Saturday, May 18, 2024

சர்வம் தாள மயம் (2019) - தமிழ் - சினிமா விமர்சன,ம் ( மியூசிக்கல் மோட்டிவேஷனல் டிராமா )

   


  கர்நாடக  சங்கீதம், மிருதங்கம்  இவற்றில்  ஏதாவது  ஒன்றை  அடிப்படையாக வைத்துத்திரைக்கதை  அமைக்கப்பட்ட  படங்களான  மிருதங்க  சக்கரவர்த்தி   (1983) , சிந்து  பைரவி (1985) , உன்னால்  முடியும்  தம்பி ( 1988) ஆகிய  மூன்றுமே  வெற்றிப்படங்கள் தான்  என்றாலும்  ஏனோ  இசை சம்பந்தப்பட்ட  அது  மாதிரி  படங்கள்  அதிகம்  வரவில்லை . சங்கரா பரணம் (1979) , சலங்கை  ஒலி ( சாகர சங்கமம்) -1983  இவை  இரண்டிலும்  கர்நாடக  சங்கீதத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்து  எடுக்கப்பட்டாலும்  கதைக்களம்  மாறுபட்டவை . இவை  இரண்டுமே  பிரம்மாண்ட  வெற்றி  பெற்ற  படங்கள் 


ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேணன் சைதன்யா (1991)  என்ற  தெலுங்குப்படத்தில்  ஒளிப்பதிவாளராக  அறிமுகம்  ஆகி  மணிரத்னம்  படங்களான  பம்பாய் (1995) குரு -ஹிந்தி (2007) , கடல் (2013)  போன்ற  படங்களில்  சிறந்த  ஒளிப்பதிவை  வழங்கி  இருந்தார். 1997 ல் இவரது  இயக்கத்தில்  வந்த  முதல்  படமான  மின்சாரக்கனவே  வெற்றி  பெற்ற  படம்..2000 ல்  வெளியான  கண்டு  கொண்டேன் கண்டு  கொண்டேன்  தரமான  காதல்  கதை  என்றாலும் சரியாகப்போகவில்லை. 19  வருடங்கள் கழித்து  அவர்  இயக்கிய  தமிழ்ப்படம்  தான் சர்வம் தாள மயம்.கொஞ்சம்  ரிஸ்க்  ஆன  கதை  தான் . ஆனாலும்  தரமான  மேக்கிங்  மூலம்  வசூல்  ரீதியாகவும்  வெற்றி பெற்ற  படம்  இது இவரது   லதா  மேனன்  தான்  தயாரிப்பாளர் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகனின்  அப்பா  மிருதங்கம்  தயாரித்து  விற்பனை  செய்யும்  தொழிலில்  இருப்பவர். நாயகன்  பிளஸ்  2  பரீட்சை  கூட  ஒழுங்காக  எழுதாமல்  சினிமா , ஊர்  சுற்றல்  என்று  இருப்பவன் . ஒரு  நாள்  பிரபலமான  விதவான்  ஆன  பாலகாட்டு  வேம்பு  ஐயர்  என்பவருக்கு  மத்தளம்  ஒன்றை  டெலிவரி  செய்ய  ஒரு  கச்சேரி  நிகழ்ச்சிக்குப்போகும்  நாயகன்  அங்கே   வேம்பு  ஐயருக்குக்கிடைக்கும்  மரியாதை , புகழ்  போன்றவற்றைக்கண்டு  பிரமித்து  தானும்  அதே  போல்  மிருதங்க  வித்வான்  ஆக  நினைக்கிறார்


வேம்பு  ஐயரிட்மே  தன்  ஆசையைத்தெரிவித்து  தன்னை  சீடனாக  ஏற்றுக்கொள்ளும்படி  வேண்டுகிறார். ஆனால்  பிரமணர்  ஆன  தான்  பிற்படுத்தப்பட்ட  சமூகத்தைச்சேர்ந்த  நாயகனுக்கு தொழில்  கற்றுத்தருவதா? என்ற  எண்ணத்தில்  ஆரம்பத்தில்  தவிர்க்கிறார். பிறகு  நாயகனுக்கு  இருக்கும்  இசைப்புலமை , இசை  ஆர்வம்  கண்டு  அவனை  சீடனாக  ஏற்றுக்கொள்கிறார்


வில்லன்  வேம்பு  ஐயரிடம்  சீடன் கம்  உதவியாளராக  இருக்கிறான் . அவனுக்கு  நாயகனைப்பிடிக்கவில்லை. அவனை  மட்டம்  தட்ட  சமயம்  பார்த்து  இருக்கிறார். ஒரு  கட்டத்தில்  வேம்பு  ஐயர்  நாயகனுக்கு  ஆதரவாகப்பேசி  வில்லனை  வீட்டை  விட்டு , தன்னை  விட்டு  வெளியேற்றி  விடுகிறார்


இதனால  நாயகனை , வேம்பு  ஐயரைபப்பழி  வாங்க  சமயம்  பார்த்துக்காத்திருக்கிறான்  வில்லன்

வில்லனின்  திட்டம்  நிறைவேறியதா? நாயகன்  மிருதங்கம்  கற்று  சாதித்தானா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜி வி  பிரகாஷ்  மிக  கண்ணியமான  கதபாத்திரத்தில்  வருகிறார். நான்  பார்த்தவரை  இவர்  ரவுடி , பொறுக்கி , பொம்பள  பொறுக்கி  போன்ற  மட்ட  ரகமான  கேரக்டர்களில்  தான்  நடித்து  வ்ந்தார் .முதல்  முறையாக   சாதிக்கத்துடிக்கும்  இளைஞன்  கதாபாத்திரத்தில்  அருமையாக  நடித்துள்ளார் . இந்த  கேரக்டருக்காக  ஒரு  வருடம்  நிஜமாலுமே  மிருதங்கம்  கற்றாராம். 


நாயகி  ஆக  அபர்ணா  பாலமுரளி  அழகிய முகம்,  வாட்டசாட்டமான  உடல்  அமைப்பு , பொங்கும் இளமை  என  ஆர்ப்பரிக்கிறார்


 வேம்பு ஐயர்  ஆக  நெடுமுடி  வேணு   வித்யா  கர்வத்தை  வெளிப்படுத்தும்  விதம்  அபாரம். படம்  முழுக்க இவரது  கேரக்டர்  டிசைன்  கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது , அனுபவம்  மிக்க  நடிப்பு 


  நாயகனின்  அப்பாவாக  இளங்கோ  குமாரவேல்  நல்ல  குணச்சித்திர  பாத்திர வடிவமைப்பு .  அருமையான  நடிப்பு 


 வில்லன்  ஆக  வினீத். கச்சிதம் . டி வி  தொகுப்பாளராகவே  வரும்  திவ்ய  தர்ஷினி    அழகு 

ஏ ஆர்    ரஹ்மானின்  இசையில்  ஆறு  பாடல்கள், அவற்றில்  நான்கு  பாடல்கள்  அருமை .  இவரது  இசையில்  வந்த  சங்கமம்  படத்தின்  பாடல்கள்  அளவுக்கு  இல்லை    என்றாலும்  திரைக்கதை  அமைப்பில்  சங்கமம்  ஒரு  டப்பாப்படம் . இது  நல்ல  படம் 


ரவி  யாதவின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  பிரம்மாண்டமாய்  கண்  முன்  விரிகின்றன


அந்தோணியின்  எடிட்டிங்கில்  130  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜீவ் மேனன் 



சபாஷ்  டைரக்டர்


1   தனிப்பட்ட  ஒரு வித்வானின்  வாழ்க்கையை  சொல்லும்  சிந்து  பைரவி  யை  விட  வாழ்வில்  முன்னேறத்துடிக்கும்  ஒரு  மனிதனின்  கதையைச்சொன்ன  விதத்தில்  இது  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  உயர்ந்து  நிற்கிறது 


2    நெடுமுடி  வேணு , இளங்கோ  குமாரவேல் , ஜி வி பிர்காஷ்  மூவரின்  நடிப்பும்  அருமை 


3  ரியாலிட்டி  ஷோக்களில்  நடக்கும்  அரசியல் , டிஆர்  பி  ரேட்டிங்  வெறி  போன்றவற்றைப்படம்  பிடித்துக்காட்டிய  விதம் 


4 க்ளைமாக்ஸ்  போட்டிப்பாட்டில்  ஏ ஆர்  ரஹ்மானின்  டேஸ்ட்க்கு  ஏற்ப  பாடலை  வடிவமைத்த  விதம். கர்நாடக  சங்கீதம்  மட்டுமல்லாமல் உலகில்  உள்ள  பல  தரபப்ட்ட  இசைகளையும் மிக்ஸ்  செய்து  தந்த  விதம்




  ரசித்த  வசனங்கள் 


1  உன்  அம்மாவுக்கு என் மேல  கோபம் இல்லை , என்  தொழில்  மூலம் வர்ற  வருமானம்  மேல  கோபம் 


2  அடி மரத்துல  மிருதங்கம்  செஞ்சா  அது  ரெண்டு  தலைமுறைக்கு  வரும், மேல்  மரத்துல  செஞ்சா  ரெண்டு  வருசத்துக்குக்கூட  வராது 


3   நான்  எந்த  ஃபீல்டுக்குப்போனாலும் நம்ப்ர்  ஒன்னா  இருக்கனும்னு  ஆசைப்படுவேன்


4  மிருதங்கத்துக்கு  மூணு  விதமான  தோல்  தேவை ,ஆட்டுத்தோல் , மாட்டுத்தோல்  எருமைத்தோல், மூணுமே  பெண்  இனமா இருக்கனும்,  அதுவும்  பிரசவிச்ச பின்


5 ஸ்கைப்பா? எந்த  வித்தையா  இருந்தாலும்  குரு  கிட்டே  நேரில்  வந்து  கத்துக்கனும்


6  ''நீ ஒரு வேம்பு ஐயரோட வெற்றியைப் பார்த்துட்டுப் பேசுற, நான் நூறு வாத்தியக்காரனோட வறுமையைப் பார்த்துப் பேசுறேன்''


7  மிருதங்கம்  வாசிப்பதில்  உலகிலேயே  நான்  தான்  நெம்பர்  ஒன்னா  வரனும்


 அது  முடியாது , நான்  தான்  நெம்பர் ஒன்


7 கல்லில்  இருந்து  சிற்பம் வரனும்னா  சிற்பிக்குப்பொறுமை  வேணும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  விஜய்  ரசிகன் , பொறுப்பில்லாதவன் , படிப்பு  வராது  போன்ற  ஓப்பனிங்  காட்சிகள்  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


2  நாயகி  நாயகனை  விட  உயரம்  அதிகம்,  உடல்  வாகும்  அவரை  விட  கூடுதல் . பார்க்க  நாயகனுக்கு  பெரிய,ம்மா  பொண்ணு  போல  அக்கா  போல  இருக்கிறார்


3   நாயகி  நாயகனின்  காதலை  ஆரம்பித்தில்  மறுத்தவர்  பின்  அவரை  ஏற்றுக்கொள்வதில்  வலு  இல்லை 


4   ஒவ்வொரு  மனிதனுக்கு ம்  தன்  அப்பா  தான்  முதல்  ஹீரோ . நாயகன்  தன்  அப்பாவிடமே  மிருதங்கம்  கற்றுக்கொள்ளாமல்  வேறு  யார்  யாரிடமோ  கெஞ்சி  கூத்தாடி  கலை  கற்பது  ஏனோ ? அப்பாவிடமே  கற்று  இருக்கலாமே? 


5  நாயகன்  -  நாயகி  திருமணத்துக்கு  முன்பே  இணையும்  செல்வராகவன்  தனமான  காட்சி  எதுக்கு ? ராஜீவ்மேனன்  படங்களில்  வழக்கமாக  இப்படி  இருக்காதே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கர்நாடக  சங்கீதம்  என்றால்  அலர்ஜி  என்பவர்கள்  கூட  பார்க்கும்படி  ஒரு  மோட்டிவேஷனல்  டிராமாவாக  இருக்கும்  படம் , பார்க்கலாம் . ரேட்டிங்  3 /. 5 


சர்வம் தாள மயம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ராஜீவ் மேனன்
எழுதியவர்ராஜீவ் மேனன்
உற்பத்திலதா மேனன்
நடிக்கிறார்கள்ஜி.வி.பிரகாஷ் குமார்
நெடுமுடி வேணு
அபர்ணா பாலமுரளி
வினீத்
குமரவேல்
ஒளிப்பதிவுரவி யாதவ்
திருத்தியவர்அந்தோணி
இசைஅசல் பாடல்கள்:
ஏ.ஆர்.ரஹ்மான்
ராஜீவ் மேனன் (ஒரு பாடல்)
பின்னணி இசை:
ஏ.ஆர்.ரஹ்மான்
குதுப்-இ-கிருபா
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஜியோ ஸ்டுடியோஸ்
சக்தி திரைப்படத் தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 1 பிப்ரவரி 2019
நேரம் இயங்கும்
130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Friday, May 17, 2024

AAVESHAM (2024) -மலையாளம்- சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி ) @ அமேசான் பிரைம்


30  கோடி  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  150  கோடி  வசூல்  செய்த  படம் , அது போக  மலையாள  இண்டஸ்ட்ரியில்  வசூல்  ரீதியாக  ஐந்தாவது  இடத்தைப்பிடித்த  படம்     டாப் 10  கமர்ஷியல்  சக்செஸ்  ஆல்டைம் 

1    புலிமுருகன்   2  லூசிஃபர்   3  மஞ்சுமேல்  பாய்ஸ்  4  பிரேமலு  5  ஆவேசம்  6  2018  7  ஆடு ஜீவிதம்  8  பீஷ்மா  பர்வம் 9  நேரு 10  ஆர்டிஎக்ஸ்

ஸ்பாய்லர்  அலெர்ட்


கேரளாவில்  இருந்து  பெங்களூர்  காலேஜூக்குப்படிக்க  வருகிறார்கள்  மூன்று  இளைஞர்கள் .  ஜி வி  பிரகாஷ்  நடித்த  டப்பா  படமான  ரெபெல்  படத்தில் வருவது  போல  அந்த  மூன்று  இளைஞர்களும்  சீனியர்  மாணவர்களால்  ரேக்கிங்  செய்யப்பட  அது  மோதலாக  உருவெடுக்கிறது. சீனியர்கள்  அந்த  மூவரையும்  வெளுத்து  வாங்கி  விட  பழி  வாங்கத்துடிக்கிறார்கள்


உப்புமா , உதிரிக்கட்சிகள்  எல்லாம்  கூட்டணிக்கு  ஒரு  பெரிய  ரவுடிக்கட்சியுடன்  கூட்டணி  வைத்துக்கொள்வது  போல  அந்த  மூன்று  மாணவர்களும்  ஏதாவது  ஒரு  பெரிய  தாதா  உடன்  கூட்டு  அல்லது  நட்பு  வைத்துக்கொண்டு  அவனை  வைத்து  அந்த  சீனியர்  மாணவர்களைப்பழி  வாங்கலாம்  என  திட்டம்  இடுகிறார்கள்: 


 நாயகன்  ஒரு  தாதா . கேங்க்ஸ்டர் . அவனுக்குக்கீழ்  ஏராளமான  அடியாட்கள் காலேஜ்  நண்பர்கள்  மூவருக்கும்  அந்த  தாதாவின்  நட்பு  கிடைக்கிறது . காலேஜ்  மாணவர்களின்  திட்டமோ , சுயநலத்துக்காகத்தான்  தன்னிடம்  பழகுகிறார்கள்  என்பதோ  தாதாவுக்குத்தெரியாது 


 ஒரு  கட்டத்தில்  தங்கள்  நோக்கத்தை  நிறைவேற்றிக்கொண்ட  மாணவர்கள்  மூவரும்  தாதாவுடனான  தங்கள்  நட்பை  முறித்துக்கொள்ள  முடிவெடுக்கின்றனர் 


தாதாவின்  கேங்க்ஸ்டர்  குரு  தாதாவை  பழி  வாங்கத்துடிக்கிறான் . அவனுக்குக்காலேஜ்  மாணவர்கள்  உதவுகின்றனர் . இந்த  துரோகத்தை  நாயகன் ஆன  தாதாவால்  தாங்கிக்கொள்ள  முடியவில்லை , இதற்குப்பின்  நிகழும்  அதிரி  புதிரி  சம்பவஙக்ளே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  தாதாவாக  ஃபகத்  ஃபாசில்  கலக்கி  இருக்கிறார். பம்மல்  கே  சம்பந்தம்  கமல்  போல  உடல்  பூரா  நகைகளுடன்  அவர்  வலம்  வருவது  நகைக்க  வைக்கிறது . அவரது   உடல்   மொழி  அபாரம் , வழக்கமாக  இயற்கையான  நடிப்பை  வழங்கும்  இவர்  இந்த  கேரக்டருக்காக  ஓவர்  ஆக்டிங்கை  அளவாகத்தந்து  இருக்கிறார்


நாயகனுக்கு  இணையாக  காட்சிகள்  இல்லாத  போதும்  அந்த  புதுமுகங்கள்  மூவருமே  அருமையான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் .நாயகன்  ஆன  தாதாவின்  ரைட்  ஹேண்ட்  அம்பான்  ஆக  வரும்  சஜின்  கோபு  விசுவாசம்  என்றால்  இப்படி  இருக்க  வேண்டும்  என  எண்ண  வைக்கும்  அருமையான  நடிப்பு 


நாயகனின்  குருவாக  வரும்  மெயின்  வில்லன்  ஆக  மன்சூர்  அலிகான் , இவருக்கு  போதுமான  அளவு  கேரக்டர்  வலு  சேர்க்கப்படவில்லை . டம்மி  வில்லன் ஆகவே  வலம்  வருகிறார்


தாதாவான  நாயகனுக்கோ , காலேஜ்  மாணவர்கள்  மூவருக்கோ  ஜோடி  இல்லை . அது  ஒரு  பெரிய  குறையாகத்தெரியவில்லை . பூஜா  மோகன்  ராஜ்  வந்தவரை  ஓக்கே  ரகம் 


சமீர்  தாஹிரின்  ஒளிப்பதிவு  குட் . குறிப்பாக  இரவுக்காட்சிகளில்  முத்திரை  பதிக்கிறார். எடிட்டிங்க்  விவேக் ஹர்சன்  ,181  நிமிடங்கள்  படம்  ஓடினாலும்  போர்  அடிக்கவில்லை சுஷின்  ஷியாம்  இசை  கச்சிதம் , குறிப்பாக  பின்னணி  இசையில்  பல  இடங்களில்  கை  தட்டல்  பெறுகிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜித்து  மாதவன் 


சபாஷ்  டைரக்டர்


1    இடைவேளைக்கு  முன்பு  வரும்  அந்த  ஹோலி  பண்டிகை  பேக்  டிராப்  ஃபைட்  சீன்  அதகளமான  ஆக்சன்  சீக்வன்ஸ் , ஸ்டண்ட்  மாஸ்டருக்கு  ஒரு  சபாஷ் . ஜாக்கி  சான்  நடித்த  ஸ்பானிஷ்  கனெக்சன்  படத்தின்  ஒரு  ஆக்சன்  சீக்வன்சை  நினைவு  படுத்துகிறது. செமயான  ஃபைட்  சீன் 


2  நாயகன்  நிஜமான  தாதாவா? டம்மி  பீசா? என்பதை  கடைசி  வரை  சஸ்பென்சாகவே  கொண்டு  போன  விதம்  அருமை


3  க்ளைமாக்சில்  நாயகன்  தனியாக 200  ரவுடிகளிடம்  மாட்டிக்கொள்ளும்  காட்சியும்  அதைத்தொடர்ந்து  நடக்கும்  எதிர்பாராத  நடவடிக்கையும்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


 க்ல  கல கலாட்டா  கலாட்டா 


  ரசித்த  வசனங்கள் 


1    அதோ   அந்த  3  பசங்களைப்பார்க்கும்போது  எனக்கு  என்  காலேஜ்  லைஃப்  தான்  ஞாபகம்  வருது


 நீங்க  தான்  காலேஜே  போகலையே?


 அவங்க கூடத்தான்  காலேஜ்  போகலை , இங்கே  தண்ணி  அடிச்சுட்டு  இருக்காங்க 


2    பெரியரவுடி    கேங்க்னு  நினைச்சோம் இந்த  நாலு  பேரை  அடிக்க  இத்தனை  பேரா?


 நம்ம  மூணு  பேரை  எத்தனை  பேர்  சேர்ந்து  அன்னைக்கு  அடிச்சாங்க ?


3   உனக்கு  லைசென்ஸ் உண்டோ? இல்லைன்னா  என்  லைசென்சை  எடுத்துக்க


4  என்ன?  நீங்க  மட்டும்  வந்திருக்கீங்க ?> அடியாளுங்க  எல்லாம்  எங்கே?


 ஹோலி  இல்லையா? எல்லாருக்கும்  லீவ்


 சுத்தம் , இன்னைக்கு  நாம  அடிவ்  வாங்கப்போறோம்


5  உங்களோட  இருக்குமோது  தலைல  பாம்  கட்டிட்டு  இருக்கற  மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அந்த  மூன்று  மாணவர்களிடன்  ஏன்  அவ்ளோ  பிரியமாக  இருக்கிறான்  என்பதற்கு  வலுவான  காரணங்கள்  இல்லை 


2  போலீஸ்  என்ற  ஒரு  இலாகா  இருக்கா? இல்லையா? என்ற  சந்தேகம்  வருகிறது . ஒரு  சீன்ல  கூட  போலீசே  வர்லை 


3  குடி , குட்டி , வசதியான  வாழ்க்கை  என  ஜாலியாக  இருக்கும்  மாணவர்கள்  மனம்  மாறுவதும்  நம்ப  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபகத்  ஃபாசில்  ரசிகர்கள்  கொண்டாடுவார்கள்.  மற்ற  பொது  ரசிகர்கள்  கூட  பார்க்கலாம்  லெவலில்  தான்  இருக்கு . ரேட்டிங்  2. 75 / 5 


Aavesham
Theatrical release poster
Directed byJithu Madhavan
Written byJithu Madhavan
Produced by
Starring
CinematographySameer Thahir
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
companies
Distributed byA & A Release
Release date
  • 11 April 2024
Running time
161 minutes
CountryIndia
LanguageMalayalam
Budgetest. ₹30 crores[1]

Thursday, May 16, 2024

CHARI 111 ( 2024) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் காமெடி ) @ அமேசான் பிரைம்


நம்ம ஊர்ல  துப்பறியும்  சாம்பு  படக்கதை  படிக்காதவர்கள்  இருக்க  முடியாது .  காமெடியான  கதாபாத்திரம்  ஆனால்  புத்திசாலித்தனமாக  இயங்குவதாக  மற்றவர்களுக்குத்தோன்றும்,  முடிவில்  வெற்றி  பெறுவார். பெரும்பாலும்  அவரது  வெற்றி  அதிர்ஷ்டத்தாலோ , சந்தர்ப்ப  சூழலாலோ  இருக்கும், ஆனால்  உலகத்தினர்  அவரை  வானளாவப்புகழ்வார்கள் ., அந்த  கான்செப்ட்டில்  உருவான  காமெடிப்படம்  இது .  காமெடி  நடிகர்  ஆன  வெண்ணிலா  கிஷோர்  நாயகனாக  நடித்த  முதல்  படம்  1/3/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  படம்  இப்போது  அமேசான்  பிரைம்   ஓடிடியில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லி  ஒரு  சயிண்ட்டிஸ்ட் .இந்திய  ஆராய்ச்சிக்கூடத்தில்  பணி  புரிகிறாள் . அவளுக்கு  ஒரு  ஸ்பெஷல்  சைல்டு  உண்டு . வித்தியாச,மான  நோயால்  பாதிக்கபபட்ட  அவள்  மகன்  நார்மல் ,மனிதன்  போல  சுவாசிக்க  முடியாது . எப்போதும்  ஆக்சிஜன்  கிட்  போல  மருத்துவ  உபகரணங்களுடன்  தான்  வாழ  முடியும், அவனைக்குணப்படுத்த  வில்லி  பல  ஆராய்ச்சிகள்  செய்கிறாள் . அந்த  ஆராய்ச்சியை  மற்ற  மனிதர்கள்  மீது  பிரயோகிக்கிறாள் .அவர்கள்  இறக்கிறார்கள் . அரசாங்கத்துக்கு  இந்த  விபரம்  தெரிய  வரும்போது  ஒரு  டீமை  அனுப்பி  அவளைக்கொல்கிறது 


 வில்லியின் மகன்  பெரியவன்  ஆனதும்  தன்  அம்மாவின்  சாவுக்குக்காரணமான  இந்திய  அரசாங்கத்தை, இந்தியாவை  பழி  வாங்க  நினைக்கிறான் / இது  தான்  வில்லி , வில்லனின்  ஃபிளாஸ்  பேக்  கதை 


இப்போது  இந்தியாவின்  முக்கிய  நகரங்களில்  ஆங்காங்கே  குண்டு  வெடிப்பு  நடக்கிறது . மனித  வெடிகுண்டு  போல   ஒரு  ஆள்  பப்ளிக்  ப்ளேசில்  வெடித்து  சிதறுகிறான். இதனால்  பல  உயிரிழப்புகள்  நிகழ்கிறது . இதன்  மர்மத்தைக்கண்டு  பிடிக்க  நாயகன்  நியமிக்கப்படுகிறான் . இது  பிளான்  ஏ .  நாயகி யும்  ஒரு  சீக்ரெட்  ஏஜெண்ட்  தான் . நாயகனால்  முடிக்க  முடியாமல்  போமால்  அவனுக்கு  உதவியாக  நாயகி  களம்  இறங்குவாள்  . இது  பிளான்  பி . இவர்கள்  திட்டம்  எப்படி  வெற்றி  பெற்றது  ? என்பது  மீதித்திரைக்கதை 


 நாயகன்  ஆக  வெண்ணிலா  கிஷோர்   காமெடி  நடிப்பு ,  சிரிப்பான  உடல்  மொழி , ஓவர்  பந்தா  என  அவரது  அறிமுகமே  களை  கட்டுகிறது . முதல்  பாதி  முழுக்க  இவர்  ராஜ்ஜியம்  தான் . கலகலப்பான  மொமெண்ட்ஸ்களுடன்  படம்  நகர்கிறது 


முரளி  சர்மா  நாயகனுக்கு  சீஃப்  ஆஃபீசர்  ஆக  வருகிறார்.  நாயக்ன்  பண்ணும்  லூட்டிகளை  இவர்  சகித்துக்கொள்ள  முடியாமல்  திணறும்  கட்டங்கள்  கலகல 

  நாயகி  ஆக   ஏஜெண்ட்  ஈஷா  ஆக  சம்யுக்தா  கச்சிதம்.  டூயட்  எல்லாம்  பாடாமல்   முழுக்க  முழுக்க  ஆக்சன்  காட்சிகளில்  வருவது  சிறப்பு.  இவரது  ஆக்சன்  சீக்வன்ஸ்  நம்பும்படி   படமாக்கபப்ட்டிருப்பது  அழகு 


வில்லனாக  வருபவர்  படம்  முழுக்க  முக  மூடியுடன்   இறுக்கமான  முகத்துடன்  வருவதால்  அவருக்கு  நடிக்க  வருமா? வராதா?? என்பதே  கடைசி  வரை  தெரியவில்லை , ஒருவேளை  அது  தெரியக்கூடாது  என்று  தான்  முகமூடி  மாட்டி  இருப்பார்களோ ? தெரியவில்லை 


ரிச்சர்டுகவினின்  எடிட்டிங்கில்  படம்  129  நிமிடங்கள்  ஓடுகிறது . முதல்  பாதி  காமெடி , பின்  பாதி  சீரியஸ்  என  பிரித்து  விட்டார்கள் 


சைமன்  கே  கிங்  தான்  இசை . பின்னணி  இசை  குட் 


க்ரோவர்  காஷிஷ்  தான்  ஒளிப்பதிவு ., பிரமாண்டமாக  காட்சிகளைப்படம்  பிடித்திருக்கிறார். குறிப்பாக  நாயகியின்  ஓப்பனிங்  ஆக்சன்  பிளாக்  படமாக்கப்பட்ட  விதம்  அருமை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   கீர்த்தி  குமார் 


   சபாஷ்  டைரக்டர்

1 ஓப்பனிங்  பில்டப்  கராத்தே  க்ளாஸில்   மாஸ்டர்  டெமோ  காட்டிய  பின் நாயகன்  பீலா  விட்டு  வீழ்த்துவது  சைடில்  ஜி  பே  மூலம்  வீரர்களுக்கு  பேமண்ட்  போய்ச்சேர்ந்ததும்  அவர்கள்  வீழ்ந்தது  போல  போலியாக  நடிப்பது  காமெடி 


2  நாயகன்  வில்லியை  சிஸ்டம் கீ  போர்டால்  தாக்கும்போது  அதில்  உள்ள  விஇ  ஆர்  ஜிஐ  என்  ஆகிய  எழுத்துக்கள்  மட்டும்  சிதறி  வெர்ஜின்  ஆக  பறக்கும்  காட்சி 


3   வில்லியின்  ஃபிளாஸ்பேக்  போர்ஷன்  ஆளவந்தான்  பாணியில்  கார்ட்டூன் வடிவில்  காட்டியது  நல்ல  முயற்சி , செலவும்  மிச்சம் 


  ரசித்த  வசனங்கள் 


1  ஏஜெண்ட்  சாரி 111  எங்கே?


  நீங்க சஸ்பெண்ட்  செஞ்சதால  கோவிச்சுக்கிட்டு  ஜப்பான்  போய்  மார்ஷியல்  ஆர்ட்ஸ்  கத்துக்க  ட்ரெய்னிங்ல  இருக்கார்


  விட்டா  ஜாக்கி  சான்  கிட்டே  கத்துக்கிட்டு  இருக்கார்னு  சொல்வியே?


  வாவ்  சார்  உங்களுக்கு  எப்படித்தெரியும்? அவர்  நிஜமாவே  ஜாக்கி  சான்  கிட்டே  தான்  போய்  இருக்கார் 


 அட  போம்மா , அவன்  உன்னை  இம்ப்ரெஸ்  பண்றதுக்காக  கதை  விட்டிருப்பான், இங்கதான்  லோக்கல்ல  இருப்பான்  , விசாரி 


2   உன்    ஐ டி  கார்டு  எங்கே?

அதான்  தந்தேனே?


 அது  தாய்லாந்து  மசாஜ் செண்டர்  ஐ டி  கார்டு 


3  தாய்லாந்து  ஃபூட்  தாய்லாந்து  மசாஜ்  ஏதாவது  கனெக்சன்  உண்டா?


 ஏம்மா  மின்னல் , உனக்கும்  உன்  ஹேர்  ஸ்டைலுக்கும்  கூடத்தான்  எந்த  கனெக்சனும் இல்லை, நாங்க  ஏதாவது  சொன்னோமா? 


4  டெக்னாலஜி  ஈஸ்  மை  பயாலஜி 


5  கேர்ஃபுல்லா  ஹேண்டில்  பண்ணு  மேன், இது  ரியல்  பாம் 


 உன்னை  மாதிரியா  மிஸ்?



6  வில்லனை  மீட்  பண்ண  நீங்க  ஒரு  பார்ட்டிக்குப்போக  வேண்டி  இருக்கும்


 சாரி  சார்  நான்  ட்யட் ல  இருக்கேன்


மீட்  பண்ணா  மட்டும்  போதும், எதும்  சாப்பிட  வேணாம் 


7  சார், நான்  உங்களை  என்  அப்பா  மாதிரி  நினைச்சு  மரியாதையா  நடத்துனேன். எப்பவாவது  அம்மா  வேணும்னு  கேட்டிருக்கேனா? யார்  இந்தபொண்ணு ?


8  ஸ்டேட்டஸ்  பத்தி  சொல்லுங்க 


 ஐ  ஆம்  ஸ்டில்  சிங்கிள்  சார்


 யோவ் ,  கேஸ்  ஸ்டேட்டஸ்  பத்தி  கேட்டேன் 


9  ஓக்கே  ஐ  கேன்  லீவ்  நவ்


 சார், இப்படி  ஒரு  கிரிட்டிக்கல்  ஆன  பொசிசன்ல  பொறுப்பே  இல்லாம  லீவ்  எடுத்தா  எப்படி ?

10   ஐ  ஆம்  சாரி  , பிரம்மச்சாரி


10 இது    வெறும் நாலு  அடி  ஸ்விம்மிங்  பூல்  தான்  , ஏன்  பதட்டப்படறிங்க?


   சாரி. நான்  தான்  அவ்ட்  ஆஃப்  த  பாக்ஸ்  திங்க்கர்  ஆச்சே? 


11   பெண்களுக்கு  எதிரா  நான்  ஆயுதம்  ஏந்த  மாட்டேன் 


 வில்லி =  ஓ  அப்போ  உன்  ஆயுதம்  எது ?


 என்  அழகு  தான் 


12  சாகறதுக்கு  முன்னே  உன்  பேரைச்சொல்லிட்டு  செத்துடு 


 சாரி , பிரம்மச்சாரி 


 ஓ, நீ வெர்ஜினா?


 மிஸ், உனக்கு  எப்படி  தெரியும் ?

 பாத்ரூம்ல  என்னை  அப்படி  முறைச்சுப்பார்த்தப்பவே  நினைச்சேன் 


13   ஹலோ  பாஸ்  எங்கே  இருக்கீங்க ?


  ஷீலா  ஈஸ்  ஆன்  டாப்  ஆஃப்  மீ


 வாவ்


  டேய்  ஃபைட்  போட்டுட்டு  இருக்கோம் 


14  ஒரு  அம்மா  தன்  மகனைக்காப்பாற்ற  எந்த  எல்லை  வரையும்  செல்வா 


15  தேச  பக்தி  என்பது  சொல்லிக்கொடுத்து  வருவதல்ல  ரத்தத்துல  ஊறி  இருக்கனும்


16 நாட்டுக்காக  உயிரைக்கொடுப்பதை  விட  கவுரமான  மரணம்  எதுவும்  கிடையாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனைப்பிடித்து  கட்டிப்போட்டு  விசாரிக்கும்;போது  என்  உயிருக்கு  ஆபத்து  இருக்கு  என  அவன்  சொன்ன  பின்பும்  நாயகன் , அண்ட்  கோ  அம்போப்னு  அவனை  விட்டுட்டு  எந்த  பாதுகாப்பும்  அளிக்காம  வாசல்ல  நி ந்னு  ஃபிளாஸ்பேக்  கதை  பேசிட்டு இருக்காங்க . முடிச்ட்டு  வந்து  பார்த்தா  ஆள்  க்ளோஸ் 


2  முதல்  பாதி  மொக்கைக்காமெடி  , பின்  பாதி  ஃபிளாஸ்பேக்  சீரியஸ்  ச்டோரி  என  பிரித்தது  ஓக்கே  , ஆனால்  இரு  வேறு  படம்  பார்ப்பது  போல  இருக்கிறது , இரண்டும்  சிங்க்  ஆகவே  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மொக்கைக்காமெடிப்பட  ரசிகர்கள்  பார்க்கலாம் .,  ரேட்டிங் 2.75 / 5 


Chaari 111
Theatrical release poster
Directed byTG Keerthi Kumar
Written byTG Keerthi Kumar
Produced byAditi Soni
StarringVennela Kishore
Murali Sharma
Samyuktha Viswanathan
CinematographyGrover Kashish
Edited byA. Richard Kevin
Music bySimon K. King
Production
company
Barkat Studios
Release date
  • 1 March 2024
Running time
129 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, May 15, 2024

THE IDEA OF YOU (2024) - அமெரிக்கன் மூவி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்

       



இந்தப்படம்  இதே  டைட்டிலில்  வெளியான  நாவலைத்தழுவி  எழுதப்பட்ட  திரைக்கதை . எழுதியவர்  ராபின்  லீ .16/3/2024  அன்று திரை  அரங்குகளில் வெளியாகி  , கமர்ஷியல்  ஹிட்  அடித்த  படம்  மீடியாக்களின்  பாசிட்டிவ்  விமர்சனங்களையும்  பெற்றது . 2/5/2024  முதல்    அமேசான்  பிரைம்   ஓடிடி  தளத்தில் காணக்கிடைக்கிறது      


இயக்குநர்  சிகரம்  கே  பாலச்சந்தர்  ஒரு  ஃபாரீன்  படம்  இயக்கினால்  எப்படி  இருக்கும்?  வழக்கமாக  உறவுச்சிக்கலை  வைத்துப்படம்  எடுக்கும்  அதே  பாணியில்  தான்  இதன்  திரைக்கதையும்  அமைந்திருக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  40  வயது  ஆன  சிங்கிள்  மதர் . டீன்  ஏஜ்  ல  ஒரு  மகள்  உண்டு .  நாயகியின்  கணவர்   அவர்  ஆஃபீசில்  பணி  புரியும்  ஒரு  இளம்  வக்கீல்  உடன் காதல்  கொண்டதால்  நாயகி  அவரைப்பிரிந்து  வாழ்கிறார்


 ஒரு  நாள்  ஒரு  பார்ட்டி  நடக்கும்  இடத்துக்கு  மகளை  ட்ராப்  பண்ண  வந்த  நாயகி  அங்கே  நாயகனை  சந்திக்கிறார். நாயகனுக்கு  25  வயது . இவர்  புகழ்  பெற்ற  பாப்  சிங்கர் . ஏகப்பட்ட  ரசிகைகள் .பலரும்  கொண்டாடும்  நபர்  மீது  ஒரு    அட்ராக்சன்  வருவது  இயல்பு  தானே? நாயகி  நாயகனைக்கண்டு  பிரம்மிக்கிறாள்


  அதே  சமயம்  நாயகி நடத்தும்  ஆர்ட்  கேலரிக்கு  விசிட்  அடிக்கும்  நாயகன்  எல்லாமே  பிடிச்சிருக்கு , எல்லாத்தையும்  வாங்கிக்கறேன்  என்கிறான்


 இவர்கள்  நட்பு  தொடர்கிறது  , அது  காதலாக  மலர்கிறது .  நாயகன்  உலகப்புகழ்  பெற்ற  பாப்  சிங்கர்  என்பதால்  உலகம்  முழுக்க  ரவுண்ட்ஸ்லயே  இருக்கிறார். நாயகி  அவனுடன்  சேர்ந்து  உலகம்  சுற்றும்  வாலிபி   ஆகிறார்


   நாயகன்  பிரபலம்  என்பதால் மீடியாக்கள்  நாயகன் - நாயகி  இருவரும்  இணைந்து  இருக்கும்  ஃபோட்டோக்களை  வெளியிட்டு  இருவருக்கும்  இடையே  ஆன  வயது  வித்தியாசம்  பற்றிக்கமெண்ட்  அடிக்கின்றன 


 இதில்  நாயகிக்கு  டிப்ரசன்  உண்டாகிறது . நாயகனின்  நண்பர்கள்  ஒரு  முறை  நாயகனின்  முன்னாள்  காதலிக்கும்  33  வயசுதான்  அவன்  ஒரு  ஆண்ட்டி லவ்வர்  என  கிண்டல்  செய்கின்றனர்


 அது  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த  நாயகி  நாயகன்  உடனான  காதலை பிரேக்கப்  செய்கிறார்


நாயகியின்  டீன்  ஏஜ்  மகளூக்கு  தன்  அம்மாவின்  காதல்  தெரிய  வருகிறது.  அதைத்தன்னிடம்  சொல்லாமல்  மறைத்து  விட்டதாக  குற்றம்  சாட்டுகிறார். இதே  சமயம்  நாயகியின்  கணவனின்  கள்ள்க்காதலி  அவரை  விட்டுப்பிரிகிறார்


 நாயகியின்  கணவனுக்கு  நாயகியின்  காதல்  பற்றித்தேரிய  வருகிறது. அவர்  அதை  எதிர்க்கிறார்


 இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதித்திரைக்கதை . காதலர்கள்  மீண்டும்  இணைந்தார்களா? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  அன்னா  ஹெத்தாவே  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  சின்னச்சின்ன  உணர்வுகளைக்கூட  அழகாக  வெளிப்படுத்துகிறார்.40  வயது ஆனாலும்  தொப்பை  போடாத  அவர்  பாடி  மெயின்ண்டனன்ஸ்  அருமை 


நாயகன்  ஆக நிக்கோலஸ்  கேலிட்சன்  நடித்திருக்கிறார். கச்சிதமான  நடிப்பு சிங்கர்  கம்  டான்சர்  ஆக  இவர்  வரும்  காட்சிகளில்  இளைஞிகளை  ஈர்க்கிறார் 


மகளாக  வருபவர்  சோ  க்யூட் , ஆனால்  அவருக்கு  அதிக  வாய்ப்பில்லை 


படத்தில்  வில்லன்  என  யாரும்  இல்லை ,சந்தர்ப்ப  சூழ்நிலைகள் , மீடியாக்கள்  தான்  வில்லன்கள் 


115 நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1    நீச்சல்  குளத்தில்  டீன்  ஏஜ்  பெண்கள்  டூ  பீஸ்  டிரசில்  இருக்கும்போது  தானும்  அதே  போல்  டிரஸ்  செய்ய  மனதுக்குள்  ஆசைஇருந்தாலும்  அவர்கள்  கிண்டல்  செய்வார்களோ  என  தயக்கத்தில்  நாயகி  ஸ்விம்  சூட்  போட்டு  அதன்  மேல்  ஓவர்  கோட்  போட்டு  அங்கே  செல்லும்  இடம்  அருமை , அப்போது  அவர்கள்  அடிக்கும்  கமெண்ட்டும்  அழகு 


2  நாயகன்  தன்னைக்கவர்ந்த  ஓவியத்தை  நாயகிக்குப்பரிசாக  அளிக்க  அது  நாயகி  மனதில்  ஏற்படுத்தும்  வர்ண   ஜாலங்கள்  அழகு 


3  நாயகன்  நாயகியிடம்  நம்ம  காதலை  உன்  மகளிடம்  சொல்லி  விட்டாயா? எனக்கேட்கும்போது  நாயகி  அதைச்சொல்ல  சங்கடமாக  இருக்கிறது  என  பம்முவது  அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1      40 வயசு  என்பது  ஒரு  மைல்  ஸ்டோன்.  30  வயசு  ஆகற  வரை  நீ  ஒரு  ஆளே  இல்லை 


2 உலகத்துல  இதுவரை  நான்  பார்க்காத ,  கேள்விப்படாத  ப்ளேஸ்  தான்  என்  ஃபேவரைட்  பிளேஸ்


3  ஒருத்தரு  கிட்டே  ஓப்பனாப்பேசும்போது  என்னவெல்லாம்  பிரச்சனை  வரும்னு உனக்குத்தெரியுமா? 


4  ஒரு  இடத்துக்குப்போகும்போது  கல கலப்பா  பேசிட்டு  இருக்கறவங்க  திடீர்னு  பேச்சை  நிறுத்துனா  நம்மைப்பற்றித்தான்  ஏதோ  பேசிட்டு  இருந்தாங்கனு  அர்த்தம் 


5    நான்  சந்தோஷமா  இருப்பது  நிறையப்பேருக்கு  பிடிக்காம  போகும்னு  நான்  நினைச்சுக்கூடப்பார்க்கலை 


 சந்தோஷமா  இருக்கும்  பெண்களை  பலருக்கும்  பிடிக்காதுனு  நான்  ஏற்கனவே  சொன்னேனே ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியுடன்  காரில்  போகும்போது  மீடியாக்கள்  கண்ணில்  படாமல்  இருக்க  காருக்குள்  ஒளிந்து  கொண்டு  வருகிறான்  அவ்ளோ  ஜாக்கிரதை  ஆக  இருக்கும்  நாயகன்  அடுத்தடுத்த  காட்சிகளில்  நாயகியுடன்   ஒப்பன்  ஸ்பேசில்   ஸ்விம்  சூட்  உடன்  சுற்றுவது   எப்படி > மீடியாக்கள்  கவர்  செய்வார்கள்  என்பது  தெரியாதா? 


2   நாயகி  தன்  கணவன்  செய்த  துரோகத்தையும், நாயகன்  எப்போதோ  செய்த  தப்பையும்  ஒப்புமைப்படுத்தி  இருவரும்  ஒன்று  என  வெறுப்பது  ஏற்புடையது  அல்ல , கணவன்  தப்பு  செய்தது   நாயகியுடன்  வாழும்போது , ஆனால்  நாயகன்  தப்பு  செய்தது  நாயகியுடன்  பழகும்  முன்பு , இர்ண்டும்  ஒன்றல்ல 


3   வாரம்  ஒரு  முறை  தன்  மகளை  சந்திப்பதாக  சொல்லும்  நாயகி  பல  மாதங்களாக  நாயகனுடன்  உலகம்  சுற்றிக்கொண்டு  இருக்கிறார். அப்போது  மகளுக்கு  டவுட்  வரவில்லையா? அல்லது  நாயகி  சமயம்  பார்த்து  மகளிடம்  காதலை  சொல்லி  இருக்கலாமே? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+ காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உண்மையில்  நடந்த  சம்பவத்தின் அடிப்படையில்  எழுதப்பட்ட  நாவலை  படமாக்கி  இருப்பதால்  சுவராஸ்யம்  தான், பார்க்கலாம் .,   ரேட்டிங்  2.75 / 5


The Idea of You
Release poster
Directed byMichael Showalter
Screenplay by
Based onThe Idea of You
by Robinne Lee
Produced by
Starring
CinematographyJim Frohna
Edited byPeter Teschner
Music bySiddhartha Khosla
Production
companies
  • Amazon MGM Studios
  • Welle Entertainment
  • I'll Have Another
  • Somewhere Pictures
  • Belle Hope Productions
Distributed byAmazon Prime Video
Release dates
  • March 16, 2024 (SXSW)
  • May 2, 2024 (United States)
Running time
116 minutes[1]
CountryUnited States
LanguageEnglish

Tuesday, May 14, 2024

FINDER PROJECT 1 (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


சமீபத்தில்  வந்த  லோ  பட்ஜெட்  படங்களில்  மீடியாக்களால்  பெரிதும்  பாராட்டப்பட்ட  படம்  இது . ஆனால் அனைத்து  விமர்சனங்களிலும்  இது  ஒரு  புதிய  கதை  என்றே  சிலாகித்தார்கள் .  என்  பார்வையில்  சமீபத்த்ல்  வெளியான  கன்னடப்படமான SAPTA  SAGARADAACHE  ELLO  SIDE A   ,  SIDE B ஆகிய  இரண்டு  படங்களின்  தாக்கம்  உள்ள  கதையாகவே  பார்க்கிறேன். அது  ஒரு   ரொமாண்டிக்  சப்ஜெக்ட் .இது  முழுக்க  முழுக்க  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  என்றாலும்  மெயின்  கதை  ஒன்று தான்.  வேறு  வேறு  திரைக்கதை  ஆக  அமைந்தாலும்  அடிநாதம்  ஒன்றே 


இது  ஒரு  உணமை  சம்பவத்தின்  அடிப்படையில்  எடுக்கப்ப்ட்ட  படமாம் . திரைக்கதை  எழுதி  இயக்கி  ஒரு  முக்கிய  ரோலில்  நடித்தும்  இருக்கிறார் புதுமுக  இயக்குநர்   வினோத்  ராஜேந்திரன் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  குப்பத்தில்  வசிக்கும்  ஏழை . அங்கே  இருக்கும்  ஏழை  மக்களிடம்  சீட்டுப்பணம்  வசூலித்து  ஒரு  ஆளிடம்  தருகிறான்.  அந்த  ஆள்  பணத்துடன்  ஓடிப்போகிறான். இப்போது  அந்தப்பணத்துக்குநாயகன்  தான்  பதில்  சொல்ல  வேண்டும், எல்லோரும்  இப்போதே  பணம்  தர  வேண்டும்  என  நெருக்குகிறார்கள் 


வில்லன்  நாயகனுக்கு  சொந்தக்காரன். இவன்  வேலை  வெட்டி  இல்லாதவன்.செய்யாத  தப்புக்காக  பழி  ஏற்றுக்கொண்டு  ஆறு  மாதம்  ஜெயில் தண்டனை  பெற்று   பின்  ரிலீஸ்  ஆகி  உண்மையான  குற்றவாளியிடம்  அதற்கான சம்பளத்தை  வாங்கிக்கொள்பவன் 


அந்த  ஊர்க்கவுன்சிலரைக்கடத்தும்  பொறுப்பு  வில்லனுக்கு  அளிக்கப்படுகிறது, வில்லனும்  தனியாக  அதை  செய்து  முடிக்கிறான். மெயின்  வில்லன்  கவுன்சிலரைக்கொலை  செய்து  விடுகிறான்.இப்போது  கொலைப்பழியை  ஏற்றுக்கோள்ள  இருவர்  தேவை 


மெயின்  வில்லனின்  ஆலோசனைப்படி  சைடு  வில்லனும், நாயகனும்  கோர்ட்டில்  தாங்கள்  தான்  அந்தக்கொலையை  செய்ததாக  சரண்டர்  ஆகிறார்கள் 


நாயகனுக்கு  என்ன  நம்பிக்கை  எனில் ஆறு  மாதத்தில்  நாம்  ரிலீஸ்  ஆகி  விடுவோம், கை  நிறையப்பணம்  கிடைக்கும்.  நம்  கடனை  அடைத்து  விடலாம்.

 ஆனால்  நினைத்தது  எதுவும்  நடக்கவில்லை . நாயகனுக்கு  ஆயுள்  தண்டனை  கிடைக்கிறது . பேசியபடி  பணமும்  வரவில்லை ., கடன்காரார்கள்  நெருக்கவே  நாயகனின்  மனைவி  தற்கொலை  செய்து  கொள்கிறாள் . நாயகனுக்கு  ஒரே  ஒரு  மகள் 


 குற்றமே  செய்யாமல்  அப்பாவிகள்  பலர்  ஜெயில்  தண்டனை  பெறுகிறார்கள் . அவர்களை  மீட்டு  கேசில்  வாதாடி  நிரபராதி  என  நிரூபித்து  அவர்களுக்கு  விடுதலை  வாங்கித்தருவதை  சேவையாக  ஒரு  நிறுவனம்  செய்கிறது ., அதற்குத்தான்  ஃபைண்டர்   என்று  பெயர் ,அந்த  நிறுவனத்தின்  முதல்  பிராஜெக்ட்  ஆக  இந்த  கேஸ்  இருக்கிறது


  நாயகனின்  கேசை  எடுத்த  நிறுவனம்  நாயகனை  ரிலீஸ்  செய்ய  வைத்ததா? உண்மைக்குற்றவாளியைக்கைது  செய்ய  வைத்ததா?என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சார்லி.  கேரக்டர்  ரோல்  என்றால்  இவருக்கு  அல்வா  சாப்பிடுவது  போல , பரிதாபகரமாக  முகத்தை  வைத்துக்கொண்டு  அப்பாவித்தன  நடிப்பை  வெளிப்படுத்துவதில்  இவர்  கில்லி ., நிறைவாக  செய்து  இருக்கிறார்

  நாயகனின்  சொந்தக்காரனாக  , சைடு  வில்லனாக  வருபவர்  சென்றாயன்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  திருட்டு  முழியும், உடல்  மொழியும்  அருமை 


கேசை  டீல்  செய்யும்  துப்பறிவாளராக  இயக்குநர்  வினோத் ராஜேந்திரன்  நடிப்பு  ஆஹா  ஓஹோ  அளவுக்கு  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம் . அவருக்கு  இணையாக  வரும்  நாயகி  தாரிணிக்கு  இணையான  ரோல்  இல்லை ., இன்னும்  அதிக காட்சிகள்  அவருக்கு  வழங்கி  இருக்கலாம்  ., வந்தவரை  குட் 


நிழல்கள்  ரவி  வக்கீலாக  வருகிறார். அனுபவம்  மிக்க  நடிப்பு 


கவுன்சிலர் ம் சாமியார் , மெயின்  வில்லன் , இன்னொரு  வக்கீல்  ஆகிய  அனைவரும்  புதுமுகங்கள்  என்றாலும்  அனுபவம்  மிக்கர்வர்கள் போல  நிறைவான  நடிப்பு 


ஒளிப்பதிவாளர் பிரசாந்த்  வெள்ளியங்கிரியின்  கேமரா  தன்  பணியை  செவ்வனே  செய்திருக்கிறது .இசை  சூர்யபிரசாத்.  ஓக்கே  லெவல் . பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை சராசரி ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின்  முதல்  காட்சியிலேயே  நிழல்கள் ரவி  ஸ்பீச்  கொடுப்பதும்  , குற்றவியல்  மாணவர்கள்  கேள்வி  கேட்பதும், விளக்கம்  அளிப்பதும்  நல்ல  ஓப்பனிங். ஈசியாக  கதைக்குள்  நம்மை  இழுத்துச்சென்று  விடுகிறது 


2  குற்றமே  செய்யாத  ஆள்  பணத்துக்காக  குற்றத்தை  ஒத்துக்கொள்வது , உள்ளே  போவது  நடைமுறையில்  உள்ளதுதான்  என்றாலும்  அதை  விளக்கமாக  காட்சிப்படுத்திய  டீட்டெய்லிங்  அருமை 


3  கவுன்சிலர் , சாமியார்  ,  எல்லோருக்குமான  மெயின்  வில்லன்  என  பின்  பாதி  ட்விஸ்ட்கள்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  சந்தர்ப்ப  சூழ்நிலையால்  தப்பு  பண்றவங்களுக்குத்தான்  பெயில் , குற்றப்பின்னணி  இருக்கறவங்க  தப்பு  பண்ணினா  அவங்களுக்குப்பெயில்  கிடைக்காது 


2   ஆயிரம்  குற்றவாளிகள் தப்பித்தாலும்  ஒரு  நிரபராதி  கூட  தண்டிக்கப்படக்கூடாதுனு  சொல்வாங்க , ஆனா   ஆயிரம்  குற்றவாளிகள் ல  ஒரு  ஆள்  கூட  தப்பிக்கவும்  கூடாது , ஒரு  நிரபராதி  கூட  தண்டிக்கப்படக்கூடாது


3   இந்த  மாதிரி  பொண்ணுங்க  விஷயத்தில்  வீக்  ஆன  ஆள்  ஆன  உனக்கு  ஏன்  சாமியார்  வேஷம் ?  நீ  ஏன்  சாமியார்  ஆனே?


என்  சம்சாரம்   என்னை  விட்டுட்டு  ஓடிடுச்சுங்க ‘


 ஏன் ?


 அதான்  சொன்னேனே?நான்  பொண்ணுங்க  விஷயத்தில்  வீக்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஆன  சார்லிக்கு   ஆட்டோ  ஓட்டத்தெரியாது. லைசென்சும்  இல்லை , கொலை  எப்படி  நடந்தது  என  டெமோ  காட்டச்சொல்லும்போது  டிரைவிங்  தெரிந்த  ஆள்  தானே  வேண்டும்? மெயின்  வில்லன்  அதை  க்ராஸ்  செக்  செய்யவில்லை , ஏன்?அதே  போல்  போலீசும்  நாயகனை  ஆட்டோ  ஓட்டிக்காட்டச்சொல்லவில்லை  , அது  ஏன் ? 


2   என்ன  தான்  நாயகன்  அப்பாவி , படிப்பறிவு  இல்லாதவர் என்றாலும்  ஒரு  கொலைக்கேசில்  ஆறு  மாதத்தில்  ரிலீஸ்  ஆகிடலாம்  என  எப்படி நம்புகிறார்?


3 பொய்யான  கொலைப்பழியை  ஏற்று  ஜெயில்செல்லும்  நபருக்கு   வாக்குக்கொடுத்தபடி  பணம்  தரவில்லை  எனிலவன்  பல்டி  அடித்துக்கேசைக்குழப்பும்  வாய்ப்பு  இருக்கு  என்பது  தெரிந்தும்  ஏன்  பணம்  பட்டுவாடா  செய்யபடவில்லை ? 


4  காட்சியாகக்காட்டப்படும்போது  கவுன்சிலரும், நண்பரும்  ஜாகிங்  தான்  போகிறார்கள், ஆனால்  வசனமாக  வரும்போது  வாக்கிங்  என்கிறார்கள் 


5   கொலை  செய்யப்பட்டதாக  சொல்லப்படும்  கவுன்சிலரின்  டெட்  [பாடி  கிடைக்காமல் அந்தகேசில்  ஆயுள்  தண்டனை  எப்படிக்கிடைக்கும் ? 


6   மெயின்  வில்லனின்  அப்பா  ஹார்ட்  அட்டாக்கில்  துடிக்கும்போது  அவரை  ஹாஸ்பிடல்  கொண்டு  போனால் வில்லன்  மாட்டிக்கொள்வான்  என்பதால்  அவன்  சும்மா  இருப்பது  ஓக்கே ,  அப்படி  சும்மா  இருந்தாலே  தானாகவே  அப்பா  உயிர்  போயிடும், எதுக்கு  மெனக்கெட்டு   சொந்த  அப்பாவைக்கொலை  செய்யனும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  தரமான  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படம் .பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5 

Monday, May 13, 2024

ஒரு நொடி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்)

   

      பெரிய  நட்சத்திரப்பட்டாளங்களில்லாமல் திரைக்கதையை  நம்பி  எடுக்கப்படும்  படங்கள்  பெரும்பாலும்  ஹிட்  ஆகி விடுகின்றன. இரு  வேறு  நபர்களின்  மரணங்கள்    எப்படி  ஒரு  புள்ளியில்  இணைகின்றன  என்பதை  விளக்கும்  க்ரைம்  த்ரில்லர்  படமான  இது  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  உங்களை  சுவராஸ்யப்படுத்தும்  வல்லமை  கொண்டது.26/4/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  மீடியாக்கள்  வரவேற்பையும், மக்கள் ஆதரவையும்  ஒருங்கே  பெற்ற  படம்  


 இந்தப்படத்தில்  வாவேற்கத்தக்க  முக்கியமான  விஷயம்  நாயகனுக்கு  ஜோடி  இல்லை , டூயட்  இல்லை , மொக்கைக்காமெடி  டிராக்  இல்லை .   


ஸ்பாய்லர்  அலெர்ட்


 முதல்  கேஸ் =  பொலீஸ்  ஸ்டேஷனில்  ஒரு  பெண்  தன்  கணவன்  காணாமல்  போனதாக  மிஸ்சிங்  கேஸ்  கொடுக்கிறாள் .ஒரு  நபரிடம்  வட்டிக்குப்பணம்  வாங்கியதாகவும்  அந்த  நபர்  எம் எல்  ஏ  செல்வாக்கு  உள்ள  ஆள்  எனவும் ரொம்ப நெருக்கடி   தந்து  கொடுத்த  பணத்துக்கு  ஈடாக    அவர்களுக்கு சொந்தமான ஒரு  நிலத்தை எழுதி   வாங்கிக்கொண்டதாகவும் , அந்த  நிலத்தை  மீட்க  பணம்  ரெடி பண்ணி அன்று  காலையில்  கிளம்பியவர்  வீடு  திரும்பவில்லை . எட்டு  லட்சம்  ஹாட்  கேஷாக  அவர்  கையில்  இருக்கிறது


போலீஸ்  இன்வெஸ்டிகேஷனை  ஆரம்பிக்கிறது .எம் எல் ஏ  விடம்  இருந்து  நெருக்கடி  தரப்பட்டாலும்  நாயகன்  ஆன  இன்ஸ்பெக்டர்  அந்த  ஃபைனான்ஸ்  பார்ட்டியை  விசாரிக்கிறார். காலை  9  மணி  முதல்  இரவு  வரை  அந்த  ஆள்  எங்கே  எங்கே  போனார்  என  விசாரணை  நடக்கிறது . ஆனால்  துப்பு  எதுவும்  கிடைக்கவில்லை . அந்த  ஃபைனான்ஸ்  பார்ட்டியோ , எம் எல்  ஏ வோ  கொலை  செய்திருக்க  வாய்ப்பு  குறைவு 


 இரண்டாவது  கேஸ் =   நகைக்கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆக  வேலை  செய்யும்  ஒரு  இளம்பெண்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கிறாள் . இந்தக்கேசை  நாயகன்  விசாரிக்கிறார். அந்தப்பெண்  42  நாட்கள்  கர்ப்பம்  என  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  தெரிய  வந்ததால்  காதல்  விஷயம்  பிடிக்காமல்  பெற்றோர்  அல்லது  பெண்ணின்  அப்பா  ஆணவக்கொலை  அல்லது  கவுரவக்கொலை  செய்திருக்கலாம்  என  முதலில்  போலிஸ்  நினைக்கிறது . அல்லது  கர்ப்பம்  ஆக்கிய  காதலன்  திருமணத்துக்கு  நெருக்கடி  கொடுத்ததால்  பெண்ணைக்கொலை  செய்திருக்கலாம்  என  சந்தேகிக்கிறது 


  ஆனால் விசாரணையில்  அந்தக்காதலனுக்கும், பெண்ணுக்கும்  பதிவுத்திருமணம்  ஏற்கனவே  நடந்தது  என்  தெரிகிறது.  சந்தேக  வட்டத்தில்  காதலனும், அப்பாவும்  நீங்குகிறார்கள் 


 மேலே  சொன்ன  இரு  கேஸ்களுக்கும்  ஒரு  தொடர்பு  இருக்கிறது , அதை  நாயகன்  எப்படி  துப்பு  துலக்கி  கண்டு  பிடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை 


முதல்  கேசில்  மிஸ்ச்ங்  நபராக  வரும்  எம்  எஸ்  பாஸ்கர்  வழக்கம்  போல  தன்  அனுபவம்  மிக்க  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் .ஃபைனான்ஸ்  பார்ட்டி  ஆக  வேல  ராம மூர்த்தி  மிரட்டலான  நடிப்பு .போலீஸ்  விசாரணை  நடக்கும்போது  கூட  கெத்து  காட்டும்  அவர்  உடல்  மொழி  அபாரம் . எம் எல் ஏ  ஆக  பழ  கருப்பையா  ஓவர்  ஆக்டிங் . டிராமா  நடிகர்  போல்  நடித்திருக்கிறார். நிஜ  வாழ்வில்  சிறந்த  பேச்சாளர்  ஆன  இவர்  ஏன்  படத்தில்  மட்டும்  இப்படி  செயற்கை  தட்ட  நடித்தார்  என்பது  தெரியவில்லை 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  நாயகன்  தமன்  குமார்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஓவர்  அலட்டல்  இல்லை , ஆனாலும்  போலீசுக்கு  உரிய  கம்பீரம்  குட் யூனிஃபார்மில்  இல்லாத  போதும்  போலீசுக்கான  கம்பீரத்தைக்காட்டும்  அவர்  உடல்  மொழி , ஜிம்  பாடி , போலீஸ்  ஹேர் கட்  அனைத்தும்  கச்சிதம் 


எம் எஸ்  பாஸ்கரின்  மனைவியாக  ஸ்ரீரஞ்சனி  ஸ்ரீவித்யாவுக்கு  நிகரான  அகன்ற  , பெரிய  கண்கள் , நல்ல  நடிப்பு .


 காணாமல்  போன  பெண்ணாக  நிகிதா கச்சிதம் . அவரது  அம்மாவாக   தீபா  சங்கர்   நிறைவான  நடிப்பு 


சஞ்சய்  மாணிக்கம்  தான்  இசை ., பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  ஓக்கே  லெவல் 


ரத்தீஷின்  ஒளிப்பதிவில்  படப்பிடிப்பு  கச்சிதம் .குரு  சூர்யாவின்  எடிட்டிங்கில்  128  நிமிடங்கள்படம்  ஓடுகிறது . காணாமல்  போகும்  பெண்ணின்  ஃபிளாஸ்பேக்கில்  இன்னும்  ட்ரிம்மிங்  தேவை . டூயட் , ரொமான்ஸ்  காட்சிகள்  அவ்ளோ   தேவை  இல்லை 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மணி  வர்மன்  


சபாஷ்  டைரக்டர்


1    நான்  லீனியர்  கட்டில்  சம்பவங்கள்  முன்  பின்  நகர்ந்தாலும்  குழப்பம்  ஏற்படுத்தாத  திரைக்கதை  பெரிய  பிளஸ் 


2   நாயகன்  தன்  இன்வெஸ்டிகேஷனை  நடத்தும்  போது  நாமே  நேரில்  அதைக்காண்பது  போல  சுவராஸ்யமாக  , மனதுக்கு  நெருக்கமாக  அமைத்த  விதம் 


3    மெயின் கதைக்கு  என்ன  தேவையோ  அதை  விட்டு  இம்மி  அளவிலும்  விலகாத  திரைக்கதை பெரிய  பலம்


  ரசித்த  வசனங்கள் 


1   நான்  தான்  குத்துக்கல்  மாதிரி  இங்கேயே  உக்காந்திருந்தேனே   பார்க்கலை ?


பார்த்தேன் , குத்துக்கல்  தான்  இருக்குனு  நினைச்சுட்டேன் 


2   சிதம்பர  ரகசியம்  கூட  தெரிஞ்சுடும், ஆனா  போலீஸ்  ஒரு  ஆளைக்கட்டம்  கட்டனும்னு  முடிவு  பண்ணிட்டா  என்ன  பண்ணுவாங்கனு  கண்டு  பிடிக்கவே  முடியாது 


3   வாழும்போது  நாலு  பேர்  கூட  வாழ்ந்தாதான்  சந்தோஷமா  வாழ  முடியும் 


4   ஒவ்வொரு  இன்ஸ்பெக்டரும்  ஒரு  எம் எல்  ஏ  வை  அரெஸ்ட்  பண்ண  முடியும்னா மொத்த  சட்டமன்றமும்  செண்ட்ரல்  ஜெயில்ல  தான்  இருக்கும் 


5   நிறைய  நேரம்  புத்திசாலிகள்  தான்  உணர்ச்சி வசப்பட்டு  முட்டாள்  தனமா  ஏதாவது   செய்து  மட்டிக்கொள்வார்கள் 


6   ஒரு  தவறு  செஞ்சுட்டா  அதை  சரி  செய்ய  அல்லது  மறைக்க  இன்னொரு  தவறு  செய்யக்கூடாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  அடியாட்கள்  நாலு  பேர்  மொபைல்  ஃபோன்களையும்  போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ்  இடம்  கொடுத்து   இந்த  ஃபோன்  எல்லாம்  எங்கெங்கே  ட்ராவல்  பண்ணி  இருக்குனு  விசாரிக்கச்சொல்றாரே?  அதுக்குப்பதிலா  ஃபோன்களை  அவங்க  கிட்டேயே  கொடுத்து  அனுப்பிட்டு  அவங்க  ஃபோன்  நெம்பர்சை  மட்டும்  சைபர்  க்ரைம்  போலீஸ்  கிட்டே  தந்தா  அவங்க  ட்ராக்  பண்ணி  சொல்ல  மாட்டாங்களா?  இப்போ  எங்கே  போறாங்க  என்பதும்  தெரிந்து  விடும் , ஃபோனை  வாங்கிட்டா  அவங்க  புது  நடவடிக்கை  எப்படித்தெரியும் ?


 2   ஹேண்ட்  பேக்  ல  ஹாட்  கேஸ்  8  லட்சம்  வெச்சுட்டு  யாராவது  ரிலாக்ஸா  சலூன்ல  சேவிங்க்  பண்ணிட்டு  இருப்பாங்களா?  எப்படா  பணத்தைப்பாதுகாப்பாக  ஒப்படைப்போம்  என்பதுதானே  குறியாக  இருக்கும்? இத்தனைக்கும்  அந்த  நபர்  வாலிபன்  என்றாலும்  பரவாயில்லை . 70  வயது  ஆள்  ஷேவிங்கில்  அவ்ளோ  கவனம்  இருக்குமா? 


3  அந்தபெண்ணின்  டெட்  பாடியின்  முகம்  துணியால்  மறைக்கப்பட்டும்  எப்படி  பெற்றோரால்  அடையாளம்  காண  முடிந்தது  ? என  நாயகன்  மடத்தனமா  சந்தேகப்படுகிறான்.  மகள்  கடைசியாக  வீட்டை  விட்டுக்கிளம்பும்போது  போட்டிருந்த  டிரஸ் , உடல்  இதை  எல்லாம்  பார்த்தாலே  தெரிந்து  விடுமே? முகம்  ஏன்  பார்க்கனும் ? 


4  அந்தப்பெண்  கொலை  செய்யப்படும்போது  பிளாஸ்டிக்  கவரால்  முகத்தைக்கவர்  பண்ணி  , ஒரு  போராட்டம்  நடந்து  பின்  கொலை  செய்யப்படுகிறாள் . ஆனால்  முகம் மேக்கப்  கலையாமல் , வைத்த  பொட்டு  கூட  நகராமல்  இருக்கே?  ( அது  ஸ்டிக்கர்  பொட்டோ,  செந்தூர்  குங்குமமோ  கலையனுமே? ) 


5   ஆல்ரெடி ஒரு  பஞ்சர்  ஆன  டூ  வீலரை  ஸ்டார்ட்  பண்ணி  ஓட்டும்போத்  அப்படி  கீழே  விழாது . தடுமாறும்  அவ்ளோ  தான்.  வேகமாக  வரும்  வண்டி  திடீர் என  பஞ்சர்  ஆனால்  தான்  வண்டி  கீழே  விழும் 


6  அந்தப்பெண்  காஃபிக்கப்பில்  உள்ள  காபியை 75%  குடித்து  விட்டு  மீதி  வைக்கிறாள் . அடியாள்  ஒருத்தன்  அதில்  15%  குடிக்கிறான்.. மீதி  10 %  தான்  இருக்கும், ஆனால்  அந்தப்பெண்  அந்த  அடியாளிடம்  கோபமாக  டம்ளரை  வீசும்போது  80%  காஃபி  இருக்கு 


7  நகைக்கடையில்  சேல்ஸ்  கேர்ள்  ஆகப்பணி  புரியும்  பெண்ணுக்கு  ரிஜிஸ்டர்  மேரேஜ்  நடக்கும்போது   சாட்சிக்கு  சில  நண்பர்கல். ,தோழிகள்  கூட  இருக்காங்க .ஆனா  போலீஸ்  விசாரணையில்  அந்தப்பெண்ணின்  கூட  பணியாற்றும்  பெண்ணுக்கு  அந்த  மேரேஜ்  பற்றித்தெரியலை , இத்தனைக்கும்  பக்கத்து  வீடு   வேற 


8   முதல்  கொலை  திட்டமிட்டு  செய்யப்பட்டதல்ல .அது  ஆக்சிடெண்ட்டல்  டெட். ஆனால்  டெட்  பாடியை  பீஸ்  பீஸ்  ஆக  கட்  பண்ணி  நாய்களுக்குப்போடும்போது  ஒரு  பெண்  அதைப்பார்க்கிறாள்  என  கொலைகாரன்  கொடூரமாகக்கொலை  செய்வதில்  லாஜிக்  இல்லை . கொலையை  நேரில்  கண்ட  சாட்சியைத்தான்  கொல்லனும். இது  வெறும்  டவுட்  தான்  வரும். ,


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விறுவிறுப்பான  த்ரில்லர்  படம்  பார்க்க  விரும்புபவர்கள்  அவசியம்   காணலாம் , ரேட்டிங்  3 / 5 


ஒரு நொடி
அதிகாரப்பூர்வ திரைப்பட போஸ்டர்
இயக்கம்பி.மணிவர்மன்
எழுதியவர்பி.மணிவர்மன்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுகே.ஜி.ரதீஷ்
திருத்தியவர்எஸ்.குருசூரிய
இசைசஞ்சய் மாணிக்கம்
தயாரிப்பு
நிறுவனம்
ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு & விநியோகஸ்தர்கள்
வெளிவரும் தேதி
  • 26 ஏப்ரல் 2024 (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்