திரை அரங்குகளில் 2025ல் ரிலீஸ் ஆனாலும் பல திரைப்பட விழாக்களில் 2023 லேயே கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் இது . டூயட் , காமெடி ,கமர்சியல் மசாலா அம்சங்கள் இல்லாத கில்லி படம் ஆகவே இதை நான் பார்க்கிறேன் . 90 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப்படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காத த்ரில்லர் படம் .பொதுவாக விருதுப்படம் என்ற லேபிள் இருந்தாலே அது ஆமை வேகத்தில் நகரும் .ஆனால் இது பரபரப்பாக விறுவிறுப்பாக இருக்கும் ஸீட் எட்ஜ் த்ரில்லர் மூவி
புதுமையான படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் . 100 கோடி 150 கோடி ஹீரோவுக்கு தண்டமாக சம்பளம் கொடுத்து விட்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் டப்பா படம் கொடுக்கும் இயக்குநர்களும் , காசாய்த்தண்ணீராய் இரைத்துப்படம் எடுத்து விட்டு படம் ஊத்திக்கிட்ட்தும் கண்ணீர் விடும் தயாரிப்பாளர்களும் பார்க்க வேண்டிய படம் இது
2018ல் நடந்த உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட் ட கதை இது . உண்மைக்கு மிக நெருக்கமாக காட் சிகள் இருப்பதால் ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும் நல்ல திரைக்கதை இது .ஆடியன்ஸுக்கு சுத்தமாக கனெக்ட் டே ஆகாமல் குப்பைப்படங்களாக வந்த கங்குவா , இந்தியன் 2 , வகையறாக்களைப்பார்த்து நொந்து போன ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் கதை இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி 5 மாதக்குழந்தைக்குத்தாய் . அவளது கணவனை போலீஸ் ஒரு பொய்க்கேசில் உள்ளே தள்ளி இருக்கு . ரயில்வே ஸ்டேசனில் நாயகி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு திருடி குழந்தையைத்திருடிக்கொண்டு போகிறாள்
நாயகன் தன் விதவை அம்மாவின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள ஊருக்கு வருகிறான் . ரயில்வே ஸ்டேசனில் அவனை பிக்கப் பண்ண நாயகனின் அண்ணன் வருகிறான் . நாயகன்மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவன் . நாயகனின் அண்ணன் கொஞ்சம் பணத்திமிர் உள்ளவன்
திருடி குழந்தையைத்திருடிக்கொண்டு ஓடும்போது நாயகனை இடித்துவிட்டுத்தான் கிராஸ் செய்கிறாள் . ஆனால் நாயகனுக்கு அவள் திருடி என்பது தெரியாது . குழந்தையின் தொப்பி நாயகன் கையில் மாட்டிக்கொள்கிறது
திருடி தப்பி விடுகிறாள் . நாயகி திடீர் என விழிப்பு வந்து குழந்தையைக்காணோம் என அலறுகிறாள் . அரக்கப்பறக்கத்தேடும்போது குழந்தையின் தொப்பி நாயகன் கையில் இருப்பதைப்பார்த்து அவன் தான் திருடன் என தவறுதலாக நினைத்து கத்துகிறாள்
;போலீஸ் வருகிறது . நாயகனை , நாயகனின் அண்ணனை விசாரிக்கிறது . பின் நாயகன் திருடன் இல்லை என்பதை உணர்கிறது . ஆனால் திருடியை ப்பார்த்த சாடசி நாயகன்தான் . இதனால் நாயகனை விட போலீஸ் மறுக்கிறது
போலீஸ் ஸ் டேசனுக்கு போலீஸ் பைக்கில் செல்ல அவர்களை பாலோ செய்து நாயகன் , நாயகனின் அண்ணன் மூவரும் காரில் செல்கின்றனர்
முதல் பத்து நிமிடங்களில் மேலே சொன்ன சம்பவங்கள் நடக்கின்றன . இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக சுபம் வரதன் நடித்திருக்கிறார் . இவர் ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட .. பிரமாதமான அண்டர் பிளே ஆக்டிங்க் . மனதுக்கு நெருக்கமாகும் அளவு அருமையான நடிப்பு ,நாயகனின் அண்ணனாக அபிஷேக் பானர்ஜி தெனாவெட்டான நடிப்பு .அவரது பணத்திமிர் டயலாக்கிலும், உடல்மொழியிலும் தெரிகிறது
நாயகி ஆக மியா மேல்சர் தத்ரூபமான நடிப்பு .இவர் அடிப்படையில் விருது பெற்ற நடிகை . நம்ம ஊர் நந்திதா தாஸ் போல மாநிற மங்கை . முகத்தில் உணர்ச்சிக்குவியலைக்காட்டுகிறார் . பல குறும்படங்களில் விருது பெற்ற நடிகை இவர்
இந்த 3 கேரக்டர்கள் தான் முக்கியமான கேரக்டர்கள் . ஒரு கார் . இவங்க 3 பேர் . பயணம் தான் மொத்தப்படமும் .
இயக்கம் கரண் தேஜ்பால்
சபாஷ் டைரக்டர்
1 அசாம் மாநிலத்த்தில் ஒரு தவறான வாட்ஸாப் பார்வர்டு மெசேஜால் இரு அப்பாவிகள் திருடர்கள் என தவறாக புரிந்துகொள்ளப்பட் டு பொது மக்களால் அடித்துக்கொல்லப்பட்டார்கள் . 2018ல் நடந்த அந்த உண்மை சம்பவத்தையொட்டி தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது . முதல் 10 நிமிடங்களிலேயே கதை அப்படியே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும்
2 போலீஸ் நம்மை விசாரிக்கும்போது நாம் கொத்தடிமை மாதிரி பதில் சொல்ல வேண்டும் . நம் உடல் மொழியில் , பேச்சில் கொஞ்சம் தெனாவெட்டு இருந்தால் நம்மை முடித்துக்கட் டி விடுவார்கள் என்பதை பிரமாதமாக எடுத்து சொல்லும் சீன்கள் செம
3 நாயகி நல்லவளா? கெட்டவளா ? என்பதை தேங்காய் உடைத்த மாதிரி சொல்லாமல் மாற்றி மாற்றி பரமபதம் விளையாடி சொல்வது அருமையான உத்தி
4 ஊர் மக்கள் நாயகன், நாயகனின் அண்ணன் ,நாயகி மூவரையும் துரத்தும் சீன்கள் , நாயகன் உயிருக்குப்போராடும் சீன்கள் எல்லாம் பதைபதைக்க வைப்பவை
5 ஒளிப்பதிவு , இசை , பின்னணி இசை , போன்ற டெக்கினிக்கல் அம்சங்கள் அனைத்தும் அருமை
6 வசதி இல்லாதவர்கள் , வசதி உள்ளவர்கள் இரு தரப்புக்கும் கிடைக்கும் நீதி நியாயம் வேறு வேறானவை என்பதை உணர்த்தம் சீன்கள் அருமை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U//A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனைவரையும் கவரும் இந்தப்படத்தை மிஸ் செய்து விட வேண்டாம் . டூயட் , காமெடி ,கிளாமர் எதுவும் மிக்ஸ் செய்யாத ராவான படம் . ரேட்டிங்க் 3.5 / 5