Showing posts with label சினிமா.அனுபவம். Show all posts
Showing posts with label சினிமா.அனுபவம். Show all posts

Sunday, May 08, 2011

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க..