சஸ்பென்ஸ் கதைகள் அதிகம் வெளி வராத கால கட்டத்தில் பெரிய பிரபல நடிகர்கள் யாரும் இல்லாமல் அறிமுக நாயகர்களைக்கொண்டு எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற படம், தேங்காய் சீனிவாசன் , ஒரு விரல் கிருஷ்ணராவ் இதில் தான் அறிமுகம் ஆனார்கள் , கிருஷ்ண ராவ்க்கு பட டைட்டில் ஒரு அடையாளப்பெயர் ஆகி விட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு எஸ்டேட்டின் ஓனர் பெரிய கோடீஸ்வரர், அவருக்கு இரு மகன்கள். மகன்கள் இருவரும் பட்டணத்தில் காலேஜ் படிப்பு படிக்கச்சென்றிருக்கிறார்கள் . படிப்பு முடிந்து ஊருக்குக்கிளம்பலாமா? டூர் எங்காவது போய் வரலாமா? என இரு சகோதரர்களும் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஊரில் இருந்து தந்தி வந்து விடுகிறது . அப்பா இறந்து விட்டார் , உடனே கிளம்பி வரவும் . இருவரும் ஊருக்கு வருகிறார்கள்
எஸ்டேட்டில் ஒரு மேனேஜர் இருக்கிறார் . வீட்டில் அவர்களது ஃபேமிலி டாக்டர் இருக்கிறார்.நடந்தது தற்செயல் இயற்கை மரணமா? திட்டமிட்ட கொலையா? என்பதை மகன்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்
எஸ்டேட் மேனேஜர் ஆல்ரெடி போலீசாரால் தேடப்படு ம் குற்றவாளி. அவன் மேல பல கேஸ்கள் இருக்கின்றன. அவனைக்கையும் களவுமாகப்பிடிக்க ஒரு சி ஐ டி ஆஃபீசர் அந்த எஸ்டேட்டில் வேலைக்கு சேர்கிறார்
டாக்டருக்கு ஒரு மகள் இருக்கிறாள் . மாரடைப்பு சம்பந்தமான மருந்து ஒன்றை டாக்டரின் மூதாதையர்கள் கண்டுபிடித்ததாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள் . அதனால் சொத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர் தான் ஏதோ மருந்து கொடுத்து ஹார்ட் அட்டாக் வருவது போல் செட்டப் செய்து விட்டாரோ என மகன்கள் சந்தேகப்படுகிறார்கள் . இறுதியில் குற்றவாளி யார் என்பதைக்கண்டு பிடிப்பதுதான் மீதி திரைக்கதை
தேங்காய் சீனிவாசன் தான் சிஐடி ஆஃபீசர் , ஆள் அடையாளமே தெரியவில்லை . ஒரு விரல் கிருஷ்ணாராவ் முக்கிய ரோலில் வருகிறார்
மலேசியா ராதிகா , திலகம் , , மீனா குமாரி என நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவர்கள் நடித்திருக்கிறார்கள்
தங்கம் , சி எம் வி ராமன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத சி எம் வி ராமன் படத்தை இயக்கி இருக்கிறார். பேய்ப்படம் மாதிரி திகிலாகக்காட்சிகளைக்கொண்டு போய் பின் எல்லாம் மனித சதிதான் என ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்ப்பது அருமை
சபாஷ் டைரக்டர்
1 க்ரைம் த்ரில்லர் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்ல 3 லவ் ஜோடிகளை திரைக்கதையில் அமைத்த விதம்
2 எலும்புக்கூட்டை வைத்து வில்லன் திட்டம் போடும் காட்சிகள்
3 ஒரே ஒரு விரலை மட்டும் தனியாக எடுத்து ஜனங்களைக்குழப்புவது
செம ஹிட் சாங்க்ஸ்
- 1 மல்லிகை மொட்டு சங்கெடுத்து மங்கல இசை பாடுதம்மா
- 2 உங்கள் தேவை என்ன என்று தெரியும், இந்தப்பாவை மனசு துணை
- புரியும்
3 பதில் ஒன்று தர வந்தேன்
- ரசித்த வசனங்கள்
- 1 கிண்ணத்தில் இருக்கும் வரை தான் அது பன்னீரு , கீழே தரைல கொட்டிட்டா அது சாதா தண்ணீர் தான், அது மாதிரி தான் பெண்களீன் கற்பும்
- 2 ஓவர் குவாலிஃபிகேஷன் என்னைக்குமே ஆபத்துத்தான். , பெருமை பேசறவனாதான் அவன் இருப்பான்
- 3 ஏமாற்றும் பழக்கம் ஏழைக்குக்கிடையாது
- 4 மிஸ்! பிரமாதமா டைப் பண்ணி இருக்கீங்க, ஒவ்வொரு எழுத்தும், அச்சுல வார்த்தது மாதிரி அவளோ அழகா இருக்கு
- போங்க சார் எல்லாம் மிஷின்ல டைப் பண்ணு னதுதானே?
- இருந்தாலும் உங்க கை விரல்கள் பட்டதாச்சே?
- லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 எஸ்டேட் ஓனர் அந்த ஊரின் முக்கியப்புள்ளி. இறப்பில் சந்தேகம் என்றதும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் செய்யாதது ஏன் ?
2 தங்கச்சி , என்னை சந்தேகப்படறாங்க . அந்த கேசில் இருந்து நான் தப்பிக்க நீ அவனை லவ் பண்ணு என அண்ணன் காரன் சொல்வது வடிவேலு காமெடியான பேக்கரி எனக்கு அக்கா உனக்கு கான்செப்ட்டை நினைவுபடுத்துது
- அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
- சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் மிஸ்ட்டரி த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், இந்தக்காலத்திலும் ரசிக்கத்தக்க அளவில் தான் உள்ளது , ரேட்டிங் 2.75 / 5
| Oru Viral | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | C. M. V. Raman |
| Written by | Thangam C. M. V. Raman |
| Produced by | Salvador Fernandes |
| Starring | Krishna Rao Thengai Srinivasan |
| Cinematography | T. G. Sekar |
| Music by | Vedha |
Production company | Associate Artists |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |