Friday, December 12, 2025

CROCODILE KINGDOM(2025)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ட்ரெண்டிங் அட்வென்ச்சர் திரில்லர்)@யூ ட்யூப்

                             

போஸ்டர் டிசைன் ,பிரமோஷன் எல்லாம் பார்த்தா ராஜ்மவுலி ,ஷங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா இருக்கு,உள்ளே போய் பார்த்தா இராமநாராயணன் படம் மாதிரி இருக்கு.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி பெரிய கோடீஸ்வரி.அவளுக்கு ஒரு தம்பி.அவன் சும்மா இருக்க மாட்டாம ஆராய்ச்சி பண்றேன் ,சாகசம்  பண்றேன் என சொல்லி நரகத்தீவு என்று அழைக்கப்படும் முதலைகள் நிறைந்த தீவுக்குப்போறான்.ஆள் போனது போனதுதான்.அட்ரசையே காணோம்.எந்தத்தகவலும் இல்லை.நான்கு பேர் கொண்ட குழுவுடன் அவனைத்தேடி நாயகி கிளம்பறா.


வில்லன் ஒரு விஞ்ஞானி.முதலைகளின் ரத்தத்தில் இருந்து புற்று நோய்க்கான மருந்து கண்டு பிடிக்க ஒரு தீவில் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கிறான்.பிரம்மாண்டமான முதலைகளை உருவாக்குகிறான்.பெரிய தாதா வந்ததும் சின்னச்சின்ன ரவுடிகள் எல்லாம் அப்ஸ்கேண்ட் ஆவது போல அந்த ஏரியாவில் இருந்த மற்ற முதலைகள் எல்லாம் வேற ஏரியாவுக்குக்கிளம்புதுஙக.


நாயகன் பயாலஜி படித்தவன்.அந்த நரகத்தீவில் பயணம் செய்யும்போது தன் காதலியை இழந்தவன்.அந்தத்தீவில் இருக்கும் ஆபத்துக்கள் ,சூட்சுமஙகள் எல்லாம் அவனுக்கு அத்துபடி.


நாயகனைத்தன் டீமில் சேர்த்துக்கொண்டால் தன் தம்பியைக்கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என நாயகி நினைக்கிறாள்.நாயகனிடம் உதவி கேட்கிறாள்.ஆரம்பத்தில் பிகு செய்த நாயகன் பின் நாயகியுடன் வர ஒத்துக்கொள்கிறான்

இப்போ நாயகன்,நாயகி ,நாயகியின் டீம் ஆட்கள் 4 பேர் ஆக மொத்தம் 6 பேர் அந்தத்தீவுக்குக்கிளம்பறாஙக


அந்தத்தீவில் அவஙக சந்தித்த ஆபத்துக்கள் ,சிரமஙகள் தான் மொத்தக்கதையுமே.நாயகியின் தம்பி ,வில்லன் இருவரையும் சந்திக்கும் அந்த டீம் இறுதியில் உயிருடன் மீண்டார்களா?என்பதை யூ ட்யூபில் காண்க.

நாயகன் ஆக நடித்தவர் ஓவர் பில்டப் செய்தாலும் போகப்போக அடக்கி வாசிக்கிறார்.அனைவரையும் காப்பாற்றுகிறார்.

நாயகி ஆக வருபவர் கொள்ளை அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் படத்தில் இருக்கும் ஒரே பெண் அவர் தான் என்பதால் வேறு வழி இல்லாமல் ரசிக்க வேண்டியதாய்ப்போய் விட்டது.

வில்லனாக வருபவர்  சின்னப்பையன் மாதிரி இருக்கிறார்.பயமும் வரவில்லை.பரிதவிப்பும் வரவில்லை.

இந்த மாதிரி அட்வென்ச்சர் கதையில் பயந்த சுபாவம் கொண்ட காமெடியன் நிச்சயம் இருப்பான்.மொக்கைக்காமெடி செய்கிறான்



சபாஷ்  டைரக்டர்

1 ஒரு காடு ,ஒரு செட்டிங் லேப், 10 பேர் அவ்ளோ தான் ஒரு படம் .வெரி லோ பட்ஜெட்

2  அட்டைப்பூச்சிகள் மனிதன் உடம்பில் ஊடுருவுவது, மிஷின் கன்னை விழுங்கும் செடிகள் என குழந்தைகள் ரசிக்கும் அம்புலிமாமா சீன்கள் தேவலை


  ரசித்த  வசனங்கள் 

1 எல்லா ஆராய்ச்சிகளிலும் விலஙகுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுதான் வருகிறது

2 கேன்சர் மெடிசனை நீ பணக்காரஙகளுக்கு மட்டும் தானே விற்பே? ஏழைகளுக்கு உதவ மாட்டியே?

ஒரு பிஸ்னெஸ்மேன் போட்ட முதலீட்டுக்கு லாபம் பார்க்க விரும்புவானா? தான தர்மம் செய்வானா?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 என்னதான் லோ பட்ஜெட் படமா இருக்கட்டும்.அவ்ளோ பெரிய ஆராய்ச்சிக்கூடத்தில் ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானா?

2 முதலையின் பலம் நீர்நிலையில் ,யானையின் பலம் நிலத்தில் என பழமொழியே உண்டு.ஆனால் இதில் நிலத்தில் பல்லி மாதிரி சர்வ சாதாரணமாக முதலைகள் வாக்கிங் போகுதுங்க

3 மனிதனை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம்.இறந்தவளைப்போல நாயகி நடித்து முதலையை ஏமாற்றுவது காதில் பூ.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - .குழந்தைகள் பார்க்க வேண்டிய அம்புலிமாமா,பாலமித் ரா ,கதைப்படம்.75 நிமிச சின்னப்படம் தான்.ரேட்டிங்க் 2/5

Thursday, December 11, 2025

PAANCH MINAR (2025) -தெலுங்கு/ தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி க்ரைம் டிராமா ) @ அமேசான் ப்ரைம்

               

             

டைட்டிலைப்பார்த்ததும் பாஞ்ச் மைனர் எனில் 5 விடலைப்பையன்கள் என்பதுதான் அர்த்தம் ஆக இருக்கும் என நினைத்தேன்.பாஞ்ச் மினார் என்பது ஒரு இடத்தின் பெயராம்.காமெடி க்ரைம் ட்ராமா என்று கேள்விப்பட்டதால் பார்த்தேன்.


21/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடி டி யில்  காணக்கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு வெட்டாபீஸ்.இந்த லட்சணத்துல ஒரு காதலி வேற.இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை சூதாட்டத்துல பாதி ,க்ரிப்டோ கரன்சி ல பாதினு தொலைச்சுடறான்..

இப்போ வேற வழி இல்லாம கேப் டிரைவரா வேலை செய்யறான்.காது கேட்காத டிரைவர் எனில் சம்பளம் அதிகம் என்பதால் பொய்யாக காது கேளாதவன் போல சர்ட்டிபிகேட் ரெடி செய்து வேலையில் சேர்கிறான்.

நாயகனுக்குக்காது கேட்காது என நினைத்து 2 காண்ட்ராக்ட் கில்லர்ஸ்  காரில் ஏறி ஒரு தகவல் பேச அதைக்கேட்டு நாயகன் கோடிக்கணக்கான கேஷ் உள்ள பேக்கை பாஞ்ச் மினார் என்னும்  ஹோட்டலில் டோக்கன் கொடுத்து பெறுகிறான்


இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் ,வில்லன் க்ரூப் சேசிங்,போலீஸ் பாலோ எல்லாம்  மீதி திரைக்கதை

நாயகன்  ஆக ராஜ் தருண் சுமாராக நடித்திருக்கிறார்.காமெடி டயலாக்ஸ் காப்பாற்றுகிறது அவரை.

நாயகி ஆக சுமார் முக குமாரி ஆக ராசி சிங்க் வந்து போகிறார்.அதிக வேலை இல்லை.

நாயகனின் அப்பாவாக பிரம்மஜி பாத்திரத்தை உணர்ந்து காமெடி செய்திருக்கிறார்.

போலீஸ்  ஆக ஸ்ரீனிவாஸ் காமெடி நடிப்பில் பாஸ் மார்க்.

மெயின் வில்லன் ஆக அஜய் கோஷ் அவ்வப்போது மிரட்டல் அப்பப்ப காமெடி செய்கிறார்.

ரவி வர்மா கெஸ்ட் ரோலில் வருகிறார்.

சேகர் சந்தரா இசையில் 3 பாடல்களும் அருமை.பின்னணி இசை. ஓக்கே ரகம்.

ஆதித்ய ஜவ்வாடி  தான் ஒளிப்பதிவு.குட்.

பிரான் புடியின் எடிட்டிஙகில் 134 நிமிடஙகள் ஓடுகிறது.

ராம் கடுமலா தான் திரைக்கதை ,இயக்கம்



சபாஷ்  டைரக்டர்

1 ஹாஸ்பிடலில் நாயகன் ,நாயகி,வில்லன் க்ரூப். மூன்று தரப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல் காமெடிக்கலக்கல்.

2 பின்சீட்டில் வில்லன் க்ரூப் மிரட்ட முன் சீட்டில் நாயகன் ,நாயகி காரில் அவர்களை சமாளிக்க  செய்யும் ஐடியா அருமை.

3 வில்லன் நாயகனின் பெற்றோரைப்பிடித்து வைத்து மிரட்ட நாயகனிடம் போனில் பேசும் அவரது அப்பா பேசும் டயலாக் செம காமெடி

4 க்ளைமாக்சுக்கு முன் வரும் கடைசி அரை மணி நேரக்காமெடி  சீக்வென்ஸ்


செம  ஹிட்  சாங்க்ஸ்


1 ஜானு மேரி ஜானு

2 எம் பாத்துக்குற நாடி

3 மண்டு தேரா


  ரசித்த  வசனங்கள் 

1 ஏண்டா,அந்தக்கம்பெனி ஓனரே ஆட்டோல போறான்.உனக்கு யார் கார் குடுத்தா?

2 சார்.அவனுக்குக்காது கேட்காது.சத்தமாப்பேசுஙக..


நீ பேசுனது மட்டும் அவனுக்கு எப்படிக்கேட்டுச்சு?

நான் அவன் பிரண்ட்

முதல்ல என்கொயரி பண்றப்போ அவன் என் பிரண்ட் இல்லன்னு சொன்னியே?


3 போலீஸ் - உன் சதித்திட்டம் எனக்குத்தெரிஞ்சிடுச்சு.2 கோடி ரூபாய் கொடுத்தா கேஸ் இல்லாம பண்றேன்

மிரட்றியா?

சொல்யூசன் சொல்றேன்.

ஆதாரம் இல்லையே? வந்துட்டுப்போறதுக்கு பெட்ரோல் செலவுக்கு வேணா 2000 ரூபா தர்றேன்

4  உங்க வீட்டுக்கு நாய் கூட வராது

இப்போ கொஞ்ச நேரம் முன் நீங்க வந்தீஙக?

5 டியர்.நான் உன் கிட்டே உண்மை சொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா பொய் சொன்னதில்லை.

6 என் துப்பாக்கியைத்திருப்பித்தர்லைன்னா உன்னை  என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளிடுவேன்

அதெப்பிடி? உன் கன் தான் என் கிட்டே இருக்கே?

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கொலையைக்கண்ட சாட்சி ஆன நாயகனை அருகில் வைத்துக்கொண்டே போலீஸ் ஆபீசர் வில்லனிடம் டீல் பேசுகிறாரே? மாங்கா மடையரா?

2 வில்லன் டீலிங்க்  முடிக்கும் முன்னே போலீஸ் ஆபீசர் நாயகனைக்கொல்ல முடிவெடுத்தது ஏனோ?கொன்னுட்டா டீலிங்க் எப்படி சக்சஸ் ஆகும்?


3 ஆபரேசனுக்கான 10 லட்சம் ரூபாயை கவுண்ட்டர்ல கடாம  நாயகன் பணத்துடன் ஹாஸ்பிடல் ஆபரேசன் ரூமுக்கு வந்து வில்லனிடம் மாட்டுவது ஏன்?



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி டிராமா பார்க்க நினைக்கும் ஆடியன்ஸ் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.25 /5


Paanch Minar
Theatrical release poster
Directed byRam Kadumula
Written byRam Kadumula
Produced by
  • Madhavi
  • MSM Reddy
Starring
CinematographyAditya Javvadi
Edited byPrawin Pudi
Music byShekar Chandra
Production
company
Connect Movies
Release date
  • 21 November 2025
Running time
134 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, December 10, 2025

B.P.180 (2025) - பி பி 180 - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

             

               

28/11/2025 முதல் திரை அரஙகுகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இன்னமும் ஓடிடி யில் வெளியாகவில்லை.ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்த டேனியல் பாலாஜி மெயின் வில்லனாக நடித்த கடைசிப்படம் இது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு டாக்டர்.ஜி ஹெச்சில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் பணியில் இருக்கும் நேர்மையானவர்.வில்லன் ஒரு எம் எல் ஏ விடம் அடியாளாக இருக்கும் ரவுடி.


எம் எல் ஏ வின் மகள் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைய தன் மகளை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம்,அதற்கு உதவு என எம் எல் ஏ தனது  அடியாளிடம் கேட்டுக்கொள்கிறார்.

வில்லன் நாயகியை போனில் மிரட்ட நாயகி பணியவில்லை.போஸ்ட் மார்ட்டம் செய்வது என் கடமை என சொல்லி செய்து விடுகிறார்.

இதனால் கடுப்பான வில்லன் நாயகியைப்பழி வாங்கத்துடிக்கிறான்.நாயகியும் வில்லனிடம் சவால் விடுகிறார்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி ஆக தன்யா ரவிச்சந்திரன் .தைரியமான கேரக்டராக வரும் அவர் சில இடஙகளில் ஓவர் டோஸ் தெனாவெட்டாக நடந்து கொள்வது ஏனோ?


வில்லன் ஆக வரும் டேனியல் பாலாஜி வழக்கம் போல் ஓவர் ஆக்டிஙக் என்றாலும் ரசிக்க முடிகிறது.டாய் டாய் என்று அவர் கத்திக்கொண்டே இருப்பது சில இடஙகளில் எரிச்சல்


எம் எல் ஏ. ஆக கே பாக்யராஜ்  அருமையான குணச்சித்திர நடிப்பு.ஆனால் நாயகி வில்லன் மோதல் வந்த பின் அவரைக்காணவில்லை.


முன்னாள் எம் எல் ஏ ஆக அருள் தாஸ் கச்சிதம்.கமிஷனர். ஆக வரும் தமிழ நடிப்பில் போலீஸ் கம்பீரம் அருமை.


ஒளிப்பதிவு ராமலிஙகம்.பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சவாலான பணி தான்.

இசை ஜிப்ரான்.ஒரு குத்தாட்டப்பாட்டு இருக்கு.பின்னணி இசை கச்சிதம்.சில இடஙகளில் காது வலிக்கும் அளவு இரைச்சல்.

திரைக்கதை ,இயக்கம் ஜேபி.இவர் மிஷ்கினின் உதவியாளர்.ஓப்பனிஙக் சீன்களில் கேமரா கால்களை மட்டும் காட்டுவதிலிருந்தே அது தெரிகிறது.

எடிட்டிஙக் பரவாயில்லை ரகம்.133 நிமிடஙகள் ஓடுகிறது

சபாஷ்  டைரக்டர்

1  அதிக செலவில்லாமல் ஒரு ஹாஸ்பிடலில் 75% ஷூட்டிங்கை முடித்தது

2 நாயகிக்கு ஜோடி ,டூயட். வைக்காதது

  ரசித்த  வசனங்கள் 


1 அதிகாரம் எப்பவும் நம்மைத்துரத்திட்டுதான் இருக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 படம் போட்டு 37 வது நிமிடத்தில் தான் மெயின் கதை ஆரம்பிக்கிறது

2 வில்லனின் பராக்கிரமத்தைக்காட்ட தேவை இல்லாமல் ஓப்பனிஙகில் அவருக்கு 2 சண்டைக்காட்சிகள்

3 ஒரு எம் எல் ஏ போலீசுக்கு போன் பண்ணாமல் ரவுடிக்கு போன் போட்டு உதவி கேட்பது ஏன்?

4 போலீஸ் கமிசனரையே ஒரு ரவுடி மிரட்ட முடியுமா?

5. வில்லன் நாயகியை மிரட்டிய போன் டேப் விஷயத்தை வைத்தே வில்லனைக்கைது செய்யலாமே?எதுக்கு வில்லனை விடறாஙக?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தெலுங்குப்பட ரசிகர்களைத்திருப்திப்படுத்த தெலுங்கில் தான் படம் எடுக்கனும்.எதுக்கு தமிழில் எடுத்தார்களோ?

விகடன் மார்க் யூகம் 40

குமுதம் ரேங்க்கிங்க். ஓக்கே

ரேட்டிங்க் 2.5 / 5

Tuesday, December 09, 2025

KALAM KAVAL - களம் காவல் (2025) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

         

      கர்நாடகாவில் வாழ்ந்த சயனைடு மோகன் குமார் என்ற சீரியல் கில்லரின் வழக்கைத்தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.2003 ல் இருந்து 2009 க்குள் 20 பெண்களைக்கொலை செய்த சீரியல் கில்லர் இவன்


மம்முட்டியின்    சொந்தப்படம் இது.விமர்சகர்கள் பலரும் இது மாதிரி  நெகடிவ் ஷேடில் தமிழில் நடிக்க யாருக்குத்துணிச்சல் இருக்கிறது?என எழுதி இருந்தார்கள்.படத்தில் 18  ஜோடிகள் என்பதால் கமல்,கார்த்திக், சிம்பு  உட்பட பலரும் தயாராக இருப்பார்கள் என்பதே என் கருத்து.        


5/12/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி முதல் 5 நாட்களில் 44 கோடி  வசூல் குவித்த இந்தப்படம்  4/1/2026 முதல் சோனி லைவ் ஓடி டி யில் வெளி வர இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.ஒரு சாதியக்கலவரத்தில் ஒரு பெண்ணால் அபாண்டமாகக்குற்றம் சாட்டப்பட்டு ட்ரான்ஸ்பர் ஆகிறார்.அந்தப்பெண்ணைப்பற்றி விசாரிக்கும்போது அந்தப்பெண் மிஸ்சிங்க் கேசில் பைல் ஆகி இருப்பதைக்கண்டு பிடிக்கிறார்.அதைத்தொடர்ந்து கேரளா ,தமிழக பார்டரில் பல பெண்கள் மிஸ்சிங்க் ஆவதைக்கண்டு பிடிக்கிறார்.ஆனால் குற்றவாளியைப்பிடிக்க முடியவில்லை


வில்லன் ஒரு சைக்கோக்கில்லர்.பெண்களைத்தன் பேச்சில் மயக்கி  கரெக்ட் பண்ணி ,சம்பவம் பண்ணிக்கொலை செய்பவர் ( ஆனால் நிஜ சயனைடு மோகன் நகைக்காகக்கொலை செய்தானாம்).வில்லனுக்கு அழகான குடும்பமும் உண்டு.ஆனால் குடும்பத்தில் இந்த விஷயம் தெரியாது.


ஒரு பக்கம் வில்லன் தன் லீலைகளை,கொலைகளை அரஙகேற்றிக்கொண்டே இருக்க வில்லனைப்பிடிக்க நாயகன் போடும் திட்டஙகள் எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது தான் மீதிக்கதை.


நாயகன் ஆக  வினாயகன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.அவரது உடல் மொழி அபாரம்.போலீஸ் யூனிபார்ம் இல்லாமலேயே டிபார்ட்மெண்ட் கம்பீரம் கொண்டு வருகிறார்.ஆனால் அவர் ஹேர் ஸ்டைல் சரி இல்லை.கவனம் காட்டி இருக்கலாம்.


வில்லன் ஆக மம்மூட்டி.ஜாலியான  கேரக்டர்.நடிக்கப்பெரிய சிரமம் இல்லை.பெண்களைக்கரெக்ட் பண்ற மாதிரி பேசுவதும் கொலை செய்வதும் அசால்ட் ஆக செய்கிறார்.அவர் சிகரெட் ஊதும் அழகே தனி 


ஜிபின் கோபிநாத் நடிப்பு கச்சிதம்.காயத்ரிஅருண்,ரஜிசா விஜயன்,ஸ்ருதி ராமச்சந்திரன்,மாளவிகாமேனன்,தன்யா அனன்யா அனைவர் நடிப்பும் கச்சிதம்


முஜீப் மஜித்தின் பின்னணி இசை அபாரம்.பல சீன்களில் டெம்ப்போ ஏற்றுகிறார்.பைசல் அலியின் ஒளிப்பதிவும் அபாரம்.18 பெண்களுக்கும் க்ளோசப் ஷாட்கள் அழகு.

பிரவீன் பிரபாகரின் எடிட்டிஙகில் படம் 144 நிமிடஙகள் ஓடுகிறது.முதல் பாதி நல்ல வேகம்.பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.

ஜிஷ்னு ஸ்ரீகுமாருடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர்  ஜிதின் கே ஜோஸ்


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனும் வில்லனும் சேர்ந்து கொள்ளும் இன்டர்வெல் பிளாக் சீன் அருமை

2 பொதுவாகக்கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படஙகளில் கையாளப்படும் பாணி இல்லாமல் புது பாணியில் விசாரணை நடப்பது அருமை.

3 வில்லனைப்பிடிக்க வில்லனே நாயகனுடன் சேர்வதும் வித்தியாசமான கான்செப்ட்டே

4 வில்லன் கரெக்ட் பண்ணும் 18 பெண்களையும் குடுன்பப்பாங்கான ,அழகான பெண்களாகத்தேர்வு செய்த  சாமார்த்தியம்

5  கதைக்களம் 18+ ஆக இருந்தாலும் காட்சி அமைப்பில் கண்ணியம் மாறாத தன்மை


  ரசித்த  வசனங்கள் 

1 டியர்.நியூஸ் பார்த்தீங்களா?நல்லாப்பழகுன பெண்ணைக்கொல்ல ஒருத்தனுக்கு எப்படி மனசு வரும்? எப்படிக்கொன்றிருப்பான் ?


இதோ இப்படித்தான்

2. நம்மைக்கடிக்கும் கொசுவைக்கொல்லும்போது நமக்கு ஒரு ஆத்ம திருப்தி வரும்.அது மாதிரி தான் கொலைகள் செய்யும்போது எனக்கு ஒரு திருப்தி

3.  சீறிவரும் பாம்பைக்கொல்வதில் ரிஸ்க் இருக்கு.சவாலும் இருக்கு.அதில் ஒரு எக்ஸ்ட்ரா திருப்தி இருக்கு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனுக்கு தான் தேடி வரும் பெண் காணாமல் போனதுக்கும் ,காணாமல் போன மற்ற பெண்கள் கேஸ்க்கும் சம்பந்தம் இருப்பதை எப்படிக்கண்டு பிடிக்கிறார்?என்ற விபரம் சொல்லப்படவில்லை

2 வில்லன் தான் கொல்லும் பெண்கள் ஒவ்வொருவரின் டெட் பாடியைப்பார்த்து விட்டுத்தான் இடத்தை விட்டு நகர்கிறார்.அந்த ஒரு பெண்ணை மட்டும் மாத்திரை மட்டும் தந்து விட்டு அசால்ட் ஆக நகர்வது எப்படி?

3 உயிர தப்பிய பெண்ணை உயிரோடு விடுவது ஆபத்து என்பது தெரியாதா? வீடுவரை வந்து மிரட்டி விட்டு மட்டும் போவது எப்படி? எத்தனையோ கொலை செய்பவர் அந்தப்பெண்ணையும் ஏன் கொல்லவில்லை?

4 வில்லனுக்கு நிஜத்தில் 70+ வயது.கதைப்படி 40+.ஆனால் பல பெண்களை ஈசியாகக்கரெக்ட் செய்கிறார்.அது எப்படி?என்ற டீட்டெய்லிங்க் இல்லை

.சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் எப்படி கரெக்ட் பண்றார் என்ற டீட்டெய்லிங்க் இருக்கும்.காரணம் திரைக்கதை உதவி கே பாக்யராஜ்.ஆனால் இதில் அது மிஸ்சிங்.ஆனால் அந்த விஷயத்தில் கோட்டை விட்டவர்கள் பிகர்கள் செலக்சனில் விட்டதைப்பிடித்தார்கள்.

5. வில்லனுக்கு கொலை செய்வதில் ஒரு இன்பம் கிடைக்கிறது எனில் அவன் பாட்டுக்கு எதிர்ப்பட்ட எல்லோரையும் கொல்லலாமே? ஏன் சிரமப்பட்டு கரெக்ட் பண்ணி அநுபவித்துப்பின் கொல்ல வேண்டும்? இது தனி ட்ராக்.அது தனி டிராக்.எதுக்கு மிக்ஸ் பன்றான்? இந்த விபரமும் இல்லை

6 க்ளைமாக்சில் நாயகனுக்குத்தன் சுயரூபம் தெரிந்து விட்டது என்பதை உணரும் வில்லன் டக்கென தப்பிக்கப்பார்க்காமல் அவர் கூட சோலோ பைட் போட்டுட்டு இருக்கான்.

7 கருத்தடை மாத்திரை எனப்பொய் சொல்லி வில்லன் தான் கரெக்ட் செய்த பெண்களுக்கு எல்லாம் தருகிறான்.குழந்தை பாக்யத்துக்கு ஆசைப்படும் பெண் அதை சாப்பிடாமல் விட வாய்ப்பு இருக்கு என்ற கோணத்தில் சிந்தித்து பிளான் பி எதுவும் வில்லன் போடாதது ஏன்?

8 வில்லன் 24 மணி நேரமும் பொம்பளைப்பொறுக்கியோகவே சுத்திட்டு இருக்கான்.சொந்த சம்சாரத்துக்கு டவுட் வராதது ஏன்?நாம 10 நிமிசம் வீட்டுக்கு லேட்டா வந்தாலே பாடாய்ப்படுத்தறாங்க.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மம்முட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் க்ரைம் திரில்லர் ரசிகர்களும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5.



Monday, December 08, 2025

ஸ்டீபன்(2025)-தமிழ்-சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் திரில்லர் )@நெட்பிளிக்ஸ்

               


       பெரிய பட்ஜெட் படங்களை இனித்திரையிட மாட்டோம்.அவற்றால் எங்களுக்கு நட்டமே!புதிய படங்களை நாங்களே தயாரித்து வெளியிடுவோம் என்ற ஆரோக்யமான அறிவிப்பை வெளியிட்ட நெட் பிளிக்ஸ் பிள்ளையார் சுழியாக ஆரம்பித்து வைத்த இந்தப்படம் திரைக்கதையில் அசத்துகிறது.


வன்முறை தூக்கலாக இருப்பதால் அனைவருக்குமான படம் இல்லை இது.  5/12/2025 முதல்  திரை அரங்குகளில் வெளிவராமல் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆக நெட்பிளிக்சில் வெளிவந்துள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.நாயகி ஒரு மனோவியல் மருத்துவர்.இருவரும் ஸ்கூல்மேட்ஸ்.இருவரும் இணைந்து ஒரு கேசை டீல் செய்ய வேண்டி வருகிறது.


வில்லன் ஒரு சைக்கோ சீரியல் கில்லர்.9 பெண்களைக்கொலை செய்தவன்.கொலை செய்து விட்டு அவனாகவே போலீசில் சரண்டர் ஆகிறான்.

எதனால் இத்தனை கொலைகள்? ஏன் அவனாகவே சரண்டர் ஆகிறான்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை திரைக்கதை சொல்கிறது.


இந்த ஒன் லைன் கதையைக்கேட்டால் அட போங்கப்பா.இது மாதிரி பல படஙகளைப்பார்த்தாகி விட்டது என சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.


வில்லனின் அப்பாவும் ஒரு சைக்கோ ,அவருக்கு முடியாமல் ஹாஸ்பிடலில் படுத்திருக்கும்போது கிடைச்சுதுடா சான்ஸ் என வில்லனின் அம்மாவும் சைக்கோ அவதாரம் எடுக்கும் காட்சிகள் எல்லாம் அபாரம்.


வில்லன் ஆக மெயின் ரோலில் கோமதி ஷங்கர் என்பவர் நடித்திருக்கிறார்.தாடி வைத்திருப்பதால் தனுஷ சாயல்.கொலை செய்யுன்போது காட்டும் வன்மமும் ,ரிலாக்சாக இருக்கும்போது அப்பாவித்தன புன்னகையும் ஓக்கே ரகம்.


வில்லனின் அம்மாவாக  விஜய ஸ்ரீ என்பவர் கலக்கி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் படையப்பா நீலாம்பரி ,மன்னன் விஜயசாந்தி ரோல் ,சந்திரமுகி ஜோதிகா ,பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா ரோல் ,தூள் சொர்ணாக்கா ,திமிரு வில்லி ,என வில்லிகள்  பட்டியலில் இவரும் இனி இடம் பிடிப்பார்.அபாரமான நடிப்பு. மாணிக்கம் ஆக பவ்யமாய் வருவதும் மாணிக் பாட்சாவாக வில்லியாக வருவதும் செம ட்ரான்ஸ்பர்மேஷன்


வில்லனின் அப்பாவாக  குபேரன் என்பவர் நடித்திருக்கிறார்.திண்டுக்கல் ஐ லியோனி சாயல்.இவரும் சைக்கோவாக ,குடிகாரனாக வில்லத்தனம் காட்டி பின் பவ்யமான தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.


வில்லனின் காதலி ஆக ஷிரிஸ்சா என்பவர் நடித்திருக்கிறார்.பரவாயில்லை ரகம் தான்.அழகிலும் ,முக வசீகரத்திலும்.நடிப்பிலும் பாஸ்மார்க்.


நாயகன் ஆக போலீஸ் ஆபீசர் ஆக மைக்கேல் தங்கதுரை ஓக்கே ரகம்.இவருக்கு வாய்ப்பு கள் அதிகம் இல்லை

நாயகி ஆக  ,மனோவியல் மருத்துவர் ஆக ஸ்ம்ருதி வெங்கட் கச்சிதமாக நடித்திருக்கிறார்.நாயகனை  விட நாயகிக்கு அதிகக்காட்சிகள்


இந்த மாதிரி  திரில்லர் கதைகளில்  டெக்னிக்கல் டீம் சப்போர்ட் வேண்டும்.அது பக்காவாகப்பொருந்தி இருக்கிறது.


ஒளிப்பதிவு கோகுல் கிருஷ்ணா.என்கொயரி நடக்கும் ரூமில் கேமரா கோணஙகள் ,லைட்டிங்க் பக்கா.குறியீடாக வரும்  ராட்சச சக்கரங்கள்  நியான் லைட்ஸ் செட்டிங்க் அருமை. பாடல் காட்சிகளில் கவித்துவம் மிஸ்சிங்க்


ஆர்ட் டைரக்சன் அமரகீர்த்தி  ராட்டினம் செட்டிங்க் அருமை.இசை ராகவ் ராயன்.பின்னணி இசை  அருமை.குறிப்பாக என்கொயரி சீன்கள் கலக்கல் பிஜி எம்.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர்  மிதுன்.வில்லன்   ஆக  நடித்தவர்  திரைக்கதையிலும்  பங்காற்றி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்

1 வில்லனின் அம்மா கேரக்டர் டிசைன் அபாரம்.அதே போல் அவர் நடிப்பும் பக்கா


2 வில்லனின் சைக்காலஜிக்கல் டெஸ்ட் எடுக்கும் டாக்டர் ரோர்சாக் டெஸ்ட் புதிர்கள் செம.

3  திரைக்கதை உத்தி.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 

1 எதுக்காக நல்லது பண்றோம்னே தெரியாமயே பல நல்லவர்கள் நல்லது பண்ணிட்டுதான் இருக்காங்க


2  எமோஷனல் டெசிசன் ஆல்வேஸ் டேஞ்சரஸ்

3  பொண்ணு எப்படி இருக்கும்?

பொண்ணு மாதிரி இருக்கும்

4  நம்ம வாழ்க்கையைக்காப்பாற்றும்  சக்தி காதலுக்கு இருக்குன்னு நம்பறேன்

5  வாழ்க்கைல நான் பண்ணின ரெண்டே தப்பு 1 அதீத குடி 2  உனக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்தது

6. கொலை செய்யக்காரணம் எதும் இல்லை,சும்மா கொன்னு பார்க்கலாம்னு தோணுச்ச

7 எந்த எமோஷனல்ல  யாரை ஏமாத்தலாம்னு தெரிஞ்சு வெச்சுக்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் ஆக வரும் போலீஸ் ஆபீசர் ஏன் எல்லா சீன்களிலும் தம் அடிக்கிறார்?

2  வில்லன் நிஜத்தில் செய்த முதல் நான்கு கொலைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் புரியுது.ஆனால் அவன் ஒத்துக்கொள்ளும் 9 பெண் கொலைகளுக்கு சொல்லும் காரணம் நம்ப முடியலை.

3. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சீனில் ஒரு நாடகத்தனம் தெரியுது.அதை வேறு மாதிரி படமாக்கி இருக்கலாம்.

4  இவ்ளோ புத்திசாலித்தனமாக யோசிக்கும் வில்லன் போலீசில் சரண்டர் ஆகி  ஏன் ஜெயில் வாழ்க்கைக்குப்போகனும்?

5 வில்லனின் காதலி கொலைகள் விஷயம் தெரிந்ததும் நைசாக எஸ்கேப் ஆகாமல் அவன் மீது காதல் தொடர்வது எப்படி?

6 வில்லன் டெட்பாடியை காட்டிலேயே போட்டுட்டு வந்துடுவேன் என க்ரைம் ஸ்பாட் காட்டுகையில் ஒரு சாதா தோட்டத்தைக்காடு என்று காட்டுவது காதில் பூ ரகம்

7 இவ்ளோ பெரிய சென்சேசனல் கேஸ் ஒரு சாதா எஸ் ஐ போதுமா?ஹையர் ஆபீசர்ஸ் விசிட் இல்லை

8  பிளாஸ்பேக் சீன்கள் ஒரே கோர்வையாக வராமல் அவ்வப்போது வருவதால் சரியாக எமோஷனல் கனெக்ட் தரவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்வ்-18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஹீரோ வேல்யூ இல்லை என்றாலும் நல்ல திரைக்கதை எனில் பார்ப்பேன் என்பவர்களுக்கான படம்.விகடன் மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்க். நன்று.ரேட்டிங்க் 3/5


Stephen
Promotional release poster
Directed byMithun Balaji
Written by
  • Mithun Balaji
  • Gomathi Shankar
Produced by
  • Jayakumar
  • Mohan
Starring
Production
company
JM Production House
Distributed byNetflix
Release date
  • 5 December 2025
CountryIndia
LanguageTamil

Sunday, December 07, 2025

THE GIRL FRIEND(2025)-தெலுங்கு- சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)@நெட்பிளிக்ஸ்

         

                7/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்த லோ பட்ஜெட் படம் பாக்ஸ் ஆபீசில் 29 கோடி ரூபாய் வசூல் செய்து பலரது புருவங்களையும் உயர்த்த வைத்து உள்ளது.நேர்மறையான விமர்சனஙகளைப்பெற்ற இந்தப்படம்  இப்போது 5/12/2025 முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி அம்மா இல்லாமல் வளர்ந்த அப்பா செல்லம்.முதுகலைப்படிப்பிற்காக வெளியூர்  காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்


நாயகனுக்கு அப்பா இல்லை.அம்மா மட்டும் தான்.காலேஜில் ரேகிங் நடக்கும்போது சீனியர் சொல்படி டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்கிறார்.

நாயகனின் டான்சால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் வலிய வந்து தன் காதலை சொல்லும்போது நாயகன் ஏற்கவில்லை.(இவ்ளோ நல்ல ஆம்பளைஙக ஊரில் இருக்காஙகளா?)


நாயகன்,நாயகி இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்கிறார்கள்.முதலில் காதலை சொன்னது நாயகன் தான்.நாயகி ஏற்றுக்கொள்கிறாள்.


இவர்களது காதல் காலேஜ் முழுக்கப்பரவி விடுகிறது.

நாயகனின் வீட்டுக்கு நாயகி ஒரு முறை போனபோதுதான் நாயகனின் அம்மா ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தால் கட்டுப்பெட்டியாக இருப்பதை நாயகி உணர்கிறார்.


நாயகனுடன் திருமணம் செய்து வாழ்ந்தால் தன்னால் சுதந்திரமாக இருக்க முடியாது.அடிமை ஆகத்தான் வாழ வேண்டும் என்பதை உணர்கிறாள்.

நாயகி நாயகன் பிடியிலிருந்து விலகி அந்த டாக்சிக் ரிலெசன்ஷிப்பை முறித்துக்கொண்டாரா? நாயகன் விட்டாரா?என்பது மீதி திரைக்கதை.


நாயகி ஆக  ராஷ்மிகா மந்தனா  பிரமாதமான நடிப்பை வழஙகி இருக்கிறார்.கிளாமர் இருக்குமிடத்தில் குணச்சித்திரம் தங்காது என்ற பழமொழியை உடைத்திருக்கிறார்.(அப்படி ஒரு பழமொழி இருக்கா?)


நாயகன் ஆக வில்லன் ஆக டூ இன் ஒன் ரோலில்  தீக்‌ஷித் ஷெட்டி  நம் வெறுப்பை சம்பாதிக்கும் அளவு நடித்திருக்கிறார்.தாடியுடன் அவர் வரும் முதல் சீனிலேயே இது விளஙகாது என நினைத்தேன்.


நாயகன் மீது ஒரு தலைக்காதல் வைத்திருக்கும் நபர் ஆக  அனு இமாநுவேல் கச்சிதமாக நடித்திருக்குறார்.ஓவர் மேக்கப்.கொஞ்சம் குறைச்சுக்கம்மா என சொல்ல வைக்கிறார். நாயகிக்கே சிங்கிள் கோட்டிங்க் பவுடர் தான்.இவருக்கு மட்டும் டபுள் கோட்டிங் எதுக்கு?


நாயகியின் அப்பாவாக ராவ் ரமேஷ கன கச்சிதம்.

நாயகனின் அம்மாவாக ரோகினி ரகுவரன் டயலாக்கே பேசாமல் உடல் மொழியாலேயே கவர்கிறார்.


காலேஜ் ஹெச் ஓ டி ஆக நடித்து திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராகுல் ரவீந்திரன்


ஹேசம் அப்துல் வகாபின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை.பிரசாந்த் ஆர் விஹாரியின் பின்னணி இசை கலக்கல் ரகம்.

கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு கவிதை..சோட்டா கே பிரசாத்தின் எடிட்டிஙகில் படம் 138 நிமிடஙகள் ஓடுகிறது.



சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின் அம்மா ரோகிணி யின் கேரக்டர் டிசைன் புதியது.வருஙகால மருமகளை அவர் ரிசீவ் செய்யும் பாங்கு  இதுவரை நாம் காணாதது.

2 ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தில் நாம் சிக்க இருக்கிறோம் என்பதை நாயகி உணரும் தருணம் அருமை.

3 ஒளிப்பதிவாளர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.ஆல மர வேர்களால் நாயகி சிறைப்பட்டு இருப்பதை சிம்பாலிக்காய் உணர்த்திய விதம் அருமை.

4 நாயகியின் அப்பா ஹாஸ்டலுக்கு சர்ப்பரைஸ் விசிட் ஆக வரும் சீனும் அதைத்தொடர்ந்து நாயகி சந்திக்கும் சிக்கலும்  அருமை

5 ஜாலியான முதல் பாதிப்படத்துக்கு லைட் கலர் ஷேடு கொடுத்த ஒளிப்பதிவாளர் கனமான பின் பாதிப்படத்துக்கு டார்க் ஷேடு கொடுத்த ஐடியா அருமை.


  ரசித்த  வசனங்கள் 

1 நம் வாழ்வின் முக்கிய தீர்மானஙகளை நாம் தான் எடுக்கனும்.அப்பாவோ ,கணவனோ எடுக்கக்கூடாது

2 லவ் பண்றப்போ கிஸ் அடிக்கிறா,கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டா பிரேக்கப் அப்டிஙகறா

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு நாயகன் அசால்ட் ஆக வந்து நாயகி ரூமில் தங்குவது எப்படி?

2 கோர்ஸ் முடிய இன்னமும் ஒரு மாசம் தான் இருக்கு,அதற்குல் மகள் படிப்பை ஏன் கெடுக்கப்பார்க்கறீங்க?என்று நாயகியின் அப்பாவிடம் வாதிடும் நாயகன் அடுத்த காட்சியில் நாயகியிடம் இனி நீ படிச்சு ,கோர்ஸ் முடிச்சு என்ன பண்ணப்போறே?என முன்னுக்குப்பின் முரணாகப்பேசுவது எப்படி?

3 நாயகனை விரும்பும் இன்னொரு பெண் நாயகியிடம் அதைப்பற்றி விளக்கியபின் நாயகி அது பற்றி நாயகனுடன் டிஸ்கஸ் செய்யாதது ஏன்?பொதுவாக எந்தப்பெண்ணும் விசாரிப்பாளே?

4 கோபத்தில் நாயகியின் அப்பா உடைத்த லேப்டாப்புக்கு  நட்ட ஈடாக புது லேப்டாப் வாங்கித்தருவதாக நாயகி சொல்லும்போது காலேஜ் ஹெச் ஓ டி  கூலாக அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை என்பது எப்படி!50,000 ரூபாய்

5 நாயகன் நாயகியை அவமானப்படுத்த நாயகியைப்பற்றித்தவறாக ஹாஸ்டல் ரூம் வாசலில் எழுதி வைப்பது ஓவரோ ஓவர்

6 காலேஜ் ஹெச் ஓ டி க்கு நாயகி இதுதான்  எங்கள் ஹாஸ்டல் என அறிமுகப்படுத்துவது காமெடி.அது கூட அவருக்குத்தெரியாதா? காலேஜூம் ,ஹாஸடலும். அடுத்தடுத்து இருக்கு.

7 நாயகன் ஓவர் அலப்பறைகள் பல செய்தும் கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரிக்கக்கூட இல்லை.

8 நாயகிக்கு கிளாமர் சீன் வைக்கனும்னா டூயட் சீனில் வைக்கலாம்.மிக இறுக்கமான  சோகக்காட்சியில் எல்லாம் கிளாமர் காட்ட வைக்கலாமா?

9 நாயகன் மீது ஆடியன்சுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக சும்மா கண்டபடி அந்த கேரக்டர்  டிசைனை சொதப்பி விட்டிருக்கிறார்கள்

10 எந்த ஒரு அப்பாவும் போனில் அழும் மகளுக்கு ஆறுதல் சொல்லாமல் வீராப்பு காட்ட மாட்டார்கள்

11 அர்ஜூன் ரெட்டி  (ஆதித்யவர்மா)பட சாயல் ஆங்காஙகே தெரியுது

12 க்ளைமாக்சில் நாயகி திடீர் என பெரிய பதவியில் அமர்வது எல்லாம் ரஜினி படமா?என எண்ண வைக்கிறது

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஆண்களுக்கு கடுப்படிக்கும்.ரேட்டிங்க் 2.75 /5


The Girlfriend
Theatrical release poster
Directed byRahul Ravindran
Written byRahul Ravindran
Produced by
  • Vidya Koppineedi
  • Dheeraj Mogilineni
Starring
CinematographyKrishnan Vasant
Edited byChota K. Prasad
Music bySongs:
Hesham Abdul Wahab
Score:
Prashanth R. Vihari
Production
companies
Dheeraj Mogilineni Entertainment
Geetha Arts
Distributed by
Release date
  • 7 November 2025
Running time
138 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box office29.07 crore[2]

Saturday, December 06, 2025

DIES IRAE(2025)-மலையாளம்- சினிமா விமர்சனம் (ஹாரர் திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

 

                 இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிற   3 காரணங்கள்.மோகன்லாலின் மகன் நாயகன் +மம்முட்டி நடித்த பிரம்மயுகம்(2024)பட இயக்குநர் ராகுல் சதாசிவம் தான் இப்பட இயக்குநர்+ லோ பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் வசூல் 83 கோடி ரூபாய்.


31/10/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது ஜியோ ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது      


2004ம் ஆண்டு வெளியான ஷட்டர் என்ற தாய்லாந்துப்படத்தை அபிஷியல். ரீமேக்காக தமிழில் 2007ம் ஆண்டு சிவி என்ற தமிழ்ப்படமாக எடுத்தார்கள்.அதன் அன் அபிஷியல் பட்டி டிங்கரிங்க் அட்லீ ஒர்க் தான் இந்தப்படம்


டைஸ் இரே என்பது லத்தீன் மொழி சொல்.அர்த்தம் தீர்ப்பு நாள் ( ஜட்ஜ்மெண்ட் டே)

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு ஆர்க்கிடெக்ட்.கோடீஸ்வரன்.அம்மா,அப்பா இருவரும் பாரீனில் செட்டில் ஆகி விட்டார்கள்.நாயகன் மட்டும் தனியாக பங்களாவில் இருக்கிறான்


தனிமையில் இருப்பதால் நண்பர்களை அழைத்து வந்து குடி ,குட்டி என ஜாலியாக இருக்கிறான்.


நாயகனுடைய முன்னாள் காதலியும் ,ஸ்கூல் மேட்டும் ஆன நாயகி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டயாகத்தகவல் கிடைக்கிறது.உடனே நாயகன் நாயகியின் வீட்டுக்குப்போகிறான்.


நாயகன் நாயகியுடன் நெருக்கமாக இருந்து விட்டுப்பின் கழட்டி விட்டவன்.பின் நாயகி போன் பண்ணும்போதெல்லாம் தவிர்த்து வந்தவன்.இப்போது எதனால் தற்கொலை செய்தாள் ?என்பது தெரியாமல் இருக்கிறான்.

நாயகியின் மரணத்துக்கு அவள் வீட்டில் துக்கம் விசாரித்து விட்டுக்கிளம்பும்போது நாயகன் நாயகியின்  நினைவாக அவள் உபயோகித்த ஹேர் க்ளிப்பை  எடுத்து வைத்துக்கொள்கிறான்


பின் வீட்டுக்கு வந்த நாயகனுக்கு சில அமானுஷய  சம்பவங்கள் நடக்கிறது.முதலில் அது நாயகியின் ஆவி என்று நினைத்த நாயகனுக்கு அது ஒரு ஆண் பேய் என்பது தெரிய வருகிறது.

அந்த ஆண் பேய் நாயகியை ஒரு தலையாகக்காதலித்தவனோ என நாயகன் சந்தேகம் கொள்கிறான்.

இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக பிரணவ் மோகன் லால் நடித்திருக்கிறார்.சில இடஙகளில் நன்கு நடித்திருக்கிறார்.பல இடஙகளில் சமாளித்து இருக்கிறார்.


நாயகனுக்கு உதவி செய்யும் இஞ்சினியர் ஆக ஜிபின் கோபிநாத் நாயகனைத்தூக்கி சாப்பிடும் பய் நடிப்பால் கலக்கி இருக்கிறார்.

நாயகி ஆக சுஷ்மிதாபட் போட்டோவில் மட்டுமே வருகிறார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கேரக்டரில் வரும் ஜெயா க்ரூப் மாறுபட்ட நடிப்பு.

கிறிஸ்டோ சேவியர் இசை பிரமாதம்.சின்னச்சின்ன ஒலிகள் கூட பயமுறுத்துகிறது.

ஒளிப்பதிவு ஷேனாத் ஜலால்.மொத்தப்படத்துக்கும் ஒரு தூண் மாதிரி கேமரா.


சபீக் முகமது அலியின் எடிட்டிஙகில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது.ரொம்பப்பொறுமைஇந்தப்படம்



திரைக்கதை ,இயக்கம் ராகுல் சதாசிவன்


சபாஷ்  டைரக்டர்

1 வழக்கமான ,ரெகுலரான டெம்ப்ளேட் பேய்க்கதையைக்கொஞ்சம் மாற்றி. ஆண் பேய் மேட்டரை மிக்ஸ் செய்த விதம்

2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

3 தனது முந்தைய படஙகளான பிரம்ம யுகம்,பூதகாலம் இரண்டுக்கும் க்ளைமாக்சில் சம்பந்தப்படுத்திய விதம் 

  

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஆபத்து இருக்கு என்று தெரிந்த பின்னும் நாயகன் ஏன் அதே வீட்டில் தங்கனும்?

2 நல்ல காதலன் தான் காதலி நினைவாக அவள் பொருளை எடுத்து வைப்பான்.நாயகன் தான் பொறுக்கி ஆச்சே? எதுக்கு ஹேர்க்ளிப்?

3 நாயகனைப்பழி வாங்கத்துடிக்கும் நாயகியின் ஆவியோ,நாயகியை ஒருதலையாய்க்காதலித்த காதலனின் ஆவியோ நாயகியின் தம்பியை எதற்குத்தாக்க வேண்டும்? சாகக்கிடக்கிறான்.சம்பந்தமே இல்லையே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொதுவாக எனக்குப்பேய்ப்படஙகள் பிடிக்காது.அதனால் இதுவும் பிடிக்கலை.ஆனால் சிலருக்குப்பிடிக்கலாம்.ரேட்டிங் 2/5


Diés Iraé
Theatrical release poster
Directed byRahul Sadasivan
Written byRahul Sadasivan
Produced by
StarringPranav Mohanlal
Gibin Gopinath
Jaya Kurup
Sushmitha Bhat
CinematographyShehnad Jalal
Edited byShafique Mohammed Ali
Music byChristo Xavier
Production
companies
Distributed by
  • Think Studios (domestic)
  • Home Screen Entertainment (overseas)
Release date
  • 31 October 2025
Running time
113 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹83 crore[2]

Friday, December 05, 2025

SHE RIDES SHOTGUN (2025)-ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர்)@அமேசான் ப்ரைம்

           

       ஜோர்டான் ஹார்பர் 2017ல் எழுதிய ஷி ரைட்ஸ் ஷாட்கன் என்னும் நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது.எல்லோரையும் கவரும் ஜனரஞ்சகப்படம் அல்ல.பெண் குழந்தை உள்ள அப்பாக்களுக்கு ஈசியாகக்கனெக்ட் ஆகும்.காரணம் படம் முழுக்க ஒரு அப்பாவும் அவரது 10  வயது மகளும் மேற்கொள்ளும் சாகசப்பயணம் தான் இது.சிறுமியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கார்  திருடன்.சின்னச்சின்ன திருட்டுக்கள்,கொள்ளைகள் செய்பவன்.செய்த தப்புக்காக ஜெயிலில் இருந்து விட்டு இன்று தான் ரிலீஸ் ஆகிறான்.நாயகன் ஜெயிலில் இருந்தபோது தனது மகளை இரண்டு வருடங்களாகப்பார்க்கவில்லை.


நாயகனின் மகள் ஸ்கூல் முடிந்ததும் தன் அம்மா வந்து அழைத்துப்போவார் என காத்திருக்கிறாள்.அப்போது காரில் அப்பா வரவே அவளுக்கு ஆச்சரியம் +சந்தேகம்.அப்பா,அம்மா எங்கே? அம்மாவை என்ன செஞ்சீங்க? எனக்கேட்கிறாள்.


நாயகன் சரியான பதில் சொல்லவில்லை.மகளை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத்தங்குகிறான்.இரவில் நாயகன் தூங்கிய பின் மகள் டி வி பார்க்கிறாள்.அப்போது டி வி யில் சிறுமி,அப்பா இருவரின் போட்டோவைக்காட்டி நியூஸ் வாசிக்கிறார்கள்.சிறுமியின் அம்மாவை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்பதை அந்த சிறுமி தெரிந்து கொள்கிறாள்

உடனே அப்பாவுக்குத்தெரியாமல் வெளியே வந்து போலீசுக்கு போன் பண்ணி விடுகிறாள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே!


மேலே நான் சொன்னது முதல் 5 நிமிடக்கதை மட்டும் தான்.மீதி 2 மணி நேரம் ஒரே ஓட்டம் தான்


நாயகன் ஆக டாரன் எகர்டன் நடித்திருக்கிறார்.அவர் நல்லவரா?கெட்டவரா? என்பதை பாதிப்படம் முடிந்த பின் தான் தெரிந்து கொள்ள முடிகிறது


மகள் ஆக அனா சோபியா ஹெகர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.பேபி ஷாலினி போல சில சீன்களில் ஓவர் ஸ்மார்ட் ஆக இருப்பது கொஞ்சம் கடுப்படித்தாலும் பல சீன்களில் ஆச்சரியப்படுத்துகிறார்.

துப்பறியும் நிபுணர் ஆக ராப் யாங் நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.


வயட் கார்பீல்ட் ஒளிப்பதிவில் முத்திரை பதிக்கிறார்.சிறுமிக்கான க்ளோசப் ஷாட்கள் அருமை.

பிளாங்க் மாஸ் இசை மாஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம் தான்.

ஜூலி மன்றோ வின் எடிட்டிஙகில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் யார்? அவரது பின்புலம் என்ன?என்பதை ஓப்பன் செய்யாமலேயே சஸ்பென்சாகக்காட்சிகளை நகர்த்தி சென்றது


2 அப்பா ,மகள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்புகள்

3. சேசிங்க் சீன்கள் படமாக்கப்பட்ட விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. ஜெயிக்க முடியாத சண்டையை நீ ஆரம்பிச்சுட்டே

2 எல்லா ராஜ்யஙகளும் ஒரு நாள் முடிவுக்கு வரும்

3  ஒரு ராஜாவை சாதா குதிரையால முடிச்சுட முடியும் செஸ்ல


4 அவ என்னை லவ் பண்ண எந்த ரைட்சும் இல்லை,ஏன்னா நான் அதுக்குத்தகுதியானவன் இல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சிறுமி ஓவர்  ஸ்மார்ட் தான்.அதுக்காகக்குண்டு அடி பட்ட அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்ப்பது அட்வைஸ் செய்வதெல்லாம் ஓவர்


2 நாயகனை ஒரு கூட்டமே துப்பாக்கியுடன் சுற்றி வளைக்கும்போது நாயகன் சரண்டர் ஆகாமல் அடம் பிடிப்பது ஏன்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எல்லோருக்கும் படம் பிடிக்காது.ஆக்சன் சீன்கள் அதிகம் இல்லை.சேசிங் மட்டும் தான்.ரேட்டிங்க் 2.25 / 5




Thursday, December 04, 2025

Sisu: Road to Revenge ( 2025 ) சினிமா விமர்சனம்(ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் ட்ராமா)

           

                 

இந்தியாவில் மட்டுமல்ல,ஹாலிவுட்டிலும் முதல் பாகம் ஹிட் ஆகி விட்டால் சின்ராசுவைக்கையில் பிடிக்க முடியாது.இரண்டாம் பாகம் எடுத்தே தீர்வார்கள்.12 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 8 மில்லியன் டாலர் மட்டுமே வசூல் செய்த படம்.ஆனாலும் ஆக்சன் ப்ரியர்கள் படத்தைக்கொண்டாடுகிறார்கள்.


சத்ரியனுக்கு சாவே இல்லைடா என்று கேப்டன் பஞ்ச் டயலாக் பேசியது போல சிசு என்றால்  அழிக்கவே முடியாதவன் என்ற பில்டப் டயலாக்குடன் தொடங்கும் படம் பின் பாதியில் ஆடியன்ஸ் காதில் 2 முழம் கனகாம்பரிப்பூ. சாரி கனகாம்பரப்பூவை சுற்றுகிறது.

2022ல் வந்த சிசு படத்தின் 2ம் பாகம் இது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  முதல் பாகத்தில் போட்ட சண்டை எல்லாம் முடிந்தபின்  சோவியத் யூனியனில் உள்ள தன் வீட்டுக்குப்போகிறார்.அங்கே அவரோட சம்சாரம் ,வாரிசுகள் யாரும் இல்லை.வில்லன் கொன்றிருக்கலாம்.


அது ஒரு மர வீடு.அதனாஅதனால் அதை பார்ட் பார்ட் ஆகப்பிரித்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு நாயகன் கிளம்புகிறான்.பின்லாந்து போய் அமைதியான வாழ்வு வாழலாம் என்பது நாயகனின் எண்ணம்.


ஆனால் வில்லன் அதை விரும்பவில்லை.தடுக்கிறான்.டூ வீலர் ,போர் வீலர் ல எல்லாம் துரத்துனது போதாதுன்னு விமானம் ,ராக்கெட் ,ஜெட் எல்லாம் வெச்சுத்துரத்தறான்.நாயகன்  செங்கோட்டையன் மாதிரி கடைசி வரை தாக்குப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.


சபாஷ்  டைரக்டர்


1 ஒளிப்பதிவு பிரமாதம்.சி ஜி ஒர்க் கும் அருமை.பின்னணி இசை தெறிக்கிறது


2 மலையூர் மம்பட்டியான் படத்தைப்பார்த்துக்காப்பி அடித்தாரோ என எண்ண வைத்தாலும் நாயகனைக்கட்டிப்போட்டிருக்கும் சீன் பதை பதைக்க வைக்கிறது


3 ரயிலில் வரும் ஆக்சன் சீக்வன்ஸ்


  ரசித்த  வசனங்கள் 


படத்தில் பேச்சு இல்லை. வீச்சு தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் வாயிலிருந்து துப்புவது உடைந்த பல்லா? எனப்பார்த்தால் அது துப்பாக்கிக்குண்டு.அடஙகப்பா சாமி.ரீல் அந்து போச்சுடா

2 குற்றுயிரும் குலை உயிருமாய்க்கிடக்கும் நாயகன் அசையவே முடியாது.ஆனால் வில்லனைப்பழி வாங்குவதெல்லாம். ஓவர்


3 ஓவர் வயலென்ஸ்.க்ளைமாக்சில் நாயகன் மேல் 2 பக்கெட் ரத்தத்தை (சாயத்தை) ஊற்றி விட்டு ஷூட்டிங்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ வயலன்ஸ் ஓவர்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன் பிரியர்கள் பார்க்கலாம்.எனக்குப்பிடிக்கலை.ரேட்டிங்க் 2/5


Sisu: Road to Revenge
Finnish theatrical release poster
Directed byJalmari Helander
Written byJalmari Helander
Produced by
  • Petri Jokiranta
  • Mike Goodridge
Starring
CinematographyMika Orasmaa
Edited byJuho Virolainen
Music by
  • Juri Seppä
  • Tuomas Wäinölä
Production
companies
Distributed by
Release dates
  • 21 September 2025 (Fantastic Fest)
  • 22 October 2025 (Finland)
  • 21 November 2025 (United States)
Running time
89 minutes[2]
CountriesFinland
United States
Languages
  • English
  • Finnish
Budget$12.2 million[3]
Box office$8.4 million[4][5]