Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Sunday, April 08, 2012

கோச்சடையான் பிரமோஷன் வீடியோவுக்கு இப்போ என்ன அவசரம்? ஐஸ்வர்யா தனுஷ் ஆவேசம்




'சுமைதாங்கியே சுமையானதே... எந்தன் நிம்மதி போனதே... மனம் வாடுதே...’ - 'அண்ணாமலையில் மனம் வெதும்பி ரஜினி பாடும் இந்தப் பாட்டுதான் தற்போது ரஜினியின் நிஜ மனநிலையும் என்கிறார்கள், ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், நம்பத்தான் முடியவில்லை. ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா அஸ்வின் இருவருக்கும் இடையில் கடும் பனிப்போராம்!
 காதல் மோதல், கடன் சிக்கல் என மகள்களைச் சுற்றிப் படர்ந்த சிக்கல் முடிச்சுக்களை லாகவமாக அவிழ்த்த ரஜினியால், தன்னை முதலீடாகவைத்து அவர்கள் சினிமாவில் நடத்தும் யுத்தத்தைத்தான் பொறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'அப்படி எல்லாம் இருக்காதுங்க... பெரிய இடத்துல சின்ன பிரச்னைன்னாலும் ஊதிப் பெருசாக்கக் கூடாது!’ என்று நாம் சமாதானம் சொன்னால், சில வருடங்களுக்கு முன் பிருந்தே தொடர் சங்கிலிச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்கள்!

''ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்த சமயம் ரஜினி 'சந்திரமுகிபடப்பிடிப்பில் இருந்தார். அப்போது ரஜினி குரு ஸ்தானத்தில்வைத்து மதிக்கும் அந்த சினிமாவுலகப் பிதாமகர் ரஜினியைச் சந்தித்தார். அப்போது அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, 'எதுக்கு இப்படி ஒரு ஸ்டார் ஆனோம்னு தினமும் நினைச்சு நினைச்சுக் கஷ்டப்படுறேன். பேசாம பழைய மாதிரி கண்டக்டரா இருந்தா, ரொம்ப நிம்மதியா சந்தோ ஷமா இருந்திருப்பேன்என்று கண் கலங் கினார் ரஜினி. அவரைச் சமாதானப்படுத் தவே முடியவில்லை அவரால்!

சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோஸ் ஆரம்பிச்சு, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டு இருந்தாங்க. நிறுவனத்துக்குப் பெரிய பிராண்ட் இமேஜ் உண்டாக்குறதுக்காகத் தன் அப்பா ரஜினியை வெச்சே 'சுல்தான் தி வாரியர்பட வேலைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, தயாரிப்பாளர், தியேட்டர்காரங்க, ரசிகர்கள்னு எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும்னு நினைக்கிறவர் ரஜினி. தன் வழக்க மான பாணியில் இருந்து வெளிய வந்து படம் பண்றதுக்கு ரொம்பவே யோசிப்பார். அதனாலேயே பரிசோதனை முயற்சியா ஆரம்பிச்ச 'சுல்தான் தி வாரியர்அனிமேஷன் படத்தில் நடிக்க அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இல்லை.


 ஆனாலும், சௌந்தர்யாவுக்காகச் சம்மதிச்சார். ஆனா, என்னென்னவோ நடந்து கடன், வட்டி, கோர்ட், கேஸ்னு ஆச்சு. அந்தப் படம் பாதி யிலேயே நின்னுடுச்சு.
தொடர்ந்து 'கோவாபட விவகாரத்திலும் லதாம்மா, சௌந்தர்யா ரெண்டு பேர் மீதும் பிடிவாரன்ட் போடுற அளவுக்கு விஷயம் போனப்ப, ரஜினி நொறுங்கிப் போயிட்டார். 'அனிமேஷனும் வேணாம்... சினிமா தயாரிப் பும் வேணாம். பேசாம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிடுனு சொல்லித்தான் சௌந்தர்யாவுக்கு நல்லபடியாக் கல்யாணத்தை முடிச்சுவெச்சார் ரஜினி.

இதுக்கு நடுவில் ஐஸ்வர்யா, செல்வராகவன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராகி, அடுத்தடுத்த வருஷத்தில் தனியா ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளைப் பண்ணிட்டு இருந் தாங்க. அப்போதான் 'ராணாபட வேலைகள் தொடங்குச்சு. பட விளம்பரத்தில் தயாரிப் பாளர்னு சௌந்தர்யா பேர் இடம் பிடிச்சது. ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் இல்லை. மறுபடி ஏதேதோ பிரச்னைகள்.


 'ராணாபட பூஜையை தனுஷ் புறக்கணிச்சுட்டார்னு சொல்வாங்க. அப்போ யாருமே எதிர் பார்க்காம ரஜினிக்கே உடல்நிலை மோசமாகி, சிங்கப்பூர் வரை போய் சிகிச்சை எடுத்துட்டு வந்தார். மருத்துவமனை, ஓய்வுனு இருந்த ரஜினி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்திருக்கார்.
இதுக்கு இடையிலேயே ஐஸ்வர்யா '3’ படக் கதையை அப்பாகிட்ட சொல்லி, இயக்குநராவதற்கு அனுமதி வாங்கினாங்க. படத்தை தனுஷே சொந்தமா தயாரிச்சு நடிக்கிறார்னு தகவல் வந்தது. நடுநடுவுல 'என்னை ரஜினியின் மாப்பிள்ளையாகப் பார்க்காதீர் கள்னு தனுஷ் பேச ஆரம்பிச்சார்.
தனுஷ§க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே குழப்பம் எனப் பேச்சு வந்தது. ஆனாலும் '3’ பட வேலைகள் பரபரப்பாக நடந்தன. 'ஒய் திஸ் கொல வெறிபாட்டு உலக மகா ஹிட் அடித்தது.
இது எல்லாமும் சேர்ந்து சௌந்தர்யாவின் மனசுல மறுபடியும் இயக்குநர் ஆசையை விதைச்சது. 'அப்பா நானும் என்னை நிருபிக்கணும். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவணும்னு வேண்டிக் கேட்டு ரஜினியின் சம்மதம் வாங்கினார் சௌந்தர்யா. 'சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான்னு விளம்பரம் வந்தது. தேங்கித் தேங்கி நின்ன வேலைகள் விறுவிறுன்னு வேகம் பிடிச்சு, சட்டுனு வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக்குப் பறந்தது 'கோச்சடையான்யூனிட்.
அதே சமயம் '3’ படம் வெளியானது. சேனல் சேனலா '3’ பட புரொமோஷனுக்காக தனுஷ§ம் ஐஸ்வர்யாவும் பேசிக்கிட்டு இருக்க, திடீர்னு 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்வீடியோ வெளியாகி பரபரப்பாச்சு. பொதுவா, தனது எந்தப் படம்பற்றியும் ரிலீஸுக்கு முன்னாடி ஒரு வார்த்தைகூடப் பேசாத

ரஜினி, 'கோச்சடையான்படம்பற்றிப் பேசினார். லண்டன்ல 'கோச்சடையான்பிரஸ்மீட்டும் நடந்தது. '3’-ல் இருந்து விலகி மீடியாவின் கவனம் 'கோச்சடை யான்மேல் மையம்கொண்டது. '3’ பட சிறப்பு நிகழ்ச்சிகளை நிறுத்தி 'கோச்சடையான் ஸ்பெஷல்னு எல்லா சேனல்களும் அலற ஆரம்பித்தன.  
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த ஐஸ்வர்யா, 'கோச்சடையான் புரொமோஷனுக்கு இப்போ என்னப்பா அவசரம்? '3’ படம்பத்தி நல்ல செய்திகள் கிளம்புறதுக்கு முன்னாடி நீங்களே அது திசை திரும்பக் காரணமா இருக்கலாமா?’னு போன்ல ரஜினிகிட்ட மனம் திறந்து அழுதிருக்காங்க. அப்புறம் ரஜினி, ஐஸ்வர்யா, சௌந்தர்யா மூணு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுனு தெரியலை. ரஜினி உடனடியா லண்டன் ஷூட்டிங்கை முடிச்சுக்கிட்டு சென்னை திரும்பிட்டார். 'நானும் உங்களைப் போல ரஜினி சார் ரசிகன். நான் அவருடைய வாரிசாக முடியாதுனு சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் தனுஷ் சொல்றதுலகூட அர்த்தம் இருக்கு.
எந்தப் பிரச்னையையும் சட்டுனு சமாளிச்சு வந்திருவார் ரஜினி. இதுல இருந்தும் அப்படியே மீண்டு வருவார் சூப்பர் ஸ்டார்!'' என்று முடித்தார்கள் அவர்கள்!
ஆனந்த விகடனில் வந்த மேட்டர் இது

Saturday, April 07, 2012

எம் ஜி ஆர் - நான் நாத்திக வாதி அல்ல - பொக்கிஷ பேட்டி


''


ரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது


. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.


''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.


''ஒரு கரடி இருக்கிறதாமே...''

'இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!





ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.



''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.


அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.


''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.


''அதுதான் கோயில்?''


''என்ன கோயில்?''


''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''


''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.


''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.


''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.


'' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''


''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 

'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''


நான் ஒன்றும் சொல்லவில்லை.
பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.


''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!


நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.


''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.


சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.


அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.


கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.


''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.
''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.


''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.


அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.


எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!


''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''


''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். 


அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''


''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''


''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''


''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''


''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.


அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்.

ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில்......

Thursday, September 08, 2011

சிங்கம் மாதிரி கர்ஜிக்கும் சீமான் ஜெவிடம் மட்டும் சிறு நரி போல் பம்முவது ஏன்? விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Vijayalakshmi-Photos/boss-engira-baskaran-vijaylakshmi-008.jpg 
அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்!

சிலிர்க்கிறார் கொ.ப.செ. சீமான்
நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ - தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், 'என் தாயிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்.

ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த முருகனும் சாந்தனும், 'எங்கள் உடல்களை அண்ணன் சீமானிடம் ஒப்படையுங்கள்!’ என எழுதிக் கொடுத்தார்கள். மரண மேகமாகச் சூழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வுகளை, சட்டப் போராட்டமும் சட்டமன்றத் தீர்மானமும் சுக்குநூறாக நொறுக்கிவிட்ட நிலையில், சீமானுடன் ஒரு சந்திப்பு...


1.  ''நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை... சட்டமன்றத்தில் தீர்மானம்... இந்த இரட்டிப்பு வெற்றி எப்படிச் சாத்தியமானது?''

சி.பி - தமிழகம் முழுக்க எழுந்த பிரம்மாண்டமான மக்கள் எழுச்சிதான் காரணம். எந்த ஒரு தனி நபரும் இதற்கு  சொந்தம் கொண்டாடிட முடியாது.. 




''முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்ட சாதனை இது!


தூக்குக் கயிற்றை அறுத்து எறியும் இந்த அறப் போரை முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள். 21 வருடங்களாகப் பல தளங்களிலும் கண்ணீரைச் சுமந்தவர் எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.

அவருடைய கண்ணீரில் கருவான எழுச்சி, தங்கைகள் கயல்விழி, சுஜாதா, வடிவாம்பாள் அக்கா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் பன்மடங்காக வீரியம் பூண்டது. தங்கை செங்கொடியின் மரணத்தில், ஒருமித்த எழுச்சித் தீயாக வெடித்தது.


தாய் உள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் எழுச்சி வென்றது. ஒரு தாயின் கண்ணீர், இன்னொரு தாயாலேயே துடைக்கப்பட்டது. கட்சிப் பாகுபாடு பார்க்காத அத்தனை தலைவர்களும் இதற்கு பக்க பலமாக நின்றார்கள்!''

சி.பி - ஆரம்பத்துல அம்மா “நான் எதுவும் இதுல செய்யறதுக்கில்லை”ன்னு எஸ் ஆகப்பார்த்தாரு... ஆனா தமிழகம் முழுக்க எழுந்த எதிர்ப்பு அலை  உள்ளாட்சித்தேர்தல்ல பாதிப்பு ஏற்படுத்தும் என உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த பின் சுதாரித்து அடுத்து உருப்படியான முடிவு எடுத்துட்டார்.. 

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Seeman-Viji-reel-02.jpg


2. ''போர்க் குணத்தோடு போராடும் வழக்கம் உடைய நீங்கள், தூக்குத் தண்டனை விவகாரத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தீர்களே?''


சி.பி - அண்ணன் ஆல்ரெடி விஜயலட்சுமி மேட்டர்ல அம்மாகிட்டே இருந்து அழைப்பு வந்து விளக்கம் கேட்டா என்ன சொல்றது?ன்னு பம்பிட்டு இருந்தாரு, இந்த மாதிரி சூழ்நிலைல அம்மாவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டாம்னு நினைச்சார் போல..  




''தொட்டதற்கெல்லாம் சட்டையைப் பிடிக்கிற ஆள் நான் இல்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதல்வர், நிச்சயம் மூன்று பேர் தூக்கு விவகாரத்திலும் அக்கறை காட்டுவார் என உறுதியாக நம்பினோம். ஈழத்தில் போர் தீவிரமானபோது கண்ணீர் உகுத்தால்கூட கைது நடவடிக்கையைப் பாய்ச்சினார் கலைஞர்.

தம்பி முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுக்கத் தகித்தபோது, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இளைய சமுதாயக் கைகோப்பை ஒடுக்கினார். ஆனால், மூன்று பேர் தூக்கைத் தடுக்க, மனிதச் சங்கிலி, மத்திய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல், கவர்னர் மாளிகை முற்றுகை, தங்கை செங்கொடியின் உடலைவைத்து காஞ்சி முழுக்க ஊர்வலம் என எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதில் எதற்காவது அரசு அனுமதி மறுக்கப்பட்டதா? போராட்டங்களுக்காக யாராவது சிறையில் அடைக்கப்பட்டார்களா? அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டனவா?

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அரசாங்கத்தை எதற்காக நாங்கள் எதிர்க்க வேண்டும்? 'ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு?’ என, தங்கபாலு, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் சொல்வதைப்போல் முதல்வரும் சொல்லி இருந்தால், நம்மால் என்ன செய்திருக்க முடியும்?

சி.பி - அப்படி அம்மா சொல்ல 1% கூட சான்ஸ் இல்லை, காங்கிரஸ் கூட கூட்டு கிடையாது,வைக்கும் ஐடியாவும் அம்மாவுக்கு இல்லை, அப்படி இருக்கும்போதுதேவை இல்லாம சோனியாவுக்கு ஏன் ஜால்ரா அடிக்கப்போறாங்க? 



அப்படி ஒரு வார்த்தை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தவிப்பும் பதற்றமுமாக நாங்கள் தத்தளித்துக்கிடந்தோம். தன் எழுச்சியான மக்கள் போராட்டம்தான் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. எவ்வித சாயமும் இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்களாகிய நாங்களே ஆச்சர்யப்பட்டோம். மக்களின் பின்னால் தலைவர்கள் அணிவகுக்கும் காலம் வந்துவிட்டது.


'தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து...’ என்கிற வார்த்தைகளைத் தீர்மானத்தில் முதல்வர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பலிக்காத இடத்தில்தான் கொந்தளிப்பு தேவை. பக்குவம் பழகியவர்களுக்கு இது புரியும்!''


சி.பி - அண்ணே, என்ன தான் சப்பை கட்டு கட்னாலும் குரலை உயர்த்திப்பேச முடியாட்டாலும் பம்மிக்கிட்டேவாவது அம்மா கிட்டே நீங்க இது பத்தி பேசி இருந்தா உங்க இமேஜ் டேமேஜ் ஆகாம இருந்திருக்கும்./.


http://telanganabuzz.com/upload/news/17767/vijayalakshmi-case.jpg

3. ''உங்கள் மீதான வழக்குகளுக்காகப் பயந்துதான் நீங்கள் அமைதி காத்ததாகச் சொல்லப்படுகிறதே?''

சி.பி - நிருபர் நேரடியா அட்டாக் பண்ணிட்டாரு.. இப்போ பாருங்க பெனால்டி கோல் எதிர்கொள்ளும் கோழி மாதிரி பார்ட்டி பம்மும் பாருங்க.. 


''வழக்குகளுக்குப் பயந்து அல்ல; என் இலக்குகளுக்குப் பயந்து! சிறையில் என் தம்பிகளின் தவிப்பை அருகே இருந்து அறிந்தவன் நான். வேலூர் சிறைக்குள் நான் இருந்தபோது, ரஜினி என்கிற வழக்கறிஞர் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளே வந்தார். மூன்று தம்பிகளின் தூக்கு குறித்து அவர் பேசியபோது, 'நான் செத்தால்தான், அவங்களைத் தூக்கில் போட முடியும்’ எனச் சொன்னேன்.


அந்த வார்த்தைகளைக் காக்க வேண்டியவனுக்கு, யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தம்பிகள் இருவர் தீக்குளித்தபோதுகூட, 'உயிர் வேண்டாம்; உணர்வு போதும்’ என்றுதான் வலியுறுத்தினேன். வலிய போராட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்திப் பெயர் வாங்குவது பெரிது அல்ல. ஆனால், மூன்று உயிர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, அரசியல் செய்கிற ஆள் நான் இல்லை. எங்களுடைய நோக்கம் எதிர்க் கட்சி அரசியல் அல்ல; எதிர்கால அரசியல்!

சி.பி - என்னது எதிர்கால அரசியலா? அப்படி ஒரு நினைப்பு வேற அண்ணனுக்கு இருக்கா?அப்போ அண்ணி விஜயலட்சுமிதான் கொள்கை பரப்பு செயலாளரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

சிறை ஒருபோதும் என்னைச் சிதைக்காது; செதுக்கவே செய்யும். வழக்குக்குப் பயந்தவனாக இருந்திருந்தால், மாதச் சுற்றுலா போவதுபோல் கடந்த ஆட்சியில் சிறை வலம் வந்திருப்பேனா? காலம் முழுக்கச் சிறையில் அடைத்தாலும் சிறைக் கம்பியோடு கம்பியாக இந்தத் தம்பி இருப்பானே தவிர, வாய் பொத்தி நிற்பவர்களின் வரிசையில் நிற்க மாட்டான்!''


சி.பி - அண்ணன் இங்கே, மேடைல எல்லாம் சீற்றமாத்தான் பேசறாரு.. ஆனா அம்மா முன்னே போய் நிக்கும்போது மட்டும் பம்முறாரு.. அது ஏன்?


http://reviews.in.88db.com/images/stories/vijyalakhmi.jpg


4. ''நீங்கள் அடுத்தடுத்து பாராட்டு மழை பொழிவதைப் பார்த்தால், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொ.ப.செ. ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?''

சி.பி - அதுக்கு ஒரு பட்டியலே இருக்கே? இவரு இப்போ வந்தவர் தானே? போற போக்கைப்பார்த்தா கேப்டன் தான் அதிமுக வோட கொ ப செ ஆவார் போல..!!!!!!!!!!


''போரைத் தடுக்க கடந்த ஆட்சியில் எந்த அளவுக்குப் போராடினோம் என்பது தெரிந்தால், இப்படிக் கேட்க மாட்டீர்கள். கலைஞரை நாங்கள் போராடச் சொல்லவில்லை. அவர் அமைதியாக இருந்திருந்தால், எங்களின் போராட்டங்களாலேயே ஈழப் போரைத் தடுத்திருப்போம்.


கூடினால் குற்றம், சீறினால் சிறை எனச் சகிக்க முடியாத அரக்கத்தனங்களை அவிழ்த்துவிட்டு, ஒருமித்த தமிழர் எழுச்சியை கலைஞர் முடக்கியதை மறக்க முடியுமா? மூவரைக் காக்க தீக்குளித்த தங்கை செங்கொடிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி உயிர்விட்ட தம்பி முத்துக்குமார் பெயரை சட்டமன்றத்தில் மொழிய கடந்த ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருந்ததா? காங்கிரஸுக்குக் கை கட்டி, வாய் பொத்தி இனத்தையே பலி கொடுத்த கலைஞர், 'அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு’ என வியாக்கியானம் பேசுகிறார்.


 சி.பி - ஆமா , அன்றைய நிலை தமிழகம் முழுக்க வளைச்சு போட்டாரு, இன்றைய நிலை தமிழகம் முழுக்க கோர்ட் , ஜாமீன்னு அலையறாரு..


20 வருட இறுக்க நிலையை இந்த இரண்டு வருடங்களில் உடைத்தவர்கள் நாங்கள். கலைஞரின் துரோகங்களுக்கு ஆளாகியவர்களுக்குத்தான் இப்போதைய ஆட்சியின் மகிமை புரியும்!''



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/04/vijayalakshmi.jpg

5. ''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஆனதே?''


''அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் திரண்டால், தமிழகத்தால் தாங்க முடியுமா? அனைத்துக் கட்சிகளும் கைகோக்கும்என்கிற நம்பிக்கை இற்றுப்போய், ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிக் களைத்துத் திரும்பிய என்னையே அந்த சாத்தியமற்ற சங்கமிப்பில் இணையச் சொல்கிறீர்களே... ஒரு சாதாரணக் கட்சியின் மாநாட்டுக்குக்கூட லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

ஆனால், ஈழப் போரைத் தடுக்க நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டத்தில் திரண்டவர்கள் எத்தனை பேர்? எங்கள் கட்சி தேர்தலுக்கானது அல்ல; இனத்தின் தேறுதலுக்கானது. இங்கே தமிழர்களை இணைப்பது எளிது. ஆனால், தலைவர்களை இணைப்பது கடினம். ஒன்றாக நிற்க இங்கே எல்லோரும் தயார். ஆனால், யார் முன்னால் நிற்பது என்கிற அக்கப்போருக்குப் பதில் இல்லையே?''

 சி.பி - அண்ணன் வார்த்தை ஜாலத்துல அடி பிண்றாரு.. ஆனா செயல்ல அந்த அளவு புத்திசாலித்தனம் இல்லையே?





6. ''மாநில அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறாரே?''


''சோனியா சொன்னால் கேட்கிற சட்டம், எங்கள் முதல்வர் சொன்னால் கேட்காதா?




சி.பி - அண்ணன் சந்தடி சாக்குல எங்கள் முதல்வர் சொன்னால் அப்டின்னு ஒட்டி உறவாடறார் பாருங்க, அநேகமா அண்ணன் உள்ளாட்சித்தேர்தல்ல கூட்டணி போட்ருவாரு போல



முறையாகத் தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்களால் எங்களைக் கொல்ல மட்டும் முடியுமா? அமெரிக்காவில்கூட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், தலையாட்டும் தகுதி மட்டுமே கொண்டவர்களை முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் நடைமுறை ஆகிவிட்டது.


மக்களாட்சி என்கிற பெயரில் சர்வாதிகாரப் போர்வையோடு அலைகிறது இந்தியா. திட்ட அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் நிர்மாணிக்கும் சக்தியாக எங்கள் முதல்வர் சீக்கிரமே உருவெடுப்பார். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவதும் அவர்தான்!

சி.பி - அடுத்து வரப்போவது பி ஜே பி தான், ஆனா அன்னா ஹசாரே தான் பி எம்னு ஒரு பேச்சு அடிபடுது பார்ப்போம், அத்வானிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.. 

http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2011/07/seeman-vijayalakshmi-affair-photo-3.jpg
இது தெரியாமல் தமிழக முதல்வரோடு மத்திய அரசு மோதினால், அன்றைக்குத்தான் தெரியும் தமிழர்களின் ஒருமித்த உணர்வு எத்தகையது என்று. அதுவரை அந்த சட்ட அமைச்சர் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டால் சரி!''

சி.பி - சரி, அதெல்லாம் போகட்டும்னே, விஜயலட்சுமிக்கும் , எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு சொன்னீங்க, ஆனா நீங்க பாப்பா பர்த்டே பார்ட்டில கேக் ஊட்டுன ஃபோட்டோ எல்லாம் அக்கா ரிலீஸ் பண்ணீட்டாங்க.. அதை எப்படி டீல் பண்ணுனீங்க?பிரபு தேவா மாதிரி பைசல் பண்ணுனீங்களா?

 thanx - vikatan

Thursday, May 05, 2011

ஏ பி ஜே அப்துல் கலாம் பேட்டி பாகம் 2

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2002/pr151202/Dec15bp.jpg 

கா.வினோதினி, திண்டுக்கல்.

1. ''ஜனாதிபதி பதவிக் காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, நாடு முழுவதும் இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன்.
ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக்
கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற 'புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன்.

இலங்கைத்தமிழர் நலனுக்காக நீங்கள் ஏதாவது குரல் கொடுத்திருக்கலாம் என பலரும் சொல்றாங்க சார்.. 
வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுமைக்கும் இப்போது எதிரொலிக்கிறது.
இந்தியா வளர்ந்தால் என் தமிழ்நாடும் வளரும் அல்லவா!'' 


எஸ்.சிவகாமி, திருச்சி.

2.
''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.
ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

3. ''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''

கு.அருள்மொழி, காங்கேயம்.
 http://www.centralchronicle.com/uploads/26_June_kalam.jpg
4. ''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?''

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!''


நா.கணேசலிங்கம், லிங்கேசன்புதூர்.

5. ''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''

''அறிவியல் துறையில் நான் முன்னோடியாகக் கருதுபவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடி. எனது குரு விக்ரம் சாராபாய் அவர்கள்தான் என் அறிவியல் முன்னோடி!''

நம்ம நாட்டுக்காரரான ஜி டி நாயுடுவை சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

6. ''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

எஸ்.வேணுகோபால், திருநெல்வேலி.

7. ''ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்... கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாத தின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடு கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது.

அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சி யில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை.

அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!''

இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.
 http://www.sudhirneuro.org/gallery/full/Dr-AP-Abdul-Kalam.jpg
'8. ' 'ஃபுகுசிமா’ அனுபவத்தில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?''

''அதாவது, பாதுகாப்புக்குத் தேவையானவற்றை... வரக்கூடிய இயற்கைச் சீற்றங்களை அளவிட்டுப் பலப் படுத்த வேண்டும் என்பதுதான். உலகம் இப்போது விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது!''

நன்றி - விகடன்