Showing posts with label சுந்தர் சி. Show all posts
Showing posts with label சுந்தர் சி. Show all posts

Tuesday, April 10, 2012

லக்கி லுக் நானா? என் சம்சாரம் குஷ்பூ வா? மசாலா கபே ஓனர் சுந்தர் சி பேட்டி - காமெடி கும்மி

http://i.imgur.com/Qb3nh.jpg


''நான் சினிமாவைச் சந்தோஷமான அனுபவமாத்தான் பார்க்கிறேன். அழவைக்கிறதிலோ, அதிரவைக்கிறதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. ரஜினி, கமல், அஜீத்னு பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணியாச்சு. கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு 'உள்ளத்தை அள்ளித்தாமாதிரி சிரிக்கவைக்கிறதுக்காகவே ஒரு படம் கொடுக்க ஆசை. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் 'மசாலா கபே’ -  



சி.பி - அழ வைக்கறதுல உடன் பாடு இல்லையா? அண்ணே.. நீங்க நடிச்ச நகரம் படம் பாருங்கண்ணே. 

 ''விமல் - மிர்ச்சி சிவானு ரெண்டு பேரும் காமெடியில் அப்படி அசத்துறாங்க. அதிலும் சிவா பேசறது, சிரிக்கிறது எல்லாமே காமெடிதான். ஹீரோயின் அஞ்சலி. ஒரு படத்தில் அவங்க எனக்கு ஹீரோயினா நடிச்சிருந்தாங்க. 'களவாணிமூலமா மனசைக் களவாடின ஓவியா. இந்த ஜோடிகளைச் சேர்த்துவெச்சு ஒரு கதை உருவாக்கியாச்சு

சி.பி - நல்ல வேளை. நான் எப்பவும் கதையை உருவாக்குவேன்,. அதுக்குப்பிறகுதான் அதுக்கு ஏத்த கதாநாயக நடிக நடிகைகளை தேடுவேன்னு கதை விடாம உண்மையை சொல்லீட்டீங்க.. 



 பெற்றோர்கள் பாரம்பரியமா நடத்தின மசாலா கபேயைப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி நடத்தறாங்கனு கதை. நம்ம ஜனங்களுக்கு ஏற்கெனவே எவ்வளவோ பிரச்னை.


சி.பி - ஆமாண்ணே. 9 தாராவுக்கு மேரேஜ் நின்னுடுச்சு, அனன்யாவுக்கு ஆஞ்சநேயர் அல்வா அடச்சே  வடை குடுத்துட்டார்.. நாட்டுல தான் எத்தனை பிரச்சனை..  


http://flickmotions.com/addons/albums/images/877878866.jpg


 அதனால, சினிமாவுக்கு வந்து அங்கேயும் மெசேஜ் சொல்லி அவங்களை டயர்ட் ஆக்காம, முழுக்க முழுக்கச் சிரிக்கவைக்கிற மாதிரி வேலை பண்ணி இருக்கோம். இதை இந்திக்கும் கொண்டுபோக வேலை நடக்குது. என்னைப் பொறுத்த வரை ஜனங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க இருக்கிறதிலேயே பெரிய வேலை!''


சி.பி - நீங்க டைரக்டரா ஆடியன்சை சிரிக்க வெச்சீங்க, ஓக்கே ஆனா ஹீரோவா பல புரொடியூசரை அழ வெச்சுட்டீங்களே?

''நீங்களும் வடிவேலுவைக் கைவிட்டுட்டீங்களே?''

''அப்படி இல்லைங்க. எவ்வளவோ படங்களில் நானும் வடிவேலுவும் இணைஞ்சு விளையாடி இருக்கோம். அதே மாதிரியே விவேக், சந்தானம் காமெடியும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. 'மசாலா கபேகேரக்டருக்கு சந்தானம் ரொம்பப்  பொருத்தமானவரா இருந்தார். என்னோட வெற்றியில் பெரும்பங்கு வடிவேலு, விவேக், சந்தானத்துக்கு உண்டு. எவ்வளவோ காதல், ஆக்ஷன் படங்கள் செஞ்சு இருக்கேன். ஆனால், எல்லோராலும் சொல்லப்படறது, 'சுந்தர் நல்லா காமெடியாப் படம் பண்ணுவார்ங்கிறதுதானே? இதில் 'வெட்டுப்புலிங்கிற கேரக்டர் சந்தானத்துக்கு. அவருக்கு இந்தப் படம் மூலமா இன்னும் பெரிய ரீச் இருக்கும்.''


சி.பி - அண்ணே, எதுக்கு சுத்தி வளைக்கறீங்க? விவேக்குக்கு மார்க்கெட் இல்லை. வடிவேல்க்கு சான்ஸ் குடுத்தா ஆளுங்கட்சியை பகைச்சுக்கிட்ட மாதிரி ஆகிடும். மார்க்கெட்ல இப்போ நல்லா ஓடற குதிரை சந்தானம் தான். அதனால புக் பண்ணீங்கன்னு ஓப்பனா சொல்லுங்க. யாருக்குத்தெரியாம இருக்கு?

''ஏன் நடிகரா இருந்தது போரடிச்சிடுச்சா?''


சி.பி - போர் எல்லாம் அடிக்கலை, மக்களுக்கு போரடிச்சுடுச்சு 

 http://www.rameshcelebs.com/wp-content/uploads/2010/08/oviya.jpg

''தொடர்ந்து மூணு ஹிட்ஸ் கொடுத்தேன். என்னைவெச்சுப் படம் எடுத்தவங்க யாரும் இன்டஸ்ட்ரியைவிட்டுப் போகலை. ஏதாவது சில படங்கள் தோல்வி அடைஞ்சிருந்தால், அதுக்கு என்னோட அஜாக்கிரதைதான் காரணமா இருக்கும். நடிகனா நான் ரொம்ப ஆவரேஜ்தான். ஆனால், டைரக்டரா என்னோட ஹிட்ஸ் பெரிசு. இப்போதைக்கு நடிப்புக்கு சின்ன பிரேக். நல்ல கதை கிடைச்சா கண்டிப்பா அது தொடரும்!''


சி.பி - ஆண்டவா! சுந்தர் சிக்கு நல்ல கதை மட்டும் சிக்கிடக்கூடாது.. ஹீரோவா நடிச்சு கொலையா கொல்லுவாரு.. அதை மட்டும் நீ பார்த்துக்கோ. அவர் டைரக்ட் பண்ற படத்தை நாங்க பார்த்துக்கறோம். 
''குஷ்பு அரசியலில் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?''


சி.பி - அதுல அவருக்கு என்ன கஷ்டம்? லாபம் தான்./. அரசியல் பின்புலம் உள்ளவரோட கணவர் என்பதில் க்ர்த்து தான். அடிக்கடி சம்சாரம் கூட்டம், பிரச்சாரம்னு வெளீல கிளம்பிடுவார்,.. சல்லை விட்டதுன்னு இவர் ஜாலியா இருக்கலாம்.. 
''அது அவங்க இஷ்டம். அவங்க எதைச் செஞ்சாலும் சிறப்பா செய்வாங்க


சி.பி - ஹி ஹி ஹி.. நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.. 



 அவங்க செயல்பாடுகள்ல தலையிடுறது என் வேலை இல்லை. கணவரா இருந்திட்டால் எல்லாத்திலும் தலையிட்டு கருத்துச் சொல்லணும்கிற அவசியம் இல்லையே?''



சி.பி - இந்தக்காலத்துல எந்த சம்சாரம் தான் புருஷன் கருத்தை மதிக்குது? ஹூம்.  

''என்ன இருந்தாலும் குஷ்பு கணவர்னுதானே நீங்க அறியப்படுறீங்க?''


சி.பி - இப்படியா பப்ளிக்கா கேட்கறது? அண்ணன் ரொம்ப யோசிக்கறார் பாருங்க.  


http://i.imgur.com/7oErB.jpg
''நான் டைரக்ட் பண்ற 25-வது படம் 'மசாலா கபே’. 11 படங்களில் ஹீரோவா நடிச்சிட்டேன். ஆனாலும், எங்கே போனாலும் தமிழ் மக்கள் என் கையைப் பிடிச்சிட்டுக் கொண்டாடுறது 'குஷ்பு புருஷன்னு சொல்லித்தான். நான் சினிமாவில் நுழையும்போது, குஷ்பு பெரிய ஹீரோயின். ரஜினி, கமல்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளோடு நடிச்சிட்டாங்க. அப்போ நான் புது டைரக்டர். இவ்வளவு படம் செய்யப்போறேன்னு அன்னைக்குத் தெரியாது. ஆனாலும், என்னைக் காதலிச்சுக் கணவரா ஏத்துக்கிட்டாங்க


சி.பி - ஓஹோ.. வாழ்க்கை கொடுத்துட்டரா? குட் வெரி குட்
குஷ்பு செஞ்சதுதான் பெரிய தியாகம். அதுக்காக என்னைக் 'குஷ்பு புருஷன்னு சொல்றதை அழகா ஏத்துக்கிட்டுப்போறேன். குஷ்புவுக்காக இந்தச் சின்ன தியாகத்தைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?''


சி.பி - நீங்க தியாகியா? அவர் தியாகியா?ன்னு போகப்போகத்தெரியும். இந்த பூவின் வாசம் புரியும்.  



http://123tamilforum.com/imgcache2/2012/04/DSC_0289-1.jpg


டிஸ்கி - சுந்தர் சி பேட்டில அவர் ஃபோட்டோவையும் காணோம்.. அவர் சம்சாரம் ஃபோட்டோவையும் காணோம் என யாரும் அங்கலாய்க்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. பை மசாலா கஃபே ஸ்டில்ஸ் ரசிகர் மன்றம் ஹி ஹி

Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/