Showing posts with label வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி. Show all posts
Showing posts with label வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி. Show all posts

Friday, April 24, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ஏப்ரல் 3 ம் வாரம் 24/4/26 தியேட்டர் ரிலீஸ் படங்கள்

 தேர்தல் முடிந்த அடுத்த நாளே 10 படங்கள்  ரிலீஸ்.புதுத்தமிழ்ப்படங்கள் 5 ,ரீ ரிலீஸ் படங்கள் 5


அவற்றின் முன்னோட்டம்





1  தீயோர் கூடம் - நவீன் இயக்கி நடித்த மூடர் கூடம் படத்துக்கும்,இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ஒரு லோ பட்ஜெட் மூவி.ஒரே வீட்டில் ,ஒரே நாளில் நடக்கும் கதை.

ஊருக்கு ஒதுக்குப்புறமான வீட்டில் ஒரு கொலை நடக்கிறது.வீட்டில் இருக்கும் மூவரும் மாறி மாறி ஒருவரை  ஒருவர் சந்தேகிக்கின்றனர்.யார் குற்றவாளி என்பதை எப்படிக்கண்டு பிடிக்கிறார்கள் என்பதே கதை.


நாயகி ஆக சாக்‌ஷி அகர்வால் நடிக்க ,புதுமுகங்கள்  முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.வையாபுரி நெகடிவ் ஷேடு உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறார்.

வழக்கமாகக்காமெடியன் ரோலில் பார்த்த அவரை சீரியசான ரோலில் பார்க்க ட்ரெய்லரில் வித்தியாசமாக இருக்கிறது.

சட்ட விரோதமாகக்கிடைக்கும் பணத்தை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற போட்டி மனப்பான்மை தான் திரைக்கதையை வழி நடத்தும் போல் தெரிகிறது.

ரசித்த வசனம்


அடிச்சுப்பிடுங்கறதே இவ்ளோ கஷ்டமா இருக்குதுன்னா உழைச்சு சம்பாதிக்கறது. ரொம்பக்கஷ்டம் போலயே?


இயக்கி இருப்பவர் சக்திவேல்.




2 பிரேக் பாஸ்ட் (Break fast)

விஷால் நாயகனாக நடித்த முதல் படமான செல்லமே என்ற எதிர்பாராத ஹிட் படத்தை இயக்கிய ஏ ஆர் காந்தி கிருஷ்ணா அடுத்து அமரர் மேஜிக் ரைட்டர் சுஜாதாவின் புகழ் பெற்ற நாவலான பிரிவோம் சந்திப்போம் நாவலை அடிப்படையாக வைத்து தமனா வின் நடிப்பில் ஆனந்த தாண்டவம் என்ற லவ் சப்ஜெக்ட் படத்தை இயக்கினார்.இரண்டு படங்களுக்கும் வசனம் சுஜாதா தான்.

நீண்ட இடை வெளிக்குப்பின் இப்போது களம் காண்கிறார்.

நாயகன் ,நாயகி இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்ட தம்பதி.கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்கின்றனர்.இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதே க்ளைமாக்ஸ்.

ட்ரெய்லரைப்பார்த்தபோது டி வி சீரியல் போலக்காட்சிகள் இருந்தன.பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது.ஒரு அபத்தமான காட்சியும் ட்ரெய்லரில் வருகிறது.கோர்ட்டில் ஜட்ஜ் முன் நாயகன் தன் உடைகளை எல்லாம் களைகிறான் .இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

பிக் பாஸ் புகழ் ராணவ் ,ரோஸ்லின் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். க்ருத்திக் மோகன் ,அமிதா ரங்கநாதன் ,அர்ச்சனா,சம்பத் ராம் ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.


டைட்டில் டிசைன் நன்றாக இருந்தது.பிரேக் & பாஸ்ட் இரு வார்த்தைகளுக்கு இடையே தாலி இருக்கிறது...

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் நன்றாக வந்திருக்கும்போல் தெரிகிறது.

தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது


ரசித்த வசனம்.


கல்யாணம் ஆகிட்டாலே லவ்வோட % கொஞ்சம் குறையத்தான் செய்யும் 




3. கமாண்டோவின்  லவ் ஸ்டோரி


சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ஒரு ராணுவ வீரரின் பயோ பிக்சர்.அந்தப்படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம் இது.

தயாரிப்பாளரின் கணவர் தான் நாயகன் போல் தெரிகிறது.
வீர அன்பரசு என்பவர் தான் நாயகன் + இயக்கம்.அனுராதா அன்பரசுதான் தயாரிப்பு.

இது ஒரு ரொமாண்டிக் டிராமா என்று சொல்லப்பட்டாலும் ட்ரெய்லர் இது ஒரு சுமாரான மொக்கைப்படம் என்று சொல்கிறது.

நாயகன் இது தாண்டா போலீஸ் பட வில்லன் மாதிரி தாடி வைத்துக்கொண்டு தொப்பையுடன் இருக்கிறார்.எந்த நாட்டு மிலிட்ரி வீரருக்கு தாடி + தொப்பை வைக்க அனுமதி எனத்தெரிய வில்லை.




4. பாவக்கூத்து

சேயோன் (2022),எப்புர்ரா(2024),பிரான்சிஸ் சேப்டர் 1(2025) என்ற  சுமார் ரகப்படங்களை இயக்கிய ஏ ஆர் ராஜேஸ் இயக்கிய அடுத்த  படம் இது.

ட்ரெய்லரைப்பார்த்தால் இது ஒரு ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் போல் தெரிகிறது.

பிரதீப் செல்வராஜ் ,ரஞ்சனா தியாகராஜன் இருவரும் நாயகன் ,நாயகி ஆக நடித்திருக்கும் புதுமுகங்கள்.

நாயகன் காலேஜில் படிக்கும் நாயகியைக்காதலிக்கிறான்.அவன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை.




5 பேட்டில் (Battle)

இயக்குநர் நாராயணன் இயக்கத்தில்  அர்ஜூன் அன்புடன்,ஆராத்யா ஆகிய இருவரும் நாயகன் ,நாயகி ஆக நடிக்க முனீஷ்காந்த் காமெடியன் ஆக நடிக்கும் இந்தப்படம் ரொமாண்டிக் ஸ்டோரி ஆக வந்திருக்கிறது.

ட்ரெய்லர் ரொம்பவே சுமார் தான்.மிகப்பெரிய ராப் இசைப்பாடகன் ஆக வரத்துடிக்கும் நாயகன் ஸ்கூலில் படிக்கும்போதே காதலில் விழுகிறான்.அவன் காதல் ஜெயித்ததா? லட்சியம் என்ன ஆனது ?என்பது  தான் மீதித்திரைக்கதை போலத்தெரிகிறது.




6 மாட்டுக்கார வேலன் (1970)

1966ல் ரிலீஸ் ஆன எம்மே தம்மண்ணா என்ற கன்னடப்படத்தின் அபிஷியல் ரீமேக் இது..பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்தப்படம் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழாக்கண்ட படம்

எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்த இந்தப்படத்தில்  ஜோடி ஆக ஜெயலலிதா,லட்சுமி இருவரும் நடிக்க வில்லன் ஆக  அசோகன் காமெடியன் ஆக துக்ளக் சோ ,வி கே ராமசாமி  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

செம ஹிட் பாடல்கள்

1 சத்தியம் நீயே தர்மத்தாயே
2 ஒரு பக்கம் பார்க்கிறா
3 பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ

4 தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா
5 பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டான் லட்சணமா

ரன்னிங் டைம் 173 நிமிடங்கள்

இசை கே வி மகாதேவன்
இயக்கம் பி நீலகண்டன்




7. எஜமான் (1993)

சின்னக்கவுண்டர் படத்தின் பிரம்மாண்ட  வெற்றியைக்கண்ட ரஜினிகாந்த் அதன் இயக்குநர் ஆர் வி உதயக்குமார் இடம் அதே போல் ஒரு கிராமத்துக்கதையை ரெடி பண்ணச்சொன்னார்.

ஜில்லாக்கலெக்டர் என்று டைட்டில் வைக்கப்பட்டது.ஆனால் அந்தக்கதையில் ரஜினிக்குத்திருப்தி இல்லாததால் அதே சின்னக்கவுண்டர் கதையை ரஜினிக்கு ஏற்றாற்போல கொஞ்சம் மாற்றி திரைக்கதை அமைத்த படம் தான் எஜமான்.

சின்னக்கவுண்டர் அளவுக்கு மெகா ஹிட் ஆகா விட்டாலும் ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமே.
இளையராஜாவின் இசையில்


பாடல்கள் செம ஹிட்.

1  ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்

2. அடி ராக்கு முத்து ராக்கு
 3. எஜமான் காலடி மண்ணெடுத்து
4 இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்

5 நிலவே முகம் காட்டு எனைப்பார்த்து ஒளி வீசு

6.  ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
7  உரக்கக்கத்துது கோழி

8 தூக்குச்சட்டியை

ரஜினிக்கு ஜோடி ஆக மீனா ,ஐஸ்வர்யா இருவரும் நடிக்க நெப்போலியன் வில்லனாக நடித்தார்.

காமெடிக்குக்கவுண்டமணி செந்தில் உண்டு.

இதில் வில்லனின் பஞ்ச் செம ஹிட். திருமண வீடுன்னா நான் தான் மாப்ளையா இருக்கனும் ,இழவு வீடுன்னா நான் தான் பிணமா இருக்கனும்

ரஜினி தோளில் துண்டை ஸ்டைல் ஆக திருப்பிப்போடும் சீன் கை தட்டல் பெற்றது 

ரன்னிங் டைம் 153  நிமிடங்கள்

ஏ வி எம் தயாரிப்பு 



8. சிவகாசி  (2005)

இயக்குநர் பேரரசு படங்கள் அனைத்தும் பெரும்பாலும் டைட்டிலில் ஊர் பெயரைக்கொண்டிருக்கும்.விஜய் + பேரரசு காம்போவில் அமைந்த முதல் படம் இது .ஹிட் படம்.

அசின் ஜோடியாக நடித்திருந்தாலும் ஒரே ஒரு பாடல் காட்சியில் நயன் தாரா வந்து அப்ளாஸ் அள்ளி இருப்பார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 6 செம ஹிட் பாடல்கள்

1  கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்க வாரியா?
2 வாடா வாடா வாடா தோழா
3 இது என்ன?
4 தீபாவளி தீபாவளி நீ தாண்டி
5 என் தெய்வத்துக்கே
6 அட என்னத்த சொல்வேனுங்கோ வடு மாங்கா ஊறுதுங்கோ

இதில் விஜயின் பஞ்ச் டயலாக்ஸ் ஆக்சன் சீக்வன்ஸ் தூள் பரத்தும்

தீபாவளி ரிலீசாக வந்து பட்டாசைக்கிளப்பிய படம்
ரன்னிங் டைம். 175 நிமிடங்கள்




9 அமர்க்களம்  (1999)

அஜித்குமாரின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் ஷாலினி உடனான காதல் உருவானது.

காதல் மன்னன் புகழ் சரண் இயக்கத்தில் உருவான படம்.

பரத் வாஜின் இசையில்  6 சூப்பர் ஹிட் பாடல்கள்

1 உன்னோடு வாழாத  வாழ்வென்ன வாழ்வு

2  சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
3  மேகங்கள் என்னைத்தொட்டு சென்றதுண்டு
4.  சொந்தக்குரலில் பாட 
5 காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா
6  என் செய்தாயோ


ராகவா லாரன்சின் டான்ஸ் கொரியோகிராபியில் வித்தியாசமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ரசிகர்களைக்கவர்ந்தது.

இது ஒரு வெற்றிப்படம்
ரன்னிங் டைம்  155 நிமிடங்கள்




10 ரன் (2002)

என் லிங்குசாமி + மாதவன் காம்போவில் வந்த வித்தியாசமான ஆக்சன் படம் இது.

சாக்லெட் பாய் ஆக நடித்து வந்த மாதவன் இதில் ஆக்சன் ஹீரோவாக அசத்தி இருப்பார்.

வில்லன்கள் துரத்த ஓடும் ஹீரோ பயந்து ஓடுகிறார் என நாம் இனைக்க ஷட்டர் மூடி விட்டு அடி வெளுப்பது மாஸ் சீன்.

மீரா ஜாஸ்மின் இளமை ,அழகு பெரிய பிளஸ் 
விவேக்கின் காமெடி டிராக் செமயாக இருக்கும்

வித்யா சாகர் இசையில் 7 பாடல்களும் மெகா ஹிட்

1. தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
2 இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா

3 காதல் பிசாசே காதல் பிசாசே

4. மின்சாரம் என் மீது பாய்கின்றதே

5. அழகிய  திமிருடன். ப்ரியா ஓ ப்ரியா

6. பனிக்காற்றே
7. பொய் செல்லக்கூடாது காதலி

வில்லன் ஆக அதுல் குல்கர்னி அசத்தி இருப்பார்.இவருடனான க்ளைமாக்ஸ் பைட் கலக்கல் ஆக இருக்கும்

Saturday, February 07, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி


 ஒரு கால கட்டத்தில் அதாவது 1980 களில் 1990 களில் தீபாவளி,பொங்கல் சமயங்களில் 10 படஙகள் ரிலீஸ் ஆகும்.முன்னணி நடிகர்கள் படஙகள் 4 ,லோ பட்ஜெட் படஙகள் 6 என்ற விகிதத்தில் இருக்கும்.ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் அல்லது இரண்டு படஙகள் தான் ரிலீஸ் ஆகின்றன.நீண்ட இடைவெளிக்குப்பின் வருகின்ற 6/2/2026 வெள்ளி அன்று 13 படஙகள் ரிலீஸ் ஆகின்றன.



1. வித் லவ் (WITH LOVE)

2025ம் ஆண்டு வெளிவந்த பீல் குட் மூவி ஆன எம் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் முதல் படம் இது.நாயகி ஆக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.பருத்தி வீரன் புகழ் சித்தப்பு சரவணன் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் சொந்தப்படம் இது.அறிமுக இயக்குநர் மதன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

3/2/2026 அன்று சத்யம் சினிமாஸ் திரை அரங்கில்  பிரிவ்யூ ஷோ நடைபெறுகிறது.6/2/2026 அன்று தமிழகத்தில் அனைத்துத்திரை அரஙகுகளிலும் வெளியாகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ரொமாண்டிக் ட்ராமா இது.

2. காதல் கதை சொல்லவா

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் போல போஸ்டர் டிசைன்கள் அமைந்திருந்தாலும் அது உண்மை அல்ல.அவர் ஒரு குணச்சிரக்கேரக்டரில் நடித்திருக்கிறார்.ஜெயராம் ,நகுல் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் படம் இது.

சனில் களம் இயக்கத்தில் தமிழ் ,மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என்று சொல்லப்பட்டாலும் இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் தான்.தமிழில் டப் செய்து இருக்கலாம்

நாயகிகளாக  ஆத்மிகா,ரித்திகா சென் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள்.ரொமாண்டிக் காமெடி டிராமா இது.சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைபெற்றுள்ளது


3. அனோமி - த ஈக்குவேசன் ஆப் டெத்

இது ஒரு மலையாளப்படம்.தமிழ் டப்பிஙகில் வெளியாகிறது.பாவனாவின் 90வது படம்.இதில் ரகு(மான்) விசாரணை அதிகாரியாகவும் ,பாவனா  தடயவியல் நிபுணராகவும் நடித்திருக்கிறார்கள்.இது ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேசன் பிலிம்.
படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4  ரெட் லேபிள்- இது ஒரு ரொமாண்டிக் ட்ராமா.கே ஆர் வினோத் இயக்கத்தில் பொன் பார்த்திபன் திரைக்கதையில் உருவான படம் இது.

லெனின்,இயக்குநர் ஆர் வி உதயகுமார்,முனீஸ்காந்த்,அஜ்மின் ஆகியோர் நடித்திருக்கும் படம்.கதாநாயகி புதுமுகம்.

5 யோகிடா - இது கதாநாயகியின் ஆக்சன் மூவி.நாயகி ஆக சாய் தன்சிகா நடித்திருக்கிறார்.கபாலி படத்தில் இவர் கேரக்டர் பெயர் யோகி.அதே மாதிரியான கேரக்டர் என்பதால் யோகிடா என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஷாயாஜி ஷிண்டே முக்கியமான ரோலில் நடிக்கிறார்.கவுதம் கிருஷ்ணா கதை,,திரைக்கதை ,இயக்கம்

6 HONEY - நவீன் சந்திரா நடிப்பில் உருவான தெலுங்குப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இது.ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,லெவன்,பிரம்மன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நவீன் சந்திரா இதில் க்ரைம் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இவருடன் திவ்யா பிள்ளை ,திவிவத்யா அகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் கட் ரசிகர்களிடையே வரவேற்புப்பெற்றுள்ளது

7. Euphoria (யுபோரியா)

இயக்குனர் குணசேகர்  இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் திரில்லர் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்  போலீஸ் ஆபீசர் ஆக வருகிறார்.நாசர்,சாரா அர்ஜூன்,பூமிகா சாவ்லா ,மேத்யூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

8. சாத்தா பச்சா-த ரிங்க் ஆப் ரவுடீஸ்


இது ஒரு மலையாளப்படம்.22/1/2026 ல் கேரளாவில் ரிலீஸ் ஆகி 30 கோடி ரூபாய் வசூல் செய்த லோ பட்ஜெட் ஹிட் படம் .இப்போது தமிழ் டப்பிஙகில் ரிலீஸ் ஆகிறது.

அர்ஜூன் அசோகன்,ரோஷன் மேத்யூ, ஆகியோர் நடிக்க அத்வைத் நாயர் இயக்கிய படம்.

இது ஒரு காமெடி கலந்த ஆக்சன் படம்.டபிள்யூ டபிள்யூ எப் மேட்ச் பார்த்த அந்தக்கால ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்

9. கில்லி மாப்பிள்ளை

விஜய் நடித்த கில்லி ரஜினி நடித்த மாப்பிள்ளை ஆகிய இரு பட டைட்டில்களையும் இணைத்து டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
என் பத்மராஜா வின் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் திவ்யா தாமஸ் ,கிரேன் மனோகர் , ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இது கிராமத்தில் நடக்கும் காதல் கதை

10.  பாடும் குயிலே .

முற்றிலும் புதுமுகஙகள் நடிக்க உருவாகும் இந்த காதல் க தையை எழுதி இயக்கி இருப்பவர்  எஸ் என் நந்த குமார்.இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட.

11 சிலம்பாட்டம்.

சிம்பு இரு வேடஙகளில் நடிக்க ,சனாகான்,சினேகா ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்க பிரபு,சந்தானம்,பொன் வண்ணன் மற்றும் பலர் நடித்த இந்தப்படம் 2008ல் வெளியான கமர்ஷியல் ஆக்சன் படம்.ரீ ரிலீஸ் ஆகிறது.வெளியான காலத்தில் பி ,சி செண்ட்டர்களில் வெற்றி பெற்ற படம்.பாடல்கள் செம ஹிட் ஆனது

12. 3 (மூன்று)

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவான இந்தப்படம் 2012ல் வெளியாகி சுமாரான வெற்றியைப்பெற்ற படம்.அனிரூத்தின் இசையில் பாடல்கள் மெகா ஹிட்.குறிப்பாக ஒய் திஸ் கொலை வெறி பட்டி தொட்டி எங்கும் பரவியது.சிவகார்த்திகேயன் இதில் காமெடியனாக வருவார்

இப்போது ரீ ரிலீஸ் ஆகிறது

நன்றி கல்கி வார இதழ் மின்னிதழ் 6/2/2026