Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Wednesday, August 12, 2015

மனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்

ஓவியம்: மனோகர்
ஓவியம்: மனோகர்
ஆடு மேய்ப்பவர்களிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். கதைகளைச் சொல்லவும் கேட்கவும் அவர்களிடம் விஸ்தாரமான பொழுதுகள் உண்டு.
முக்கியமாக இவர்கள் பேய் பிசாசுக் கதைகள்தான் அதிகம் சொல்லுவார்கள். மக்களிடம் பயம், பீதிகளை உண்டாக்கினால்தான் ராத்திரிகளில் தைரியமாக‌ வெளியே வர மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை!
கிடை தூங்கிக் கொண்டிருக்கும் போதே இயங்கிக் கொண்டிருக்கும் அதனுடைய அமைப்பு அப்படி.
ஈனுவதற்கு ராப்பொழுதுகள்தான் வசதி போலிருக்கிறது. தூக்கம் ஒரு பக்கம்; கிடாய்கள் பெண் ஆடுகளில் முடையடித்து, முகர்ந்து பார்த்து விர‌ட்டி விரட்டி பொலிந்துகொண்டிருக்குங்கள்.
ரா வேட்டையாடும் நரிகள், ஓநாய்கள் ஒரு பக்கம்.
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் இங்கே மனுசன்தான் பிரசவ‌ம் பார்க்கிறான். காட்டு ஆடுகளுக்கும் காட்டு மாடுகளுக் கும் அவை தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்கின்றன. அதேபோல் காட்டுப் பெண்களும் அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சொல்கதையில் ஒரு காட்டு வேட்டு வப் பெண், தனக்குத் தானே பிரசவம் பார்த்துப் பிள்ளைப் பெத்து, தொப்புள் கொடியைப் பல்லால் துண்டித்து, பச்சைத் தண்ணீர்த் தொட்டுக் குழந்தை யைத் துடைத்து, குழந்தையை புஜத்தில் சேர்த்தணைத்து வைத்துக் கொண்டு, சேகரித்துக் கட்டிய விறகுச் சுள்ளிகள் கொண்ட கட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டுப் போகிறதை, புலிவேட்டைக்காக மரத்தின் மேல் இருந்த ராஜா ஒருவன் பார்த்ததாக அந்தக் கதையில் வருகிறது.
பசு மாடு ஈனும்போது பார்க்கக் கிடைப் பது பாக்கியம் என்கிறது ஒரு நம்பிக்கை. ஈனும் பசுவை அந்த நிலையில் பிரதட் சணம் வந்து வணங்குவது மிகப் பெரிய புண்ணியம் என்கிறது இன்னொரு நம்பிக்கை.
குற்றாலத்தில் எனது நண்பர்களோடு இதுபற்றிய பேச்சு வந்தபோது, நான் அவர்களிடம் சில கிரித்திரியமான கேள்விகள் கேட்டேன்.
‘‘உங்களில் யாராவது குரங்கு ஈனும்போது பார்த்தது உண்டா?'' என்று கேட்டு வைத்தேன்.
ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘நீங்கள் குற்றாலவாசிகள். இங்கே உள்ள குரங்குகளும் குற்றாலவாசிகள். இங்கே முந்தி வந்தது அதுகளா? நீங்களா?'' என்றேன்.
சிரித்தார்கள் நண்பர்கள்.
‘‘சிரிக்கிறதுக்குக் கேட்கவில்லை நான்; நிசமாகத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்” என்றேன்.
‘‘எங்களுக்குத் தெரியவில்லை; தெரிந்தால் நீங்களே சொல்ல‌லாமே...'' என்றார்கள்.
‘‘குரங்குகளின் பூர்வீகம்தான் இந்த மலை. அதுகள் எங்கிருந்தும் வர வில்லை. வந்தவர்கள் நாம்தான் என்று தோன்றுகிறது'' என்றேன்!
“சரியான கரிசல் காடையா நீங்க?” என்று சொல்லிச் சிரித்தார் தீப.நடராஜன்.
சிறந்த உழைப்பாளிகளையும், அதி லும் யோக்கியமானவர்களையும், பெண் ணைப் பெற்றவர்களும் பெண்களும் கண்டுபிடித்துவிடுவார்கள். ரொம்ப அலைய வேண்டியதில்லை. மாப் பிள்ளைகளுக்கு, அவர்களுக்குப் புழக் கடையிலேயே பச்சிலை கிடைத்துவிடும்.
அப்படித்தான் தூங்காநாயக்கரும் ‘ஆம்புட்டுக்' கொண்டார் உத்தியம்மாவிடம்.
இரு உழைப்பாளிகள் சேர்ந்து பாடுபட்டால் செல்வம் கூடிவரும்.
கிடையிலும் அவர் செயலாக இருந்தார்; ஊரினுள்ளும் செயலாளரானார்.
அதிகம் பேசாதவருக்கு எப்போதும் மதிப்புதான்!
கலியாணம் முடிந்ததும் தூங்காநாயக் கர் இன்னொரு மனுசனானார். கிடையில் இருந்து அவர் ‘தள்ளிவைக்கப்'பட்ட மாதிரி எல்லாரும் சேர்ந்து அவரை வீட்டுக் காவல் வைத்ததுபோல ஆக்கிவிட்டார்கள்.
உத்தியம்மா நல்ல விளைந்த பெண் பிள்ளை. உலகத்தைப் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்ட பொம்பிளை.
எப்போது பார்த்தாலும் ஒரு துருதுருப் புத் தெரியும். தானும் ஒரு உலகம் கண்டு, அவருக்கும் ஒரு உலகத்தைக் காட்டினாள். புது மனுசனாகிவிட்டார் தூங்காநாயக்கர்!
விளக்கேற்றாமலேயே பிரகாசம் கொண்டது வீடு. அவள் வந்தபிறகு வீடே தனியொரு மணம் கொண்டது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வாரம் இரு முறை உச்சியில் இருந்து உள்ளங் கால்வரை எண்ணெய்த் தேய்த்துத் தலைமுழுக்கு என்று ஏற்பட்டது. இந்த மாதிரிப் புது மாப்பிள்ளைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய்த் தலைமுழுக்கு. மற்ற சாதாரண நாட்களில் நல்லெண்ணெய்தான் தலை முழுக்கில். இந்த நாட்களில் மட்டும் விளக்கெண்ணெய்தான் பயன்பட்டது தலைமுழுக்குகளுக்கு.
ஏண்டாப்பா என்று கேட்டால், ‘சூடுல்லா' என்பார்கள்.
‘‘என்னா சூடு? வேனா வெயிலில் மண்டையைப் பிளக்க ஆடு மேய்த் தவனுக்கு இல்லாத சூடு இதுல வந்துட்டதாக்கும்.”
‘‘லேய் கோட்டிக்காரா, அது மண்டை யிலே மட்டுந்தாம் சூடு, இதுல ஒடம்பு பூராவும் கடுஞ்சூடு டேய்'' என்பார்கள்.
‘‘அதுலேயும் ஒருநாள் மாத்தி ஒருநாள் தவறாமக் கோழிக் கறி, கேக்கணுமா...'' என்பார்கள்.
ஆக, தூங்காநாயக்கனெத் ‘தொவைச்சி’ எடுத்துருவாங்கன்னு சொல்லு!
பொண்ணு வீட்டு விருந்துன்னா சும்மாவா. மூணு மாசம்!
பிட்டி நகண்டு போகும் மாமனார் வீட்டுக்கு. மாப்பிள்ளை தனது ஊருக் குத் திரும்பிவரும்போது, யாரு இதுன்னு கேக்கணும். அப்படி ஊதி உதைச்சிப் போயிறணும்.
பொண்ணு வீட்டில் இருந்து வரும் போது அந்த ஊரு கம்மாக்கரையிலேயோ, ஊர் மடத்துக்கு முன்னாலயோ இளவட்டக் கல் கிடக்கும். அதைத் தூக்கி தோளுக்கு ஏற்றி, பின்புறம் விழும்படி போடணும். அப்படிப் போட்டு விட்டால் அந்த மாப்பிள்ளைக்கு ஊர் இளவட்டங்கள் மாப்பிள்ளையின் கையில் வெத்திலை பாக்கும், கால் ரூபாயும் கொடுத்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள்.
தூங்காநாயக்கர் இளவட்டக் கல்லை யும் எடுத்து முதுகுக்குப் பின்பக்கம் வீசி எறிந்து, அந்த ஊர் இளவட்டங்களுக்கு வெத்திலையில் வெள்ளி ரூபாய் ஒன்றை வைத்துக்கொடுத்துவிட்டு வந்தார்.
பார்வைக்கும் அவர் கொஞ்சம் ஆள் அம்சமா இருப்பார்.
ஆடுகளில் ரெட்டைக் குட்டி ஈனுகிற வம்சம்னு இருக்கிறதுபோல மனுசக் குடும்பங்களில் ஒத்தைப் பிள்ளை வம்சம் என்று உண்டு. தூங்காநாயக்கர் வீடுகளில் ஒரு பிள்ளைதான் பிறக்கும்.
இந்தக் குடும்பம் கட்டுப்பாடுங்கிற தெல்லாம் ‘நேத்து’ வந்தது. ‘ஒரு பிள்ளை வம்சம்’ என்பது பூர்வீகத்தில் இருந்து வருவது.
ஒரே ஆண்பிள்ளை; அல்லது ஒரே பெண்பிள்ளை. மிஞ்சிப் போனால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.
ஒரே பிள்ளை மட்டும் பெறுவதால் அந்தப் பெண்கள் இடை சிறுத்து, கடைசிவரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டிலும் சரி, காட்டிலும் சரி... வேலை களில் அவர்களுக்கு ஈடு அவர்களே. உத்தியம்மா கம்மம் புல் குத்தினால் வீடே அதிரும். தெருவழியாகப் போகிறவர் கள் கொஞ்சம் நின்னு பார்த்துவிட்டுப் போவார்கள்.
- இன்னும் வருவாங்க…


நன்றி- த இந்து
 கி.ராஜநாராயணன்

Thursday, June 11, 2015

மனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க!-கி.ராஜநாராயணன்

தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற சிறிய புத்தகத்தில், கரிசல்காட்டில் அவர் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு சம்சாரி சீனிவாசராவை ராச்சாப்பாட்டுக்கு அழைத்துப் போகிறார். நல்ல பசி இவ ருக்கு. ஆனாலும், அந்த ரசமும் குதிரை வாலி அரிசிச் சோற்றையும் அவரால் சாப்பிட முடியவில்லை. அந்தச் சம்சாரி வேகமாகப் பிழிந்து பிழிந்து சாப்பிடு வதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டி ருந்ததாகச் சொல்லுகிறார்.
முதன்முதலில் ரங்கூனில் இருந்து நெல்லரிசி வந்து இங்கே விற்கும்போது ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி கிடைத் தது என்று சொன்னால், இப்போது நம்பவே மாட்டார்கள். அதோடு அதனுடைய ருசியையும் சொல்லணும். கரிசல்காட்டுக்காரனுக்கு நெல் அரிசி்ச் சோறுதான் ருசியான பலகாரம். ஓட்டல் களைப் பார்த்து அவன் ஓடியதுக்கு இதுவும் ஒரு காரணம்.
சின்னப் பையனாக இருந் தப்போ, ஓட்டல்களில் பாம்பே ரவையில் ஆக்கிய உப்புமாவை ரொம்ப விரும்பி உண்பேன். அதையெல்லாத்தையும்விட ஓட்டல்களில் ரவா தோசை அப்படி ஒரு ருசி அந்தக் காலத்தில்.
நான் இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் என்னைப் புரட்டிப் போட்டது அந்தக் காலத்து ஓட்டல்களின் பூரிக் கிழங்கு. அந்தக் கிழங்குக்கும் பூரிக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்!
அந்தக் கிழங்கின் ருசியைப் பற்றி ரசிகமணியிடம் சொன்னேன். உற்சாக மாகிவிட்டது அவருக்கு. ‘‘அந்தக் கிழங்கை வைத்துக்கொண்டு ஒரு ஹிண்டு நியூஸ் பேப்பரையே சாப்பிட்டு விடலாமே’’ என்றார் அவர். அதை நாங்கள் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி இப்பவும் சிரிப்போம்.
அந்தக் காலத்தில் அந்த உருளைக் கிழங்கின் அப்படியான ருசிக்குக் காரணம்? ஊட்டியின் குளிர், மண், அந்த மழைதான்!
இப்போது உருளைக் கிழங்கு எந்தத் தரையிலும் விளைவதால் ருசியும் தரை மட்டமாகிவிட்டது. வெள்ளைப் பூண்டி லும்கூட மலைப் பூண்டின் ருசி தரைப் பூண்டுக்குக் கிடையவே கிடையாது.
சென்னையில், ஒரு பிரபலமான கல்யாணத்துக்கு நாரணதுரைக் கண்ணன், கு.அழகிரிசாமியை அழைத் துக்கொண்டு போனார். அங்கே பாதாம்கீர் தந்துள்ளார்கள். அருமையாக இருக்கிறதே என்று விரும்பி வாங்கிக் குடித்தார்களாம். கு.அழகிரிசாமியால் மட்டும் குடிக்கவே முடியலையாம். என்ன செய்கிறதுனும் தெரியல. இதை என்னிடம் அவனேதான் சொன்னான். நானும் பாதாம்கீர் குடித்தது இல்லை.
அது எப்படியிருக்கும் என்று கேட் டேன். ‘‘அதை ஏம் கேக்கிற. ஒரே மூட்டப் பூச்சி வாடை அடிக்குது. கொண்டா கொண்டான்னு வாங்கி வாங்கி மொக்குரான்க’’ என்று அப்போது அப்படிச் சொன்னவன், அதே பாதாமில் தயாரித்த பாதாம் அல்வாவைச் சாப்பிட என்னை கோந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஆரிய பவனுக்கு அழைத்துச் சென்றவனும் அவனே!
கிராமப்புறங்கள்ல நாங்கள் தின்னு அனுபவிச்ச பலகாரப் பண்டங்கள் கருப் பட்டித் தோசை, கருப்பட்டிப் பணியாரம், சுசியம், சினைக் கொழுக்கட்டை, உளுந்த வடை, ஆமைவடை, முந் திரிக் கொத்து, மாவு உருண்டை, முறுக்கு வகைகளெல் லாம் இப்போ இப்படித்தான்.
ஏழை சம்சாரி வீடுகளில் அப்போ தெல்லாம் தோசைக்குப் போட்டாலே கொண்டாட்டம்தான்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேட் டாராம். ‘‘ஏண்டா நீ நேத்துப் பள்ளிக் கூடத் துக்கு வரலை?’’ என்று. அதுக்கு அந்தப் பையன் ‘‘நேத்து எங்க வீட்டுல தோசைக் குப் போட்டிருந்தார்கெ சார். அதான் வரல’’ என்று பதில் சொல்லியிருக்கான்.
இந்தப் பையன் பெரியவனாகி, பட் டணத்துக்குப் போய் மிட்டாய்க் கடையை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது தான் ‘பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சுப் பார்த்ததுபோல’ என்கிற பேச்சு வந்திருக்கும்போல!
ஆனால், நான் முதன்முதலா முறைச் சுப் பார்த்தது திருநெல்வேலி போனப்ப நிலக்கண்ணாடி வைச்ச முட்டாசுக் கடையைத்தான். அந்த நிலக்கண்ணாடி யில் நமது மூஞ்சி முகரை எல்லாம் பளிச்சென்று தெளிவாத் தெரியும். அதை தரமான அசல் பெல்ஜியம் கண்ணாடி என்பார்கள். அதுசரி, இருந்துட்டுப் போகட்டும்.
இந்தக் கண்ணாடிங்க முடி திருத்துற கடைங்கள்ல இருக்கிறது சரி. வித விதமா இனிப்புகளை நிறுத்துப் போடுற கடைகள்ல ஏன் வைக்கணும்?
ஒருநாள், கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரஹரியிடம் இந்த சந்தேகத் தைக் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டு அழகிரிசாமி முதல் எல்லோருமே சிரிச்சோம்.
திருநெல்வேலியில் லாலாக்கடை அல்வா பிரிசித்தி பெற்றது. இந்த லாலாக்களில் ஒருத்தர் தேசிய விடுதலை இயக்கத்திலும், நெல்லையில் நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுப் பிரி சித்திப் பெற்றார்.
தமிழ்நாட்டுப் பலகாரங்களில் கீர்த்தி பெற்றது என்று பலதைச் சொல்லலாம். ருஷ்ய நாட்டில் இருந்து வந்த பிரதமர் குருஷேவ்வுக்கு, நெய்யில் சுட்ட ஒரு உளுந்த வடையைக் கொடுத்தார்களாம். தின்னு பார்த்துவிட்டு இன்னொண்ணு கிடைக்குமா என்று கேட்டார் என்பார்கள்.
பயணம் போகும்போது உண்ணக் கொண்டுபோக என்றே நம்மிடம் பலது உண்டு. ஒருநாள் ‘கப்பல் குழம்பு’ பற்றிக் கேள்விப்பட்டேன். இதுவும் பலநாட்கள் தாக்குப்பிடிக்குமாம்.
கிருபானந்த வாரியார் ஒருநாள் தண்ணீர் விடாமல் செய்யும் குழம்பைப் பற்றிச் சொன்னார்.
குற்றாலத்தில் பெரிய அண்ணியார் (ரசிகமணி அவர்களின் வீட்டம்மா) சிறப்பாக ஆக்குவார் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
நாங்களே ஒருநாள் ரசிகமணி அவர் களிடம் இதுபற்றிக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே கேள்விப்பட்டா மட்டும் போதுமா? சாப்பிட்டும் பார்க்க வேண்டாமா என்று கேட்டார். மறுநாளே எங்களுக்கு அது அண்ணியாரிடம் இருந்து கிடைத் தது. ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தோம்.
எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் குறித்து வைத்துக்கொள் கிற புத்தியெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படிக்கவில்லை.
ருசித்து அனுபவிச்சுச் சாப்பிடுகிறது என்பதையே சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
- இன்னும் வருவாங்க…
a


thanx - the hindu

Monday, June 08, 2015

என்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநாராயணன்

என்னோடு பழகியவர்களைப் பற்றியெல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்த மட்டும் பார்க்கலாம்.
என்னைப் போன்ற உதவாக்கரைகள் கிராமங்களில் அபூர்வம்தான்.
‘முளைக்கும் செடிகளில் எதுவும் களையில்லை…’ என்று சமீபத்தில்தான் படித்தேன்.
இதேபோல்தான் மனுசப் பிறப்புக்களிலும் என்றாலும், விதிவிலக்கு எதிலும் இருக்கும் போலிருக்கு.
பூமிக்குப் பாரமாகப் பிறந்துவிட் டோமே என்று, ஒரு நேரம் நினைத்துக் கொண்டதில்லை என்னைப் பற்றி.
பேராசிரியர் பஞ்சு ஒருநாள் சமீபத்தில்தான் கேட்டார் என்னிடம்:
‘‘தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எப்பவாவது தோன்றியது உண்டா?’’
சிரிப்புதான் வந்தது.
என்னை பேட்டி கண்டபோது, அவர் கேட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.
முற்றிய தொழுநோய் வந்து, விரல் கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண் டிருக்கும் நிலையில்கூட, ஒருவன் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறான். ஏன்?
‘ஒரு அற்புதம் தோன்றும்; இந் நோய் குணமாகிவிடும்’ என்ற நம்பிக்கையில்தான்!
‘‘சீன் நாயக்கர்’ என்றுதான் அவ ரைக் கூப்பிடுவேன். என்னைவிட அவர் மூப்புதான். அய்ந்தாறு வயசுகூட அதிகம் இருக்கலாம். அவர் என்னை ‘‘யோவ்…’’ என்றுதான் அழைப்பார்.
பொதுவாக கிராமங்களில் இப்ப டிக் கூப்பிடுகிறது இல்லை; முறை சொல்லித்தான் கூப்பிடுகிறது; மாமா மச்சான்; அண்ணன் தம்பி என்று.
ஓரனேர் சம்சாரி அவர். ஜோடி மாடுகள், அதுக்கான கோப்புசம் எல்லாம் இருந்தது. வீட்டில் அவரும், அவரது உடன் பிறந்த அக்காள் மகள் நாச்சியாவும் இருந்தார்கள். நாச்சியாள் பிறந்ததில் இருந்து அந்த வீட்டின் சகல வேலை, பொறுப்பு, சமையல் முதக் கொண்டு யாவும் அவள்தான். அவரை வாய் நிறைய ‘மாமா… மாமா’ என்று கொண்டாடுவாள். அவள் பிறந்தவுடனே வீட்டார், இவள் சீன் நாயக்கருக்குத்தான் என்று தீர் மானித்திருந்தார்கள்.
அம்மா, அப்பா காலமானார்கள். உடன் பிறந்த பெண்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாயிற்று. ஒரே அண் ணன் பக்கத்து ஊரில் கல்யாணம் செய்துகொண்டு, அங் கேயே போய் நிரந்தரமாகிவிட்டார். இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான்.
அந்த வீட்டுக்கு வரும் அவரது சொந்தங்கள், ‘‘என்னப்பா, வயசு காணாதா. அந்தப் பிள்ளை கழுத்தில் ஒரு மூணு முடிச்சு போட்டு கொண்டனைச்கொ..’’ என்பார்கள்.
நாயக்கர் மவுனமாகிவிடுவார். பதிலே பேச மாட்டார். ரொம்ப நெருக்கமானவர்கள் வற்புறுத்திக் கேட்டால் மட்டும், ‘‘அவளை வெளியே எங்கேயாவதுதான் கட்டிக் கொடுக்க வேணும். உடன் பிறந்தாபோல கூடவே இருந்துவிட்டு, வேற மாதிரி பார்க்க முடியலை…’’ என்பார்.
நாச்சியாள் தனிமையில் போய் அழுது கண்ணீர் வடிப்பாள்.
வயசு ஏறிக் கொண்டே போயிற்று இருவருக்கும். என்ன செய்வதென்று தெரியவில்லை.
கரிசல் விவசாயத்தில் கொஞ்சங் கொஞ்சமாக இருள் கவிய ஆரம்பித்தது. வானம் சுருங்கிக் கொண்டே வந்தது.
ரங்கூனில் இருந்து கப்பல்களில் வந்திறங்கிய அரிசி வரத்து நின்று போனது. வங்காளத்தில் பஞ்சம் வந்து ரெண்டு லட்சம் மக்கள் செத்துப் போனார்கள் என்று சொன்னார்கள்.
இரண்டாவது உலகப் போர் பற்றி ஒரு தொடர்கதையைப் போல பத்திரிகைகள் சுவாரஸ்யமாக செய்திகள் கொடுத்துக் கொண்டி ருந்தன. படிக்கத் தெரிந்த இள வட்டப் பிள்ளைகள் வாசித்துச் சொல்ல, வயசாளிகள் கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார்கள்.
வெள்ளைக்காரன் பேரில் இருந்த கோபத்தால் ஜெர்மன்காரனான இட்லர் மேல் மக்களுக்கு ஒரு அபிமானம் உண்டானது.
‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ என்று இட்லர் பற்றியும், முசோலினி பற்றியும் புத்தகங்கள் வந்தன.
விடிஞ்சதும் பத்திரிகைகள் எப்ப வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித் தார்கள். அப்போது ரேடியோ எல்லாம் வரவில்லை கிராமங்களுக்கு.
தினப் பத்திரிகை படிப்பது என்று ஆரம்பித்துவிட்டால் ஒரு போதை வஸ்துபோல பற்றிக் கொள்ளும். சீன் நாயக்கருக்கு இந்த நோய் பலமாகவே பற்றிக்கொண்டது. எப்படா விடியும் என்று காத்திருந்து, ஒரு கூறு பருத்தியை எடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்கு வந்து விடுவார் பீடி வாங்க.
பீடியைச் சுண்டுவதும், பத்திரிகை படிப்பதும் அவருக்கு ஏற்பட்டுப் போனது, கடைசி வரையிலும் அதுவே கதி என்றும் ஆகிவிட்டது.
சம்சாரித்தனம் (விவசாயம்) நின்று போனதால், எதுவும் செய்யாத மனிதர் ஆனார். அதுவே சுகம் என்று ஆகிவிட்டது.
அவருடைய சொந்தக்காரர்கள், ‘இனி, இவர் ஒப்பேற மாட்டார்… ’ என்று தீர்மானித்து நாச்சியாளுக்குக் கல்யாண ஏற்பாடு செய்தார்கள்.
- வருவாங்க...
ஓவியங்கள்: மனோகர்


நன்றி- த இந்து


இதன்  2ம்  பாகம்  நாளை மதியம் 1 30 க்கு

Thursday, March 12, 2015

மாற்றான் - படத்தில் ஒரு மறக்க முடியாத காட்சி - வசனகர்த்தா சுபா விவரிப்பு

‘மாற்றான்’ படத்தில் சூர்யா.
‘மாற்றான்’ படத்தில் சூர்யா.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் கே.வி. ஆனந்த் உதவியாள ராய்ச் சேர்ந்திருந்த நாட்கள். அவரு டைய வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டில் எங்கள் குடும்பம் குடியிருந்தது.
ஓர் இரவு ஆனந்த் கதவைத் தட்டி னார். எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போனேன். உள்ளூர்ப் படப் பிடிப்பில் இருந்து திரும்பி, அவசரக் குளியல் போட்டிருந்தார். கையில் ஒரு பயணப் பெட்டி.
“அர்ஜென்ட்டா சென்ட்ரல் ஸ்டேஷன் போகணும். கொஞ்சம் வர்றீங்களா..?”
“நானா..?”
“ஆமா, அரை மணில ரயில் கிளம் பிடும். ஆட்டோ பிடிச்சுப் போனா, ரயிலை மிஸ் பண்ணிடுவேன். பைக்ல போலாம்...”
எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். நான் நிதானமாக வண்டி ஓட்டுபவன். பரபரப்பாக பைக் ஓட்டிப் பழக்கமில்லை. என் தயக்கத்தைப் பார்த்தார்.
“வண்டிய ஓட்டப் போறது நான். பின்னாடி உக்காந்து பெட்டியப் பிடிச் சிட்டு வாங்க. ஸ்டேஷன்ல நான் இறங் கினதும், நிதானமா திரும்பி வந்துக் குங்க...” என்றார்.
பேன்ட் அணிய உள்ளே போனேன். என் அம்மா ஆனந்திடம் “எங்கப்பா ஷூட்டிங்?” என்று கேட்க, “கேரளா போறோம்...” என்று அவர் சொன்னது காதில் விழுந்தது.
பைக்கில் பெட்டியை இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டு உட்கார்ந் தேன். பெட்டியை மட்டுமல்ல; உயிரை யும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டி யிருந்தது. ஆனந்த் பைக்கை ஓட்டிய வேகம் அப்படி.
பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு வாகனங்களுக்கு இடையில் புகுந்து புறப்பட்டு பைக் பறந்தது. ராணி மேரி கல்லூரி அருகில் இருந்த இரட்டை ஸ்பீடு பிரேக்கர்களிலும் வேகம் குறைக் காததில் சற்று மேலே எகிறி, (ஹெல்மெட் கள் கிடையாது) குதிரை சவாரி போல் முழங்கால்களால் பைக்கை இறுக்கிக்கொண்டு, கோணல் மாணலாக சீட்டில் விழுந்து ஒட்டிக்கொண்டேன்.
“பார்த்துப்பா...” என்று முணுமுணுத் தேன். அவர் காதில் ஏன் விழுகிறது? அத்தனை அவசரத்திலும் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. ஒரு வழியாக சென்ட்ரல் ஸ்டேஷன் கடிகாரம் கண்ணில்பட்டதும், ஆனந்த் இன்னும் பரபரப்பானார்.
“வண்டி கிளம்ப மூணு நிமிஷம்தான் இருக்கு...”
ஆட்டோக்கள் நுழையும் வாசலருகே பைக்கைக் கொண்டு நிறுத்தினார். ஸைடு ஸ்டேன்ட் போட்டார். பெட்டியைக் கவர்ந்துகொண்டு, ஓட்ட மாக ஓடி கூட்டத்தில் கலந்தார்.
பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத் திக்கொண்டேன்.
“பாதையை மறிச்சு, இப்படிலாம் வண்டியை நிறுத்தக் கூடாது.. எடுங்க சார்...” என்று ஆட்டோ டிரைவர்கள் குரல் கொடுத்தனர்.
“இதோ…” என்று பைக்கில் ஆரோ கணித்து, வண்டியை நிமிர்த்தினேன். ஹேண்டில்பாரைத் திருப்ப முடிய வில்லை. லாக் ஆகியிருந்தது. இக்னிஷ னில் சாவியைக் காணவில்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா? தேடியதில் சில கணங்கள் வீணாயின. சாவி கிடைக்கவில்லை. ஒருவேளை வண்டியை நிறுத்திய வேகத்தில் ஆனந்த் சாவியை உருவி, கையோடு எடுத்துப் போய்விட்டாரா?
செல்போன்கள் இல்லாத காலம். அவர் எந்த ரயிலில் போகிறார் என்றுகூட தெரியாது. என் அம்மாவிடம் அவர் உரையாடியபோது ‘கேரளா’ என்ற வார்த்தை காதில் தற்செயலாக விழுந்தது நினைவில் இடறியது.
என்னை அதட்டிய ஆட்டோ டிரைவ ரிடமே, “வண்டியக் கொஞ்சம் பாத்துக் குங்க...” என்று கோரிக்கை வைத்து விட்டு, ஸ்டேஷனுக்குள் ஓடினேன். அந்த டிரைவர் என் வம்சத்தையே முதுகுக்குப் பின்னால் திட்டிக்கொண்டிருந்தார்.
கலைந்த எறும்புப் புற்று போல் ஆயிரக்கணக்கானவர்கள் அலைமோத, ஆனந்தை எப்படி கண்டுபிடிப்பேன்? ஒரு போர்ட்டரை நிறுத்தினேன்.
“கேரளாவுக்கு எந்த ரயில் கிளம்புது..?”
“அலப்பி எக்ஸ்பிரஸா? வண்டி மூவ் ஆயிருச்சேப்பா...”
“எந்த பிளாட்பார்ம்..?”
“எட்டு…”
பிடரியில் பாதம் மோதவோ, இதயம் தொண்டைக்கு எகிறவோ, உங்களுக்குப் பிடித்த உவமானத்தைப் போட்டுக்கொள்ளுங்கள் ஓடினேன்.
ரயில், பிரசவ காலத்துப் பெண் போல பெருமூச்சுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
ஆனந்த் எந்த கம்பார்ட்மென்ட் என்றும் தெரியாது. ஜன்னல் சதுரங்கள் வழியே அவரைத் தேடிக்கொண்டு ரயிலுக்கு இணையாக, அதை விட வேகமாக ஓடினேன். எதிரில் மோதியவர்களின் சாபங்கள் காற்றில் கலந்தன. என்னைப் பயணி என்று எண்ணி, வண்டிக்குள் இழுக்க கதவருகே நின்ற நல்லவர்களின் கரங்கள் நீண்டன.
ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியே ஆனந்தின் உருவம் தென்பட்டது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பரபர வென்று நகர்ந்து கொண்டிருந்தார்.
“ஆனந்த்… ஆனந்த்...” என்ற என்னுடைய கூக்குரல்கள் சுற்றியிருந்த ஏராள ஓசைகளில் அவரை எட் டவே இல்லை. ரயிலோ வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அவரை எட்டிப் பிடித்து என்னைச் சுட்டிக்காட்டவில்லை என்றால், ஆனந்த் திரும்பிப் பார்த்திருக்கவே மாட்டார்.
“சாவி... பைக் சாவி..?” என்று கூவினேன். சைகைகளிலும் காட்டினேன். புரிந்து, பேன்ட் பாக்கெட்டில் துழாவி எடுத்தார். ஜன்னல் வழியே வீசினார். பிளாட்பாரத்தில் சாவியைக் கண் டெடுத்து நான் நிமிர்வதற்குள் ரயிலின் கடைசிப் பெட்டி என்னைக் கடந்திருந்தது.
வண்டியை சைடு ஸ்டேண்டில் போட்ட வேகத்தில், பழக்க தோஷத்தில் சாவியை உருவிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்தார்.
வெளியே வந்து, (ஆட்டோக்காரர் களால் நகர்த்தப்பட்ட) பைக்கை வேறோரு மூலையில் கண்டெடுத்து வீடு திரும்பினேன்.
சில சமயம் பின்னணியில் ஒலிக்கும் வார்த்தைகள் எவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன!
‘மாற்றான்’ திரைப்படம்...
ஒட்டிப் பிறந்த இரட்டையரில் உடன்பிறந்தவனைக் கொன்றவனைப் பிற்பாடு அடையாளம் கண்டு சண்டையிடுவான் அகிலன் (சூர்யா). சண்டையில் எதிரியின் போன் அகிலனிடம் கிடைக்கும். கொலைக்கு ஏற்பாடு செய்தவன் அதே போனில் அழைக்க… பின்னணியில், லிஃப்ட் குரல், “LOCUS LACTO PRODUCTS. ஐந்தாவது மாடி” என்று அறிவிக்கும்.
அந்தப் பின்னணிக் குரலை வைத்து, அவனைத் தேடி தன் கம்பெனியின் ஐந்தாவது மாடிக்கு விரைவான், அகிலன். அந்த போனைப் பயன்படுத்தி குற்றவாளியைக் கண்டுபிடிப்பான். வெகு பரபரப்பான காட்சியாக அது அமைந்திருக்கும்.
வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]



நன்றி  - த  இந்து

Thursday, December 18, 2014

180 -வெட்டிவேரு வாசம் 14-சுபா win திரைக்கதை அனுபவங்கள்

முரளியைத் துரத்திய கரடி!
பள்ளி விடுமுறை நாட்கள் வேணு வீட்டில்தான் கழியும். வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழற்பரப்புதான் எங்களுக்கு கிரிக்கெட், கிட்டிப்புள், கபடி மைதானம்.
வேணுவுக்கு இரண்டு தம்பிகள். சுந்தர், முரளி. சின்னவன் முரளிக்கு சிரித்த முகம். உற்சாகமாகப் பந்து பொறுக்கி வருவான். தாகத்துக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டு தண்ணீர்க் கொண்டு வருவான். எல்லோருக்கும் செல்லத் தம்பி.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், வாழ்க்கை திசை மாறியது. வேணுவின் குடும்பம் புலம் பெயர்ந்தது.
பல ஆண்டுகள் கழித்து வேணுவைத் தற்செயலாகப் பார்த்தேன். பொறியியல் படிப்பு. அபுதாபியில் வேலை. ஒரு மகள்.
“தம்பிங்க என்ன பண்றாங்க..?” என்று விசாரித்தேன்.
“சுந்தர் லண்டன்ல செட்டிலாயிட்டான். ஒரு ஆண் குழந்தை…”
“முரளி? அவனுக்கு எத்தனை குழந்தைங்க..?”
வேணுவின் முகம் வாடியது. சற்று நேர மவுனத்துக்குப் பின் முரளியைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னான்.
“அபுதாபிலேர்ந்து வருஷத்துக்கு ஒரு தடவைதான் சென்னை வருவேன். போன்ல அப்பப்ப அம்மா, அப்பாவோட பேசுவேன். ஒரு வருஷமா முரளிக்கிட்ட பேச முடியல. எப்ப கேட்டாலும், ‘இன்ஸ்பெக்‌ஷனுக்குப் போயிருக்கான், டூர் போயிருக்கான்'னு வீட்ல சொல்வாங்க. சந்தேகமே வரல... போன வருஷம் வீட்டுக்கு வந்தப்ப அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. மூஞ்சியில சிரிப்பே இல்ல...”
வேணு தொடர்ந்தான்.
‘முரளி எங்கம்மா?’
‘மொட்டை மாடி ரூம்ல இருக்கான்டா… ’ என்றாள் அம்மா.
அவனைப் பார்க்கப் படியேறினேன்.
‘வேணு…’ என்று அம்மாவின் குரல் இழுத்தது. திரும்பினேன். அம்மாவின் கண்களில் கண்ணீர். ‘இரு நானும் வரேன்...’
மொட்டை மாடியில் அறை ஜன்னல்களின் கண்ணாடிச் சதுரங்கள் மீது துளி ஒளி கூடப் புக முடியாமல் பேப்பர் ஓட்டப்பட்டிருந்தது. கதவு பூட்டியிருந்தது. அம்மா சாவியைப் பூட்டில் பொருத்தும்போது கை நடுங்கியது.
‘என்னம்மா ஆச்சு முரளிக்கு?’ என்றேன் திகிலுடன்.
‘கிறுக்குப் புடிச்சிருச்சிடா’ - அம்மா ஓவென்று கதறி அழத் தொடங்கினாள். ‘ரொம்ப மோசமா நடந்துக்கறான். எந்த நேரமும் கத்தியைக் கையில வெச்சிட்டு குத்திடுவேங்குற மாதிரி கையை ஓங்கறான். யாரைப் பாத்தாலும் கரடி, கரடின்னு கத்தறான்...’
கதவைத் திறந்தேன். அம்மா பின்வாங்கினாள். குப்பென்று வாடை நாசியைத் தாக்கியது. முரளி சுவரில் ஒண்டி உட்கார்ந்திருந்தான். என்னைப் பயத்துடன் பார்த்தான்.
‘ஏய் கரடி! கிட்ட வராதே...’ என்று கத்தியை ஓங்கினான்
உடலில் துணி இல்லை. தரையில் தட்டுகள். உணவு மிச்சங்கள். டம்ளர்கள். சிறுநீர்த் தேக்கங்கள். மலக் கழிவுகள்.
என்னை நோக்கி ஜல்லிக்கட்டுக் காளை போல் பாய்ந்து வந்தான். அசையாமல் நின்றேன். இரண்டடி தூரத்தில் நின்றுவிட்டான்.
‘முரளி... வேணுடா!’ என்றேன்.
அவன் கண்களில் சலனம். கத்தியைக் கீழே போட்டான்.
ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அவன் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தேன். கட்டின பசு போல் வந்தான். குளிப்பாட்டினேன். ஆடைகள் அணிவித்தேன். அறையை பிளீச்சிங் பவுடர், டெட்டால் போட்டுச் சுத்தம் செய்தேன்.
இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னேன். சாதுவாகச் சாப்பிடத் தொடங்கினான்.
‘எப்படிம்மா இப்படி ஆச்சு?’”
‘அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சோம் இல்லியா? மாப்பிள்ளை மாதிரி கெத்தா இருந்துக்கோடா. இது என்ன குழந்தை மாதிரி எந்நேரமும் சிரிப்பும், கூத்தும்னு நாலஞ்சு தடவை அதட்டினேன். அதனாலயானு தெரியல… அப்ப என்னைப் பார்த்து கரடின்னு பயந்தவன்தான்.”
இரவு. மொட்டை மாடிக்கு அழைத்துப் போனேன். நட்சத்திரங்களைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்கும். பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டேன். முரளி சட்டென எழுந்தான். ‘கரடி, கரடி’ என்று முணுமுணுப்புடன் களைத்துப் போகும் வரை என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துப் போனேன். பரிசோதித்தார்.
‘ஸ்கிசோஃப்ரெனியா’ என்றார். ‘எதிர்ல இருக்கறவங்களைப் பாத்தா கரடி மாதிரி என்ன, புலி, சிங்கம், பூதம் மாதிரி கூடத் தெரியும். கொடுமையான பிரமை. ஹாலுசினேஷன். இவர் இப்படி ஆனதுக்கு ஒருவிதத்துல உங்க பேரன்ட்ஸும் காரணம். உங்ககிட்ட கொஞ்சம் அடங்கறாரு. தினம் சிகிச்சைக்கு கூட்டிட்டு வாங்க…’
“இப்ப முரளிக்கு எப்படியிருக்கு, வேணு?”
“ஓரளவுக்கு சரியாயிடிச்சு. பழைய உற்சாகம் இன்னும் திரும்பல. கல்யாணப் பேச்சே எடுக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”
“அவனைப் பார்க்கணுமே, வேணு..”
வேணு வீட்டுக்குக் கூட்டிச் சென்றான். முரளிக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எனது கண்களில் கண்ணீர். வேணு ஒரு ஆல்பத்தைக் காட்டினான். சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் ஆல்பம்.
முரளியின் புகைப்படங்களைப் பார்த்தபோது வயிற்றில் கலவரப் பந்து உருண்டது. இப்போது தேறிவிட்டானே என்று ஓர் ஆறுதல்.
‘180’ திரைப்படத்தில் கதாநாயகன் அஜய்க்கு (சித்தார்த்) புற்று நோய். இன்னும் 180 நாட்கள்தான் ஆயுள் என்று தெரியவரும். ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்நோக்கும் அச்சம்.
மரணபயம் தாக்கும்போது நாயகன் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்த போது, முரளியின் நினைவு வந்தது. எங்கள் கருத்து இயக்குநர் ஜெயேந்திராவுக்குப் பிடித்திருந்தது.
கரடிக்குப் பதிலாக எமனாக ஒரு கருப்பு அரக்கன்.
எந்நேரமும் யாரோ தன்னைத் துரத்துவது போலவும், அவனிடம் இருந்து தப்பிக்க பயத்துடன் ஓடுவது போலவும் சித்தார்த் தன்னை உருமாற்றிக் கொண்டார். தன்னைத் தொந்தரவு பண்ணுகிறவர்கள் மீது கண்ணாடி டம்ளர்கள், பாட்டில்கள் என்றெல்லாம் வீசி உடைத்து முரளி மாதிரியே நடந்து கொண்டு ரசிகர்களின் பச்சாதாபத்தை ஒட்டு மொத்தமாக அள்ளிக்கொண்டார் சித்தார்த்.
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected] 


thanx - the  hindu

Thursday, October 23, 2014

‘வேலாயுதம்’ திரைப்படத்தில் அனுராதா ரமணனுக்கு நேர்ந்த அனுபவம்

மோர்க் களியும் ஒரு ரயில் பயணமும்!
எழுத்தாளர் அனுராதா ரமணன் எங்களுடன் பந்தா எதுவுமின்றி நட்பாகப் பழகுவார். தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை உணர்ச்சிகரமாக எங்களுடன் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும், ‘சர்க்கரைக் கம்மியா… ஒரு ஸ்ட்ராங் காபி’ என்று ஆர்டர் செய்யாமலே ஆசையுடன் கொண்டுவந்து காபி கொடுப்பார். 


ஒருமுறை தான் செய்திருந்த மோர்க் களியைப் பரிமாறினார். வறுத்த மோர் மிளகாய், கடுகு, சீரகம் எல்லாம் தாளிக்கப்பட்டு மோர்க் களி அருமையான ருசியுடன் இருந்தது. நாங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவருக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை எங்களிடம் விவரித்தார். 


அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்... 


‘‘போன திங்கக்கெழமை நானும் பத்மாவும் (அனுராதா ரமணனின் தங்கை) மயிலாப்பூர்ல என் ஓர்ப்படியோட தங்கை நாத்தனாரைப் பாக்கப் போயிருந்தோம். (அனும்மா குறிப்பிடும் உறவுகள் பெரும்பாலும் சிக்கலாக இருக்கும். புரியாது.) பழைய தேக்கு ஊஞ்சல்ல உக்காந்து ஜாலியா ஆடினோம். கிச்சன்லேர்ந்து கும்முன்னு ஒரு வாசனை வந்தது. 


‘வாசனைத் தூக்குதே மாமி!’ன்னு சொன்னேன். 


‘மோர்க் களி கிண்டினேன். இரு எடுத்துட்டு வர்றேன்’ என்று பரபரன்னு உள்ளே போன மாமி, ரெண்டு தட்டுல மோர்க் களியை அள்ளிட்டு வந்து நீட்டினா. 


‘ஹை! மோர்க் களியா? எனக்கு ரொம்பப் புடிக்குமே’ன்னா பத்மா.
‘சாப்பிடுங்கோ... சாமிக்கு வெளக் கேத்திட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, மாமி உள்ளே போயிட்டா.
ஆசை, ஆசையா ஒரு வாய் மோர்க் களியை எடுத்து வாயில போட்டேன். அவ்வளவுதான். மேலண்ணத்துல அப்படியே ஒட்டிக்கிச்சி. ருசியாவாவது இருந்து தொலைச்சிருக்கக் கூடாதா? பத்மாவைத் திரும்பிப் பார்த்தா… அவளும் வாயில போட்டுட்டு ரெண்டு கண்ணையும் அகல விரிச்சிட்டு, பேய் முழி முழிக்கறா. ரெண்டு பேராலயும் வாயைத் தொறக்கவே முடியலை. 


மாமி வர்றதுக்குள்ள, வாசலுக்குப் போய் தட்டுல இருந்ததையெல்லாம் பிளாட்பாரத்துல வழிச்சிப் போட்டோம். வாயில விரலைவிட்டு மிச்சமிருந்ததையும் எடுத்துப் போட்டோம். அப்போபாத்து ஒரு தெரு நாய் வாலை ஆட்டிட்டே ஓடி வந்தது. மோர்க் களியைப் பாத்துட்டு எங்களை ஒரு தரம் பாத்தது. வால் ஆடுறது மாத்திரம் நிக்கவே இல்ல. வாயில்லா ஜீவனாச்சே, பாவம் அவஸ்தைப் படப் போவுதேன்னு ‘ச்சூ… ச்சூ...'ன்னு விரட்டினேன். வாயில மோர்க் களி கொஞ்சம் ஒட்டிட்டிருந்ததால எனக்கு வார்த்தையே வரலை. ‘ஷூ... ஷூ…’ன்னு வெறும் காத்துதான் வந்தது. 


நான் கொஞ்சறேன்னு நெனைச்சிட்டு, அந்த நாய் மோர்க் களியை வாயால் கவ்வி எடுத்தது. அவ்வளவுதான். தலையைத் தூக்கி என்னைப் பரிதாபமாப் பாத்தது. ‘க்யீங்... க்யீங்’ன்னு மொனகற மாதிரியே ஒரு சத்தம்! 


‘அடிப்பாவி! என்னைக் கொல்றதுக்காகவாடி இதைக் கொண்டாந்துப் போட்டே’ன்னு கேக்கற மாதிரி என்னைப் பாத்து ஒரு மொறை மொறைச்சுது. ஆட்டிக்கிட்டிருந்த வாலைப் பின்னங்கால் ரெண்டுக்கும் நடுவுல செருகிட்டு ‘க்யீங்... க்யீங்…’ன்னு கத்திட்டே ஒரு ஓட்டம் எடுத்தது பாரு... 


அந்த நாய்க்கு யாரோடயும் ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. ஓடிப் போய்ட்டு. நாங்க அப்படி ஓடிப் போவ முடியுமா? வீட்டுக்குள்ள திரும்பி வந்து காலித் தட்டோட, மூஞ்சைத் தேமேன்னு வெச்சிட்டு ஊஞ்சல்ல உக்காந்தோம்.
வெளக்கேத்திட்டு, மாமி சொம்புல தண்ணி எடுத்துட்டு வந்தா. ரெண்டு பேர் தட்டும் காலியா இருக்கறதைப் பாத்தா. மாமி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்! 


‘நிமிஷமா காலி பண்ணிட்டேளே. மோர்க் களி அவ்ளோ நல்லா இருந்திச்சா?’ன்னு கேட்டுட்டே, சந்தோஷமா உள்ளே போய் சட்டியோட மோர்க் களியைக் கொண்டாந்து ரெண்டு பேர் தட்டுலேயும் அப்படியே கவுத்துட்டா. இத்தனைக்கும் நாங்க ‘வேணாம்… வேணாம்’ன்னு தட்டு மேலயே கவுந்துப் படுக்காத கொறைதான் 


அதுக்குப் பரிகாரமா இன்னிக்கி என் கையால மோர்க்களி பண்ணிப் போடறேன்னு பத்மாவை வரச் சொல்லியிருக்கேன்…” 


‘வேலாயுதம்’ திரைப்படத்தில் கதாநாயகன் வேலாயுதம் (விஜய்), தான் மிகவும் நேசிக்கும் தங்கை காவேரி (சரண்யா மோகன்) மற்றும் நண்பர்களோடு ரயிலில் சென்னைக்குப் போவது போல் ஒரு காட்சி. 


சாப்பாட்டு நேரம். தன் தங்கை எவ்வளவு சூப்பராக சமைப்பாள் என்று ஏகத்துக்கும் பில்ட்- அப் கொடுத்துவிட்டு, அவள் செய்து எடுத்து வந்திருக்கும் புளியோதரையை நண்பர்களுக்கு வேலாயுதம் பரிமாறுவான். 


அதை வாயில் வைத்தவுடனேயே, ஒவ்வொருத்தர் முகமும் அஷ்ட கோணலாகிப் போகும். தங்கையின் சமையலைப் பற்றி எக்குத்தப்பாக ஏதாவது விமர்சித்துவிட்டால், அண்ணன் விஜய் நரசிம்ம அவதாரமே எடுத்துவிடுவான். நண்பர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும்போது, ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டு ஒருவன் வர, ஒவ்வொரு நண்பனும் கொடைவள்ளலாக, தன் தட்டில் உள்ளதை திருட்டுத்தனமாக அவனுக்குப் போட்டுவிட்டு, அமுக்கமாக வந்து உட்கார்ந்துவிட... 


விழி பிதுங்கினாலும், தங்கையின் மனம் கோணக்கூடாது என்று விஜய் ‘சூப்பர் டேஸ்ட்டு…’ என்று பொய் ஏப்பம் விட்டுக் காட்டுவார். தங்கை முகத்தில் பெருமிதம் கூத்தாடும்.
சற்று நேரத்தில் பிச்சை வாங்கிப் போனவன் ஆத்திரத்துடன் அங்கே திரும்பி வருவான். 


நண்பர்களில் ஒருவனது சட்டையை ஆவேசத்துடன் பற்றி, ‘‘ஏண்டா… மனுஷனைக் கொல்றதுக்கு எவ்ளோ வழியிருக்கு? ஒரு கத்தியை எடுத்து ‘சர்க்’ன்னு வயித்துல எறக்கிட்டுப் போறதுதானேடா. சாப்பாட்டைப் போட்டுக் கொல்லப் பாக்கறீங்களே...’’ என்று கூச்சல் போடுவான். 


இந்தக் காட்சி திரையில் வந்தபோது தியேட்டரே சிரிப்பில் குலுங்கும். அனுராதா ரமணனுக்கு நேர்ந்த அனுபவம்தான், இந்தக் காட்சிக்கு அடிப்படை என்று சொல்லவும் வேண்டுமா? 

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள
[email protected]  

thanx -the  hindu

Tuesday, November 30, 2010

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/Anakha.jpg
1.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

---------------------------------

2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா?  ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட  இல்லையே?

--------------------------------


3. இம்சை அரசன் பாபு - என்ன மங்குனி ?கார் டேங்க்கை ஓப்பன் பண்ணி விட்டு சிரிக்கறீங்க?

மங்குனி - ஒண்ணுமில்லை,மனசு விட்டு சிரிச்சா OIL  கூடும்னாங்க.

ஹய்யோ ஹய்யோ அது ஆயில் இல்லை,ஆயுள்.

-------------------------


4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த  செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.

-------------------------------


5.  கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர்,  ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.

-------------------------


6. பெரியப்பா எல் கே - மனசுக்குள்ள நிறைய இருக்கும் ,ஆனா எழுத வராது,அது லவ் லெட்டர்,மனசுல ஒண்ணுமே இருக்காது,ஆனா பக்கம் பக்கமா எழுதுவோம்.. அது செமெஸ்டர்.

----------------------
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/vaaranam_aayiram.jpg
7. திருப்பூர் கார்த்திக்குமார் -   ஹாய் சார் ,நான் இதை சொல்லியே ஆகனும்,கொஸ்டின் பேப்பர் அவ்வளவு கஷ்டம்.இங்கே எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு கொஸ்டின் பேப்பரை பார்த்திருக்கவே மாட்டான்.. ஐ திங்க்  இந்த டைமும் எக்சாம் ஊத்திக்குச்சு..

முன்தினம் படிச்சேனே, படிச்சதும் மறந்தேனே,சல்லடைக்கண்ணாக உள்ளமும் புண் ஆனதே...

இத்தனை நாளாக புக்கையே பாராமல் விளையாடி இருந்தேனோ..
ஹாலிடேஸ்ஸூம் வீணானதே...

-----------------------

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)

நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை  பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?

பட்டாபட்டி -- யாருக்கு தெரியும்?சொல்லுய்யா தெரிஞ்சுக்கறோம்.

அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...

-----------------------------

9.  பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....

---------------------


10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

---------------------

Saturday, November 27, 2010

கனிமொழி Vs கவுண்டமணி - சினிமா விமர்சனம்

அட

கவுண்டமணி - அய்யா ,ராசா,புது டைரக்டரு,இந்தப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தோட டைட்டில் பற்றி என்ன ராசா பேட்டி குடுத்தீஙக?ஞாபகமிருக்கா?

டைரக்டர் - அண்ணே,அது வந்து....கனி மொழி என்று டைட்டில் வைத்த்துக்கு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை,படத்தின் கதைக்கு அந்த டைட்டில் தேவைப்படுகிறதுன்னு பேட்டி குடுத்திருந்தேண்ணே...

கவுண்டமணி - மேலே மெலே....


டைரக்டர் - அப்புறம் .. ம் ம் இந்தப்படத்தை பார்த்தா இந்த டைட்டிலை விட பொருத்தமான வேற டைட்டில் இந்த படத்துக்கு வைக்கவே முடியாதுன்னு பேட்டி குடுத்திருந்தேன்...ஏண்ணே?பொருத்தமா இல்லையா?

கவுண்டமணி -  வருத்தமா இருக்கு.அந்தம்மா பேரை இப்படி எல்லாம் கெடுக்கறியேன்னு...இந்த டைட்டில் வைக்க அனுமதி வாங்க ஒரு மாசம் செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைஞ்ச நேரத்துக்கு நல்ல கதையை
ரெடி பண்ணி  இருக்கலாம்..

டைரக்டர் - ஏண்ணே,படத்தோட கதைக்கு என்ன குறைச்சல்?

கவுண்டமணி - ஹீரோ ஹீரோயினை ஒரு தலையா காதலிக்கறான்,கடைசி வரை காதலை அவ கிட்டே சொல்லவே இல்லை,கிளைமாக்ஸ்ல வேற ஒருத்தன் ஹீரோயினை தட்டிட்டு (கல்யாணம் பண்ணிட்டு ) போயிடறான்..இதுல என்ன புதுமை இருக்கு?இந்த மாதிரி ஓராயிரம் படம் பார்த்தாச்சு...

அட

டைரக்டர் - சரி,அதை விடுங்கண்ணே...ஹீரோவும்,ஹீரோயினும் சந்திக்கற முத சீன்ல 2 பேருமே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வந்து கலக்கி இருப்பாங்களே,அதைப்பத்தி ஆடியன்ஸ் என்ன பேசிக்கறாங்க?

 கவுண்டமணி -  ஏதோ மஞ்ச மாக்கான் படத்துக்கு வந்துட்டமோன்னு பேசிக்கிட்டாங்க...

டைரக்டர் - சரி..ஹீரோயின் எப்படிண்ணே?

கவுண்டமணி - அது சும்மா சொல்லக்கூடாது..நல்ல ஃபிரிட்ஜ்ல வெச்ச லெமனா,18 வயசு தமனா மாதிரி தளதளன்னு தான் இருக்கு..ஆனா படத்தோட கதை,திரைக்கதை உனக்கு எமனா அமைஞ்சிடுச்சே?

டைரக்டர் - காமனா (COMMON) படத்தை பத்தி என்ன தாண்ணே சொல்ல வர்றீங்க?

கவுண்டமணி - படத்துக்கு தலை வலின்னு டைட்டில் வெச்சு இருக்கலாம்.

சி பி - அண்ணே,ஒரு நிமிஷம்....

கவுண்டமணி - வந்துட்டாண்டா வீங்குன வாயன்....டேய்.. இப்போ எதுக்கு வந்திருக்கே?படத்துல நீ கேட்ட நல்ல வசனத்தை பற்றி சொல்றக்காக்கும்?பரங்கிமலை ஜோதில பிட்டு படம் பாக்கற நாய் நீ இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..?நீ தலையே சீவ மாட்டியா?

சி பி - அண்ணே,பட விமர்சனம் இனிமே எழுதுனா உன் தலையை சீவிடுவோம்னு ஆளாளுக்கு மிரட்டறாங்க..அவங்க வந்து சீவட்டும்னு நான் சீவாம இருக்கேன்.

கவுண்டமணி - அட விளங்காதவனே.. அவங்க அரிவாளோட வருவாங்க,சீப்போட வருவாங்கன்னு நினைச்சியா?சரி சரி சொல்லித்தொலை...
அட

ரசிக்க முடியாத படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்-

1.யோவ்,தியேட்டர்ல எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கய்யா.. சின்னஞ்சிறுசுக  ஏதோ சில்மிஷம் பண்ணுவாங்க..ஈங்க பாட்டுக்கு எல்லா லைட்டையும் போட்டு வெச்சா?


2.காலேஜ்க்கு படிக்கத்தானே வர்றே?எங்கே புக்,பேனா,நோட் எல்லாம்?

 எல்லாம் டெஸ்க்குல வெச்சுட்டு போயிடுவேன் சார்...

அடப்பாவி,அப்புறம் எதை படிப்பே?   நான் எங்கே சார் படிக்கறேன்?


3. முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்ற லெக்சரரை டைவர்ஸ் பண்ணனும்.

4  நமக்குள்ள  இருக்கற டேலண்ட்டை அடிக்கடி யூஸ் பண்ணனும்,பெரிய வாய்ப்பு கிடைக்கறப்ப பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணக்கூடாது..

5. டேய். உனக்கு எல்லா வேலையும் செஞ்சு செஞ்சு என் காலெல்லாம் தேஞ்சு போச்சு.

அம்மா.பேசாம எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி  வெச்சுடு. உனக்கு ரெஸ்ட் எனக்கு பெஸ்ட்.


6. கமபைன் ஸ்டடி பண்றேன்னு வெளில போறவனை நம்பிடலாம்,ஆனா தனியா படிக்கறேன்னு கதவை தாழ் போட்டுட்டு படிக்கறவனை நம்ப முடியாது..

7.  டேய் மாப்ளே.. இவளா உன் ஆளு?சூப்பரா இருக்கா.. இவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணிட்டே என் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாதுடா..

நல்ல ஃபிரண்டுடா...

8. என் பந்தை எவனும் தொடக்கூடாதுடா,தொட்டா அவன் ஃபெயில் ஆகிடுவான்..

அடப்பாவி..எப்படி எல்லாம் மிரட்டறான்..நீயே தனியா வலிபால் விளையாடு..

9.எது கத்துக்கறதா இருந்தாலும் இன்ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்.

10.  சார் எனக்கு பட சான்ஸ் வேணும்.

எனக்கு தெரிஞ்ச புது டைரக்டர் ஒருத்தர் இருக்காரு,போறியா?

சார்... மணிரத்னம்,ஷங்கர் இப்படி இருந்தா சொல்லுங்க...

11.  மாமா ,உங்களுக்கு லவ் பிடிக்காதா.. ஏன்? லவ் ஃபெயிலரா?

இல்ல,லவ் பண்ணுனவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அதான்..

12. போலீஸ் மாதிரியே கேள்வி கேக்கறியே அது ஏன்?

திருடன் மாதிரியே பதில் சொல்றியே அது ஏன்?

13.  காதலியின் ஃபோட்டோவை தொட்டுப்பார்க்க முயலும் நண்பனிடம் ஹீரோ-   டேய்.. அவ என் ஆளு கை வைக்காதே..



அடப்பாவி.. வெறும் ஃபோட்டோடா..

கூப்பிட்டுப்பாரு,திரும்பிப்பார்ப்பா..

14. நான் உன் ஃபோன் நெம்பரை சத்தம் போட்டு  அவ முன்னால சொல்றேன்,அவ உனக்கு கால் பண்ணுனா  அவ உன்னை லவ் பண்றான்னு அர்த்தம்.

சப்போஸ் அவளுக்கு நீ சொன்ந்து கேக்கலைன்னா?

காது கேகாதவனு கழட்டி விட்டுடு..

15.  என்னடா ஸ்வெட் ட்ரீம்ஸ் (SWEAT DREAMS) னு மெசேஜ் அனுப்பி இருக்கே..ஸ்வீட் ட்ரீம்ஸ்டா (SWEET DREAMS)

அடடா இத்த்னை நாளா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடதான் எல்லாருக்கும் அனுப்பினேனா?

அதான் எவளும் உனக்கு செட் ஆகலை


16.  இங்கே வெச்சிருந்த பாட்டில்ல இருந்த மீதி சரக்கு எங்கே?


விடுடா,சிந்தி இருக்கும்

  எங்கே,சிந்துன இடத்தை காமி..      என் வாய்ல...


17. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி என் கூட இருக்கறதா ஏண்டா சொன்னே?

மாட்டுனா எல்லாரும் மாட்டனும்னுதான்

18. அம்மா ஒரு 200 ரூபா குடு.

எதுக்கு?

உன் பர்ஸ்ல 500 ரூபா  நோட்டுதான் இருந்துச்சு அதான்   200 குடு,500 எடு.

19. அப்பா இந்த இங்கிலீஷ் படத்துல கிஸ் சீனே வர்ல?

5 வயசுப்பையன் கேக்குற கேள்வியைப்பாரு.. எல்லா இங்கிலீஷ் படத்துலயும் கிஸ் சீன் வரும்னு யார் சொன்னது உனக்கு?

கவுண்டமணி - அப்பாடா,முடிச்சுட்டான்,நாயே நீ ஓடிப்போயிடு,தம்பி நீ நில்லு,நீ இதுக்கு முன்னால ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல வேலை செஞ்சியா?

டைரக்டர் - ஆமாண்ணே,எப்படி கண்டு பிடிச்சீங்க?

கவுண்டமணி - படத்துல பர்ச்சேஸ் பண்ற சீன் ஏகப்பட்டது வருதே..

1. ஹீரோ செல்ஃபோன் வாங்கும் சீன் 20 நிமிஷம்

2. ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டிராவல் பேக் வாங்கும் சீன் 5 நிமிஷம்

3.ஹீரோவின் அண்ணன் பைக் வாங்கும் சீன் 3 நிமிஷம்

4.ஹீரோயின் கிஃப்ட் வாங்கும் சீன் 7 நிமிஷம்

எதுக்கு இப்படி சாவடிக்கறே?

டைரக்டர் - அண்ணே ,படத்துல சம்பவங்கள் வேணும்னே...ரசிக்கற மாதிரி சீன்ஸ் நான் சொல்றேன்

1.ஹீரோயின் எங்கே இருந்து எந்த ரூட்ல வருவானு ஹீரோவுக்கு மேப் போட்டு விவரிக்கும் சீன்.

2. ஏரியா விட்டு ஏரியா போய் அந்த ஏரியா ஆளுங்க கிட்டே அடி வாங்கும் சீன்

3.யோகா கிளாஸ்க்கு முதன் முதலா போற ஹீரோ ஜீன்ஸ்,டி சர்ட் ,கூலிங்க் கிளாஸ் சகிதம் போற சீன்

4.உள்ளங்கை மாடலில் ஒரு சோபாவை அலங்கரித்து வைத்திருந்த  சீன்

கவுண்டமணி - தம்பி நீ ஹிட்ஸ் ஆன படங்கள் நிறைய பாரு.அதுல 60 சீன்ஸ் ரசிக்கற மாதிரி இருக்கும்.நீ பண்ணுன கூத்துக்களை நான் வரிசைப்படுத்தறேன் பாரு.

1.ஹீரோயின் காலடில ஹீரோ விளையாடும் வாலிபால் போய் விழுது,தை ஹீரோயின் எடுத்து தர்றா உடனே ஒரு டூயட்

2.நடக்காததை எல்லாம் நடந்ததாக கற்பனை பண்ணிக்கொள்ளும் ஹீரோ (இப்போதான் மந்திரப்புன்னகை,குடைக்குள் மழை வந்தது)

3.க்ளை மாக்ஸ்ல ஹீரோயின் டபுள் ஆக்ட்னு ஒரு ட்விஸ்ட் தந்து பேக் அடிச்சு அது ஹீரோவின் கற்பனைனு ஜகா வாங்குனது..

4. ......

டைரக்டர் - அண்ணே,நிறுத்துங்க...படம் ஓடுமா ஓடாதா?அதை மட்டும் சொல்லுங்க..

கவுண்டமணி - ஏ செண்ட்டர்ல 7 நாள்   பி செண்ட்டர்ல 5 நால்,  சி செண்ட்டர்ல 3 நாள் ஓடும்

டைரக்டர் -  பத்திரிக்கை விமர்சனம்?

கவுண்டமணி - ஆனந்த் விகடன்-34 மார்க்

குமுதம் - சுமார்

நாடகம் மாதிரி படம் எடுக்கறவங்களுக்கெல்லாம் இந்தப்படத்தோட ரிசல்ட் ஒரு பாடமா இருக்கட்டும்.

Friday, November 26, 2010

கரு.பழனியப்பன் விருந்து - காமெடி கும்மி

http://4.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TO5dK8hrBQI/AAAAAAAAAMU/M7YMmgX2-ps/s1600/mandhira_punnagai_movie_stills_04.jpg
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு  கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.


1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.

ஏன்?

இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...


2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?

அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.

3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?

யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...

4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?

காலைல 11 மணிக்கு படத்தை போட்டு,  2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.

5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?

பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?


6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?

இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.

7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?

கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.


8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?

நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.

9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?

பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK)  இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.

10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.

11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.

எப்படி சொல்றீங்க ராம்சாமி?

சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?

12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு  படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?

அவங்க எல்லாருமே  சி பி  மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.

டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.

Monday, November 22, 2010

பிரபல பதிவர்களின் பர்சனல் சேட்டிங்க்ஸை அம்பலமாக்கிய இணைய தளம்

















மெயிலில் மெசேஜ் அனுப்புவது,மின் அரட்டையில் ஈடுபடுவது எல்லாம் சேஃப் ,பர்சனல் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு இணைய தளம் பிரபல பதிவர்களின் லவ் சேட்டிங்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.

1. உண்மைத்தமிழன் -

ஃபிகரு - சார்,என் கிட்டே ஒரு லாங்க் சைஸ் 2 குயர் நோட்டு குடுத்து விட்டு இருக்கீங்களே..எதுக்கு?அதை ரெக்கார்டு நோட்டா யூஸ் பண்ணிக்கவா?

உண்மைத்தமிழன் - அடிப்பாவி ,அது என் லவ் லெட்டர்.

ஃபிகரு - லவ் லெட்டர்னா 2 பக்கம் தானே எழுதுவாங்க?


உண்மைத்தமிழன் - நான்  ரெண்டரை மணி நேரம் ஓடற சினிமா  விமர்சனத்தையே 20 பக்கம் எழுதற ஆளு,25 வருஷம் ஒண்ணா வாழப்போற பொண்ணுக்கு அட்லீஸ்ட் 400 பக்கங்களாவது லெட்டர் எழுத வேணாம்?

2.கேபிள் சங்கர்

ஃபிகரு - சங்கர்,வழக்கமா எல்லா காதலர்களும் பீச்லயோ,கோயில்லயோதானே மீட் பண்ணுவாங்க?நீங்க மட்டும் ஏன் ஏதாவது ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்றீங்க?

கேபிள் சங்கர்  - ஏன்னா எனக்கும் சாப்பாட்டுக்கடைக்கும் ராசி அதிகம்.நான் ஒண்ணு மட்டும் முதல்லியே சொல்லிடறேன்,உங்கப்பா மட்டும் நம்ம காதலை எதிர்த்தா அவரை கொத்துபுரோட்டா பண்ணிடுவேன்.

ஃபிகரு - உங்களுக்கு எப்போ ஃபோன் பண்ணுனாலும் ஒரு லேடி ஃபோனை எடுத்து “சார் ஸ்டோரி டிஸ்கஷன்ல இருக்காரு”அப்படினு சொல்றாங்களே..அவங்க உங்க பி ஏ வா?

கேபிள் சங்கர்  - சுத்தம் ,அது என் செல் ஃபோன் ரிங்க் டோன்,சும்மா என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணீட்டு இருந்தா எனக்கு பிடிக்காது.

ஃபிகரு - சரி,சினிமா விமர்சனம் பண்றதுல நீங்க தான் நெம்பர் ஒன் அப்படினு சொல்றாங்களே?என் அழகை பற்றி விமர்சனம் பண்ணுங்க பாக்கலாம்?

கேபிள் சங்கர்  - என் எண்டர் கவிதைகள் படி.எல்லாமே எண்ட்டர்டெயின்மெண்ட் கவிதைகளாவும் இருக்கும்,அழகை வர்ணிக்கறமாதிரியும் இருக்கும்.உன் முகத்தை க்ளோசப்ல பார்க்கறப்ப பயமா இருக்கு.ஜூம் பண்ணி லாங்க் ஷாட்ல பார்த்தா பாஸ் மார்க் போடலாம்.


3.மங்குனி அமைச்சர்

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன். டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா சரி.வாரா வாரம் டாப் 20 ல நான் வந்தே ஆகனும்.பாக்கறவனுங்க எல்லாம் நொந்தே போகனும்.


4.பன்னிக்குட்டி ராமசாமி

என்னம்மா முறைக்கிறே?பெரிய பருப்பா நீ?நான் ஒரு பதிவு போட்டா 200 கமெண்ட்ஸ் 20 நிமிஷத்துல விழும்.நீ என்னடான்னா என் அழகைப்பற்றி ஒரு கமெண்ட் கூட அடிக்க மாட்டேங்கறே..எனக்கு மினி கட்டிங்க்னா பிடிக்கும்கறது உண்மைதான்,அதுக்காக இப்படி மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டுட்டு அலையக்கூடாது.இது ஆவறதில்லை.ஆனா இந்த மடம்  ஆகாட்டி சந்தை மடம்.. நான் சவுதி அரேபியா... அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.நீ என்னமோ பென்சில்ல கோடு போட்ட பல்பம் மாதிரி இவ்வளவு ஒல்லியா இருக்கறே?


5. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ஸாரி டியர்,என்னால நைட் 7 மணிக்கு எல்லாம் பீச்க்கு வர முடியாது.ஆஃபீஸ் டைம் ல ஆஃபீஸ்க்கே வந்துடு.அங்கேயே எல்லாம் பண்ணிக்கலாம்.நான் பதிவு போடறது,கமெண்ட்ஸ் போடறது எல்லாமே ஆஃபீஸ் டைம் தான்.அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது  எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.இதுல என்ன காமெடின்னா என்னை நம்பி எனக்கு டேமேஜர் அட ச்சே மேனேஜர்  போஸ்ட்டிங்க் குடுத்திருக்காரே எங்க முதலாளி  அவர நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.


6. பட்டாபட்டி - இங்கே பாரம்மா,நான் ஒரு ஃபாரீன் பதிவர்,இப்படி நீ தாவணியோட வந்தா என்னால லாவணி பாட முடியாது.நீ பீச்சுக்கு மிடியோட வா,நான் அண்டர் டிராயரோட வந்துடறேன்,ஜாலியா லவ் பண்ணலாம்..கேள்வி.நெட்ல எனக்கு 34வது ரேங்க்,அதுக்காக 34 வயசுப்பொண்ணை எல்லாம் லவ் பண்ண முடியாது.உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.

7.நல்ல நேரம் சதீஷ்

உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.இந்தா இந்த ராசிக்கல் மோதிரத்தை போட்டுக்கொ,நல்ல நேரம் நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே நைட் 8 டூ 9 தான். சித்தோடு வாய்க்காமேட்டுக்கு தனியா வந்துடு.உன் பேரே மோஹனா அப்படினு கும்முனு இருக்கு,எனக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்.

8.கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இங்கே பாரம்மா ,நீ சொல்றதை எல்லாம் அப்படியே என்னால் ஏத்துக்கவே முடியாது.என் சொந்த பிளாக்லயே கமெண்ட்ஸ்சுக்கு மாடரேஷன் வெச்சு இருக்கேன்.அவனவன் பிளாக்ல கமெண்ட்ஸ் வராதான்னு ஏங்கறான்.ஆனா எனக்கு கமெண்ட்ஸ்ல கூட டீசண்ட்சி முக்கியம்.இந்த மாதிரி எல்லாம் முழங்கை தெரியறமாதிரி ஜாக்கெட் போடாதே,ஃபுல் ஹேண்ட் ஜாக்கெட் வாங்கித்தர்றேன்,அதை போட்டுக்கோ,எல்லாம் கவர் ஆகிடும்,எனக்கு டீசண்ட்தான் முக்கியம்.எட்டாம் நெம்பர் பஸ்ல  வழக்கம் போல மீட் பண்ணுவோம்.எல்லாருக்கும் அஷ்டமத்துல சனி.ஆனா எனக்கு மட்டும் ஏறுமுகம்.எட்டு எனக்கு ராசியான நெம்பர்,தமிழ்மணத்துல தொடர்ந்து 2 வாரமா 8வது இடம்,இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.

9. ம தி சுதா

டியர், வாங்க சினிமாவுக்கு போகலாம்

இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?

10.இம்சை அரசன் பாபு

டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.முதல்ல என் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டு வா,மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.ஓட்டு போட்டிருந்தா விரல்ல மை இருக்குமே..என்னை யாராலயும் ஏமாத்த முடியாது..நானே ஏமாந்தாதான் உண்டு.

டிஸ்கி 1- மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்.பிரபல பதிவர்கள் அனைவரும் என நண்பர்கள் என்பதால் அவர்கள் யாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.அவர்களது ரசிகர்கள்,நண்பர்கள் யாராவது மனம் புண்பட்டால் அதற்கு சாரி.இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளி வரும் ,ஊத்திக்கிச்சுன்னா கமுக்கமா இருந்துக்குவேன்.(வேற என்ன பண்ண முடியும்?)

டிஸ்கி 2 - எனது சேட்டிங்க் ஏன் வரவில்லை?என கேட்பவர்களுக்கு

1.சொந்த செலவில் யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?

2. டைட்டிலை நன்கு கவனிக்கவும்.இது பிரபல பதிவர்களுக்கு மட்டும்,ஓட்டு பெறுவதில்,கமெண்ட்ஸ் பெறுவதில்,ஹிட்ஸ் கிடைப்பதில்,பதிவின் தரத்தில் இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்கள் என்னை விட முன்னணியில் உள்ளதால் நான் இதில் இடம் பெறவில்லை.

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.


8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.


மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?

Monday, November 08, 2010

ரோஜாவின் ராஜா (ஆர் கே செல்வமணி அல்ல)

      




சுதந்திர இந்தியாவை உருவாக்கிய சிற்பி

      பம்பாய் ஆஸாத் மைதானத்தில், 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேருஜி, மெளலானா ஆஸாத், புலாபாய் தேசாய் ஆகியோர் அதில் பேசவிருந்தார்கள்.

            நேருஜி பேசத் தொடங்கியபோது பெருமழை கொட்டத் தொடங்கியது. இருந்தாலும் கொட்டும் மழையிலும், இலட்சக்கணக்கான மக்கள் கொஞ்சங்கூட அசையாமல் அமர்ந்து, நேருஜியின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

            அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார். அதைக் கண்டு,”மக்கள் மழையில் நனையும்பொழுது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேரு. குடை பிடிப்பவரோ நேருஜி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டே இருந்தார்.

            நேருஜி பொது மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன்,”இவர் என் சொல்லையும் மீறிக் குடை பிடித்திருப்பதைப் பார்த்தால், இவர் ஒலிபெருக்கியின் சொந்தக்காரராக இருப்பார் என்றுநினைக்கிறேன். இவர் எனக்காகக் குடை பிடிக்கவில்லை. ஒலிபெருக்கியை மழையிலிருந்து
பாதுகாக்கவே குடையைப் பிடிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

            அதைக் கேட்டதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.


லால் பகதூர் சாஸ்திரி


     ஒரு முறை, பம்பாயில் குழந்தைகளின் விழா ஒன்றுக்கு லால்பகதூர்
சாஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதற்காக எழுந்தார், லால்பகதூர் சாஸ்திரி.

            ”குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய
அறிஞன் அல்ல. அப்படியிருக்க இந்தக் குழந்தைகள் விழாவிற்கு என்னை ஏன் அழைத்தார்கள் என்று யோசித்தேன். அப்புறந்தான் உண்மை தெரிந்தது. என் உடல் தோற்றம் ஒரு பத்து வயதுச் சிறுவனைப் போன்று அவ்வளவு
குள்ளமாக இருக்கிறது. ஒரு சிறுவனைப் போலவே நான் தோற்றமளித்த
காரணத்தால்தான் இங்கே என்னை அழைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.”

            இதைக் கேட்டதும், அங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்.

Tuesday, November 02, 2010

கவுத்துட்டாரே கவுத்துட்டாரே




இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

            அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்.

Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?



ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”


டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.


டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

Monday, October 18, 2010

சம்சாரம் என்பது வீணை (வீணே?!)

 

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொரு  கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள்.


டிஸ்கி 1 - இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.


டிஸ்கி 2 - நயன்தாரா ஃபோட்டோ சும்மா கிளாமருக்கு,அவருக்கோ அவரது தற்போதைய காதலருக்கோ அட்வைஸ் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை


டிஸ்கி 3. - லைப்ரரில இருந்து புக் சுடுவது எப்படி? புக் எக்ஸிபிஷனிலிருந்து புக் சுடுவது எப்படி? எனது அடுத்தடுத்த பதிவுகளாக வர இருக்கிறது,கபர்தார்