அன்புள்ள இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு,
வணக்கம்.நான் உங்கள் பரம ரசிகன்.மின்னலே படத்தில் வசீகரா பாட்டும் ,படமாக்கபட்ட விதமும் காதலை காதலோடு பார்க்க வைத்தது.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு புனர் ஜென்மம் கொடுத்தீர்கள். த்ரிஷாவை மிக அழகாக காட்டினீர்.இன்னும் உங்கள் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாவற்றையும் மறக்கடித்து விடது உங்கள் லேட்டஸ்ட் படம் நடு நிசி நாய்கள்.
ஊர் உலகத்துல நடக்கறதைத்தானே காட்டறேன் என நீங்கள் சால்ஜாப்பு சொல்லலாம்.சமூகத்தை திருத்தத்தான் ஒரு விழிப்புணர்வுப்படமா எடுத்தேன் என நீங்கள் எஸ்கேப் ஆகலாம்.ஆனால் நான் கேட்கும்,இந்த சினிமா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை கொஞ்சம் செவி மடுங்கள்.
1. உங்க அம்மா, அப்பாவோட அமர்ந்து இந்தப்படத்தை நீங்க பார்ப்பீர்களா?
2. உங்க பையன் வளர்ந்து பெரியவன் ஆன பின்னாடி இது எங்கப்பா டைரக்ட் பண்ணுன படம்னு பெருமையா சொல்லிக்க முடியுமா?
3.உங்க பட விளம்பரத்துல உண்மை சுடும் ஆனால் உண்மை உண்மைதான் என போட்டிருக்கிறீர்களே...ஈழத்தமிழர்கள் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியாலும், கலைஞரின் சுயநலத்தாலும் தான் நிர்மூலமானது என்ற உண்மையை தெளிவு படுத்த படமா எடுக்க முன் வருவீங்களா?
4. எங்கோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கும் அபூர்வ நிகழ்வை எல்லா இடங்களிலும் நடப்பது போலவும்,தமிழகமே கலாச்சார சீர்கேட்டில் சிக்கி தவிப்பது போலவும் காட்டி இருக்கீங்களே.. மன நோய் பீடித்திருப்பது உங்கள் பட ஹீரோவுக்கா? உங்களுக்கா?
5. படம் ரிலீஸ் ஆகி 2-வது நாளே படம் டப்பா என அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் விஜய் டி வி , கலைஞர் டி வி என மாறி மாறி வந்து இந்தப்படத்தின் நியாயங்களை எடுத்துரைக்கிறீர்களே.. உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
6.படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.. ஓகே 18 வயசுக்கு உட்பட்டவர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.. ஆனால் டி வி என்பது வீட்டில் இருக்கும் சாதனம். அதில் அனைவரும் பார்க்கும் சாத்தியமே அதிகம் உள்ளது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த படத்துக்காக வாதாடி,படத்தின் கதைக்கருவை பெண்களுக்கு மத்தியிலும் கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறிர்களே.. எப்படி..?
7. ஆங்கிலப்படத்துக்கு நிகராக எடுத்திருக்கிறேன் என வாய் கூசாமல் சொல்கிறீர்களே...அதற்கு பேசாமல் ட்ரிபிள் எக்ஸ் படம் எடுத்திருக்கிறேன் என சொல்லி இருக்கலாமே..?
8. சீன் படங்களை மக்கள் ரசிப்பதில்லையா? என கேட்டிருக்கிறீர்கள்.. ஆம்... ரசிப்பதுண்டுதான். ஆனால் அதே சீன் படமான சிந்து சமவெளி கலாச்சார சீர் கேடு என்று தெரிந்ததும் மக்கள் காரி துப்பி டப்பா ஆக்கவில்லையா? இயக்குநர் சாமி வெளி இடங்களுக்கே சரியாகப்போகாமல் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்காரே... அதைப்பார்த்துமா நீங்க இப்படி ..?
9. நூறாவது நாள் படத்தைப்பார்த்து ஒரு ஆட்டோ சங்கர் உருவான மாதிரி இந்தப்படத்தைப்பார்த்து ஒரு வீரா உருவாகமாட்டான் என்பது என்ன நிச்சயம்..?
10. கற்பழிப்பின்போது ஆரம்பத்தில் எதிர்க்கும் பெண் பின் அதை விரும்புவாள் என்ற தவறான எண்ணத்தை பார்வையாளன் மனதில் விதைத்த நீங்கள் இதனை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு யாரேனும் முயற்சி செய்தாலோ, குற்றங்கள் அதிகரித்தாலோ உங்களால் அதற்கு பதில் சொல்ல முடியுமா?
52 comments:
வடை
ஐய் எனக்கு தான் வடை...
படிச்சிட்டு வாறன்
எங்கோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கும் அபூர்வ நிகழ்வை எல்லா இடங்களிலும் நடப்பது போலவும்,தமிழகமே கலாச்சார சீர்கேட்டில் சிக்கி தவிப்பது போலவும் காட்டி இருக்கீங்களே.. மன நோய் பீடித்திருப்பது உங்கள் பட ஹீரோவுக்கா? உங்களுக்கா?
super kelvi.........
//ஈழத்தமிழர்கள் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியாலும், கலைஞரின் சுயநலத்தாலும் தான் நிர்மூலமானது என்ற உண்மையை தெளிவு படுத்த படமா எடுக்க முன் வருவீங்களா?//
அட்ரா சக்கை
அத்தனையும் உண்மையான வாதம் பாஸ்..கடிதத்தை அனுப்புங்க அவருக்கு!!
சீன் படங்களை மக்கள் ரசிப்பதில்லையா? என கேட்டிருக்கிறீர்கள்.. ஆம்... ரசிப்பதுண்டுதான். ஆனால் அதே சீன் படமான சிந்து சமவெளி கலாச்சார சீர் கேடு என்று தெரிந்ததும் மக்கள் காரி துப்பி டப்பா ஆக்கவில்லையா? இயக்குநர் சாமி வெளி இடங்களுக்கே சரியாகப்போகாமல் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்காரே... அதைப்பார்த்துமா நீங்க இப்படி ..?
சுடும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போறார் கௌதம் மேனன்...
ற்பழிப்பின்போது ஆரம்பத்தில் எதிர்க்கும் பெண் பின் அதை விரும்புவாள் என்ற தவறான எண்ணத்தை பார்வையாளன் மனதில் விதைத்த நீங்கள் இதனை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு யாரேனும் முயற்சி செய்தாலோ, குற்றங்கள் அதிகரித்தாலோ உங்களால் அதற்கு பதில் சொல்ல முடியுமா
உண்மை
சமூ க விழிப்புணர்வு என்று தான் படத்தை தருகிறார்கள்..
ஆனால் இது இது போல் ஆகிவிடுகிறது..
இது போல கதைகள் கொடுக்க நிறைபேர் இருக்கிறார்கள் ஆனால் கௌதம் விஷயத்தில் இது கொஞ்சம் ஓவர்தான்..
கன்டன கடிதத்தில் என்னுடைய கையெழுத்தும்..
நல்லா கேளுங்க...
உண்மையான வாதம்
I TOO SIGN IN THIS VALUABLE LETTER.
SENTHIL, YOU ARE GREAT ALWAYS
பொக்கே உங்களுக்கு
செருப்பால அடிக்கல அவ்வளவுதான்.
இன்னிக்கி தான் தல நீங்க உண்மையிலே பொங்கி இருக்கீங்க அனச்சிராதிங்க உங்க தீய!
உங்க கருத்துகளோடு ஒத்துப்போகிறேன் நன்றி
உண்மையான வாதம்.. நியாயமான கேள்விகள்...
சரியான கேள்விகள்.!! வேற கேள்வி பேப்பர் இருக்கானு கௌதம் கேக்க போறார்...
நல்லா நச்சுன்னு கேட்டுருக்கீங்க தல...
இந்தாளை விகடனும் ரிவிட் எடுக்குமா
பிரபலமான பிறகு என்ன எடுத்தாலும் ஓடும்னு நினைக்கிறானுக
// பொக்கே உங்களுக்கு
செருப்பால அடிக்கல அவ்வளவுதான்.
இன்னிக்கி தான் தல நீங்க உண்மையிலே பொங்கி இருக்கீங்க அனச்சிராதிங்க உங்க தீய!
உங்க கருத்துகளோடு ஒத்துப்போகிறேன் நன்றி//
விக்கியின் கருத்தேதான் என்னுடையதும்.
இவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைக்கணும். அதிகம் கொண்டாடுவதால் தான் இன்று இந்த நிலை.
தப்புத்தாளங்களில் ஆரம்பித்தவர் பாலச்சந்தர்.ஒரு இயக்குனர் அவருக்கு பிடித்ததை எடுக்க உரிமை உண்டு.இந்த படம் தமிழக சூழலுக்கு புதியது.போர்னோகிராபி,பிட்டு படம் பார்க்கிரவர்களுடன் எல்லாரையும் சேர்க்ககூடாது.இவருடைய முந்தைய படங்களை வைத்து இந்த படமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைப்பது தவறு.இந்த அடிப்படை முட்டாள்தனமே தமிழக அரசியலையும் பிடித்து ஆட்டுவது வருத்தமளிக்கிறது.
பாஸ் ஆணி மேல ஆணியா இருக்கு பாஸ் அதான் எந்த கடைபக்கமும் வர முடியல கொஞ்சம் நாளாவே கண்டிப்பா வருவேன் பாஸ் கூடிய விரைவில்
ஐயையோ படம் ரொம்ப மோசம் போல இருக்கு.. நல்ல வேளை பார்க்கலை.. நன்றி செந்தில்..
சன் டிவி . . . கௌதம் மேனன் . . .
என்ன ஒரு கொலை வெறி . . .
நன்றி
புரிந்துகொள்ள வேண்டும் அவர்கள்! ஆனால் லாபத்தை மட்டுமே நோக்குபவர்கள் அதை செய்வார்களா?
வாஸ்தவம்தான்..
படம் பார்க்கவில்லை, ஆனாலும் உங்கள் வாதம் ஏதும் குறைசொல்லமுடியாதது, வாழ்த்துக்கள். (நல்லவேளை பாக்கலியோ)
படம் பார்க்கவில்லை. ஆனால், உங்களுடைய கேள்விகளிலிருந்து என்னால் படத்தின் கதையை யூகிக்க முடிகிறது.
உங்களுடைய கேள்விகள் நியாயமானதே!
ஆட்டோவோ லாரியோ வந்து ரவுண்டு கட்டி அடி வாங்காம நீர் திருந்த மாட்டீர் போல....நடத்துங்க நடத்துங்க.....
// உங்க அம்மா, அப்பாவோட அமர்ந்து இந்தப்படத்தை நீங்க பார்ப்பீர்களா? //
அதுதான் A செர்டிபிகேட் படம் என்று போட்டு இருக்கிறாங்களே....பிறகு எதுக்கு அப்பா அம்மா கூட படத்தை பார்க்கிறீங்க....?
//கற்பழிப்பின்போது ஆரம்பத்தில் எதிர்க்கும் பெண் பின் அதை விரும்புவாள்//
படத்தில் என்னைக் கடுப்பேத்திய விஷயமே இதுதான்...நல்லாக் கேட்டிருக்கீங்க பாஸ்..
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா.....அட்ராசக்க
வெல்டன் சிபி..!
hats off CB
கேள்வி கேக்கறதுக்கு ரொம்ப தில்லு வேணும் ,,,, அதுவும் நியாயமான கேள்வி கேக்க ரொம்ப ரொம்ப தில்லு வேணும் . ஆகவே உங்களுக்கு
தில்லு துரை என்ற பட்டம் வழங்கி வாழ்த்துகிறேன் வணக்கம்.
எல்லோரும் சினிமா பாக்கறத உட்டுட்டு பசங்க புள்ளைகள படிக்க வெச்சு உருபடர வழிய பாருங்க...
படம் பாக்குறப்ப கையில நோட்டு புக்கு கொண்டுட்டு போயி, நோட்ஸ் எடுத்துட்டு வந்து பதிவு எழுதுவியா?
செந்தில் சார், தங்கள் நடுநிலையான, சமூகப்பார்வையுள்ள பதிவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! என் நண்பர்கள் அழைத்தும் இப்படத்திற்கு நான் செல்லவில்லை. 22 ஆம் தேதி (நேற்று) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சென்னை டைம்ஸ் முதல் பக்கத்தில் கௌதம் பேட்டியை தயவு செய்து படிக்கவும். தான் செய்தது முற்றிலும் சரி என்றி ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.
மரியாதையா.. வேலைக்கு போனமா, சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாதனமான்னு இரு!!
மேனன் பாவமுங்க..
எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
என்ன சிபி... பதிவு போட மேட்டர் கிடைக்கலையா...
உண்மையிலே கண்டனம் தெரிவிக்கத்தான் இந்த பதிவு என்றால் எனது வாழ்த்துக்கள்...
நல்ல காலம் இந்த படத்தை நான் இது வரை பார்களே..காப்பாத்திட்டிங்க பாஸ் நன்றி
//உங்க அம்மா, அப்பாவோட அமர்ந்து இந்தப்படத்தை நீங்க பார்ப்பீர்களா?//
என் படத்த நானே பார்க்க மாட்டேன் அப்புறம் எப்படி எங்கம்மா அப்பாவோட ?!
போங்க CPS உங்க காம நெடிக்கு ஒரு அளவு இல்லாம போச்சு !
சமூக அக்கறையுள்ள கேள்விகள்... அவரிடம் இருந்து கேள்விகள் உங்களை நோக்கி வரலாம்..
"நீங்கள் மட்டும் எந்த சமூக அக்கரையில் மூன்றாம் தர படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர்கள் என்று?"... பதிலை வைத்துக்கொள்ளவும்! :)))
ஐயையோ படம் ரொம்ப மோசம் போல இருக்கு.. நல்ல வேளை பார்க்கலை உண்மையான வாதம்.. நியாயமான கேள்விகள்.
ஆட்டோ கன்பார்ம்...
நான் இன்னும் இந்தப் படம் பார்க்கலை அண்ணா.
நேரம் கிடைச்சு படம் பார்த்தா இது பத்தி சொல்லுறேன் .
நம்முடைய நாட்டில் எவ்வளவோ தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கு..
அதை சமாளிக்க முடியாமதான் சினிமாவுக்கே போறோம்..
அங்கேயும் இது தான் பிரச்சனையா?
சினிமாங்கறது நாம காலில போட்டுட்டு இருக்கற செருப்பு மாதிரி..
நடக்கும்போது போட்டுட்டு போறோம்.. வீட்டுக்குள்ள நுழையும் போது
வாசலில கழட்டி விடற மாதிரி சினிமாவை பார்த்தோமா.. காசை வீண் பண்ணினமானு
விட்டுடனும்.. அதை விட்டுட்டு தேவை இல்லாம விமர்சனம் பண்ணிக்கிட்டு ஏன்
நேரத்தை வீண் பண்ணறீங்க நண்பர்களே/
- ரவிதங்கதுரை, சேலம்...
Post a Comment