பு தர விரும்பும் சென்னை நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். 
 
 
 
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை 


விழா நடக்கும் மண்டபம் வருவது எப்படி?

இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.

நீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.

இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:

லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து  நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.

தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்

மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம்.

பங்கு பெறுதல் குறித்த உறுதிபடுத்தும் தகவல் யாரிடம் சொல்வது?

இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:

மதுமதி : [email protected]
பாலகணேஷ் [email protected]
மோகன் குமார் [email protected]
மெட்ராஸ்பவன் சிவகுமார்: [email protected]

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.

பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.

உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.

அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !




          சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழமைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாயிருக்கும்.

இதுவரை சந்திப்பிற்கு வருவதாய் இசைந்திருக்கும் பதிவர்கள்:



ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை

அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை  
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை

போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்)
சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 

புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை  


ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி

       இவர்கள் மட்டுமல்லாது துபாய்  வலைப்பதிவர்கள் சார்பாக மகேந்திரன்(வசந்த மண்டபம்)   அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து எழுதும் தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக சத்ரியன்(மனவிழி) வர்களும் வர இசைந்திருக்கிறார்கள்...
 
 
 
இனி வர ஓக்கே சொல்பவர்கள் பெயர் பிறகு அப்டேட் செய்யப்படும்
 
 
 நன்றி - மதுமதி, வீடு திரும்பல் மோகன் குமார்