காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.
ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.
தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.
ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால் முக்கிய இடத்தில்
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.
அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ் செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)
அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )
a
படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.
டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய்
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)
அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின் தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல் மறைத்து விடுகிறது.
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்
1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.
2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..
3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.
4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?
உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..
எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?
5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..
6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?
ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.
7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்
வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?
விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..
8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..
வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?
ரூம்ல எட்டிப்பார்த்தேன்.
பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?
9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும் பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..
என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.
10. எதுக்குடா அடி வாங்குனே?
நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?
சரி எத்தனை பேர் அடிச்சாங்க?
கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.
11. டாக்டரை பார்க்கப்போறேன்.
அவர் பேர் என்ன?
அது அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.
12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.
அவ அழகா இல்லைன்னா?
அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?
13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?
உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..
14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.
15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?
விஜய் - ஹி ஹி
வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..
16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,
வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?
17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..
என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?
18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..
19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?
20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.
21. அவன் யாரு? பாடிகாட்.
நீ யாரு? அவனுக்கு ஜோடிகாட்
22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.
23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசா பார்த்ததில்லை.
வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?
ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..
யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.
கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.
இந்தக்கதையில் ஆக்ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.
ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி செண்ட்டர்களில் 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.
டிஸ்கி - இது ஒரு மீள் பதிவு..காரணம் திடீர்னு இந்த போஸ்ட்டையே காணோம்.என் பிளாக் பாஸ்வோர்டு எனக்குக்கூட அப்பப்ப மறந்துடுது.. சிலர் எப்படியோ கண்டு பிடிச்சு உள்ளே வந்து என்னென்னவோ பண்ணிடறாங்க..ம் ம்.
நான் யார் வழிலயும் குறுக்கிடறதில்லை.. மீறி என் வழில யாராவது குறுக்கிட்டா....ஹி ஹி ஒதுங்கி போயிடுவேன்.. அல்லது ரிட்டர்ன் பேக் தான்..ஹா ஹா ( நம்மாலயே முடியல.. எதுக்கு பஞ்ச் டயலாக்?)
66 comments:
Good...விஜய்க்கு நல்ல வாய்ப்பு.
சி.பி. செந்தில் சார் உங்கள் கடமை உணர்ச்சிக்கு நன்றிகள்.
நேத்திலிருந்து படம் பார்ப்பது, அதற்கு விமர்சனம் எழுதுவது என ஆன்லைனில் ஆட்கள் குறைவாக இருந்தாலும், நிறைவாய் கடமையாற்றுகிறீர்கள்..
சி.பி. செந்தில் சார்
மிக்க நன்றிகள்..... நல்லாயிருக்கு
நான் இலங்கையில் வசிப்பதால் இன்னும் படம் இங்க வெளியாகல உங்கள் விமர்சனத்திக்கு நன்றிகள் பற்பல கோடி
நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்நன்றிகள்
Hats of you
vijay always rockssssssssssssssssssssss
i am very happy
i love you vijay annaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
விஜய் அண்ணா வெற்றி நமக்கே
நல்ல விமர்சனம் பாஸ்
பட்டய கிளப்புங்க தளபதி.............
இனிய பொங்கல் வாழ்த்தக்கள்.
Apo pongal release movies la kaavalan ku thaan neenga எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45 athigama pottu irukkeenga.. nanri
வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்தார்த் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.////
ஏன் பாஸ் இந்த படத்தின் டைரக்டர் பேரு சித்திக்குன்னு தானே கேள்வி பட்டிருக்கேன். அது யாருங்க சித்தார்த்?
சி.பி சார்...
நீங்களா இது ??
விஜயை வைச்சு மொக்க பதிவு போட்டு இருப்பிங்க
பட் விமர்சனம் சூப்பர்.
இலங்கையில இன்று ரிலிஸ் ஆகும் என்று போய் ஏமாந்தது தான் மிச்சம்
please see
http://rizalinulagam.blogspot.com/2011/01/blog-post_15.html
சூப்பர்....விமர்சனம்....
படம் கண்டிப்பாக வெல்லும் என்று தங்கள் விமர்சனம் தெளிவாக சொல்லுது....
பார்த்துட்டு வாரேன்.....
அப்ப காவலன் வெற்றி
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்.
//ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்//
ரசித்தேன்
என்னது டாகுடரு தப்பிச்சுட்டாரா... அப்போ ப்ளாக்க மூட்டிட்டு எரும மேய்க்க போக வேண்டியதுதான்.....!
இனி சீக்கிரமே பழைய விஜய்ய பார்க்கலாம்......?
விமர்சனம் நல்லாருக்கு சிபி.......!
ரொம்ப நாள் கழிச்சு விஜய் படம் ஒண்ணு பார்க்கப் போறேன்.....!
நல்லாயிருக்குன்னு சொல்றிங்க பார்க்கலாம்... நல்லது
அருமையான விமர்சனம் நண்பரே! எத்தனை விமர்சனங்கள் படித்தாலும் குமுதம், விகடனில் வரும் விமர்சனங்கள் படித்தால்தான் திருப்தி வரும்! அந்த வரிசையில் இப்போது உங்களுடைய விமர்சனமும் சேர்ந்துள்ளது! அருமை நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்!!
Blogger பாரத்... பாரதி... said...
Good...விஜய்க்கு நல்ல வாய்ப்பு.
ஆமா.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு..
பாரத்... பாரதி... said...
சி.பி. செந்தில் சார் உங்கள் கடமை உணர்ச்சிக்கு நன்றிகள்.
நேத்திலிருந்து படம் பார்ப்பது, அதற்கு விமர்சனம் எழுதுவது என ஆன்லைனில் ஆட்கள் குறைவாக இருந்தாலும், நிறைவாய் கடமையாற்றுகிறீர்கள்..
hi hihi ரெகுலரா வர்றவங்க வர்லைன்னாலும் ஆன்லைன்ல ஆளுங்க வந்துட்டுதான் இருக்காங்க..
Vinu said...
சி.பி. செந்தில் சார்
மிக்க நன்றிகள்..... நல்லாயிருக்கு
நான் இலங்கையில் வசிப்பதால் இன்னும் படம் இங்க வெளியாகல உங்கள் விமர்சனத்திக்கு நன்றிகள் பற்பல கோடி
நன்றிகள்நன்றி
நன்றி எல்லாம் எதுக்கு நண்பர்களுக்குள்ள..
varagan said...
இனிய பொங்கல் வாழ்த்தக்கள்.
January 15, 2011 5:25 PM
உங்களுக்கும்
தினேஷ்குமார் said...
நல்ல விமர்சனம் பாஸ்
நன்றி தினேஷ்
Blogger kumaran said...
Apo pongal release movies la kaavalan ku thaan neenga எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45 athigama pottu irukkeenga.. nanri
January 15, 2011 5:37 PM
தர வரிசையில் பார்த்தால் காவலன் தான் முதல்ல. ஆனா வசூல் ரீதியா சிறுத்தை முந்திடும்
Delete
Blogger டிலீப் said...
சி.பி சார்...
நீங்களா இது ??
விஜயை வைச்சு மொக்க பதிவு போட்டு இருப்பிங்க
பட் விமர்சனம் சூப்பர்.
இலங்கையில இன்று ரிலிஸ் ஆகும் என்று போய் ஏமாந்தது தான் மிச்சம்
January 15, 2011 5:57 PM
அது சும்மா ஜாலிக்கு.. விமர்சனம்னு வர்றப்ப நடுநிலைமை காக்கப்படும்
Delete
Blogger ரஹீம் கஸாலி said...
வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்தார்த் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.////
ஏன் பாஸ் இந்த படத்தின் டைரக்டர் பேரு சித்திக்குன்னு தானே கேள்வி பட்டிருக்கேன். அது யாருங்க சித்தார்த்?
சாரி ,பெயர் மாறு தோற்றப்பிழை
please see
http://rizalinulagam.blogspot.com/2011/01/blog-post_15.html
January 15, 2011 6:05 PM
Delete
Blogger “நிலவின்” ஜனகன் said...
சூப்பர்....விமர்சனம்....
படம் கண்டிப்பாக வெல்லும் என்று தங்கள் விமர்சனம் தெளிவாக சொல்லுது....
பார்த்துட்டு வாரேன்.....
ஓக்கே ஓக்கே
யாதவன் said...
அப்ப காவலன் வெற்றி
இதுல என்ன சந்தேகம்?
Delete
Blogger இனியவன் said...
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்.
நன்றி சார்
தர்ஷன் said...
//ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்//
ரசித்தேன்
நன்றி ,நுணுக்கமான வாசிப்பு உங்களுது
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டாகுடரு தப்பிச்சுட்டாரா... அப்போ ப்ளாக்க மூட்டிட்டு எரும மேய்க்க போக வேண்டியதுதான்.....!
January 15, 2011 11:57 PM
ஹா ஹா அடடா எனக்கு அந்த வேலையும் தெரியாதே
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
இனி சீக்கிரமே பழைய விஜய்ய பார்க்கலாம்......?
ஆனா கதை செலக்ஷன்ல கவனமா இருக்கனும்.
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
விமர்சனம் நல்லாருக்கு சிபி.......!
January 16, 2011 12:00 AM
நன்றி ராம்சாமி..உங்களை மாதிரி மனம் விட்டுப்பாராட்டற நண்பர்களூக்காகத்தான் எழுதறேன்
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப நாள் கழிச்சு விஜய் படம் ஒண்ணு பார்க்கப் போறேன்.....!
பார்த்து பதிவு போடுங்க
Delete
Blogger Riyas said...
நல்லாயிருக்குன்னு சொல்றிங்க பார்க்கலாம்... நல்லது
January 16, 2011 1:10 AM
நன்றி ரியாஸ்
Delete
Blogger மாத்தி யோசி said...
அருமையான விமர்சனம் நண்பரே! எத்தனை விமர்சனங்கள் படித்தாலும் குமுதம், விகடனில் வரும் விமர்சனங்கள் படித்தால்தான் திருப்தி வரும்! அந்த வரிசையில் இப்போது உங்களுடைய விமர்சனமும் சேர்ந்துள்ளது! அருமை நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்!!
அடேங்கப்பா.. என்னை ரொம்ப தூக்கி வெச்சுட்டீங்களே. அந்த அளவு எனக்கு தகுதி இல்ல. ஆனா தகுதையை விரைவில் வளர்த்துக்கறென். ஊக்குவிப்புக்கு நன்றி சார்
சிபிஎஸ் உங்க நடுநிலைத் தன்மையை அப்பட்டமாகக் காட்டி விட்டீர்கள்.. தாங்கள் போடும் நகைச்சுவையால் தங்களுக்கு பொருத்தமற்ற ஒரு பெயருடன் இருந்த விஜய் ரசிகருக்கு உங்களின் உண்மை மனதை காட்டிவிட்டீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
எனக்கு ஹீரோயிசம் இல்லாத படங்களே அதிகம் பிடிக்கு்ம்... அதேபோல் விஜய் மீண்டும் நடிகனாகி விட்டார் என நினைக்கிறேன்... அவரது மீள் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதிலி் சந்தோசப்படுகிறேன்..
// அடேங்கப்பா.. என்னை ரொம்ப தூக்கி வெச்சுட்டீங்களே. அந்த அளவு எனக்கு தகுதி இல்ல. ஆனா தகுதையை விரைவில் வளர்த்துக்கறென். //
என்ன சார் இன்னும் தகுதி வேணும்... அருமையான விமர்சனம்...
ஹீரோயின் தோழியை எல்லாம் கண்டுக்காதீங்க. நாலஞ்சு வருஷம் கழிச்சு செமையா டெவலப் ஆகி வருவாங்க. திரிசால இருந்து சோனா வரைக்கும் ஹீரோயின் தோழியா வந்தவங்கதான.............
இந்தவாரம் தமிழ்மணத்தில் 1-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
நல்ல விமர்சனம்.
நல்ல விமர்சனம்.
//அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )//
அவருடைய படத்தை எப்படியாவது தேடிப் பதிவில் சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன்..!!ஹி.ஹி..ஹி...
நல்ல விமர்சனங்க..
விஜய் தப்பிச்சிட்டாரா.. ரைட்டு..
அப்போ.. தைரியமா தியேட்டர் பக்கம் போகலாம்னு சொல்லுங்க.. சரிங்க.. உங்க மேல பாரத்தைப் போடறேன்.. எப்படியோ பழைய பார்முக்கு வந்தால் சந்தோஷமே...
சார்.. ரெண்டே நாள்ல மூணு பட விமர்சனம்.. எப்போதுமே தியேட்டர் பக்கம் தான் இருப்பீக போல...
ஆத்தா நான் பாசாயிட்டேன்.......................
சூப்பர் விமர்சனம்
உங்களுகு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ம.தி.சுதா said...
சிபிஎஸ் உங்க நடுநிலைத் தன்மையை அப்பட்டமாகக் காட்டி விட்டீர்கள்.. தாங்கள் போடும் நகைச்சுவையால் தங்களுக்கு பொருத்தமற்ற ஒரு பெயருடன் இருந்த விஜய் ரசிகருக்கு உங்களின் உண்மை மனதை காட்டிவிட்டீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
January 16, 2011 7:46 AM
ஹா ஹா ஹா சுதா.. இனிமேலாவது கெட்ட வார்த்தைல என்னை திட்டும் விஜய் ரசிகர்கள் நல்ல வார்த்தைல திட்டுவாஅங்கன்னு எதிர்பார்க்கறேன்..
Delete
Blogger ம.தி.சுதா said...
எனக்கு ஹீரோயிசம் இல்லாத படங்களே அதிகம் பிடிக்கு்ம்... அதேபோல் விஜய் மீண்டும் நடிகனாகி விட்டார் என நினைக்கிறேன்... அவரது மீள் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதிலி் சந்தோசப்படுகிறேன்..
ஆமா.. யதார்த்தமான நடிப்பு.
அட்ரா சக்க..
நன்றி CPS !
காவல்காரன்
http://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_15.html
படத்தின் மொத்த வசனத்தையும் எழுதிட்டீங்களே. நோட் பேட் கொண்டுபோய் குறிப்பெடுத்தீங்களோ? படத்தை ரசித்தீர்களா? இல்லை நோட் எழுதுவதில்குறியாக இருந்தீங்களா? :)
எப்படியோ விஜய்க்கு இந்த படமாவது கை கொடுக்கனும் இல்லன்னா......
இல்லன்னா என்ன மறுபடியும் படம் எடுக்க போறாரு. என்ன சம்பளம் தான் குறைஞ்சிடும்.
this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்
கடந்த காலங்களில் விஜய் தன் பேச்சை தட்டாத இயக்குனர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்தார். இதற்கு அவரின் அப்பாவும் ஒரு காரணம். என்னிக்கி விஜய் சுயமா முடிவு எடுக்கிராரோ அன்னிக்கிதான் அவருடைய திறமை வெளியே வரும்.---
வெட்டி ஆபிசர்
@சி.பி.செந்தில்குமார் super sir vijay kandipa thannoda styleah mathikitarunu intha padathoda resultla irunthe theriyuthu
nanbhan
thupaki
yokan
all the best vijay
super lovely movie and my favourate movie
Post a Comment