Friday, June 12, 2026
Wednesday, June 10, 2026
Madhuvidhu (2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா)@சோனி லைவ்
மதுர மனோகர மோகம்(2023) என்ற காமெடிப்படத்தில் உதவி திரைக்கதை ஆசிரியர் ஆகப்பணி ஆற்றிய ஜெய் விஷ்ணு + ஸ்டெபி சேவியர் தான் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள்.நம்ம ஊர் கிரேசி மோகன் போல காமெடி சீக்வன்ஸ் அமைப்பதில் வல்லவர்.அடிப்படையில் இவர் ஆடை வடிவமைப்பாளராகத்தான் முதலில் பணி ஆற்றினார். விஷ்ணு அர்விந்த் தான் படத்தின் இயக்குநர்.
23/4/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடியில் 22/5/2026 முதல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அம்மா பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.அப்பா தான் எல்லாம்.அப்பாவுக்கு ஒரு தம்பி உண்டு.நாயகனுக்கு ஒரு தம்பி உண்டு.அதாவது நாயகன்,நாயகனின் தம்பி ,நாயகனின் அப்பா,நாயகனின் சித்தப்பா என்று நான்கு ஆண்கள் மட்டும் தான் இந்த வீட்டில்.
நாயகனுக்குப்பெண் தேடுகிறார்கள்.எதுவும் அமையவில்லை.இதுவரை 28 முறை முயற்சித்தும் ஒரு பெண்ணும் செட் ஆகவில்லை.பெண் யாரும் இல்லாத வீட்டில் பெண் கொடுக்க யோசிக்கிறார்கள்.அது போக இந்த வீட்டில் பெண் கொடுத்தால் பெண் இறந்து விடுவாள் என்ற மூட நம்பிக்கையும் ஒரு காரணம்.
நாயகன் நாயகியைப்பார்க்கிறான்.பழகுகிறா
நாயகியின் அப்பாவின் முன்னாள் காதலிதான் நாயகியின் அப்பாவின் தங்கை.அவளுக்குத்திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உண்டு,ஆனால் கணவன் இல்லை.
துணை இல்லாத இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நாயகியின் குடும்பத்துக்கு அதிர்ச்சி.
இதனால் நாயகியை நாயகனுக்கு மணம் முடிக்க நாயகியின் அப்பா மறுக்கிறார்.
இந்த சமயத்தில் நாயகனின் சித்தப்பாவுக்கும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.அவரும் திருமணம் செய்து கொள்கிறார்.
இப்போது வீட்டில் அப்பா ,சித்தப்பா இருவரும் அவரவர் ஜோடியுடன் இருக்க நாயகன் தனிமையில் இருக்கிறார்.
இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகன் ஆக ஷராப்யுதீன் காமெடி சென்ஸ் உடன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.இவருக்கு இயல்பாகவே காமெடி சப்ஜெக்ட் ஆக அமைவது பிளஸ்.
நாயகி ஆக கல்யாணி பணிக்கர் இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக ஜெகதீஷ் பட்டையைக்கிளப்பி இருக்கிறார்.தாடி கெட்டப்புடன் இருக்கும் இவர் முன்னாள் காதலியை சந்தித்த பின் க்ளீன் ஷேவ் முகத்துடன் வருவது கலகல.
நாயகியின் அப்பாவாக சாய் குமார் நடித்திருக்கிறார்.கண்டிப்புக்
நாயகனின் அப்பாவின் முன்னாள் காதலியாக அதாவது நாயகியின் அத்தை ஆக ஸ்ரீஜெயா நாயர் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகனின் தம்பி ஆஜ அஜீஸ் நெடுமங்காடு , நாயகனின் சித்தப்பாவாக அமல் ஜோஸ் ஆண்ட்டனி நடித்திருக்கிறார்கள்.எல்லோருக்
நாயகி கல்யாணி பணிக்கரின் நிஜ அம்மா பிந்து பணிககர் மகப்பேறு மருத்துவர் ஆக கெஸ்ட் ரோலில் வருகிறார்.
படத்தில் பங்கு பெற்ற மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.
ஹேசம் அப்துல் வகாப்பின் இசையில் எட்டுப்பாடல்கள்.4 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் ஆனவை.பின்னணி இசையும் ஓக்கே ரகம்.
விஸ்வஜித் ஒடுக்கத்தில் தான் ஒளிப்பதிவு.நாயகி உட்பட அனைத்துபெண்களையும் க்ளோசப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்.
கிறிஸ்டி செபாஸ்டியனின் எடிட்டிங்கில் படம் 134 நிமிடங்கள் ஓடுகிறது.
பிபின் மோகன் , ஜெய் விஷ்ணு இருவரும் இணைந்து திரைக்கதை எழுத படத்தை இயக்கி இருப்பவர் விஷ்ணு அர்விந்த்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் ,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி அருமை.காதல் காட்சிகள் ரசமானவை.கண்ணியம் தவறாத வகையில் காட்சிகள்.
2 யாரும் எதிரார்க்காத அந்த இடைவேளை ட்விஸ்ட்.ஒரு ரொமாண்டிக் டிராமா மூவியில் இது மாதிரி ஒரு ட்விஸ்ட் வருவது அருமை.
3 முதல் பாதி முழுக்க மிக மிக இயல்பான காமெடிக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
4 திரைக்கதையில் ஒவ்வொரு பிரச்சனை வருவதும் அதைக்காமெடியாகக்கையாண்ட விதம் அருமை.
ரசித்த வசனங்கள்
1 நான் இதுக்கு முன்னால பொண்ணுங்களோட சரக்கு அடிச்சதில்லை.
நான் எப்போ சரக்கு அடிச்சாலும் ஆம்பளைங்களோட சேர்ந்து தான் அடிப்பேன்.
2 வீட்டில் யாருமே சமைக்கறதில்லை போல .மெஸ் ,ஹோட்டல் ,ரெஸ்டாராண்ட் எங்கே போனாலும் செம கூட்டம்
3 ரொம்ப யோசித்து எடுக்கும் முடிவுகள் தான் சரியாவது இல்லை.அதனால் யோசிப்பதே இல்லை.
4 நீ லவ் பண்ற பொண்ணோட போட்டோ ?
அது வந்து...போட்டோ இல்லாத பெண் குட்டி.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 எல்லாக்காட்சிகளையும் காமெடியாகவே கொண்டு போவதால் திரைக்கதையில் ஒரு சீரியஸ்னெஸ் இல்லை.
2 ஒரு சம்பவத்துக்கு வருத்தப்படலாமா என நாம் யோசிக்கும்போதே அதைக்காமெடியாக மாற்றி விடுவதால் செண்ட்டிமெண்ட்ஸ் ஒர்க் ஆகவில்லை.
3 முதல் பாதி யில் இருந்த காமெடி பின் பாதியில் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான காமெடிக்காட்சிகளுடன் கூடிய பேமிலி எண்ட்டர்டெய்னர் இது.குடும்பத்துடன் பார்க்கலாம்.ரேட்டிங் 3/5
| Madhuvidhu | |
|---|---|
| Directed by | Vishnu Aravind |
| Written by |
|
| Produced by |
|
| Starring | Sharaf U Dheen Kalyani Panicker Jagadish Saikumar |
| Cinematography | Viswajith Odukkathil |
| Edited by | Christy Sebastian |
| Music by | Hesham Abdul Wahab |
Production companies |
|
| Distributed by | Ajith Vinayaka Films |
Release date |
|
| Country | India |
| Language | Malayalam |
| Box office | ₹11.4 crore[1] |
ஜூன் 5 ஓ டி டி ரிலீஸ் தமிழ் படங்கள்
அமேசான் பிரைம்
Monday, June 08, 2026
பரிமளா &கோ (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)
திரிஷ்யம் மெகா ஹிட் ஆனாலும் ஆனது ஆளாளுக்கு அதே டைப் கதைகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த திரிஷ்யம் மேனியா இயக்குநர் பாண்டிராஜையும்.விட்டு வைக்கவில்லை.தன் பங்குக்கு ஒரு உப்புமா கிண்டி இருக்கிறார்.
பசங்க (2009),வம்சம்(2010),மெரீனா(
ஸ்பாய்லர் அலெர்ட்
மிடில் கிளாஸ் குடும்பத்தைச்சேர்ந்த நாயகன் தன் மனைவி ,இரு மகள்களுடன் சிக்கனமான வாழ்வு வாழ்ந்து வருகிறான்.
வில்லன் ஒரு ரவுடி.அந்த ஏரியாவில் போதைப்பொருள் விற்பவன்.நாயகனின் மகளிடம் லவ் பிரப்போஸ் செய்கிறான்.அவள் மறுக்கவே விலகிப்போகாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறான்.
பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நாயகன் இவனைக்கொன்று போட்டால் தான் அடங்கிப்போவான் போல என தன் குடும்பத்தாரிடம் கூற அடுத்த நாள் காலை மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்கிறான் வில்லன்.
இந்தக்கொலைக்கேசை விசாரிக்க் ஒரு போலீஸ் ஆபீசர் களம் இறங்குகிறார்.இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகன் ஆக ஜெயராம்,நாயகி ஆக ஊர்வசி நடித்திருக்கிறார்கள்.பஞ்ச தந்திரம் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.ஜெயராம் அடக்கி வாசிக்கும் நடிப்பு.ஊர்வசி சில இடங்களில் பிரமாதமான நடிப்பு,பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க். ஆனாலும் ரசிக்க வைக்கிறார்.
மகள்களாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,ஆனந்திகா இருவரும் கலகலப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.இருவரும் அக்கா,தங்கையாக இருந்தும் எப்போது பார்த்தாலும் அடித்துக்கொள்வது ரசிக்கும்படி இருக்கிறது.
போலீஸ் ஆபீசர் ஆக மிஷ்கின் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.செண்ட்டிமெண்ட் சீனில் மிளிர்கிறார்.
வில்லன் ஆக சாண்டி மாஸ்டர்.இவர் டான்ஸ் மாஸ்டர் என்பதற்காக ஒரு பாட்டு ,டான்ஸ் கொடுத்திருப்பது அநியாயம்.
காமெடியன் என்ற பெயரில் யோகிபாபு மொக்கை போடுகிறார்.சரி,நமக்குப்பழகி விட்டது.
சிங்கம்புலியை,பகவதி பெருமாளை ,சென்றாயனை வீணடித்து இருக்கிறார்கள்.
பாக்சின் இசையில் 5 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசையும் பரவாயில்லை.
ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கச்சிதம்.பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங் கில் படம் 138 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதி இழுவை.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ்
சபாஷ் டைரக்டர்
1. முதல் 30 நிமிடங்களில் நாயகனின் குடும்பத்தில் நடக்கும் காமெடிகள் யதார்த்தம்
2 இழவு வீட்டு சீக்வென்ஸ் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
3 மிஷ்கினின் என்கொயரி ரசிக்க வைக்கும்படி சில இடங்களில் இருக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பின் பாதி திரைக்கதை பலவீனம்.வில்லனின் நண்பன் ,காதலி,அக்கா,அம்மா,பெரியம்மா,
2 நாயகனின் குடும்பம் போலீசில் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்பே நமக்கு ஏற்படவில்லை.அது திரைக்கதையின் பலவீனம்
3 ஒரு மகள் வில்லனுடன் பழகுவது ,இன்னொரு மகள் இன்னொரு பொறுக்கியுடன் பழகுவது எரிச்சல் வர வைக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டாப்பார்க்கலாம்.தியேட்டரு
| Parimala and Co | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | Pandiraaj |
| Written by | Pandiraaj |
| Produced by | |
| Starring |
|
| Cinematography | George C. Williams |
| Edited by | Pradeep E. Ragav |
| Music by | FoxN |
Production companies | |
Release date |
|
Running time | 138 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
| Box office | ₹6.70 crore[2] |
Sunday, June 07, 2026
SYSTEM(2026)-ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா)@அமேசான் பிரைம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் அப்பா மிகப்பெரிய வக்கீல்.புகழ் பெற்ற கேஸ்களில் ஜெயித்த அவர் ஒரு கேசில் ஆஜர் ஆக ஒரு சிட்டிங்க்க்கு (ஒரு நாள் ஆஜர் ஆக) லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பிரபல வக்கீல்.அவர் ஆஜர் ஆகித்தோற்றதாக சரித்திரம் இல்லை.இதனாலேயே பல கோடீஸ்வரர்கள் ,லட்சாதிபதிகள் அவரை வக்கீல் ஆக நியமிக்க லைன் கட்டிக்காத்திருக்கிறார்கள்.
நாயகியும் வக்கீல் தான்.ஆனால் புதியவர் .நாயகியின் அப்பா நாயகியிடம் தெளிவாக சொல்லி விடுகிறார்.நீ தனியாக வாதாடி தொடர்ந்து 10 கேஸ்களில் ஜெயித்துக்காட்டு.அப்புறம் என் சாம்ராஜ்யத்தில் உன்னை ராணி ஆக்கி விட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்கிறார்.நாயகியும் அதற்கு சம்மதித்துத்தனியாகக்கேஸ்களில் வாதாடுகிறார்.
வில்லி அதே கோர்ட்டில் ஒரு ஸ்டெனோ.ஜட்ஜ் தீர்ப்பை வாசிக்கும்போது அதை டைப் பண்ணுபவர்.இவர் மிக்க அனுபவம் மிக்கவர்.பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.இவரது கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால்களை இழந்து சக்கர நாற்காலியில் காலத்தைக்கழிப்பவர்.ஒரு மகளும் உண்டு.மகள் ,கணவன் இருவரையும் பராமரிக்கும் பொறுப்பு வில்லிக்கு உண்டு
நாயகி வில்லியிடம் ஒரு உதவி கோருகிறார்.அப்பாவிடம் போட்ட சவாலில் ஜெயிக்க 10 கேஸ்களை வெற்றிகரமாக முடிக்க வில்லி ஒவ்வொரு கேசிலும் உதவ வேண்டும்.ஆரம்பத்தில் மறுத்த வில்லி பின் சம்மதிக்கிறார்.ஒரு கேஸ்க்கு ஐடியா சொல்ல ரூ 20,000 சார்ஜ்.
வில்லியின் உதவியுடன் நாயகி வரிசையாக 9 கேஸ்கள் ஜெயித்து விடுகிறார்.10 வதாக ஒரு கேஸ் வருகிறது.
மிகப்பெரிய தொழில் அதிபர் ஒரு இளம்பெண்ணைக்கொலை செய்ததாகக்கேஸ்.அந்தப்பெண்ணும் ,தொழில் அதிபரும் நெருக்கமாக இருந்ததை அந்தப்பெண் போட்டோ ,வீடியோ எடுத்து அந்தத்தொழில் அதிபரை மிரட்டியதால் அவர் அந்தப்பெண்ணைக்கொலை செய்து தற்கொலை போல செட் பண்ணி விட்டார்.
இந்தக்கேசில் நாயகியின் அப்பா அந்தத்தொழில் அதிபரின் சார்பாக ஆஜர் ஆகிறார்.நாயகி அதை எதிர்த்து வாதாடுகிறார்.
இந்தக்கேசில் யார் ஜெயித்தது?நாயகியா?நாயகியின் அப்பாவா?நாயகிக்கு உதவியவர் எப்படி வில்லி ஆனார்?வில்லிக்கும் இந்தக்கதையில் வரும் ட்விஸ்ட்க்கும் என்ன சம்பந்தம் ?இதை எல்லாம் விளக்குவதே மீதித்திரைக்கதை.
நாயகி நேஹாவாக சோனாக்சி சின்ஹா பிரமாதமான உடல் மொழி ,கம்பீரத்துடன் நடித்திருக்கிறர்.
வில்லி சாரிகா ஆக ஜோதிகா நெகடிவ் ஷேடு உள்ள கதாப்பாத்திரத்தில் துணிச்சல் ஆக நடித்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக பிரபல வக்கீல் ஆக அஷூத்தோஷ் கௌவாரிக்கர் நடித்திருக்கிறார்.
முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள் போக மீதி நடித்திருக்கும் அனைவரும் அவரவர்க்குக்கொடுத்திருக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ,இசை ,பின்னணி இசை,எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.படத்தின் ரன்னிங்க் டைம் 120 நிமிடங்கள்
Bareilly ki Barfi , Nil Battery Sannata ஆகிய படங்களை இயக்கிய அஸ்வினி அய்யர் திவாரி என்பவர் தான் இயக்கி இருக்கிறார்
ஹர்மான் பவேஜா ,அக்சத் ஜில்டியல்,தஸ்னீம் லோகன்வாலா ஆகிய மூவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.
சபாஷ் டைரக்டர்
1 நாயகி சவாலில் ஜெயிக்கும் முதல் 2 கேஸ்களில் அவர் எப்படி ஜெயிக்கிறார் ,வில்லி எப்படி உதவுகிறார் என்று விளக்கமாகக்காட்டிய விதம் அருமை
2 நாயகிக்கும் ,அப்பாவுக்கும் இடையே ஆன எமோஷனல் பாண்டிங், வாத விவாதங்கள் சிறப்பு
3 முதல் பாதி முழுக்க கேரக்டர் அறிமுகங்கள் ,பின் பாதி சவால் கேஸ் கோர்ட் ரூம் டிராமா எனப்பிரித்துக்கொண்ட விதம் கச்சிதம்.
4 வில்லிக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்? என நாம் யோசிக்கும் சமயத்தில் வில்லி தான் நாயகியோ என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் முக்கிய அம்சமே அந்த பிரபல தொழில் அதிபரால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கேரக்டர் தான்.ஆனால் அந்தக்கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படவில்லை.அதனால் எமோஷனல் கனெக்ட் கிடைக்கவில்லை.
2 நாயகியின் அண்ணன் கேரக்டர் ,வில்லியின் கள்ளக்காதலன் கேரக்டர் இரண்டும் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை.
3 நாயகி அந்த தொழிலதிபர் கேசில் ஜெயிப்பது எப்படி?என்பதற்கான பிராப்பர் எவிடென்ஸ் விஷூவலாக நமக்குக்காட்டவே இல்லை.
4 தொழில் அதிபர் செய்த தப்புக்கு தண்டனை இல்லை ,ஆனால் செய்யாத தப்புக்கு தண்டனை பெறுகிறான் என்ற ட்விஸ்ட் எல்லாம் சிவாஜி கணேசன் காலத்து டெக்னிக்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கோர்ட் ரூம் ட்ராமா ப்ரியர்கள் ,ஜோதிகா ரசிகர்கள் பார்க்கலாம்.பிரமாதம் எல்லாம் இல்லை.சராசரி கோர்ட் ரூம் லீகல் டிராமா.ரேட்டிங். 2.5/5
Saturday, June 06, 2026
Panda Plan 2: The Magical Tribe (2026)-சைனீஷ் /தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் காமெடி அட்வென்ச்சர் டிராமா)@அமேசான் பிரைம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு அதிரடிக்கதாநாயகன்.நாம் வீடுகளில் பூனைக்குட்டி ,நாய்க்குட்டி வளர்ப்பது போல் அவர் செல்லமாக ஒரு கரடிக்குட்டியை வளர்த்து வருகிறார்.அவரும் அந்தக்குட்டியும் சைனாவில் இருக்கிற ஒரு வனப்பிரதேசத்தில் இருக்கும் பாண்டா சரணாலயம் செல்கிறார்கள்.
போகும் வழியில் வழி தவறி ஒரு பழங்குடி இனத்தவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.அந்தப்
அந்த இனத்தவர் தெய்வமாக வணங்கும் உருவ சிலையின் முக சாயல் நாயகனின் பாண்டா என்னும் குட்டியின் முக சாயலை ஒத்து இருக்கிறது.
ராணி ஒரு கல்வெட்டைப்படித்துப்பார்த்து பாண்டாவும்,அதன் தூதுவனும் இங்கே இருக்கும் மலை உச்சியை அடைந்தால் இந்த பழஙகுடி இனத்தவருக்கு வர இருக்கும் பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை அறிகிறாள்.
ராணி நாயகனிடம் தன் விருப்பத்தை சொல்கிறாள்.அதே கூட்டத்தில் ஒரு பிரிவினர் நாயகன் வருகையை விரும்பவில்லை.வில்லனை அனுப்பி நாயகனைக்கொல்ல முயல்கின்றனர்.
வில்லன் நாயகனைத்தாக்க வரும்போது தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை இழந்து விடுகிறான்.நாயகன்தான் தன் உயிரைக்காப்பாற்றியவன்.அவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என நினைத்து நாயகனை தெய்வமாக வணங்கி சேவைகள் செய்கிறான்.
வில்லனுக்கு மீண்டும் ஒரு முறை தலையில் அடிபடும்போது பழைய நினைவுகள் வந்து நாயகனைக்கொல்ல முயல்கிறான்.
நாயகன் வில்லனிடம் இருந்து தப்பித்தானா?மலை உச்சியை அடந்து அந்த இனத்தைக்காப்பாற்றினானா?என்பது மீதித்திரைக்கதை.
,
நாயகன் ஆக ஜாக்கிசான் நடித்திருக்கிறார்.71 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா?என நம்மை வியக்க வைக்கிறார்.சேசிங் சீன் ,சாண்டைக்காட்சிகளில் தன் வயதுக்கு ஏற்ற வகையில் சாகசங்கள் செய்கிறார்.
பாண்டா கரடிக்குட்டி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன் உடல் மொழி ,முக பாவனைகள் ,குறும்புகள் ரசிக்க வைக்கிறது.
ராணி ஆக வருபவர் இந்திய சீன கலப்பினப்பெண் போன்ற முக சாயல்.நன்றாக நடித்திருக்கிறார்.நாயகனை அண்ணனாக ஏற்றுக்கொள்வதைப்பார்க்கும்போது நமக்கு அண்ணாத்த பட ரஜினி நினைவு வருகிறது.
ஏன் எனில் ராணியாக நடித்த நடிகைக்கு 25 வயது இருக்கலாம்.ஜாக்கிசான் வயசு 71. தாத்தா வை எப்படி அண்ணன் என்கிறாரோ?
ராணியின் மகன் செய்யும் காமெடி ,மகளுக்கான செண்டிமெண்ட் சீன்ஸ் கச்சிதம்.
வில்லன் ஆக வருபவர் கொடூரமான முகத்துடன் வரும்போதும் சரி ,தலையில் அடி பட்டதும் குழந்தை ஆக மாறுவதும் சரி மாறுபட்ட இரு வேறு நடிப்பு கலக்கி இருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ,இசை ,எடிட்டிங் ,சி ஜி ஒர்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்
லூவான் சாங்க் என்பவர் இயக்கி இருக்கிறார்.
படத்தின் ரன்னிங் டைம் 100 நிமிடங்கள்
சபாஷ் டைரக்டர்
1. மலைப்பிரதேசங்கள் ,லாங்க் ஷாட்டில் காட்டும் அருவிகள் கொள்ளை அழகு
2 ஜாக்கி சானின் சுறுசுறுப்பு ,பாசிட்டிவிட்டி நமக்கும் தொற்றிக்கொள்கிறது
3 குழந்தைகளைக்கவரும் பாண்டா கேரக்டர்
4 பாசத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பழங்குடி இனத்தவர் முறையை மாற்றி அன்பை வெளிப்படையாகத்தெரிவிப்பது நல்லது என்பதை உணர்த்தும் காட்சிகள்.
5 வில்லன் கேரக்டர் டிசைன் ,அவர் நடிப்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆர்மர் ஆப் காட் ,ஸ்பானிஷ் கனெக்சன் படங்களில் வருவது போல் அதிரடி ஆக்சன் சீக்வன்சை எதிர்பார்த்தால் ஏமாறுவோம்
2 பழங்குடி இனத்தவரின் ஒப்பனை ,ஆடை வடிவமைப்பு ,நடிப்பு என எல்லாமே அவதார் படத்தின் காட்சிகளில் இருந்து உருவி இருக்கிறார்கள்.
3 பாண்டா சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகள் மட்டுமே ரசிப்பார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில்லாமல் குழந்தைகளுடன் கண்டு மகிழத்தக்க படம்.ரேட்டிங் 2/5
| Panda Plan: The Magical Tribe | |
|---|---|
Theatrical release poster | |
| Chinese name | |
| Simplified Chinese | 熊猫计划之部落奇遇 |
| Directed by | Derek Hui |
| Written by | Keyang Pan |
| Produced by | Derek Hui Han Mei Wei Wang |
| Starring |
|
Production companies |
|
| Distributed by | HY Media |
Release date |
|
Running time | 99 minutes |
| Country | China |
| Language | Mandarin |
| Box office | US$37.3 million[1] |
Friday, June 05, 2026
வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - ஜூன் 4 தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை
இந்த வாரம் இரண்டு தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்கு டப்பிங் படம் என மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.மூன்றும் வெவ்வேறு ஜர்னர்கள் .காமெடி டிராமா ,ஸ்போர்ட்ஸ் டிராமா,க்ரைம் திரில்லர் என மூன்றும் மூன்று விதம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





.jpg)