Friday, March 25, 2011

ஆளும் தி மு க அதிர்ச்சி.... விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள்...காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSeQ3uz3yUFOxjjYS_ayOZ0nlfAEGoltEhBz9h9x3bA-PE2qQICGa30jCu7Ovsi5E73sKgx7FDm6McpWP1z9F1-BfKqnwvv7-bJwJu3eM_g6wmoAjwOBPYRYKv3oL8cTg6jx1qhuqoZYww/s1600/parisutham.JPG 

கூட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி,  பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?!  (வேறென்ன.. ?  குழப்பம்தான்...)


 தமிழகத் தேர்தல் களம் எந்த அலையும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோலத்தான் இப்போது தளும்பிக்கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன

.( எல்லா சஞ்சிகைகளும் அப்படித்தான் சொல்லிக்கறாங்க..)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு என்று தனித் தனியாக சர்வேக்களை வெளியிட்டோம். இந்தத் தேர்தல் களத்தின் காலம் மிகக் குறுகிவிட்டதால், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசையும் அறிய பொது சர்வே எடுக்கப்பட்டது!

( எப்படியோ உங்களுக்கு வேலை மிச்சம்)


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க கழற்றிவிடப்பட்ட பரபரப்பான சூழல் ஒரு பக்கம்... இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று வீதிக்கு வீதி பேசப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை மறுபக்கம்... தேர்தல் சூடு பரவிய சூழலில் மக்களிடையே நம் படை ஊடுருவியது 

.(ஊடுருவுனது நீங்கதான்னு தெரியுமா? மாறு வேஷத்துல ஊடுருவுனீங்களா?)

மார்ச் 19, 20 தேதிகளில் விகடன் நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100 பேர்கொண்ட குழு, மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் எனத் தமிழகம் முழுக்கப் புகுந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, சர்வே கேள்வித் தாளை நீட்டியது விகடன் படை! 

(அய்யய்யோ கொஸ்டீன் பேப்பரா..?எஸ்கேப்னு யாரும் ஓடலையா?)
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற காட்சிகள் இன்னமும் அரங் கேறாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மக்களின் மனநிலை இது.
(செல்லாது செல்லாது)


தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!
(மனம் விரும்புதே யாரை யாரை.. அறியாமலே.. சசம்ஜு சக்கும் சஜம்சு ஜக்கும்... அய்யய்யோ மறந்தேனடா... யார் கிட்ட நான் பணம் வாங்குனேண்டா...வேட்பாளர் பேரே தெரியாதடா.....#நேருக்கு நேர்)


''நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது அ.தி.மு.க. கூட்டணி. காங்கிரஸ் தந்த குடைச்சலில் தி.மு.க-தான் குட்டையைக் குழப்பிட்டு இருந்தாங்கன்னு பார்த்தா, 'நாங்க மட்டும் இளைச்சவங்களா?’னு அதிரடி பண்ணி, ஜெயலலிதா நல்லா காமெடி பண்ணினார். அவர் ஜெயிக்கக் கிடைச்ச நல்ல வாய்ப்பை அவரே குறைச் சுக்கிட்டார்'' என்ற குரல்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. 

  (போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்து இருக்கிறது. ''தலைநகரைவிட்டு தலை தப்பிச்சாப் போதும்னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுறார். அவருக்கே எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு. அதைப் பயன் படுத்திக்காம, வெற்றி பெறுவோம்கிற மமதையில் ஜெயலலிதா தப்பான முடிவு களை எடுத்துட்டார். அவரை நினைச்சுப் பரிதாபப்படக்கூட முடியலை'' என்றார் ஸ்ரீரங்கத்துக்காரர்  ஒருவர். 

( தோல்வி நிலையென நினைத்தால் ....தோழி நிலையை நினைக்கலாமா?மானத்தை இழந்தோம்.. வெட்கத்தை இழந்தோம்.. ரோஷத்தை இழக்கலாமா? #ஊமை விழிகள்)


ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தத் தேர்தலில் 'கொஞ்சமாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறது சர்வே. 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டுப் போடுவேன்’ என்று சுமார் 46 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதே நேரம், சுமார் 26 சதவிகி தத்தினர் 'இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னதும் முக்கிய விஷயமாகும்.

(என்ன என்ன நினைக்குது ஏதோதோ நினைக்குது. வண்ன வண்ன ஊழல்கள் கோடி ரூபா...)

வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பலர், 'இது வைகோவுக்குச் இழைக்கப்பட்ட அநீதி’ என்றே கருத்துச் சொல்கிறார்கள்.
( நீ இல்லை என்றால் கூட்டணீயில் இல்லை ஒரு கலவரமே.. ஏ  ஏ ஹே..உன்னோடு வந்தாலும், உன்னோடு நின்றாலும் தோல்வி தோல்வி....)


''ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

( ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?)


உசிலம்பட்டியில், 'ஜெயலலிதா வந்தா, சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும். அதிகாரிங்க பயப்படுவாங்க. நிர்வாகம் சரியா நடக்கும். அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்? கலைஞர் வந்தா, டி.வி, மிக்ஸிலாம் கிடைக்கும். அதனால கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்’ என்றார் ஒரு பெரியம்மா.


(மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே இது மாறுவதெப்போ..தேறுவதெப்போ நம்ம கவலே..)

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியைவிட ஜெயலலிதாவே கூடுதல் சதவிகிதத்தைப் பெற்று இருப்பது வியப்பு. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியைவிட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது, ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது

. ( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)


தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2,081 வாக்காளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் கட்டங்களில் இடம்பெற்றுஉள்ளன






69 comments:

டக்கால்டி said...

Vadai

டக்கால்டி said...

Padichutu varen

சி.பி.செந்தில்குமார் said...

வாங்கய்யா வாத்தியாரய்யா

டக்கால்டி said...

அருமை...நடக்குதான்னு பாப்போம்...நான் இந்த சர்வே பெரும்பான்மையினரோடு ஒத்துப் போகிறேன்

டக்கால்டி said...

முதன் முதலாக ப்ளாக் ஓரத்தில் சிபி பதிவை நான் படித்தேன்...#எங்கள் அண்ணா
எப்புடி உங்க பாணியிலேயே கமென்ட் போடுவோம்ல

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!
(மனம் விரும்புதே யாரை யாரை.. அறியாமலே.. சசம்ஜு சக்கும் சஜம்சு ஜக்கும்... அய்யய்யோ மறந்தேனடா... யார் கிட்ட நான் பணம் வாங்குனேண்டா...வேட்பாளர் பேரே தெரியாதடா.....#நேருக்கு நேர்)


ஹா.....ஹா.... செம காமெடி!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

(போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)

தாவாரம் இல்லை தனக்கொரு - வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger டக்கால்டி said...

அருமை...நடக்குதான்னு பாப்போம்...நான் இந்த சர்வே பெரும்பான்மையினரோடு ஒத்துப் போகிறேன்

m m ம் ம் ஆனா மக்கள் மனோ நிலை கதாநாயகியை கண்ட பிறகு மாறி விட்டது

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

முதன் முதலாக ப்ளாக் ஓரத்தில் சிபி பதிவை நான் படித்தேன்...#எங்கள் அண்ணா
எப்புடி உங்க பாணியிலேயே கமென்ட் போடுவோம்ல

என்னது..? அண்ணனா? இருங்க.. உங்க பிளாக்ல போய் மைனஸ் ஓட்டு போடறேன்.. ஹி ஹி

டக்கால்டி said...

ம் ம் ஆனா மக்கள் மனோ நிலை கதாநாயகியை கண்ட பிறகு மாறி விட்டது//

ஆறும் அது ஆழமில்ல..
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அது
ஒட்டு போடும் மக்கள் மனசு தான்யா

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!!

வாங்க வாங்க

டக்கால்டி said...

.#எங்கள் அண்ணா

என்ன தலைவரே? நீங்க தானே எங்க எல்லாருக்கும் அண்ணன்...பதிவுலக கேப்டன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நிஜமாவே அம்மாதானா?

டக்கால்டி said...

@ஓட்ட வடை...
என்னயா புதுசா இடுகை எதுவும் காணோம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

.#எங்கள் அண்ணா

என்ன தலைவரே? நீங்க தானே எங்க எல்லாருக்கும் அண்ணன்...பதிவுலக கேப்டன்...

அது சரி.. அம்மா கால்ல போய் விழ சொல்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நிஜமாவே அம்மாதானா?


அது விகடனின் ராங்க் கால்குலேஷன்.. என் கணிப்பு மீண்டும் அய்யாதான் வந்து அராஜகம் பண்ணுவார்னு தோணுது

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

@ஓட்ட வடை...
என்னயா புதுசா இடுகை எதுவும் காணோம்?

March 25, 2011 5:45 AM

ஜீவன் மனசுக்குள்ள ஒரு ஜீவன்..ஹ் ஹி

Unknown said...

பழம் நீ யப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பயம் நீயப்பா!

டக்கால்டி said...

பழம் நீ யப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பயம் நீயப்பா!

March 25, 2011 5:48 AM//

வந்துட்டாருயா பி.ஏவ காத்த பிராண நாதன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

பழம் நீ யப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பயம் நீயப்பா!

ஏன்? இத்தனை நாளா டூ விட்டிருந்தியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

@ஓட்ட வடை...
என்னயா புதுசா இடுகை எதுவும் காணோம்?

நான் இடுகை போட்டா மட்டும் என்ன நடந்துடப் போகுது? கலைஞர் ஐயா ஆட்சி வேணான்னு ராஜினாமா பண்ணிடுவாரா?சும்மா ரெண்டு நாள் டிரஸ்.............. சாரி ரெஸ்ட் எடுக்கலாமே னு தான்!

டக்கால்டி said...

அது சரி.. அம்மா கால்ல போய் விழ சொல்றீங்களா?

March 25, 2011 5:46 AM//

அதெல்லாம் இல்லீங்

Unknown said...

ஹலோ மெண்டல் ஆஸ்பத்திரியா 6 கோடிபேரு வாரோம் இடமிருக்கா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

பழம் நீ யப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பயம் நீயப்பா!

March 25, 2011 5:48 AM//

வந்துட்டாருயா பி.ஏவ காத்த பிராண நாதன்

விக்கி பி ஏவை கரெக்ட் பண்ணுன மேட்டர் அகில உலகத்துக்கும் தெரிஞ்சிருக்கே.. ஹா ஹா

டக்கால்டி said...

நான் இடுகை போட்டா மட்டும் என்ன நடந்துடப் போகுது? கலைஞர் ஐயா ஆட்சி வேணான்னு ராஜினாமா பண்ணிடுவாரா?சும்மா ரெண்டு நாள் டிரஸ்.............. சாரி ரெஸ்ட் எடுக்கலாமே னு தான்!//

ஓகே ஓகே நல்ல எடுத்துக்கவும்...அட ரெஸ்ட்ட தான்யா நானும் சொன்னேன்...

Unknown said...

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு "இருவருமே இல்லை" என்றே பெரும்பாலோரோனோர் சொல்லியிருக்காங்களே!

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

ஹலோ மெண்டல் ஆஸ்பத்திரியா 6 கோடிபேரு வாரோம் இடமிருக்கா ஹிஹி!

என்ன உள்குத்து இதுல?

டக்கால்டி said...

ஹலோ மெண்டல் ஆஸ்பத்திரியா 6 கோடிபேரு வாரோம் இடமிருக்கா ஹிஹி!//

பிம்பிளிக்கி பிளாப்பி...

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

பழம் நீ யப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பயம் நீயப்பா!

ஏன்? இத்தனை நாளா டூ விட்டிருந்தியா?

March 25, 2011 5:50 AM
Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

@ஓட்ட வடை...
என்னயா புதுசா இடுகை எதுவும் காணோம்?

நான் இடுகை போட்டா மட்டும் என்ன நடந்துடப் போகுது? கலைஞர் ஐயா ஆட்சி வேணான்னு ராஜினாமா பண்ணிடுவாரா?சும்மா ரெண்டு நாள் டிரஸ்.............. சாரி ரெஸ்ட் எடுக்கலாமே னு தான்!

நாம ஊதற சங்கை ஊதிக்கிட்டே இருப்போம்

Unknown said...

டேய் நீ பொதுப்பிரச்சனன்னு கூப்டியேன்னு வந்தா சொந்தப்பிரச்சனா இழுக்குற ராஸ்கோல் பிச்சிப்புடுவேன்!

டக்கால்டி said...

சிபி இன்னும் ஒட்டு போடலை..போட்டுட்டு வந்துடுறேன்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger கலாநேசன் said...

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு "இருவருமே இல்லை" என்றே பெரும்பாலோரோனோர் சொல்லியிருக்காங்களே!

ஆமா.. ஆனா எரியற கொள்ளீல எது நல்ல கொள்ளின்னு பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கே

டக்கால்டி said...

டேய் நீ பொதுப்பிரச்சனன்னு கூப்டியேன்னு வந்தா சொந்தப்பிரச்சனா இழுக்குற ராஸ்கோல் பிச்சிப்புடுவேன்!

March 25, 2011 5:53 AM//

யோவ் நீ பிச்ச வரைக்கும் போதும்...அதுவே உனக்கு ஒரு மாசம் தாங்கும்னு நினைக்கிறேன் ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வர வர உங்களோட ப்ளாக் ல பிகருங்கள் படமே போடுறதில்ல!! ஏன் யாருகிட்டயாவது நல்ல பேரு வாங்கற ஐடியாவா?

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

டேய் நீ பொதுப்பிரச்சனன்னு கூப்டியேன்னு வந்தா சொந்தப்பிரச்சனா இழுக்குற ராஸ்கோல் பிச்சிப்புடுவேன்!

பேச்சை மாத்தாதே,.. கையைப்பிடிச்சு இழுத்தியா?

Unknown said...

என் பொண்டாட்டிக்கு தெரியாத உண்மையா தன் தளத்துல போட்ட இந்தாளு மன்னிப்பு கேக்குற வரைக்கும் நான் ............!

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வர வர உங்களோட ப்ளாக் ல பிகருங்கள் படமே போடுறதில்ல!! ஏன் யாருகிட்டயாவது நல்ல பேரு வாங்கற ஐடியாவா?

ஹி ஹி நான் திருந்திட்டேன்.. ஹா ஹா இன்னைக்கு மத்தியானம் 3 மணி வரை.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger விக்கி உலகம் said...

என் பொண்டாட்டிக்கு தெரியாத உண்மையா தன் தளத்துல போட்ட இந்தாளு மன்னிப்பு கேக்குற வரைக்கும் நான் ............!


அப்போ உன் பிளாக்ல வந்து கமெண்ட் போடறேன்.. ஹி ஹி

Unknown said...

என்ன கைய புடிச்சி இழுத்தியா!

அடப்பாவி ஜொள்ளு விட்டதுக்கே இந்த குமுரளா ஹிஹி!

Unknown said...

என்ன கைய புடிச்சி இழுத்தியா!

அடப்பாவி ஜொள்ளு விட்டதுக்கே இந்த குமுரளா ஹிஹி!

Unknown said...

டக்கால்டி said...
டேய் நீ பொதுப்பிரச்சனன்னு கூப்டியேன்னு வந்தா சொந்தப்பிரச்சனா இழுக்குற ராஸ்கோல் பிச்சிப்புடுவேன்!

March 25, 2011 5:53 AM//

யோவ் நீ பிச்ச வரைக்கும் போதும்...அதுவே உனக்கு ஒரு மாசம் தாங்கும்னு நினைக்கிறேன் ஹி ஹி

>>>>>>>>>>>>


ஐயோ நான் எதுவும் பிக்கல பிக்கல பிக்கல.......ல ல ல

டக்கால்டி said...

ஐயோ நான் எதுவும் பிக்கல பிக்கல பிக்கல.......ல ல ல

March 25, 2011 6:01 AM//

இல்லை கோபால் இல்லை...

Unknown said...

இந்திய மக்கள் பேரதிர்ச்சி.............நாடு முழுதும் பரபரப்பு "கிரிக்கெட்டு இந்தியா இப்போதைக்கு வின்னு! ஹிஹி!"

Unknown said...

"இல்லை கோபால் இல்லை..."

>>>>>>>>>>>>

அத்தான் ஹும்!

நிரூபன் said...

கூட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?! (வேறென்ன.. ? குழப்பம்தான்...).//

இவ் இடத்தில் கொஞ்சம் மாற்றம் வேண்டும். கதாநாயகர்கள் என்பதற்குப் பதிலாக காமெடி நடிகர்கள் என்று வர வேண்டும்.

நிரூபன் said...

(போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)//

அட காலங்க் காத்தலை, செம அறுவை... வண்டி வண்டி கூட்டணி வண்டி, கூடியடிச்ச காசை வைச்சு வாக்கு கேட்கும் நல்ல வண்டி...........
ஓட்ட வண்டி... நீ ஓட்டை போடு வண்டி.......
ஏறிக் கிட்டு 2G அலையிலை பேசு வண்டி:)))))))))))

நிரூபன் said...

( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)//

அடுத்த முறைத் தேர்தலுக்கு இளைஞர் அணி உருவாகித் தமிழகத்திலை புரட்சி ஏற்படுத்தினால் நடிகைகளின் நதிர்தனா..........திரனனா.......நடனமும் இலவசமா காண்பித்து, இளைஞர் அணியின் ஓட்டையும் ஐயா தனக்கே வாங்கிப் போடுவார்.

டக்கால்டி said...

50

நிரூபன் said...

கள்ள ஓட்டுப் போடுவதெப்படி? இப்படி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன். இலங்கை இந்தியாவிற்கு இணைப்புப் பால்ம் கடலுக்கு ஊடாக போடாமலே தேடி வந்திடுவாங்களோ என்று பயமா இருக்கு.

நிரூபன் said...

மாமு 51//

ஏய் மணப்பாரை மாடு கட்டி
மாய வரம் ஏரு பூட்டி
நீ மிக்ஸிக்காக ஓட்டுப் போடு செல்லக் கண்ணு
நீ மிக்ஸிக்காக ஓட்டுப் போடு செல்லக் கண்ணு//

இந்த றீமிஸ் எப்புடி?

நிரூபன் said...

'ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

( ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?)//

புதுக் காமெடிப் படமெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் ஓடும். பரபரப்பு அடங்கினதும் தியேட்டரிலை இருந்து தூக்கிடுவாங்க இல்ல,
இப்ப எங்கை போச்சு ஸ்பெக்ட்ரம் கதை?

நிரூபன் said...

டக்கால்டி said...
.#எங்கள் அண்ணா

என்ன தலைவரே? நீங்க தானே எங்க எல்லாருக்கும் அண்ணன்...பதிவுலக கேப்டன்..//

சகோதரம், என்ன எங்களின் சிபி. செந்தில்குமாரையும் தேர்தலிலை களமிறக்குவதாக எண்ணமோ?

Unknown said...

// ( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)//
80 களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டவை
கிரைண்டர் - santha tilding wet grinder
மிக்சி - sumeet
ஃபேன் - khaitan

நிரூபன் said...

பி.செந்தில்குமார் said...
>>டக்கால்டி said...

@ஓட்ட வடை...
என்னயா புதுசா இடுகை எதுவும் காணோம்?

March 25, 2011 5:45 AM

ஜீவன் மனசுக்குள்ள ஒரு ஜீவன்..ஹ் ஹி//

இது தான் தற்போதைய பதிவுலக லேட்டஸ் கிசு கிசுவோ.
சொல்லவேயில்ல.

சக்தி கல்வி மையம் said...

இவ்ளோ காலையில!!!!! இன்னைக்கு நாலு ஷோவா?

சக்தி கல்வி மையம் said...

10 மணிக்கு வரேன்..

Adirai Seithi said...

DMDK VETRI PERA VAZTHUKKAL
WWW.ADIRAISEITHI.BLOGSPOT.COM

தமிழ்வாசி பிரகாஷ் said...

சர்வே... ரொம்பவே சூடா இருக்கு.

எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

வைகை said...

தங்க தலைவி குசுபூவுக்கு சீட் கொடுக்காததை கண்டித்து இந்த தேர்தலை நாம் புறக்கணிக்கிறேன்!

வைகை said...

எனக்கென்னமோ கார்த்திக்தான் முதலமைச்சரா வருவார்னு தோணுது.. உங்களுக்கு?

வைகை said...

என் குழந்தைகளுக்கு கார்த்திக் பெரியப்பா மாதிரின்னு சொன்ன குசுபு அக்கா ஏன் கார்த்திக் கட்சில சேரல? # டவுட்டு

ராஜி said...

ஐயா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. நாந்தான்டா மிக்ஸிக்கு ஓணர்
>>
இதுதான் சூப்பர்

Unknown said...

மதியின் கார்டூன் அசத்தல்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் என்னத்த சொல்ல எல்லாத்தையும் நம்ம பயபுள்ளைக சொல்லிட்டு போயிட்டாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னைக்கு விரிவாகவே சொல்லியிருக்கிங்க...

ராஜேஷ், திருச்சி said...

//கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன//

தமாசு.. 2009தேர்தலில் ஜூ வி, அதிமுகவிற்கு 33 , தி மு க விற்கு 7 என்று சொன்னது.. ஆனால் நடந்தது அப்படியே தலைகீழ்..

நிலவு said...

நல்ல அலசல் இதனையும் படித்து கருத்தளியுங்கள்

http://powrnamy.blogspot.com/2011/03/63.html அறுபத்து மூன்று தொகுதிகளில் சீமான் பிரச்சாரம் - காமடி தர்பார்