1 `நாச்சியார்'
பெண் கெட்ட வார்த்தை பேசினால் அதை வைத்து தான் அவர் தைரியசாலி என்பதை காட்டலாம் என்பது போன்ற ஒரு தப்பான முன் உதாரணத்தை இயக்குநர் பாலா தன்னுடைய நாச்சியார் படமும் சொல்ல வருகிறாரா?
இயக்குனர் பாலா படம் என்றாலே கதையில் தொடங்கி பட ரிலீஸ் வரை அனைத்திலுமே சர்ச்சை தொடங்கிவிடும். இதற்கு நேற்று ரீலிசான பாலாவின் நாச்சியார் டீசரும் விதிவிலக்கல்ல. பாலா படம் என்றாலே அதில் "கவுச்சி" நெடி தூக்கலாகவே இருக்கும். இதை அவரின் எல்லா படத்திலும் மக்கள் உணர்ந்திருப்பார்கள். எதார்த்தத்தை காட்டினாலும், திரையில் பார்க்கும் போது அது பலருக்கு முகசுளிப்பையே தந்திருக்கிறது. தமிழ் சினிமா புரட்சியாளர், உழைக்கும் மக்களின் உண்மை வாழ்க்கையை செல்லுலாய்டு திரையில் காட்டுபவர் என்றெல்லாம் பாலா பாராட்டப் பெற்றிருந்தாலும், அவருக்கான தரத்திலிருந்து அவர் அடிக்கடி இறங்கி விடுவது யோசிக்க வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தில் இடம்பெறும் வசனங்களும், சரளமாக புரண்டோடும் கெட்ட வார்த்தைகளுமே. என்ன தான் நிதர்சனமாக இருந்தாலும் அதை ஏன் படம் முழுவதிலும் வைக்க வேண்டும் என்பது தான் கேள்வி
இயக்குநர் பாலாவின் `நாச்சியார்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று முதல்முறையாக பரபரப்பாக பேசப்படுகிறது. 52 நொடிகள் ஓடும் முன்னோட்ட காட்சியில் நாயகி ஜோதிகா பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை ஒன்றை கூற, பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது நாச்சியார்.
காவல்துறை அதிகாரி நாச்சியார்
இளையராஜா இசையில் ஜி.வி பிரகாஷ், ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் நாச்சியார். இயக்குநர் பாலாவுக்கு நாச்சியார் 8வது திரைப்படம். இதில், நாச்சியார் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜோதிகா.
அவர் நடித்த முந்தைய திரைப்படமான மகளிர் மட்டும் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாச்சியர் திரைப்படத்தின் முன்னோட்டமே பெண்களை இழிவுடுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது
இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள் எதார்த்த மனிதர்களையும், விளம்புநிலை மக்களின் வாழ்வியலையும் அழகாக பதிவு செய்யக்கூடியவை. 1999களில் வெளியான சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வலுவாக காலூன்றினார் பாலா. சேது படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.
படத்தின் முன்னோட்ட காட்சி கடந்த 15ஆம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 28 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இதுவரை பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக கவனத்தை ஈர்த்த முன்னோட்டம் நாச்சியார் என்றே கூறலாம்.
இந்த முன்னோட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதற்கும், விவாத பொருளாக மாறியதற்கும் முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த ஒற்றை வார்த்தை. ஒரு காட்சியில் காக்கி சட்டையில் வரும் ஜோதிகா எதிரே இருப்பவரை அறைந்துவிட்டு '****** பயலுக' என்று கூறியிருப்பார்.
நாச்சியார் பட முன்னோட்ட சர்ச்சை குறித்து மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகியிடம் கேட்டபோது, "ஒரு விஷயத்தில் நாம் ஆட்சேபணை தெரிவிப்பதற்குமுன், முழு திரைப்படத்தை பார்த்தபின்புதான் அந்த காட்சி அமைப்பு எந்த பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை கூற முடியும். ஆனால் நாச்சியார் விஷயத்தில் அவ்வாறு முழுப்படம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை" என்றார்.
எதார்த்தம் என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், ஓர் ஆண் ஒழுக்கம் தவறும்போது இதுபோன்ற எந்தவொரு இழி சொல்லும் பயன்படுத்தப்படுவது இல்லையென்றும், இந்த சமூகமே பெண்களை வலுக்காட்டாயமாக ஒரு முறைக்குள் தள்ளிவிட்டு தற்போது பெண்களை இழிவுப்படுத்தும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
விளம்பர யுக்திக்காக பாலா இந்த சொல்லை இதில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதைவிட கொச்சையான சொற்களை கதாநாயகர்கள் வசனமாக பேசியுள்ள போதும் ஜோதிகா என்ற ஒரு பெண், பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லை பேசியிருப்பதால் இப்பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது என்றும் வாசுகி தெரிவித்தார்.
மேலும், இயக்குநர் பாலா அவருடைய படங்களின் மூலமாக ஆர்வத்தை தூண்டலாம் அல்லது காட்சி அமைப்புகள் மூலமாக தூண்டலாம். ஆனால் ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவது சரியான யுக்தியில்லை என்றார்.
ஈரோடு ஆனூர் , மகாராஜா , விஎஸ்பி ரிலீஸ்
2 வீரா
ரஜினி படத்தின் பெயர்களுக்கு தமிழில் செம டிமாண்ட். இப்போது வீரா என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க, கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா மேனன் மலையாளத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்.
வீரா பற்றி பேசிய அவர், வீரா படத்தில் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி நடித்ததாக கூறினார்.
சில மலையாள நடிகைகள் போலின்றி, பாடல் காட்சிகளில் தாராளம் கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதன் காரணமாக வீராவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனனுக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது
‘யாமிருக்க பயமேன் ’படத்தில் அசோஷியேட் டைரக்டராகப் பணி புரிந்த ராஜாராமன் இயக்கியுள்ள படம் வீரா. நடிகர்கள் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பிராமய்யா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ராஜாராமன் கூறுகையில், 'வேண்டும் என்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீரா படத் டைட்டிலை நாங்கள் பயன்படுத்தவில்லை. உண்மையில், இந்தப் படத்துக்கும் அதன் டைட்டிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசியல்வாதி மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில கதாபாத்திரங்கள் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்.
வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வரும் அக்கதாபாத்திரங்களின் வாழ்வியலுடன் இணைந்த ஒன்று தான் அப்பேச்சுக்கள். எனவே சென்சார் குழுவினரிடம் அதை நீக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நாளை (பிப்ரவரி 16) வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ் உள்ளது’ என்றார் இயக்குநர்.
ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்
3 நாகேஷ் திரையரங்கம்'
'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்துக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னை தி.நகரில் தனது பெயரில் ஒரு தியேட்டர் வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திகில் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஐசக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன் அனுமதி பெறவில்லை. இந்தப் படம் வெளியானால் எங்களது குடும்பத்திற்கு உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.
மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி, விளம்பரத்திற்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கினால் இந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ''படத்தயாரிப்பு நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில்தான் படத்தை எடுத்துள்ளது. ஆனால், நாகேஷ் தியேட்டர் என்ற பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நாகேஷ் திரையரங்கம்’ பேய் படத்துக்கு 19 இடங்களில் தணிக்கைக்குழு வெட்டு கொடுத்துள்ளது.
நடிகர் ஆரி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஆஷ்னா சவேரி, அதுல்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், மாசும் சங்கர், சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை வந்த பேய் படங்களிலிருந்து புதிய கோணத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறர் இசாக்.
ஏற்கனவே இவர் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். இந்தப் படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். படத்துக்கு நவுஷத் இசையமைத்துள்ளார். படத்தை ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார்.
ஈரோடு ஸ்ரீநிவாசா , மகாராஜா ரிலீஸ்
4 மனுஷனா நீ
பிப்ரவரி 16 ந் தேதி திரைக்கு வரப்போகிறது மனுஷனா நீ! (இப்படியொரு பேரு வச்ச டைரக்டருக்கு நாலா புறத்திலிருந்தும் ‘நச நச’ போலிருக்கிறது) மெடிக்கல் கிரைம் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தாறுமாறாக புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கஸாலி தலைமையில் ஒரு எலும்புக்கூடு ஊர்வலத்தையே நடத்திவிட்டார்கள். அட… இதென்னய்யா கொடுமை? யெஸ்… படத்தில் வண்டி வண்டியாக கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிஜத்திலும் சொல்லக் கிளம்பிய கஸாலிக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் செம மரியாதை. (அட… இது ஒரிஜனல் மரியாதைங்க…) ‘தலைக்கவசம் அணியுங்கள்’ என்ற வேண்டுகோள் வாசகம் அடங்கிய பேனர்கள், துண்டு பிரசுரங்களோடு இந்த எலும்புக்கூடு மனிதர்களின் ரேலியையும் நடத்தி அசத்திவிட்டார் கஸாலி. போலீஸ் அதிகாரிகளே ஆர்வத்தோடு முன் வந்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டது தனி அப்ளாஸ்.
இவ்வளவு நல்ல வேலைகள் செய்யும் கஸாலிக்கு அவர் படத்தின் ஹீரோயினாலேயே அநியாயத்துக்கு சங்கடம். அனு கிருஷ்ணா தவிர்த்து மனிஷா கவுர் என்ற மலேசியா நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார். ஆள் முக்கால், ஆடை கால் என்கிற விகிதாச்சாரத்தோடு நடித்துத் தள்ளியிருக்கும் மனிஷா கவுரையும் சென்னைக்கு வரவழைத்து இந்த ரேலியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் ஹேர் டிரஸ்சர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன், இவர்களுடன்தான் வருவேன். ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் பண்ணுங்க என்றெல்லாம் அழிச்சாட்டியம் காட்டிய மனிஷா, லிஸ்ட்டை மேலும் நீட்டிக் கொண்டே போக, ‘மனுஷியா நீ. வைம்மா போனை’ என்று துண்டித்தாராம் கஸாலி.
முயல்னு நினைச்சா, முள்ளம் பன்றியா இருக்குதேங்க!
சமீபத்தில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் 19 இடத்தில் கட் கொடுத்தனர். முதலில் சில காட்சிகளை அனுமதிக்க கேட்ட இயக்குனர் பின்னர் கட்களுக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
நன்றி - பிபிசி தமிழ் , வெப் துனியா , தினமணி. , த தமிழ் இந்து