Friday, December 05, 2025

SHE RIDES SHOTGUN (2025)-ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர்)@அமேசான் ப்ரைம்

           

       ஜோர்டான் ஹார்பர் 2017ல் எழுதிய ஷி ரைட்ஸ் ஷாட்கன் என்னும் நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது.எல்லோரையும் கவரும் ஜனரஞ்சகப்படம் அல்ல.பெண் குழந்தை உள்ள அப்பாக்களுக்கு ஈசியாகக்கனெக்ட் ஆகும்.காரணம் படம் முழுக்க ஒரு அப்பாவும் அவரது 10  வயது மகளும் மேற்கொள்ளும் சாகசப்பயணம் தான் இது.சிறுமியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கார்  திருடன்.சின்னச்சின்ன திருட்டுக்கள்,கொள்ளைகள் செய்பவன்.செய்த தப்புக்காக ஜெயிலில் இருந்து விட்டு இன்று தான் ரிலீஸ் ஆகிறான்.நாயகன் ஜெயிலில் இருந்தபோது தனது மகளை இரண்டு வருடங்களாகப்பார்க்கவில்லை.


நாயகனின் மகள் ஸ்கூல் முடிந்ததும் தன் அம்மா வந்து அழைத்துப்போவார் என காத்திருக்கிறாள்.அப்போது காரில் அப்பா வரவே அவளுக்கு ஆச்சரியம் +சந்தேகம்.அப்பா,அம்மா எங்கே? அம்மாவை என்ன செஞ்சீங்க? எனக்கேட்கிறாள்.


நாயகன் சரியான பதில் சொல்லவில்லை.மகளை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துத்தங்குகிறான்.இரவில் நாயகன் தூங்கிய பின் மகள் டி வி பார்க்கிறாள்.அப்போது டி வி யில் சிறுமி,அப்பா இருவரின் போட்டோவைக்காட்டி நியூஸ் வாசிக்கிறார்கள்.சிறுமியின் அம்மாவை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்பதை அந்த சிறுமி தெரிந்து கொள்கிறாள்

உடனே அப்பாவுக்குத்தெரியாமல் வெளியே வந்து போலீசுக்கு போன் பண்ணி விடுகிறாள்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே!


மேலே நான் சொன்னது முதல் 5 நிமிடக்கதை மட்டும் தான்.மீதி 2 மணி நேரம் ஒரே ஓட்டம் தான்


நாயகன் ஆக டாரன் எகர்டன் நடித்திருக்கிறார்.அவர் நல்லவரா?கெட்டவரா? என்பதை பாதிப்படம் முடிந்த பின் தான் தெரிந்து கொள்ள முடிகிறது


மகள் ஆக அனா சோபியா ஹெகர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.பேபி ஷாலினி போல சில சீன்களில் ஓவர் ஸ்மார்ட் ஆக இருப்பது கொஞ்சம் கடுப்படித்தாலும் பல சீன்களில் ஆச்சரியப்படுத்துகிறார்.

துப்பறியும் நிபுணர் ஆக ராப் யாங் நடித்திருக்கிறார்.அதிக வாய்ப்பில்லை.


வயட் கார்பீல்ட் ஒளிப்பதிவில் முத்திரை பதிக்கிறார்.சிறுமிக்கான க்ளோசப் ஷாட்கள் அருமை.

பிளாங்க் மாஸ் இசை மாஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓக்கே ரகம் தான்.

ஜூலி மன்றோ வின் எடிட்டிஙகில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது


சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் யார்? அவரது பின்புலம் என்ன?என்பதை ஓப்பன் செய்யாமலேயே சஸ்பென்சாகக்காட்சிகளை நகர்த்தி சென்றது


2 அப்பா ,மகள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்புகள்

3. சேசிங்க் சீன்கள் படமாக்கப்பட்ட விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. ஜெயிக்க முடியாத சண்டையை நீ ஆரம்பிச்சுட்டே

2 எல்லா ராஜ்யஙகளும் ஒரு நாள் முடிவுக்கு வரும்

3  ஒரு ராஜாவை சாதா குதிரையால முடிச்சுட முடியும் செஸ்ல


4 அவ என்னை லவ் பண்ண எந்த ரைட்சும் இல்லை,ஏன்னா நான் அதுக்குத்தகுதியானவன் இல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சிறுமி ஓவர்  ஸ்மார்ட் தான்.அதுக்காகக்குண்டு அடி பட்ட அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்ப்பது அட்வைஸ் செய்வதெல்லாம் ஓவர்


2 நாயகனை ஒரு கூட்டமே துப்பாக்கியுடன் சுற்றி வளைக்கும்போது நாயகன் சரண்டர் ஆகாமல் அடம் பிடிப்பது ஏன்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எல்லோருக்கும் படம் பிடிக்காது.ஆக்சன் சீன்கள் அதிகம் இல்லை.சேசிங் மட்டும் தான்.ரேட்டிங்க் 2.25 / 5




0 comments: