Tuesday, May 21, 2024

ரத்னம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ ஜீ 5 , ஜீ திரை , ஜீ தமிழ்


புரட்டாசித்தளபதி  சாரி  புரட்சித்தளபதி  விஷாலின்  34  வது  படம்  இது . ஜெயிலர் , லியோ  போன்ற  மசாலாப்படங்கள்  ஓவர்  வன்முறை  என்பதால் தான்  ஓடியது  என்ற  செண்ட்டிமெண்ட்டில்  விஷால்  நாமும்  ஓவர்  வயலன்சில்  ஒரு  மசாலாக்குப்பையைக்கொடுத்து  கல்லா  கட்டலாம்  என  நினைத்து   சொந்தமாக  டிஸ்ட்ரிபியூசன்  செய்து  கையைச்சுட்டுக்கொண்ட  படம்  இது . மசாலாக்குப்பைகளை  எடுக்க  நினைக்கும்  ஆட்களுக்கு  இது  ஒரு  எச்சரிக்கை     


லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  தரமான  திரைப்படங்கள்  வெற்றி  பெறும்போது  எந்த  அளவு  மகிழ்ச்சி  ஏற்படுகிறதோ  அதே  அளவு  மகிழ்ச்சி  பிரம்மாண்டமாகத்தயார்  ஆகும்  மசாலாக்குப்பைகள்  டப்பா  ஆகி  அடி  வாங்கும்போது  நமக்கு  மகிழ்ச்சி  ஏற்படுகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  30  வயதாக  இருக்கும்போது  போலீசால்  கைது  செய்யப்பட்டு  விபச்சாரம்  செய்ததாக  பொய்யாக  குற்றம்  சாட்டப்பட்டு  சிறையில்  அடைக்கப்படுகிறார்.மீடியாக்களில்  ஃபோடோ  உடன்  இந்த  செய்தி  வந்ததால்  மனம்  உடைந்த  அம்மா  தற்கொலை  செய்து  கொள்கிறாள்


நாயகன்  வளர்ந்து  பெரிய  ஆள்  ஆனதும்  தன்  அம்மாவின்  முக சாயலில்  இருக்கும்  நாயகியை  சந்திக்கிறான்.  என்ன  என  சொல்ல  முடியாத ஒரு  வகை  பாசம்  நாயகி  மீது  அவருக்கு  உண்டாகிறது . ஆனால்  அது  காதல்  அல்ல 


 நாயகிக்கு  ஒரு  பிரச்சனை , அவர்  பூர்வீக  இடத்தை  அரசியல்வாதி  ஒருவன்  ஆட்டையைப்போட  நினைக்கிறான். அதை  நாயகன்  எப்படித்தடுக்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை  


 நாயகன்  ஆக   விஷால்.  மிடுக்கான  தோற்றம் , ஜிம்  பாடி  உடன்  வந்தாலும்  முகத்தில்  வயோதிகம்  தெரிகிறது .  ஓப்பனிங்  காட்சிகளில்  நாயகி  உடன்  காதலோ  என  எண்ன  வைத்து  பின்  வரும்  காட்சிகளில்  அப்படி  இல்லை , அம்மா  சாயல்  என்ற  நிலை  வந்த  பின்   அவரது  நடிப்பு  கச்சிதம் 


 நாயகி  அக  ப்ரியா  பவானி  சங்கர் அமைதியான  நடிப்பு ,அ டக்கமான  அழகு , கண்ணியமான  உடை . இரு  வேடங்களிலும்  அருமையான  நடிப்பு 


எம் எல் ஏ  ஆக  வரும் சமுத்திரக்கனி  கச்சிதமான  நடிப்பு , உடல்  மொழி 

வில்லன்களாக  வரும்  முரளி  சர்மா , ஹரீஷ்  பெரேடி , வேட்டை  முத்துக்குமார்  மூவரும்  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படாததால்  தடுமாறுகிறார்கள் . இன்னும்  வலிமையாகக்காட்டி  இருக்க  வேண்டும்


யோகி  பாபு  காமெடியன்  என  சொல்லிக்கொண்டு  பாவம்  ரொம்ப  சிரமப்படுகிறார்


  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வந்து  போகிறார். அவரது  உடல் மொழி ,குரல்  அபாரம் 


இசை  தேவி  ஸ்ரீ பிரசாத் . 3  பாடல்கள்  ஓக்கே  ரகம் , பின்னணி  இசை கச்சிதம் 


ஒளிப்பதிவு  சுகுமார் . ஹரி   படம்  என்றாலே  கேமராவை  ஆட்டிக்கொண்டே  இருக்க  வேண்டும்  என்ற  விதியை  ஃபாலோ  பண்றார்  எடிட்டிங்  டிஎஸ்  ஜெ.  இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது


 மொத்தம்  100  லிட்டர்  ரத்தம்  ஆறாக ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஹரி 


சபாஷ்  டைரக்டர்


1   விஜய்  நடித்த  தரணி  இயக்கிய  கில்லி  படத்தின்  கதையையே  பட்டி  டிஙக்ரிங்  பண்ணிய  சாமார்த்திய,ம்


2    திரைக்கதை  எழுதும்  ஆளுக்கு  சம்பளம் கொடுக்க  முடைப்பட்டு ஸ்டண்ட்  மாஸ்டருக்கு  டபுள்  பேமண்ட்  கொடுத்த  சாமார்த்தியம் 


3   நாயகி  நாயகனின்  அம்மா  சாயல்  என்று  கொண்டு  போகும்  பாணி  புதுசு 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  டோண்ட்  ஒர்ரி  டோண்ட் ஒர்ரி டா  மச்சி 


2  எதனால்  என்  மேல  அக்கறை ? 


3  போறாளே  போறாளே  சொந்த  மண்ணை  விட்டுப்போறாளே 


  ரசித்த  வசனங்கள் 


1  ஓட்டுக்குக்காசு  வாங்க  மக்கள்  தயாரா  இருக்கும்  வரை  ஒரு  நாயை  நிக்க  வெச்சாலும்  ஜெயிக்கும் 


2  குடிகாரன்கள்  எதை  வேஸ்ட்  பண்ணாலும்  தான்  அடிக்கும்  சரக்கை  மட்டும்  வேஸ்ட் பண்ணவே  மாட்டாங்க 


3  போலீசும் , ரவுடியும்  ஒரு  அண்டர்ஸ்டேண்டிங்கில்  இருந்தால்  தான்  ஊர்  உருப்படும் 


4   என்  பொண்டாட்டி  மேலயே  கை  வெச்சுட்டியா?


 வாயை  மூடுறா  மூடி  இல்லாத  டிஃபன்  பாக்ஸ் தலையா? 


5   என்ன  தான்  பேயைக்குளிப்பாட்டி  நடு  வீட்டில்  வைத்தாலும்  நடு  ராத்திரில  அது  சுடுகாட்டுக்குத்தான்  போகும் 


6  ஊறுகாயைக்கண்டு  பிடிச்சது  யாரா  இருக்கும் ?


 சரக்கை  சப்பிக்குடிக்கும்போது  சைடு  டிஷ்க்கு  தேடுனவனாத்தான்  இருக்கும் 


7  நல்லவங்க , கெட்டவங்க  என்பது  அவங்க  பண்ற  செயல்ல  இல்லை , நாம  பார்க்கும்  பார்வைல  இருக்கு


8  லஞ்சம்  வாங்கும்போது  கூட  அதுக்கு  ஜிஎஸ்டி   வசூல்  பண்ற  ஒரே  ஆள்  நீதான் 


9  உனக்கும்  , எனக்கும்  ஒரே  குரல்  நான்  சின்ன  வயசுல  கோலிக்குண்டை  முழுங்கிட்டேன்


 நான்  சின்ன  வயசுல  சேவலை  முழுங்கிட்டேன் 


10   எவ்ளோ  பெரிய  ரவுடியா  இருந்தாலும்  பொண்ணுங்க  விஷயத்துல  வீக்காதான்  இருக்கானுங்க 


11  நம்ம  மேல  தப்பு  இருந்தா  தோக்கலாம்,  அல்லது  நான்  செத்துப்போனா  தோற்கலாம் 


12   என்னைப்பற்றியே  கவலைபப்டறீங்களே?உங்க  வாழ்க்கையைப்பற்றியும்  யோசிங்க 


   என்  வாழ்க்கையே  நீ  தானே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பொண்ணோட  அப்பா  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஆள்  கிட்டே  வயசுக்கு  வந்த  தன்  பெண்ணை  அனுப்பி  அவளை  டிராப்  பண்ணிடுங்கனு  சொல்வாரா? 


2   வில்லனின்  அடியாட்கள்  50  பேர்  அரிவாள் , கத்தி  உடன்  எதிரே  இருக்காங்க . நாயகனின்  ஜீப்  தீப்பற்றி  எரிகிறது . நெருப்பை  அணைக்க  நாயகன்  போரிங்  பைப்பில்  தண்ணீர்  அடித்து  குடத்தை  நிரப்பி  அணைக்கும்  வரை  ரவுடிகள்  வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இருப்பார்களா?  அவர்  அணைத்த  பின்  தான்  ரவுடிகள்  ஃபைட்டுக்கு  ரெடி  ஆகிறார்கள் 


3  நாயகியின்  அப்பா  போலீஸ்  ஸ்டேஷனில்  இந்த  பத்திரம்  செல்லாது . யாருக்கும்  விற்கும்  உரிமை  இல்லை  என  சொல்வதோடு  நிறுத்தி  இருக்கலாமே?  எதுக்கு  லூஸ்  மாதிரி  என்  பொண்ணு  தான்  65  வது   தலைமுறை . அவளுக்குத்தான்  விற்கும்  உரிமை  உண்டு ? என  அவராக  சிக்கலில்  சிக்குகிறார் ? 


4    நாயகனின்  அம்மாவின்  குடும்பம் , நாயகியின்  குடும்பம்  இரண்டும்  ஒரே  ஊரில்  இருந்தும்  இருவருக்குமான  உருவ  ஒற்றுமை    இரண்டு  குடும்பத்துக்கும்  தெரியாமல்  இருப்பது  எப்படி ? 


5  நாயகனின்  அப்பா  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் .அவரது  தம்பி  ஒரு  திருடன் கொள்ளை    அடித்த  நகை , பணத்தை  போலீஸ்  ஆஃபீசர்  வீட்டிலேயே  பங்கு  பிரிக்க  அவன்  என்ன  கேனையா?  வேறு  இடமா  இல்லை ? 


6  சமுத்திரக்கனி  ஒரு சாதா  எம்  எல்  ஏ  தான்  , என்னமோ சி எம்  ரேஞ்சுக்கு  அவருக்கு  பவர்  இருப்பது  போலக்காட்டுவது  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஓவர்  வயலன்ஸ்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மசாலாக்குப்பைகளை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ஆல்ரெடி  கண்  வலி  , காது  வலி  உள்ளவர்கள்  தவிர்க்கவும் , கேம்ராவை  ஆட்டிக்கொண்டே  இருப்பதால் ,சவுண்ட்  ஜாஸ்தியாக  இருப்பதால்  தவிர்க்கவும்  .ரேட்டிங்   2 / 5 


Rathnam
Theatrical release poster
Directed byHari
Written byHari
Produced byKaarthekeyan Santhanam
Alankar Pandian
Starring
CinematographyM. Sukumar
Edited byT. S. Jay
Music byDevi Sri Prasad
Production
companies
Distributed byAyngaran International
Big Films
Release date
  • 26 April 2024
Running time
156 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: