Tuesday, March 21, 2023

RANA NAIDU (2023) ஹிந்தி - வெப் சீரிஸ் விமர்சனம் 18+ ( ஆக்சன் க்ரைம் ட்ராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 2013  முதல் 2020  வரை  அமெரிகாவில்  ரே டொனாவன்  என்ற  பெயரில்  வெளியாகிய  வெப்சீரிசின்  அஃபிசியல்  ரீமேக்  தான்  இந்த ராணா  நாயுடு . . த்ரிஷாவுடன்  ஒரு காலத்தில்  நிச்சயதார்த்தம்  நிகழ்ந்து  பின்  திருமணம்  ரத்து  ஆன  ராணா  டகுபதி   தன்  தாய்  மாமா  ஆன  தெலுங்கு சூப்பர்  ஸ்டார்  வெங்கடேஷ் டகுபதி  உடன்  இணைந்து  நடித்து  இருக்கும்  இந்த  வெப்சீரிஸ் மொத்தம் 10  எபிசோடுகள்  கொண்டது . ஒவ்வொரு  எபிசோடும்  50  நிமிடங்கள்- 55  நிமிடங்கள் ., சராசரி  ஆக  8  மணி  நேரம்  ஒரே  சிட்டிங்கில்  அமர்ந்தால்  பார்த்து  விடலாம். இது  கமர்ஷியல்  ஆக்சன் மசாலா ஃபேமிலி டிராமா, இது  நெட் ஃபிளிக்ஸ்  ஒடிடி தளத்தில்  வெளியாகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனோட குடும்பத்தைப்பற்றி  முதலில்  பார்த்து விடுவோம், அம்மா இல்லை . அப்பா  தான்  செய்யாத  ஒரு  கொலைக்கேசில்  மாட்டி  15  வருடம்  ஜெயில்  தண்டனை  பெற்று  இப்போ  ரிலீஸ்  ஆகி  வெளில  வந்து  இருக்காரு. நாயகனுக்கு  ஒரு  அண்ணன், ஒரு  தம்பி . இருவரும்  நாயகனுக்கு  கட்டுப்பட்டு  நடக்கும்  பரதன்  லட்சுமணன்  வகையறாக்கள் . நாயகனுக்கு  மனைவி ஒரு  மகன், ஒரு  மகள்  உண்டு 


பெரிய பெரிய  விஐபிகளின்  பிரச்சனையை  தீர்த்து  வைக்கும்  தாதா  மாதிரி  ரோலில்  நாயகன்  வாழ்க்கயை  நடத்தி  வருகிறார். சின்ன  வயதில்  இருந்தே  இவருக்கும்  இவரது  அப்பாவுக்கும்  ஆகாது . அப்பாவை  என்ன  காரணத்தாலோ  ஆரம்பம்  முதலே  வெறுத்து  வருகிறார் நாயகன், ஆனால்  அப்பா  நாயகன்  மீதும்  குடும்பத்தினரி  மீதும்  அன்பு  , பாசம்  மிக்கவராக  வாழ்ந்து  வருகிறார்


 சிறையில்  இருந்து  வெளியான நாயகனின்  அப்பாவிற்கு  தன்னை கொலைக்கேசில்  மாட்ட  வைக்க  பிளான்  போட்டு  அதை  நிறைவேற்றியதே  தன்  மகன்  தான்  என  தெரிந்து கொள்கிறார். ரிலீஸ்  ஆன  அப்பாவை  மீண்டும்  ஒரு  கொலைக்கேசில்  மாட்ட  வைக்க  நாயகன்  திட்டம்  போடுகிறார். அதில் அவர்  வெற்றி  பெற்றாரா?இல்லையா? என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகனின்  தம்பியை  ஒரு  பிரபல  சாமியார் பாலியல்  வன்கொடுமை  செய்து  விடுகிறார். இதனால்  மன  நலம்  பாதிக்கப்பட்ட தம்பிக்கு  அந்த  சாமியார்  3  கோடி  ரூபாய்  நட்ட  ஈடு  தருவதாக  ஒத்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில்  நாயகனின்  தம்பி  அந்த  சாமியாரை  துபாக்கியால்  சுட்டு  விடுகிறார். ஆனால்  சாமியார்  சாகவில்லை ,உயிருக்குப்போராடிக்கொண்டு  இருக்கிறார்.நாயகன்  அந்த  ஸ்பாட்டுக்கு  வந்து  என்ன  முடிவு  எடுத்தார்? என்பது  கிளைக்கதை 


நாயகன்  ராணா  நாய்டுவாக  ராணா  டகுபதி . கற்பாறை  மாதிரி  முகம். இவர்  முகத்தில்  புன்னகையைப்பார்ப்பதும்  வெய்யில்  காலத்தில்  விவசாயி  மழை  வேண்டி  வானத்தைப்பார்ப்பதும் ஒன்றுதான். ஆனால் ஆறு  அடிக்கும்  அதிகமான  ஆஜானுபாகவமான  உயரம், ஜிம்  பாடி  இவரது  பிளஸ். ஊரில்  உள்ள  விஐபிகளின்  பிரச்சனைகளை  எல்லாம்  அசால்ட்டாக  டீல்  செய்து  தீர்த்து  வைப்பவர்  தன்  சொந்த   வாழ்வில்  ஏற்படும்  பிரச்சனைகளை  சமாளிக்க  முடியாமல்  தடுமாறுவது  உருக்கமான  நடிப்பு 


நாயகனின்  அப்பா நாகா  நாயுடுவாக  வெங்கடேஷ். தன்  சொந்த  மகனே  தனக்கு  துரோகம் செய்தாலும்  அவர்  மீது  பாசம்  காட்டும்  கேரக்டர்.. மகனின்  குடும்பத்தை  நேசிப்பதும்  அருமை. ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆனதும்  தன்  இரண்டவாது  மனைவியைப்பார்க்கப்போன  போது  அவர்  வேறு  ஒரு  நபருடன்  வாழ்வது  கண்டு  மனம்  வெதும்புவது  நல்ல  நடிப்பு 


நாயகனின்  மனைவியாக   சுர்வீன்  சாவ்லா  அழகுப்பதுமை. அவரது  காஸ்ட்யூம்  எல்லாம்  வேற  லெவல் . கணவன் எதுவுமே  தன்னிடம்  தகவல்  தெரிவிக்காமல்  வருவதும்  போவதும்  கண்டு  கொதிப்பது குட்  ஆக்டிங் 


நாயகனின்  அண்ணனாக  சுஷாந்த்  சிங் அருமையான  கேரக்டர்  டிசைன். ஒரு  பக்கக்கை  மட்டும்  நடுங்கும்  மெடிக்கல்  கம்ப்ளைண்ட்  உள்ளவர். கச்சிதமான  நடிப்பு


நாயகனின்  தம்பியாக  அபிஷேக்  பானர்ஜி   தாழ்வு  மனப்பான்மை  உள்ளவராக  புலம்பிக்கொண்டே  இருக்கும்  கேரக்டர். 


வில்லனாக  ஆஷிஷ்  வித்யார்த்தி. மிரட்டலான  உடல் மொழி  மற்றும்  சவால்  விடும்  நடிப்பு 


நாயகனின்  டீன்  ஏஜ்  மகளாக  அழகுப்பதுமையாக  அஃப்ரா சயத் நடிக்க  நல்ல  வாய்ப்பு 


சங்கீத்  சித்தார்த்தின்  பின்னணி  இசை விறுவிறுப்பாக கதையை  நகர்த்த  உதவி  இருக்கிறது




சபாஷ்  டைரக்டர் ( கரன்  ஆனுஷ்மான்)


1  போதைப்பழக்கத்தில்  இருந்து  விடுபட்டு  மீண்டு  வ்ரும்  தன்  தம்பியை  பாரில்  அவன்  நண்பன்  வற்புறுத்திக்குடிக்கச்சொல்ல  அண்ணன்  முதலில்  அவனிடம்  கெஞ்சி  மன்றாடி  விடசொல்லி  பின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனில்  அவன் வாயோடு  பீர்  பாட்டிலை உள்ளே  அனுப்பி  உடைக்கும்  மாஸ்  சீன் 


2  நாயகனின்  டீன்  ஏஜ்  ம்கள், அந்த  பக்கத்து  வீட்டுப்பையன்  இருவருக்குமான  காம்பினேஷன்  காட்சிகள்  பாரதிராஜா  படம்  பார்ப்பது  போல்  கவிதையான  காட்சிகள் 


3  கடைசி  இரண்டு  எபிசோடுகள்  பரபரப்பின்  உச்சம் / ஒரு  நிமிடம்  கூட  போர்  அடிக்காத  விறுவிறுப்பான  காட்சிகள் 


4   வில்லனின்  மிரட்டலால்  குடும்பத்துக்கு  ஆபத்து  உள்ளது  என  மனைவி  , குழந்தைகளை  ஒரு  ஹோட்டலுக்கு  ஷிஃப்ட்  பண்ண  மகன்  நாயகனின்  மனைவியிடம்  அப்பா டைவர்ஸ்  பண்ணப்போறாரா? என  அழுதுகொண்டே  கேட்கும்  சீன்  டச்சிங்


5   சினிமா  ஹீரோவை  நாயகனின்  அப்பா  மிரட்டும்  காட்சியும் , படத்துக்கு  கதை  சொல்ல்லும்  சாக்கில்  கொலை நடந்த  விதம்  குறித்து  விளக்குவதும்  புத்திசாலித்தனமான  திரைக்கதை 


ரசித்த  வசனங்கள் 


1 நேரம்  கெட்ட  நேரத்தில்  தான்  க்ளையண்ட்ஸ்  உனக்கு  ஃபோன்  பண்ணுவாங்க


 ஆமா, பிராப்ளம்  டைம்  பார்த்து  வராதில்ல?


3   நீயும், அவனும்  வாட்டரும், குவாட்டரும்  போல  சேர்ந்திருப்பீங்களாமே?


4  வாழ்க்கைல  நமக்குக்கிடைச்சதை  விட  இழந்தவை  தான்  அதிகம்


5  அரசியல்ல  எங்க  லட்சியங்களைக்கொன்னுட்டே  இருக்கோம்


6  மனுசன்  என்ன  வேகமா  ஓடுனாலும்  அவன்  செஞ்ச  பாவங்கள்  அவனைத்துரத்திட்டே  வரும்


7   ஒரு  ஆம்பளை  பலவீனமானவங்களுக்காக  போராடுவான் , ஆனா  பலகீனமானவர்களுடன்  போராட  மாட்டான்


8  கறுப்புப்பணத்தை  மறைக்கறதுக்காக  ஆஃபீஸ்  பூரா  வெள்ளை  அடிச்சிருக்கீங்க ?


9 எதிரியை  உன்னால  சமாளிக்க  முடியலைன்னா  ஒரே  ஆப்சன்  ஓடறதுதான்


10  எதிரிகள்  அவங்களை  நான்  பார்க்கலைனு  நினைச்சுட்டு  இருக்காங்க , எனக்கு  எல்லா சைடுலயும்  கண்ணு , ஏன்னா  நன்  ஜாக்கிசான்  சன்னு 



11   இது எல்லாத்தையும் நீ  தனி  ஆளாவா  செஞ்சே?


 சூப்பர்  ஹீரோக்கள்  எப்பவும்  தனியா  தான்  வேலை  செய்வாங்க 


12 சரக்கு  அடிக்கற  கிளாஸ்ல  தண்ணி  ஊத்தி  அடிச்சா  அது  பேடு  லக்  ஆகிடும்


13   இவரு  நமக்கு  அண்ணா, அந்த  லெடி  ஆனா. சத்தமா ஆனா  அப்டினு  கூப்ட்டா  ரெண்டு பேருமே  வந்துடுவாங்க 


14  நீ  கேட்காமயே  ஒரு  அட்வைஸ்  சொல்லவா? பசங்களை   பூவால  அடிச்சாக்கூட  அவங்களுக்கு  வலிக்கும்    


15   சட்டையையும்  பொண்டாட்டியையும்  மாத்திட்டே  இருக்கனும்


16  போலீஸ்  ஆஃபீசர் - நேத்து  ராத்திரி  எங்கே  இருந்தே?


 என்  காதலி  வீட்ல


  ஓஹோ , அவ  நெம்பர்  குடு


 சார் உங்களுக்கு  அதுல  இன்ட்ரஸ்ட்  இருந்தா  வேற  ஃபிகர்  நெம்பர்  தரேன். அவ  வேணாம், அவ  என்  காதலி


 யோவ் நீ  சொன்னது  உண்மையா?னு  கனஃபர்ம்  பண்ண  கேட்டேன்


17  உன்  காதலி  ஃபோன் நெம்பரை  ஏன்  தர  மாட்டேங்கறே?\


 அவ  ஒரு  குடும்ப  குத்து  விளக்கு . அவ  புருசனுக்கு  தெரிஞ்சா  பிரச்சனை  ஆகிடும் 


18  மத்தவங்க  பிரச்சனையை  தீர்த்து  வைப்பதுதான்  என்  வேலை , ஆனா எனக்கு  என்ன  பிரச்சனைன்னா  என்  ஃபேமிலியை   என்னால  பார்த்துக்க  முடியலை 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  மகன் , மகளுக்கு  முறையே  12  வயசு , 14  வயசு  தான்  இருக்கும், ஆனா  15  வருடங்கள்  சிறையில் இருந்து  விட்டு  ரிலீஸ்  ஆகும்  தாத்தா  அவர்களிடம்  என்னை  அடையாளம்  தெரியுதா? என  கேட்டதும்   ஓடி  வ்ந்து  கட்டிக்கறாங்க 


2  ரஹான்  எனும்  நபரை  தத்தெடுத்து  வளர்க்க  அவன்  அம்மாவுக்கு  கோடிக்கணக்கான  ரூபாய்  பணத்தை  ஒரு  பேக்கில்  வைத்து  நாயகன்  கொடுக்கும்போது  அவளது  குடிகார  புருசன்  தகறாரு  பண்றான். அது  குடிசை  வீடு , விளிம்பு  நிலை  மனிதர் வாழும்  பகுதி, அவ்வளவு  கேஷ்  தருவது  அவள் உயிருக்கு  ஆபத்து  என  நாயகனால்  யூகிக்க  முடியாதா? இத்தனைக்கும்  அவள்  சம்மதம்  தெரிவிக்கவில்லை ,யோசிச்சு  சொல்றேன், கொஞ்ச  நாள்  டைம்  கொடு  என  தான்  சொல்கிறாள் 


3   ரஹானின்  அம்மா  போதைப்பொருள்  பர்ச்சேஸ்  பண்ணி  பணம்  தராமல்  பார்ட்டியை  ஏமாற்றியதால் தான்  கொலை  செய்யப்பட்டார், ஆனால்  இந்த  உண்மையை  மறைத்து  அவள்  இமேஜ்  மகனிடம்  காப்பாற்றப்பட   அவனது  வளர்ப்புத்தந்தை  மீது  பழியைப்போட்டு  தன்  மெலும்  வெறுப்பு  வருவது போல  நாயகன்  செய்வது  அக்மார்க்  டிராமாத்தனம் 


4  அஞ்சாவது  எபிசோட்ல பேஷன்ட்டை பக்கத்துல  வெச்சுக்கிட்டே  அவரோட  நோய்  பற்றி  மத்தவங்க  கிட்டே  டிஸ்கஸ்  பண்றாரு  டாக்டர்


5   ஹோட்டல்ல  அருகருகே  இருவர்.  காஃபி  கப்பை  மாத்தும்போது  கைப்பிடி  மாறி  இருக்கற  மாதிரி  தெரியாம  மாத்தி  வைக்கிறான்  ஒருவன். அதைக்கூட  கரெக்டா  செய்ய  மாட்டானா? இவருக்கு  டவுட்  வராதா?


6  அனஸ்தீசியா  கொடுக்கலையா? ஏன்?


 பேஷண்ட்  இந்த  ஆபரேஷன்  பண்றப்போ  பேசிக்கிட்டே  இருக்கனும்


 இது  நாயகன்  - டாக்டர்  கான்வோ. ஆபரேஷன்  தியேட்டர்லதானே  இதெல்லாம் நடக்கும்? நாயகன்  எப்படி  யூகித்து  வெளிலயே  இந்தக்கேள்வியைக்கேட்கிறார்?  


7   ஆறாவது  எபிசோடின்  க்ளைமாக்சில்  வரும்  ட்விஸ்ட்  பிரமாதம், ஆனா  ஒரு  சிபிஐ  ஆஃபீசர்  இவ்ளோ  அசால்ட்டாவா  இருப்பாரு ? தனியாவா  மாட்டிக்குவாரு ?


8  சிட்டி செண்ட்டர்ல  இருக்கற  ஃபைவ் ஸ்டார் ஓட்டலில்  ஆசிஷ்  வித்யார்த்தி  கொலை  செஞ்ச  லேடியோட டெட்பாடியை  அசால்ட்டா  பேக்  பண்ணி  காரில் எடுத்துட்டு  வர  எப்படி  முடிஞ்சுது ? சிசிடிவி கேமரா  , ரிசப்ஷனிஸ்ட், ரூம் பாட் , செக்யூரிட்டி  கண்ல  எல்லாம்  எப்படி  மண்ணைத்தூவினாங்க ?  


9    மருமகள்  ஹோட்டலில்  தங்கி  இருக்கா. பாத்ரூம் ல  குளிக்கப்போய்  இருக்கா. மாமனார்  ரிசப்ஷன்ல  விசாரிக்கிறார். ரூம்  நெ  சொல்றாங்க. அவர்  எப்படி  ரூமுக்குள்  வந்தார் ? பாத்ரூம்ல  குளிக்கபோகும்  முன்  தனியா  இருக்கும்  லேடி  கதவை  பெப்பரப்பேனு  திறந்து  வெச்சுட்டா  போவாங்க ?


10  வில்லன்  நாயகனின்  அப்பாவிடம்  துப்பாக்கி  தருகிறான்  , அதில்  புல்லட்ஸ்  இல்லை . ரெகுலராக  துப்பாக்கியை  ஹேண்டில்  செய்பவர்களுக்கு  எம்ப்ட்டி  கன்  . லோடட்  கன்  வித்தியாசம்  தெரியாதா? 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- கடைசி  2  எபிசோட்கள்  தவிர  மீதி  8 எபிசோட்களிலும்  அடல்ட் கண்ட்டெண்ட்  18+ காட்சிகள்  உண்டு . குடும்பத்துடன்  பார்க்க  முடியாது . இது  போக  கெட்ட  வார்த்தைகள்  அதிகம்  வரும் , குழந்தைகளுடன்  பார்ப்பதை  தவிர்க்கவும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பார்க்க  சுவராஸ்யமான  ஆக்சன்  கமர்ஷியல்  சீரிஸ்  தான், ஆனால்  குடும்பத்துடன்  பார்க்க  முடியாது . தனியாகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 





Rana Naidu
Rana Naidu.jpg
Promotional poster
GenreAction
Crime drama
Created byKaran Anshuman
Based onRay Donovan
Written byKarmanya Ahuja
Anany Mody
B. V. S. Ravi
Vaibhav Vishal
Karan Anshuman
Dialogues:
Vaibhav Vishal
Screenplay byB. V. S. Ravi
Story byAnanya Mody
Directed bySuparn Verma
Karan Anshuman
StarringRana Daggubati
Venkatesh Daggubati
Suchitra Pillai
Rajni Basumatary
Gaurav Chopra
Surveen Chawla
Music bySangeet-Siddharth
ComposerJohn Stewart Eduri
Country of originIndia
Original languagesHindi
Telugu
No. of seasons1
No. of episodes10
Production
Executive producersMohit Shah
Pearl Gill
ProducersSunder Aaron
Sumit Shukla
CinematographyJaya Krishna Gummadi
EditorsNinad Khanolkar
Manan Ashwin Mehta
Running time39–50 minutes
Production companyLocomotive Global Inc.
Release
Original networkNetflix
Picture format4K UHD
Audio formatDolby Digital
Original releaseMarch 10, 2023

Saturday, March 18, 2023

LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்


1996ல்  பி  வாசு  இயக்கத்தில்  பிரபு தேவா , நக்மா  நடிப்பில்  வெளியான  லவ்பேர்ட்ஸ்  தமிழ்  படத்துக்கும் , 2020 ல்   ஆக்சன்  அட்வென்ச்சர்  அமெரிக்கன்  படமாக  ரிலீஸ்  ஆன  த  லவ் பேர்ட்ஸ்  படத்துக்கும்  இந்த  கன்னடப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை , மூன்றும்  வேறு  வேறு  கதைக்களம் 

2023  ஃபிப்ரவரி 14  காதலர்  தினத்தை  முன்னிட்டு     திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆன இந்த  கன்னடப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  ஃபேஷன்  டிசைன்ர். நாயகன்  ஒரு  சாஃப்ட் வேர்  எஞ்சினியர். ஆன் லைன் திருமண  தகவல்  மையம்  மூலம்  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறது . பெற்றோர்  சம்மதத்துடன்  இருவரும்  ஒரு  நாள்  நேரில்  சந்திக்கிறார்கள் 


ஹோட்டலில்  சந்தித்த  அவர்கள்  முதல்  சந்திப்பிலேயே  இருவருக்கும்  செட்  ஆகாது  என  முடிவெடுக்கிறார்கள் ., ஏன்  எனில்  நாயகன்  சிக்கனமாக  செலவு  செய்ய  நினைத்து  குறைவான  விலை  உள்ள  உணவை  ஆர்டர்  செய்ய  நாயகி  10,000  ரூபாய்  பில்  வரும்படி பிரம்மாண்டமாய்  ஆர்டர்  செய்கிறாள்


 இந்தப்பெண்ணைக்கட்டிக்கிட்டா நாம  போண்டி  ஆகிடுவோம்  என  நாயகனும், இந்த  மாப்ளையைக்கட்டிக்கிட்டா கஞ்சன்  ஜங்கா  ல  குடி  ஏறீயது  போல  ஆகிடும்  என  நாயகியும்  முடிவு  எடுக்கிறார்கள் 


அதற்குப்பின்  நாயகி  பல  மாப்பிள்ளைகளை  சந்திக்கிறார். ஆனால்  யாரும்   சரி  வரவில்லை . தெரியாத  பேயை விட  தெரிஞ்ச  பிசாசே  மேல்  என்ற  பழமொழிக்கு  ஏற்ப    நாயகனையே  திரும்ணம்  செய்ய  முடிவெடுக்கிறார்


 வேற  எந்தப்பெண்ணும்  சிக்காததால்  நாயகனும்  வேறு  வழி  இல்லாமல் திருமணத்துக்கு  ஓக்கே  சொல்கிறான்


 இருவருக்கும்  திருமணம்  ஆகிறது .    மோகம்  முப்ப்து  நாள்  ஆசை  அறுபது  நாள் ( அஜித்  நடித்த  ஆசை  100  நாள்  படம் , பிரமீளா  நடித்த  மோகம்  மலையாளப்படம் 175  நாட்கள்  ஓடியதே? என  யாரும்  குறுக்குக்கேள்வி  கெட்க  வேண்டாம் )    என்ற   பழமொழிக்கு  ஏற்ப  திருமணம் ஆன  சில  நாட்களில்  இருவருக்கும்  சின்னச்  சின்ன சண்டைகள்  வருகின்றன


எல்லாவற்றிற்கும்  சிகரம்  வைத்தாற்போல  நாயகன்  - நாயகி  இருவரின்  பெற்றோர் அவர்கள்  வீட்டுக்கு வரும்போது  நாயகி  நாயகனின்  பெற்றோரை  கவனிக்கவில்லை . 


உலகில் 99%  பெண்கள்  தங்கள்  கணவன்  வீட்டு  சொந்த்த்தை  மதிக்க  மாட்டார்கள்  எனற  உண்மை  அறியாத  நாயகன்  அந்த  விஷயத்தை  முன்னெடுத்து  சண்டை  போடுகிறான் . இரு  தரப்பு  பெற்றோருக்கும்  சண்டை  வர  இருவரும்  பிரிகிறார்கள் 



டைவர்ஸ்  கேட்டு  இருவரும்  ஒரு  லேடி  லாயரை  சந்திக்கிறார்கள் . யாருமே  எதிர்பாராத  ஒரு  திருப்பமாக  அந்த  லேடி  லாயர்  மூலம்  ஒரு  சம்பவம்  நடக்கிறது . இதற்குப்பின்  தம்பதிகள் இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பது  மீதிக்கதை 


நாயகனாக  டார்லிங்  கிருஷ்ணா  இயல்பான  நடிப்பு  , முக  சாயலில்  நடிகர்  விஷால்  போல  இருக்கிறார். ஆக்சன்  காட்சிகளில்  கோபம்  காட்டும்  அளவு  ரொமான்ஸ்  காட்சிகளில்  சோபிக்க  முடியவில்லை , சோகக்காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்


 நாயகியாக மிலனா  நாக்ராஜ். மாடர்ன்  கேர்ள்  ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ்க்கு  30  நிமிடங்கள்  முன்பிருந்து  மாறுபட்ட  நடிப்பை  வழங்குகிறார் 


லேடி  லாயராக  வரும்  சம்யுக்தா  துடிப்பான  நடிப்பை  வழங்கி  உள்ளார் , ஒரு  கட்டத்தில்  நாயகனுடன்  ஜோடி  சேரப்போகிறார்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்துகிறார்


நாயகனின்  அம்மாவாக  அல்டாப் அண்ட்  ஆல்  அப்டேட்ஸ்  அலமேலு  கேரக்டரில்  அதகளம்  செய்திருக்கிறார்  வீணா  சுந்தர் 


நாயகியின்  அப்பாவாக  வரும் சாது  கோகிலா ( ஆண்) ஒரு  காமெடி  நடிகருக்கான  உடல்  மொழியுடன்  கலக்குகிறார்


அர்ஜூன்  ஜன்யா  வின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  குட் 


கதை திரைக்கதை  இயக்கம்  எடிட்டிங்  எல்லாமே  பி சி  சேகர்  தான் . இந்தபப்ட  வெற்றிக்குப்பின்  பிசி  சேகர்  ஆக  வாழ்த்துகள் . 2  மணி  நேரம்  9  நிமிடங்கள்  ஓடுகிற  மாதிரி  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்  ( பி  சி  சேகர்  ) 

1    நாயகிக்கு  மீள  முடியாத  வியாதி  இருக்கிறது என  தெரிந்ததும்  அனைவரும்  நாயகி  மீது  காட்டும்  அக்கறை , அது  சம்பந்தமான  இரு  வீட்டு  பெற்றோர்  வரும்  காட்சிகள் 


2  கலகலப்பான  முதல்  பாதி 


3  க்ளைமாக்சில்  நல்லதொரு  கருத்தை  பிரச்சார  தொனி  இல்லாமல்  படைத்த  விதம் 

  ரசித்த  வசனங்கள்  ( பிரசாந்த்  ராஜப்பா)


1   நீ  வக்கீலா  இருப்பதை  விட  ஆசிரமம்  ஆரம்பிச்சு சாமியாராப்போனா  எங்கேயோ  போய்டுவே


2 இது  ரிமோட்  வோர்ல்டு .,ஆனானப்பட்ட  ஐ  ஃபோன் கூட  வருசா  வருசம்  அப்டேட்  ஆகிட்டே  இருக்கு , ஆனா  நீ இன்னும்  நோக்கியா  பேசிக்  மாடல்  போல  இருந்தா  எப்படி ??


3   ஏன்  ஒரு  மணி  நேரம்  லேட்டா  வர்றீங்க? இதுதான்  நம்ம  ஃபர்ஸ்ட்  மீட்


 நம்ம  இந்தியன்  கல்ச்சர்  அப்படி., கரெக்ட்  டைம்க்கு  வந்தா  வேலை  வெட்டி  இல்லாதவன்னு  நினைப்பாங்க 


4   சரக்கு  மட்டும்  தான்  அடிப்பியா? தம்  பழக்கமும்  உண்டா?


 சரக்கும், தம்மும்  ட்வின்  பிரதர்ஸ் மாதிரி 


5  கடவுள்  சில  சமயம்  நமக்கு  வார்னிங்  குடுப்பார், நாம  அதை  கவனிக்கலைன்னா  மாட்டிக்குவோம்


4  செக்  பண்ணி  மாப்ளை  தேர்ந்தெடுக்க  முடிவு  பண்ணினா  ஒர்க்  அவுட்  ஆகாது , இங்கே  100%  பர்ஃபெக்ட் ஆண்  எங்குமே  இல்லை 


5   நீங்க  எதிர்பார்க்கற  தகுதில  50%  தகுதி  இருந்தா  போதும்  , மீதி  50%  காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்


6  யார்  நம்ம  பக்கத்தில்  இல்லாத போதும்  அவங்க  நினைப்பு  நமக்கு  வருதோ  அவங்க  தான்  நம்ம  லைஃப்  பார்ட்னர் , யார்  கூட  பேசும்போது  நமக்கு ரொம்ப  கம்ஃபர்ட்ட[பிளா  இருக்கோ  அவங்க  தான்  நமக்கு  உற்ற  துணை 


7 வாழ்க்கைல  நல்ல  நல்ல  மொமெண்ட்ஸ்  எல்லாம்  சீக்கிரமா  நம்மை   கடந்து  போயிடும், ஆனால்  மோசமான  மொமெண்ட்ஸ்  அப்ப்டியே  தங்கி  இருப்பது போல  தோணும்


8 சார்  அர்ஜெண்ட்டா  இந்த  பார்சல்  அனுப்பனும்


‘ அர்ஜெண்ட்னா  வாட்சப்ல தான்  அனுப்பனும்


9 கடந்த  காலம்  முடிந்தது  முடிந்ததுதான்  , வருங்காலம்  மட்டும்  தான்  நம்ம  கைல  இருக்கு 


10  உங்க  கார்  என்ன  விலை  சொல்றீங்க ?


 10  லட்சம்


 விஜய்  ,மல்லய்யா  வெளிநாட்டுக்கு  ஓடிபோனப்ப  அந்த  ஃபிளைட்டையே  6  லட்சத்துக்குதான்  வித்தாரு


11   அவ  ஏன்  கார்ல  வாந்துக்கறேன்னு  சொல்றா?


 அது  வந்து  பைக்ல  வந்தா  அவளுக்கு  வியர்க்கும், சேராது


 என்னது ?


12  அந்த  மேடம்  குடுத்த  ஆர்டர்  அவுட்  ஆஃப்  ஆர்டர்  ஆகிடுச்சே?


13  குரங்கில்  இருந்து  மனுசன்  ஆக  நூற்றுக்கணக்கான  வருடங்கள்  ஆனது , ஆனா  மனுசன்  குரங்காக  மாற  ஒரே  ஒரு  மேரேஜ்  போதும்


14  உன்  டேட்  ஆஃப்  பர்த்  பிரம்மன்  எழுதுனது , உன்  டேட்  ஆஃப்  டெத்  நான்  எழுதப்போறேன்


12   பார்க்க  நல்ல  ஜோடியா  தெரியுது  ஏன்  டைவர்ஸ்  அப்ளை  பண்ணி  இருக்கீங்க >


  புலியும்  ஆடும்  பக்கத்து  பக்கத்துல  இருந்தா   ஃபோட்டோல  பார்க்க  வேணா  நல்லா  இருக்கும்,


13  இரு  நாடுகளுக்கு  இடையே  நடக்கும்  போரில்  கூட  பிரேக்  விடுவாங்க , இவங்க  ரெண்டு  பேரோட  சண்டைக்கும்  பிரேக்கே  கிடையாது  போல, எப்போப்பாரு  ஃபைட்  தான் 


14   இறப்பு  வரும்போதுதான்  வாழ்வின்  அருமை  தெரியும் 


15  இப்போ   நான்  உங்களுக்கு  ஹாய்  சொல்றதா? பை  சொல்றதா? தெரியல, ஆபரேஷன்  முடிஞ்சு  நான்  உயிரோட  வருவேனா? இல்லையா?  தெரியாது 


 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகனின் அம்மா  பாரம்பரியமான  பழக்க  வழக்கம்  உள்ளவர்  என  தெரிந்தும்  நாயகி  முதன்  முதலாக  மாப்பிள்ளையான  நாயகனை  ச்ந்திக்க  வரும்போது  ஸ்லீவ் லெஸ்  பனியன்  ,  லோ  ஹிப்  நைட் பேண்ட் காஸ்ட்யூம்ல  வர்றார். என்னதான்  மாடர்ன்  கேர்ள்  என்றாலும்  திருமண  முதல்  ச்ந்திப்பில்  புடவை  அல்லது  சுடிதார்  தானே  கண்ணிய  உடை ? 

2      என்  பிளாட்டை  விட  உன்  பிளாட்  வசதியா  பெருசா  இருக்கே, அதனால  நாம  அங்கேயே  குடி  போய்க்கலாம்னு  என்  பிளாட்டை  வித்துட்டேன்னு  ஹீரோ  சொல்வது  நம்பும்படி  இல்லை . கிட்டத்தட்ட  அது  வீட்டோட  மாப்பிள்ளை  ,மாதிரிதானே? ஹீரோ  கேரக்டர்  டிசைன்  தன்மானம்  உள்ளவன்  மாதிரி  காட்டிட்டு  இப்படி  காட்டலாமா?  ( அதுல்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கு , ஆனா  ஹீரோயின்  மனசுல  அப்படி  தோண வேணாமா?)

3   ஹீரோ  ஹீரோயின்  சின்ன்ச்சின்ன  சண்டைகள்  எல்லாம்   பெரிய  பாதிப்பை ஏற்படுத்தவில்லை , ஏதோ  பிரிவு  வர  வலுக்கட்டாயமா  காட்சிப்படுத்துன  மாதிரிதான்  இருக்கு , குறிப்பா  இரு  தரப்பு  பெற்றோரும்  வீட்டுக்கு  வந்து  சமாதானப்படுத்த  வரும்  தருணத்தில்  நாயகனின்  அப்பா, நாயகியின்  அப்பா  இருவரும்  அடித்துக்கொள்வது  அசல்  அக்மார்க்  டிராமா 


4 க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்னால  நாயகியை ஸ்கேன்  மிஷின்ல  வெச்சுக்கிட்டே  டாக்டர்  நாயகன்  கிட்டே  நாயகி  பிழைபது  கஷ்டம்,  கேன்சரை  விட  மோசமான  வியாதி  தாக்கி  இருக்குனு  சொல்றாரே?  எந்த  டாக்டராவ்து  பேஷண்ட்டை  பக்கத்துல  வெச்சுக்கிட்டே  அப்படி  சொல்வாரா? ( இதுல  ஒரு  ட்விஸ்ட்  பின்னால  இருக்கு , இருந்தாலும்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை ) 


5  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வலியப்புகுத்தியது  போல  இருக்கு . பொதுவாக  மெடிக்கல்  கம்ப்ளைண்ட்  வரும்போது  செகண்ட்  ஒப்பீனியன் வெற  டாக்டர்  கிட்டே  கேட்பாங்க , அப்படி  கேட்கவில்லை  ஏன் ? 

6  ஒப்பனிங்  சீனில்  மிக  சிக்கனவாதியாக  காட்டப்படும்  ஹீரோ  பின்னர்  ஆடம்பரனான  பிளாட்  வாங்குவதும் , காஸ்ட்லி  கார்  வாங்குவதும்  எப்படி ? ஹோட்டலில்  ஆர்டர்  பண்ணும்போது  100  ரூபாய்க்குள்  ஆர்டர்  செய்யும்  சிக்கனவாதி  ஆயிற்றே? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  யூ    சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாதி  கலகலப்பாகவும்  கடைசி  30    நிமிடங்கள்  கனமான  சோகமாகவு,ம், க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டோடும்  படம்  முடிகிறது . பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5 

Friday, March 17, 2023

REKHA(2023) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ரிவஞ்ச் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


  பொதுவாக  காதலர்  தினம்  டைம்ல  லவ்  சப்ஜெக்ட் படங்கள்  ரிலீஸ்  ஆகும், ஒரு  மாறுதலுக்கு  காதலர்களுக்கு  எச்சரிக்கை  விடுக்கும்  படமாக  இது   ரிலீஸ்  ஆகி  இருக்கிறது . தியேட்டர்களில் 2023  ஃபிப்ரவரி 10  அன்று  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது மார்ச் 10 2023  அன்று  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில்  வெளியாகி  உள்ளது 

ATTENTION PLEASE  ,  FREEDOM  FIGHT   ஆகிய  இரு  படங்களை 2022 ஆம்  ஆண்டு  இயக்கிய ஜிதின் இஷாக் தாமஸ்  இந்த  ஆண்டு  இயக்கிய  படம்  ரேகா. அட்டென்ஷன்  ப்ளீஸ்  படத்தின்  நாயகன்  கேரக்டர்  டிசைனில்  இருந்து தான்  ரேகா  பட  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டு  உள்ளது . நம்ம  ஊர்  இயக்குநர் கார்த்திக்  சுப்புராஜ்  தயாரிக்கும்  சொந்தப்படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  டீன்  ஏஜ்  மாணவி . அவருக்கு  அம்மா, அப்பா  உண்டு. சொந்த  வீட்டில்  வசித்து  வருகிறார்கள் . அதே  எரியாவில்  குடி  இருக்கும்  வேலை  வெட்டி  இல்லாத  வெட்டாஃபீஸ்  தான்  நாயகன். உறவினரின்  மளிகைக்கடையை  கவனித்து  வருகிறான். இருவரும்  காதலிக்கிறார்கள் 


தினமும்  அலை பேசியில்  சேட்டிங்  எல்லாம்  நடக்கிறது . ஒரு  நாள் வீட்டு  வாசலில்  அப்பா  படுத்து  உறங்கிக்கொண்டு  இருக்கிறார். அம்மா  வீட்டில் உள்ள  அறையில்  உறங்குகிறார்/. அப்போது  நாயகியுடன்  நாயகன்  செல்  ஃபோனில்  சேட்டிங்  செய்து  கொண்டு  இருக்கிறார். திடீர்  என  வாசல்  கதவத்திற  வெளீல  தான்  நிற்கிறேன்  என்கிறான்  நாயகன் 


 நாயகிக்கு  பகீர்  என   திடுக்கிடல்  நிகழ்கிறது . இரவு  நேரம்  , யாராவது  பார்த்து  விட்டால்  என்ன  ஆவது  என  திக்  திக்  மனதுடன்  கதவைத்திறக்கிறாள். கொஞ்ச  நேரம்  இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ., ஆரம்பத்தில்  முத்தம்  வேண்டும்  என கேட்கும்  நாயகன்  பின்  மொத்தமும்  வேண்டும்  என்கிறான்


இருவருக்கும்  இடையே  உறவு  நிகழ்கிறது. அடுத்த  நாள்  காலையில்  நாயகி  எழுந்து  பார்க்கும்போது  அப்பா  இறந்து  கிடக்கிறார். ஹார்ட்  அட்டாக்  ஆக  இருக்கலாம்  என  உறவினர்  பேசிக்கொள்கிறார்கள் . ஏற்கனவே  ஒரு  முறை  அவருக்கு  ஹார்ட்  அட்டாக்  வந்துள்ளது . போஸ்ட்  மார்ட்டம்  செய்தால்  தெரிந்து  விடும், ஆனால்  யாருக்கும்  அதில்  விருப்பம்  இல்லை 


 நாயகிக்கு  நாயகன்  மீது  சந்தேகம், ஏன்  எனில்  இரவு  நாயகியைப்பார்க்க  வரும்போது எப்போதும்  குலைத்துக்கொண்டே  இருக்கும்  நாயை  எப்படி  சமாளித்தாய்? என  கேட்ட போது  மயக்க  மருந்து  கலந்த  உணவு  கொடுத்தேன்  என  சொல்லி  இருந்தான், அதனால்  அப்பாவின்  மரணத்துக்கு  அவன்  காரணமோ  என  சந்தேகம்  கொள்கிறாள்


நாயகனுக்கு  ஃபோன்  செய்தால்  செல் ஃபோன்  ஸ்விட்ச்  ஆஃப்  என  வருகிறது. அதே  ஏரியாவில்  திருமணம்  ஆன  ஒரு  பெண்  ஒரு  ஆளுடன்  கள்ளக்காதலில்  இருந்தது  கணவனுக்கு  தெரிய  வர  அந்தப்பெண்  தூக்குப்போட்டு  தற்கொலை  செய்து  கொண்டதாக  தகவல்  வருகிறது . சம்பந்தப்பட்ட  கள்ளக்காதலன்  யார்? என  யாருக்கும்  தெரியவில்லை 


 நாயகி தன்  காதலன்  மீது  சந்தேகம்  கொள்கிறாள் .  காதலனைத்தேடி  செல்கிறாள் . இத்ற்குப்பின்  ஏற்ப்பட்ட  திருப்பங்கள்  தான்  கதை 


நாயகி  ரேகாவாக  வின்சி  அலோசியஸ்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். காதல்  மயக்கத்தில்  காதலனுடன்  சேட்டிங்  செய்யும்போது  அப்பாவி  முகத்துடனும், பின்  பாதியில்  ட்ரான்ஸ்ஃபர்மேஷ்ன்  சீனில்  ஆக்சன்  நாயகி  ஆகவும்  அவதார,ம்  எடுக்கிறார்.அவரது  முகத்தில்  கோபம்  , காதல்  மாறி  மாறி  வருவது  பிளஸ்


 நாயகனாக   அர்ஜுனாக   உன்னி  லாலு பிளே  பாய்  ரோல் . கச்சிதமாக  நடித்திருக்கிறார்


மானவ் சுரேஷின்  ஆர்ட்  டைரக்சன்  கச்சிதம்   ரோஹித்  வ்ரியத்  எடிட்டிங்கில்  கனகச்சிதமாக  2  மணி  நேரப்படமாக  ட்ரிம்  செய்திருக்கிறார், ஆப்ரஹாம்  ஜோசஃபின்  ஒளிப்பதிவில்  நைட்  சீக்வன்ஸ்  காட்சிகள்  அதிகம்  என்பதால்  சவாலான  வேலை 


படம்  செல்ஃப்  எடுக்க  முதல் 20  நிமிடங்கள்  ஆகிறது . பொதுவாகவே மலையாளப்படங்கள்   ஸ்லோவாகத்தான்  கதை  சொல்வார்கள் 


பார்க்கத்தகுந்த  இந்தப்படம்   நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகியின்  கேரக்டர்  டிசைன்  கச்சிதம் . வழக்கமாக  நாயகி  நாயகனிடம்  எமாந்து  விட்டால்  எனக்கு  வாழ்க்கை  கொடு  என  அழுது  புலம்புவார்கள் , இந்த  நாயகி  அது  பற்றி  எல்லாம்  கவலைப்படாமல்  அப்பாவின்  மரணத்துக்கு  காதலன்  காரணமோ  என  சந்தேகப்படுவது ,  பழி  வாங்கத்துடிப்பது  எல்லாமே  அருமை 


2  நாயகனின்  வாட்ச்மேன்  மாமா  கேரக்டர்  நாயகியை  அடைய  முற்படும்போது  நாயகி  எடுக்கும்  ஆக்சன்  அவதாரம்  அபாரம் 


3  க்ளைமாக்சில் போலீஸ்  வந்து  நாயகியை  விசாரிக்கும்போது  நாயகியின் அசால்ட்டான  உடல்  மொழி  கம்பீரம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  கள்ளிப்பெண்ணே !  குஞ்சுப்பெண்ணே! வாயோ  நீ  வாயோ 


  ரசித்த  வசனங்கள் 


1 பக்கத்து  வீட்டில்  கோழி  வாங்காதீங்கனு  1000  தடவை  சொன்னேன், கேட்டீங்களா?முட்டை  இடும்போது  மட்டும்  அங்கே  போய்டுது


2  பொண்ணு  வீட்ல  இருக்காளே -னு  பார்க்கறேன் இல்லைன்னா  கண்டபடி  உன்னை  திட்டிடுவேன் 


அப்பா, நான்  வெளில  போறேன், கொஞ்சம்  வேலை  இருக்கு  , அம்மாவை  திட்டனும்னா  திட்டிக்குங்க 


 என்னை மட்டம்  தட்டனும்னா  அப்பா  பொண்ணு  ஒண்ணு  சேர்ந்துக்குவீங்களே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  அந்த  வாட்ச் மேன்  மாமாவை  பால்  பாத்திரத்தால்  தொடர்ந்து  தாக்குகிறாள்  . அவன்  முகத்தில்  ரத்தம்  வழிகிறது ., மீண்டும்  தாக்குகிறாள்  ., ஆனால்  அந்த  பாத்திரத்தின்  அடி  பாகம்  ரத்தக்கறை  இல்லாமல்  சுத்தமாக  இருக்கிறது .ஒவ்வொரு  அட்டாக்  நடந்ததும்  பாத்திரத்தை  கழுவி  அடுத்த  அட்டாக்  நிகழ்த்தினால் தான்  அப்படி  ஆகும் 


2   நாயகி  நாயகனை  தனிமையான  இடத்தில்  சந்திக்க  விரும்புவதாககூறும்போது  நாயகன்  ஏன்  சம்மதிக்கனும்? தன்  மேல்  டவுட்  என்பதை உணர்ந்தவன்  ஏன்  ரிஸ்க்  எடுக்கிறான் ?


3  அப்பாவின்  டெட்  பாடி  அருகே  மயக்கம்  அடைந்த  நாயின்  உடலைப்பார்த்தும்  யாருக்கும்  சந்தேகம்  வராதது  ஏன் ?


4  ஒரு  சிறிய  வீடு  , பக்கத்து  அறையில்  அம்மா , வாசலில்  அப்பா  இந்த  சூழலில்  நாயகி  எப்படி  நாயகனை  அறைக்குள்  அனுமதித்து  கூடலுக்கு  சம்மதிக்கிறாள்? கிராமத்தில்  அது  எவ்வளவு   பெரிய ரிஸ்க்?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -   18+  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  ரொமாண்டிக்  க்ரைம்  டிராமா . முதல்  பாதி  ஜாலியாகவும்  பின்  பாதி  விறுவிறுப்பாகவும்  போகும், பார்க்கலாம்  ரெட்டிங்  2. 5 / 5 

Thursday, March 16, 2023

LUTHER:THE FALEN SUN (2023) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ் 18+


  ஸ்பாய்லர்  அலெர்ட்


ஃபேக்டரில  வேலை  செஞ்சுட்டு  இருக்கும்  டீன்  ஏஜ் பையனுக்கு  ஒரு  கால்  வருது . நான்  சொன்ன  இடத்துக்கு  இன்னும்  15  நிமிசத்துல  வா, வர்லைன்னா  இந்த  ஸ்க்ரீன் ஷாட்ல  இருப்பதை  உன்  அம்மாவுக்கும், உன் காண்டாக்ட்  லிஸ்ட்ல  இருக்கறவங்களுக்கும்  அனுப்பிடுவேன்  அப்டினு அந்தகுரல்  மிரட்டுது . உடனே  அந்தப்பையன்  குறிப்பிட்ட  இடத்துக்குப்போறான். அவன்  கடத்தப்பட்டு  கொலை  செய்யப்படுகிறான்


 அந்தப்பையனோட  அம்மா  நாயகனான  போலீஸ்  ஆஃபீசரிடம்  என்  பையனைக்கண்டு  பிடிச்சுக்கொடுப்பேன்  என  சத்தியம்  பண்ணுங்க  என  உறுதி  கேட்கிறாள். நாயகனும்  சத்தியம்  செய்கிறான் 


 இதற்குப்பின்  சில  காரணங்களால்  நாயகன்  ஜெயிலில்  அடைக்கப்படுகிறான். அந்த  கேப்பில்  அந்தப்பையனின்  அம்மாவுக்கு  ஒரு  கால்  வருது . குறிப்பிட்ட  இடத்துக்கு  வரச்சொல்லி. அங்கே  போய்  பார்த்தால்  அந்தப்பையன்  தூக்கில்  தொங்கிக்கொண்டு  இருக்கிறான், அவனைப்போலவே  11  பெர்  தூக்கில்  இருக்கிறார்கள்  11  பெரின்  பெற்றோர்களுக்கும்  கால்  போய்  இருக்கு  , அனைவரும்  அங்கே  ஆஜர் 


வில்லன்  ஒரு  சைக்கோ  கில்லர் , அவன்  மனிதர்களின்  பலவீனத்தை  பயன்படுத்தி  அவர்களை  தன்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு  வந்து  அவன்  இஷ்டப்படி  ஆட்டுவிக்கிறான். அது  ஒரு  திருட்டாக  இருக்கலாம், சேட்டிங்க் ஆக  இருக்கலாம்,  புகைப்பட  பகிர்வாக  இருக்கலாம், ஏதோ  ஒரு  விஷயம் , சமூகத்துக்கு  தெரிந்தல்  அவமானம்  என  எதை  நினைக்கிறோமோ  அந்த  பலவீனத்தை  பயன்படுத்தி  மிரட்டி  தன்  காரியத்தை  சாதித்துக்கொள்கிறான்


நகரின்  முக்கியமான  மையமான  இடத்தில்  ஒரே  சமயத்தில்  பலரை  தற்கொலை  செய்து  கொள்ள  வைக்கிறான்  வில்லன் .


 இப்போது  இன்வெஸ்டிகேசன்  ஆஃபீசராக  ஒரு  பெண்  நியமிக்கப்படுகிறார். அவருக்கு  ஒரு  டீன்  ஏஜ்  மகள்  உண்டு  . அவளைக்கடத்தி  வில்லன்  மிரட்டி  நாயகனை  தன்னிடம்   ஒப்படைத்தால்தான்  மகள்  தப்பிப்பாள்  என்கிறான்


 அந்த  ஆஃபீசரும் , நாயகனும்  இணைந்து   வில்லனை  எப்படி  கண்டுபிடித்து மடக்கினார்கள்  என்பதே  மீதி  ஆக்சன்  திரைக்கதை 

நாயகனாக டிடெக்டிவ்  சீஃப்  இன்ஸ்பெக்டர்  லூதர்  ஆக  இட்ரிஸ்  எல்பா  ஆஜானுபாவமான  தோற்றம், அசால்ட்டான  நடிப்பு , இவரது  உடல் மொழி  கச்சிதம், சேசிங்  காட்சிகள் , ஆக்சன்  காட்சிகள்  எல்லாம்   அதகளம்


நாயகியாக ,டிடெக்டிவ்  சீஃப்  இன்ஸ்பெக்டர்  ஒடட்டே ரெய்னாவாக  சிந்தியா  எரிவோ  கம்பீரமாக  நடித்திருக்கிறார்.   மகளை  காப்பாற்றத்துடிக்கும்போதும்  சரி  நாயகனுடன்  இணைந்து  பணி  ஆற்றலாமா? வேண்டாமா? என்ற  டைலம்மாவில்  யோசிக்கும்பொதும்  கச்சிதமான  நடிப்பு 


வில்லன் ஆக ஆண்டி சேர்கிஸ் பயத்தை  ஏற்படுத்தும்  முகம் , கேனத்தனமான  செஷ்டைகள்  செய்யும்  விதம்  எல்லாம்  கடுப்படிக்கும்  கேரக்டர்  டிசைன். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார் 


எடிட்டிங் இன்னமும்  ட்ரிம்  செய்திருக்கலாம்  இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது. லாரி  ஸ்மித்தின்  ஒளிப்பதிவு  பிரமாண்டம்  லார்ன்  பல்ஃபே  இசை  பின்னணி இசை  எங்கேஜிங்க்  ஆக  இருக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1 ஒருத்தன்  தப்பான  நேரத்தில்  தவறான  இடத்துக்கு  வந்ததா  நான்  நினைக்கலை . யாரோ  அவனை  வர  வெச்சிருக்காங்க 

2   பொதுவா  ஒரு  குற்றவாளி  இதுக்கு  முன்னால  என்ன  செய்தான்  என  கவனிப்பதை  விட  இனிமேல்  என்ன  செய்யப்போறான்? என்பதை  கவனிக்கனும்


3   தியரியாப்பார்க்கும்போது  ஈசியா  இருக்கும்  சில  விஷயங்கள்  பிராக்டிகலா  சிரமமா இருக்கும்


4  ஒருத்தரோட   கண்ணைப்பார்த்தாலே  அவங்க  நல்லவரா? கெட்டவரா? என்பதை  நான்  கண்டுபிடிச்சுடுவேன்


5    வாழ்க்கை  முழுக்க  நாம  யார்னு  வெளிப்படுத்தாமயே  வாழ்வது  ரொம்ப  கஷ்டம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு  ஆள்  ஹீரோவிடம்  வில்லனைப்பற்றி  துப்பு  தரும்போது  அவன்  ஒரு  நாள்  யூஸ்  பண்ணும்  ஃபோனை  மறுநாள்  யூஸ்  பண்ண  மாட்டான்  என்கிறான், அடுத்த  காட்சியில்  ஹீரோ  தன்  கொலீக்கிடம்  வில்லனைப்பற்றி  சொல்லும்போது  அவன்  ஒரு  நாள்  யூஸ்  பண்ணின  ஃபோன்  நெம்பரை  மறு நாள்  யூஸ்  பண்ண  மாட்டான்  என்கிறான், இரண்டும்  வேறு  வேறு  ஆச்சே?


2  ஹீரோ ஒரு  சீனில்  ஜெயிலில்  இருந்து  தபிக்கும்போது  போலீஸ்  ஃபயர்  சர்வீஸ்  பம்ப்ல  இருந்து  தண்ணீர்  பீய்ச்சி  அடிக்கறாங்க, ஹீரோவோட  ஜீன்ஸ் பேண்ட் , சர்ட்  முழுக்க  நனைஞ்சிடுது . அது சூரிய  வெய்யிலில்  காய  வைத்தாலே  காய 8  மணி  நேரம் ஆகும், ஆனா  அடுத்த  ஷாட்டிலேயே  அதாவது  அடுத்த  நொடியே  காய்ஞ்ச  மாதிரி  காட்றாங்க , கண்ட்டிநியூட்டி  மிஸ்சிங்   


3  க்ளைமாக்ஸ்  எல்லாம்  அரதப்பழசான  டெக்னிக். அந்தக்கால  எம் ஜிஆர்  நம்பியார்  டெம்ப்ளேட்டில்  போவது  கொடுமை , குறிப்பாக  நாயகியின்  மகளை  கொல்வதாக  மிரட்டி   வில்லன்  நாயகனை  தாக்கச்சொல்வது , அதே  போல  நாயகனை  மிரட்டி  நாயகியை  தாக்கச்சொல்வது  எல்லாம்  சகிக்க  முடியவில்லை 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஏ  சர்ட்டிஃபிகேட்  படம்  என்றாலும்  செக்சுவல்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை . வன்முறைக்காட்சிகளுக்காக  ஏ  தந்திருக்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன்  ரசிகர்கள்  பார்க்கலாம்,  கொஞ்சம்  பொறுமை  தேவை .  ரேட்டிங் 2.5 / 5 




Luther: The Fallen Sun
Luther - The Fallen Sun (2023) Poster.jpg
Official release poster
Directed byJamie Payne
Written byNeil Cross
Based onLuther
by Neil Cross
Produced by
Starring
CinematographyLarry Smith
Edited byJustine Wright
Music byLorne Balfe
Production
companies
Distributed byNetflix
Release dates
  • 24 February 2023 (United Kingdom/United States)
  • 10 March 2023 (Netflix)
Running time
129 minutes[1]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish

Wednesday, March 15, 2023

THANKAM (2023) மலையாளம் -சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


 2008ம் ஆண்டு  சத்யராஜ் - கவுண்டமணி - ஜெயஸ்ரீ, மேக்னா நாயுடு  நடிப்பில்  ஜி  கிச்சா  இயக்கத்தில்  வெளிவந்த  தங்கம்  எனும்  தமிழ்ப்படத்துக்கும் 2022ம் ஆண்டு  அல்போன்ஸ் புத்திரன்  இயக்கத்தில்  பிருத்விராஜ், நயன்  தாரா  நடிப்பில்  வெளியான  கோல்டு  படத்துக்கும்  இந்த  தங்கம்  மலையாளப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை ,, மூன்றும்  வேறு  வேறு  கதைக்களம் , சொல்லப்போனால்  அந்த  இரண்டு  தங்கங்களும்  கமர்ஷியலாக  வெற்றி  பெறாத  படங்கள் ., இந்த  தங்கம்  ஒரு  தரமான  த்ரில்லர்  படம் 

ஃபகத் ஃபாசில்  எடுத்த  சொந்தப்படம்  இது . கேரளா - திருச்சூர்  மாவட்டத்தில்  நடந்த  ஒரு  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  எழுதப்பட்ட  திரைக்கதை  இது இந்தியாவின்  கோல்டு  கேப்பிடல்  என்று  அழைக்கப்படும்  திருச்சூரில் ஒரு  கோல்டு  புரோக்கரின்  வாழ்வில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவம்  இது 


ஷ்யாம்  புஷ்கர் எனும்  திரைக்கதை  ஆசிரியர்  நம்ம  ஊர்  கே  பாக்யராஜ்  மாதிரி  கமர்ஷியலான   திரைக்கதை  அமைப்பதில்  மன்னன். அவரது  குறிப்பிடத்தக்க  படங்கள்  கும்பாளங்கி நைட்ஸ்( 2019) , மாயநதி( 2017) தொண்டிமுத்தாளும்  திருசாக்‌ஷையும் ( 2017) 

Spoiler alert  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   கோல்டு  புரோக்கர். இவரது  பணி  கோல்டு  டீலர்  தரும்  நகைகளை  வெவ்வேறு  ஊர்களில்  டெலிவரி  செய்வது .மும்பையில்  ஒரு  பார்ட்டிக்கு  2  கிலோ  தங்க நகைகளை  டெலிவரி  செய்ய  மும்பை  போகிறார் , அவர்  தங்க  நகைகளுடன்  ஒரு  ஹோட்டலில்  ரூம்  எடுத்து  தங்குகிறார். அந்த  ஹோட்டல்  ரூமில்  மர்மமான  முறையில்  இறந்து  கிடக்கிறார்


 தூக்கில்  இடப்பட்டு  இறந்த  அவரது  உடலில்  தாக்கப்பட்ட  காயங்கள்  இருக்கின்றன. அறை  முழுவதும்  ஒரு  போராட்டம்  நடந்தது  போல  பொருட்கள்  சிதறிக்கிடக்கின்றன. ஒரு  இடத்தில்  ரத்தம்  சிந்தி  இருக்கிறது 


 மும்பை  போலீஸ்  இந்த  கேசை  விசாரிக்கிறது போலீசின்  சந்தேக  வளையத்தில்  நாயகனின்  நண்பன் , நாயகனின்  கோல்டு  டீலர் , நாயகனின்  முன்னாள்  நண்பர்கள்  இருவர்  ஆகியோர்   சிக்குகிறார்கள் , இந்த  -கேஸ்  விசாரணையில்  திடுக்கிடும்  திருப்பங்கள்  நடக்கின்றன. உண்மையாக  என்ன  சம்பவம்  நடந்தது ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  வினீத்  சீனிவாசன். அப்பாவித்தனமான  ரோல், போலீசில்  ஒரு  கேசில்  மாட்டும்போது  கூட  இருக்கும்  இரு  நண்பர்களும்  பயந்து  நடுங்க இவர்  அசால்ட்டாக  லெஃப்ட்  ஹெண்டில்  போலீசை  டீல்  செய்யும்  விதம்  அருமை . போலீஸ்  தர்ட்  டிகிரியில்  விசாரிக்க  முற்பட  அவர்  ஆங்கிலத்தில்  கோபமாகப்பேசும்  தொனி அட்டகாசம்


  நாயகனின்  நண்பனாக  பிஜூ மேனன் , அய்யப்பனும்  கோஷியும்,  ல ஈகோ  குணம்  கொண்டவராக  பிரமாதப்படுத்தியவர்  இந்தப்படத்தில்  மாறுபட்ட  ரோல்  அசத்தி  இருக்கிறார்


இன்னொரு  நண்பராக  வரும் வினித்  தட்டில்  டேவிட்  கச்சிதமான  பதட்டமான  நடிப்பு 


இன்வெஸ்டிகேஷன்  ஆஃபீசராக  வரும்  கிரீஸ்  குல்கர்னி  உடல்  மொழியில்  நிஜமான  போலீஸ்  ஆஃபீசர்  மாதிரியே  பிரமாதமாக  நடித்திருக்கிறார்


நாயகனின்  மனைவியாக  அபர்ணா  பாலமுரளி  அதிக  வசனம்  ஏதும்  பேசாமல்  கண்களாலேயே  பேசும்  கேரக்டர் ., கனகச்சிதமான  சோகமான  நடிப்பு 


நாயகனின்  கல்லூரி  கால  நண்பனாக  கலையரசன்  கொஞ்ச  நேரமே  வ்ந்தாலும்  துடிப்பான  நடிப்பு 


கவுதம்  சங்கரின்  ஒளிப்பதிவு  கனகச்சிதம்,/ 145  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படத்தை  கச்சிதமாக  ட்ரிம்  செய்து  இருப்பவர் கிரன் தாஸ் 


பிஜி பால்  தன்  பின்னணி  இசையால்  படம்  முழுக்க  ஒரு பரபரப்பை  ஊட்டுகிறார்

ஷஹீத்  அரஃபத்  இயக்கம்   விறுவிறுப்பு 


 நிச்ச்யம  குடும்பத்தோடு  பார்க்கத்தக்க  ஒரு  டீசண்ட்டான  க்ரைம்  த்ரில்லர் தான்  இது , அமேசான்  பிரைம்ல  கிடைக்குது 




சபாஷ்  டைரக்டர்


1  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  அந்த  கோவை  சம்பவம், முத்துப்பேட்டை  போலீஸ்  ஸ்டேசன்  சம்பவம்  செம  விறுவிறுப்பு, த்ரில்லிங் . சினிமாத்தனமே  இல்லாத  நிஜமான  காட்சி  அமைப்பு  செம  தத்ரூபம். போலீஸ்  ஸ்டேஷனில்  காலடி  எடுத்து  வைத்தால்  நம்மைக்காலி  பண்ணிடுவாங்க  என்பதை  உனர்த்தும்  காட்சி  கலக்கல்  காட்சி 


2   முக்கியமான  கேரக்டர்களின்  கேரக்டர்  டிசைன்  பக்கா. குறிப்பாக  மும்பை  போலீஸ்  ஆஃபீசராக  வரும்  கிரீஸ்  குல்கர்னி  உடல் மொழி  அற்புதம். 


3  ஒரு  காட்சியில்  இறந்தது  நாயகன்  தானா? என்பதை  வெரிஃபிகெஷன்  செய்ய  மனைவி , நண்பன், உறவினர்  அனைவரும்  பிண  அறைக்கு  வரும் காட்சியில்  பிணத்தைப்பார்த்த  மனைவி  பார்வையாலேயே  ஆமாம், அவன் தான்  என்பதை  நண்பனுக்கு  உணர்த்த  அவன்  உறவினரைப்பார்க்கும்  காட்சியும்  அருமை ., வசனமே  இல்லாமல்  பிரமாதப்படுத்தப்பட்ட  காட்சி  அது 


4   போலீசிடம்  அடி  வாங்கிய  நாயகன்  சார் , இப்போ  உங்களுக்கு  ஒத்துழைப்பு  கொடுத்து  பதில்  சொல்லிட்டுதானே  இருக்கேன்? ஏன்  அடிக்கறீங்க?  என  கேட்பதும்  ராத்திரி  நேரத்துல  கார்ல  எங்கே  போறீங்க ? என  போலீஸ்  விசாரிக்கும்போது  ஏன் பிஸ்னெஸ்  பண்ண  இந்த  நேரம்தான்  சரி  அப்டினு  ஏதாவது  வரை முறை  இருக்கா? என  கூலாக  கேட்பது  அடி பொலி  சீன்


5   நாயகன்  தன்  காலேஜ்  நண்பர்களுடன்  சேர்ந்து  ஏதோ  திட்டம்  போட்டு  அதில்  ஏற்பட்ட  ரகளையோ  இந்த  சம்பவம்  எல்லாம்  என  எண்ண  வைத்து  பின் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  இவர்கள்  வெளிப்படுத்திய  விதம்  அருமை   


6   நாயகனின்  நண்பன்  ஒருவனை  சினிமா  தியேட்டரில்  கார்னர்  பண்ணும்  காட்சி  ஹாலிவுட்  படங்களுக்கு  நிகரான பரப்ரப்பான  காட்சி 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஏற்கனவே  பண  நெருக்கடியில்  இருக்கிறான் , போலீசில்  மாட்டியதும்  தன்  கழுத்தில்  உள்ள  செயினை  ஏன்  கழட்டி  தருகிறான் ?. கோல்டு  டீலர்  பேரைச்சொல்லி  அவரைக்கோர்த்து  விட்டிருக்கலாமே? இவர்  ஏன்  சொந்தக்காசை  செலவு  செய்து  ரிஸ்க்  எடுக்க  வேண்டும் ?


2  பண  நெருக்கடியில்  இருக்கும்  நாயகன்  இரண்டு  கிலோ  தங்கத்துடன்  தன்  குடும்பத்தை  அழைத்துகொண்டு  தலைமறைவு  ஆகாமல்  அவர்  போடும்  திட்டம்  நம்ப  முடியாதது 


3  ஹோட்டலில்  சிசிடிவி  கேமரா  இருந்தும்  கலையரசன்  தன்  முகத்தை  மறைத்து வருவதும்  போவ்தும்  நம்பும்படி  இல்லை ., ஏதோ  ஒரு  கோணத்தில்  முகம்  தெரியத்தன்  செய்யும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ரைம்  த்ரில்லர்  ரசிக்ர்கள்  அவசியம்  காண  வெண்டிய  மாறுபட்ட  விறு விறுப்பான  படம், ரேட்டிங்  3.25 / 5 




Thankam
Thankam.jpeg
Theatrical release poster
Directed bySaheed Arafath
Written bySyam Pushkaran
Produced by
Starring
CinematographyGautham Sankar
Edited byKiran Das
Music byBijibal
Production
companies
Distributed byBhavana Release
Release date
  • 26 January 2023
Running time
145 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, March 14, 2023

CHRISTOPHEER (2023) மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


மம்முட்டி  + பகத் ஃபாசில் -இளையதிலகம்  பிரபு + சினேகா  இவர்கள்  இணைந்து  நடிக்க 2010 ஆம் ஆண்டு  வெளியான   ப்ரமணி (PRAMANI)  எனும்  மலையாளப்படம்தான்  இயக்குநர் பி  உன்னி கிருஷ்ணன்  மம்முட்டியுடன்  இணைந்த முதல்  படம், 13  வருடங்களுக்குபின்  மீண்டும்  இருவரும்  இணைந்திருக்கிறார்கள் 2022 ஆம்  ஆண்டு  மம்முட்டிக்கு  இரண்டு  வெற்றிப்படங்கள் , பீஷ்மா பர்வம், ரோர்ஸ்சாச். இயக்குநர்  பி  உன்னிகிருஷ்ணன்  2022 ல் மோகன்  லாலுடன் இணைந்து  ஆராட்டு  எனும்  சுமார்  ரக   படம்  தந்திருக்கிறார். இப்போது  2023 ஆம்  ஆண்டு  தொடக்கத்தில் வந்திருக்கும்  இந்த  ஆக்சன்  த்ரில்லர் போலீஸ்  காப்  மூவி  எப்படி  இருக்கிறது? என  பார்ப்போம்

நாயகன்  ஒரு ஐபிஎஸ்  போலீஸ்  ஆஃபீசர். மிக  கண்டிப்பானவர் , பெண்களுக்கு  எதிராக  நிக்ழும்  பாலியல்  வன்  கொடுமைகளைக்கண்டு  கொதித்து  குற்றவாளிகளுக்கு  ஆன்  த  ஸ்பாட்  தண்டனை  தருபவர். என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட் . இவர்  ஏன்  இப்படி  கடுமையாக  நடந்து  கொள்கிறார்? என்பதற்கு  அவரது  சொந்த  வாழ்வில்  ஒரு  ஃபிளாஸ்  பேக்  உண்டு. இவரது  என்கவுண்ட்டர்  குறித்து  ஒரு  இன்வெஸ்டிகேஷ்ன்  நிகழ்த்த ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  நியமிக்கப்படுகிறார். அவரது  நோக்கம்  நிறைவேறியதா?  நாயகன்  தன்  கோபத்தைக்குறைத்துக்கொண்டாரா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகனாக  மெகா  ஸ்டார்  மம்முட்டி. ஓப்பனிங்  சீனில்  இருந்து  கடைசி  வரை  முகத்தை  இறுக்கமாகவே  வைத்திருக்கும்  ஒரு இண்ட்ராவர்ட்  கேரக்டர். நன்றாக  நடித்திருக்கிறார். 71  வயதானவர்  மாதிரியே  தெரியவில்லை , முகத்தில்  சுருக்கங்கள்  இல்லை , உடல்  மொழியில்  தளர்வு இல்லை. இவரது  கேரக்டர் டிசைன்  நான்  சிகப்பு  மனிதன்  ரஜினி  + கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு  சத்யராஜ்  இருவரின்  கலவையாக  அமைந்துள்ளது 


வினய்  ராய்  வில்லனாக  வருகிறார். இவரது  கேரக்டர்  டிசைன்  கச்சிதம்.  சரத் குமார்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்.,


ந்டிகை  சினேகா  ஹோம்  செகரட்டரியாகவும்  நாயகியாக  நாயகனுக்கு  இணையாகவும்  வருகிறார்

ஏசிபி  ஆக  அமலா  பால், ஐஸ்வர்யா லட்சுமி , அதிதி ராவ்  என  ஏராளமான  நட்சத்திரப்பட்டாளம்  உள்ளது


ஏஜெண்ட்  டீனா  ஒரு  சின்ன  ரோலில்  வருகிறார், ஷைன்  டாம்  சாக்கோஸ்  முக்கிய  கேரக்டரில் நன்றாக  நடித்திருக்கிறார்


இரண்டரை  மணி  நெரப்படத்தில்  படம்  பூராவும்  பெண்கள்  பாலியல்  வன்  கொடுமைக்கு  ஆளாவதும் , நாயகன்  குற்றவாளிகளை  கொல்வதும்   வந்தாரு , சுட்டாரு , போனாரு   ரிப்பீட்டு  என  சொல்லும்  விதத்தில் இருக்கிறது 


பழைய  எம்  ஜி ஆர்  படங்களில்  பெண்களுக்கு  ஒரு  ஆபத்து  என்றால்;  ஆல  மர  விழுதைப்பிடித்து  வந்தாவது  நாயகன்  பெண்களைக்காப்பாற்றி  விடுவார். அது  போல  நாட்டில்  எங்கே  பெண்களுக்கு  எதிரான  பாலியல்  குற்றங்கள்  நடந்தாலும்    உடனே  மம்முட்டி  ஆஜர்  ஆகிறார். அது  எப்படி  என  தெரியவில்லை , போலீஸ்  டிபார்ட்மெண்ட்டில்   அவர்  ஒருவர்  மட்டும்  தான்  இருக்கிறாரா? 


நாயகன்  வரும்போதெல்லாம்  ஒரு  ஹீரோ  பில்டப்  பிஜிஎம்  திரும்பத்திரும்ப  வருவது கடுப்படிக்கிறது. படத்தில்  பெரிய  திருப்பங்களோ , சுவராஸ்யங்களோ    பெரிதாக  இல்லை ., ஃபிளாட்  ஆன  திரைக்கதை ஜஸ்டின் வர்கீஸ்  இசை  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  சிறப்பு ஃபெய்ஸ்  சித்திக்கின்  ஒளிப்பதிவு  அருமை . எடிட்டிங்  மனோஜ், இரண்டரை  மணி  நேரம்  ஓடுவது  போல  ட்ரிம்  செய்து  இருக்கிறார். நடிகர்  வினய்க்கு  வில்லனாக  மலையாளத்தில்  இது  முதல்  எண்ட்ரி 


மம்முட்டி  நடித்த  நண்பகல்  நேரத்து  மயக்கம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  20  நாட்கள்  கழித்து  அதாவது  ஃபிப்ரவரி 9 , 2023   கிறிஸ்டோபர்  தியேட்டர்களில் ரிலீஸ்  ஆனது . அமேசான்  பிரைம் ஓடிடி  தளத்தில் மார்ச் 9  . 2023  ரிலீஸ்  ஆகி  உள்ளது ,18 கோடி  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  38  கோடி  வசூல்  செய்துள்ளது


ரசித்த வசனங்கள் 


1    மேலிடத்துக்கு  பயப்பட்டு  அரசியல்வாதிகளுக்கு  கைப்பாவையா  செயல்படும்  உங்களுக்கு  எப்படி  சார்  இனிமே  சல்யூட்  அடிப்பேன் ?


 நீங்க  சல்யூட்  அடிக்கற  ஆஃபீசர்ஸ்  90% பேர்  என்னை விட  மோசம் 



2   பணம்  வாங்கிட்டு  அவங்க  பக்கம்  வேலை  செய்யறதாலதான்  போலீஸ் மேலே  மக்களுக்கு  மரியாதையே  இல்லாம  போச்சு 


3  தாமதமாகக்கிடைக்கும்  நீதி  மறுக்கப்பட்ட  நீதி 


4 ஆறாத  காயங்கள் , ஈடு  செய்ய  முடியத  இழப்புகள்  எல்லார்  வாழ்க்கையிலும்  இருக்கும் 


5  நிர்பயா  கேஸ்ல  குற்றவாளிகளுக்கு  தண்டனை  கிடைக்க  8  வருசங்கள்  ஆச்சு 


6 உண்மைகள்  உருவாக்கப்படுபவை 


 சபாஷ்  டைரக்டர்


1   படத்தில்  வரும்  பப்ளிக்கும்  சரி , படம்  பார்க்கும் ஆடியன்சும்  சரி , என்கவுண்ட்டர்  செய்வது  சரிதான்  என  எண்ணும்படி  காட்சிகளை  அமைத்தது 


2   பெண்கள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாவதும் அதற்கான  என்கவுண்ட்டரும்  தான்  படம்  என்றாலும்  காட்சி   ரீதியாக  18+  காட்சிகள்  எதுவும்  திணிக்காமல்  கண்ணியமாக  விஷூவலில்   காட்டியது


3  ஐஸ்வர்யா  லட்சுமி , அம்லா பால், சினேகா  என  மூன்று  கதாநாயகிகள்  இருந்தும்  கிளாமர்  காட்சிகள்  ஏதும்  திணிக்காமல்  பாத்திரங்களின்  தன்மைக்கு  ஏற்ப  காட்சிகளை  வலுவாக  தந்தது 


4  வில்லனின்  கேரக்டர்  டிசைனை  வலுவுடன்  அமைத்தது .துப்பாக்க்கி  முனையில்  மிரட்டபப்டும்போது  கூட  அவர்  அனாயசமாய்  சமாளிக்கும்  காட்சிகள்  இரண்டும்  அருமை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  மம்முட்டி  சினேகா  வீட்டுக்குப்போகும்போது  கார்பன்  மோனாக்சைடு  வாயு  திறக்கப்பட்டு  இருப்பதை  எப்படி  அவர்  அறிகிறார்? எப்படி  கர்சீப்  அணிந்து  முகத்தில்  கவசமாக  வைத்துக்கொள்கிறார்? என்பது  சொல்லப்படவில்லை , அது  அவருக்கு  முதலிலேயே  தெரிந்திருந்தால்  ஃபோனில்  சினேகாவை  எச்சரித்து  இருக்கலாமே?


2  மம்முட்டி  தன்  மனைவியின்  தம்பியையே  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ளுகிறார் மனைவி  அவரைப்பிரிந்து  வாழ்ந்த  போதும்  அரசியல்  செல்வாக்கு  மிக்க  அவர்  மாமனார்  அவரது  மகன்  கொலைக்கு  மம்முட்டியை  பழி  வாங்க  முயலவே  இல்லையே? 


3  அத்தனை  காலம்  பிரிந்து  வாழ்ந்த  சினேகா  அமலாபால்  அட்வைஸ்  பண்ணியது,ம்  மனம்  மாறி  மம்முட்டிக்கு  கடிதம்  அனுப்புவது  நம்ப  முடியவில்லை ., ஒரு  பெண்  இன்னொரு  பெண்  சொல்வதை எந்தக்காலத்தில்  ஏற்றுக்கொண்டிருக்கிறார் ? 


4   வில்லன்  ஹீரோ  நேருக்கு  நேர்  ச்ந்திக்கும்போது  உன்னை  உருத்தெரியாமல்  ஆக்குகிறேன்  என  வெறும்  வாயில்  தான்  முழம்  போடுகிறார்  வில்லன்  வினய், செய்கையில்  ஒன்றையும்  காணோம், அதே  போல்  ஹீரோ  மம்முட்டி  நேருக்கு  நேர்  வில்லனை  சந்திக்கும்போது  எதுவும்  செய்யாமல்  விட்டு  விட்டு  பின்  அவரைக்கொல்ல  ஆள்  ரெடி  பண்ணி  தலையை  சுற்றி  மூக்கைத்தொடுவது  ஏன் ? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  மம்முட்டி  ரசிகர்கள்  பார்க்கலாம்  ,மற்ற  பொது  ரசிகர்கள்  மாமூல்  மசாலா  போலீஸ்  காப்  ஸ்டோரி  டெம்ப்ளேட்டை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5 



Christopher
Christopher.jpeg
Theatrical release poster
Directed byB. Unnikrishnan
Written byUdaykrishna
Produced byB. Unnikrishnan
Starring
CinematographyFaiz Siddik
Edited byManoj
Music byJustin Varghese
Production
company
Release date
  • 9 February 2023
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹18.7 crore[2]
Box office38.5 crore[3]