Saturday, May 30, 2026

PAPAM PRATHAP (2026)- தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@ஈ டி வி வின் ஓடிடி

     



 17/4/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்த லோ பட்ஜெட் படம் இப்போது  ஈ டி வி வின் ஓ டி டி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.                


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சின்னப்பையனாக இருக்கும்போதே தன் ஸ்கூல்மேட் மாணவியைக்காதலிக்கிறான்.காலேஜ் வாழ்க்கையிலும் அது தொடர்கிறது.பெரியவன் ஆனதும் இரு வீட்டார் சம்மதத்துடன் நாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.இந்தத்திருமணத்தில் நாயகனின் அப்பாவுக்குப்பெரிதாக விருப்பம் இல்லை.

திருமணம் முடிந்ததும் சாந்தி முகூர்த்தம் நாயகனின் வீட்டில் நடக்கிறது.அடுத்த நாள் காலை நாயகன் ,நாயகி இருவரும் சந்தோஷமாக  சிரித்துப்பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அடுத்த நாளும் அந்த சந்தோஷம் தொடர்கிறது.மூன்றாம் நாள் காலை நாயகி ஊர்ப்பஞ்சாயத்தைக்கூட்டி எனக்கு விவாக ரத்து வேண்டும் என்று தகறாரு செய்கிறாள்.

என்ன விஷயம் என்று கேட்டால் நாயகி சரியான பதில் சொல்லவில்லை.நாயகன் நடந்து கொண்ட விதம் சரி இல்லையோ?என்று கேட்கும்போது நாயகி. சொல்கிறாள்.நாயகன் இரவில் விடிய விடிய அவனுக்கு அவனே பேசிக்கொண்டு இருக்கிறான் என்று சமாளிக்கிறாள்.


நாயகன் தன் நண்பனிடம்  இந்தப்பிரச்சனையை சொல்லி நான் உன்னுடன் இரவில் தங்குகிறேன்.என் நடத்தையில் ஏதாவது மாற்றம் உண்டா பார் என்கிறான்.அடுத்த நாள் நண்பன் நாயகனிடம் உன்னிடம் எந்த மாற்றமும் இல்லை என்கிறான்.

இப்போது நாயகன் நாயகியிடம் வந்து இப்போது  நீ வா என்று சமாதானம் சொல்லி அழைத்து செல்கிறான்.அடுத்த நாள் காலை முருங்கை மரம்  ஏறுகிறது வேதாளம்.


நாயகனுக்கு இரவில் என்ன பிரச்சனை ? அல்லது நாயகிக்கு மனோ ரீதியான பிரச்சனையா? இதற்குப்பின் இருவரும் சேர்ந்தார்களா?என்பதை காமெடியுடன் சொல்லி இருக்கிறார்கள்.


நாயகன் ஆக திருவீர் சாமான்யன் ஆக எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக நடித்திருக்கிறார்.தெலுங்குப்பட ஹீரோக்கள் என்றாலே டாய் டேய் என்று கத்திக்கொண்டே  இருப்பார்கள்.இதில் தேவலை.


நாயகி ஆக பாயல் ராதா கிருஷ்ணா குடும்பப்பாஙகான .கச்சிதமான நடிப்பு.

நாயகனின் அப்பாவாக அஜய் கோஷ் நடித்திருக்கிறார்.வழக்கமாக வில்லனாகவே பார்த்த இவரை  குணச்சித்திரக்கேரக்டரில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

நாயகனின் அம்மாவாக ராசி நடித்திருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக தேவி பிரசாத்,அம்மாவாக ரூபா லட்சுமி குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்

சுரேஷ் போப்லியின் பின்னணி இசை ஓக்கே ரகம், கே எம் மகாகிருஷ்ணன் இசையில் ஒரே ஒரு பாடல் தான்.

ஒளிப்பதிவு விஷ்ணுவேஷ்வர்.கிராமிய அழகைப்படம் பிடித்து இருக்கிறார்.அன்வரி அலியின் எடிட்டிங் கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது.இன்னமும் 20 நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் துர்கா நரேஷ்


சபாஷ்  டைரக்டர்

1 குட் நைட் படத்தில் தூக்கத்தில் குறட்டை விடுவதால் டைவர்ஸ் கேட்கும் நாயகி கதைக்கருவைக்கொஞ்சம்  மாற்றி சைக்கலாஜிக்கல் பிராப்ளம் ஆக்கி காமெடியாக அதை சொன்ன விதம்

2  நாயகன் தனக்கு என்னபிரச்சனை என்பதைக்கண்டறிய நண்பனுடன் இரண்டு இரவுகள் தங்குவது அதனால் கிராமத்தில் கிளம்பும் புரளிகள்  நகைச்சுவை வெடி

3. நாயகனுக்கு இருக்கும் சைக்கலாஜிக்கல் பிராப்ளம் ஏன் வந்தது என்பதற்கான பிளாஷ்பேக் செண்டிமெண்ட் சீன் கச்சிதம்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 நாயகன் ,நாயகி இருவரும் தனித்தனி அறையில் கதவை உள் பக்கம் தாழ் போட்டுக்கொண்டு படுத்து உறங்கினால் பிரச்சினை ஓவர்.இதற்காக ஏன் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும்?


2 நாயகனின் பெற்றோருக்கு உண்மை தெரியும்.என்ன பிரச்சனை என்று தெரியாமல் நாயகன் அங்கும் இங்கும் அலையும்போது அவர்களே அவனை அழைத்து விசயத்தை விளக்கி இருக்க வேண்டாமா?

3 ஊர் பஞ்சாயத்தில் கிராமத்துப்பெருசுகள் எல்லோர் முன்னிலையிலும் ராத்திரி என்னம்மா நடந்தது?என நாயகியிடம் விசாரிக்கும் காட்சி தேவை இல்லாதது.என்ன தான் காமெடிக்காக என்றாலும் கண்ணியமாகக்காட்சிப்படுத்தி இருக்கலாம்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரூரல் காமெடி டிராமாவை ரசிக்கும் பொறுமைசாலிகள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2/5



Friday, May 29, 2026

DRIDAM(2026)-மலையாளம்- சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்)

     

    திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் பட்டறையில் பயிற்சி பெற்ற அறிமுக இயக்குநர் மார்ட்டின் ஜோசப் இயக்கத்திலும் ஜீத்து ஜோசப்  தயாரிப்பிலும் உருவான இந்தப்படம் 8/5/2026 முதல்  திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது.ஆங்கில சப் டைட்டில் உண்டு.

கும்பாளங்கி நைட்ஸ் படத்தில் நடித்த ஷேன் நிகாம் நாயகன் ஆக நடித்திருக்கும் படம் இது.           


ஸ்பாய்லர்  அலெர்ட்


கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஒரு கிராமம்.ஹில் ஸ்டேஷன். அமைதியான ஊரில் புதியதாகப்பணியில் சேரும் சப் இன்ஸ்பெக்டர் தான்  நாயகன்.இது தான் அவனது முதல் போஸ்டிங்.நாயகன் சரக்கு ,தம் அடிக்கும் பழக்கம் இல்லாதவன்.

டியூட்டியில் சேர்ந்த உடனே ஸ்டேஷனில் இருக்கும் ஏட்டய்யா,கான்ஸ்டபிள்கள் எல்லொரும் நன்கு பழக்கம் ஆகிறார்கள்.அங்கே பணிபுரியும் ஒரு லேடி கான்ஸ்டபிள் நாயகன் திருமணம் ஆனவரா?என்று விசாரிக்கிறார்.

இது க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படமா?ரொமாண்டிக் ஸ்டோரியா?என்று சந்தேகிக்கும்போது அந்த ஊரில் அடையாளம் தெரியாத நிலையில் அழுகிய ஆண் பிணம் கிடைக்கிறது.அடுத்த நாள் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் கொள்ளை நடக்கிறது.125 பவுன் நகை,50 லட்சம் ரூபாய் கேஷ் மிஸ்சிங்க்.அதற்கு அடுத்தடுத்த இரு நாட்களில் இரு வேறு ஆண் பிணஙகள் கிடைக்கின்றன.

இந்த 3 கொலைகளுக்கும் ,பைனான்சில் நடந்த கொள்ளைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என நாயகன் நினைக்கிறான்.


நாயகனுக்கு மேலிடத்தில் இருந்து பிரஷர்.ஒரு வாரத்தில் இந்த கேஸ் அனைத்தையும் க்ளியர் செய்ய வேண்டும்

அது முடிந்ததா?இல்லையா?என்பது மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக ஷேன் நிகம் பிரமாதமாக நடித்துள்ளார்.இறுக்கமான போலீஸ் முகங்களையே பார்த்து சலித்த நமக்கு சிரித்த முகத்துடன் ஒரு போலீஸ் நாயகன்  பார்க்க முடிந்தது ஆச்சரியம் தான்.


நாயகன் போக ஷோபி திலகன்,தினேஷ் பிரபாகர்,கோட்டயம் ரமேஷ், சானியா பாத்திமா,கிருஷ்ணபிரபா ஆகிய மற்ற போலீஸ்காரர்கள் நடிப்பும் கச்சிதம்.

லிண்டோ தேவாசியா ,ஜோமன் ஜான் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

சபாஷ்  டைரக்டர்

1 யாராலும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ,கடைசி அரை மணி நேர  பரபரப்பான காட்சிகள் அருமை

2 வழக்கமான போலீஸ் கதைகளில் ஹீரோ பேசும் பஞ்ச் டயலாக்ஸ் ,ஹீரோவுக்கான மாஸ் சீன் எதுவும் இதில் இல்லாமல் சிரித்த முகமாக ,அமைதியான கேரக்டர் ஆக நாயகனை வடிவமைத்த விதம் புதுசு.

3 ஒளிப்பதிவு ,லொக்கேஷன்  அட்டகாசம்

4  கேப்டன் பிரபாகரன் படத்தில் ஹீரோ  ஓப்பனிங்க் சீன் போலீஸ் ஸ்டேஷன் பைட் போல இதில் வரும் க்ளைமேக்ஸ் போலீஸ் ஸ்டேஷன் பைட் சீன் சூப்பர்

5 தங்க செயினை விற்க வரும் லேடி சிசிடிவி கேமராவில் சிக்குவதும் ,எதிரில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் அவள் வாங்கிய மருந்தை வைத்து ஆளைப்பிடிப்பதும் அபாரம்.

  ரசித்த  வசனங்கள் 

1 ஒருத்தனை வில்லன் ஆக்குவதும் ,ஹீரோ ஆக்குவதும் போலீஸ் கையில் இருக்கிறது.

2 மேலிடம் போடும் பிரஷர் பார்த்து பயப்படாத,அதிக பட்சம் உன்னை வேலையை விட்டுத்தூக்கிடுவாங்க,அவ்ளோ தானே?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 முதல் 30 நிமிடங்கள் எல்லாக்கேரக்டர்களையும் அறிமுகப்படுத்துவதிலேயே போய் விடுகிறது.

2 நாயகன் ஷேன் நிகம் 2023ம் ஆண்டில் பிரியதர்ஷனின் இயக்கத்தில்  வெளியான கொரானா பேப்பர்ஸ் படத்தில் இதே மாதிரி புதிய போலீஸ் ஆபீசர் ஆக வருவதால் உடல் மொழி ,சிகை அலங்காரம் என பலவற்றில் பார்த்த சாயல்.

3  எட்டு கிராம் தங்கம் ஒரு பவுன்.ஒரு கிலோ தங்கம் என்பது எத்தனை கிராம் போன்ற விபரங்களை நாயகன் ஏன் கான்ஸ்டபிளிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறான்?கூகுள் சர்ச் செய்தால் கிடைக்குமே?

4 நாயகன் ஒரு சீனில் இதுக்கு 182 செக்சன் தானே?என எதற்குக்கேட்கிறான்.நமக்கு ஒரு கெத்து வேண்டாமா?நமக்குக்கீழே பணியாற்றுபவர்களிடம் சட்ட சந்தேகம் கேட்டால் எப்படி அவர்கள் நம்மை மதிப்பார்கள்?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி பொறுமையை சோதிக்கும் மெதுவான திரைக்கதை ,பரபரப்பான பின் பாதி,கலக்கலான கடைசி அரை மணி நேரம் திரில்லர் மூவி விரும்பிகள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5

Thursday, May 28, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -மே 28 தியேட்டர் ரிலீஸ் தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம்  4 தமிழ்ப்படங்கள் ,ஒரு தெலுங்கு டப்பிங் படம் ,ஒரு மலையாள டப்பிங் படம் என 6 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.



1 பிளாஸ்ட்.  ஆக்சன் திரில்லர்
2 லட்சுமி காந்தன் கொலை வழக்கு.  க்ரைம் டிராமா
3  ஈகோ ராமன்.  மெலோ டிராமா 
4 RAGE.  ரிவஞ்ச் திரில்லர்




5 மசூத்கான். ஹாரர் திரில்லர். தெலுங்கு /தமிழ்
6 காட்டாளன் (மலையாளம்/தமிழ்) ஆக்சன் திரில்லர்




1. பிளாஸ்ட் - ஆக்சன் கிங் அர்ஜூன் பல படங்களில் ஆக்சன் அதகளம் செய்திருந்தாலும்
 கராத்தே மாஸ்டர் ஆக நடித்திருக்கும் முதல் படம் இது.நடிகை அபிராமியுடன் இணைந்து 25 ஆண்டுகளுக்குப்பின் நடித்திருக்கிறார்.ப்ரீத்தி முகுந்தன் இன்னொரு நாயகி.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கி இருக்கும் ஆக்சன் அதிரடிப்படம் இது.ட்ரெய்லர் பார்க்கும்போது படம் முழுக்க இரு நாயகிகளின் ஆக்சன் சீக்வன்ஸ் நிறைந்திருக்கும் போல் தோன்றுகிறது.

நாயகியின் குடும்பத்தைப்பற்றி வில்லன் இன்னொரு ஆளிடம் வர்ணிக்கும்போது சப்பை பேமிலிடா அது என்று சொல்லும்போது நாயகி ஆக்சனில்  தெறிக்க விடும் காட்சி தியேட்டரில் விசில் அடிக்க வைக்கும் காட்சி ஆக இருக்கும் என தோன்றுகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஆக வரும் நாயகன் பாட்சா பட பாணியில் பிளாஸ்பேக்கில் கராத்தே மாஸ்டர் ஆக இருந்தவர் என்பது தெரிய வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படம் இந்த வாரத்தில் வெளி வரும
 படங்களில் நெ 1 எதிர்பார்ப்பில் இருக்கிறது.

ரசித்த வசனங்கள்

1 எங்கேயாவது தப்பு நடக்கறதைப்பார்த்தா பாதிக்கப்பட்டவங்க நமக்குத்தெரிஞ்சவங்களாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்லை.

2 என்னைக்கொன்னுட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சீங்களா?எனக்கும் மேல ஒருத்தன் இருக்கான்.அவன் கண்டிப்பா உங்களைத்தேடி வருவான்

3 இவன் இங்கே திரும்ப வந்திருக்கான்னா பெரிய சம்பவம் ஒண்ணு நடக்கப்போகுதுன்னு அர்த்தம்



2 லட்சுமி காந்தன் கொலை வழக்கு

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடிக்கும் படம் இது.

1944 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கபட்ட படம்

தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன தியாகராஜ பாகவதர் ,நகைச்சுவை நடிகர் என்  எஸ் கிருஷ்ணன் இருவரும் சிறை தாண்டனை பெற்ற புகழ் பெற்ற வழக்கு இது

இந்து நேசன் என்னும் மஞ்சள் பத்திரிக்கையில் சினிமா ஹீரோக்களைப்பற்றிய கிசுகிசுக்கள் வரம்பு மீறி வரும்.அப்படிக்கிசு கிசு வராமல் இருக்க லட்சுமிகாந்தனுக்குக்கப்பம் கட்ட வேண்டும்.

இதனால் கடுப்பான சில பிரபல நடிகர்கள் கூலிப்படையை வைத்து லட்சுமி காந்தனைத்தீர்த்துக்கட்டியதாக வழக்கு.

இந்த வழக்கில் தியாகராஜ பாகவதர் தன் புகழை இழந்தார்.நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.

பல பரபரப்பான ,பதை பதைப்பான சம்பவங்கள் இருக்கும். 





3  ஈகோ ராமன்

கணேசன் நாச்சி முத்து இயக்கத்தில் ரோபோ சங்கர் நாயகனாக நடித்திருக்கும் படம் இது.அவரது மறைவுக்குப்பின் வெளியாகிறது.

இதில் அவர் ஆசிரியர் ஆக நடிக்கிறார்.ஒரு மாணவனுக்காகப்போராடும் ஆசிரியரின் கதை இது.

ரோபோ சங்கரின் மனைவி இந்தப்படத்தைப்பார்த்து விட்டு சொன்ன கருத்து ... அவர் மறைந்திருக்கலாம்.அவர் கண்கள் உயிர்ப்புடன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறது.மறக்க முடியாத பங்களிப்பு.

சப்பாணி பாய்ஸ் முரளி மாணவராக வும் ,ரோபோ சங்கர் ஆசிரியர் ஆகவும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் டீசர் கமலின் உத்தம வில்லன் பட பாணியிலும் ,ட்ரெய்லர்  வில்லேஜ் டிராமா போலவும்  அமைக்கப்பட்டிருக்கிறது.


ரசித்த வசனங்கள்

1 தூரத்தில் இருந்து பார்க்கும்போது சூரியன் ரொம்ப வெளிச்சமாத்தான் தெரியும் ,பக்கத்தில் போனா நம்மை எரிச்சுடறது இல்லையா?

2 யாருக்காகவும் ,எதுக்காகவும் உன்னோட கனவை நீ விட்டுடாதே!

3 உங்களைப்பார்த்ததுலயே ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு

4  அவன் நல்லவன் இல்லைன்னு ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டு வர்றேன்.நீங்கதான் நல்லவன் ,வல்லவன்னு சொல்லிட்டு இருந்தீங்க





4. RAGE

அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில். ஷான் ,ஷெர்லின் நடித்திருக்கும் ரொமாண்டிக் ரிவஞ்ச் திரில்லர் இது

நாயகன் டாக்சி டிரைவர்.நாயகி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி,ஐ டி ஊழியர்.
இருவரும் காதலிக்கிறார்கள்.வில்லன் நாயகியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து  விடுகிறான்.நாயகன் பழி வாங்குவது தான் கதை



5 மசூத் கான்

அசோக் குமார் ஜி

நாயகன் ஆக நடித்து இயக்கி இருக்கும் படம் இது.தெலுங்கு,தமிழ் ,ஹிந்தி யில் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான படம் இது.
ட்ரெய்லர்  பதை பதைக்க வைக்கிறது.
ராதிகா லெமுரி,பூஜா சர்மா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சாதாரண  மனிதர்களின் கண்களுக்குப்புலப்படாத ஜின்கள் மற்றும் பேய்கள் வாழும் உலகில் மாட்டிக்கொள்ளும் நாயகன் எப்படித்தப்பி வருகிறான் என்பதே கதை





6   காட்டாளன்

பவுல் ராஜ் இயக்கத்தில்

ஆண்டனி வர்கீஸ் ,துஷாரா விஜயன் நடித்திருக்கும் படம் இது.

காட்டுப்பகுதிகளில் சந்தன மரங்களை வெட்டுபவனின்,யானை தந்தங்களைக்கடத்துபவனின் வாழ்க்கை சம்பவம் தான் படம்.
ong bak என்ற புகழ் பெற்ற தாய்லாந்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்  இதில் ஆக்சன் சீக்வன்சை வடிவமைத்து இருக்கிறார்.
ட்ரெய்லர் மிரட்டல் ஆக இருக்கிறது

Wednesday, May 27, 2026

OFF CAMPUS (2026)- ஆங்கிலம்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ரொமாண்டிக் ட்ராமா)@அமேசான் பிரைம் 18+

 

13/5/2026 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் இந்த வெப் சீரிஸ் காணக்கிடைக்கிறது.இது ஒரு 18+ ரொமாண்டிக் காமெடி டிராமா.

எல்லே கென்னடி என்பவர் எழுதிய Off Campus என்னும் தொடர்கதையைத்தழுவி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.


மொத்தம் 8 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் 45 லிருந்து 55 நிமிடங்கள் ,ஆக மொத்தம்  7 மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்            


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு அம்மா இல்லை,அப்பா மட்டும் தான்.ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறந்த ஹாக்கி பிளேயர்.இவன் விளையாட்டில் கவனம் செலுத்தியதால் படிப்பில் கோட்டை விட அரியர் விழுகிறது.யாரிடமாவது ட்யூஷன் போய் படித்துப்பாஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறான்.இவனுக்கு காதலி இல்லை,காதலில் நம்பிக்கையும் இல்லை.


நாயகி காலேஜில் டாப் ரேங்க்கில் இருக்கும் நல்ல படிப்பாளி.இவளுக்கு ஒரு இசைக்கலைஞனிடம் ஒரு தலைக்காதல்.இன்னமும் வெளிப்படுத்தவில்லை.இவளுக்கு ஒரு நெருங்கிய தோழி இருக்கிறாள்.அவள் அவ்வப்போது நாயகியை வழி நடத்துவாள்.


நாயகன் நாயகியை சந்தித்துத்தனக்கு ட்யூஷன் எடுக்க முடியுமா? என்று கேட்கிறான்.ஆனால் நாயகி மறுத்து விடுகிறாள்.


அப்போதைக்கு மறுத்தாலும் நாயகிக்கு ஒரு யோசனை வருகிறது.தான் ஒருதலையாகக்காதலிக்கும் காதலன் நம்மைக்கண்டு கொள்ளவே இல்லை.அவனை வெறுப்பேற்ற நாயகனுடன் நாம் நெருக்கமாக இருப்பது போல் காண்பித்தால் என்ன?அவனைக்கவனம் ஈர்க்க இது நல்ல வழி  என்று நினைக்கிறாள்.


நாயகனிடம் தன் டீலிங்கை சொல்கிறாள்.நான் உனக்கு ட்யூஷன் நடத்திப்பாஸ் ஆக வைக்கிறேன்.அதற்குப்பிரதி உபகாரமாக நீ என்னுடன்  காதலன் போல் பொது வெளியில் நடந்து கொள்ள வேண்டும் என்கிறாள்.


நாயகன் நாயகியின் டீலுக்கு ஓக்கே சொல்கிறான்.நாயகியின் திட்டம் பலிக்கிறது.நாயகியின் காதலன் நாயகியை கவனிக்கிறான்.இப்போது நாயகிக்குத் தன் காதலனிடம் பழகும் வாய்ப்புக்கிடைக்கிறது.

நாயகி நாயகனிடம் நம் டீலிங்க் முடிந்து விட்டது.இனி நீ என் காதலன் ஆக நடிக்கத்தேவை இல்லை என்கிறாள்.நாயகனும் ஓக்கே சொல்கிறான்.


இனிமேல் தான் பிரச்சினை. சும்மா பாசாங்கிற்காகக்காதலர்கள் போல் நடித்த நாயகனும் ,நாயகியும் நிஜமாகவே அவர்களையும் அறியாமல் ஒருவரை ஒருவர் காதலித்து இருக்கிறார்கள்.இப்போது நாயகியால் தன் காதலனைக்காதலிக்க முடியவில்லை.நாயகன் மீது தான் அவளுக்கு ஈர்ப்பு இருக்கிறது.

இதற்குப்பின்  இவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகி ஆக எல்லா பிரைட் நடித்திருக்கிறார்.நம்ம ஊர் ஹன்சிகாவை முக சாயலில் நினைவுபடுத்துகிறார்.இவரது இளமையும் ,அழகும் வெப் சீரிசுக்குப்பெரிய பிளஸ்.நாயகனுடன் காதல் வசப்படும்போது முகம் சிவப்பதை நேச்சுரலாகக்காட்டி இருக்கிறார்.பிரமாதமான நடிப்பு.


நாயகன் ஆக பெல்மோண்ட் கேமலி இயல்பாக நடித்திருக்கிறார்.டீலிங் முடிந்த பின் நாயகி பிரியும்போது அவர் முகத்தில் காட்டும் நுணுக்கமான ஏமாற்றம் அற்புதம்


நாயகியின் தோழி ஆக மைக்கா அப்டெல்லா நடித்திருக்கிறார்.இவருக்கு ஒரு கிளைக்கதையும் உண்டு.கிட்டத்தட்ட இரண்டாம் நாயகி.வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.


நாயகியின் காதலன் ஆக ஜோஸ் ஹோஸ்டோன் நடித்திருக்கிறார்.பொறாமை ததும்ப இவர் நாயகியைப்பார்க்கும் பார்வை கச்சிதம்.

மெயின் கேரக்டர்கள் ஆன இந்த நால்வர் போக வெப் சீரிசில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


கீகன் டேவிட் இசையில் இளமைத்துள்ளலுடன் கதை நகர்கிறது.காலின் ஹோய்ட், நிக் தாமஸ் இருவரும் இணைந்து கலர்புல்லான ஒளிப்பதிவைத்தந்திருக்கிறார்கள்.

நான்கு பேர் கொண்ட எடிட்டிங் டீம்  கடுமையாக உழைத்திருக்கிறது.வெப் சீரிசின் ரன்னிங் டைம் 7 மணி நேரம் 12 நிமிடங்கள் 



சபாஷ்  டைரக்டர்

1 காலேஜ் கேம்பசில் கதை நடப்பதால் முழுக்க,முழுக்க இளமைக்கொண்டாட்டம் ஆக ,ஜாலியாக நகர்வது பெரிய பிளஸ்.

2 இசை ,பாட்டு ,ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் என திரைக்கதைபாதை அமைந்து விட்டதால் வில்லன் ,அடிதடி வேலைக்கு இடமில்லை.

3 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் நாயகியின் தோழிக்கான கிளைக்கதை ரசிக்கும்படி இருந்தது.

4 ஒளிப்பதிவு ,பின்னணி இசை இரண்டும் பெரிய பிளஸ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 இந்தக்கதையை 2 மணி நேரத்தில் சொல்லி முடித்திருக்கலாம்.வலுக்கட்டாயமாக ஏழு மணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.

2 கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஒரு எபிசோடுக்கு ஒரு 18+ கண்ட்டெண்ட் என்று வலிதத்திணித்திருக்கிறார்கள்

3 க்ளைமாக்சில் பெரிய சுவராஸ்யம் இல்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜென் இஜட் கிட்சுக்குப்பிடிக்கும்.ஜாலியான கலாட்டா ,இளமைக்கொண்டாட்டம் .ரேட்டிங் 2.5/5


Off Campus
GenreRomantic drama
Created byLouisa Levy
Based on
Off-Campus series
by Elle Kennedy
Showrunners
Starring
Music byKeegan DeWitt
Country of originUnited States
Original languageEnglish
No. of seasons1
No. of episodes8

Tuesday, May 26, 2026

Justice For Jeni (2026) -தமிழ் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @சிம்ப்ளி சவுத் ஓடிடி

 


2017ம் ஆண்டு கோவையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.9/1/2026 அன்று திரை அரங்கு களில் வெளியான இந்தப்படம் இப்போது  2/5/2026 முதல் சிம்ப்ளி சவுத் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியும்,தோழி ஜெனியும் பள்ளித்தோழிகள்.நீட் தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்க்சகக்காத்திருக்கிறார்கள்.ஜெனிக்கு ஒரு 5 வருட காலாமாக நட்பு கொண்ட நண்பன் ஒருவன் உண்டு.அவனுடன் கொண்ட நட்பு காதலாக மாறியதும் ஜெனி அவனிடம் காதலை வெளிப்படுத்த நினைக்கிறாள்.


ஒரு நாள் ஜெனி வீட்டில் பெற்றோர் இல்லாத ஒரு இரவில் தன் நண்பனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்கிறாள்.நண்பன் வீட்டுக்கு வந்து கதவைத்தட்ட ஜெனி கதவைத்திறக்கவில்லை.


போலீஸ் வந்து செக் செய்ததில் ஜெனி யாரோ ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறாள்.


போலீஸ் விசாரிக்கிறது.ஜெனியின் நண்பர்கள் ,தோழிகள் அனைவரையும் விசாரித்தும். தடயம் எதுவும் கிடைக்கவில்லை.


அந்த கேஸ் அப்படியே நிலுவையில் விட்டு விடுகிறது போலீஸ்.


நாயகி மருத்துவக்கல்லூரி மாணவி ஆக வேண்டியவள் ,நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஆகாமல் சட்டப்படிப்புப்படித்து  வக்கீல் ஆகிறாள்


ஜெனி கொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து கோர்ட்டில்  இந்தக்கேஸ் பற்றிப்புகார் தருகிறார்.


கோர்ட் ஆர்டரின்படி இந்தக்கேஸ் தூசு தட்டி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


முதல் பாதி இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆகவும் ,பின் பாதி கோர்ட் ரூம் டிராமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

நாயகி ஆக ,வக்கீல் ஆக சந்திரா அனில் திறம் பட நடித்திருக்கிறார்.ஓப்பனிங்க் சீனில் ஜெனியுடன் தோழி ஆக வருவது,போலீஸ் விசாரணையை எதிர்கொளவது ஆகியவற்றில் பயந்த சுபாவம் கொண்டவர் ஆகவும்,பின் பாதியில் வக்கீல் ஆக கோர்ட்டில் வாதிடும்போது பெண் புலி ஆக ஆக்ரோசமாகவும் மாறுபட்ட இரு வித நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஜெனி ஆக ஆஷிகா அசோகன் கெஸ்ட் ரோலில் வருகிறார்.அழகு முகம்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.


லேடி போலீஸ் ஆபீசர் ஆஜ கே எஸ் ஐஸ்வர்யா மிடுக்குடன் நடித்திருக்கிறார்.


ஜட்ஜ் ஆக வரும் கடலோரக்கவிதைகள் ரேகாவுக்கு ஓவர் மேக்கப்.குறைத்திருக்கலாம்.

வக்கீல் ஆக நிழல்கள் ரவி சும்மா வந்து போகிறார்.

நாயகியின் அப்பாவாக ,போலீஸ் கமிஷனர் ஆக ஹரீஷ் பெராடி அலடிக்கொள்ளாமல் அளவாய் நடித்திருக்கிறார். 

சைக்கோக்கில்லர் ஆக வரும் சினன் கெட்டப் தான் மிரட்டுகிறதே தவிர நடிப்பில் பெரிய அளவில் மிரட்டவில்லை.


இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால் ஒளிப்பதிவு,பின்னணி இசை ,எடிட்டிங் அனைத்தும் பிரமாதம் லெவல் எல்லாம் இல்லை. 2 பாடல்களும் சுமார் ரகமே.


திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர்  சந்தோஷ் ரியான்




சபாஷ்  டைரக்டர்

1 ஓப்பனிஙகில் நடக்கும் கொலைக்குப்பின் இடை வேளை வரை போலீஸ் விசாரணை பரபரப்பு கச்சிதம்

2 தனிமையில் இருக்கும் பெண்ணை டார்கெட் பண்ணும் சைக்கோ வில்லன் தன் வேலை முடிந்ததும் ஒரு சின்ன அடிதடிக்கேசில் தானாக முன் வந்து மாட்டிக்கொண்டு ஜெயிலுக்குப்போகும் ஐடியா புதுசு


  ரசித்த  வசனங்கள் 

1 பொதுவா ஒரு பெரிய தப்பு பண்ணியதும் போலீஸ்ல மாட்டிக்காம இருக்க  ஒரு சின்னத்தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப்போயிடுவேன்.ஏன்னா போலீஸ் ஜெயிலில் குற்றவாளியைத்தேடாது.

2  பெண்களின் உடை கவனத்தை ஈர்க்காத விதமாய் இருக்கனும்

3 பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக்கண்காணிக்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கோர்ட்டில் ஜட்ஜ் வக்கீலைப்பாராட்டியதும் மற்ற வக்கீல்கள் கை தட்டிப்பாராட்டுவது எல்லாம் ஓவர்.

2 சைக்கோக்கொலைகாரன் பிடிபட்டு போலீசால் ஜட்ஜ் முன் ஆஜர்படுத்தப்படும்போது ஜட்ஜ் கொலைகாரனிடம் "ஏம்ப்பா ,இந்த மாதிரி எல்லாம் செஞ்சே?எனக்கேட்பதும் செயற்கை

3 சைக்கோ வில்லனைக்கண்டுபிடிக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்காதது ஏனோ?

4 போலீஸ் அடிதடி விசாரணை எதுவும் இன்றி சைக்கோக்கொலைகாரன் தன் குற்றஙகளை வரிசையாக ஒப்பிப்பதும் செயற்கை

5 கோர்ட் காட்சிகள் ஓக்கே ரகம்  தான்.பொறி பறக்கும் வசனங்கள் மிஸ்சிங்க்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கோர்ட் ரூம் டிராமா என்ற வகையில் பார்க்கலாம்.சுமார் ரகம் தான் .ரேட்டிங் 2/5

Monday, May 25, 2026

EXAM(2026)- தமிழ்- வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)@அமேசான் பிரைம்

 

புஷ்பா காயத்ரி தயாரிப்பில் சுழல்,வதந்தி வரிசையில் மூன்றாவதாக வந்திருக்கும் வெப் சீரிஸ் இது.

விமல் நடித்த களவாணி(2010)என்ற மெகாஹிட் கொடுத்த இயக்குநர் சற்குணம் அதைத்தொடர்ந்து  வாகை சூட வா (2011),நையாண்டி(2013),மஞ்சப்பை(2014),சண்டி வீரன்(2015),டோரா(2017),களவாணி 2(2019),பட்டத்து அரசன்(2022),கலாட்டா பேமிலி(2025) என 9 படங்களை இயக்கியவர் 10 வதான படைப்பாக  எக்சாம் வெப் சீரிசை இயக்கி இருக்கிறார்.


தமிழ் நாட்டில் நடந்த க்ரூப் 1  தேர்வில் நடந்த ஊழல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.சமீபத்தில் இந்தியாவையே அதிர வைத்த நீட் எக்சாம் கொஸ்டீன் பேப்பர் லீக் சம்பவம் கூட இதே டைப் ஊழல் தான்.


இதில் மொத்தம் 7 எபிசோடுகள்.ஒவ்வொரு எபிசோடும் 30 டூ 35 நிமிடங்கள் ,ஆக மொத்தம் மூன்றே முக்கால் மணி நேரம் ஒதுக்கினால் ஒரே  அமர்வில் மொத்த வெப் சீரிசையும் பார்த்து முடித்து விடலாம்.

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லி ஒரு  டி எஸ் பி. ஊட்டி மாதிரி ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிறார்.டியூட்டியில் ஜாய்ன் பண்ண புது ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் நாயகி வில்லியைக்கடத்தி ஒரு இடத்தில் அவரைக்கட்டிப்போட்டு ஆள் மாறாட்டம் செய்கிறார்.


அதாவது நாயகியே டி எஸ் பி ஆக களம் இறங்குகிறார்.சில காவல் துறை அதிகாரிகளும் ,அரசு  ஊழியர்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.


ஆரம்பத்தில்  வில்லி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என நினைக்கும் நாயகி அதற்குப்பின்னர் தான் வில்லிக்கும் மேலே ஒரு பாஸ் இருக்கிறான் என்பதைக்கண்டுபிடிக்கிறார்.


இதற்குப்பின் நாயகி எடுக்கும் அதிரடி ஆக்சன்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி ஆக துஷாரா விஜயன் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சில் அதகளப்படுத்துகிறார்.செண்ட்டிமெண்ட் சீன்களில் கண் கலங்க வைக்கிறார்.


வில்லி ஆக அதிதி பாலன் கச்சிதம்.நாயகிக்கு குருவாக அப்பாஸ் நடித்து இருக்கிறார்.கெட்டப் ,நடிப்பு இரண்டும் கச்சிதம்.ஜீப் டிரைவர்  ஆக வரும்  சரவணன் சக்தி நடிப்பும் அருமை.


ஒளிப்பதிவு ,எடிட்டிஙக் ,இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சினிமாப்படத்துக்கு உண்டான தரத்தை வெப் சீரிசுக்கும் தந்திருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஏ சற்குணம்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகி ஆள் மாறாட்ட மோசடியில் மாட்டி விடுவாரோ என்ற பதை பதைப்பை வைத்தே சஸ்பென்ஸ் ஆகக்காட்சிகளை அடுக்கி முதல் 3 எபிசோடுகளை ஜெட் வேகத்தில் கடத்திய விதம்.

2 நாயகி ,வில்லி இருவருக்குமான கார் பைட் சீன் படமாக்கப்பட்ட விதம்.

3 முக்கியமான கேரக்டர்கள் 5 பேரை மட்டுமே வைத்து படமாக்கியதால் குழப்பம் இல்லாத தெளிவான திரைக்கதை

4 ஒவ்வொரு எபிசோடின் ஆரம்பத்திலும் கொஞ்சம் பிளாஸ்பேக் சொல்லி விட்டுப்பின் மெயின் கதைக்குப்போகும் உத்தி.

5 ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் நாயகி ஒரு சிக்கலில் மாட்டுவதாக முடிப்பது நல்ல சஸ்பென்ஸ்.

6 சாம் சி எஸ் சின் பின்னணி இசை திரில்லர் படத்துக்கான மூட் செட் செய்கிறது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜெண்டில்மேன் படம் ஆங்காங்கே நினைவுக்கு வருகிறது.

2 அப்பாஸ்  உடைய கேரக்டர் டிசைன் ரமணா விஜய்காந்த் போல் உள்ளது.

3  படத்தின் மெயின் கதையான எக்சாம் ஊழல் கதை நடக்கும் கடைசி 4 எபிசோடுகளை விட படத்தின் சைடு டிராக் ஆன நாயகியின் ஆள் மாறாட்ட மோசடி சீக்வன்ஸ் விறுவிறுப்பாக அமைந்து மெயின் கதையை காலி பண்ணி விட்டது.

4 புதிதாக ட்யூடிக்கு வரும் டி எஸ் பி யின் போட்டோவை வாட்சப்பில் அனுப்ப மாட்டார்களா?


,5 நாயகி ஒரு போர்ஜரி செய்திருக்கிறார்.அது தெரிந்த பின் இன்ஸ்பெக்டர் அவரை அசால்ட் ஆக டீல் செய்யாமல் எஸ் மேடம் ஓக்கே மேடம் என பம்முவது ஏன்?

6 கத்திக்குத்து முதுகில் வாங்கிய பின்னும் நாயகி ஒரு மேத்ஸ் பிராப்ளம் சால்வ் பண்ணுவது எல்லாம் ஓவரோ ஓவர்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சமூகத்துக்கு சொல்லப்பட  வேண்டிய ஒரு முக்கியமான விழிப்புணர்வு மெசேஜ் தான்.சொன்ன விதம் பிரமாதமாக இல்லாமல் சராசரி ஆகி விட்டது. ரேட்டிங்க் 2.5/5

Sunday, May 24, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27/2/2026 தியேட்டர் ரிலீஸ் தமிழ்ப்படங்கள்- ஒரு பார்வை

 27/2/2026 தியேட்டர் ரிலீஸ் தமிழ்ப்படங்கள்- ஒரு பார்வை



1 தாய் கிழவி - இந்தப்படம் டீசர்,ட்ரெய்லர் வந்த நாளில் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்க்கத்துவங்கி விட்டனர்.காரணங்கள் 3

1 படத்தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

2 இந்தப்படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயனின் நண்பர்.படம் எப்படிப்போகுது என்று ரிசல்ட் தெரியும் முன்பே அடுத்தடுத்து அவர் நடிக்கும் இரண்டு பட வாய்ப்புகளை  இயக்குநர் சிவக்குமார் முருகேசன் வசம் தந்து விட்டார்.

சிவகார்த்திகேயன் நடிக்க கமல் தயாரிக்க இருக்கும் சேயோன்  படத்தின் இயக்குநரும் சிவக்குமார் முருகேசன் தான். விக்ரம் நடித்த வீர தீர சூரன் மாதிரி இது ஒரு ஆக்சன் திரில்லர்.அந்தப்படத்தின் பிரமோ ஸ்டில் வெளியானதும் தாய் கிழவி படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

3 ராதிகாவின் கெட்டப்.கிட்டத்தட்ட மண்வாசனை ஒச்சாயிக்கிழவி காந்திமதி கெட்டப்பில் ,முதல் மரியாதை வடிவுக்கரசி கெட்டப்பில் ராதிகா கலக்கி இருக்கிறார்.

இது ஒரு காமெடி வில்லேஜ் ட்ராமா.

படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை டீசர்,ட்ரெய்லர் கட் பார்த்து யூகித்தவரையில்


நாயகி ஒரு கிராமத்தில் தனியாக பரம்பரை வீட்டில் வசிக்கிறார்.ஊர் பூரா வட்டிக்குப்பணம் விட்டு அதை வசூலிக்கும் தொழில் செய்து வருபவர்.இவருக்கு நான்கு மகன்கள்.அவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை.

ஒரு கட்டத்தில் நாயகி உடல் நலம் குன்றி படுத்த படுக்கை ஆகிறாள்.ஆனால் ஆள் இழுத்துக்கொண்டே இருக்கிறதே தவிர போனபாடில்லை.அவர் ஏதோ ஒரு ரகசியம் சொல்ல வருகிறார்.ஆனால் யாருக்கும் அது புரியவில்லை.

ஒரு வேளை ஏதாவது புதையல் ரகசியமாக இருக்கலாம்.அந்தப்புதையலை மகன்கள் கண்டு பிடித்தார்களா?என்பது மீதித்திரைக்கதை.

இதில் நாயகி ஆக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார்.அவரது ஒப்பனை பிரமாதமாகப்பேசப்படுகிறது.இவரது மகன்களாக  சிங்கம்புலி,அருள் தாஸ்,பால சரவணன்,முனீஷ்காந்த் ஆகிய நால்வரும் நடித்திருக்கிறார்கள்.குணச்சித்திர நடிகர் இளவரசும் படத்தில் உண்டு.

மொத்தக்கதையும் ஒரு கிராமத்தில் நடக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னா தான் இசை

இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட் ஸ்டார் வாங்கி இருக்கிறது


2. ஆழி


சித்தி ராதிகா வுக்குப்போட்டியாக சித்தப்பா சரத் குமார் களம் இறஙகி இருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஒரு மீன் பிடிப்படகு,கடற்கரை ,ஒரு வீடு என 3 இடங்களில் நடைபெற்று இருக்கிறது.

ரசூல் பூக்குட்டி இசை வடிவமைப்பு செய்து இருக்கிறார்.படத்தின் இசை ஜாஸ்லி கிப்ட்.

கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  மாதவ் ராமதாசன்

சரத்குமார் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து  இருக்கிறார்.அவருடன்  தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன் ,தாமரை செல்வி,வையாபுரி  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

ட்ரெய்லரைப்பார்க்குன்போது இது ஒரு ஆக்சன் ரிவஞ்ச் திரில்லர் மாதிரி தெரிகிறது.


3  Fourth Floor

இது ஒரு தமிழ்ப்படம் தான்.ஹாரர் மிஸ்டரி திரில்லர்

ஆரி அர்ஜூனன்,தீப்ஷிகா இருவரும் நாயகன் ,நாயகி ஆக நடிக்க இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

நாயகன் அவனது முன்னாள் காதலியால் சென்னையில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார்.என்ன காரணத்துக்காக முன்னாள் காதலி இப்படி செய்தார் என்பதைக்கண்டுபிடித்து அவளது திட்டத்தை முறியடிக்க முயற்சிப்பதே மீதிக்கதை.

கதை,திரைக்கதை,இயக்கம் எல் ஆர் சுந்தர பாண்டி


4 ஏ படம்  டாக்டர் அம்பேத்கார். ரிட்டர்ன்ஸ்


டைட்டிலில் ஏ படம் என்று இருந்தாலும் இது யு படம் தான்.அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறை சொல்லும் படம் இது.

சிவாங்கோ என்பவர் இயக்கி இருக்கிறார்.இது ஒரு லோ பட்ஜெட் படம்


5. சட்டங்கள் ஆயிரம்- இதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் தான்

பிராட்வே சுந்தர்  இயக்கி இருக்கிறார்

நாயகி குடும்ப சூழல்  காரணமாக பலரிடம் கடன் வாங்கி மாட்டிக்கொள்கிறார்.வட்டி மட்டும் மாதம் ரூ 5 லட்சம் கட்ட வேண்டி இருக்கிறது.அவர் என்ன செய்தார்?எதற்காகக்கடன் வாங்கினார்? என்பதை விளக்கும் கதை இது

முற்றிலும் புதுமுகஙகள் நடிக்கும் படம் இது


6. The Rise of Asoka. கன்னடம்/தமிழ்


இது ஒரு கன்னடப்படம்.தமிழ் டப்பிஙகில் வெளியாகிறது.

சதீஷ் நினசம்,சப்தமி கவுடா இருவரும் நடிக்க வி வினோத் இயக்கத்தில் உருவான படம் இது.


கிராமத்தில் நடக்கும் ஆக்சன் ட்ராமா இது.

சதீஷ நடிப்பில் வெளிவரும் முதல் 100 கோடி வசூல் படம் என கன்னடப்பத்திரிக்கைகளில் விளம்பரம் வருகிறது


7 தெறி

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் ரீ ரிலீஸ் ஆகிறது.2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படம்  கமர்ஷியலாக செம ஹிட் ஆனது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா ,எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள்

கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வந்த சத் ரியன் படத்தின் கதை அம்சத்தைத்தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

விஜயின் மகளாக பேபி நைனிகா பிரமாதமாக நடித்திருப்பார்.


ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

கலைப்புலி எஸ் தாணு தயா ரிப்பு


பரதநாட்டியம் 2 மோகினி ஆட்டம்(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்

       

    5 கோடி ரூபாய் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த மெகா ஹிட் படம் இது.ஷைஜூ க்ரூப் நடிக்கும் 150 வது படம்.இது அவர் தயாரிப்பில் உருவான படமும்  கூட


முதல் பாகம் பார்க்காதவர்கள் கூட இரண்டாம் பாகம் பார்க்கலாம்.இரண்டும் தனித்தனிக்கதைகள்.   

10/4/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி கண்ட இந்தப்படம் இப்போது 8/5/2026 முதல்  நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது           


ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல் பாகத்தின் கதை சுருக்கம் - நாயகனின் அப்பா உடல் நிலை குன்றி  சீரியஸ் ஆக இருக்கும்போது நாயகனை அழைத்து ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு.நீ தான் இரண்டு குடும்பஙகளையும் சேர்த்து வைக்கனும் என்கிறார்.அக்னி நட்சத்திரம் படத்தில் விஜய குமார் எப்படி கார்த்திக்,பிரபு என இரு வாரிசுகளிடம் சிக்கித்தவித்தாரோ அது மாதிரி  தவிக்காமல் உண்மையை சொல்லி  விட்டு இறந்து விடுகிறார்.நாயகன் எப்படி இரு குடும்பங்களையும் இணைத்தான்? என்பது முதல் பாகத்தின் கதை.


இனி இரண்டாம் பாகக்கதை.


நாயகனின் அப்பா இறந்த பின் அவரது நண்பர்கள் மூவர் கூடிப்பேசுகின்றனர்.அந்த மூவரில் ஒருவன் தான் வில்லன்.

ஊரில் ஒரு கோயில் கட்டி அதில் சட்டத்துக்குப்புறம்பாக உண்டியல் வைத்து லட்சக்கணக்கான பணத்தைக்கொள்ளை அடிக்கிறார்கள் வில்லனும்,அவனது நண்பர்கள்  இருவரும். ஆனால் ஒரு ஆபீசரிடம் வில்லன் இப்போது  மாட்டிக்கொள்கிறான்.


இறந்து போன தன் நண்பன் மேல் பழியைப்போட்டு விட்டால் தான் தப்பித்து விடலாம் என வில்லன் நினைக்கிறான். இது சம்பந்தமாகப்பேச வில்லன் நாயகனின் வீட்டுக்கு வருகிறான்.


வில்லனின் ஐடியாப்படி செயல்பட்டால் தன் அப்பாவுக்குக்கெட்ட பெயர் வரும் என  நாயகன் மறுத்து விடுகிறான்.ஒண்ணாப் பழியை ஏத்துக்குங்க,இல்லைன்னா 50 லட்சம் ரூபாய் பணம் கொடுங்க என வில்லன் மிரட்டுகிறான்.


இப்போது நாயகனின் குடும்பத்தார் ஆறு பேருக்கும் ,வில்லனுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்படுகிறது.இதில் வில்லன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறான்.

இறந்த வில்லனின் பிணத்தை அப்புறப்படுத்த நாயகனின் குடும்பம் படும் பாடுகள் தான் படத்தின் மீதிக்கதை

நாயகன் ஆக சைஜூ குருப் காமெடி ததும்ப நடித்திருக்கிறார்.முதல் பாதி முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கொலையை மறைக்க இவர் படும் பாடுகள் கலகல.

வில்லன் ஆக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு கச்சிதமான நடிப்பு.மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக வருவது போல் பின் பாதியில் இவரும் பிணமாக அசத்துகிறார்.

மூன்றே காட்சிகளில் வந்தாலும் ஜெகதீஷ் நடிப்பு அருமை

வில்லனின் மச்சான் ஆக வந்து நாயகன் மேல் சந்தேகப்படும் நபர் ஆக பேபி ஜீன் தேர்ந்த நடிப்பு.

கலா ரஞ்சனி ,ஸ்ரீஜா ரவி, இருவருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


எலக்ட்ரோஹிக் கிலியின் இசையில் ஒரு பாடல் ஓக்கே ரகம்.பின்னணி இசையில் காமெடி ,விறுவிறுப்பு,பரபரப்பு,பதைபதைப்பு அனைத்தையும் கூட்டி இருக்கிறார்.

பப்லு அஜூவின் ஒளிப்பதிவு கச்சிதம்.சபீக்கின் எடிட்டிங்கில் படம் 155 நிமிடங்கள் ஓடுகிறது


விஷ்ணு ஆர் பிரதீப் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனித்து இயக்கி இருக்கிறார் இயக்குநர். கிருஷ்ணதாஸ் முரளி

சபாஷ்  டைரக்டர்

1 புராணக்கதையில் ராமர் மிக்சர் சாப்பிட்டார்,ஒரு மோகினியை சந்தித்தார் என அளந்து விடும் காட்சிகள் காமெடிக்கலக்கல்

2 க்ளைமாக்ஸுக்கு 20 நிமிடம் முன் வரும் போலீஸ் ஆபீசர் வினய் போர்ட் விசாரணை செய்யும் அனைத்துக்காட்சிகளும் நகைச்சுவை சர வெடி

3 கலாரஞ்சனி தன் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டுபடம் முழுக்க பல வில்லங்கங்களை இழுத்து விடுவது செம

4  தெரியாம கொலை பண்ணிட்டோம் ,போலீஸ் ஸ்டேஷன்ல போய் சமாதானமாப்போய்க்கலாமா?என்று சமாதானம் பேச முடியாதா?என அப்பாவியாகக்கேட்பது காமெடி அதகளம்.

5 ரஜினியின் கூலி பட ரெபரன்சை வைத்து ஜெகதீஷ் செய்யும் சேட்டைகள் அருமை.

6 ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படத்தை நையாண்டி செய்த விதம் நல்ல ஐடியா

7 பிண நாற்றம் அடிக்காமல் இருக்க சாம்பிராணிப்புகை போட்டு வீட்டுக்கு வந்தவர்களை சமாளிக்கும் காட்சி செம


  ரசித்த  வசனங்கள் 

1 கூட்டத்தில் ஒரு ஆளா இல்லை அவர்.கூட்டத்துக்கே தல அவர்தான்.

2 கத்திப்பேசாதீஙக,அமைதியாக்கத்துங்க.

3 ஊரே சேர்ந்து அடிச்சுக்கொன்ன பாம்பு கதை மாதிரி ஆகிடும்


ஆம்,அந்தப்பாம்பு செத்துப்போயிடுச்சு.

4 ராமாயணத்தில் எப்படி மோகினி?

5 நீ வந்ததும் உன் கிட்டே கேட்கலாம்னு இருந்தோம்.


எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?நான் என்ன சீரியல் கில்லரா?

6 கஞ்சா கேஸ்ல மாட்டினா எப்படி தப்பிக்கிறது?


தெரியலை.எனக்கு மாட்டிக்க மட்டும் தான் தெரியும்,தப்பிக்கத்தெரியாது.


7 ஆட்டோ..


எங்கே போகனும்?

எங்கே வேணாலும் போங்க


8 வாழைக்குலையை விக்கப்போறேன்.

இந்தக்கொலையை என்ன பண்ண?

9  என்னய்யா சொல்றே? ஒரே அப்பா,இரு வேறு அம்மாக்களுக்குப்பிறந்த இரு மகன்கள் ஒரே முகச்சாயலில் இருக்காஙகளா?அது எப்படி முடியும் ?


என் அப்பாவால் முடியும்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லன் நாயகனின்  வீட்டில் கொலை ஆகும் காட்சி கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை.இன்னமும் நம்பகத்தன்மையுடன் எடுத்திருக்க வேண்டும்

2 என்னதான் காமெடிக்கு என்றாலும் கடைசியில் விசாரணை செய்யும் போலீஸ் ஆபீசர் மடத்தனமாய் என்கொயரி செய்வது ,முட்டாள் தனமாய் நடந்து கொள்வது ஓவர் டோஸ்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் கலக்கலான காமெடிப்படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5


Bharathanatyam 2 Mohiniyattam
Theatrical release poster
Directed byKrishnadas Murali
Written byKrishnadas Murali
Vishnu R. Pradeep
Produced byLini Mariam David
Anupama B. Nambiar
StarringSaiju Kurup
Suraj Venjaramoodu
Jagadish
Vinay Forrt
Baby Jean
Kalaranjini
Sreeja Ravi
CinematographyBablu Aju
Edited byShafeeque V. B.
Music byElectronic Kili
Production
companies
Thomas Thiruvalla Films
Saiju Kurup Entertainments
Release date
  • 10 April 2026
Running time
155 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹5–6 crore[1]
Box officeapprox. ₹38–40 crore[1]