Friday, July 04, 2025

மார்கன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

                 


        அறிமுக இயக்குனர் லியோ  ஜான் பால்  2004ம் ஆண்டு  சினிபீல்டு க்கு வந்து  2007ம் ஆண்டு    வாரணம்  ஆயிரம்  படத்தின் ஸ்பாட்   எடிட்டர்  ஆகப்பணி புரிந்தார் .  தனுஷ்  நடித்த  3 படத்தின் புகழ்  பெற்ற பாடல் ஆன ஒய் திஸ்   கொலை  வெறி  பாட்டின் வீடியோ மேக்கர் ஆக பணி  புரிந்தார் . ஆசியாவிலேயே  அதிகம்  தேடப்பட்ட  பாடல் ஆக அது அமைந்தது .2012ம் ஆண்டில்  அடடக்கத்தி   படத்தில்  எடிட்டர்  ஆகப்பணி புரிந்தார் .13  வருடங்கள் போராடி  தன முதல் படத்தை இயக்கி விட் டார் 



விஜய் ஆண்ட்டனி  தனது  தங்கை மகனை  நாயகன் ஆக வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தார் ஆனால்  ப்ரமோஷனில்  அவர் தான் நாயகன் என்பது போல காட்டிக்கொண்டார் .க்ரைம்  த்ரில்லர்  ஆக ஆரம்பிக்கும் கதை  பின் க்ரைம்  இன்வெஸ்ட்டிகேஷன்  த்ரில்லர்  ஆக   மாறி  இறுதியில்  சூப்பர் நேச்சர் த்ரில்லர்  ஆக    முடிகிறது . எப்படிப்பார்த்தாலும்  இது ஒரு மாறுபட் ட   படைப்பே 


 12  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப் படம்  ரிலீஸ்   ஆன முதல்  ஒரு வாரத்திலேயே  7 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

சீரியல்  கில்லர்  ஒருவன் சென்னையில் ஒரு பெண்ணை  விஷ ஊசி  போட்டு  கொலை செய்கிறான் . பிணம்  உடல் முழுக்கக்கருகி விடுகிறது . இந்த செய்தி  வெளி வந்ததும்  அதை மும்பையில் இருந்து  பார்க்கும் போலீஸ் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார் . அவரது போலீஸ்  வாழ்க்கையில்  இதே  போல் ஒரு கேஸ்  இருந்தது . இன்னமும் அது தீர்க்கப் படவில்லை , எனவே  அந்தக்  கேசை  விசாரிக்க    அவர் சென்னை  வருகிறார் 



நாயகன்  ஒரு ஸ்விம்மிங்க் ஸ்பெஷலிஸ்ட் . தண்ணீருக்குள்  மூச்ச விடாமல் 6  நிமிடங்கள்   வரை இருக்கும் ஆற்றல் பெற்றவன் . அவனை வலியனா  ஒரு பெண் காதலிக்கிறாள் . நாயகனின்  தங்கை  வாழ்க்கை செட்டில் ஆகாமல்  வெளி நாடு  வர மாட்டே ன்   என  தனது  காதலி இடம் சொல்லி விடுவதால் லவ் பிரேக்கப் ஆகிறது .காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள் 


  நாயகி க்கு பிரமாதமான  கண்கள் .அவளது அழகை அடையாளம் கண்டு  போட்டோ  எடுக்கும்  நபரை  நாயகி காதலிக்கிறாள் ., ஆனால் ஆல்ரெடி  தனக்கு ஒரு  காதலி உண்டு என அவன் மறுத்து விடுகிறான் . மாடலிங்கில்  பெரிய ஆள் ஆ க வேண்டும் என்ற  லடசியம் கொண்ட நாயகி  தன  கனவு நிறைவேறப்போராடுகிறாள் 



போலீஸ்  ஆபீசர் , நாயகன் , நாயகி   இந்த  மூவரும் எந்தப்புள்ளியில்  இணைகிறார்கள் என்பது மீதி திரைக்கதை  


போலீஸ்  ஆபீசர்   ஆக  விஜய் ஆண்ட்டனி  கச்சிதம் . எந்த  முக பாவனையும் காட் டாமல் இருப்பதே  அவரது தனித்தன்மை . போலீஸ்  கெட்டப் க்கு அதுவே போதும்  என்பதால்  தப்பி விடுகிறார் 


நாயகன் ஆக அஜய் திஷன் ஆரம்பத்தில்   தடுமாறினாலும்  போகப்போக  மனம் கவர்கிறார் 


  நாயகி   ஆக   கனிமொழி கண்களால்  கவர்கிறார் . நடிப்பும் அருமை 


போலீஸ்  ஆபீசர்     விஜய் ஆண்ட்டனிக்கு  உதவி ஆக வரும் இன்ஸ்பெக்ட்டர் பிரிஜிதா சகா  கம்பீரமான நடிப்பு , கான்ஸடபிள் ஆக வரும்   மகாநதி சங்கர்   காமெடி  ட்ரை செய்கிறார் .நாயகனின் காதலி ஆக தீப்ஸிகா  கச்சிதம் .சமுத்திரக்கனி கெஸ்ட் ரோல் 

எஸ்   யவாவின் ஒளிப்பதிவு அருமை .நாயகி ,லேடி போலீஸ்  ஆபீசர் , நாயகனின்  காதலி , . நாயகனின் தங்கை  என அனைத்துப்பெண் கதாப்பாத்திரங்களை கண்ணியமான உடையில் படம்  பிடித்திருக்கிறார் . திரைக்கதை  எழுதி  இயக்கிய  லியோ ஜான் பால்   தான் எடிட்டிங்கும்  . அதுவே   பெரிய  பிளஸ் . தயாரிப்பாளர்  விஜய் ஆண்டதானி தான் இசை . கச்சிதம் 



சபாஷ்  டைரக்டர்


1  கடைசி  அரை மணி  நேர பிளாஷ்பேக்  போர்சன்   சுவராஸ்யம் 


2  ஓப்பனிங்க்  சீன்ல இருந்து  முதல் அரை மணி நேரம்  கதைக்குள் பார்வையாளர்களை இழுக்க வைக்கும் யுக்தி   அருமை 


3  க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே  உரித்தான  பின்னணி இசை இதில்  பட் டாஸ் .பாடல்கள்  இரண்டும் நன்றாக இருந்தன 


4  

விஜய் ஆண்ட்டனி    அண்டர் பிளே  ஆக்டிங்க் , அறிமுக  நாயகன் அஜய் திஷன் ஆக்டிங்க் , ,  நாயகி  கனிமொழியின்  மாறுபட் ட நடிப்பு , கெட்டப் .,லேடி போலீஸ்   இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் பிரிஜிதா  சகா  நால்வர்  பங்களிப்பும் அருமை 


5  கொலைகாரன்  யார் என சொல்லும் க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  பிரமாதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  சாவை விடப்பெரிய வலி நம்ம மனசுக்குப்பிடிச்சங்க சாவைபார்ப்பதுதான் 


2  மனுஷன்  கண்ணாடியைக்கண்டுபிடிக்கும் முன் அவனை அவனுக்கே அடையாளம் காட்டியது தண்ணீர் தான் 


3   இந்த மாதிரி  ஒரு இடத்துல   நான் செட்டில் ஆகணும் 


 உன் கூட செட்டில் ஆனா எனக்குப்போதும் 


4    சூயிங்கம் மெல்வது  நம் மனதின் போகஸ் திறனை பாதிக்கும் 


5 ஒருத்தரை  ஓடவம் , விடாம ஒளியவும் விடாம தனிமைப்படுத்தினா  அவங்க  ரகசியங்கள் வெளி வரும் 


6  உங்க   டைம்   சரி இல்லைனு நினைக்கிறேன் . உங்க வாட்ச்   நின்னு போய் ஒரு மணி நேரம் ஆகுது 


7      உனக்கு லாபம்  கிடைக்கணும்னு ஒரு செயலை செய்தால் அது பாவம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   தனது காதலி இறந்த  அடுத்த நாளே  முகத்தில்   எந்த சோகமும் இல்லாமல்  அவன் பாட்டுக்கு ட்யூட்டியை கவனிக்கிறான் . யார் சார் அவன் ? 


2 லவ்வரை  அவள் வீட்டின் வாசலில் டிராப் பண்ணாமல்  அந்தக்கிறுக்கன்  எதனால்  2 தெரு தள்ளி  டிராப் பன்றான் ? கொலை  நடக்க  வசதியா இருக்கட்டும்னா? அதுவும்  நைட் டைம்ல 


3  போலீஸ்  ஆபீசர்  அவரா  ஒரு துப்பும் கண்டு பிடிக்கலை . எல்லாம்   நாயகனாப்பார்த்து க்ளூ  கொடுத்தால் தான் ஆச்சு 


4  நாயகனின்  நீச்சல்   திறமை , மூச்சு  அடக்கி வைக்கும்  திறன் . எல்லாம் அருமை .ஆனால்   மெயின் கதையை  அது ஓவர் டே க் செய்கிறது .இவருக்கு முக்கியத்துவம் தர வேண்டும்  என்பதற்காக  வலுக்கட் டாயமா க  திரைக்கதையை  இவரைச்சுற்றி  அமைத்திருக்கிறார்கள் 


5   நாயகன்  தன காதலியுடன் பிரேக்கப் செய்யும்  சீன்   படு செயற்கை . ஏம்ப்பா   அஸிஸ் டெண்ட்  டைரக்டர் ஸ் , ஐடியா கொடுக்கலையா? 


6   நாயக னின் தனித்திறமை  அருமை , ஆனால்   அதை வைத்து  அவர்  போதிதர்மருக்கே  தாத்தா  மாதிரி   பில்டப் கொடுப்பது ஓவர் 


7 க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  வெளிப்பட் ட  பின்  கொலைக்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை . இன்னமும் வலுவாக  காட்டி இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட் ட  க்ரைம்   த்ரில்லர்  இது . வித்தியாசமான  படங்களைக்காண  விரும்பும் அனைவரும்  பார்க்கலாம். விகடன் மார்க்  யூகம் 42 . ரேட்டிங்க்  3 / 5  


Maargan
Theatrical release poster
Directed byLeo John Paul
Written byLeo John Paul
Produced byMeera Vijay Antony
Starring
CinematographyS. Yuva
Edited byLeo John Paul
Music byVijay Antony
Production
company
Vijay Antony Film Corporation
Release date
  • 27 June 2025
CountryIndia
LanguageTamil
Budget12 crore
Box office7 crore