Skip to content
அட்ரா சக்க

Adrasaka Web site for Tamil Hollywood movie reviews

Wednesday, November 25, 2015

தெறி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்-அட்லீ இயக்கத்தில் விஜய்

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 'தெறி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 'தெறி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு 'தெறி' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.


அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.
விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார். விஜய் - சமந்தா ஜோடிக்கு நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்து வருகிறார்.
இப்படத்துக்கு 'காக்கி', 'வெற்றி', 'தெறி' ஆகிய பெயர்கள் பரிசீலக்கப்பட்டு இறுதியாக 'தெறி' என்ற தலைப்பை இறுதி செய்திருக்கிறார்கள்.
ட்விட்டர் தளத்தில் 'தெறி' என்று தலைப்போடு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அ


1/விஜய் -ன் தெறி பட FL போஸ்டர் ,டிரஸ்சிங் எல்லாமே செம கலக்கல்.அட்லீ + விஜய் காம்போ வுக்கு செம ஹிட் சான்ஸ் இருக்கு.வாழ்த்து

===========

2/ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இல்லாமல் விஜய் சந்திக்க இருக்கும் முதல் 100 கோடி க்ளப் பில் சேர இருக்கும் படம் அட்லீ யின் தெறி என யூகிக்கிறேன்

===============

3/துப்பாக்கி ,கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓரளவு இப்படித்தான் இருக்கும் என யூகிக்க முடிந்த ஸ்டில்.தெறி வித்தியாசமான ஸ்டைலிஷ் ஸ்டில்.

==============