ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் விசாகபபட்டினத்தில் ஒரு துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சட்டத்துக்குப்புறம்பான வேலைகளை செய்கிறான் . அவனுக்குக்கீழே மேனேஜர் ஆக இருக்கும் சைடு வில்லன் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறான்.அங்கே தொழிலாளர்களோடு சில போலீஸ் உளவாளிகளை கலந்து இருக்கிறார்கள் . சைடு வில்லன் ஒரு போலிசைக்கண்டு பிடித்துக்கொலை செய்கிறான்
நாயகன் சென்னையில் ஒரு மேன்ஷன் நடத்தி வருகிறான் . அவனது நண்பனை விசாகப்பட்டினத்தில் யாரோ கொலை செய்து விட் டார்கள் என்பதைக்கண்டு பிடிக்கிறான் . பிணங்களை டிஸ்போஸ் செய்யும் எலக்ட்ரிக் சேரை உருவாக்கி வில்லனுக்காக வேலை பார்த்தவன் தான் நாயகனின் நண்பன் . எதனால் கொலை செய்யப்பட் டான் . யார் அவனைக்கொன்றது என்பதைக்கண்டு பிடித்துப்பழி வாங்க நாயகன் முயற்சிக்கிறான் . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை
வில்லன் ஆக நாகார்ஜுன் இளமை மாறாத பொலிவுடன் இருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை .
சைடு வில்லன் ஆக சவுபின் சாஹிர் பிரமாதப்படுத்தி இருக்கிறார் . மோனிகா பாடலில் செம டான்ஸ் வேற .
நாயகன் ஆக ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ் டார் ரஜினி .வழக்கமாக அவர் செய்யும் காமெடி , ரொமான்ஸ் , கலா ட்டாக்கள் எதுவும் இல்லை . ஆக்சன் , சோகம் மட்டும் தான் . ஆனாலும் பிளாஸ்பேக்கில் இளமை ரஜினியாக கலக்கி விட் டார்
நாயகனின் நண்பன் ஆக சத்யராஜ் . மேடைகளில் ரஜினியை எதிரியாக விமர்சித்தவருக்கு நண்பன் ரோல் .பாவம் அவர் நிலைமை .அவரது மகளாக சுருதி கமல் . ஒரே சோகம்
உபேந்திரா , அமீர்கான் இருவரும் தேவை இல்லாத ஆணிகள் ரச்சிதாராம் கலக்கலான நடிப்பு .சார்லி வேஸ்ட் பீஸ் , காளி வெங்கட் கெஸ்ட் ரோல்
இசை அனிரூத் . பிஜிஎம்மில் கலக்கி விட் டார் . மோனிகா பாட்டு செம ஹிட்டு .. கிரிஷ் கங்காதர் ஒளிப்பதிவு அருமை . பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் படம் 170 நிமிடங்கள் ஓடுகிறது . திரை க்கதை , இயக்கம் லோகேஷ் கனகராஜ்
சபாஷ் டைரக்டர்
1 படம் போட் ட 16 வது நிமிடத்தில் ஹீரோ இன்ட் ரோ , 44 வது நிமிடத்தில் லேடிஸ் ஹாஸ்ட்டலில் நடக்கும் அரங்கம் அதிர விசிலு பறக்க நடக்கும் ஆக்சன்சீக்வன்ஸ் அதகளம்
2 ஆந்திராவில் தனக்கு யாரை எல்லாம் தெரியும் என்பதை ரஜினி சொல்லும் சீனில் தியேட்டரில் கரகோஷம்
3 மோனிகா பாட்டில் கொரியோ கிராப் , காஸ்ட்யூம் டிசைன் கலக்கல் ரகம் , செம ஹிட்டு மெட்டு
4 வா வா பக்கம் வா பாட்டு சீனை ப்ளேஸ் செய்த விதம் செம + இன் ட்டர் வெல் பிளாக் சீன்
6 லைலா காலேஜ் லைலா பாட்டு சீனை மேன்ஷன் பைட் சீனுக்கு மேட் ச் செய்த விதம் செம
7 சைடு வில்லனின் மனைவி செய்யும் வில்லித்தனம் , அதில் வரும் ஒரு டிவிஸ்ட்
8 நாயகனின் பிளாஷ்பேக் சீனை க்ளைமாக்சில் ஓப்பன் செய்த விதம் , அந்த ஐடியா
ரசித்த வசனங்கள்
1 தெய்வம் நின்னு கொல்லு ம், மது தினம் தினம் கொல்லும்
2 அது என்ன டெய்லு ?
காக்டெயிலு
நீ டீ டோட்டலர் ?
3 பழி வாங்குவது முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? எனப்பார்த்தா எங்களுக்கு வாழ்க்கை தான் முக்கியம் .
4 பாப்பா , நீயா வந்து வண்டில ஏறிட் டா நல்லது , இல்லைன்னா நான் கண்ட இடத்துல தொடுவேன்
தொட் றா பார்க்கலாம்
5 அவன் ஏதாவது சொன்னானா?
நான் சொன்னா யார் கிட் டயாவது சொல்லிடுவியா?ன்னு கேட் டா ன் , சொல்ல மாட் டேன்னு சொன்னேன் . அப்புறம் எதுக்கு நான் உன் கிட்டே சொல்லணும் கறான் ?
6 வில்லி - நான் எது சொன்னாலும் நம்பிடுவியாடா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 துறைமுகம் நடத்தும் வில்லன் பிணங்களை கடலுக்குள் கல் கட்டி தூக்கி வீசாமல் அதை அப்புறப்படுத்த எலெக்ட்ரிக் சேரை நம்புவது எனோ ?
2 எலெக்ட்ரிக் சேரை டிசைன் பண்ணிய டீம் 10 பைசா செலவில்லாமல் டம்மியாக அதைக்காண்பித்த விதம் பரிதாபம்
3 எலெக்ட்ரிக் சேரை ஆப்பரேட் செய்வது எப்படி ? என்பதை வில்லன் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவன் மகா தத்தி என்பதைக்காட்டுகிறது
4 எலெக்ட்ரிக் சேர் டெக்னிக் எல்லாம் எம் ஜி ஆர் காலத்துலயே பாரத்தாச்சே? புதுசா சொந்தமா யோசிக்கக்கூடாதா?
5 தேவையே இல்லாமல் ஓவர் வயலன்ஸ்
6 மெயின் வில்லனை விட அவனிடம் வேலை பார்க்கும் சைடு வில்லனுக்கு அளிக்கப்படட அதிக முக்கியத்துவம்
7 ரஜினிக்கு பஞ்ச் டயலாக் வைக்காதது பெரிய மைனஸ்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 +
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கூலி(2025)-தமிழ்- நண்பனைக்கொன்றவனைப்பழி வாங்கும் மாமூல் ஆக்சன் மசாலா தான். ரஜினி மேஜிக், அனிருத் பிஜிஎம் மட்டுமே பிளஸ். முதல் பாதி சுமார், பின் பாதி அதை விட சுமார்.விகடன் மார்க் யூகம் 41.ரேட்டிங்க் 2.5 /5
Coolie | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Lokesh Kanagaraj |
Screenplay by | Lokesh Kanagaraj Chandhru Anbazhagan |
Story by | Lokesh Kanagaraj |
Produced by | Kalanithi Maran |
Starring | |
Cinematography | Girish Gangadharan |
Edited by | Philomin Raj |
Music by | Anirudh Ravichander |
Production company | |
Release date |
|
Running time | 170 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Budget | ₹350–400 crore[2] |
Box office | ₹150 crore[3] |
0 comments:
Post a Comment