Skip to content
அட்ரா சக்க

Adrasaka Web site for Tamil Hollywood movie reviews

Sunday, December 13, 2015

போர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, கமலை முந்திய தனுஷ், சந்தானம்

தனுஷ், சந்தானம், ஷாருக்கான்
தனுஷ், சந்தானம், ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம்

*
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, கமலை பின்னுக்குத் தள்ளி நடிகர்கள் தனுஷ் மற்றும் சந்தானம் முன்னேறியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ‘டாப்-100’ பட்டியலை நேற்று போர்ப்ஸ் பத் திரிகை வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு 45-வது இடத்தில் இருந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு 69-வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
கமல்ஹாசன் 46-வது இடத்தில் நீடிக்கிறார். அதே சமயம் கடந்த ஆண்டு 78-வது இடத்தில் இருந்த நடிகர் தனுஷ், இந்த ஆண்டு 37-வது இடத்துக்கு முன்னேறி ரஜினி, கமல் இருவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார்.
கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றிருந்த நடிகர்கள் விஜய் (41), அஜீத் (51) மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக நடிகர் சந்தானம் (52), ஆர்யா (80) இடம்பிடித்துள்ளனர்.
அதே சமயம் இந்த ஆண்டு ரூ.257.5 கோடி வருமானம் ஈட்டிய, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த சல்மான் கான், இந்த முறை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தஹிந்து

Hubaidh  United Arab Emirates
தனுஷ் மற்றும் சந்தானம் போன வருடம் Rollsroyce கார் வாங்கி இருகிறார்கள். அதனால் அவர்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறது.