எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் செண்ட்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஃபேன்சி ஸ்டோர் & ஜவுளிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம் என்பவர்.ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ்.
இவரது மகன் நாகராஜன்.இவரது மகள் சங்கீதா. இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன் ( VISUAL COMMUNICATION)படித்து சென்னையில் சன் டி வியில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 21.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.( 2-ம் பக்கம்).
நான் விசாரித்த தகவல் மற்றும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
1. சன் டி வி-யின் ஐ டி கார்டு TAG எப்போதும் இவர் அணிந்திருப்பார்,அல்லது இவரது கைப்பையில் அது இருக்கும்.விபத்து இரவு 7 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே போலீஸ் இவரது ஹேண்ட்பேக்கை பார்த்து அவரது அட்ரஸ்,வேலை பார்க்கும் நிறுவனம் என எங்கேயும் தகவல் சொல்லாமல் விட்டது ஏன்? இரவு 10 மணிக்கு அவரது அறைத்தோழிகள் விசாரித்த பிறகே செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிரது.
2. போலீஸ்-இன் F I R காப்பியில் (FIRST INFORMATION REPORT) விபத்தைப்பார்த்த ஆட்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை,ரயில்வே ஊழியர் ஒருவரின் கூற்றுப்படி செல் ஃபோனில் பேசியபடி வந்ததாகவும்,அது ரயில்வே டிராக்கில் விழுந்திருக்கலாம் எனவும்,அதை எடுக்க இவர் முயலும்போது அனந்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகவும் தெரிகிறது.ஆனால் எல்லாம் ஒரு அனுமானமே (ASSUMPTION). ஏன் ரயில் நிலையத்தில் உள்ள பொது மக்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கவில்லை?
3. சாதாரணமாக ஒரு யானை இறந்தாலே புகைப்படம் போடும் பத்திரிக்கைகளில் இந்த விபத்தில் ஏன் டெட் பாடியை ரயில்வே டிராக்கில் இருப்பது போல் காட்டவில்லை.?
4. செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
5. கடைசியாக அவர் யாருடன் செல் ஃபோனில் பேசினார் என்பதை போலீஸ் ஏன் ட்ரேஸ் அவுட் செய்யவில்லை?
6. சங்கீதாவுக்கு வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.அவர் மன ஒப்புதலுடனே இந்த மேரேஜ் நடக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.( கல்யாணப்பத்திரிக்கைகளை நண்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்,வருங்கால கணவருடன் ஃபோனில் அடிக்கடி பேசி இருக்கிறார்). எனவே தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.
7. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் இவர் ஏன் ரயிலில் பிரயாணம் செய்து ஆஃபீசுக்கு போறார்?பத்திரிக்கை செய்தியில் ஸ்கூட்டி வைத்திருப்பதாகவும் அவர் குடி இருக்கும் காவேரி நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை ஸ்கூட்டியில் போய் அங்கே வண்டியை பாஸ் போட்டு நிறுத்தி விட்டு ரயிலில் ஆஃபீசுக்கு போவார் என கூறுகிறார்கள்.இது பற்றி போலீஸ் ஏன் எதுவும் விசாரிக்கவில்லை?
8. பத்திரிக்கை செய்தியில் தனியார் டி வி சப் - எடிட்டர் மரணம் என உள்ளது.ஆனால் அதே பேப்பரில் இரங்கல் செய்தியில் அவர் நிருபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் சன் டி வி பெயர் இல்லை. இந்த முரண்பாடு ஏன்?நிருபர் என போடும்படி நிர்ப்பந்தம் ஏதாவது நடந்ததா?
60 comments:
varen
Vadai poche..
ஏதோ நடந்திருக்குனு தெரியுது...
உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்.. இதுபற்றி அந்தப்பெண்ணின் வீட்டில் உள்ளோர் வேறேதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?
சரியான் கேள்விகள் தான் ஆனா பதில்கள் வரணுமே!?
ஏதாவது பண்ணி மூடி மறைச்சிடுவாங்க...
உச்சத்துக்கு வளர்ந்துட்டாங்க..
கண்டிப்பா மற்ற மீடியா நண்கர்குரல் கொடுத்து தவறு நடந்திருந்தால் நியாயத்திற்காக போரட வேண்டும்..
////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
உங்கள் கேள்விகள் எல்லாமே நியாயமானவை.. அவ்வப்போது இதை அப்டேட் செய்யுங்கள்.. நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்.
>>கவிதை காதலன் said...
உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்.. இதுபற்றி அந்தப்பெண்ணின் வீட்டில் உள்ளோர் வேறேதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?
இல்லை.. துக்கம் நடந்த வீட்டில் அது பற்றி விசாரிக்க முடியவில்லை.மேலும் அவர்கள் பதட்டத்தில் இருப்பார்கள்.. மேலும் அவர்களை ஏன் குழப்ப வேண்டும் என பொறுத்து இருக்கிறேன்
ஓஹ இவ்வளவு நடந்து இருக்கா நிச்சயம் கொலை செய்து போட்டு இருப்பார்கள்
யோசிக்க வேண்டிய விசயம்...
இன்னொரு அதிகாரவர்கத்தின் மறைக்கப்பட்ட கொலை
இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கா சித்தப்பு ?? இவ்வளவு கேள்வி கேட்டதுக்கு உன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்க பார்த்துக்க
என்ன நடக்குது இங்க? என்னதான் உங்க ஊர் பொண்ணா இருந்தாலும் இப்படியா விபத்தை கொலையா மாதுறது?
அந்த பொண்ணு ரயில்வே டிராக்ல விழுந்த செல்ஃபோனை எடுக்கும்போது ரயில் வேகமா வந்து மோதிருச்சு இதுதான் தினத்தந்தி செய்தி...
ஏதாவது உள்விவகாரம் இருந்தா விபத்து நடந்த பகுதி மக்கள் மறுக்க மாட்டாங்களா...
எத்தன ஏன் போட்டாலும் அது ஏன்தான்? பதில் கிடைக்காது
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏதாவது உள்விவகாரம் இருந்தா விபத்து நடந்த பகுதி மக்கள் மறுக்க மாட்டாங்களா...
adhu அது சைதாப்பேட்டை ஏரியா மக்களைத்தான் கேட்கனும்
வசந்தா நடேசன் said...
உங்கள் கேள்விகள் எல்லாமே நியாயமானவை.. அவ்வப்போது இதை அப்டேட் செய்யுங்கள்.. நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்.
மிரட்டல் ஏதும் வராம இருந்தா பண்றேன்
ராஜகோபால் said...
எத்தன ஏன் போட்டாலும் அது ஏன்தான்? பதில் கிடைக்காது
ஆயிரத்தில் ஒருவன் படத்துல எம் ஜி ஆர் பாடுன பாட்டு தான் ஞாபகம் வருது
சன் டிவி பெயரைப் போடவே பத்திரிக்கைகள் பயப்படுகின்றனவே...!
நியாயமான கேள்விகள். சம்பந்தப்பட்டவர்கள் பதில்தருவார்களா? அல்லது இருட்டடிப்பு செய்துவிடுவார்களாவென பொறுத்திருந்து பார்ப்போம்.
இறந்து போன பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆர்வக்கோளாறு ,அபத்தம் இவற்றின் உச்சம் இந்த பதிவு .
* தற்கொலை என்கிற சந்தேகமே எழவில்லை .அது பற்றி ஒரு கேள்வி ..
* ரத்த வெள்ள புகைப்படம் இல்லை என்று ஒரு சந்தேகம் . பயணிகள் பலர் தங்கள் அலட்சியத்தால் இத்தகைய முடிவுக்கு ஆளாவது அடிக்கடி நடக்கிறது .இதற்கு முன்பும் பல சமயம் புகைப்படம் வெளியானதில்லை .
* தனியார் நிறுவன பெயர் வராததும்
இயல்பானதே . பிரேமானந்தா தனியார் மருத்துவமனை இல் இறந்ததாக தான் news வரும் ,பெரும்பாக்கம் குளோபல் hospital என்று எல்லா இடங்களிலும் வராது .
*உண்மையாகவே உங்களுக்கு doubt
இருந்தால் ஒரே ஒரு வலுவான காரணத்தை யாவது குறிப்பிட்டு
இருக்கலாம் .
பத்திரிக்கை உலகில் அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை
மர்மமாகத்தான் இருக்கிறது....
இறந்து போன பெண்ணிற்காக போராடும் உங்கள் மனித நேயத்தை பாராட்டுகிறேன்..ஆனால் லாஜிக் இல்லாத உங்கள் கேள்விகள் மீதே என் கோபம் ..
காலம் பதில் சொல்லும்
SAD NEWS.ALL TRUE WILL COME OUT ONEDAY.
இதை லேசுல விடபுடாதுலே மக்கா.....
உங்க எட்டு கேள்வியும் நியாயமானது மக்கா நான் இதை என் பேஸ்புக்'கில் போடுறேன்....
என் பேஸ்புக்'ல போட்டுட்டேன் மக்கா...
இதற்க்கு நியாயம் கிடைத்தே ஆகவேண்டும்....
facebook.com/nmano1
துக்கமான செய்திதான். ஆனால் இந்தக்கேள்விகளுக்கான விடை????
இதைப்பற்றி பெண்ணின் வீட்டார் என்ன சொல்கிறார்கள் என்பதையும் போட்டிருக்கலாம்..
பெண் வீட்டாரிடம் இப்போது கேட்பதற்கில்லை. 3 நாட்கள் போகட்டும்
திகிலூட்டுகிற கேள்விகளாக இருக்கிறதே? என்ன விபரீதம்??
கண்டிப்பாக இது தற்கொலையாக இருக்கவே முடியாது கொலை தான். ஆனால் நாலுபேர பட்ட பகலிலேயே எல்லோரும் பார்க்கும் படியே கொன்னுட்டு ஈசியா மூடி மறசிட்டானுங்க இது என்ன அதுவும் பார்க்காத வேளையில் நடந்து இருக்கு இதை மறைப்பதா கஷ்ட்டம் இந்த கொ(ள்ளை)லை கார கும்பலுக்கு.
சரியான் கேள்விகள்
எதையுமே நம்ப முடியவில்லை. தினத்தந்தி ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாக மாறி ரொம்ப நாளாகிறது.
சன்டிவி குழுமம், இன்று கருணாநிதி குடும்பத்தை விட பலமாகவும், வலுவாகவும் இருக்கிறது. புதிதாக 13 சேனல்கள் தொடங்க அனுமதி பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் யாருமே ஊடகத் துறையில் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார்கள். இது அனுமதிக்கப் பட்டால், இது போல பல மரணங்கள் தொடரும்.
தீர விசாரிக்காதவரை எதுவும் உண்மை என சொல்ல முடியாது, ஆனால் தீர விசாரிக்கவும் முடியாது...
இது இயற்கை மரணம் / விபத்தாக இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர் சட்டத்திற்கு பதில் சொல்லாவிடாலும் கடவுளூக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
//செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?//
இது தமிழ் மீடியாவில் ஒரு கெட்டப்பழக்கம். லேபர் கமிஷன்ல கமிட் ஆனமாதிரி ஆயிரும்னு பயமோ என்னமோ?
மேலும் சப் எடிட்டரை நிருபராக்கினது ஏன்னு பார்த்தா "ஞ ஞமங்குது"
ஒரு வேளை நிறுவன நலனுக்கு எதிரான செய்தி எதையாச்சும் போட்டுத்தொலைச்சாரோ?
சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள்..!!
நண்பா என் தம்பி சண் டிவி எடிட்டர் தான் விசாரித்து சொல்ல சொல்கிறேன் ....
இந்த செய்தியை (சென்னிமலை தானே) குடும்பத்தினரிடம் சற்று விசாரித்து இன்னும் கொஞ்சம் கூட விலாவாரியாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிற்து. நீங்களும் பத்திரிக்கை போலவே சற்று மேம்போக்கா கொண்டு போயிருக்கிங்க.
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். மிகப் பெரிய ஆதிக்க சக்திக்கு எதிரான விஷயம் இது, கவனம் தேவை, வலுவான ஆதாரங்களுடன் எதிர்கொள்ளவேண்டும்!
////அஞ்சா சிங்கம் said...
நண்பா என் தம்பி சண் டிவி எடிட்டர் தான் விசாரித்து சொல்ல சொல்கிறேன் ...////////
பாத்துய்யா அவருக்கு பிரச்சனை வந்துடாம...!
Eppodhum Pathirikail. "thaniyar" pali. "thaniyar" hospital.. "thaniyar" peruindhu(bus) endru dhan kuripiduvarlgal... Ungaluku romba nalla theyrindhu erukumayee??!!! Neegalye edhai oru question naga kekalama??
Neinga kuda "thaniyar" vangi la.. velai parpadhaga thaney kuripiduvirgal?!!
CPS இந்த செய்தியை நாளிதழில் நானும் படித்தேன். ஆனால் வேறு எந்த சேனல்களில் இதைப் பற்றிய செய்தி இல்லை.
உங்களுக்கு தெரிந்தவர் என்பதால் எனக்கும் தெரிந்தவரே...
இதைப் பற்றி மேலும் செய்தி கிடைப்பின் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
இதில் விசாரிக்கவோ மறைக்கவோ ஒன்றுமில்லை. ரயில் ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு எத்தனையோ பேர் இறந்து போகிறார்கள். அவர்களின் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் போட்டால், தினத்தந்தியே பத்தாது. அதுமட்டுமில்லாமல், எடிட்டரோ நிருபரோ என எப்படி போட்டால் என்ன? அவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது தானே?
ரயில்வே ரோட்டை கடக்க பாலத்தை பயன் படுத்த வேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட மீடியாவில் வேலை செய்யும் இந்த பெண்மணிக்கு தெரியாமல் போனது தான் வேதனையே!
செல்போனில் பேசிக் கொண்டே ரயில்வே க்ராஸிங்கை கடந்தது தவறு..இதில் அவர் யாருடன் பேசினார் என்ன பேசினார்..என்ற விபரமெல்லாம் தேவையற்றது.என்னை பொறுத்த வரை
இந்த செய்தி துளியளவும் சந்தேகத்துக்கு இடமில்லாதது. சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது போல் உள்ளது.
ரயில்வே க்ராஸிங்கை கடப்பது தவறு என்று வேண்டுமானால் இந்த பெண்ணை உதாரணம் சொல்லலாம்.
உப குறிப்பு: பேப்பரில் வந்த செய்தியையும், தங்கள் செய்தியையும் படித்து விட்டு கருத்து சொல்லும் வாசகன் நான்.
நன்றி:
ஆச்சர்யமான விஷயம் பின்னூட்டம் இட்டவர்களில் அநேகம் பேர் logic இல்லா இந்த பதிவை பாராட்டியதுதான் ....மேலும் நான் ,பரஞ்சோதி ,RK சதீஷ் போன்றவர்கள் எழுப்பிய மாற்று கருத்தையும்
விவாதிக்கவில்லை .
என் பதிவுக்கு வந்தாய் vote போட்டாய் ,பின்னூட்டம் இட்டாய் ,
உனக்கு நானும் அதையே செய்கிறேன் .. எனபதுதான் இவர்களின் மனோ நிலையா ?
மூத்த பதிவரான TVR கூட இதனை விவாதிக்காமல் போகிற போக்கில் சரியான கேள்விகள் என்றதும் ஆச்சர்யமே !
நண்பராக இருந்தும் மாற்று கருத்தை முன் வாய்த்த RK சதீஷ் கு பாராட்டுக்கள் !
பதிவு போட்ட CPS அவர்களே மாற்று கருத்துகளுக்கு விளக்கம் கொடுங்களேன் ..
//அ.பரஞ்ஜோதி said...
ரயில்வே க்ராஸிங்கை கடப்பது தவறு என்று வேண்டுமானால் இந்த பெண்ணை உதாரணம் சொல்லலாம்.
உப குறிப்பு: பேப்பரில் வந்த செய்தியையும், தங்கள் செய்தியையும் படித்து விட்டு கருத்து சொல்லும் வாசகன் நான்.//
//கிருஷ்குமார் said...
ஆச்சர்யமான விஷயம் பின்னூட்டம் இட்டவர்களில் அநேகம் பேர் logic இல்லா இந்த பதிவை பாராட்டியதுதான் ....மேலும் நான் ,பரஞ்சோதி ,RK சதீஷ் போன்றவர்கள் எழுப்பிய மாற்று கருத்தையும்
விவாதிக்கவில்லை .
என் பதிவுக்கு வந்தாய் vote போட்டாய் ,பின்னூட்டம் இட்டாய் ,
உனக்கு நானும் அதையே செய்கிறேன் .. எனபதுதான் இவர்களின் மனோ நிலையா ?
மூத்த பதிவரான TVR கூட இதனை விவாதிக்காமல் போகிற போக்கில் சரியான கேள்விகள் என்றதும் ஆச்சர்யமே !
நண்பராக இருந்தும் மாற்று கருத்தை முன் வாய்த்த RK சதீஷ் கு பாராட்டுக்கள் !
பதிவு போட்ட CPS அவர்களே மாற்று கருத்துகளுக்கு விளக்கம் கொடுங்களேன் ..//
பரஞ்சோதி, கிருஷ்ணகுமார்
இருவரின் கருத்துக்களும் நடுநிலையாக உள்ளன..
logic இல்லா பதிவு என்று சொல்லுவது அவசிய மற்றது...
CPS தான் சொல்லியிருக்காரே எங்கள் ஊர்க்காரர் என்று...
அவர் அந்த பெண்ணின் குடும்பத்தார்க்கு ஆதரவாக சில விசயங்களை பகிர்ந்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
(பதிவுலகிலும் யாரையாவது சார்ந்துதான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு, அதுக்காக சன் tv தான் உலகில் நம்பர் 1 என்று சொல்ல வேண்டுமா, வேலிக்கு ஓணான் சாட்சி என்ற கதையால்ல இருக்கு)
ஆகாயமனிதன்.. said...
அவர் அந்த பெண்ணின் குடும்பத்தார்க்கு ஆதரவாக சில விசயங்களை பகிர்ந்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்
//
Nanri Agaya Manithan .
Yosithu paarthaal Neengal solvathum yetru kollum padi than irukirathu..
அதுக்காக சன் tv தான் உலகில் நம்பர் 1 என்று சொல்ல வேண்டுமா,
Puriyalainga..
கிருஷ்குமார்...
சன் செய்தி சொல்வது தான் சரி என்று நம்பிக் கொண்டிருப்பவர்களைச் சொல்கின்றேன் !
சன் டி.வி.சொல்லுவதுதான் சரி என்று நம்புபவர்களை என்னவென்று சொல்ல.உலகம் தெரியாதவர்கள்,அப்பாவி,முட்டாள்.என்னவேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் பதிவில் சந்தேகங்களையே அதையும் மிகவும் பலவீனமாக எழுப்பியிருகிரீர்கள்.என்ன மோடிவ் என தெரியாமலும்,ஆதாரம் இல்லாமலும் இது போல பதிவு போடுவது சரியா?
தவறுகள் நடந்திருந்தால் நிச்சயம் தண்டிக்க படவேண்டும் ...
அது யாராக இருந்தாலும் ...
உங்களின் பதிவு வாயிலாக விழிப்புணர்வு வரட்டுமே ...
எத்தனை ஏன் போட்டாலும் பதில் கிடைக்காது தான். ஆனால் உண்மையை என்றாவது ஒருநாள் வந்தே தீரும்.
இறந்த பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இது போல பல சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளன.. பாதிக்கப்ப் பட்டோர் இறங்கிப் போராடினால் தான் உண்மை வெளியே வரும்..
ஆனால் நிறைய செய்திகள் இப்படி மேம்போக்காகத் தான் எழுதப் படுகின்றன. அவ்வளவு தான் அவர்களால் எழுத முடியும். இருட்டடிப்பு என்று எதுவும் தோன்றவில்லை. சந்தேகம் இருப்பின் போலீசில் புகார் தரலாம்.
நன்றி..
எனக்கு சில விபரங்கள் கிடைத்துள்ளது. ஆனால் சில காரணங்களாலும், பெண்ணின் குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்கவும்,அதை வெளியிட முடியாத சூழல். பொறுத்திருக்கவும்.
CPS ! இதே பிரச்சனை காரணமாகத் தான் SUN TV வெளியிடவில்லையோ, என்னவோ ? எது எப்படியோ... பெற்றவர்களுக்கு பெண் போயாச்சு !
சிங்கப்பூர் மாதிரி...தண்டவாளத்தில் இறங்கினாலே அபராதம் என்றால் கூட நம்ம ஆளுக காதுகொடுத்து கேட்க மாட்டாங்க !
என்ன இது நியூட்டன் மூன்றாம் விதி பட கதை போல இருக்கிறது?
உங்கள் கேள்வி சரிதான்.
காவல் துறை கூட இந்த கோணத்தில் சிந்தித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
என்ன புலனாய்வுத்துறைக்கு மாறிவிட்டீர்களோ? நல்ல பதிவு
Post a Comment