Tuesday, December 16, 2025

MR ZOO KEEPER(2025)- தமிழ் -சினிமா விமர்சனம்(காமெடி டிராமா)

             


        பழைய சூப்பர் ஹிட் படங்களை கிண்டல் செய்யும் வகையறாப்படமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்,குழந்தைகளுக்கான காமெடி டிராமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

1/8/2025      முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் கலவையான ,சுமார் ரக விமர்சனங்களைப்பெற்றது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு அப்பாவி.சிப்பிக்குள் முத்து கமல் போல ,சின்னத்தம்பி பிரபு போல உலகம் தெரியாத  வெள்ளந்தி.இந்த அப்பவியை ஒரு பெண் தானாக முன் வந்து காதலித்துத்திருமணம் செய்து கொள்கிறாள்.மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத இந்தக்கிளைக்கதை மெயின் கதையை விடவே சுவராஸ்யம்.


நாயகன்,நாயகி இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு.இருவரும் வேலைக்குப்போகிறார்கள்.நாயகன் தன் மகனுடன் உலாப்போகும்போது அங்கே ஒரு புலிக்குட்டியைப்பார்க்கிறான்.அதைப்பூனைக்குட்டி என நினைக்கிறான்.மகன் அதை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கலாம் என்கிறான்.

நாயகிக்குத்தெரியாமல் அதை வளர்க்கிறார்கள்.


வனத்துறைக்கு ஒரு புலிக்குட்டி மிஸ்சிங்க் என்பது தெரிந்து விடுகிறது.அவர்கள் ஒரு பக்கம் புலிக்குட்டியைத்தேடுகிறார்கள் .


நாயகன்,நாயகி இருவரும் அந்த புலிக்குட்டியைக்காட்டிலேயே  விட்டுவிடலாம் என நினைக்கிறார்கள்.


இது வரை திரைக்கதை ஓக்கே.

இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் ஆக நடிகர் புகழ் நடித்திருக்கிறார்.போஸ்டர் டிசைன் ,பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவைகளில் வசீகரமாகத்தெரிந்தவர் படத்தில் பெரிய அளவில் கவரவில்லை.

நாயகி ஆக  ஷிரின் காஞ்ச்வாலா அழகாக வந்து போகிறார்.சில இடஙகளில் வசனங்களை ஒப்பிப்பது போல இருக்கிறது.

சிங்கம்புலி காமெடி போர்சனை கவனிக்கிறார்.ஆனால் ரைட்டிங்க் வீக் ஆக இருப்பதால் சிரிப்பு வரவில்லை.


இமான் அண்ணாச்சி கெஸ்ட்  ரோலில் வருகிறார்.


முத்துக்காளை சில இடஙகளில் சிரிக்க வைக்கிறார்.


வன அதிகாரியாக ந்டித்தவர் சீமான் சாயலில் இருக்கிறார்.நல்ல ஜிம் பாடி.

யுவன் சங்கர் ராஜா இசையில் 3 பாடல்கள்.எதுவும் தேறவில்லை.பின்னணி இசையும்  வெகு சுமார் தான்.


தன்வீரின் ஒளிப்பதிவில் கானகக்காட்சிகள் பரவாயில்லை

நாயகிக்கு க்ளோசப் ஷாட்ஸ் அதிகம் இல்லை.

அஜீபின் எடிட்டிஙகில்  120 நிமிடஙகள் ஓடுகிறது.

திரைக்கதை இயக்கம் ஜே சுரேஷ்


சபாஷ்  டைரக்டர்

1 மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் ஹிட் சாங்கை ஓப்பநிஙக் சீனில் பாடிய ஒரு ஆளை மிருகம் அடித்துக்கொல்வது காமெடி

2 சின்னத்தம்பி பிரபு கேரக்டரைக்கிண்டல் செய்தவிதம்

3   நாயகன் ,நாயகி. காதல் போர்சன்



  ரசித்த  வசனங்கள் 


1 பணம் கிடைக்கும்னா எமனையே போட்டுத்தள்ளத்தயாரா இருப்பவங்க தான் நம்மாளுஙக

2  புலிக்குட்டிக்கும்,பூனைக்குட்டிக்கும் வித்தியாசம் தெரியாத  சின்னத்தம்பியா நீ?

3 நம்ம கதையை பூரா அவர் கிட்டே சொல்லிட்டேன்


அய்யய்யோ,எதுவரை சொன்னே?


பயப்படாதே,பூரா சொல்லலை.முதல் இரவு வரை தான் சொன்னேன்


அய்யய்யோ

தப்பா எதுவும் சொல்லலை.எனக்கு எதுவும் தெரியாது,எல்லாம்  என் சம்சாரம் தான் சொல்லிக்குடுத்தானு உன்னைப்பத்திப்பெருமையாதான் சொன்னேன்

சுத்தம்

4 ஏதுடா செயினு?

மாமியார் வீட்ல போட்டது

உனக்கெல்லாம் ஜெயில் தானே மாமியார் வீடு?

5 நீ வளர்த்தது புலிக்குட்டியா?பூனைக்குட்டியா?


பூனைக்குட்டிதான்.ஆனா நான் வளர்த்தா அது புலிக்குட்டி ஆகிடும்.அன்னைக்கு அப்படித்தான் ஆச்சு

6 இந்த சாமியார்ட்ட இருந்து கத்துக்கிட்டது ஷேவ்ங்க் பண்ணாம முடி வளர்த்தா இந்த உலகமே நம்மைக்கும்பிடும்

7  ஒவ்வொரு விலஙகினம் குறைஞ்சதுக்குப்பின்னால ஒரு கதை இருக்கு

8 ஐயப்பனுக்கு மட்டும் வாகனமா புலி இல்லாமப்போய் இருந்தா  காட்டில்  புலி இனமே இல்லாம போய் இருக்கும்

9 சுவாமி....நீங்க வெச்சு இருக்கற அந்த அழகான குட்டியை மட்டும் வெச்சுக்குங்க.புலிக்குட்டியை விட்டுடுங்க


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மீடியாக்களின் ஆதிக்கம் தெரிந்தும் ஒரு பாரெஸ்ட் ஆபீசர் பேக்கு மாதிரி யூ ட்யூபர் க்கே போன் போட்டு மிரட்டுறார்.அவன் அதை ரெக்கார்டு செய்வான் என யூகிக்க மாட்டாரா?

2 நாயகி ஒரு  சாதாரண  சூப்பர்வைசர்.ஒரு மோட்டார் இயக்கும் ட்ரெய்னிங்கிற்காக பைவ் ஸ்டார் ஹோட்டல் வசதியுடன் 40 நாட்கள் குடும்பத்துடன் தங்க கம்பெனி வசதி செய்து தருவது எல்லாம் ஒவரோ  ஓவர்.ஐ ஏ எஸ் ஆபீசருக்கே அந்த வசதி கிடையாது

3  பிறந்த புலிக்குட்டி 40 நாட்களில் அவ்ளோ பெரிய புலி ஆவது எப்படி?

4 க்ளைமாக்சில் ஜட்ஜ் நாயகனுக்கு தண்டனை உண்டு என்று சொல்லு அரசாங்கப்பணி அளிப்பது செமக்காமெடி


5 நாயகனுக்கும் புலிக்கும் ஒரு எமோஷனல் கனெக்ட்டே இல்லாதது மைனஸ்

6 பின் பாதியில் திரைக்கதை. மிக பலவீனம்

7 எடிட்டிங் தவறால் பூனைக்குட்டி சில இடஙகளில் பெரிய புலி ஆக அடுத்த சீனில் குட்டிப்புலி ஆக ,பின் மீடியம் சைஸ் புலி ஆக மாறுவது பின்னடைவு

8 முதல் பாதியில் அப்பாவியாகப்பேசும் நாயகன் பின் பாதியில் நார்மல் ஆவது எப்படி?குரலில் கூட ஒரு மெச்சூரிட்டி வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பொழுது போகாத பொம்முக்கள் ,10 வயது அம்முக்கள் பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க் 2/5




Mr Zoo Keeper
Theatrical release poster
Directed byJ. Suresh
Written byJ. Suresh
Produced by
  • S. Rajarathinam
  • A. Arockiadass
Starring
CinematographyTanveer Mohidin
Edited byAzeeb KS
Music byYuvan Shankar Raja
Production
company
J4 Studios
Distributed byE5 Entertainment
Release date
  • 1 August 2025
CountryIndia
LanguageTamil

0 comments: