Wednesday, July 29, 2026

Concity - கான் சிட்டி(2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (பைனான்சியல் க்ரைம் திரில்லர்)

 ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2010.

சம்பவம் 1

நாயகன் ஈ பி ஆபீசல் பில் கலெக்டர் ஆக வேலை பார்ப்பவர்.தினசரி வசூல் ஆகும் தொகையை அடுத்த நாள் வங்கியில் செலுத்தி விட வேண்டும்.நாயகனுக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது.ஈ எம் ஐ கட்டச்சொல்லி நெருக்குகிறார்கள்.அப்போது நாயகனுக்குத்தெரிந்தவர் ஒரு ஐடியா சொல்கிறார்.தினசரி ஒரு லட்சம்  ருபாய் என்னிடம் கொடுத்தால் அடுத்த நாள் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயாகத்தருகிறேன்.இது போல் ஒரு மாதம் நீ ரொட்டேஷன் செய்தால் ரூ 2000 × 30 = ரூ60,000 சம்பாதிக்கலாம் என்கிறார்.


நாயகனுக்குக்கடன் பிரச்சனையால் கல்யாணம் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால் இந்தத்திட்டத்துக்கு ஓக்கே சொல்கிறார்.ஈ பி ஆபீஸ் பணத்தை ரொட்டேஷன் செய்கிறார்.


சம்பவம் 2 .காமெடியன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறான்.அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை.செக் பண்ணின டாக்டர் அம்மாவுக்குப்பெரிய வியாதி இருக்கிறது.அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொல்ல காமெடியன் பேஸ்புக்கில் பதிவு போட்டு உதவி கேட்கிறார்.பெரிய தொகை வசூலாகிறது.பணத்துடன் டாக்டரைப்பார்க்கப்போகும்போது டாக்டர் கூலாக சாரி.நான் தப்பா சொல்லிட்டேன்.அம்மாவுக்கு ஒண்ணுமில்லை என்கிறார்.உடனே காமெடியன் சரி வசூலான பணத்தை அவரவருக்கே திருப்பித்தந்து விடுகிறேன் என சொல்ல அம்மாவோ அந்தப்பணத்தை நாமே வெச்சுக்கலாம் என்கிறார்.இன்னமும் வசூல் ஆகும் வரை ஆகட்டும்.வந்தவரை லாபம் என்கிறார்.


சம்பவம் 3  நாயகி ஒரு வீணாப்போனவனைக்காதலித்து நம்பி ஏமாந்து கையில் குழந்தையுடன் இருக்கிறாள்.அவன் ஓடி விட்டான்.பொழைப்புக்கு இவர் ஒரு மாதிரி போர்ஜரி வேலை செய்கிறார்.அதாவது வீடு வாடகைக்கு  வேண்டும் என்ற நபரிடம் போக்கியத்துக்குப்பணம் வாங்குவது போல 5 லட்சம் ரூபாய் மொத்தமாக வாங்கி ஹவுஸ் ஓனருக்கு மாதாமாதம் வாடகையை இவர் கட்டி விடுவார்.அந்தப்பணத்தை ரொட்டேஷன் விடுவார்.


நாயகன்,நாயகி,காமெடியன் இந்த மூன்று பேரிடமும் பணம் எக்கச்சக்கமாக சேர்கிறது.காமெடியனிடம் 53 லட்சம்,நாயகியிடம் 85 லட்சம் ,நாயகனிடம் 10 கோடி பணம் சேர்ந்து விடுகிறது.

இப்போது காமெடியன் ,நாயகி இருவரும்  நாயகனிடம் தங்களிடம் இருக்கும் பணத்தைத்தந்து டபுள் பண்ணிக்கொடுஙக என்கிறார்கள்.


நாயகனின் நண்பர் ஒருவர் ரெகுலராக நாயகனிடம் பணம் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் ரொட்டேஷன் பண்ணுவாரே அவர் நாயகனிடம் 10 கோடி ரூபாய்  வாங்கி விட்டு சிலரால் கொலை செய்யப்படுகிறார்.நாயகன் இழந்த பணத்தை மீட்க முடியவில்லை.


நாயகன்,நாயகி,காமெடியன் மூவரும் இணைந்து ஒரு ஹோட்டல் நடத்தி செட்டில் ஆகிறார்கள்.இந்த சமயத்தில் தான் நாயகியின் மகன் கடத்தப்படுகிறான்.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை

நாயகனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார்.எப்போதும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பது ஏனோ? காமெடிப்படத்தில் ரிலாக்ஸ் ஆக நடித்திருக்கலாம்.


நாயகியாக அன்னா பென் நடிக்க அதிக வாய்ப்பில்லை.திறமையான நடிகையை வீணடித்து விட்டார்கள்.


அம்மா,மகனாக வரும் வடிவுக்கரசி ,யோகிபாபு நல்ல கெமிஸ்ட்ரி.காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.


நாயகனின் கொலீக் ஆக வரும்  விடிவி கணேஷ் நடிப்பு அருமை.கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.


ராதாரவி,அருள்தாஸ் ,சாக் ஷி வைத்யா உட்பட மற்ற அனைவரும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.


அர்விந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு குட்.ஷான் ரோல்டன் இசை ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.


ஹரீஸ் துரை ராஜ் இயக்கி இருக்கிறார்.

சபாஷ்  டைரக்டர்

1 அம்மா-மகன் ஆக வரும் வடிவுக்கரசி-யோகிபாபு காமெடி டிராக் பல இடங்களில் நன்கு ஒர்க் வுட் ஆகி இருக்கிறது.கலகலப்புக்கு கேரண்டி

2 நாயகன்,நாயகி இருவரும் ஜோடி கிடையாது,காதல் இல்லை என்பது ஏமாற்றம்தான் என்றாலும் மாறுபட்ட சிந்தனை.

3 ஓப்பனிங்க் சீனிலேயே நாயகியின் மகன் கடத்தப்படுவது,யாராக இருக்கும் என்று சிசிடிவி செக் செய்வது என பரபரப்பான காட்சிகள் நம்மை கதைக்குள் இழுக்கிறது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 சதுரங்க வேட்டை ,லக்கி பாஸ்கர் படங்களைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகித்திரைக்கதை அமைத்தவர்கள் அதில் வருவது போல் புதுப்புது ஐடியா யூஸ் செய்யவில்லை.ரிப்பீட்டாக ஒரே மாதிரிக்காட்சிகள் போர் அடிக்கிறது.

2 ஒரு பாடாவதி இ பி ஆபீசில் அவ்வளவு பணம் வசூல் ஆவதெல்லாம் காதில் பூ ரகம் தான்

3 மோசடி செய்யும் காட்சிகள் எதுவும் நம்பகத்தன்மையே இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுவராஸ்யமான ஒன் லைன் பிடித்த இந்த டீம் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டது.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.ரேட்டிங்க் 2 /5

Tuesday, July 28, 2026

அங்கீகாரம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ட்ராமா)

 அங்கீகாரம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ட்ராமா



பொதுவாக ஸ்போர்ட்ஸ் ட்ராமா என்றால் முதல் பாதித்திரைக்கதையில் நாயகன் எப்படி எல்லாம் விளையாட சிரமப்படுகிறான் என்பதையும் பின் பாதியில் தடைகளை மீறி அவன் எப்படி ஜெயித்தான் எனவும் காட்டுவார்கள்.வெண்ணிலா கபாடிக்குழு,கனா,அஸ்வினி ,ஆடுகளம்,சென்னை 28,இறுதி சுற்று,சார்பேட்டா பரம்பரை என ஒரு பெரிய பட்டியலே இடலாம்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக இதில் முதல் பாதி ஸ்போர்ட்ஸ் ட்ராமா ,பின் பாதி முழுக்க கோர்ட் ரூம் ட்ராமா என வித்தியாசமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இப்போது உலகக்கால்பந்து போட்டி நடக்கிறது.ஆனால் இந்தியா அதில் விளையாடவில்லை.காரணம் தகுதிச்சுற்றில் தேர்வாகவில்லை..இது ஏன் ?


அஜித் குமார் சமீபத்தில் வருத்தமாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் தான் கொண்டாடப்படுகிறது.மற்ற விளையாட்டுக்கள் ஓரம் லட்டப்படுகின்றன என்றார்.கார் ரேஸ் க்கு ஸ்பான்சர் கிடைக்காத வருத்தத்தில் அவர் சொன்னார்.

இந்த அரசியலை எல்லாம் தெளிவாக இந்தப்படம் பேசுகிறது.

இந்தப்படத்தின் நாயகன் பற்றி சிறப்பு செய்தி உண்டு.கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில் கேரக்டருக்காகத்தன்னை வருத்திக்கொள்வதில்  இவரும் விற்பன்னர்.சுமார் 2 ஆண்டு காலம் கடும் பயிற்சி மூலம் நிஜ ஓட்டப்பந்தய வீரராகவே மாறி இருக்கிறார்.பெயர் கே  ஜே ஆர்.அயலான் ,டாக்டர்,அறம் ,க.பெ.ரணசிங்கம் ஆகிய வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் நடிக அவதாரம் எடுத்திருக்கிறார்.

படம் எப்படி இருக்கு எனப்பார்ப்போம்.

                             


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் தூய்மைப்பணியாளரின் மகன்.தடகள விளையாட்டில் பல சாதனைகளைப்படைக்கிறான்.ஓட்டப்பந்தயங்கள் பலவற்றில் கலந்து கொண்டு ஜெயிக்கிறான்.ஆனால் தகுதி இருந்தும் காமன்வெல்த் போட்டியில் நாயகன் பங்கு பெற முடியாமல் தடுக்கின்றனர் சிலர்.இதனால் கோர்ட் படி ஏறி நியாயம் கேட்கிறான்.அவனுக்கு நியாயம் கிடைத்ததா?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக கே ஜி ஆர் அந்தக்கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.ஜிம் போய் பாடியை செம பிட் (fit)ஆக மாற்றி இருக்கிறார்.அவர் உழைப்புக்கு ஒரு சபாஷ்.

அரசுக்கு ஆதரவாக வாதாடும் அட்வகேட் ஜெனரலாக வரும் விஜி வெங்கடேஷின் உடல் மொழி,கம்பீரம்,டயலாக் டெலிவரி,நடிப்பு எல்லாமே பிரமாதம்.

ஜட்ஜ் ஆக வரும் மோகன் ராம் நடிப்பு பாந்தம்.

பயிற்சி யாளராக வரும் வசுந்தரா ,விளையாட்டுத்துறை அதிகாரியாக வரும் அஜித் ஜோஷி,ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக வரும் மன்சூர் அலிகான்  அனைவர் நடிப்பும்  அருமை.


என் உயிர்த்தோழன் புகழ் ரமா நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார்.கண் கலங்க வைக்கும் நடிப்பு.க்ளைமாக்சில் உருக்கி விட்டார்.


நாயகனின் தங்கயாக வரும் இசபெல்லா கவனிக்க வைக்கிறார் என்றால் விளையாட்டு வீராங்கனை யாக வரும் சிந்தூரி உடற்கட்டு அச்சு அசல் ஸ்போர்ட்ஸ்விமன் போலவே இருப்பது சிறப்பு.


விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.ஷான் லோகேஷின் எடிட்டிங் ஓக்கே ரகம்.

இசை ஜிப்ரான். பாடல்கள் பாஸ் ரகம்.பின்னணி இசையில் இன்னமும் ஜால வித்தை செய்திருக்கலாம்.


கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தென்பாதியான்


சபாஷ்  டைரக்டர்

1 இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா?ஹாக்கியா?என்ற விவாதத்தில் ,இந்தியாவுக்கு என  தேசிய விளையாட்டே ஒன்று இல்லை என்பதைப்பதிவு செய்த விதம் செம என்றால் அந்த விஷயம் ஜட்ஜூக்கே தெரியாத தகவல் என்பது வியப்பு.


2  வசனகர்த்தா தான் படத்தின் பெரிய பலம் .கலக்கலான வசனங்கள் கை தட்டலைப்பெறுகின்றன.

3  கிரிக்கெட் என்பது விளையாட்டே இல்லை,அது ஒரு போதை என்ற கருத்தைப்பதிவு செய்த விதம்

4 இந்தியாவில் கவனம் பெறாத விளையாட்டுக்கள் பட்டியல் என நாயகன் 35 விளையாட்டுக்களை வரிசையாக சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ்

5 இது ஒரு உண்மை சம்பவத்தின் படமாக்கம் என்பதை க்ளைமாக்சில் சொன்ன விதம் ,அந்த நபரைக்காட்டி கவுரவப்படுத்தியது அருமை.

6 நீதித்துறையில் சாதியப்பாகுபாடு. எப்படி இருக்கிறது என்பதைக்காட்டிய விதம்.

7 இயக்குநர் பா ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதைப்பறை சாற்றும் விதமாய் காட்சி அமைப்புகளில்  கவனம் செலுத்திய விதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஆவணப்படத்தின் தாக்கம் திரைக்கதையில் தெரிகிறது.இன்னமும் கொஞ்சம் கமர்ஷியலாக சொல்லி இருந்தால் வெகுஜன மக்களுக்கும் போய் சேர்ந்திருக்கும்.

2 இயல்பான கதையோட்டத்தில் க்ளைமாக்சில் சாண்டைக்காட்சி ஹீரோயிசம் செயற்கையாகத்தெரிகிறது

3 நடிகர்கள் வசனம் பேசும்போது லிப் சிங்க் செட் ஆகவில்லை.

4 வட்டார வழக்கு மொழி அங்கங்கே மாறி மாறி வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அழுத்தமான  திரைக்கதை,அட்டகாசமான வசனங்கள் ,புதுமையான கோர்ட் ரூம் வாதங்கள் என ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு உத்தரவாதம்.ரேட்டிங்க் 3./5

Monday, July 27, 2026

அஜித் குமாரின் கண்டிஷன்களால் தான் அவருக்குப்புதுப்படங்கள் புக் ஆகவில்லையா?

 அஜித்குமாரின் விடாமுயற்சி தோல்வி அடைந்தாலும் குட் பேட் அக்லி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும்,வேண்டுகோளாகவும் இருந்தது.






அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டாலும் தயாரிப்பு யார் என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

காரணம் அஜித் குமாரின் சம்பளம் இப்போது 175 கோடி ரூபாயாம்.இப்போது இருக்கும் சூழலில் அஜித் குமாரின் படம் அவ்வளவு பிஸ்னெஸ் ஆகுமா?என்பது டவுட் தான்.அதனால் சம்பளத்தைக்குறைக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒன்றரை வருடங்களாக அஜித் குமார் எந்தப்படத்திலும் புக் ஆகாமல் இருக்க இது தான் காரணம்.125 கோடியிலிருந்து 150 கோடிக்குள் சம்பளம் கேட்டால் தேவலை என பலரும் பிரியப்படுகிறார்கள்.ஆனால் அஜித் இறங்கி வருவதாக இல்லை.

காரணம் இவரது சக போட்டியாளர். விஜயின் பட சம்பளம் ரூ 200 கோடி டூ ரூ 250 கோடி.இனி முதல்வர் விஜய் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றாலும் அஜித்தின் சம்பளத்தைக்குறைத்தால் அது கவுரவக்குறைச்சல் ஆகி விடும் என்று அவர் நினைக்கிறாராம்.

பிராபிட் ஷேர் முறையில்  நடிக்கப்பெரும்பாலான நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.நடித்தோமா?சம்பளம் வாங்கினோமா?என்பது தான் அவர்கள் எண்ணம்.பிராபிட் ஷேர் என்பது ரிஸ்க்.
 

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க அஜித் குமார் புதிதாக ஒரு கண்டிஷன் போடுகிறாராம்.சம்பளத்தை துபாயில் இருக்கும் அவரது கார் ரேஸ் கம்பெனி அக்கவுண்டில் போடச்சொல்கிறாராம்.இது கொஞ்சம் ரிஸ்க் என்பதால் தயாரிப்பாளர்கள்  யோசிக்கிறார்கள்.

Sunday, July 26, 2026

ரஜினியின் சுயசரிதை புத்தகம் ரெடி?

 

சில வருடங்களுக்கு முன் எஸ் ராமகிருஷ்ணன் எழுத ரஜினி சொல்ல ரஜினியின் சுயசரிதை உருவாக்கும் முயற்சி நடந்தது.ஆனந்த விகடன் இதழில் கதாவிலாசம் ,தேசாந்திரி உட்பட பல தொடர் கட்டுரைகள் எழுதி வாசகர்களின் ஏகோபித்த வரவேற்புப்பெற்றவர் தான் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.



அதனால் ரஜினி. தன் சுய சரிதையை எழுதத்தேர்ந்தெடுத்த சரியான நபர் ரைட் சாய்ஸ் இவர் தான் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி யே அவரிடம் சுயசரிதை என்பது பொய் கலப்பில்லாத ,பாசாங்கில்லாத உண்மைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.இப்போது இருக்கும் சூழ்நிலை யில் என்னால் அப்படி இயங்க முடியவில்லை என்று சுயசரிதை முடிவை டிராப் பண்ணி விட்டாராம்


இப்போது அதே ஆனந்த விகடன் இதழில் பணியாற்றிய கார்க்கி பாவா என்பவரிடம் அந்தப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்


இணைய எழுத்தாளர் கேபிள் சங்கர் இயக்கி தொட்டால் தொடரும் என்ற படத்தில் வசனகர்த்தாவாகப்பணியாற்றியவர் தான் இந்த கார்க்கி பாவா
இவர் ஒரு விஜய் ரசிகர்.2010 முதல் 2016 வரை தீவிரமாக விஜய்க்கு ஆதரவாகவும் ,ரஜினியை கிண்டல் செய்தும்  ட்விட்டரில் (தற்போது எக்ஸ் பக்கம்)கருத்துக்களைப்பகிர்ந்தவர்.இவரை ஏன் தேர்ந்தெடுத்த்தார் ரஜினி என்பது தெரியவில்லை.

ரஜினியின் சுயசரிதை எனில் ரசிகர்கள் ஆவலாக எதிர் பார்க்கும் விஷயங்கள்

1 நடிகை லதாவை (லதா ரஜினி அல்ல) ரஜினி விரும்பினார் என்பதற்காக எம் ஜி ஆர் ரஜினியை  ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தார் என்று ஒரு வதந்தி,கிசுகிசு உண்டு.அது பற்றிய தகவல்கள் உண்டா?என்பது பெரிய எதிர்பார்ப்பு


2. ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததற்கான உண்மையான காரணம் என்ன?

3 ரஜினி அரசியலில் குதிக்க முடிவு எடுத்து பின் பேக் அடிக்க நிஜமான காரணம் கொரானாவா?ரஜினியின் உடல் நிலையா?20% வாக்கு வங்கி தான் கிடைக்கும் என்ற ரிப்போர்ட்டா?

4 அண்ணாமலை தொடங்க இருக்கும் கட்சியில் ரஜினியின் பங்களிப்பு என்ன?

இந்த கேள்விகளுக்கான விடைகள் சுதசரிதையில் தெரிய வரும்

Saturday, July 25, 2026

அனந்தன்காடு(2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (பொலிடிக்கல் ஆக்சன் திரில்லர்)

 
a

மலையாளம்,தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என விளம்பரம் செய்திருந்தாலும் இது ஒரு மலையாளப்படம் தான்.தமிழில்  டப் செய்திருக்கிறார்கள்.


முரளி கோபியின் திரைக்கதையில் ,ஜி யென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில்  ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

                              


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் கேரள மாநிலத்தின் முதல்வர்.தனது அரசியல் எதிரிகளைப்பழி வாங்க ஒரு  ஐ ஜி யுடன் சேர்ந்து கொண்டு நான்கு பேர் கொண்ட குழுவை வைத்துத்தனக்கு வேண்டாத ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளுகிறார்.

ஒரு கொலைக்கேஸ் சிபி ஐ விசாரணைக்கு வர இனிமேல் அந்த நான்கு  பேர் கொண்ட குழு இருந்தால் நமக்கு ஆபத்து என்று வில்லனான முதல்வர் நினைக்கிறார்.சிபி ஐ  விசாரணையில் அந்த நால்வரும் மாட்டினால் நாமும் மாட்டிக்கொள்வோம்.நம்மைக்காட்டிக்கொடுத்து விடுவார்கள் என நினைக்கிறார்.


நாயகன் ஒரு போராளி.1989ல் இலஙகையில்  நடந்த ஒரு கொடூரத்தாக்குதலில் தன் அம்மாவையும் ,சகோதரியையும் இழக்கிறான்.பின் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்து தமிழக ,கேரள பார்டரில்  வில்லனின் அடியாட்களான நான்கு பேர் கொண்ட குழுவில் இணைகிறான்.


வில்லனான முதல்வர் + ஐ ஜி ,நாயகன் இரு தரப்புக்கும் எப்படி மோதல் ஏற்படுகிறது? யார் ஜெயித்தார்கள் ?என்பது மீதித்திரைக்கதை


நாயகனாக ஆர்யா நடித்து இருக்கிறார்.தன் கண் எதிரே சகோதரி சிதைக்கப்படும்போதும் ,அம்மா கொலை செய்யப்படும்போதும் ஆக்ரோஷமான நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்.


வில்லனாக இந்திரன்ஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.க்ளைமாக்சுக்கு முன் வரும் ஒரு முக்கிய சீனில் அதகள நடிப்பு.


ஐ ஜி யாக சுனில் கொடூரமான இன்னொரு வில்லன் ரோல் செய்திருக்கிறார்.


நிகிலா விமல் ,சாந்தி பாலச்சந்திரன்,தேவமோகன்,முரளி கோபி ,போஸ் வெங்கட் என மற்ற நடிகர்,நடிகைகளின் நடிப்பு கன கச்சிதம்.

எஸ் யுவா தான் ஒளிப்பதிவு.இரவில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகளில் உயிரோட்டமான ஒளிப்பதிவு.


இசை அஜனீஷ் லோக்நாத்.பின்னணி இசை தெறிக்கிறது.சண்டைக்காட்சிகளை வடிவமைத்த  சக்தி சரவணனின் பங்களிப்பும் அருமை.


சபாஷ்  டைரக்டர்

1 போலீஸ் ஐஜி யைத்தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இளைஞர்கள் ஓப்பனிங்க் சீனிலேயே எதிரார்ப்பைத்தூண்டுகிறார் இயக்குநர்.

2 வழக்கமாக குணச்சித்திரக்கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இந்திரன்சை அதிரடி வில்லனாகக்காட்டியது  நல்ல ஐடியா

3 இண்ட்டர்வெல் பிளாக் சீன் அருமை.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு மாநில முதல்வர் வெறும் நான்கு பேர்கள் கொண்ட குழுவை மட்டும் நம்பி இருப்பாரா?ஆல்ட்டர்நேட்டிவ் ஆட்களே கிடைக்க மாட்டாங்களா?

2  எமோஷனல் கனெக்டே  இல்லை.யாருக்கு என்ன ஆனால் நமக்கென்ன?என்று தேமே என்று பார்த்துக்கொண்டிருக்கும் நிலை தான்.

3 யூகிக்கக்கூடிய திரைக்கதை ,அடுத்தடுத்து இப்படி தான் நடக்கும் என்று நாம் நினைப்பது போலவே காட்சிகள் நகர்வது சலிப்பு .

4 மாநில முதல்வரையும் ,போலீஸ் ஐஜி யையும் காட்டும்போது பாதுகாப்பு விஷயஙகள் எவ்வளவு பக்காவாகக்காட்ட வேண்டும்? ஏதோ ரசிகர் மன்ற உறுப்பினர் ரேஞ்சுக்குக்காட்டுகிறார்கள்.நம்பகத்தன்மையே வரவில்லை

5 மெயின் வில்லனான முதல்வரை முதலில் போட்டுத்தள்ளி விட்டு இன்னொரு ஐ ஜி வில்லனை கிளைமாக்சில் தீர்த்துக்கட்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+ வன்முறைக்காக 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒழுஙகற்ற திரைக்கதை ,எமோஷனல் கனெக்ட் ஆகாத சம்பவங்கள் இவற்றால் விழலுக்கு இரைத்த நீர் தான் இந்தப்படம். ரேட்டிங்க் 2/5

Friday, July 24, 2026

Balan: The boy (2026)- மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)

 



 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த மஞ்சு மேல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம்       தான் இந்தப்படத்தின் இயக்குநர்.ரோமாஞ்சம் (2023)    பகத் பாசில் நடித்த  ஆவேசம் (2024) ஆகிய படங்களை இயக்கிய     ஜித்து மாதவன் தான் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்.இவர் தான் நடிகர் சூர்யாவின் 47 வது படத்தின் இயக்குநர்.இந்த 2 விஷயங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது.


படத்தின் போஸ்டர் டிசைன் இது ஒரு எமிஷனல்  டிராமா,அம்மா மகன் செண்ட்டிமெண்ட் கதை என எண்ண வைத்தாலும் படத்தின் ட்ரெய்லர் கட் இது ஒரு மிஸ்ட்ரிக்ரைம் திரில்லர் என்பதை உறுதி செய்ததுடன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி கர்ப்பமாக இருக்கும்போதே ஒரு குற்றத்துக்கான சிறை தண்டனை பெற்றவர்.6 வருட சிறை வாசம் முடிந்து நாயகி தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வருகிறாள்.

தான் யார்?எதற்காக சிறைக்கு வந்தோம்?என்ற எந்த விஷயமும் வெளியுலகிற்குத்தெரியாத வண்ணம் ஒரு புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறாள்.அதற்காக நாயகி மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?என்னென்ன தடைகளை எதிர் கொண்டாள்?ஒரே இடத்தில் ஏன் நாயகியால் சர்வைவ் பண்ண முடியவில்லை.போகும் இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏன் தன் பெயரை மாற்றி சொல்கிறாள்?என்பதற்கான  விடை தான் மொத்தத்திரைக்கதையுமே.



நாயகியாக  பர்ஜானா பிரமாதமான நடிப்பு கதைக்கு ஒரு மிஸ்ட்ரியைக்கொண்டு வருவதே இவரது முகமும்,நடிப்பும் தான்.

நாயகியின் மகனாக ஆதிசேஷன் என்ற சிறுவனும்,அதே மகன் வளர்ந்த பின் முகமது வும் நடித்திருக்கிறார்கள்.கச்சிதமான நடிப்பு.ஒவ்வொரு இடம் மாறும் போதும் அம்மா புதுக்கதை சொல்வது கண்டு மகன் அம்மாவிடம் இப்போ என் பேரு என்ன?இப்போ என்ன புதுக்கதை?எனக்கேட்கும் துடுக்குத்தனம் குட்.


நாயகியும் ,மகனும் பிரிய நேரும்போது வரும் சோகம் ஒரு எமோஷனல் கனெக்டைத்தருகிறது.

போலீஸ் ஆபீசராக வரும் ஜின் பால் நடிப்பும் ,உடல் மொழியும் கச்சிதம்.

கெஸ்ட் ரோல் என்றாலும் டோவினோ தாமஸ் பங்களிப்பு அருமை.

பாட்டிக்கான கேரக்டர் டிசைன் அருமை என்றால் பாட்டியாக நடித்தவரின் நடிப்பு பிரமாதம்

படத்தில் வரும் மற்ற சின்னச்சின்ன  பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.


இசை சுஜின் ஷாம்.பிரமாதமான பின்னணி இசை படத்துக்கு பலம்

ஒளிப்பதிவு அட்டகாசம்.

சபாஷ்  டைரக்டர்

1 முதல் 30 நிமிடங்கள் ஈரானியப்படம் போல் மெதுவான திரைக்கதை ,பின் வேகமெடுக்கும் க்ரைம் திரில்லர் பாணி திரைக்கதை அருமை.

2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செம

3 நாயகியின் நடிப்பும்,அந்த சின்னப்பையனின் நடிப்பும் கனகச்சிதம்.

4 ரசிகர்களைக்கவரும் வண்ணம் ட்ரெய்லர் கட் வெளியிட்ட விதம்,வித்தியாசமான போஸ்டர் டிசைன் அமைத்த பாணி

5 பிரமாதமான ஒளிப்பதிவு.ஜெயிலுக்கு உள்ளே யும் சரி வெளியேயும் சரி ஒவ்வொரு பிரேமும் உலக சினிமாவுக்கு நிகர்.

6 பின்னணி இசையும் ,சவுண்ட் டிசைனிங்கும் கலக்கல் ரகம்.

7 கடைசி 15 நிமிடக்காட்சிகள் செம பரபரப்பு 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை யாரும் யூகித்து விடக்கூடாது என்பதற்காகவே டோவினோ தாமஸ் கேரக்டரை வைத்து ஆடியன்சைக்குழப்பிய வேலை தேவை இல்லாதது

2 முதல் பாதி பிரமாதமான திரைக்கதை அமைத்து விட்டுப்பின் பாதியில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் குழப்பமான திரைக்கதை அமைத்தது.

3 பல இடஙகளில் மெலோ டிராமா ரேஞ்சுக்கு காட்சிகளை மிக மெதுவாக நகர்த்துவது போர்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போனவருடம் வந்து செம ஹிட் ஆன எக்கோ என்ற படம் போல இதுவும் ஒரு மாறுபட்ட படமே.அருமையான மேக்கிங்க்காகவே பார்க்கலாம்.ரேட்டிங் 3/5 .இந்தப்படம் பல விருதுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டுc


Balan - The Boy
Directed byChidambaram
Written byJithu Madhavan
Produced byVenkat K. Narayana Shailaja Desai Fenn
StarringAdhisheshan K. R. Farzana Palathingal
Muhammad Zinaan
Tovino Thomas
Girish A. D.
Jean Paul Lal
CinematographyShyju Khalid
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
company
KVN Productions Thespian Films
Release date
  • 19 June 2026
CountryIndia
LanguageMalayalam

Thursday, July 23, 2026

I WILL FIND YOU (2026)- அமெரிக்கன் வெப் சீரிஸ் - விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

 I WILL FIND YOU (2026)- அமெரிக்கன் வெப் சீரிஸ் - விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்



18/6/2016 முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. 2023ல் இதே டைட்டிலில் ஹார்லன் கோபென் எழுதிய நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட  வெப் சீரிஸ் இது

மொத்தம்  8 எபிசோடுகள்.ஒவ்வொன்றும் 35 நிமிடங்கள் டூ 45 நிமிடங்கள் ஆக மொத்தம்  330 நிமிடங்கள்(ஐந்தரை மணி நேரம்)

 --

                             


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சட்டக்கல்லூரியில் புரொபசராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.மனைவி ஒரு டாக்டர்.இந்தத்தம்பதிக்கு 3 வயது மகன் இருக்கிறான்.பேஸ்பால் பேட்டால் மகனைக்கொலை செய்ததாக நாயகன் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில்  விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் பெறுகிறார்.


கடந்த 5 வருடங்களாக ஜெயிலில் தான் இருக்கிறார்.வாழ்க்கையே வெறுத்தவராக இருக்கிறார்.காரணம் மகனை இவர் கொல்லவில்லை.ஆனால் பக்கத்து வீட்டுப்பெண் இவருக்கு எதிராக சாட்சி சொல்லி இருக்கிறாள்.மகனைக்கொன்ற பேஸ் பால் பேட்டை வீட்டின் பின் புறத்தோட்டத்தில் புதைத்ததை நான் பார்த்தேன் என்கிறாள்.


இதனால் தான் நாயகனுக்கு தண்டனை உறுதி ஆனது.நாயகனின் மனைவி நாயகனின் செயலால் வெறுப்படைந்து வேறு ஒருவனைத்திருமணம்   செய்து வேறொரு ஊரில் செட்டில் ஆகி விட்டார்.


நாயகன் ஜெயிலுக்குப்போய் 5 வருடங்கள் கழித்து நாயகனின் மச்சினி ஜெயிலுக்கு நாயகனை சந்திக்க பார்வையாளராக வருகிறாள்.

மனைவியே டைவர்ஸ் வாங்கிட்டு வேற ஒரு வாழ்க்கை தேடிப்போனபின் மனைவியின் தங்கைக்கு இங்கே என்ன வேலை?என நாயகன் முதலில் மச்சினியை சந்திக்க மறுக்கிறான்.


பின் ஜெயில் அதிகாரியின் வற்புறுத்தலுக்கு இணங்க மச்சினியை சந்திக்கிறான்.மச்சினி நாயகனிடம் ஒரு போட்டோ காட்டுகிறாள்.அதில் நாயகனின் மகன் இருக்கிறான்.கொலை செய்யப்பட்டதாகக்கருதப்பட்ட மகன் உயிரோடு இருப்பதை அறிந்த நாயகன் துள்ளிக்குதிக்கிறான்.


வாழ்க்கையில் எந்தப்பிடிமானமும்  இல்லாமல் விட்டேத்தியாய் இருந்தவனுக்கு இப்போது இரண்டு விஷயங்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. 

1 இறந்து விட்டதாய்க்கருதப்பட்ட மகன் உயிருடன் இருக்கிறான்

2 தன் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுக்கு எதிராக ஒரு ஆதாரம் கிடைத்து விட்டது.


நாயகன் ஜெயிலிலிருந்து தப்பி தன் மகனை எப்படிக்கண்டு பிடித்தான்?இந்தப்பொய்க்கேசில் அவனை மாட்ட வைத்தது யார் ?என்பதெல்லாம் மீதித்திரைக்கதை.


மேலே சொன்னவை எல்லாம் முதல் 15 நிமிடங்களில். சொல்லி விடுகிறார்கள்.மீதி அஞ்சே கால் மணி நேரம் இருக்கிறது.


நாயகனாக அவதார் பட நாயகன் சாம் ஒர்த்திங்க் டன் நடித்திருக்கிறார்.அழுத்தமான நடிப்பு.


நாயகனின் மச்சினியாக பிரிட் லோயர் நடித்திருக்கிறார்.

ராபர்ட் ஹல் தான் இயக்கி இருக்கிறார்.இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.


Safe,the stranger ,gone  for good  ,hold tight,fool me once,missing you,run away இவை எல்லாம் இவர் இயக்கிய பிரபல வெப் சீரிஸ்.நெட் பிளிக்சில் இருக்கின்றன.

சபாஷ்  டைரக்டர்


1 அடையாளமே தெரியாதவண்ணம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் சிறுவனின் பிணத்துக்கும் ,நாயகனுக்கும் நடந்த டி என் ஏ டெஸ்ட்டில் அது அவரது மகன் தான் என்று உறுதியானது எப்படி? என்ற சஸ்பென்ஸ் வெளிப்படும் இடம்

2 யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

3 முதல் 30 நிமிடங்களில் கதைக்குள் நம்மை இழுத்துக்கொண்டு எமோஷனல் கனெக்ட்கொடுத்த விதம்.

4 அப்பா ,மகன் செண்ட்டிமெண்ட் சீன்கள் அருமை



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


 1 மொத்தம் ஆறு எபிசோடுகளில் முடிக்க வேண்டியதை 8 எபிசோடுகளாக இழுத்து விட்டார்கள்.

2 மெயின் கேரக்டர்களைத்தவிர பல கேரக்டர்களைப்பாதியில் அம்போ என விட்டு விட்டார்கள்

3 தேவை இல்லாமல் ஆடியன்சை சுற்றலில் விடும் காட்சிகள் உண்டு.தவிர்த்திருக்கலாம்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான ,விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட நல்ல க்ரைம் திரில்லர் இது.பார்க்கலாம்.ரேட்டிங் 3/5


I Will Find You
Promotional poster
GenreCrime drama
Created byRobert Hull
Based onI Will Find You by Harlan Coben
ShowrunnerRobert Hull
Starring
Theme music composerDanny Bensi
Saunder Jurriaans
Country of originUnited States
Original languageEnglish
No. of episodes8
Production
Executive producers
  • Robert Hull
  • Harlan Coben
  • Bryan Wynbrandt
  • Steven Lilien
  • John Weber
  • Brad Anderson
Production companiesFinal Twist Productions
I Have an Idea Productions
Netflix Worldwide Productions
Original release
NetworkNetflix
ReleaseJune 18, 2026

Tuesday, July 21, 2026

Cocktail 2 (ஹிந்தி)- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @Netflix

      

        19/6/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் நாளிலேயே 27 கோடி வசூல  செய்த படம்.


ராஷ்மிகா மந்தனா ,க்ரித்திசனான்  இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கிளாமராக நடித்திருப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு எகிறி        இருக்கிறது.


இதன் முதல் பாகம் 2012ல் வெளியாகியது.முதல் பாகமும் ,இரண்டாம் பாகமும் வேறு வேறு கதைகள்.அதனால் முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் பார்க்கலாம்.புரியும்.


இதே டைட்டிலில் 2010 ல் மலையாளத்தில்      ஒரு படம் ரிலீஸ் ஆனது.அந்தக்கதையும் வேறு.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு ரெஸ்டாரண்ட்டில் செப் ஆகப்பணிபுரிகிறார்.நாயகியும் ,நாயகனும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள்.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.இருவரும் இத்தாலி நாட்டுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள்.


இத்தாலியில் நாயகியின் தோழியை அதாவது வில்லியை சந்திக்கிறார்கள்.மூவரும் நண்பர்களாகப்பழகுகிறார்கள் 


ஒரு நாள் நாயகன் சரக்கடித்து  மப்பில் இருக்கும்போது ஒரு விஷயத்தை உளறுகிறான்.என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் கள்ளக்காதல் ஏற்பட்டால் அதை என் வாழ்க்கைத்துணைக்குத்தெரியாதவாறு மறைத்து விடுவேன்.அந்த சாமார்த்தியம் எனக்குண்டு என்று உளறி விடுகிறான்.

நாயகி இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.தன் தோழியான வில்லியிடம் ஒரு உதவி கேட்கிறாள்.நீ என் காதலனிடம் நெருங்கிப்பழகு.உன்னிடம் வழிகிறானா?ப்ரப்போஸ் செய்கிறானா?வரம்பு மீறி நடந்து கொள்ள முயல்கிறானா?என்று ஸ்ரீக் செய்து. எனக்கு ரிப்போர்ட் செய் என்கிறாள்.

வில்லியும் நாயகி பேச்சைக்கேட்டு நாயகனிடம் நெருங்கிப்பழகுகிறாள் பின் நாயகியிடம் ரிப்போர்ட் கொடுக்கிறாள்.நீ சந்தேகப்பட்டபடி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.உன் காதலன் நல்லவன் தான் என சர்ட்டிபிகேட் கொடுக்கிறாள்.

ஆனால் நாயகிக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நீ அவனிடம் இன்னமும் நெருங்கிப்பழகு என்கிறாள்.

வில்லியும் நாயகனிடம் நெருங்கிப்பழகுகிறாள்.இப்போது ஒரு விபரீதம் நடக்கிறது.நிஜமாகவே நாயகனும் ,வில்லியும் காதலிக்கத்தொடங்கி விட்டார்கள்.

இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக சாகித் கபூர் ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.வீரா ரஜினி மாதிரி காத்து வாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதி மாதிரி,இரட்டை வால் குருவி மோகன் மாதிரி இரு பெண்களைக்காதலிக்கும் கேரக்டர். என்பதால் அந்தக்கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்.


நாயகியாக ராஷ்மிகா மந்தனா துடுக்குத்தனமான நடிப்பு.நாயகனிடம் கொஞ்சிப்பேசுவது ,டக்கென்று வில்லியிடம் டாஸ்க் கொடுப்பது என முகபாவனைகளை டக் டக் என மாற்றுவது அருமை.


வில்லியாக கிரித்திஷெனான் நடிப்பிலும் சரி ,கிளாமரிலும் சரி போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்.


ப்ரித்தம் இசையில் 6 பாடல்கள்.அவற்றில் மூன்று ஹிட். குறிப்பாக தும் ஹி ஹோ பந்து பாடல் செம ஹிட்.பின்னணி இசையும் அருமை.

சந்தானகிருஷ்ணன் ,ரவிச்சந்திரன் இருவரும் கலர்புல்லான போட்டோகிராபி செய்திருக்கிறார்கள்.

அக்சரா பிரபாகர் எடிட்டிங் கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது.


லவ் ரஞ்சன்  எழுதிய கதைக்கு  தருண் ஜெய்ன் ,லவ் ரஞ்சன் இருவரும் திரைக்கதை அமைக்க இயக்கி இருக்கிறார் ஹோமி அதஜானியா


சபாஷ்  டைரக்டர்

1 விஷூவல் ட்ரீட் என்று சொல்லலாம்.ஒளிப்பதிவாளருக்குக்கொண்டாட்டம்.இத்தாலி நாட்டில் திராட்சைத்தோட்டத்தைக்கவர் பண்ணிய விதம்,நாயகி ,வில்லி இருவருக்குமான கிளாமர் போர்சனை கவர் செய்த அழகு அருமை.

2.  பாடல்கள் ,லொக்கேஷன் ,நாயகி,வில்லி என படம் கலர்புல்லாக  இருக்கிறது

3 வில்லியையும் காதலிக்கிறாயா?என்று நாயகி கேட்கும்போது நாயகன் சொல்லும் பதிலில்  நேர்மை..புதுசா ஒண்ணைப்பார்க்கும்போது மனம் அந்தப்பக்கம் சாயும் என்பது உண்மை தான் ,ஆனால் உன்னிடம் கொண்டது சின்சியர் லவ்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 படத்தின் மையக்கரு 2008ல் வெளியான விக்கி கிறிஸ்டினா பர்சிலோனா (Vicky Cristina Barcelona)படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார்கள்,ஆனால் அதற்கான கிரெடிட்டை டைட்டில் கார்டில் தரவில்லை.


2 படம் முழுக்க நாயகன்,நாயகி,வில்லி மூவரும் லொடலொடவென பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.போர் அடிக்கிறது.

3 நாயகி மாதிரி மடத்தனமாக யாரும் யோசிக்கவே மாட்டார்கள்.பஞ்சையும் ,நெருப்பையும் பக்கத்து பக்கத்தில் வைத்து டெஸ்ட் பண்ணுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி

4 பின் பாதியில் யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பு.புதிதாக எதுவும் இல்லை.ட்விஸ்ட் என்றெல்லாம் எதுவும் இல்லை.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-   18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி ஜாலி ,காமெடி ,கககலப்பு ,பின் பாதி இழுவை .லொக்கேஷன் ,கிளாமருக்காகப்பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5



Cocktail 2
Theatrical release poster
Directed byHomi Adajania
Written by
Story byLuv Ranjan
Produced by
Starring
CinematographySanthana Krishnan Ravichandran
Edited byAkshara Prabhakar
Music byPritam
Production
companies
Distributed byJio Studios
Release date
  • 19 June 2026
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹150 crore[2][3]
Box office₹65.06 crore[4]

Monday, July 20, 2026

எங்கள் தங்கம் (2026)-தமிழ் - Maa Inti Bangaram (தெலுங்கு) -சினிமா விமர்சனம் (பேமிலி ஆக்சன் டிராமா)- @JIO HOT STAR

 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த  பாட்சா(1995) படம் ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படம்.அந்தப்படத்தின் பார்முலாவில்    கட்டா குஸ்தி(2022) படத்தின் திரைக்கதை அமைப்பில் சமந்தா விஜயசாந்தி       மாதிரி ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் தெலுங்கில் மா இண்ட்டே பங்காரம்.தமிழ் அர்த்தம் எங்கள் வீட்டுத்தங்கம்.தமிழ் டப்பிங் பட டைட்டில் எங்கள் தங்கம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் காலகட்டம் 1990.ஒரு பாரம்பரியம் மிக்க கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகப்போகும் நாயகிக்குக்குடும்பத்தில் போதிய வரவேற்பு இல்லை.காரணம் நாயகியின் காதல் திருமணம்.நாயகிக்கும் ,அந்தக்குடும்பத்துக்கும் எப்படி செட் ஆகிறது என்பதைக்காமெடியாக முதல் பாதியில் சொல்லி இருக்கிறார்கள்.


நாயகிக்கு ஒரு முன் கதை இருக்கிறது.அது யாருக்கும் தெரியாது.முன் விரோத வில்லன்களால் நாயகியின் இப்போதைய குடும்பத்துக்கு ஆபத்து நேர இருக்கும்போது ஆபத்பாந்தவியாய் நாயகி ஆக்சன் அவதாரத்தில் இறங்கிக்கலக்குவது தான் மீதித்திரைக்கதை.


நாயகியாக சமந்தா குடும்பத்துப்பெண்ணாக பாந்தமாக வரும்போதும் சரி ,ரிவால்வர் ரீட்டாவாக ட்ரான்ஸ்பர்மேசன் ஆகி ஆக்சனில் கலக்கும்போதும் சரி மனதில் பதிகிறார்.சமந்தாவின் உச்சபட்ச அழகு கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வந்த நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் வெளிப்பட்டது.


மெருகேற்றிய தங்கம் போல் அதில் ஜொலிப்பார்.ஆனால் இந்தப்படத்தில் அந்த அளவு அழகு இல்லை என்றாலும் ஜிம் போய் எக்சசைஸ் எல்லாம் செய்து பாடியை பிட் (fit)ஆக வைத்திருக்கிறார்.பாராட்டலாம்.

வில்லனாக குல்சன் தேவய்யா மிரட்டியிருக்கிறார்.

நாயகியின் மாமனார்,மாமியார் ஆக  திருடா திருடா புகழ் ஆனந்த் ,கவுதமி நடித்திருக்கிறார்கள்.பாராட்சிம்படியான குணச்சித்திர நடிப்பு.

இவர்கள் போக திகந்த் மன்சாலே,மஞ்சுசா போன்றோர் நடிப்பும் அருமை.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம்.பிஜி எம் தெறிக்கிறது


ஆர்ட் டைரக்சன் பிரமாதம்.1990 கால கட்டத்தில் வரும் கார் ,ரேடியோ என எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ,எடிட்டிங் ,சவுண்ட் டிசைனிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்


கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். பெண் இயக்குநரான  நந்தினி ரெட்டி


சபாஷ்  டைரக்டர்

1 முதல் பாதியில் நாயகியின் அப்பாவித்தனமும் ,இண்ட்டர்வெல் பிளாக்கில் கோயிலில் சாதா நடை நடந்து வருபவர் திடீர் என ட்ரான்ஸ்பர்மேசன் ஆகி கெத்தாக நடந்து வரும் சீன் அதகளம்.தியேட்டரில் விசில் பறந்தது.பாட்சாவில்  ரஜினி என் பேரு மாணிக்கம்,எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற  மாஸ் சீனுக்கு நிகரான சீன் இது.

2 இண்ட்டர்வெல் பிளாக் சீனில் நாயகியும் ,வில்லனும் சந்திக்கும் சீனில் பத்ரகாளி அம்மன் சிலையை சிம்பாலிக்காக மேட்ச் பண்ணிக்காட்டிய விதம் கலக்கல் ரகம்.

3  ஒரு இக்கட்டான சூழலில் நாயகியின் மாமனார் வீட்டுக்கு மகாலட்சுமிதான் வரனும்னு இல்லை,காளிகாம்பாளும் வரலாம் என டயலாக் சொல்லும் இடம் கச்சிதம்.

4 முதல் பாதியில் கதையோடு ஒட்டி வரும் காமெடிக்காட்சிகள்,வசனங்கள் அருமை.

5 உன் ஜாதி என்ன?என நாயகியிடம் கேட்கும்போது என் பேரு ஸ்வர்ணா ,வேற என்ன இருக்கு சொல்ல?என பதில் சொல்வது சுபாஷ் ரகம்.

6 பஸ்சில் நடக்கும் சண்டைக்காட்சி,வீட்டில் துப்பாக்கியை செட் பண்ணி லோடு பண்ணும் காட்சி செம

7 நாயகியின் ஆக்சன் சீக்வென்சுக்கு மட்டும் வரும் துள்ளலான பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் அக்மார்க் முத்திரை.

8 நாயகியின் தோழி கேரக்டர் ,சமையல் காமெடி,கோயிலில் வரும் சீக்வன்ஸ்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1 கொடூரமான வில்லன் ஒருவன் இருக்கிறான்,எல்லா அட்டூழியங்களும்  செய்கிறான்,ஆனால் போலீஸ் என்ன செய்கிறது?என்ன ஆக்சன் எடுத்தது? பதில் இல்லை.

2 எ லாங்க் கிஸ் குட் நைட் (1996) படத்தின் உல்டா வெர்சன் தான் இது.அதில் நாயகி கத்தியைக்கையாள்வதில் நிபுணி,இதில் துப்பாக்கி ஸ்பெஷலிஸ்ட்.அவ்ளோ தான் வித்தியாசம்.ஆனால் டைட்டிலில் அதற்கான கிரெடிட் தரப்படவில்லை.

3 இண்ட்டர்வெல் பிளாக்  சீன் உட்பட சில காட்சிகள் ரஜினி யின் பாட்சா ,கட்டா குஸ்தி ,பிளாஸ்ட்ஆகிய படங்களை நினைவுபடுத்துகிறது

4 வில்லனின் கேரக்டர் டிசைன் மிகவும் பலவீனமாக எழுதப்பட்டிருக்கிறது

5 முதல் பாதியில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை.யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகள் அலுப்பைத்தருகின்றன


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்சன் மூவி பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5




சில சுவராஸ்யத்தகவல்கள்


1 இந்தப்படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன எ லாங்க் கிஸ் குட்நைட்(1996)படத்தில் நாயகியின் கேரக்டர் பெயரும் சமந்தாதான்.இதில் சமந்தாவே நாயகி.


2 எ லாங்க் கிஸ் குட்நைட் படத்தின் நாயகி  கீனா டேவிஸ்,படத்தின் இயக்குநர் ரென்னி ஹார்லின் இருவரும் கணவன் ,மனைவி.இந்தத்தம்பதி படம் ரிலீஸ் ஆகி 5 வருடங்களில் பிரிந்து விட்டார்கள்.அதே போல் மா இண்ட்டி பங்காரம் (எங்கள் தங்கம்) நாயகி சமந்தாவும் ,தயாரிப்பாளர் நீல் மோர் இருவரும் தம்பதிகள்


3 தெலுங்கு,தமிழ் இரு வெர்ஷனிலும் சமந்தா. சொந்தக்குரலில் டப்பிங் பேசி இருக்கிறார்.

4 வைஜெயந்தி ஐ பி எஸ் ,பூ ஒன்று புயலாகிறது வரிசையில் தெலுங்கு ,தமிழ் இரண்டிலும் ஹிட் ஆகும் ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்சன் மூவி இது என டிஸ்ட்ரிபியூட்டர்கள் சொல்கிறார்கள்