Tuesday, April 30, 2013

3 பேர் 3 காதல் - டைரக்டர் வஸந்த் பேட்டி @ கல்கி

அறிமுகம்

3 பேர் 3 காதல்


ஆனால் காதல் கதையல்ல!

அர்ஜுன்
டைரக்டர் வஸந்த் பேட்டி...

தமிழ் சினிமாவுல புராண, இதிகாசங்கள்ல ஆரம்பிச்சு, இன்னைக்குவரை ஆயிரக்கணக்கான படங்கள்ல காதலைச் சொல்லியாச்சு. சொல்லப் போனா, தமிழ் சினிமா, காதல் என்ற வட்டத்துக்குள்ளேயே உறியடிச்சுக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, உங்களோடமூன்று பேர் மூன்று காதல்படத்துல இதுவரை சொல்லாத எந்தக் காதலை புதுசா சொல்லப் போறீங்க? என்று படு சீரியஸாக டைரக்டர் வஸந்திடம் கேட்டால்...
அவரோ அசராமல், இதுவரை தமிழ் சினிமாவுல சொல்லாத காதல் கதையை நான் இந்தப் படத்துல சொல்லி இருக்கிறதா இதுவரை யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஏன்னா, இது ஒரு லவ் ஸ்டோரி கிடையாது," என்றார்.
என்ன டைரக்டர் சார்! படத்துக்குத் தலைப்பு மூன்று பேர் மூன்று காதல்னு வைப்பீங்களாம்; படத்துல அர்ஜுன், சேரன், விமல்னு மூணு ஹீரோக்களாம். அவங்களுக்கு ஜோடியாக முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினின்னு மூணு ஹீரோயின்களாம். ஆனா, ‘இது காதல் படம் இல்லைன்னு ரொம்பத் தான் கலாய்க்கறீங்களே! இது நியாயமா?
நான் பொய் சொல்லலை; நான் சொல்வதெல்லாம் .எஸ்.. தரச்சான்றிதழ் பெற்ற நிஜம்!"
அப்படீன்னா?
இது லவ் ஸ்டோரி இல்லை; ஆனா லவ் பத்தின படம். லவ்வுக்கு இந்த உலகத்துல, மக்கள் மத்தியில எவ்வளவு பவர் இருக்குன்னு காட்டற படம். காதலால இந்த உலகத்துல என்னென்ன எல்லாம் நடக்கலாம்னு காட்டி இருக்கேன். இன்னும் சொல்லணும்னா, ‘இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத் தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லைன்னு விமல் ஒரு டயலாக்கூட பேசுவாரு."
என்னது?
யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத்தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லை. ஆனா நாம யோசிச்சாதானே!’ன்னு விமல் ஒரு டயலாக் சொல்வாரு. அதைத்தான் சொன்னேன்."
அப்ப உங்க பார்வையில லவ்னா என்ன?
காதலை நான் எப்படிப் பார்க்கறேன்னா, பல வார்த்தைகள், உணர்வுகளோட ஒட்டுமொத்த உருவமாத்தான் பார்க்கறேன். அன்புகூட என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்தான். பெண்ணாசை, மது குடிப்பதால் வரும் பிரச்னைகள், உறவுகளில் வரும் சிக்கல்கள், ரொம்ப நெருக்கமானவங்களோட மரணத்தோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிடறதில்லைன்னு பல விஷயங்களை நான் என்னோட படங்கள்ல டீல் பண்ணி இருக்கேன். இதுமாதிரியான விஷயங்கள்தான் நான் படம் எடுக்கத் தூண்டுகோலாய் இருக்கு."
சரி! அது மாதிரி இந்தப் படத்துக்கு தூண்டுகோலாய் இருந்தது எது?
காதலைப் பத்தி ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு கருத்து இருந்துகிட்டு இருந்துச்சு. யதேச்சையா நா. பிச்சமூர்த்தியோட கவிதையைப் படிச்சேன். அந்தக் கவிதையில, அவரும் நான் நினைச்சுக் கிட்டு இருந்த விஷயத்தையே சொல்லி இருந்தார். எனக்கு அதைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக்கூட இருந்தது. அதிலிருந்து உருவானது தான் இந்தக் கதை. இந்தக் கதை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ‘ஒரு கதை, நெய்தல் என்கிற கடலும் கடல் சார்ந்த இடத்துலயும், இன்னொண்ணு குறிஞ்சி என்கிற மலையும் மலை சார்ந்த இடத்துலயும், மூணாவது கதை, மருதம் என்கிற வயலும் வயல் சார்ந்த இடத்துலயும் நடக்குது. இன்னொரு விஷயம் என்னன்னா, படத்துல சொல்லி இருக்கிற மூணு பேரோட காதல்ல ஏதாவது ஒண்ணை நிச்சயமா படம் பார்க்கிற எல்லாரும், ‘அட! இது நம்ம லைஃப் கதை மாதிரியே இருக்கேன்னு ஐடென்டிஃபை பண்ணி ரசிப்பாங்க! இந்தப் படம் நிச்சயமா ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய ஒரு படமா இருக்கும்."
அன்று சூர்யா; இன்று வருண்

சூர்யா, சிம்ரன், ஜோதிகா, சுவலட்சுமி, சுர்வீன், லாசினி என்று டைரக்டர் வஸந்தால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பவர் ரித்விக் வருண். வஸந்த் தம் டைரக்ஷனிலேயேமூன்று பேர் மூன்று காதல்படத்தில் ஒரு பாடல் காட்சியின் மூலமாக வருணை அறிமுகப்படுத்துகிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கும் வருண், மணிரத்னத்திடம் கொஞ்ச நாள் பயிற்சி பெற்றவர்.
மகனை நடிகராக்கும் ஐடியா திடீரென்று எப்படி வந்தது?" என்று கேட்டபோது, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலுக்கு, வருணையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவனிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவனுக்கு ஆச்சர்யம். உடனே .கே. சொன்னான். காரணம், அவனுக்கும் நடிக்க ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தப் படம் அவனுக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்" என்றார் வஸந்த்.
மகனை நடிக்க வைப்பது என்று முடிவானதும், தமது குருநாதர் கே. பாலசந்தரிடம் அழைத்துக் கொண்டு போனார் வஸந்த். ‘உன்னுடைய உயரமும், பர்சனாலிடியும் உனக்கு பெரிய பிளஸ் பாயின்ட்என்று சொல்லி வாழ்த்தினார் கே.பி. அடுத்து பாலுமகேந்திராவை சந்தித்தபோது, ‘உனக்கு நல்ல போட்டோஜீனிக் முகவெட்டு இருக்கு!’ என்று சொன்னார். இயக்குனர் மகேந்திரன் தானே வரைந்த சத்யஜித்ரே படம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தினார். பிரசாத் லேப்பில் நடந்த நிகழ்ச்சியில் கே.பி., ரித்விக் வருணை அறிமுகப்படுத்தினார்.

நன்றி - கல்கி

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 11


உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் தூத்துக்குடி மக்களிடம் மட்டும் அல்லாமல் இந்த ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைத்து சமூக ஆர்வலர்களிடமும் மேலோங்கி இருந்தது.


இந்த சூழ்நிலையில், மார்ச் 23-ம் தேதி மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். அப்போது தூக்கத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என அவதிப்பட்டார்கள். ஏதோ தங்களுக்கு மட்டும் இது போல இருக்கிறது என தூக்க கலக்கத்தில் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நேரம் செல்லச் செல்ல இந்த தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வீடுகளில் இருந்த குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டார்கள். இதனால் குழந்தைகளின் இடைவிடாத அழும் சத்தமும், அலறல் சத்தமும் கூடிக் கொண்டே போனது.



அப்போதுதான் ஏதோ விபரீதம் ஏற்பட்டு விட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசாரிக்க தொடங்கினார்கள். வீட்டுக்கு வெளியே வந்தபோது காற்றில் கரும்புகை சூழ்ந்து நிற்பதை பார்த்தார்கள். அதில் அமிலத்தின் நெடி தூக்கலாக இருப்பதையும் அறிந்த பிறகே ஸ்டெர்லைட் ஆலையில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.



உடனடியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். எங்கு பார்த்தாலும் பதற்றம் தொற்றிக் கொண்டது. சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஐநூறுக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளி நோயாளிகளாக ஏராளமானோர் முதல் உதவி மட்டும் எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதியது. நச்சுப்புகையின் பாதிப்பு காரணமாக பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின. அந்த அளவுக்கு புகையின் தாக்கம் வீரியத்துடன் இருந்தது.




வலுவடைந்த போராட்டம்


ஸ்டெர்லைட் நிறுவனம் அளவுக்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு என்ற நச்சுப்புகையை வெளியேற்றியதால் இந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிய வந்தது. இதனால் மக்களுக்கு ஆலை மீதான அச்சம் அதிகரித்தது. 'காற்றில் சிறிதளவு புகையின் அளவு கூடியதற்கே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஒருவேளை ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டால் தூத்துக்குடி நகரமே காலியாகி விடும் போலிருக்கே' என ஒருவருக்கொருவர் பயத்தை பகிர்ந்து கொண்டார்கள்.



இதனால் இந்த நச்சு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடைந்தது. மீனவ மக்கள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் இறங்கினார்கள். வணிகர்கள் கடைகளை அடைத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆலையை சுற்றிலும் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆலைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தினார்கள்.
புகை வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பை நேரடியாக மக்கள் உணர்ந்ததால் இந்த போராட்டத்தில் அனைவருமே உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். அதனால் இது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து சாலை மறியல் செய்தார்கள். தமிழ் அமைப்புகள், கடலோர மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள், மீனவ சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றன. தூத்துக்குடி நகரத்தின் ஒட்டு மொத்த மக்களும் மார்ச் 28-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நகரமே ஸ்தம்பித்தது. மக்கள் வன்முறையில் இறங்கிவிடாமல் பாதுகாக்க போலீஸார் திணறினார்கள்.


விழித்துக் கொண்ட தமிழக அரசு



தன் எழுச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற ஒரே கோரிக்கை மட்டுமே முதல்வருக்கு முன்வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அரசு இந்த விசயத்தை மிகச் சாதாரணமாகவே பார்த்தது. மக்கள் போராட்டம் என்பது ஓரிரு நாளில் முடிந்து போகக்கூடிய விசயம் தானே. அதோடு எளிதில் மறந்து போகக்கூடியவர்களும் தானே..? அதுவே அரசியல்வாதிகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.



அதனால் இந்த விசயமும் மக்கள் மனதில் இருந்து சீக்கிரமே நீர்த்து போய் விடும் என அதிகார வட்டாரத்தினர் சாதாரணமாக நினைத்தார்கள்.



அதனால்தான் முதலில் இந்த விவகரம் பற்றி பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 'ஆலையில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவையும் விடவும் அதிகமாக வெளியேறிய புகையே மக்கள் பாதிப்பு அடைய காரணம்' என தெரிவித்தார். பின்னர் அதனை மாற்றிக் கொண்டு, 'மக்கள் மயக்கம் அடையும் அளவுக்கு பிரச்னை ஏற்பட காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து வருகிறோம்' என பட்டும் படாமலும் பேசினார். அதிகாரிகளும் சரி, ஆலை நிர்வாகமும் சரி, நச்சுப்புகையால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்ட எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் முன்னிலும் வேகமாக போராட ஆரம்பித்தார்கள்.



ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டு இருக்கும் அழிவுகளால் மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். கடலுக்குள் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வாதாரதை பாதிக்க வைத்தது.சுற்றுப்பகுதிகளில் விவசாயம் அழிந்து போனதால் விவசாயிகள் கோபம் அடைந்து இருந்தனர். நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்துக்கு மாறி,  குடிக்க இயலாமல் போய் இருந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர். இவை அனைத்தும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து மிக்கபெரிய போராட்டத்தில் ஈடுபட வைத்தது. 





ஆலையை மூடக்கோரி மார்ச் 28-ல் பந்த நடக்கும் என போராட்டக் குழுவினர் அறிவிப்பை வெளியிட்டதும், தூத்துக்குடி வரலாற்றிலே முதல் முறையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. ஆலைக்கு அருகில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு சதவிகித வெற்றியை பார்த்து அரசு நிர்வாகம் மலைத்துப் போனது. இனியும் பொய் தகவல்களை கொடுத்தால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென உள்ளூர் நிர்வாகிகள் பயந்தார்கள்.


அதனால் மக்களின் நியாயமான போராட்டத்தையும் அதன் வீரியத்தையும் விவரமாக அறிக்கையாக தயாரித்து முதல்வருக்கு அனுப்பினார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை நூற்றுக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதை சுட்டிக் காட்டியது. இதை அனைத்தையும் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க செய்தார்.    




இந்த அறிவிப்பைகேட்டதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தூத்துக்குடி மக்களின் சந்தோசம் நீடித்ததா..? நாளை பார்க்கலாம்...



diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html



 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8


ஆண்டனி ராஜ்
  படங்கள்: ஏ.சிதம்பரம்  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான சட்ட போராட்டம் என்பது நீண்ட வரலாறு கொண்டது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதில் 2010 செப்டம்பர் 28-ல் நல்ல தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திலிப்பி தர்மாராவ், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தார்.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்ற ஆலை நிர்வாகம், உயர் நீதிமன்ர தீர்ப்புக்கு எதிராக இடைக்கால தடையை பெற்று விட்டது. அதனால் தற்போது வரையிலும் ஆலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வுக் குழுக்கள் அல்லது கண்காணிப்பு குழுக்கள் ஆலையின் தரத்தை பரிசோதனை செய்து அறிக்கைகள் கொடுக்கும் நிகழ்வுகள் வாடிக்கையாக நடந்து வருகின்றன். ஆனால் அந்த அறிக்கைகளும்  பெரும்பாலும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருப்பதுதான் வேதனைக்கு உரியது. சில அறிக்கைகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கினாலும் அவையும் நிறைவேற்றப்படுவது இல்லை என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு

தமிழகத்தில் உள்ள ஆலைகள் பலவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக திகழ்வதாக எழுந்த புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்தது. டாக்டர் தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் உஷா சுப்பிரமணியன் இடம் பெற்று இருந்தார். 


தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் மூவரும், தமிழக அரசின் சார்பில் மூவரும் குழுவில் இடம் பெற்று இருந்தனர். மக்கள் சார்பில் கடலோர மக்கள்கூட்டமைப்பின் அமைப்பாளரான புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் அந்த குழுவிடம் மனு கொடுத்து ஆலையில் அத்துமீறல்களை தெரிவித்தனர்.

2004 செப்டம்பர் 20 முதல் 22 வரையிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அந்த குழுவானது, 21-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. ஆலைக்குள் நச்சுக் கலந்த கழிவுப் பொருட்கள் குவித்து வைக்கபப்ட்டு இருந்ததை அக்குழு நேரில் பார்வையிட்டது. காற்றில் அளவுக்கு அதிகமாக சல்ஃபர் கலந்த புகை பரவுவதையும் கவனமாக குறித்துக் கொண்டனர்.

ஆலை நிர்வாகம் மூன்றுமுறை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரித்து இருந்த போதிலும் அதற்கான அனுமதி முறைப்படி பெறப்படவில்லை. ஆலை செயல்பட தொடங்கிய நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் முன்தேதியிட்டு அனுமதிகடிதங்களை கொடுத்ததற்கான ஆவணங்களை பார்த்துது அக்குழுவினரே அதிர்ந்தனர். ஆலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திரவ கழிவுகளையும் திடக் கழிவுகளையும் கையாள தேவையான எந்திரங்கள் இல்லாதது பற்றியும் இக்குழு கவலை தெரிவித்தது.

 
ஆலையை உடனடியாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. அப்போது அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது உறுதியானாலோ அல்லது கழிவுகளை கையாள்வதில் மெத்தனம் காட்டப்பட்டாலோ காசு மாசுபடுவதை தடுக்கும் சட்டம் (1981), நீரை மாசுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (1974), ஆபத்தை விளைவிக்கும் கழிவுப்பொருட்களுக்கான சட்டம் (2003) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து ஆலையின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்.


 ஆலையின் எந்திரங்கள், உற்பத்தி அளவு ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டாலும் ஆலை நிர்வாகம் எதையும் பின்பற்றுவது கிடையாது என பொருமுகிறார்கள், உள்ளூர் மக்கள்.

ம.தி.மு.க-வின் பங்களிப்பு

உயர்நீதி மன்றம் இந்த ஆலையை மூட உத்தரவிட்டு அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்து இடைக்கால ஆணை பெற்று இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நெருங்கி விட்டதாகவே போராடும் மக்கள் கருதுகிறார்கள். இருப்பினும் இதுவரையிலும் நடந்த சட்ட போராங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்துக்காக தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்த பின்னர் அதில், ம.தி.மு.க பொது செயளாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யூவை சேர்த கனகராஜ், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ் ஆகியவையும் தங்களை இணைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தின. தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் பாரபரட்சம் இல்லாமல் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கடைபிடித்த போதிலும், பின்னர் பல் கட்சிகள் பின் வாங்கிக் கொண்டன.

ம.தி.மு.க சார்பில் 1996 மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வாரத்தில் கடையடைப்பு போராட்டமும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும் ம.தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. ஏப்ரல் முதல்நாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடந்தது. டிசம்பர் மாதத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு உணர்வை அதிகாரிகளுக்கு புரிய வைத்தனர்.

1997 மார்ச் 24-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கட்சியினர் மட்டும் அல்லாமல் உள்ளூரை சேர்ந்த பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ய வழி தெரியாமல் போலீஸார் விழி பிதுங்கினார்கள். 


பின்னர் ஒருவழியாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ம.தி.மு.க-வினர் நடைப்பயணமாக சென்று ஆலையின் தீமையை விளக்கி சொன்னார்கள். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நெருப்பு மாவட்ட முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

ஆலையில் நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகள் மீது பழி போட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தகவல்களை நாளை பார்க்கலாம்.


thanx -vikatan

ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தானா? டாக்டர் ராம் தாஸ் மகிழ்ச்சி

1. 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் - ஜெ # வாக்கிய அமைப்பே தப்பு.1 கிலோ அரிசி 1 ரூபா தானே ஏன் 20 ரூபா?னு தானைத்தலைவர் கேட்பாரு


------------------------


2. உடன் பிறப்பே! கழக ஆட்சியிலே எந்த இணைய தளமும் முடக்கப்பட்டதில்லை.உணர்ந்திடுவீர்.( ஒரு ஆணின் இஷ்டம் இன்னொரு ஆணுக்கே தெரியும் )


------------------------


3. 90 சதவீத படத்தை கேமராமேன் இல்லாமலேயே எடுத்த அம்பிகா # ஹீரோயின் 3 ஷா தானே ? ஹி ஹி மியாவ்.



-------------------


4. ஏழைகளுக்கு மலிவு விலையில் மது கொடுக்கவிருக்கிறது உத்திரபிரதேச அரசு..! # ஏழை பரம ஏழை ஆகிடுவான்


---------------------

5. சித்தார்த்துடன் கை கோர்க்கும் 'பிட்சா' கார்த்திக் சுப்புராஜ்! # அவரு ஸ்ருதி கூட கை கோர்த்த லவ்வே புட்டுக்கிச்சு



---------------------


6. அம்மாவுக்கு நாங்கவிசுவாசமானநாய்கள் அமைச்சர் இடப்பாடி பழநிச்சாமி # கவுதம் சார் நடுநிசிநாய்கள் 2 எடுக்கறாராம்.நடிக்கறீங்ளா?்


----------------------


7. அஜித்துடன் நடிக்க ஆசை - ஸ்ரீதேவி # நல்லா யோசிச்சு சொல்லுங்க.நடக்க ஆசையா? நடிக்க ஆசையா ?


------------------------

8.  எம்.எல்.ஏ.,வை அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்க தயார்: விஜயகாந்த் அறிவிப்பு # பேக்கரி உனக்கு , அடுப்புக்கரி எனக்கு ஹி ஹி



----------------------


9.  சிவ பெருமானும், பார்வதியும் வன்னியர்களே -காடுவெட்டி குரு # அட ஈஸ்வரா. GOD வெட்டி குருவா இவரு


--------------------


10. இந்தி பேசும் தனுஷை பிடிச்சிருக்கு: ஐஸ்வர்யா # அவருக்கும் ஹிந்தி பேசும் நடிகையைப்பிடிச்சுடப்போகுது


---------------------


11. விலங்குகளை கொல்ல கொய்யாவில் வெடிகுண்டு: சிக்கி கொண்ட விவசாயி # அடங்கொய்யா ல


---------------------


12. தே.மு.தி.க.வை அழிக்க அ.தி.மு.க முயற்சி: கருணாநிதி # அறிவாலயம் கோடம்பாக்கம் போகப்பார்க்குதே அடடே


-----------------------


13. ஜெ வை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை -கனிமொழி # ஏம்மா? அப்பா கூட சண்டையா?அவரு டெய்லி முரசொலி ல எதிர்த்துட்டுத்தானே இருக்காரு?


----------------------


14. பிரதமராகும் எண்ணம் இல்லை கட்சி பணியாற்றவே விரும்புகிறேன் - ப.சி #அண்ணா நீங்க ஆத்துனது போதும்.VRS வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்ணா



-------------------------


15. மோடி பூஜ்ஜியம் என்றால் ராகுல் காந்தி மிக பெரிய பூஜ்ஜியம்: பாஜக. # பார்த்து.சைபர் க்ரைம் கேஸ்ல உள்ளே தள்ளிடப்போறாங்க



-------------------------


16.  நடிகைகள் என் பெயரையும் பச்சை குத்த மாட்டார்களா! -மன்சூர் அலிகான் # மன்சூர் ( mansure) SURE MAN.சிம்புக்கு ஒருகாலம் வந்தா வம்புக்கு ஒரு ரோ




------------------------------


17.  மனைவி தேவயானியை மேடம் என்று அழைக்கும் ராஜகுமாரன் # நாங்களும் அப்டித்தான்.ஆனா அதை விளம்பரப்படுத்திக்கறதில்லை



--------------------------


18. விஜயகாந்த்தை நேரில் சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக அல்ல- திருமாவளவன்# நயன் தாராவை நான் சந்தித்து பழைய காதலை புதுப்பிக்க அல்ல - சிம்பு



--------------------------


19. வன்னியர் பேச்சை விட்டு வந்தால் ராம்தாஸ்க்கு WON NEAR



-----------------------


20. ஆதாய கொலைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. - ஜெ. # கழக ஆட்சி மலர்ந்ததும் அக்குறை சரி செய்யப்படும மு க்




--------------------------------


21. கே.ஏ.செங்கோட்டையனிடம் ஜெ செல்போனில் திடீர் பேச்சு:# உங்க பேரை மாத்துங்க முதல்ல.டில்லி ல இருக்கற பீலிங்கு



------------------------


22. விஜயகாந்த்துடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு. #,கன்னம் இப்டி வீங்கி இருக்கே பீரா? உங்க கண் இப்டி சிவந்து இருக்கே ? விடிய விடிய சரக்கா?


-------------------------


23. நாங்கள் நெருப்பில் பிறந்தவர்கள் - கா.வெ.குரு. # பொறக்கும்போதே கெட்ட சகுனம்.ஹாஸ்பிடல் ல தீ விபத்து



----------------------


24. ஜெ ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்:- ஸ்டாலின் # உங்கப்பா ஆட்சிக்கு வந்தா உங்க குடும்பத்துக்குள்ளே கலவரம் தான் தினசரி நிலவரம்



-------------------------


25. நல்ல வேளை பார்வதி ஓமணக்குட்டன் கூட வன்னியர் தான்னு யாரும் சொல்லலை ;-)