Showing posts with label MEMORIES ( Malayalam) 2013 –சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts
Showing posts with label MEMORIES ( Malayalam) 2013 –சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்). Show all posts

Thursday, October 15, 2020

MEMORIES ( Malayalam) 2013 –சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம்


பொதுவா  சீரியல்  கில்லர்  சம்பந்தப்பட்ட  கதைகள்னா  முதல்  ரெண்டு அல்லது  மூன்று கொலைகள்  நடந்ததுமே  3  கொலைகளுக்கும்   பொதுவான  ஒரு காரணம்  இருக்கும் , அல்லது  கொலையான  3  பேரும்  ஏதோ  ஒரு விதத்துல சம்பந்தப்பட்டிருப்பாங்க .  அந்த  தொடர்பை  வெச்சு  அடுத்ததா  யார் கொலை செய்யப்பட  இருக்காங்க  அப்டினு  கேசை  மூவ் பண்ணுவாங்க ,இதானே  உலக  வழக்கம்? ஆனா  இந்தப்படத்துல தொடர்ச்சியா  நடக்கும் கொலைகளில்  கொலை  ஆகும் நபர்களுக்கு இடையே  எந்த  தொடர்பும் இல்லை

 

ராஜேஷ்  குமார்  நாவல்  டெக்னிக் படி கதை  சொல்லப்படுது

 

சம்பவம்1 -  ஹீரோ  ஒரு போலீஸ்  ஆஃபீசர் . பொதுவா  போலீஸ்  ஆஃபீசர்னாலே  ஏகப்பட்ட  எதிரிகள்  இருப்பாங்க  இல்லையா?அந்த  எதிரிகள்ல ஒருத்தன்  துப்பாக்கி  முனைல  ஹீரோவோட மனைவி , மகள்  இருவரையும்  கடத்தி  ஒரு இடத்துல இருக்கான் , ஹீரோ  அங்கே  வர்றார். அவர்  கண் முன்னாடி  அவன் அவங்க 2 பேரையும்  தீர்த்துக்கட்டிடறான். ஆன் த  ஸ்பாட்  ஹீரோ  அவனை ஷூட்  பண்ணிடறார். முறைப்படி ஹீரோவைத்தான்  அவன் பழி வாங்கனும், ஆனா    ஹீரோவோட   நெருங்கிய  சொந்தங்களை  கொன்னுட்டா  ஹீரோவை க்ரூரமா  பழி வாங்குன மாதிரி .. இதான்  அவன் கணக்கு . இதனால  ஹீரோ வெறுத்துப்போய்  குடிப்பழக்கத்துக்கு  அடிமை ஆகிடறார். போலீஸ்  ஒர்க்  எதுவும் பண்றதில்லை  , ஒதுங்கி இருக்கார்

 

சம்பவம் 2 – ஒரு லேடீஸ்  ஹாஸ்டல் . 5  பொண்ணுங்க , செம வாலுங்க .அவங்கள்ல 2  பேரு கேங்க்   லீடர்ஸ்  மாதிரி . அவங்க  2 பேரும்  சரோஜாதேவி  , விருந்து , திரைச்சித்ரா , மருதம் மாதிரி  ஏதோ  இலக்கியப்பத்திரிக்கையை படிச்ட்டு இருக்கும்போது  ஹாஸ்டல்  வார்டன்  அதைப்பார்த்துடுது. இதை  பேரண்ட்ஸ்  கிட்டே  சொல்லப்போரேன்  அப்டினு  மிரட்டுது .  இவங்க  கெஞ்சறாங்க , ஆனா  வார்டன்  மசியலை . இந்த  விஷயம்  காலேஜ்  பூரா  தெரிஞ்சு அந்த  கேங்  எங்கே  போனாலும்  எல்லாரும்  அந்த  புக்  மேட்டரை  வெச்சு  கிண்டல்  பண்றாங்க

 

இதனால  அவங்க  ரொம்ப  மன உளைச்சலுக்கு  ஆளாகறாங்க .ஹாஸ்டல்  நிர்வாகத்தை  பழி  வாங்க  நினைக்கறாங்க . அதுக்கு  ஒரு பிளான்  போடறாங்க  அதன்படி அவங்க 5 பேருல  ஒருத்தி  ஒருத்தனை  லவ் பண்ற  மாதிரி  டிராமா  போடச்சொல்றாங்க.டிராமா சக்சஸ். பெண்கள்  தான் நடிகையர்  திலகங்கள்  ஆச்சே? ஆண்  இளிச்சவாயன். கண்டு பிடிக்க  முடியுமா?  அவனால? ஏமாந்துடறான். ஹாஸ்டல்  வார்டனோட  புருசன்  கிட்டே  போய் அந்த  லவ்வர்  பற்றி  தப்பா  தப்பா  சொல்றது . லவ்வர்  கிட்டே  போய்  அந்த வார்டன்  புருசன்  பற்றி  தப்பா சொல்றது...

 

2  பேர் கிட்டேயும்  ஒரே  கான்செப்ட்  டிராமாதான்..தப்பா நடக்க  முயற்சி  செஞ்சான்.. சுருக்கமா  சொல்லனும்னா பிக்பாஸ் ல  ஜூலி  ஓவியா  , காயத்ரி  ரகுராம் இருவறுக்கும் இடையே  கோள்  மூட்டி  விட்ட மாதிரி ..

 

சம்பவம் 3 -   நகரில்  வரிசையா கொலைகள்  நடக்குது .கொலை  செய்யபப்டும்  நபர்கள்  ஏசுவை  சிலுவைல  அறைஞ்ச  மாதிரி  போஸ்ல  விட்டுட்ட்டுப்போறான்  வில்லன். இந்தக்கொலைகள்  எதுக்காக  நடக்குது? யார் பண்றாங்க, அடுத்து  யார் கொலை செய்யப்படுவாங்க  எந்த  விபரமும்  கண்டுபிடிக்க  முடியல

 

 மேலே  சொன்ன  3  சம்பவங்களும்  ஒரு நேர் கோட்டில்  பயணிக்கும்  திரைக்கதை  தான்  மிச்ச  மீதி  கதை

 

ஹீரோவா பிருத்விராஜ்  சுகுமாறன்,  மம்முட்டி , மோகன் லாலுக்குப்பின்  கேரளாவில்  அதிக   ரசிகர்கள்  கொண்ட  மற்றும்  மாறுபட்ட  படங்களைத்தந்தவர்  இவராத்தான்  இருக்கும் . இவரோட   ஸ்க்ரிப்ட்  நாலெட்ஜ்  பிரம்மிக்க வைக்கும். ஒரு படம் போல  சாயலில்  இன்னொரு ப்டம்  பண்ண  மாட்டார். இதில்  போலீஸ்  ஆஃபீசராக  மாறுபட்ட  நடிப்பில்  கலக்கி இருக்கார்


ம்னைவியா  மேக்னா  கொஞ்ச  நேரமே  வர்றாங்க , முகம் கூட மனசில்  பதியலை


  மியா  ஜார்ஜ்  க்கும்  அதிக  வேலை  இல்லை 

 


சபாஷ்  டைரக்டர்

 

1        கொலை  நடந்த  இடத்தில்  உள்ள  பூட்ஸ்  தடத்தை  வைத்து  கொலையாளியின்  சில  முக்கிய  விபரங்களை  ஹீரோ  கண்டுபிடிப்பது

2  கொலை  செய்யப்பட்ட  ஆட்களுக்கு  இடையே  என்ன  தொடர்பு  என்பதை  ஹீரோ  தன்   சொந்த  வாழ்க்கையில்  நடந்த  ஒரு சம்பவத்தை  கனெக்ட்  பண்ணி  பின் கண்டுபிடிப்பது

 

2        பர  பரப்பான த்ரில்லிங்கான  அந்த  லேடீஸ்  ஹாஸ்டல்  சம்பவங்கள். ஹீரோ  இல்லாத  காட்சிகள்  என்றாலும்  செம விறுவிறுப்பு

4   ஒளிப்பதிவு  , பின்னணி  இசை  போன்ற டெக்னிக்கல்  அம்சங்கள்  குட்

 


திரைக்கதையில் சில  நெருடல்கள் , லாஜிக்   மிஸ்டேக்ஸ்

 

1  ஏற்கனவே நாம  சத்ரியன்,  விக்ரம்  போன்ற  பல  போலீஸ்  சப்ஜெக்ட்  படங்களில்  பார்த்த  சம்பவங்களான  ஹீரோவின் குடும்பத்தை/ மனைவி,மகளை   வில்லன்  போட்டுத்தள்ள  பின் ஹீரோ  போலீஸ்  டியூட்டி  பார்க்க மாட்டேன்  என  அடம் பிடிப்பது  , உயர்  அதிகாரிகள்  ஹீரோவை கெஞ்சுவது  எல்லாம்  நமக்கு  சலிப்பு தட்டுது

 

2  என்னதான்  ஹீரோ டேலண்ட்டா  இருக்கட்டுமே ?  போலீஸ் , பப்ளிக்  எல்லாம் கூடி இருக்கும் இடத்தில்;  கொலை  நடந்த  இடத்தில்  இன்வெஸ்டிகேட்  பண்ண  வருபவர்  கைல  சரக்கு  பாட்டிலோட  வருவது  ஒரு சிப்  அடிச்ட்டே  லெஃப்ட்  ஹேண்ட்ல  கேசை  டீல்  பண்ணுவது  எரிச்சலா  இருக்கு  பார்க்க

 

3    த்ரில்லர்  மூவி எதுவுமே  பார்க்காத  ஒரு அஞ்சாங்கிளாஸ்  பாப்பா  கிட்டே  இந்தப்படத்தில்  நடக்கும்  முதல்  2 கொலை  பேட்டர்ன்  காட்டினால்  அது  கூட ஈசியா  சொல்லிடும், அந்த 2  கொலைகளுக்கும்  உண்டான  ஒற்றுமை... ஏசு  சிலுவையில்  அறையப்பட்டது  போல்  போஸ்  என. ஆனா  பெரிய  பெரிய  உயர்  அதிகாரிகளே  அதைக்கண்டு பிடிக்க  முடியாமல்  திணறுவதும்  , ஹீரோ  அதை  சொன்னதும்  அடேங்கப்பா  என  ஆச்சரியப்படுவதும்  அடேய் .. முடியல

 

4  அது  போக  ஒவ்வொரு க்ளூவாக  ஹீரோ  கண்டுபிடிக்கும்போதெல்லாம்  உயர்  அதிகாரி  அடடே, இதை  எப்படிக்கண்டுபிடிச்சீங்க? என பிரமிப்பதும்  ஹீரோ  அசால்ட்டாக  இது எல்லாம்  காமன்  சென்ஸ்  என  நக்கல்  அடிப்பது,ம்  ஷப்பா  .. முடியல

 

5  கொலையாளி  மாற்றுத்திறனாளி, ஒரு காலை  விந்தி  விந்திதான்  நடப்பார்  என  ஒரு சீன்ல  சொல்லப்படுது. ஆனா  ஒரு சேசிங்  சீன்ல   வில்லன்  ஓடும்போது  ஹீரோவால  துரத்திப்பிடிக்க  முடியல . மூச்சு  வாங்க  நின்ன்னுடறார்( அதுக்கு  அவர்  சரக்கு  பார்ட்டி  என  சால்ஜாப் சொல்லாமல் சொல்றாங்க)  

 

6  ஒரு சீன்ல  வில்லன்  முகமூடி  போட்டுட்டு  பொது  இடத்துக்கு  வர்றான், ஆடியன்சுக்கு  அவன் முகம் தெரியக்கூடாது  என்ற  ஐடியா  ஓக்கே . ஆனா  பப்ளிக்  அவனைப்பார்த்தா  வித்தியாசமா  நினைக்க மாட்டாங்களா?

 

7  மொத்தப்படமே  2  மணி  நேரம் தான், ஆனா  ஹீரோ  சம்பந்தப்பட்ட  முதல்  40 நிமிடங்கள்  இல்லைன்னாலும்  கதைக்கு  பாதிப்பில்லை .  மெயின் கதை  ஒண்னே கால் மணி நேரம் தான்

 

சி.பி   ஃபைனல்  கமெண்ட் -  சில  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  கேரளாவில்  செம ஹிட் ஆகி ஓடிய  நல்ல  க்ரைம்  த்ரில்லர்  படம் இது . யூ ட்யூப் ல  கிடைக்குது  பாருங்க சப்  டைட்டில் வேணும்னா  டிஸ்னி  ஹாட் ஸ்டார்ல  பாருங்க . ரேட்டிங்   2.75 / 5  2016ல் இது  தமிழில்  ரீமேக்கப்பட்டு  ஆறாது  சினம்  என ரிலீஸ்  ஆச்சாம், நான் பார்க்கலை , அது  ஹிட் ஆகலைனு நினைக்கறேன்


Memories
Memories (2013 film).jpg
Theatrical-release poster
Directed byJeethu Joseph
Produced byP K Muralidharan
Santha Murali
Written byJeethu Joseph
StarringPrithviraj
Miya
Vijayaraghavan
Meghana Raj
Music bySongs:
Sejo John
Background score:
Anil Johnson
CinematographySujith Vaassudev
Edited byJohn Kutty
Production
company
Anantha Visions
Distributed byMurali Films & Tricolor Entertainments
Release date
  • 9 August 2013
Running time
143 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget34 million
Box office95 million