Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, February 10, 2015

புது நெல்லு புது நாத்து

பொங்கல் மட்டுமல்ல, பொங்கலுக்குப் பிந்தைய காலமும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது.
கதையிலும் காவியத்திலும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு சம்பவங்கள் ஒரு உச்சத்துக்குச் செல்லும். இப்படியே பயிர்த் தொழிலின் உச்சமாக வருவது தைப்பொங்கல். மஞ்சுவிரட்டும் சேர்ந்துகொண்டதால் காவியச் சுவைக்குப் பஞ்சமில்லை. ஆனால், பொங்கல் என்ற உச்சத்துக்குப் பின்னால் உள்ள காலத்தைப் பற்றிய கலாச்சாரப் பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.
காவிரிப் படுகையில் பொன்னாகவும், இளமஞ்சள் பட்டாகவும் மின்னிக் கிடந்த வயல்வெளி தை மாத அறுவடைக்குப் பின்னும் ஒரு புது அழகைப் பூசிக்கொள்ளும். பட்டப் பகலாக எரிக்கும் தை மாத நிலவில் இந்த வெளியைப் பார்க்க வேண்டும். குட்டானாகவும், கோட்டை மதிலாகவும் ஆங்காங்கே வைக்கோல் போர். களம் புழங்கியபின் முன்னிரவில் வயல் குறுக்காகவே நடந்து வீட்டுக்குத் திரும்பலாம். கழனியின் சேறு ஒட்டாத மெழுகாக உலர்ந்து காலுக்கு மெத்தென்று இருக்கும். மார்கழியில் வீசிவைத்த உளுந்தும் பயறும் ஐந்து, ஆறு இலைகளுடன் நெல்லின் தாளோடு தாளாக உரசி உறவாடும். புதுக் கருக்கு அழியாமல் நிமிர்ந்து நிற்கும் தாளுக்கு முத்தாகவும் மணியாகவும் நெல்லை வாரி வழங்கிய பெருமிதம். நடக்கும் காலுக்கு விலகி மடங்கும் தாளின் சரசரப்பு தவிர வேறு அரவம் கேட்காது. வாய்க்காலில் தன்ணீர் இஞ்சினாலும் திட்டுத் திட்டாகக் கிடந்து நிலவைப் பிடித்துக் காட்டும் குட்டைகள். முன்பனியின் குளிரும் வெண்ணிலவின் குளிர்ச்சியும் பின்னிவரும் உணர்வு அப்படியே தனக்கு வேண்டுமென்று உடம்பு தவித்துப்போகும். மற்றதைக் காட்ட வந்ததா, தன்னையே காட்டிக்கொள்ள வந்ததா என்று வெளி நிறைத்து மயக்கும் முழு நிலவின் ஒளி.
பச்சை உடம்பாகும் இயற்கை
பகலிலோ வெயில் இருக்கும்; ஆனால், நிழல் தேடி ஒதுங்கத் தோன்றாது. சாரம் சுவறாமல் நிலம் காய்ந்திருக்கும்; ஆனாலும் செடியிலோ கொடியிலோ வாட்டம் இருக்காது. பிரசவித்த பச்சை உடம்பாக இருக்கும் இயற்கை. பரங்கியும் பூசணியும் சுரையும் எல்லாமே பூவோ பிஞ்சோ காயோ வைத்திருக்கும். உலர்ந்து, காக்கா கால் ஓடியிருக்கும் வயலில் சில நாட்கள் சென்றால் வெடிப்பு ஒடும். ஆனலும் உளுந்தும், பயறும் பனியிலேயே தழைத்து நெல் தாளை மூடிவிடும். இதை ஒதுக்கி, ஊருக்கும் ஊருக்குமாக ஒற்றையடிப் பாதை பிறக்கும். தண்ணீர் காலத்தில் சாலை வழியாகச் சுற்றிச்செல்வதால் அடுத்த கிராமம்கூட எட்டிச் சென்றதாகத் தெரியும். ஆனால், அறுவடைக்குப் பின் நினைத்த இடத்தில் வயலில் இறங்கி நினைத்த ஊருக்கு நடக்கலாம். தை பிறந்தால் தூரம் குறைய வழி பிறப்பதும், அப்போது சாலைகள் அந்நியமாவதும் டெல்டாவின் விந்தை.
தை வெள்ளியில் பிள்ளையார் கும்பிடுவதுதான் பொங்கலுக்குப் பின் வரும் முதல் வழிபாடு. மறுசுழற்சி ஒன்றின் தொடக்கத்துக்கு இலக்கணம். வீட்டு வாசலிலோ கொல்லையிலோ பசுஞ்சாணத்தில் பிடித்த பிள்ளையாரும் அகல் விளக்குமாக அந்திப் பொழுதில் எளிமையாக நடக்கும். கண்டுமுதலான நெல் வயல் களத்திலேயே பட்டறையாகக் கிடக்கும். வயல் காய்ந்த பிறகு வரப்பை உடைத்து மைல் கணக்கில் வண்டிச் சோடு உருவாகும். நெல், அந்தச் சோடு வழியாகவே வண்டியில் வந்து வீடு சேரும். வயலில் கிடக்கும் வைக்கோல் போரையும் போரடித்து, திரைத்து, இப்படியே கொண்டுவந்து போர் போட்டு, தலைகூட்டுவார்கள். சாலைகள் ஈடுகொடுக்க முடியாத போட்டிச் சாலைகளாகவே வண்டிச்சோடு உருவாகும்.
அறுவடையான கையோடு நெல்லை விற்றுவிடுவது வழக்கமில்லை. தொழிலாளியானாலும் ஆறு, ஏழு மூட்டை நெல்லை இருப்புக் கட்டினால்தான் அவருக்கு நிம்மதி. பண்ணைகளில் கண்டுமுதலான நெல்லை கணக்குத் தலைப்பில் வரவு வைப்பதுபோல் நான்காகப் பங்கீடு செய்வார்கள். ஒரு பத்தாயத்தில் சாப்பாட்டு நெல், ஒரு பத்தாயத்தில் அடுத்த ஆண்டுக்கான தரிசு கூலி நெல், பிறகு விதைக் கோட்டை கட்டுவதற்கு, கடைசியில் ரொக்கச் செலவுக்காக விற்பதற்கு. வயலில் ஆட்டுக் கிடை, மாட்டுக் கிடை கட்டும் செலவுக்கு போரடி நெல்லைத் தனியாக வைத்துக்கொள்வார்கள். கருக்காயை மறுபடி தூற்றி அதிலிருந்து அரிசிக் கருக்காய் சேர்த்துக்கொள்வார்கள்.
மாட்டுக்கும் ஒரு பங்கு
விற்பதற்கான நெல் அதிகம் இருந்தால் அதை சேர் கட்டிவைத்து ஆடி மாதம்தான் விற்பார்கள். நெல் தாளை பெரிய வட்டமாகப் பரப்பி, அதில் நெல்லைக் கொட்டக் கொட்ட வைக்கோல் பிரியாலேயே சுற்றி, சுவராக்கி, கூரை வேய்ந்ததுபோல் மூடிவிடுவார்கள். ஆயிரம் கலம் நெல்லைக்கூட இப்படிச் சேர் கட்டலாம். திருவானைக்கா கோயில் பிரகாரத்தில் அப்படி சேராகவே செங்கல்லால் கட்டிய களஞ்சியம் உண்டு. ஞாயிற்றுக் கிழமையில் நெல் விற்பதில்லை. அது நெல்லைப் போற்றிய காலம்.
ஐந்து வேலி நிலம் உள்ளவர்களும் மரப் பத்தாயம் இல்லாமல் மண் குதிரிலேயே நெல்லை இருப்புவைத்திருப்பார்கள். நீள் சதுரமாக இருக்கும் மண் குதிர்கள் சில வீடுகளின் உள் சுவர்களாகவே இருந்தன. வட்டமாக இருக்கும் சக்கரக் குதிரும் உண்டு. குதிரும் பத்தாயமும் அடுக்கிய உறைகளாக இருக்கும். உறை எத்தனை கலம் நெல் பிடிக்கும் என்று துல்லியமாகச் சொல்வார்கள். அந்துப் பூச்சி அண்டாமல் இருக்க குதிரில் கஞ்சங்கோரை செருகியிருக்கும். விதை நெல்லை அமாவசையில் காயவைத்து, கோட்டையாகக் கட்டி வைத்துக்கொள்வார்கள். வருடப் பிறப்புக்குப் பிறகுதான் பத்தாயம் திறந்து நெல் எடுப்பது வழக்கம். பச்சையாகவோ புழுக்கியோ நெல் அரைத்து வந்தால், அது மனிதர்களுக்காக அரிசிக் கூண்டுக்கும், மாட்டுக்காகத் தவிட்டுக் கூண்டுக்கும் பிரிந்து செல்லும். வைக்கோலாக, தவிடாக, கழனியாக, கஞ்சியாக மாட்டுக்கு ஒரு பங்கில்லாத விவசாயம் இருந்ததில்லை. நெல்லை உரலில் குத்தி அரிசியாக்கிய காலமும் இருந்தது. கல்யாணத்துக்குப் பெண் தேடுபவர்களிடம் “நாள் ஒன்றுக்கு ஒரு கலம் நெல் குத்துவாள்” என்று பெண்ணைப் பரிந்துரைப்பார்கள். நெல்லைப் புழுக்கி அரிசியாக விற்பதற்கென்றே வலியங்காரத் தெரு இருந்தது. இந்த அரிசிக்கு வலியன் அரிசி என்றே பெயர்.
பார்த்த இடமெல்லாம் நெல்
எவ்வளவு நெல்லானாலும் மரக்காலைக் கொண்டே அளப்பார்கள். அளக்கும் மரக்காலைப் பொலியில் பாய்ச்சுவதும், அது ஒரு விரலில் சுழன்று நெல் பிடிக்கும் கூடையில் கொட்டுவதும் இமைப் பொழுதில் நடக்கும். அடிவைக்கும் இடமெல்லாம் நெல்லாகத்தான் இருக்கும். ஆனாலும், ஒரு மணிகூட வீணாகாது. அளந்து போட்ட நெல்லிலிருந்தும் ஐந்து, ஆறு மணிகளை அளந்த மரக்காலில் திரும்பப் போட்டுக்கொள்வார்கள். அப்போது நெல்லுக்கு இருந்த மதிப்பைச் சொல்லி மாளாது. பித்தளைப் படியில் நெல்லை நிறைத்து அதன் மேல் நல்ல விளக்கு வைத்திருக்கும் நிறைநாழியோடு மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குள் நுழை வாள். மணமக்கள் உட்காரும் புதுப்பாயின் கீழே நெல்லைப் பரப்பி வைப்பார்கள். தாலிகட்டும்போது நெல் கோட்டை மேல் மணப்பெண்ணை உட்காரவைப்பது சிலரது வழக்கம். பிறந்த வீட்டுக்கு மறுவுண்ண வந்து புகுந்த வீடு புறப்படும் பென்ணுக்கு நெல்லைப் போட்டுத்தான் ஆசி கூறுவார்கள்.
குதிர், பத்தாயம் எல்லாம் இப்போது காண முடியாது. உரலும் உலக்கையும் குந்தாணியும் அருங்காட்சி உருப்படிகள். பின்னர் வந்த அரவை மில்களும் ஓய்ந்து, பாழ்பட்டுக் கிடக்கின்றன. நெல்லின் மேலிருந்த ஆசையில் எஞ்சிய நாற்றை வாய்க்காலிலும் நட்டுவைத்து அறுவடை செய்வார்கள். பழையவற்றைப் பண்பாட்டின் எச்சங்களாக்கி, புதியவை வந்து புகுந்துகொண்டன. மறைந்தவை பழைய முறைகளும் வழக்கங்களும் மட்டுமல்ல. பயிர்த்தொழில் மீதிருந்த காதலும், கல்லாமல் கற்ற கைத்திறன்களும்தான்.
- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

  • பேராசிரியர் தங்க. செயராமன் அய்யா.... 25 ஆண்டுகளுக்கு முன் எம் இல்லத்தில் நடந்த சம்பவங்களை மீள் நினைவூட்டி, பசுமையை என் கண் முன் விரித்து காட்டியுள்ளீர்கள். சுழித்து ஓடிய காவிரியை விட, வாய்கால் ஓரம் குளித்து, நண்டு பிடித்து, நெல் அறுப்பு அறுத்து, வீடு வந்து சேரும் அந்த நெல் "ஒரு புது மண பெண்" போல் போற்றப்பட்ட காலம். பத்தாயத்தில் கொட்டிய நெல்லை, எடுத்து காய வைத்து பச்சரிசியாகவும், அவித்து காய வைத்து புழுங்கல் அரிசியாகவும் அரைத்து கொண்டு வந்த காலம் எல்லாம் மீண்டும் நினைவில் வந்து நிழலாடியது. அற்புதமான நடையுடன், பதிவிட்டுள்ளிர்கள். வாழ்க !
    about 16 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
       
    • immanuvel  
      அருமை...காலத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள் ....நன்றி
      Points
      1600
      about 23 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
      • aalamaram  
        அறுவடைக் காலத்தில் கிராமத்தில் வயலில் வரப்பில் வாய்க்காலில் நடந்த நினைவுகள் பசுமையாய் திரும்பின. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வருவதும் அதனை உலர்த்தி குதிரில் நிறைப்பதும் செழுமையான வாய்ப்புக்கள். இன்று காடுகள் கழனிகள் ப்லாட் போட்டு காணாமல் போய் விட்டன. இன்று வயலில் விதைப்பவன் ஏமாளி. அதில் கல் ஊன்றி ப்லாட் போட்டவன் கோடீஸ்வரன்.
        about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
        • karthikeyan  
          குளிர் காலம் முடிந்து கோடை தொடங்கும் இடைப்பட்ட காலத்தில் தஞ்சை விவசாயிகள் சோ ம்பிக்கிடப்பதில்லை.உளுந்து பயறு வெள்ளரி முதலியவற்றை விதைத்துப்பராமரிப்பார்கள்.ஒவ்வொரு வீட்டுப்புழக்கடையிலும் எருக்குழி இருக்கும் தெருத்தெருவாக இந்த எருவை விலைபேசி வண்டிகளில் எடுத்துச்செல்வார்கள் வாழ்க்கை ரொம்பவும் ரம்மியமாக இருந்த நாட்கள் அவை.அந்த நாட்களின் நினைவுகளை கொத்தி மேலே கொண்டு வரும் தங்க ஜெயராமனுக்கு நன்றி
          Points
          120
          about 21 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
          • Ashok Kumar  
            சிறப்பான தமிழக அரசின் செயல்பாட்டால் குடியை போற்றும் காலமிது.
            Points
            2490
            about 21 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
            • kavingarMagan@rasipuram  
              கடந்த கால விவசாயியின் வாழ்க்கையில் அறுவடைக்குப்பின் நிகழும் அத்தனை நிகழ்வையும் கண்முன்னே காட்டிய திரு தங்க.ஜெயராமன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம். இனி வரும் காலங்களில் இது போன்ற ஆவணங்களின் மூலம் மட்டுமே விவசாயியின் வாழ்க்கையை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். ஆவணமாக்கிய தமிழ் தி ஹிந்து விற்கு நன்றி.
              Points
              755
              about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Vathson  
                உண்மை...எனக்கு என் வீட்டில் பத்தாயம் இருந்த்து நினைவில் வந்தது. மற்றும் கரவி மாடுகள் இருந்த்து . பசுமையான நினைவுகள் .. மீண்டும் நெல் களஞ்சியமாக மாற வேண்டும் தமிழகம்.
                about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                • k.muthambalavanan  
                  தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி திரு.தங்க. ஜெயராமன் அவர்களின் கட்டுரையை படித்த பின் தான் அருத்தம் தெரிந்தது.தஞ்சை பகுதில் வாழ்ந்த அனைவருக்கு பசுமையான அந்த கால வாழ்க்கையை நினைவு படுத்தி விட்டார்.

                Wednesday, February 01, 2012

                தேனி மாவட்டம் - விளைநிலங்கள்,விவசாயம் வாழ - சினிமாவிமர்சனம்

                http://runtamil.com/wp-content/uploads/2012/01/00-00-2373.jpg 

                பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள் எல்லாம் தன் இமேஜை பில்டப் பண்ற கதைல மட்டும் தான் பெரும்பாலும் நடிக்கறாங்க.. சின்ன பட்ஜெட் படங்கள்ல பல சமயம் அரிதான மெசேஜ்கள் அசால்ட்டா சொல்லிட்டு சத்தம் இல்லாம நகர்ந்துடறாங்க.. சரியான மார்க்கெட்டிங்கோ, நல்ல ஓப்பனிங்க்கோ இல்லாம அமுங்கிடுது.. அந்த மாதிரி நல்லதொரு கதைக்கரு உள்ள படம் தான் தேனி மாவட்டம்..
                வில்லி ஐஸ்வர்யா சசிகலா மாதிரி.. கிடைச்ச நிலத்தை மடக்கிப்போடு, எதிர்க்கறவங்களை அடக்குப்போடு டைப்.. அவர் இருக்கற கிராமத்துல ஹீரோவோட அப்பா நல்ல செல்வாக்கா நில புலன்களோட இருக்கார்.. ஃபாரீன் ஆட்கள் அந்த கிராமத்துல தொழிற்சாலை கட்ட விளைநிலங்களை விலை பேச வர்றாங்க.. ஹீரோவோட அப்பா தர்லை.. தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள், எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும்னு சொல்லி தானும் நிலங்களை தராம வேற யாரும் தராத மாதிரி பிரச்சாரம் பண்றாரு.. 

                வில்லி ஹீரோவோட அப்பாவை போட்டுத்தள்ளிடறா.. ஹீரோ தன் அப்பாவை கொலை செஞ்சவளை பழி வாங்க கிளம்பாம தன் கிராமத்து  மக்களின் நன்மைக்காக பாடு படறார்.. வில்லி தன் நிலத்தை ஃபேக்டரி கட்ட தர முயலும்போது அதை கோர்ட் உத்தரவு மூலம் தடுக்கறார்.. கிடைச்ச கொஞ்ச நஞ்ச கேப்ல ஹீரோயினை லவ்வறார்.. 

                தயாரிப்பாளர் ஜி கே தான் ஹீரோ.. இவர் செஞ்ச புத்திசாலித்தனமான 2 விஷயம்.. கதைக்கரு விளைநிலங்களை விற்கக்கூடாது. அப்டினு எடுத்துக்கிட்டது.. ஹீரோயின் கசக்கு மொசக்குன்னு அதாவது கும்முனு 2 பேரை புக் பண்ணது.. 

                ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவருக்கு ஒரு ஜோடி.. ஹீரோ -ஹீரோயின் ஜோடி போரடிச்சா இந்த ஜோடியை குளிர பார்த்துக்கலாம்.. ஆஹா என்னே ஒரு ஐடியா.. 

                ஹீரோ ஜி கே கறுப்பு ராமராஜனா , லோ பட்ஜெட் எம் ஜி ஆரா உலா வர்றார்.. க்ளோசப் காட்சிகள்ல பயப்படுத்தறார்.. பெரும்பாலும் லாங்க் ஷாட் தான், அதனால தப்பிச்சோம்.. :)ஆள் காட்டி விரல்ல தங்க மோதிரம் போட்ட முதல்  தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தை பெறுகிறார்:) சின்னக்கவுண்டர் விஜயகாந்த், புதுப்பாட்டு ராமராஜன் இருவரையும் மிக்ஸ் பண்ணுன நடிப்பு..

                ஹீரோவின் அப்பாவாக வரும்  மகாதேவன் அமைதியான நடிப்பு..  பாராட்ட வைக்கும் தோற்றம்.. 

                ஹீரோயின் நெம்பர் 1 -வர்ஷா 

                http://www.cinehour.com/gallery/events1/audioreleases/Theni%20Mavattam%20Audio%20Launch/21524487Theni_Mavattam_Movie_Audio_Launch-(31).jpg

                ஹீரோயின் நெம்பர் 1 உடல் சைஸ்   42 -42-42 என ஒரே அளவாக தென்பட்டாலும் ரசிக்க வைக்கிறார்.. கொழுக்கட்டை மாதிரி இருப்பதால் சி செண்ட்டர் ரசிகர்கள் விசில் அடிச்சு ரசிப்பார்கள்.. ( நான் அடிக்கலை.. எனக்கு விசில் அடிக்க தெரியாது)

                ஹீரோயின் நெம்பர் 2 பாரதி ராஜா படத்துல அறிமுகம் ஆகும் கிராமத்து ஹீரோயின் ரஞ்சனி ( கவனிக்க ரஞ்சிதா அல்ல) மாதிரி பாந்தமாக வர்றார்.. அவருக்கு காட்சிகள் கம்மிதான் .. இருந்தாலும் மனசுல நிக்கறார்.. உக்காந்திருக்கார். 

                வில்லி ஐஸ்வர்யா தெனாவடான நடிப்பு.. அவரது ஆண்மைத்தனமான  கர கர குரலே பாதி வேலையை செஞ்சுடுது.. ஆனா அவர் பொருத்தமே இல்லாம விக் வெச்சிருக்கறது கண்ணில் உறுத்தல்.. அந்தக்கால சரோஜா தேவி ,மஞ்சுளா போட்டிருக்கும் டோப்பா மாதிரி நல்லாவே இல்ல.. 

                http://chennai365.com/wp-content/uploads/Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch-Stills-026.jpg

                இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

                1.  படத்தோட விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆனா கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்.. படத்துல வர்ற எல்லா பெண் கேரக்டர்களுக்கும் பிரமாதமான நெக்லஸ் டிசைன், அதுக்கு மேட்சா தோடு ஜிமிக்கி எல்லாம் போட வெச்சு கலக்கியது.. குறிப்பா வில்லி ஐஸ்வர்யா, சபீதா ஆனந்த், ஹீரோயின் நெம்பர் 1 இந்த 3 பேரும் அணிந்து வரும் நெக்லஸ், மற்றும் பட்டுப்புடவை டிசைன் செம செம.. 
                2. ஹீரோயின் நெம்பர் ஒன் ( பேரு வர்ஷா) திமிசு, சொகுசு,தினுசு, ரவுசு என நாட்டுக்கட்டையா இருந்தாலும் கண்ணியமா படத்துல காட்டிய இயக்குநரின் பொறுப்பு.. 


                3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ்ல ஸ்கூல் குழந்தைங்க எல்லாம்  தேடியக்கொடி டிசைன் பண்ணும், ஆடும் சீன் செம கலக்கல்.. 

                4. ஆக்க பூர்வமான திட்டமாக ஹீரோ சொல்லும் ஏ டி எஃப்  ( ATF ) எனி டைம் ஃபுட் செயலாக்க நடைமுறை விளக்கம் செம.. 

                5.  பாடல் காட்சிகள் யதார்த்தம்.. யக்கா யக்கா டப்பாங்குத்து,கண்ணாலே கடிதம் போட்டு, சாமிக்கு உறக்கம் இல்ல, பொய் தானே,பூவுக்கும் காற்றுக்கும் திருமணம் செம ஸ்பீடு பாட்டு, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ் என எல்லா பாட்டுமே தியேட்டர்ல கேட்கற அளவு இருக்கு.. 

                ஹீரோயின் நெம்பர் 2 -ரேணு

                https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUpDvJDb-9WQ8y5t-Mt2uTPolXj43_T4AjaffhmXERkX3rVUPB0ad8qEAIkyGVgXjSlt43iHT-dKydzipozWa7oJKZAt4PxxdLAg9fyIAhpMgo1-z5iehZw7KlfFNRIbDNfkMoxZRC6fA/s1600/theni_mavattam.jpg

                இயக்குநரிடம் சில கேள்விகள்

                1.  கோடீஸ்வரியா வர்ற வில்லி ஐஸ்வர்யா ஒரு சீன்ல கோயில் அர்ச்சகர் சீட்டு தர்ற ஆள் கிட்டே அர்ச்சனை சீட்டு எவ்ளவ்?என கேட்டு அவர் ரூ 25 என சொன்ன பிறகு வாங்கறார்.. இந்தக்காலத்துல யார் ரேட் எல்லாம் கேட்கறாங்க?

                2. வில்லி ஐஸ்வர்யாவை அரெஸ்ட் பண்ண பொலீஸ் வருது.. பெண் போலீஸ் யாருமே  கூட இல்லை.. ஒரு ஊரின் வி ஐ பி லேடியை இப்படி அரெஸ்ட் பண்ண முடியுமா? ( கோர்ட் ஆர்டர் படி ஒரு பெண்ணை கைது செய்ய கூட 2 பெண் போலீஸ் இருக்கனும்)

                3. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவோட தம்பி அவர் சொந்த ஊர்ல பஞ்சம்.. அவரை வேற ஊருக்கு அழைக்கறாங்க.. பிடிச்சா போகனும்.. பிடிக்கலைன்னா வர்லை.. இங்கேயே இருந்துக்கறேன்னு சொல்லனும்.. யாராவது இதுக்காக தற்கொலை செஞ்சுக்குவாங்களா? அதுவும் 5 வயசு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு கணவன், மனைவி 2 பேரும் சாகறாங்க கிணத்துல விழுந்து. ஏத்துக்கவே முடியலை.. 

                4. விவசாயிகள் விழிப்புணர்வுக்கூட்டத்துல ஹீரோ பேசறப்ப “ உங்களை மாதிரி இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை”ங்கறார்.. ஆனா கூட்டத்துல எல்லாம் 60 வயசான பெருசுங்க தான் இருக்கு.. 

                5. ஒரு சீன்ல ஹீரோ கார்ல போறாரு.. வில்லன் ஜீப்ல சத்தம் இல்லாம பின்னாலயே போய் இருந்தா ஈசியா பிடிச்சிருக்கலாம். ஆனா வில்லன் லூஸ் மாதிரி டாஆஆஆஆஅய்னு கத்தி ஊரைக்கூட்டி சேஸ் பண்றாரு.. ஹீரோ எஸ் அவ்வ்வ்வ்

                6. ஒரு சீன்ல ஹீரோவோட தம்பியை குற்றுயிரும் கொலை உயிருமா வெட்டிட்டு போறார்.. காயம் பட்ட ஆள் கம்முனு இருக்காம என்னமோ அர்னால்டு கணக்கா  “ என்னை  முழுசா கொன்னுட்டு போயிடு, இல்லைன்னா உன்னை அழிச்சிடுவேன்னு வார்னிங்க் தர்றார்..திரும்ப வந்த வில்லன் சதக்.. அவ்வ்வ் 

                http://www.funrahi.com/photos/tollywood/rwx/theni-mavattam-movie-audio-launch-event-007.jpg

                மனம் கவர்ந்த வசனங்கள் (GOWMAARIMUTHTHU)

                1.  இயற்கையை அழிக்க நம்ம யாருக்குமே உரிமை இல்ல.. மரம் பட்டுப்போனா வனம் கெட்டுப்போகும்.. 

                2.  அவனைப்பாரு.. சைலண்ட்டா பிள்ளை பிடிக்கறவனாட்டமே போறதை.. டேய்.. இது உன் வீடுடா.. ஏன் பம்பறே?

                3.  மாப்பி.. நேரா கிணத்துக்குப்போறோம்.. குளிக்கறோம்.. குடிக்கறோம்..

                நோ முதல்ல . குடிக்கறோம்.. அப்புறமா குளிக்கறோம். ஹி ஹி 

                4.  நீ ஏன் எப்போ பாரு பாட்டிலும் கையுமா இருக்கே?

                அடிக்கடி தொண்டை நனைஞ்சிடுது.. நனைக்க வேணாமா?

                5. ஏம்மா, எங்கம்மா லைசன்ஸ்? கவர்மெண்ட்டே அதை ரிட்டர்ன் வங்கிடுச்சா?

                லைசன்ஸா?அப்டின்னா என்ன?

                6. யோவ்.. யோவ்.. வண்டி நின்னுடுச்சு.. என்ன ரிப்பேர்னு கொஞ்சம் பாருய்யா.. 

                அந்த நிப்பிளை தூக்கி விட்டா ஸ்டார்ட் ஆகிடும்.. 

                யோவ்!!!!!!

                ஓ சாரி.. நான் இக்னீஷியனை சொன்னேன்..

                7.  ஏம்மா.. சாம்பாரை பார்த்து ஊத்து.. 

                நீ இப்போ டாஸ்மாக்ல ஊத்திட்டு வந்ததுக்கு இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

                8. நீங்க பாட்டுக்கு 500 ஏக்கர்ல ஃபேக்டரி கட்டுவீங்க, அது வெளீப்படுத்தும் கழிவுகள் 2000 ஏக்கரை பாதிக்கும்.. 

                9. அந்தக்காலத்துல மிலிட்ரிக்கு ஆள் எடுக்கத்தான் அரசாங்கம் கூவி கூவி ஆட்களை அழைச்சுது.. அந்த நிலைமை இப்போ விவசாயத்துக்கும் வந்துடும் போல.. 

                10.. நாம எல்லாம் சேர்ந்து விவசாயம் பண்ணலாமா?

                அண்ணே, உங்களோட சேர்ந்து இப்போதான் சரக்கு அடிக்க கத்து இருக்கோம்.. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பழகிக்கறோம்.. 

                11.. எந்தத்தொழிலும் த்தெரியாமகூட ஒருத்தன் பொழப்பை ஓட்டலாம், ஆனா எந்த ஒரு குடி மகனும் விவசாயம் தெரியாம இருந்திடக்கூடாது..

                டி வில போட்டா அவசியம் பாருங்க ஹி ஹி ஹி 

                எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

                எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

                சி.பி கமெண்ட் - ராமராஜன் ரசிகர்கள், விவசாயிகள், கிராமத்தில் சொந்த நிலம் வைத்திருப்போர் பார்க்கலாம்.. விழிப்புணர்வுப்படம்

                ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்.

                இந்தப்படம் 7 நாட்கள் தான் ஓடும். இதை எப்படி கண்டு பிடிச்சேன்னா தியேட்டர்லயே 3.2.2012 முதல் மெரீனா வருகிறதுன்னு ஸ்லைடு போட்டாங்க ஹி ஹி

                Monday, January 09, 2012

                சென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவசாயிகள், நதி நீர் இணைப்பு ஆர்வலர்கள்க்கு..

                சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய  உயர் திரு  ஏ பி ஜே அப்துல்கலாம்  கூறியது:

                தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

                அவ்வாறு நதிகளை இணைந்தால் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது

                சி.பி - அப்போ ஆந்திரா, கேரளா பண்ற அழிச்சியாட்டங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா? மத்திய அரசோ, கோர்ட்டோ கூட அவங்களை அடக்க வோ, நல்வழிப்படுத்தவோ கையாலாகாதுன்னு சொல்றீங்களா?

                "இந்த வாரத்தில் 2 தமிழ் புத்தகங்களை அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான புத்தகங்களை படித்தேன். ஒன்று விவசாயத்தைப் பற்றியது, எப்படி விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாறி இருக்கிறது என்பதைப்பற்றியும், இன்னொரு புத்தகம், எப்படி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் நதிகளை பற்றி அறிந்து கொண்டு நம்மை வளப்படுத்த உதவுகிறது என்பதாகும். 

                சி.பி - விவசாயம் லாபகரமான தொழில்னா ஏன் விவசாயிகள் தற்கொலை செஞ்சுக்கறாங்க? விவசாயிகளிடம் கம்மி விலைக்கு கொள்முதல் பண்ணி அதிக விலைக்கு மக்களிடம் விற்கும் இடைத்தரகர்கள் தான்  லாபம் பார்க்கறாங்க.. உழவர் சந்தை வாசலிலேயே இந்த அக்கிரமங்கள் நடந்துட்டுதான் இருக்கு..  

                தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் இ. வடிவேல் தலைமையிலான ஆசிரியர் குழு உழுதவன் கணக்கு (துல்லிய பண்ணையத்தில் பயிர் பாதுகாப்பு அனுபவங்கள்) என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்கள், பெரும் செலவை குறைத்தது மட்டுமின்றி அதிக விளைச்சலையும், நஞ்சற்ற உணவையும் பெற உறுதுணையாக இருந்தது என்பதைப்பற்றி விளக்குகிறார்.

                எப்படி ஓரு புதுமையான திட்டத்தை வேளாண்மையில் புகுத்தி அதைக்கடைப்பிடிப்பதினால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர இயலும், அது மட்டுமல்ல அவர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதைப்பற்றி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

                1. உளிக்கலப்பை உழவு கோடையில் செய்தால் கோரை முழுமையாக கட்டுப்படுவதுடன், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயருதல், மழை நீர் தேங்காமல் இருப்பதால் வேரழுகல், வாடல் மற்றும் பூச்சிகள் இவற்றிலிருந்து விடுதலையும் கிடைத்தது என்கிறார். 2. சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர் வழங்குவதால் தேவையான நீர் மட்டுமே செடிக்கு கிடைக்கும். இதனால் நீர் விரையம் தவிர்க்கப்பட்டு களை, பூஞ்சாமை மற்றும் பூச்சிகள் வளர்ச்சி குறைக்கப்பட்டது என்கிறார்.

                2. துல்லிய பண்ணையத்தில் நிலம் தயார் செய்ய உளிக்கலப்பை, கொக்கிக்கலைப்பை, சட்டிக்கலைப்பை மற்றும் உழவின் முடிவில் மேட்டுப்பாத்தி அமைப்பதாலும் மண் பொலபொலப்பாக இருப்பதாலும் முதல் பயிரின் முடிவில் அடுத்த பயிர் நடவுசெய்யலாம். குறிப்பாக தக்காளிக்கு பின்னர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், பீர்க்கன், பாகல், வெள்ளரி, நடவு செய்வதால் அடுத்த உழவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதனால் குறைந்தது ஏக்கருக்கு ரூ 2000 முதல் ரூ 2800 வரை சேமிக்கலாம் என்கிறார்.

                3. களைகளை கட்டுப்படுத்தபடுவதால் 25-30 சதம் உரம் விரயமாவது தடுக்கப்பட்டு 5-10 சதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிந்தது. பெரும்பாலான பூச்சி, வைரஸ், பூஞ்சானங்களுக்கு களைகள் புகலிடமாக திகழும். ஆனால் துல்லிய பண்ணையத்தில் களைகள் முற்றிலும் அகற்றப்படுவதால், பூச்சி மற்றும் நோய் சேதம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் கட்டுக்கள் கொண்டு வரமுடியும் என்கிறார்.

                4. சொட்டுநீர் அமைப்பு மூலம் தண்ணீரும், உரமும் செல்வதால் தேவையற்ற உரம் விரயமாவது தடுக்கப்படுகிறது. பயிரின் வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் ஏதுவாகிறது. சாதாரண முறையில் உரமிடுவதால் 20 சதம் வரை விரையமாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு 95 சதம் வரை உரம் செடிக்கு நேரிடையாக சென்றடைகிறது.

                இந்த மாதிரி புத்தகங்கள் படித்த விவசாயிகளின் வாழ்க்கை எப்படி விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் விவசாயியின் வாழ்க்கைக்கு ஒரு வளமான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை விளக்குகிறது. அப்படி ஒரு மாற்றத்தை ஒரு புத்தகம் கொண்டுவரும் என்றால், அப்படிப்பட்ட புத்தகம் தான், அதைப்படிக்கும் ஒருவருக்கு அள்ள அள்ள குறையாத கற்பக விருட்சகமாக இருக்க முடியும்.

                புத்தகம் நம் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாததாக இருக்கிறது, நம்முடன் நம் வாழ்க்கப்பயணத்தில் நடந்து வருகிறது, இன்ப துன்பத்தில் பங்கு பெற்று, நம்பிக்கை விதையை விதைத்து, வாழ்வை செவ்வனே நடத்த நம்மை செம்மைப்படுத்துகிறது, நமது வாழ்க்கையை மேம்படுத்த அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொடுக்கிறது, வாழும் முறையை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லிக்கொடுக்கிறது, நமது கலாச்சாரத்தை, வரலாற்றை, அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது, சமூக பொருளாதார சித்தாந்தத்தை, வளர்ச்சிக்கான அரசியலை சொல்லிக்கொடுக்கிறது.

                எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள்.

                இப்படி புத்தகத்தின் பயன்கள் கணக்கிலடங்கா. எனவே தினமும் புத்தகம் படிப்பது வாழ்வில் இன்றியமையாதது ஆகும். தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், புத்தகங்களை படிப்பதன் மூலம்.

                நதிநீர் இணைப்பு...

                சமீபத்தில் நான் படித்த இரண்டாவது புத்தகம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சோம. இராமசாமி அவர்கள் எழுதிய செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் என்ற ஒரு அற்புதமான ஆய்வுக்கட்டுரையை மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

                அதாவது அவர் சொல்கிறார், நதிகளை நாம் ஒரு நீர் வழங்கும் இயந்திரம் என்ற அளவிலேதான் பார்க்கிறோமேயொழிய நதிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் அதன் இயங்கியல் பற்றியும் (River histories and Dynamics) அதனால் உள்ள பல்முனை நன்மைகளைப்பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை.

                நதிகளின் பிறப்பு, அவை ஒடும் விதம், அவற்றின் பாதைகளிலே ஏற்படும் மாற்றங்கள், மலைப்பகுதி, சமவெளிப்பகுதி மற்றும் கடலோரப்பகுதி ஆகியவற்றில் நிகழும் நதிகளின் செயல்பாடுகளை நாம் ஆராய்ந்து கணித்தோமேயானால், இந்நதிகள் நீர்வழங்கும் அமுத சுரபி மட்டும் அல்ல, அவை பூமியின் மேற்பரப்பியல் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், பூமிக்கு கீழே நடைபெறும் புவியியல் மாற்றங்கள், கனிம வளம், பூமி நகரும் தன்மை மற்றும் பூகம்பம், கடலுக்கும் நதிகளுக்கும் இடையே நடைபெறும் செயல்பாடுகள், கடல்மட்ட மாறுதல்கள், கடந்த கால வெள்ளங்கள் மற்றும் எதிர்கால வெள்ளங்களின் கணிப்பு, காலநிலை மாற்றம், பண்டைய நாகரீகம், அணைகள், நீர்த்தேக்கங்கள் அமைக்க ஏதுவான இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளையும் மற்றும் சான்றுகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளன என்பது புலனாகும்.

                ஆகவே நதிகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றின் வளம் குன்றாமல் நதிகளின் வளத்தைப்பயன்படுத்தினால் நதிகளைப் பாதுகாப்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக, செயற்கைக்கோள் படங்களின் மூலம் இன்னும் எவ்வளவு நாம் அறிந்து கொள்ளவேண்டும், நதிகளைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்பதை மிகவும் அருமையாக விளக்குகிறார்.

                இதில் என்னைக்கவர்ந்த ஒரு பகுதி காவிரி ஆற்றைப்பற்றியது. அவரது எண்ணங்களின் படி செயற்கைக்கோள்கள் மூலம் காவிரி வடிநிலத்தில் வடதமிழ் நாட்டில் ஆராய்ந்தவை பல வியத்தகு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

                காவிரி ஆரம்பத்தில் கொகனேக்களில் இருந்து 8000 ஆண்டுகட்கு இடைப்பட்ட ஒரு காலக் கட்டத்தில் உருவாகி, 3000 ஆண்டுகட்டு முன்பு வரை ஒடியிருக்கிறது.
                மங்களூர் - பெங்களூர்-சென்னைப் பகுதியில் பூமி ஆர்ச் போன்று உயர ஆரம்பித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை தடம் மாறி தெற்கே நகர்ந்து தடம் மாறி ஒடியிருக்கிறது. பூமியின் உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாததால் முதல் பாதையை விட்டு விட்டு இரண்டாம் பாதை ஆக மேற்கே மேட்டூர் நீர்த்தேக்கதிலிருந்து கிழக்கே கடலூர் வரை 2700-2300 ஆண்டுகள் காலகட்டத்தில் தற்காலப் பொன்னையாற்றின் பாதையில் ஒடி, கடலூரில் கடலில் கலந்திருக்கிறது.

                கடலூர் பகுதியில் அலைகள், ஆழிப்பேரலைகள், பிற நதிகளால் வெள்ளம், பூமி கீழே செல்வதால் காவிரி பாதை 2ல் ஏற்பட்ட தடுமாற்றம், வடக்கு தெற்காக உருவாகி வரும் வெடிப்புகளின் தாக்கம் மற்றும் தெற்கிலிருந்து வளர்ந்து வந்த அமராவதியின் உபநதியின் கையகப்படுத்துதல் ஆகியவற்றால் பாதை 2ஐ முற்றிலுமாக விட்டு விட்டு பாதை 3ஆன திருச்சிராப்பள்ளி சமவெளியை அடைந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியில் 12 தடங்களில் தெற்கே புதுக்கோட்டையிலுருந்து வடக்கே, தற்கால கொள்ளிடத்திற்கு தெற்கே வரை இன்றிலிருந்து 2300 ஆண்டுகள் முதல் 900 ஆண்டுகள் வரை ஒடியிருக்கிறது.

                ஆரம்பத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக இப்போதைய வெள்ளாற்றில் தடம் 7 ஆக ஒடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே நகர்ந்து தற்கால அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழம்காவிரி ஆகிய பல தடங்களின் வழியாக ஒடி பின்னர் கொள்ளிடத்தில் தடம் மாறி 750 ஆண்டுகட்கு முன்பு நிலை கொண்டுள்ளது.

                இப்படி பாதை மாறும் பொழுது, வாழ்க்கை முறை மாறுகிறது, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது, விவசாய முறையில் மாற்றம் வருகிறது, கலாச்சாரம் மாறுகிறது. அதைப்பற்றி படிக்கும் போது எப்படி நதிகள் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கிறது என்பது புரியும். அதன் தன்மைகளை புரிந்து கொண்டேமேயானால், நதிகளை இணைந்து, தமிழகத்திலேயே நீர்வழிச்சாலைகளை அமைத்து நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ளலாம்.

                அடுத்த மாநிலத்தை நம்பி தமிழகம் இருக்க தேவையில்லை. வருடா வருடம் வெள்ளம்போல் ஒடும் காவிரிமூலம், வைகையையும், பாலாற்றையும், தாமிரபரணியையும் இணைந்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்தினால், வெள்ளத்தை தேக்கிவைக்கும் நீர்வழி அணையாக அது செயல் படும். அந்த நீரை தமிழகமே, வேண்டிய பகுதிக்கு திருப்ப முடியும். அதில் கிட்டத்தட்ட 100 டி.யெம்.சி நீரை வருடாவருடம் தேக்கிவைக்க முடியும். அப்படி தேக்கி வைக்கும் பட்சத்தில், வரண்ட தமிழகம் வருடம் தோறும் வளமான தமிழகமாக கண்டிப்பாக மாறும்.

                அப்படிப்பட்ட ஒரு தொலை நோக்கு திட்டத்தை, கண்டிப்பாக செய்ய முடியும். அப்படி செய்ய முடியும் என்ற மனப்பான்மை கொண்ட தலைமையாலும், அதை செயல்படுத்த கூடிய இளைஞர்களை கொண்ட தமிழக தொழில் நுட்ப வல்லுனர்களைக்கொண்டு, சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைக்கொண்டும், ஒரு Public Private Partnership உடனும், உலக வங்கியின் உதவியுடனும், மத்திய அரசின் உதவியுடனும், தமிழக அரசு செயல் படுத்த நினைத்தால் தமிழகம் கண்டிப்பாக என்றைக்கும் வற்றாத வளமான நாடாக மாறும் என்பது திண்ணம்.

                அப்படிப்பட்ட ஒரு வளமான தமிழகத்தை 2020க்குள் கண்டிப்பாக நான் காண்பேன் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதே கனவு தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். அந்த கனவு, கனவு நினவாகும் வரை அவர்களை தூங்கவிடாது,"

                Wednesday, April 20, 2011

                ஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்

                http://farm4.static.flickr.com/3062/3041844520_081b6957f6.jpg

                ''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

                ஜி. பழனிச்சாமி  
                 பளிச் பளிச்...
                ஏக்கருக்கு 1,700 கன்றுகள்.
                சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
                வாரத்துக்கு இரண்டு அறுவடை. 
                அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு.

                இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.
                பயிற்சிக்குப் பின் இயற்கை! 
                அறுவடை செய்யப்பட்ட வாழை இலைகளை மனைவி சொர்ணாவுடன் இணைந்து கட்டுக் கட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், அப்படியே நம்மிடமும் பேச ஆரம்பித்தார்.
                ''எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. எங்க பகுதி கடுமையான வறட்சிப் பகுதி. கிணத்துத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை. அந்தத் தண்ணியும் ஒரு ஏக்கருக்குதான் பாயும். அதனால இறவையில மஞ்சள், மரவள்ளி, வாழைனு மாத்தி மாத்தி சாகுபடி பண்ணிக்குவோம். மீதி நிலத்துல மானாவாரியா கடலை, எள், ஆமணக்குனு வெள்ளாமை வெப்போம்.
                ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான்.ஈரோடுல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பு, 'இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சி ரெண்டுலயுமே கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துருக்கேன். இப்போ மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்'' என்று மகிழ்ச்சி பொங்க முன்னுரை கொடுத்தவர்,

                 http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_58661615849.jpg
                ''போன போகத்துல தக்காளி போட்டிருந்தோம். 30 டன் மகசூல் கிடைச்சுது. அதை அழிச்சிட்டு புரட்டாசிப் பட்டத்துல இலைவாழை நடவு செஞ்சோம். தை மாசத்துல இருந்து அறுவடை பண்ணிக்கிட்டுஇருக்கோம்.

                நாமே வேலை செய்தால்... கூடுதல் லாபம்! 
                இயற்கை முறையில் சாகுபடி செய்யுறதால தளதளனு நல்லாவே வளர்ந்திருக்கு வாழை. ஒரு ஏக்கர்ல மட்டுமே வெள்ளாமை பண்றோம். மருந்தடிக்க, உரம் வெக்கனு இந்த வேலைகளுக்கெல்லாம் ஆளுங்கள வெக்கிறதில்ல... நாங்களேதான் பாத்துக்குறோம்.

                வாழையைப் பொறுத்தவரைக்கும் உழவுக்கு, நடவுக்கு, களை எடுக்குறதுக்கு மட்டும்தான் வெளியாட்கள். அறுவடையெல்லாம் நாங்க ரெண்டு பேரே பாத்துக்குவோம். இதனால எங்களுக்குக் கூடுதல் லாபம்தான்'' என்ற நல்லசிவம், ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
                ஆடியில் சணப்பு... புரட்டாசியில் வாழை! 
                ''புரட்டாசி மாதத்தில் வாழை நடவு செய்ய வேண்டும் என்பதால், ஆடி மாதத்திலேயே நிலத்தை நன்கு உழுது, 35 கிலோ சணப்பு  விதைகளை ஏகத்துக்கும் விதைத்து, வாரம் ஒரு தண்ணீர் விட்டுவர வேண்டும். 40 நாட்கள் கழித்து அதை மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து ஓர் உழவு செய்ய வேண்டும்.


                ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook

                ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
                http://farm4.static.flickr.com/3167/2681755070_cbb269bbfa.jpg
                ஐந்தடி இடைவெளி! 
                பிறகு... வரிசைக்கு வரிசை, பக்கத்துக்குப் பக்கம் ஐந்தடி இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும் (வழக்கமாக வாழைக்கு அதிக இடைவெளிவிட வேண்டும். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது குறைந்த இடைவெளி இருந்தாலே போதுமானது. இலைகளை அடிக்கடி அறுவடை செய்வதால், இந்த இடைவெளியிலேயே தேவையான சூரியஒளி மற்றும் காற்றோட்டம் வாழைக்குக் கிடைத்து விடும்).

                ஒவ்வொரு குழியும் அரை அடி ஆழம் மற்றும் அகலத்துடன் இருக்க வேண்டும். மண்வெட்டி மூலமே குழி எடுத்து விடலாம். இந்த இடைவெளியில் குழி எடுக்கும்போது நிலத்தின் வாகைப் பொறுத்து 1,700 குழிகள் வரை எடுக்க முடியும் (இவர் 1,600 குழிகள் எடுத்திருக்கிறார்). பிறகு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
                நாட்டுரக வாழைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் (இவர் பூவன் ரகக் கன்றுகளை நடவு செய்திருக்கிறார்). நாம் குழிகளை எடுத்து நிலத்தைத் தயார் செய்து வைத்துவிட்டால், கன்று விற்பனை செய்யும் வியாபாரிகளே நடவு செய்து கொடுத்து விடுவார்கள். பிறகு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

                மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம்! 
                நடவு செய்த 20ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தை இதேபோல சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும்.

                40ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய ஆர்கானிக் உரத்தை, கன்றுக்கு 60 கிராம் வீதம் அடிப்பகுதியில் வைத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 100 கிலோ உரம் தேவைப்படும்).

                ஐந்தாம் மாதத்திலிருந்து அறுவடை! 
                60ம் நாள் மீண்டும் ஒரு முறை களையெடுத்து மண் அணைத்துவிட வேண்டும். 90ம் நாள் 1,600 கிலோ மண்புழு உரத்துடன் 2 கிலோ சூடோமோனஸ் மற்றும் 2 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கும் அடிப்பகுதியில் ஒரு கிலோ அளவுக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
                 http://yananwritings.files.wordpress.com/2010/09/banana-leaf.jpg
                நடவு செய்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 13 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஏழாம் மாதம் தேவைப்பட்டால், சாம்பல்சத்து அடங்கிய ஆர்கானிக் உரத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல பயிர் ஊட்டம் குறைந்து காணப்பட்டால், 3 லிட்டர் பஞ்சகவ்யா அல்லது 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை             100 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.
                இலைவாழைக்கு இரண்டு தழைவுகள்! 
                அறுவடையைத் தொடங்கும் ஐந்தாம் மாதத்திலேயே பக்கக்கன்றுகளும் முளைத்து வந்து விடும். இவற்றில் தரமானக் கன்றுகளை விட்டுவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். பக்கக் கன்றுகளிலும் ஐந்து மாதத்துக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்யலாம்.

                தாய் மரங்களில் அறுவடை முடிந்த ஐந்து மாதங்கள் வரை பக்கக் கன்றுகளில் அறுவடை செய்யலாம். அதன்பிறகு, மொத்தமாக எல்லா மரங்களையும் அழித்துவிட வேண்டும். பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது மூன்று அல்லது நான்கு தழைவு வரை பக்கக் கன்றுகளை விடுவார்கள். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது இரண்டாம் தழைவோடு நிறுத்தி விட வேண்டும்.
                இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது மரங்கள் நல்ல வலிமையாக இருப்பதோடு வெயில், மழை ஆகியவற்றையும் தாண்டி நிற்கும். இலைகளும் தடிமனாக இருப்பதால் அதிகமாகக் கிழியாது.’
                இரண்டரை லட்ச ரூபாய் லாபம்! 
                சாகுபடிப் பாடத்தை நல்லசிவம் முடிக்க, மகசூல் மற்றும் வருமானம் பற்றி ஆரம்பித்தார் அவருடைய மனைவி சொர்ணா.
                ''வாரத்துக்கு இரண்டு முறை இலைகளை அறுக்கலாம். ஆரம்பத்துல கம்மியாத்தான் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூடும். அறுப்புக்கு 1,300 இலைகள் வீதம் மாசத்துக்கு 10,000 இலைகள் சராசரியா கிடைக்கும்.                 18 மாசத்துக்கு இப்படி தொடர்ந்து அறுவடை பண்ணலாம். இயற்கை முறையில விளைவிக்கறதால ரெண்டு, மூணு நாள் வரைக்கும்கூட எங்க இலைகள் வாடாம இருக்குனு வியாபாரிங்க சொல்வாங்க.
                 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibO1-YcH15ku932R2gmQnZ0g2iZTMD-Ar_TmKSwfJo0VPMOfY_nIkPxS2tY-BFigsFcfAR0nnvBkZhnfD3Fcm5oT6m3yBrNT3djcsvywVA7JKZcUS_BIOUdAtTG8GxGGNN4vauu0nQI_av/s320/vaazhaimaram-01.jpg
                அதனால, இலைக்கு பத்து பைசா கூடுதலாவும் கொடுக்கறாங்க. இலைக்கு ரெண்டு ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. எப்படிப் பாத்தாலும், மொத்தத்துல ரெண்டரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்றார் மகிழ்ச்சியாக. 

                 தொடர்புக்கு


                எஸ். நல்லசிவம், அலைபேசி: 98422-48693.
                'பசுமைத்தாய் உழவர் மன்றம்!’
                நல்லசிவம், தன்னுடைய பகுதியில் இருக்கும் 13 விவசாயிகளை ஒன்றிணைத்து தோட்டக்கலைத்துறை உதவியுடன் 'பசுமைத்தாய் உழவர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம், இயற்கை விவசாயம், கருவிகள் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி  பயிற்சி முகாம்கள் நடத்துவதோடு பசுமைச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.