Friday, June 12, 2026

இரு துருவங்கள் அஷ்டாவதானி டி ராஜேந்தர் vs திரைக்கதை மன்னர் கே பாக்யராஜ்

 



தமிழ் சினிமாவில்  எப்போதும்  இரு துருவங்களின் ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும் . எம் ஜி ஆர் -சிவாஜி , ரஜினி-கமல் , விஜயகாந்த் -சத்யராஜ் , கார்த்திக்- பிரபு ,அஜித் -விஜய் , சிம்பு - தனுஷ்   என்று  பட்டியல்  நீண்டு கொண்டே  இருக்கும் . ஆனால் எய்ட்டீஸ்  கிட்ஸ் க்குத்தெரிந்த  இன்னொரு  முக்கிய ஜோடியைப்பற்றித்தான்  இந்தக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம் . அதுதான்  டி ராஜேந்தர் - கே  பாக்யராஜ் . இருவரும்  கிட்டத்தட் ட  ஒரே  காலக்கட்டத்தில்தான் உதயமானார்கள் .ஆனால்  இருவரது பட வசூல்  ரஜினி - கமல் படங்களுக்கு இணையாக  இருந்தன .சில  படங்கள்  ரஜினி  பட வசூலை மீறின .,

அஷ்டாவதானி ,தன்மான சிங்கம் ,சகலகலா வல்லவர்  என்ற  பட்டங்களைப்பெற்ற டி ராஜேந்தர் கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்க் ,டைரக்சன் , தயாரிப்பு   என  எட்டு துறைகளைக்கையாண்டதால் அஷ்டாவதானி  என்ற   பட்டம்  பெற்றார் . இவர் ஆஞ்சனேய  பக்தர் . இவருக்கு  ஒரு சென்ட்டிமென்ட்  உண்டு . தனது பட டைட்டில்கள் 9 எழுத்துக்களில்  வருமாறு  அமைப்பார் .

தமிழ்  சினிமாவில்  தனி மனித ஒழுக்கம்  கடைபிடிக்கும்  , கடை பிடித்தவர்கள் மூன்றே  பேர் தான் . 1  சிவக்குமார்  2 நம்பியார்  3 டி ராஜேந்தர். இந்த  மூவர்  பட்டியலில்  மற்ற  இருவருக்கும்  இல்லாத தனிச்சிறப்பு டி ராஜேந்தர்க்கு  உண்டு . தனது படங்களில்  நாயகியைத்தொட்டுக்கூட  நடிக்க மாட் டார். அது  டூயட்   சீனாக இருந்தாலும்  சரி , கன்னத்தில்   பளார்   என அறையும்  சீனாக இருந்தாலும்  சரி  நடிகையைத்தொட  மாட்டார். இது  போல  நாயகியைத்தொடாமல்   நடிக்கும்  நடிகர்  இந்திய அளவில்  ஏன் ? உலக அளவில் வேறு யாரும் இல்லை.

 இவரது  படங்களில்  பெரும்பாலும்  அண்ணன் - தங்கை சென்ட்டிமென்ட்  சீன்   இருக்கும்  . பாடல்  காட் சிகளில்  பிரம்மாண்டமான செட்  போடுவார் . ஷங்கர் , ராஜமவுலிக்கெல்லாம் இந்த விஷயத்தில் இவர் முன்னோடி  .இவர் எம் ஏ தமிழ் பட்டதாரி என்பதால் இவர்  படங்களில் அடுக்கு மொழி வசனம் விளையாடும்.

காதல் தோல்வி ,காதலை சொல்லத்தயக்கம் இந்த இரண்டு உணர்வுகளும் இவரது படங்களில் அதிகமாகக்கையாளப்பட்டிருக்கும்
.

இவரது முதல் படம் இவருக்கு டைட்டிலில் அங்கீகாரத்தைத்தரவில்லை.தயாரிப்பாளர் இ எம் இப்ராஹிம் தனது பெயரை இயக்குநர் எனப்போட்டுக்கொண்டார்.அக்ரீமெண்ட் அப்படி.டி ஆர் க்கு வேறு வழி இல்லை.வாய்ப்புக்கிடைத்தால் போதும் என்று இருந்த கால கட்டம்.
திரைக்கதை,இயக்கம்,தயாரிப்பு. இப்ராஹிம் எனவும். கதை,வசனம்,பாடல்கள் டி ராஜேந்தர் எனவும் டைட்டிலில் வந்தாலும் அனைத்தும் டி ஆர் தான்.




1 ஒரு தலை ராகம் 1980- நாயகன் நாயகியை விரும்புகிறான்.நாயகிக்கு நாயகனைப்பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாத குடும்ப சூழல். க்ளைமாக்சில் நாயகி காதலிக்க முடிவெடுத்து நாயகனைப்பார்க்க வரும்போது நாயகன் இறந்திருப்பார்.சோகமான க்ளைமாக்ஸ் தான் என்றாலும் ரசிகர்களைக்கவர்ந்தது.

நாயகன்,நாயகி ஆக சங்கர் -ரூபா நடிக்க நாயகியின் தோழி ஆக உஷா நடித்தார்.இவரைத்தான் டி ஆர் நிஜ வாழ்வில் காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். ( இந்தப்படத்தில் நடித்த ரவீந்ததன் தான் உஷாவை முதலில் காதலித்தார்.ஆனால் பின்னாளில் கை விட்டு விட்டார்)

இந்தப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் பாடல்கள்,இசை தான்.

அனைத்துப்பாடல்களும் மெகா ஹிட்.காலேஜ் மாணவர்களின் தேசிய கீதம் ஆனது.
இந்தப்படத்தில் பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களே இல்லை.அனைத்தும் ஆண் குரல் பாடல்களே.

டி எம் சவுந்தர் ராஜன் பாடிய இரு பாடல்கள் செண்ட்டிமெண்ட்டாக  அவரது மார்க்கெட்டையே முடித்து விட்டதாக அவரே குறிப்பிட்டார்.அந்தப்பாடல்கள்

1 நான் ஒரு ராசி இல்லா ராஜா
2 என் கதை முடியும் நேரம் இது

இவை போக 

3 கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
4 இது குழந்தை பாடும் தாலாட்டு
5 மன்மதன் ரட்சிக்கனும்
6 கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
7 வாசமில்லா மலரிது வசந்தத்தைத்தேடுது


இந்தப்படம் ரிலீஸ் ஆன போது ஒரு வருடம் ஓடியது.சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது..தெலுங்கில் பஞ்சதார சிலகா (1999) என ரீ மேக் செய்யப்பட்டது

++++++++±++
ஈரோடு மாவட்டம் கோபி  அருகே வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் கே பாக்யராஜ்.இவரது அம்மா அரசு மருத்துவமனை நர்ஸ்.இவரது பள்ளித்தோழர் ஆர் சுந்தர் ராஜனின் உதவுயுடன் சென்னை வந்தவர் பாரதி ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார்.

இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் மன்னர் என்று பெயர் பெற்றவர்.ஜனரஞ்சகப்பட இயக்குநர் என்ற பட்டம் பெற்றவர்.முந்தானை முடிச்சு படத்தின் அதிரி புதிரி வெற்றியால் எம் ஜி ஆரால். கலை வாரிசு என அறிவிக்கப்பட்டவர்.இவரது படங்களில் கணவன் ,மனைவி உறவு மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும்.

இவர் படங்களில் காமெடி அதிகம் இருக்கும்.இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.பாரதிராஜாவுடன் 5 படங்கள் பணியாற்றிய பின் தனியே இயக்கிய முதல் படமே மெகா ஹிட்




 
1. சுவரில்லாத சித்திரங்கள் 1979  

30/11/1979 அன்று வெளியானது.கங்கை அமரனின் இசையில் காதல் வைபோகமே காணும் நன்னாளிலே செம ஹிட் பாட்டு.

கவுண்டமணியின் காமெடி டிராக் உண்டு.சரோஜா குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்ற வசனம் அப்போது மிகப்பிரபலம் ஆனது.

சாதாரண கிராமத்துக்காதல் கதை தான்.வறுமையில் இருக்கும் நாயகனின் எளிமையான காதல் கதை இது.

ஹீரோ என்றால் எல்லோரையும் அடித்து வீழ்த்துவார் என்னும் பிம்பத்தை உடைத்து அப்பாவித்தனமான முகத்துடன்  காமெடி வசனங்களை வைத்து மக்கள் மனம் கவர முடியும் என்று நிரூபித்தார்.

சுதாகர் ,சுமதி,காந்திமதி,கல்லாப்பட்டி சிங்காரம் ,கவுண்டமணி  மற்றும் பலர் நடித்த இந்தப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 100 நாட்கள் ஓடின



இரு படங்களையும் ஒப்பிடும்போது ஒரு தலைராகம் பிரம்மாண்ட வெற்றி.சுவர் இல்லாத சித்திரஙகள் வெற்றிப்படம்



தொடரும்

Wednesday, June 10, 2026

Madhuvidhu (2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா)@சோனி லைவ்

 





லோ பட்ஜெட்டில் உருவாகி யாரும் எதிர்பாராத வண்ணம் மெகா ஹிட் ஆகி 12 கோடி வசூல் செய்த படம் இது.படத்தின் மொத்த பட்ஜெட்டே 80 லட்சம் ரூபாய் தான்.


  மதுர மனோகர மோகம்(2023) என்ற காமெடிப்படத்தில் உதவி திரைக்கதை ஆசிரியர் ஆகப்பணி ஆற்றிய ஜெய் விஷ்ணு + ஸ்டெபி சேவியர் தான் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள்.நம்ம ஊர் கிரேசி மோகன் போல காமெடி சீக்வன்ஸ் அமைப்பதில் வல்லவர்.அடிப்படையில் இவர் ஆடை வடிவமைப்பாளராகத்தான் முதலில் பணி ஆற்றினார்.   விஷ்ணு அர்விந்த் தான் படத்தின் இயக்குநர்.       


23/4/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடியில் 22/5/2026 முதல் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது      


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின் அம்மா பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.அப்பா தான் எல்லாம்.அப்பாவுக்கு ஒரு தம்பி உண்டு.நாயகனுக்கு ஒரு தம்பி உண்டு.அதாவது நாயகன்,நாயகனின் தம்பி ,நாயகனின் அப்பா,நாயகனின் சித்தப்பா என்று நான்கு ஆண்கள் மட்டும் தான் இந்த வீட்டில்.


நாயகனுக்குப்பெண் தேடுகிறார்கள்.எதுவும் அமையவில்லை.இதுவரை 28 முறை முயற்சித்தும் ஒரு பெண்ணும் செட் ஆகவில்லை.பெண் யாரும் இல்லாத வீட்டில் பெண் கொடுக்க யோசிக்கிறார்கள்.அது போக இந்த வீட்டில் பெண் கொடுத்தால் பெண் இறந்து விடுவாள் என்ற மூட நம்பிக்கையும் ஒரு காரணம்.

நாயகன் நாயகியைப்பார்க்கிறான்.பழகுகிறான்.காதல் கொள்கிறான்.பெண் பார்க்கும் படலம் நடக்கிறது.இங்கே தான் ஒரு ட்விஸ்ட்.

நாயகியின் அப்பாவின் முன்னாள் காதலிதான் நாயகியின் அப்பாவின் தங்கை.அவளுக்குத்திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உண்டு,ஆனால் கணவன் இல்லை.

துணை இல்லாத இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நாயகியின் குடும்பத்துக்கு அதிர்ச்சி.

இதனால் நாயகியை நாயகனுக்கு மணம் முடிக்க நாயகியின் அப்பா மறுக்கிறார்.

இந்த சமயத்தில் நாயகனின் சித்தப்பாவுக்கும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.அவரும் திருமணம் செய்து கொள்கிறார்.

இப்போது வீட்டில் அப்பா ,சித்தப்பா இருவரும்  அவரவர் ஜோடியுடன் இருக்க நாயகன் தனிமையில் இருக்கிறார்.

இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக ஷராப்யுதீன் காமெடி சென்ஸ் உடன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.இவருக்கு இயல்பாகவே காமெடி சப்ஜெக்ட் ஆக அமைவது பிளஸ்.

நாயகி ஆக கல்யாணி பணிக்கர் இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக ஜெகதீஷ் பட்டையைக்கிளப்பி இருக்கிறார்.தாடி கெட்டப்புடன் இருக்கும் இவர் முன்னாள் காதலியை சந்தித்த பின் க்ளீன் ஷேவ் முகத்துடன் வருவது கலகல.


நாயகியின் அப்பாவாக சாய் குமார் நடித்திருக்கிறார்.கண்டிப்புக்கலந்த குணச்சித்திரக்கதாபாத்திரம்.

நாயகனின் அப்பாவின் முன்னாள் காதலியாக அதாவது நாயகியின் அத்தை ஆக ஸ்ரீஜெயா நாயர் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாயகனின் தம்பி ஆஜ அஜீஸ் நெடுமங்காடு , நாயகனின் சித்தப்பாவாக அமல் ஜோஸ் ஆண்ட்டனி நடித்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் காமெடி டிராக் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

நாயகி கல்யாணி பணிக்கரின் நிஜ அம்மா பிந்து பணிககர் மகப்பேறு மருத்துவர் ஆக கெஸ்ட் ரோலில்  வருகிறார்.

படத்தில் பங்கு பெற்ற மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.


ஹேசம் அப்துல் வகாப்பின் இசையில் எட்டுப்பாடல்கள்.4 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் ஆனவை.பின்னணி இசையும் ஓக்கே ரகம்.

விஸ்வஜித் ஒடுக்கத்தில் தான் ஒளிப்பதிவு.நாயகி உட்பட அனைத்துபெண்களையும் க்ளோசப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்.

கிறிஸ்டி செபாஸ்டியனின் எடிட்டிங்கில் படம் 134 நிமிடங்கள் ஓடுகிறது.

பிபின் மோகன் , ஜெய் விஷ்ணு இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  படத்தை இயக்கி இருப்பவர் விஷ்ணு அர்விந்த்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் ,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி அருமை.காதல் காட்சிகள் ரசமானவை.கண்ணியம் தவறாத வகையில் காட்சிகள்.

2  யாரும் எதிரார்க்காத அந்த இடைவேளை ட்விஸ்ட்.ஒரு ரொமாண்டிக் டிராமா மூவியில் இது மாதிரி ஒரு ட்விஸ்ட் வருவது அருமை.

3  முதல் பாதி முழுக்க மிக மிக இயல்பான காமெடிக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

4  திரைக்கதையில் ஒவ்வொரு பிரச்சனை வருவதும் அதைக்காமெடியாகக்கையாண்ட விதம் அருமை.


  ரசித்த  வசனங்கள் 

1 நான் இதுக்கு முன்னால பொண்ணுங்களோட சரக்கு அடிச்சதில்லை.


நான் எப்போ சரக்கு அடிச்சாலும் ஆம்பளைங்களோட  சேர்ந்து தான் அடிப்பேன்.

2  வீட்டில் யாருமே சமைக்கறதில்லை போல .மெஸ் ,ஹோட்டல் ,ரெஸ்டாராண்ட் எங்கே போனாலும் செம கூட்டம்

3 ரொம்ப யோசித்து எடுக்கும் முடிவுகள் தான் சரியாவது இல்லை.அதனால் யோசிப்பதே இல்லை.

4 நீ லவ் பண்ற பொண்ணோட போட்டோ ?


அது வந்து...போட்டோ இல்லாத பெண் குட்டி.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 எல்லாக்காட்சிகளையும் காமெடியாகவே கொண்டு போவதால் திரைக்கதையில் ஒரு சீரியஸ்னெஸ் இல்லை.

2 ஒரு சம்பவத்துக்கு வருத்தப்படலாமா என நாம் யோசிக்கும்போதே அதைக்காமெடியாக மாற்றி விடுவதால் செண்ட்டிமெண்ட்ஸ் ஒர்க் ஆகவில்லை.

3 முதல் பாதி யில் இருந்த காமெடி பின் பாதியில் இல்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கலகலப்பான காமெடிக்காட்சிகளுடன்  கூடிய பேமிலி எண்ட்டர்டெய்னர் இது.குடும்பத்துடன் பார்க்கலாம்.ரேட்டிங் 3/5



Madhuvidhu
Directed byVishnu Aravind
Written by
  • Bibin Mohan
  • Jai Vishnu
Produced by
  • Ajith Vinayaka
  • Santhakumar
  • Malavika Krishnadas
StarringSharaf U Dheen
Kalyani Panicker
Jagadish
Saikumar
CinematographyViswajith Odukkathil
Edited byChristy Sebastian
Music byHesham Abdul Wahab
Production
companies
  • Ajith Vinayaka Films
  • Babu Ettan Films
Distributed byAjith Vinayaka Films
Release date
  • 23 April 2026
CountryIndia
LanguageMalayalam
Box office₹11.4 crore[1]


ஜூன் 5 ஓ டி டி ரிலீஸ் தமிழ் படங்கள்

 அமேசான் பிரைம்



1. கார்மேனி செல்வம்.  தமிழ். மெலோ டிராமா

2.  Every Year After. ஆங்கிலம் /தமிழ். ரொமாண்டிக் டிராமா




ஜியோ ஹாட்ஸ்டார்

3.  துரந்தர்  த ரிவஞ்ச்.  அன் கட் வெர்சன் 




நெட் பிளிக்ஸ்

   4.  MAA BEHEN   ஹிந்தி/தமிழ்.  க்ரைம் காமெடி திரில்லர்

5.      29.  தமிழ். ரொமாண்டிக் டிராமா

6.   OFFICE Romance.  ஆங்கிலம்/தமிழ். ரொமாண்டிக் காமெடி


7.    Teach you A Lesson   கொரியன் வெப் சீரிஸ். தமிழ்.  காமெடி டிராமா

8.   The Marked Woman ஆங்கிலம் /தமிழ்   திரில்லர்



ஜீ 5
9

பேட்ரியாட். மலையாளம் /தமிழ். ஸ்பை ஆக்சன் திரில்லர்
10
KD The Devil  கன்னடம் /தமிழ்   ஆக்சன் திரில்லர் 


சோனி லைவ் 
11
Gullak 5  ஹிந்தி வெப் சீரிஸ்

ஹிந்தி/தமிழ். பேமிலி டிராமா



சன் நெக்ஸ்ட்
12
த ரைஸ் ஆப் அசோகா   கன்னடம் /தமிழ். ரிவஞ்ச் திரில்லர்

Monday, June 08, 2026

பரிமளா &கோ (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)   

 



பரிமளா &கோ (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)                   


திரிஷ்யம் மெகா ஹிட் ஆனாலும் ஆனது ஆளாளுக்கு அதே டைப் கதைகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த  திரிஷ்யம் மேனியா இயக்குநர் பாண்டிராஜையும்.விட்டு வைக்கவில்லை.தன் பங்குக்கு ஒரு உப்புமா கிண்டி இருக்கிறார்.


பசங்க (2009),வம்சம்(2010),மெரீனா(2012),கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013),பசங்க 2 (2015), இது நம்ம ஆளு(2016) , கதகளி(2016), கடைக்குட்டி சிங்கம் (2018),நம்ம வீட்டுப்பிள்ளை (2019),எதற்கும் துணிந்தவன் (2022),தலைவன் தலைவி(2025) என இவரது படங்கள் அனைத்துமே வித்தியாசமான சப்ஜெக்ட் படஙகளாகத்தான் இருக்கும்,குடும்பத்துடன் பார்க்கும்படி இருக்கும்



ஸ்பாய்லர்  அலெர்ட்


மிடில் கிளாஸ் குடும்பத்தைச்சேர்ந்த நாயகன் தன் மனைவி ,இரு மகள்களுடன் சிக்கனமான வாழ்வு வாழ்ந்து வருகிறான்.


வில்லன் ஒரு ரவுடி.அந்த ஏரியாவில் போதைப்பொருள் விற்பவன்.நாயகனின் மகளிடம் லவ் பிரப்போஸ் செய்கிறான்.அவள் மறுக்கவே விலகிப்போகாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறான்.

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நாயகன் இவனைக்கொன்று போட்டால் தான் அடங்கிப்போவான் போல என தன் குடும்பத்தாரிடம் கூற  அடுத்த நாள் காலை மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்கிறான் வில்லன்.

இந்தக்கொலைக்கேசை விசாரிக்க் ஒரு போலீஸ் ஆபீசர் களம் இறங்குகிறார்.இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக ஜெயராம்,நாயகி ஆக ஊர்வசி நடித்திருக்கிறார்கள்.பஞ்ச தந்திரம் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.ஜெயராம் அடக்கி வாசிக்கும் நடிப்பு.ஊர்வசி சில இடங்களில் பிரமாதமான நடிப்பு,பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க். ஆனாலும் ரசிக்க  வைக்கிறார்.

மகள்களாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,ஆனந்திகா இருவரும் கலகலப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.இருவரும் அக்கா,தங்கையாக இருந்தும் எப்போது பார்த்தாலும் அடித்துக்கொள்வது ரசிக்கும்படி இருக்கிறது.

போலீஸ் ஆபீசர் ஆக மிஷ்கின் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.செண்ட்டிமெண்ட் சீனில் மிளிர்கிறார்.

வில்லன் ஆக சாண்டி மாஸ்டர்.இவர் டான்ஸ் மாஸ்டர் என்பதற்காக ஒரு பாட்டு ,டான்ஸ் கொடுத்திருப்பது அநியாயம்.

காமெடியன் என்ற பெயரில் யோகிபாபு மொக்கை போடுகிறார்.சரி,நமக்குப்பழகி விட்டது.

சிங்கம்புலியை,பகவதி பெருமாளை ,சென்றாயனை வீணடித்து இருக்கிறார்கள்.


பாக்சின் இசையில் 5 பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசையும் பரவாயில்லை.

ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கச்சிதம்.பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங் கில் படம் 138 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதி இழுவை.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ்




சபாஷ்  டைரக்டர்


1.  முதல் 30 நிமிடங்களில் நாயகனின் குடும்பத்தில் நடக்கும் காமெடிகள் யதார்த்தம்

2 இழவு வீட்டு சீக்வென்ஸ் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

3 மிஷ்கினின் என்கொயரி ரசிக்க வைக்கும்படி சில இடங்களில் இருக்கிறது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பின் பாதி திரைக்கதை பலவீனம்.வில்லனின் நண்பன் ,காதலி,அக்கா,அம்மா,பெரியம்மா,பாட்டி என எல்லோரையும் சந்தேக வட்டத்தில் கொண்டு வருவது கொடுமை


2 நாயகனின் குடும்பம் போலீசில் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்பே நமக்கு ஏற்படவில்லை.அது திரைக்கதையின் பலவீனம்

3  ஒரு மகள் வில்லனுடன் பழகுவது ,இன்னொரு மகள் இன்னொரு பொறுக்கியுடன் பழகுவது எரிச்சல் வர வைக்கிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டாப்பார்க்கலாம்.தியேட்டருக்குப்போய்க்காசை வீணாக்க வேண்டாம்.விகடன் மார்க் யூகம் 40,குமுதம் ரேங்க்கிங் சுமார்.ரேட்டிங் 2 / 5


Parimala and Co
Theatrical release poster
Directed byPandiraaj
Written byPandiraaj
Produced by
Starring
CinematographyGeorge C. Williams
Edited byPradeep E. Ragav
Music byFoxN
Production
companies
Lyca Productions
Tamil Kumaran Productions
Pasanga Productions
Release date
  • 5 June 2026
Running time
138 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office6.70 crore[2]

Sunday, June 07, 2026

SYSTEM(2026)-ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா)@அமேசான் பிரைம்

 

திரை அரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக        அமேசான் பிரைம் ஓடிடி யில்  வெளியாகி இப்போது தமிழ் டப்பிங்கில் 22/5/2026 முதல் காணக்கிடைக்கிறது.ஜோதிகா,சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வெளிவந்திருக்கும் இந்தப்படம் குடும்பத்துடன் காணத்தக்க லீகல் டிராமா தான்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின் அப்பா மிகப்பெரிய வக்கீல்.புகழ் பெற்ற கேஸ்களில் ஜெயித்த அவர் ஒரு கேசில் ஆஜர் ஆக ஒரு சிட்டிங்க்க்கு (ஒரு நாள் ஆஜர் ஆக) லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பிரபல வக்கீல்.அவர் ஆஜர் ஆகித்தோற்றதாக சரித்திரம் இல்லை.இதனாலேயே பல கோடீஸ்வரர்கள் ,லட்சாதிபதிகள் அவரை வக்கீல் ஆக நியமிக்க லைன் கட்டிக்காத்திருக்கிறார்கள்.

நாயகியும் வக்கீல் தான்.ஆனால் புதியவர் .நாயகியின் அப்பா நாயகியிடம் தெளிவாக சொல்லி விடுகிறார்.நீ தனியாக வாதாடி தொடர்ந்து  10 கேஸ்களில் ஜெயித்துக்காட்டு.அப்புறம் என் சாம்ராஜ்யத்தில் உன்னை ராணி ஆக்கி விட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்கிறார்.நாயகியும் அதற்கு சம்மதித்துத்தனியாகக்கேஸ்களில் வாதாடுகிறார்.


வில்லி அதே கோர்ட்டில் ஒரு ஸ்டெனோ.ஜட்ஜ் தீர்ப்பை வாசிக்கும்போது அதை டைப் பண்ணுபவர்.இவர் மிக்க அனுபவம் மிக்கவர்.பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.இவரது  கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால்களை இழந்து சக்கர நாற்காலியில் காலத்தைக்கழிப்பவர்.ஒரு மகளும் உண்டு.மகள் ,கணவன் இருவரையும் பராமரிக்கும் பொறுப்பு வில்லிக்கு  உண்டு

நாயகி வில்லியிடம் ஒரு உதவி கோருகிறார்.அப்பாவிடம் போட்ட சவாலில் ஜெயிக்க 10 கேஸ்களை வெற்றிகரமாக முடிக்க வில்லி ஒவ்வொரு கேசிலும் உதவ வேண்டும்.ஆரம்பத்தில் மறுத்த வில்லி பின் சம்மதிக்கிறார்.ஒரு கேஸ்க்கு ஐடியா சொல்ல ரூ 20,000 சார்ஜ்.


வில்லியின் உதவியுடன் நாயகி வரிசையாக 9 கேஸ்கள் ஜெயித்து விடுகிறார்.10 வதாக ஒரு கேஸ் வருகிறது.


மிகப்பெரிய தொழில் அதிபர் ஒரு இளம்பெண்ணைக்கொலை செய்ததாகக்கேஸ்.அந்தப்பெண்ணும் ,தொழில் அதிபரும் நெருக்கமாக இருந்ததை அந்தப்பெண் போட்டோ ,வீடியோ எடுத்து அந்தத்தொழில் அதிபரை மிரட்டியதால் அவர் அந்தப்பெண்ணைக்கொலை செய்து தற்கொலை போல செட் பண்ணி விட்டார்.


இந்தக்கேசில் நாயகியின் அப்பா அந்தத்தொழில் அதிபரின் சார்பாக  ஆஜர் ஆகிறார்.நாயகி அதை எதிர்த்து வாதாடுகிறார்.

இந்தக்கேசில் யார் ஜெயித்தது?நாயகியா?நாயகியின் அப்பாவா?நாயகிக்கு உதவியவர் எப்படி வில்லி ஆனார்?வில்லிக்கும் இந்தக்கதையில் வரும்  ட்விஸ்ட்க்கும் என்ன சம்பந்தம் ?இதை எல்லாம் விளக்குவதே மீதித்திரைக்கதை.


நாயகி நேஹாவாக சோனாக்சி சின்ஹா பிரமாதமான உடல் மொழி ,கம்பீரத்துடன் நடித்திருக்கிறர்.

வில்லி சாரிகா ஆக ஜோதிகா நெகடிவ் ஷேடு உள்ள கதாப்பாத்திரத்தில் துணிச்சல் ஆக நடித்திருக்கிறார். 

நாயகியின் அப்பாவாக பிரபல வக்கீல் ஆக அஷூத்தோஷ் கௌவாரிக்கர் நடித்திருக்கிறார்.

முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள் போக மீதி நடித்திருக்கும் அனைவரும் அவரவர்க்குக்கொடுத்திருக்கும் வேலையை சரியாக  செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ,இசை ,பின்னணி இசை,எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.படத்தின் ரன்னிங்க் டைம் 120 நிமிடங்கள்


Bareilly ki Barfi , Nil Battery Sannata ஆகிய படங்களை இயக்கிய அஸ்வினி அய்யர்  திவாரி  என்பவர் தான் இயக்கி இருக்கிறார்

ஹர்மான் பவேஜா ,அக்சத் ஜில்டியல்,தஸ்னீம் லோகன்வாலா ஆகிய மூவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

சபாஷ்  டைரக்டர்

1  நாயகி சவாலில் ஜெயிக்கும் முதல் 2 கேஸ்களில் அவர் எப்படி ஜெயிக்கிறார் ,வில்லி எப்படி உதவுகிறார் என்று விளக்கமாகக்காட்டிய விதம் அருமை


2 நாயகிக்கும் ,அப்பாவுக்கும் இடையே ஆன எமோஷனல் பாண்டிங், வாத விவாதங்கள் சிறப்பு

3  முதல் பாதி முழுக்க கேரக்டர் அறிமுகங்கள் ,பின் பாதி சவால் கேஸ் கோர்ட் ரூம் டிராமா எனப்பிரித்துக்கொண்ட விதம் கச்சிதம்.


4 வில்லிக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்? என நாம்  யோசிக்கும் சமயத்தில் வில்லி தான் நாயகியோ என ட்விஸ்ட் கொடுத்த விதம் அருமை.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  படத்தின் முக்கிய அம்சமே அந்த பிரபல தொழில் அதிபரால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கேரக்டர் தான்.ஆனால் அந்தக்கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படவில்லை.அதனால் எமோஷனல் கனெக்ட் கிடைக்கவில்லை.

2 நாயகியின் அண்ணன் கேரக்டர் ,வில்லியின் கள்ளக்காதலன் கேரக்டர் இரண்டும் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை.

3 நாயகி அந்த தொழிலதிபர் கேசில் ஜெயிப்பது எப்படி?என்பதற்கான பிராப்பர் எவிடென்ஸ்  விஷூவலாக நமக்குக்காட்டவே இல்லை.

4  தொழில் அதிபர் செய்த தப்புக்கு தண்டனை  இல்லை ,ஆனால் செய்யாத தப்புக்கு தண்டனை  பெறுகிறான் என்ற ட்விஸ்ட் எல்லாம் சிவாஜி கணேசன் காலத்து டெக்னிக்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கோர்ட் ரூம் ட்ராமா ப்ரியர்கள் ,ஜோதிகா ரசிகர்கள் பார்க்கலாம்.பிரமாதம் எல்லாம் இல்லை.சராசரி கோர்ட் ரூம்  லீகல் டிராமா.ரேட்டிங். 2.5/5

Saturday, June 06, 2026

Panda Plan 2: The Magical Tribe (2026)-சைனீஷ் /தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் காமெடி அட்வென்ச்சர் டிராமா)@அமேசான் பிரைம்

 

ஜாக்கிசான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம்  சைனா திரை அரங்குகளில் 14/2/2026 முதல் ,அமெரிக்கத்திரை அரங்குகளில் 14/4 /2026 முதல் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் 22/5/2026 முதல் காணக்கிடைக்கிறது.


2024ம் வருடம் இதே ஜாக்கிசான் நடிப்பில் வெளியான Panda Plan  படத்தின் இரண்டாம் பாகம் இது.முதல் பாகம் பார்க்காதவர்கள் கூட இந்த இரண்டாம் பாகத்தைப்பார்க்கலாம்.இரண்டும் தனித்தனிக்கதை.

--                              


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு அதிரடிக்கதாநாயகன்.நாம் வீடுகளில் பூனைக்குட்டி ,நாய்க்குட்டி வளர்ப்பது போல் அவர் செல்லமாக ஒரு கரடிக்குட்டியை வளர்த்து வருகிறார்.அவரும் அந்தக்குட்டியும் சைனாவில் இருக்கிற ஒரு வனப்பிரதேசத்தில் இருக்கும் பாண்டா சரணாலயம் செல்கிறார்கள்.


போகும் வழியில் வழி தவறி  ஒரு பழங்குடி இனத்தவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.அந்தப்பழங்குடி இனத்துக்கு ஒரு ராணி தான் தலைமை.அவருக்கு ஒரு மகன்,மகள்.


அந்த இனத்தவர் தெய்வமாக வணங்கும் உருவ சிலையின் முக சாயல் நாயகனின் பாண்டா என்னும் குட்டியின் முக சாயலை ஒத்து இருக்கிறது.

ராணி ஒரு கல்வெட்டைப்படித்துப்பார்த்து பாண்டாவும்,அதன் தூதுவனும் இங்கே இருக்கும் மலை உச்சியை அடைந்தால் இந்த பழஙகுடி இனத்தவருக்கு வர இருக்கும் பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை அறிகிறாள்.

ராணி நாயகனிடம் தன் விருப்பத்தை சொல்கிறாள்.அதே கூட்டத்தில் ஒரு பிரிவினர் நாயகன் வருகையை விரும்பவில்லை.வில்லனை அனுப்பி நாயகனைக்கொல்ல முயல்கின்றனர்.


வில்லன் நாயகனைத்தாக்க வரும்போது தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை இழந்து விடுகிறான்.நாயகன்தான் தன் உயிரைக்காப்பாற்றியவன்.அவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என நினைத்து நாயகனை தெய்வமாக வணங்கி சேவைகள் செய்கிறான்.


வில்லனுக்கு மீண்டும் ஒரு முறை தலையில் அடிபடும்போது பழைய நினைவுகள் வந்து நாயகனைக்கொல்ல முயல்கிறான்.


நாயகன் வில்லனிடம் இருந்து தப்பித்தானா?மலை உச்சியை அடந்து அந்த இனத்தைக்காப்பாற்றினானா?என்பது மீதித்திரைக்கதை.

,

நாயகன் ஆக ஜாக்கிசான் நடித்திருக்கிறார்.71 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா?என நம்மை வியக்க வைக்கிறார்.சேசிங் சீன் ,சாண்டைக்காட்சிகளில் தன் வயதுக்கு ஏற்ற வகையில் சாகசங்கள் செய்கிறார்.

பாண்டா கரடிக்குட்டி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன் உடல் மொழி ,முக பாவனைகள் ,குறும்புகள் ரசிக்க வைக்கிறது.

ராணி ஆக வருபவர் இந்திய சீன கலப்பினப்பெண் போன்ற முக சாயல்.நன்றாக நடித்திருக்கிறார்.நாயகனை அண்ணனாக  ஏற்றுக்கொள்வதைப்பார்க்கும்போது நமக்கு அண்ணாத்த பட ரஜினி நினைவு வருகிறது.


ஏன் எனில் ராணியாக நடித்த நடிகைக்கு 25 வயது இருக்கலாம்.ஜாக்கிசான் வயசு 71. தாத்தா வை எப்படி அண்ணன் என்கிறாரோ?


ராணியின் மகன் செய்யும் காமெடி ,மகளுக்கான செண்டிமெண்ட் சீன்ஸ் கச்சிதம்.

வில்லன் ஆக வருபவர் கொடூரமான முகத்துடன் வரும்போதும் சரி ,தலையில்  அடி பட்டதும் குழந்தை ஆக மாறுவதும் சரி மாறுபட்ட இரு வேறு நடிப்பு கலக்கி இருக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ,இசை ,எடிட்டிங் ,சி ஜி ஒர்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்

லூவான் சாங்க் என்பவர் இயக்கி இருக்கிறார்.

படத்தின் ரன்னிங் டைம் 100 நிமிடங்கள்


சபாஷ்  டைரக்டர்

1. மலைப்பிரதேசங்கள் ,லாங்க் ஷாட்டில் காட்டும் அருவிகள் கொள்ளை அழகு

2 ஜாக்கி சானின் சுறுசுறுப்பு ,பாசிட்டிவிட்டி நமக்கும் தொற்றிக்கொள்கிறது

3  குழந்தைகளைக்கவரும் பாண்டா கேரக்டர்

4 பாசத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பழங்குடி இனத்தவர் முறையை மாற்றி அன்பை வெளிப்படையாகத்தெரிவிப்பது நல்லது என்பதை உணர்த்தும் காட்சிகள்.

5 வில்லன் கேரக்டர் டிசைன் ,அவர் நடிப்பு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 ஆர்மர் ஆப் காட் ,ஸ்பானிஷ் கனெக்சன் படங்களில் வருவது போல் அதிரடி ஆக்சன் சீக்வன்சை எதிர்பார்த்தால் ஏமாறுவோம்

2  பழங்குடி இனத்தவரின் ஒப்பனை ,ஆடை வடிவமைப்பு ,நடிப்பு என எல்லாமே அவதார் படத்தின் காட்சிகளில் இருந்து உருவி இருக்கிறார்கள்.

3 பாண்டா சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகள் மட்டுமே ரசிப்பார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாக்கிசான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில்லாமல் குழந்தைகளுடன் கண்டு மகிழத்தக்க படம்.ரேட்டிங் 2/5



Panda Plan: The Magical Tribe
Theatrical release poster
Chinese name
Simplified Chinese熊猫计划之部落奇遇
Directed byDerek Hui
Written byKeyang Pan
Produced byDerek Hui
Han Mei
Wei Wang
Starring
Production
companies
Distributed byHY Media
Release date
  • 17 February 2026
Running time
99 minutes
CountryChina
LanguageMandarin
Box officeUS$37.3 million[1]

Friday, June 05, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - ஜூன் 4 தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் இரண்டு தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்கு டப்பிங் படம் என மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.மூன்றும் வெவ்வேறு ஜர்னர்கள் .காமெடி டிராமா ,ஸ்போர்ட்ஸ் டிராமா,க்ரைம் திரில்லர் என மூன்றும் மூன்று விதம்.





 1. பரிமளா அண்ட் கோ.  தமிழ்  ( running time 146 minutes)

காமெடி க்ரைம் டிராமா




பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பு +இயக்கத்தில்  உருவாகி இருக்கும் காமெடி கிரைம் டிராமா மூவி இது.

திரிஷ்யம் படத்தில் ஒரு கொலையை செய்து குடும்பமே அதை மறைக்கும் கதை மெகா ஹிட் ஆனது.கமல்  நடிப்பில் பாபநாசம் ஆகவும் ரீமேக் ஆனது.

திரிஷ்யம் படத்தை கிண்டல் செய்து அதே கதையின் காமெடி வெர்சன் ஆக பரத நாட்டியம் 2 மோகினியாட்டம் என்ற மலையாளப்படம் வந்து சக்கை போடு போட்டது.

போன வாரம் ரிலீஸ் ஆன பிளாஸ்ட் படம் கூட அர்ஜூனின் குடும்பம் 6 பேரைக்கொன்று வீட்டுக்குப்பின்னால் புதைக்கும் கதை அம்சம் தான்

அதே பாணியில் அதே பாதையில் இந்தப்படத்தின் கதையும் அமைந்திருக்கிறது

பிரபல ரவுடி வர்கஷ் கொலை செய்யப்படுகிறான்.அவனைக்கொன்றது போட்டி ரவுடி கேங்கா என போலீஸ் விசாரிக்கும்போது நாயகனின் குடும்பத்தில் இருக்கும் நால்வரில் ஒருவர் தான் கொன்றிருக்க வேண்டும் என போலீசுக்குத்தகவல் கிடைக்கிறது.

நடுத்தர வயதைக்கடந்த நாயகனுக்கு மனைவி,இரு பெண் பிள்ளைகள் டீன் ஏஜ் தாண்டியவர்கள்.

போலீஸ் விசாரணையில் குடும்பத்தில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மொத்தக்கதையுமே.

இதில்  நாயகன் ஆக ஜெயராம் ,நாயகி ஆக ஊர்வசி ,மகள்கள் ஆக ஆனந்தி சனில் குமார் ,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க போலீஸ் ஆபீசர் ஆக இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார் 

காமெடிக்கு யோகிபாபு ,சிங்கம் புலி இருவரும் உண்டு

நடுத்தரக்குடும்பம் என்பதைக்காட்ட இவர்கள் வெளியிட்ட 3 நிமிட க்ளிம்ப்ஸ் செம ஹிட் அடித்தது.

அதில் ஆயுத பூஜைக்கு வீட்டைக்க்ளீன் செய்ய ஒரு பெண்  2000 ரூபாய் கேட்க நாயகன் 1000 ரூபாய்க்கு பேரம் பேசுகிறார்.நாயகி நாயகனிடம் எனக்கு 1000 ரூபாய் கொடுங்க ,நானே க்ளீன் பண்ணிடறேன் என்கிறார்.

மகள்கள் இருவரும் ஓடி வந்து நால்வரும் வேலை செய்வோம்.ஆளுக்கு தலா 500 ரூபாய் என்று டீல் பேசுகிறார்கள்.

பேமண்ட்டை அட்வான்சாகக்கேட்க அப்பா மேல நம்பிக்கை இல்லையாம்மா?என நாயகன் கேட்க 

என்னப்பா?இப்படி சொல்லிட்டீங்க?சுத்தமா நம்பிக்கை இல்லை என்கிறாள் மகள்


ட்ரெய்லரில் ரசித்த சில வசனங்கள்

1.  அவனைக்கொன்னாதான் நாம் வாழ முடியும்னா கொல்வதைத்தவிர வேறு வழி இல்லை.

அய்யய்யோ,கொலைக்கேஸ் ஆகிடாதா?

2 குடும்பத்தோட சேர்ந்து சமையல் தான் செய்வாங்க ,நீங்க கொலை கூட செய்வீங்களா?


3 கொலைகாரனுக்குப்பசிக்காதா?அவன் சாப்பிட மாட்டானா?

ஜெயில்ல உட்கார்ந்து சாப்பிடட்டும்

4 உண்மையை சொன்னா நான் உங்களைக்காப்பாத்தறேன்.

கொலை செஞ்ச நீங்கதான் ஜெயிலுக்குப்போய்டுவீங்களே?எங்களை எப்படிக்காப்பாத்துவீஙக?

5 நம்ம நால்வரில் ஒருவர் தான் கொலை செய்திருக்கோம்

பஞ்சதந்திரம் (2002) உட்பட 26 படங்களில் ஜோடியாக நடித்த ஜெயராம் ஊர்வசி இருவரும் இணையும் 27 வது படம் இது.24 வருட இடைவெளிக்குப்பின் இருவரும் இணையும் படம் இது.புத்தம் புதுக்காலை (2020) என்ற ஆந்தாலஜி வெப் சீரிசில் ஒரு கதையில்  இருவரும் ஜோடியாக நடித்தது ஒரு முழுப்படக்கணக்கில்  வராது .

இந்தப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் பரிமளா அண்ட் பேமிலி.ஆனால் டூரிஸ்ட் பேமிலி படம் வந்த பின் டைட்டில்  ஸ்வீட் ஹோம் என்று மாற்ற யோசித்து முடிவில். பரிமளா அண்ட் கோ என மாற்றி விட்டார்கள்.

வசந்த் அண்ட் கோ விடம் ஸ்பான்ஸர் பிடித்தால் வசந்த் அண்ட் கோ வின் பரிமளா அண்ட் கோ என விளம்பரம் செய்யத்திட்டம் இட்டார்கள்.பின் அது தேவைப்படவில்லை.



2. 
பெட்டி  தெலுங்கு/தமிழ். ஸ்போர்ட்ஸ் டிராமா


ராம்சரண்,ஜான்விகபூர் ,சிவராஜ் குமார் ,ஜெகபதி பாபு,திவ்யேண்டு ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியாகும் பிரம்மாண்டமான படம் இது.

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது
புஷ்பா+ டங்கல் +சுல்தான் +எம் எஸ் தோனி+ரங்கஸ்தளம். ஆகிய படங்களின் கலவை போல் இருக்கிறது.
2015ம் ஆண்டு வெளியான பூலோகம் படத்தில் இருந்தும் சில காட்சிகளை சுட்டிருக்கிறார்கள்.

சாம்பார் ,காரக்குழம்பு ,ரசம்,மோர் எல்லாவற்றையும் ஒரே அண்டாவில் கலந்து வைத்த மாதிரி மாஸ் மசாலாவாக இருக்கிறது

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்


1 ஏரியாக்காரங்களுக்குப்"பெட்டி" கோயிலில் இருக்கும் கடவுள் இல்லை,கிரவுண்டில் இருக்கும் கடவுள்

2 ஆட்டம் தாம் ல என் திமிரு

3. ஆட்டத்தில் ஜெயிப்பது எனக்கு முக்கியம் இல்லை.ஆட்டத்தில் உயிர் இருக்கனும்

4 அவனுக்கு நல்லா ஆடத்தெரிஞ்சு இருக்கலாம்,ஆனா ஆட்டுவிப்பது நாம் தான்.

நாயகன் படத்தில் கிரிக்கெட் வீரன் ஆக ,மல்யுத்த வீரன் ஆக ,ரன்னிங் ரேஸ் வீரன் ஆக மூன்று விதமான திறமைசாலி ஆக இருக்கிறான்.அவனை வில்லன் கேங் எப்படி மிஸ்யூஸ் செய்ய முயல்கிறது? அதை நாயகன் எப்படித்தடுக்குறான் என்பதே கதை  போல்  தெரிகிறது.




3. ஆட்டி.   தமிழ் 


 ஹிஸ்டாரிக்கல் க்ரைம் திரில்லர் 


மேதகு என்ற் வித்தியாசமான படம் தந்த (விடுதலைப்புலி இயக்கத்தலைவன் பிரபாகரன். வாழ்க்கைக்கதை) இயக்குநர் கிட்டு வின் மாறுபட்ட படம் இது.

இசக்கி கார்வண்ணன் (பாலம் இயக்குநர் கார்வண்ணனின் மகன்),அபி நட்சத்திரா ,காதல் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மெட்டி ஒலி புகழ் திருமுருகன் கதை ,திரைக்கதை எழுத  ,சிபி சதாசிவம் இசை அமைக்க டி கிட்டு இயக்கி இருக்கிறார்.

1970 ல் கதை நிகழ்கிறது. மதுரை மாவட்டம் கொடை மலைத்தொடரில்  டீ எஸ்டேட் நிறைந்த ஊரில் நாயகி மழலைகளுக்கு பாடம் சொல்லித்தரும்  டீச்சர் ஆக இருக்கிறார்.

என் ஜி ஓ ஆபீசர் ஆன வில்லன் அங்கே வந்து நாயகியை சீண்ட பளார் என்று அறைந்து விடுகிறாள்.பின்னொரு நாளில் வில்லன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான்.போலீஸ் இன்வெஷ்டிகேசன் செய்கிறது.
கொலையை செய்தது நாயகியா?வேறு ஒருவரா?என்பது மீதித்திரைக்கதை


ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1 பெண்களால் எழுதப்பட்ட இலக்கியமும் ,பெண்களால் தொடுக்கப்பட்ட  போர்களும் தமிழ்க்குடியில் தாம் அதிகம் இருக்கிறது.

2  தமிழ் வரலாற்றை எல்லாம் கதையாகக்கூட சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

3.  அழகு,நீ அழகோ அழகு

4. இங்கே தப்பு நடக்கலையா? இல்லை தப்பை சரியா மறைக்கிறார்களா?

5. மண்ணுக்கும் ,பொண்ணுக்கும் ஒரு பிரச்சனைன்னா அவங்க வருவாங்க,காத்தோட காத்தா கலந்திருப்பாங்க


படத்தில் வசனங்கள் தூய தமிழில் ,தெளிவான உச்சரிப்பில் வருவது ஒரு பிளஸ்.

படத்தின் டைட்டில் உடன் சப் டைட்டில் ஆக  "எங்கள் குடியில் பெண்கள் முதலாம் " அமைவது சிறப்பு.



பெட்டி தெலுங்குப்படம் ஜூன் 4 ல் ரிலீஸ்.மற்ற இரு தமிழ்ப்படங்களும் ஜூன் 5 ல் ரிலீஸ்