Wednesday, December 17, 2025

JEEVAN (2024) -மலையாளம் ,- சினிமா விமர்சனம் (மெலோ ட்ராமா)@ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

           

        ஜீவன் என்ற சொல்லுக்கு வாழ்க்கை ,உயிர்  என்ற பொருள் இருப்பது போல பெயர்ச்சொல் ஆகவும் பயன்படும்.ஜீவன் என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் கதை.          


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவன்.ஐ டி யில் பெரிய கம்பெனியில் பணி புரிகிறான்.அதே கம்பெனியில் பணி புரியும் நாயகியைக்காதலித்துத்திருமணமும் செய்து கொள்கிறான்.இருவருக்கும் ஒரு மகள் உண்டு.


நாயகன் குடிப்பழக்கம் கொண்டவன்.ஆரம்பத்தில் சாதாப்பழக்கமாக ஆரம்பித்து தினசரி குடிக்கும் வழக்கமாக மாறுகிறது.இவனது குடிப்பழக்கம் காரணமாக மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் வருகிறது


நாயகன் ,நாயகி இருவரும் இருப்பது ஒரு அபார்ட்மெண்டில்.அது நாயகிக்கு சீதனமாக நாயகியின் பெற்றோர் தந்தது.ஒரு நாள் வாக்குவாதம் முற்றிப்போய் நாயகி இந்த வீடு என் அப்பா எனக்குத்தந்தது என்கிறார்.இதனால் ஈகோ தூண்டப்பட்ட நாயகன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.


நண்பனின் ரூமில் தங்கிக்குடிக்கும் நாயகன் கம்பெனிக்கு மப்பில் போகிறான்.எம் டி யுடன் வாக்குவாதம் வளர்ந்து கம்பெனியில் இருந்து டிஸ்மிஸ் ஆகிறான்.

இதற்குப்பின் நாயகனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக சினு சித்தார்த் அசல் குடிகாரனாகவே மாறி உள்ளார்.க்ளீன் ஷேவ் முகத்திலும் சரி,பிச்சைக்காரன் போல் தாடி வளர்த்த கெட்டப்பிலும் சரி முத்திரை பதிக்கிறார்

நாயகி ஆக  ப்ரீத்தி கிறிஸ்டினா பால் கொழுக் மொழுக் பொம்மை ஆக வந்து போகிறார்.

கெஸ்ட் ரோலில் வந்தாலும்  விவியாசந்த் கவனிக்க வைக்கிறார்.


க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ரோலில் சுனில் பணிக்கர் கச்சிதமான நடிப்பு.இவர் தான் படத்தின் தயாரிப்பாளர்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வினோத் நாராயணன்



சபாஷ்  டைரக்டர்

1  கம்பெனியின் எம் டி உடன் நாயகன் நடத்தும் உரையாடல் கவனிக்க வைக்கும் காட்சி

2  நாயகி நாயகன் மோதல் ,பிரியும் காட்சி அழுத்தமான முத்திரை

3  நண்பனின் வீட்டுக்குப்போனபோது நண்பன் நாயகனைக்காரில் ஏற்றி சிறிது தூரத்தில் இறக்கி விட்டு 100 ரூபாயை த்தரும் சீன்


4 நாயகனின் பெற்றோரைப்பார்க்கப்போகும் நாயகனை அவர்கள் டீல் செய்யும் விதம் டச்சிங்க்


  ரசித்த  வசனங்கள் 


1  டெடிகேஷன் ,டிட்டெர்மினேசன் இந்த ரெண்டும் தான் வாழ்வில் நம்மை உயர்த்தும்


2 இமேஜினேசன்,இன்க்ரீடியன்ஸ்,இண்டெக்ரெட்டி இவை மூன்றும் ஒரு சக்சஸ்புல் பர்சனுக்குத்தேவை


3 இவரை புலி தான்.ஆனா இப்போ வெறும் உப்பிலி


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சரக்கு சங்கரலிஙகம் என டைட்டில் வைத்திருக்கலாம்.படம்  பூரா எல்லா

சீன்களிலும் நாயகன்  சரக்கு அடிப்பது கடுப்பு

2  மனைவி கூட சண்டை,வீட்டை விட்டு வெளியே போவது சரி.ஆனா மகளைப்பார்க்க முயலவே இல்லையே?ஸ்கூலில் கூடப்போய்ப்பார்க்கக்கூடாதா?

3 பங்களாவில் வசிக்கும் வசதியான பெற்றோர் நாயகனுக்கு உதவி செய்யத்தயஙகுவதும் நம்ப முடியலை.

4 க்ளைமேக்ஸ் நாடகத்தனம்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடிகாரர்கள் பார்க்க வேண்டிய  படம்.இந்த விஷயத்தை யாராவது சொல்லி இருந்தா நான் பார்த்திருக்க மாட்டேன். ரேட்டிங்க் 2/5

0 comments: