Thursday, July 29, 2010

ராகுல்காந்தி கலைஞருக்கு வைத்த முதல் செக்

கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார்.
பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்டாகவும் ராகுல் தமிழகத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகக்கூட கலைஞரை சந்திக்காமல் சென்றது பரப்ரப்பாக பேசப்பட்டது.கலைஞரை,அவர் கூட்டணியை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.விஜய் தானாக முன் வந்து இளைஞர் காங்கிரசில் இணைவதாக சொன்னபோது கூட அவர் மறுத்தது
தமிழகத்தில் அவர் தனித்து கோலோச்ச விரும்புகிறார் என்றே நினைக்க வைக்கிறது.
விஜய்காந்துக்கு 12% ஓட்டு பரவலாக தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் இருப்பது அவர் கவனத்துக்குகொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ராகுல் விஜய்காந்த் கூடவோ ஜெ கூடவோ ,அல்லது இருவருடனும் ஒரே கூட்டணி ஏற்படுத்த விரும்புகிறார் என்றே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது்
ஜூனியர் விகடனில் வெளியான “அரசியல் எனக்கு சலித்து விட்ட்து,ஆளை விடுங்க” என கலைஞர் சலித்துகொண்டது ராகுலின் இந்த கவர்னர் மாற்றம் ஐடியாவின் அடிப்படையில் தான்.
கூட்டணியை தொடர விரும்புவர்கள் ஏன் கவர்னரை மாற்ற வேண்டும் என கலைஞர் அன்பழகனிடம் புலம்பியதாகதெரிகிறது.
ஆ.ராசாவின் அபாரமான ஊழலும் ராகுலின் அதிருப்திக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.