Sunday, June 27, 2021

மேதகு - புரட்சி வீரன் பிரபாகரனின் வாழ்க்கை சரித்திரம் பாகம்1



 விடுதலைப்புலிகளின்  தலைவர்  பிரபாகரன்  வாழ்வில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவங்களின்  தொகுப்புதான்  இந்தப்படம்.எந்த  வித  எதிர்பார்ப்பும்,  பில்டப்பும்  இல்லாமல்  ரிலீஸ்  ஆகி  பலரை  ஆச்சரியப்படுத்தி  இருக்கும்  படம்.


முதலில்  நம்மை  ஆச்சரியப்படுத்துவது  நடிகர்  நடிகைகள்  தேர்வு .  பிரமாதம்.அடுத்ததாக  நம்  மனம்  கவர்வது  அட்டகாசமான  வசனங்கள் .பின்னணி  இசை , ஒளிப்பதிவு , ஏடிட்டிங்  எல்லாமே  கனகச்சிதம்.  ஒரு  மாஸ்  ஹீரோவின்  படங்களில்  வருவது  போல்  கூஸ்  பம்ப்  காட்சிகளும்  உண்டு 


ஒரே  குறை  , இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்,  வெறும்  50  லட்சம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டிருக்கு . இலங்கையில்  நடக்கும்  தமிழர்  விழா   வில்  நடனக்கலைஞர்கள்  5  பெண்கள்  5  ஆண்கள்  மட்டுமே  பங்கேற்று  இருப்பது ஒரு  பின்னடைவே ,  ஆனா  வேற  வழி  இல்லை 


திரைக்கதை  ,  காட்சி  அமைப்புகள்:  எல்லாம்  இயக்குநர்  கிட்டியின்  திறமையை  பறை  சாற்றும் 


  வில்லுப்பாட்டு  மூலமாக  கதை  சொல்லும்  உத்தி  ஓக்கே  தான்..  உத்தம  வில்லன்  படத்தில்  இதே  உத்தி  கையாளப்பட்டபோது  போர்  அடிக்கும்  காட்சிகள்  இருந்தது ,  ஆனா  இதில்  போர்  அடிக்கலை 


சபாஷ்  டைரக்டர் 


1    பிரபாகரனின்  இளமைப்பருவ  உருவத்தோற்றத்துடன்  நடித்திருப்பவர்  பாடி  லேங்க்வேஜ் ,  பார்வை  ,  வசனம்  பேசும்  லாவகம்  எல்லாமே  அற்புதம் 


2   புத்த  பிட்சு  இலங்கையில்  ஒரு  முக்கிய  பிரமுகரை  கொலை  செய்யும்  காட்சி  படமாக்கபப்ட்ட  விதம்


3   ஹீரோவின்  அப்பாவுடன்  ஹீரோ  பேசும்  உரையாடல்  காட்சி  அவ்ளோ  யதார்த்தம் ,  வலிமையான  வாக்குவாதம் 


4   ஹீரோ  முதன்  முதலாக  அரங்கேற்றும்  கொலை  காட்சி 

 

5   ஹீரோவின்  சகோதரியை   சீண்டும்  போலீசை  சகோதரியே  தாக்கும்  காட்சி



நச்  வசனங்கள்

 

1   இனி யாரும் அழவேண்டாம் எனக்கூறி ஒருவன் பிறந்தான்

 

2  அப்பா நாம ஏன் திருப்பி அடிக்கல ?

 

3   ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..! 

 

4   பிறந்தான்  பிறந்தான்  சமரசம்  இல்லா  ஒரு  மாவீரன்  

 

5    இனி  அதிகாரம்  அவங்க  கையில்  இருக்காது , வெறும்  பயம்  மட்டுமே  பையில்  இருக்கும் 

 

6  அமைதி  வழிப்போராட்டம்  பயன்  தராது   அமைதியாப்போராடுனா  பலன்  கிடைக்கும்  என்று  நம்புவது  உலகின் மிகப்பெரிய  மூட நம்பிக்கை 

 

7 எந்த  ஆயுதத்தால  எதிரி  தாக்கறானோ  அதே  ஆயுதத்தை  கையில்  நாம  எடுக்கனும் 

 

8  பயம்  ஒன்று மட்டுமே இன்னொருவர்  மனதில் அடிமைத்தனத்தை   ஆழமா  விதைக்கும் 

 

9  முதல்ல  பதட்டத்தை  உருவாக்குவோம், பயம்  தானா  உருவாகும்

 

10  விடியலை  தள்ளிப்போட  இயலாது 

 

11  சுவாசிக்க  கத்துக்கிட்டு  இருக்கும்போது  ஏன்  நுரையீரல்ல  கத்தி  பாய்ச்சறாங்க ? 

 

12  உரிமையைக்கேட்கறோம்,அதற்கு  விலை  உயிரா?  

 

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   மேதகு − விடுதலைப்புலி பிரபாகரனின் வாழ்க்கை சரித்திர சம்பவங்களின் தொகுப்பு,பாகம் 1. இது 100 நிமிடங்கள், வசனம் ,பிஜிஎம் பட்டாசு .இளவயது பிரபாகரன் நடிப்பு பாடிலேங்குவேஜ் அருமை..அனைத்து தமிழர்களும் அறிய"வேண்டிய வரலாறு என்பதால் ரேட்டிங் தேவை இல்லை